21.09.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.02.2007 Om Shanti Madhuban
இறை பேறுகளால் நிறைந்திருக்கும் ஓர் ஆத்மா அதி புனிதமானவர், அதியுயர்ந்தவர் மற்றும் அதி செல்வந்தர் ஆவார்.
இன்று, உலகை மாற்றுபவரான பாப்தாதா, தனது சகபாடிக் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அவர் ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மூன்று விசேடமான பேறுகளைப் பார்க்கிறார் - அதிபுனிதமானவர், அதியுயர்ந்தவர், அதிசெல்வந்தர். இந்த ஞானத்தின் அத்திவாரமே புனிதமாக இருப்பதாகும். அதாவது, தூய்மையாக இருப்பதாகும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் அதிபுனிதமானவர். தூய்மை என்பது பிரம்மச்சரியம் மட்டுமல்ல. ஆனால், எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளிலும் தூய்மை. பாருங்கள், இறை பிராமண ஆத்மாக்களான நீங்கள் முக்காலங்களிலும் - ஆரம்பம், மத்தி, இறுதி - அதிபுனிதமானவர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், ஆத்மாக்கள் பரந்தாமத்தில் இருந்தபோது, நீங்கள் அங்கே அதிபுனிதமாக இருந்தீர்கள். பின்னர், ஆரம்பத்தில் நீங்கள் கீழே இறங்கி வந்தபோது, தேவ ரூபத்திலும் நீங்கள் அதிபுனிதமான ஆத்மாக்கள் ஆவீர்கள். அதிபுனிதமான ஆத்மாவின், அதாவது, தூய ஆத்மாவின் சிறப்பியல்பானது, குடும்பத்துடன் வாழும்போது சம்பூரணமாகத் தூய்மையாக இருப்பதாகும். மற்றவர்களும் தூய்மை ஆகுகிறார்கள். ஆனால் உங்களின் தூய்மையின் சிறப்பியல்பானது, உங்களின் கனவுகளிலேனும் தூய்மையின்மை உங்களின் மனதையோ அல்லது புத்தியையோ தொடுவதில்லை. சத்தியயுகத்திலும் ஆத்மாக்களான நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள். உங்களின் சரீரங்களும் தூய்மையாகவே இருக்கும். தேவாத்மாக்களின் ஆத்மாவினதும் சரீரத்தினதும் தூய்மை, மேன்மையானது. எப்படி நீங்கள் அதிபுனிதமானவர்கள் ஆகுவதைப் போல், நீங்கள் அதியுயர்ந்தவர்களாகவும் ஆகுகிறீர்கள். நீங்களே பிராமண ஆத்மாக்கள் எல்லோரிலும் அதியுயர்ந்தவர்கள். நீங்கள் அதியுயர்ந்த தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆரம்பத்தில், பரந்தாமத்தில், நீங்கள் அதியுயர்ந்தவர்கள். அதாவது, நீங்கள் தந்தையுடன் வசிக்கிறீர்கள். மத்திய காலத்திலும், நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்கள் ஆகுகிறீர்கள். அழகான கோயில்கள் உங்களுக்காகக் கட்டப்பட்டு, நீங்கள் சரியான முறையில் ஒழுங்கு முறையாகப் பூஜிக்கப்படுகிறீர்கள். தேவர்களான நீங்கள் கோயில்களில் சரியான முறையில் பூஜிக்கப்படுகிறீர்கள். அதேபோல், ஆலயங்கள் மற்றவர்களுக்காகவும் கட்டப்படுகின்றன. ஆனால், உங்களின் தேவ ரூபங்கள் மட்டுமே சரியான முறையில் பூஜிக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் அதிபுனிதமானவர்களும் அத்துடன் அதியுயர்ந்தவர்களும் ஆவீர்கள். அத்துடன் கூடவே நீங்கள் அதிசெல்வந்தர்களும் ஆவீர்கள். உலகிலும், உலகிலேயே பெருஞ்செல்வந்தர் எனக் கூறப்படுகிறது. ஆனால் மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் கல்பத்திலேயே பெருஞ்செல்வந்தர்கள் ஆவீர்கள். நீங்கள் கல்பம் முழுவதிலும் பெருஞ்செல்வந்தர்கள் ஆவீர்கள். உங்களின் பொக்கிஷங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எத்தனை பொக்கிஷங்களுக்கு நீங்கள் அதிபதிகளாக இருந்தீர்கள்? இந்த ஒரு பிறவியில் நீங்கள் அடையும் அழியாத பொக்கிஷங்கள், பல பிறவிகளுக்கு நிலைத்திருக்கும். வேறு எவரின் பொக்கிஷங்களும் பல பிறவிகளுக்கு நிலைத்திருக்காது. எவ்வாறாயினும், உங்களின் பொக்கிஷங்கள் ஆன்மீகமானவை. சக்திகளின் பொக்கிஷம், ஞானப் பொக்கிஷம், நற்குணங்களின் பொக்கிஷம், மேன்மையான எண்ணங்களின் பொக்கிஷம், இந்த நேரம் என்ற பொக்கிஷம் - இந்தப் பொக்கிஷங்கள் அனைத்துமே பிறவி பிறவியாக நிலைத்திருக்கும். ஒரு பிறவியில் நீங்கள் பெறுகின்ற பொக்கிஷங்கள், உங்களுடனேயே செல்லும். ஏனென்றால், நீங்கள் அவற்றைச் சகல பொக்கிஷங்களையும் அருள்பவரான தந்தையான கடவுளிடம் இருந்து பெறுகிறீர்கள். எனவே, உங்களின் பொக்கிஷங்கள் அழியாதவை என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா?
இந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை அடைவதற்காக நீங்கள் இலகு யோகிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் நினைவு சக்தியால் இந்தப் பொக்கிஷங்களைச் சேமிக்கிறீர்கள். அத்துடன், இந்த வேளையில், நீங்கள் சகல பொக்கிஷங்களும் நிரம்பிய கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆவீர்கள். உங்களுக்கு ஏதாவது கவலைகள் உள்ளனவா? உங்களுக்கு இருக்கிறதா? இந்தப் பொக்கிஷங்களைக் கள்ளனால் திருட முடியாது, எந்தவோர் அரசனாலும் சுவீகாரம் (எடுக்க) செய்ய முடியாது, நீரால் மூழ்கடிக்க முடியாது. இதனாலேயே நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆவீர்கள். எனவே, இந்தப் பொக்கிஷங்கள் சதா உங்களின் விழிப்புணர்வில் உள்ளதல்லவா? எனவே, நினைவு ஏன் இலகுவாக உள்ளது? நீங்கள் அதிகளவு நினைவைக் கொண்டிருப்பதற்கான அடிப்படை, உங்களின் உறவுமுறையும் பேறுமே ஆகும். எந்தளவிற்கு உறவுமுறை அதிக அன்பானதாக உள்ளதோ, அந்தளவிற்கு உங்களின் நினைவும் அதிகளவில் இயல்பானதாக இருக்கும். ஏனென்றால், உறவுமுறையில் அன்பு உள்ளது. எங்கு அன்பு உள்ளதோ, நீங்கள் நேசிப்பவரை நினைப்பதில் கஷ்டம் இல்லை. உண்மையில், அவரை மறப்பதே கஷ்டமாக இருக்கும். அதனால், தந்தை சகல உறவுமுறைகளுக்குமான அடிப்படையை உருவாக்கி உள்ளார். நீங்கள் எல்லோரும் உங்களை இலகு யோகிகளாகக் கருதுகிறீர்களா? அல்லது, நீங்கள் அதைக் கஷ்டமாக உணரும் யோகிகளா? இது இலகுவாக உள்ளதா? அல்லது, சிலவேளைகளில் இலகுவாகவும் சிலவேளைகளில் கஷ்டமாகவும் இருக்கிறதா? நீங்கள் தந்தையை உறவுமுறையுடனும் அன்புடனும் நினைக்கும்போது, அந்த நினைவு கஷ்டமாக இருக்காது. அத்துடன் பேறுகளையும் நினையுங்கள். சகல பேறுகளையும் அருள்பவர், உங்களுக்குச் சகல பேறுகளையும் வழங்கி உள்ளார். எனவே, உங்களைச் சகல பொக்கிஷங்களும் நிரம்பியவர்களாக அனுபவம் செய்கிறீர்களா? பாப்தாதாவும் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேகரிக்கும் இலகுவான வழிமுறையைக் கூறியுள்ளார். சகல அழியாத பொக்கிஷங்களையும் பெறுவதற்கான வழிமுறை, ஒரு புள்ளியே ஆகும். எப்படி பூச்சியத்தைச் சேர்க்கும்போது அழிகின்ற பொக்கிஷங்கள் அதிகரிக்கின்றனவோ, அவ்வாறே, இந்த அழியாத பொக்கிஷங்களைச் சேமிப்பதற்கான வழிமுறையும் ஒரு புள்ளியே ஆகும். மூன்று புள்ளிகள் உள்ளன. ஆத்மா ஒரு புள்ளி, தந்தை ஒரு புள்ளி, நாடகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி, அதாவது, ஒரு புள்ளி. எனவே, எப்படிப் புள்ளி வைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? இலகுவாக வைக்கக்கூடிய நிறுத்தற்குறி எது? ஒரு புள்ளி வைப்பதே ஆகும். எனவே, ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு புள்ளி, தந்தை ஒரு புள்ளி. இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களின் பொக்கிஷங்கள் தானாகவே சேமிக்கப்படும். ஒரு விநாடியில் புள்ளியாக இருப்பவரை நினைப்பதன் மூலம் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இந்தப் பொக்கிஷங்கள் எல்லாமே உங்களின் பிராமண வாழ்க்கையின் உரிமையாகும். ஏனென்றால், ஒரு குழந்தையாக இருப்பது என்றால் உரிமையைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். அத்துடன் நீங்கள் குறிப்பாக மூன்று உறவுமுறைகளுக்கான உரிமையைக் கொண்டிருக்கிறீர்கள். இறைவனை உங்களின் தந்தையாகவும் உங்களின் ஆசிரியராகவும் அத்துடன் உங்களின் சற்குருவாகவும் நீங்கள் ஆக்கியுள்ளீர்கள். இந்த மூன்று உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் பராமரிப்பையும் உங்களின் வருமானத்திற்கு ஆதாரமான இந்தக் கல்வியையும் சற்குருவிடம் இருந்து ஆசீர்வாதங்களையும் பெறுகிறீர்கள். நீங்கள் மிக இலகுவாக ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். தந்தையிடம் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவது குழந்தைகளான உங்களின் பிறப்புரிமை ஆகும்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினதும் சேமிப்புக் கணக்கைச் சோதிக்கிறார். நீங்களும் எல்லோருமே ஒவ்வொரு கணமும் உங்களின் சேமிப்புக் கணக்கைச் சோதிக்க வேண்டியது அவசியமாகும். நீங்கள் எதையாவது சேமித்து உள்ளீர்களா இல்லையா எனச் சோதிப்பதற்கான வழிமுறை: நீங்கள் என்ன செயல்களைச் செய்தாலும், நீங்களும் திருப்தியாக இருக்க வேண்டும். நீங்கள் யாருடன் இந்தச் செயல்களைச் செய்தீர்களோ, அவர்களும் திருப்தியாக இருக்க வேண்டும். இரண்டிலும் திருப்தி இருக்குமாக இருந்தால், நீங்கள் உங்களின் கணக்கில் எதையாவது சேமித்துள்ளீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களில் அல்லது நீங்கள் அந்தச் செயலைச் செய்த நபரில் திருப்தி இல்லா விட்டால், நீங்கள் எதையும் சேமிக்கவில்லை.
பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் நேரத்தைப் பற்றியும் எச்சரிக்கை செய்கிறார். சங்கமயுகத்தின் இந்த நேரம், கல்பம் முழுவதிலும் அதி மேன்மையானது. ஏனென்றால், இந்தச் சங்கமயுகமே மேன்மையான செயல்கள் என்ற விதைகளை விதைப்பதற்கான நேரம் ஆகும். இதுவே நடைமுறையான, உடனடிப் பலனைப் பெறுவதற்கான நேரம் ஆகும். சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் எல்லாவற்றிலும் அதிமேன்மையானது. உங்கள் எல்லோராலும் ஒரு விநாடியில் சரீரமற்ற ஸ்திதியில் ஸ்திரமாக முடியுமா? பாப்தாதா உங்களுக்கு இலகுவான ஒரு வழிமுறையைக் கூறியுள்ளார். சதா நினைவிற்கு இந்த வழிமுறையைப் பயன்படுத்துங்கள். நாள் முழுவதும் நீங்கள் எல்லோரும் இரண்டு வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். நீங்கள் அந்த வார்த்தைகளைப் பல தடவைகள் கூறுகிறீர்கள். அந்த இரண்டு வார்த்தைகளும் ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவையே ஆகும். ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் கூறும்போது, தந்தை உங்களுக்கு ‘நான் ஓர் ஆத்மா’ என்ற அறிமுகத்தை வழங்கி உள்ளார். அதனால், ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் கூறும்போது எல்லாம், ‘நான் ஓர் ஆத்மா’ என்பதை நினையுங்கள். ‘நான்’ என்பதை மட்டும் நினைக்காதீர்கள். இத்துடன்கூடவே, ‘நான் ஓர் ஆத்மா’ என்பதையும் நினையுங்கள். ஏனென்றால், நீங்கள் ஒரு மேன்மையான ஆத்மா, இறை பராமரிப்பைக் கொண்டுள்ளதோர் ஆத்மா என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பின்னர், ‘எனது’ என்ற வார்த்தையை நீங்கள் கூறும்போது, யார் என்னுடையவர்? எனது பாபா. அதாவது, தந்தையான இறைவன். எனவே, நீங்கள் ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற வார்த்தைகளைக் கூறும்போது, ‘ஆத்மாவான நான்’ என்பதையும் ‘எனது பாபா’ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தந்தையுடன் எந்தளவிற்கு அதிகமாக ‘எனது’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் நினைவானது இலகுவானது ஆகும். ஏனென்றால், உங்களுடையதான எதையும் நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். நாள் முழுவதும், நீங்கள் உங்களுடைய விடயங்களை மட்டுமே நினைப்பீர்கள். இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களால் இலகுவாக சதா யோகிகள் ஆகமுடியும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுய மரியாதை என்ற ஆசனத்தில் அமர வைத்துள்ளார். நீங்கள் சுயமரியாதையின் பட்டியலை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வந்தால், அது நீண்டதொரு பட்டியலாகும். நீங்கள் உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருக்கும்போது, சரீர உணர்வு இருக்க முடியாது. ஒன்றில் சரீர உணர்வு இருக்கும் அல்லது சுயமரியாதை இருக்கும். சுயமரியாதையின் அர்த்தம், அந்த மேன்மையான விழிப்புணர்வின் இடத்தில் இருந்து, அதாவது, ஆத்மாவில் இருந்து வருகின்றது. எனவே, நீங்கள் எல்லோரும் உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருக்கிறீர்களா? நீங்கள் எந்தளவிற்கு உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது மிகவும் இயல்பாக இருக்கும். உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருப்பது மிகவும் இலகுவானது.
நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? தாங்கள் சந்தோஷமாக இருப்பவர்கள், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள். பாப்தாதா எப்போதும் கூறுவார்: நாள் முழுவதும் உங்களின் சந்தோஷத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். ஏன்? சந்தோஷம் எப்படிப்பட்டது என்றால், அந்த சந்தோஷத்தில் ஆரோக்கியம் உள்ளது, செல்வம் உள்ளது, அத்துடன் நீங்கள் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். சந்தோஷம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் இனிமை இல்லாமல் இருக்கும். சந்தோஷத்தைப் பற்றியே இப்படிக் கூறப்படுகிறது: சந்தோஷத்தைப் போல் பொக்கிஷம் எதுவும் இல்லை. உங்களிடம் எத்தனை பொக்கிஷங்கள் இருந்தாலும், சந்தோஷம் இல்லாவிட்டால், உங்களால் அந்தப் பொக்கிஷங்களில் இருந்து எதையும் அடைய முடியாது. சந்தோஷத்தைப் பற்றி இப்படிக் கூறப்படுகிறது: சந்தோஷத்தைப் போன்றதொரு போஷாக்கு எதுவும் இல்லை. எனவே, சந்தோஷமே (குஷி) செல்வம், சந்தோஷமே ஆரோக்கியம், உங்களின் பெயரும் சந்தோஷம். அதனால் நீங்கள் எப்படியும் சந்தோஷமாகவே இருக்கிறீர்கள். எனவே, சந்தோஷத்தில் இந்த மூன்று விடயங்களும் உள்ளன. தந்தை உங்களுக்கு அழியாத சந்தோஷப் பொக்கிஷத்தை வழங்கியுள்ளார். தந்தையின் பொக்கிஷங்களை இழக்காதீர்கள். எனவே, நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்களா?
பாப்தாதா உங்களுக்கு சந்தோஷமாக இருந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து அளிக்கும் வீட்டு வேலையைக் கொடுத்துள்ளார். ஏனென்றால், சந்தோஷம் எப்படிப்பட்டது என்றால், நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பகிர்ந்து அளிக்கிறீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்களா? நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள்தானே? நீங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து அளித்தால், அதைப் பகிர்ந்து அளிக்கும்போது, அது உங்களில் அதிகரிக்கும். நீங்கள் யாரையாவது மகிழ்விக்கும்போது, நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் உங்களின் வீட்டுவேலையைச் செய்து விட்டீர்களா? செய்து விட்டீர்களா? அதைச் செய்து விட்டவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அதைச் செய்தவர்கள் - சந்தோஷமாக இருத்தல், காரணங்களும் சாக்குப் போக்குகளும் சொல்லாமல் இருத்தல், ஆனால் தீர்வுகளின் சொரூபமாக இருத்தல் - உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இப்போது, ‘இது நடந்து விட்டது’ என நீங்கள் சொல்ல மாட்டீர்கள்தானே? சில குழந்தைகள், தாம் எத்தனை சதவீதம் ஓகே யாக இருந்தோம் எனத் தமது பெறுபேற்றை பாப்தாதாவிற்கு எழுதி உள்ளார்கள். நீங்கள் இந்த இலக்கை வைத்திருந்தால், தானாகவே அந்த இலக்கிற்கான தகைமைகளையும் வளர்த்துக் கொள்வீர்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்கள்: இரட்டை வெளிநாட்டவர்களே, நீங்கள் உங்களின் ஆதியான வெளிநாட்டை மறக்கவில்லை, அல்லவா? நீங்கள் அதை நினைவு செய்கிறீர்கள்தானே? இதனாலேயே, எல்லோரும் உங்களை இரட்டை வெளிநாட்டவர்கள் என்று அழைக்கிறார்கள். நீங்கள் வெறுமனே வெளிநாட்டவர்கள் அல்ல, ஆனால் இரட்டை வெளிநாட்டவர்கள். எனவே, நீங்கள் அநேகமாக ஒருபோதும் உங்களின் இனிய வீட்டை மறக்க மாட்டீர்கள். எனவே, நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்? நீங்கள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்தானே? பாப்தாதா கூறுகிறார்: ஏதாவது சிறிய அல்லது பெரிய பிரச்சனை வரும்போது, அது ஒரு பிரச்சனை அல்ல, ஆனால் நீங்கள் முன்னேறுவதற்கான ஒரு பரீட்சைத்தாளே ஆகும். எனவே, பாப்தாதாவின் இதய சிம்மாசனம் உங்களின் உரிமை ஆகும். இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள், பிரச்சனைகள் பொம்மை போன்று ஆகிவிடும். அப்போது நீங்கள் பிரச்சனையை இட்டுப் பயப்பட மாட்டீர்கள். ஆனால், அதனுடன் விளையாடுவீர்கள். ஏனென்றால், அது ஒரு பொம்மை ஆகும். நீங்கள் எல்லோரும் பறக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள்தானே? உங்களிடம் பறக்கும் ஸ்திதி இருக்கிறதா? அல்லது, நீங்கள் நடப்பவர்களா? நீங்கள் பறப்பவர்களா அல்லது நடப்பவர்களா? பறப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பறப்பவர்கள். நீங்கள் உங்களின் கைகளை அரைவாசி மட்டுமே உயர்த்துகிறீர்கள். நீங்கள் பறப்பவர்களா? அச்சா. நீங்கள் சிலவேளைகளில் பறப்பதை நிறுத்தி விடுகிறீர்களா? நான் செயல்படுகிறேன் என்பதாக இருக்கக்கூடாது. சிலர் பாப்தாதாவிடம், ‘பாபா, நாங்கள் மிக நன்றாகவே இருக்கிறோம்’ எனச் சொல்கிறார்கள். எனவே, பாப்தாதா கேட்கிறார்: நீங்கள் நடக்கிறீர்களா அல்லது பறக்கிறீர்களா? இப்போது இது நடப்பதற்கான நேரம் இல்லை. இது பறப்பதற்கான நேரம் ஆகும். உங்கள் எல்லோரிடமும் ஊக்கம், உற்சாகம் மற்றும் தைரியம் என்ற இறக்கைகள் உள்ளன. எனவே, நீங்கள் உங்களின் இறக்கைகளுடன் பறக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு நாளும் சோதித்துப் பாருங்கள்: நான் பறக்கும் ஸ்திதியில் பறக்கிறேனா? இது நல்லது. வெளிநாடுகளில் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பெறுபேற்றை பாப்தாதா பார்த்துள்ளார். அவை அதிகரிக்கவே வேண்டும். எப்படி நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்களோ, இப்போது உங்களின் மனதாலும் அத்துடன் வார்த்தைகளாலும் இரட்டைச் சேவை செய்யுங்கள். ஆத்மாக்கள் எல்லோருக்கும் ஆன்மீக மனோபாவத்தை உருவாக்குவதற்கு உங்களின் மனதின் சக்தியைப் பயன்படுத்துங்கள். ஒரு சூழலை உருவாக்குங்கள். துன்பம் அதிகரிப்பதைப் பார்க்கும்போது உங்களுக்குள் கருணை பிறக்கவில்லையா? உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று மக்கள் அழுகிறார்கள்: எங்கள் மீது கருணை காட்டுங்கள்! எங்களில் கருணை காட்டுங்கள்! இப்போது கருணை நிறைந்தவராகவும் கனிவானவராகவும் ஆகுங்கள். உங்களின் மீதும் அத்துடன் ஆத்மாக்களின் மீதும் கருணை காட்டுங்கள். நீங்கள் ஒவ்வொரு பருவகாலத்திலும் ஒவ்வொரு முறையிலும் வருவது நல்லதே. எல்லோருக்கும் இந்த சந்தோஷம் உள்ளது. எனவே, தொடர்ந்து பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். இது நல்லது. நீங்கள் இப்போது உங்களை மாற்றுவதில் விரைவாகச் செல்லும் பெறுபேற்றை பாப்தாதா பார்க்கிறார். எனவே, சுய மாற்றம் என்ற வேகம், உலக மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்கும். அச்சா.
முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! உங்கள் எல்லோருக்கும் உங்களின் பிராமணப் பிறப்பிற்காக வாழ்த்துக்கள். அச்சா. நீங்கள் எப்படியும் தோளி பெறுவீர்கள். ஆனால், பாப்தாதா உங்களுக்கு தில்குஷ் (சந்தோஷமான இதயம்) தோளியை ஊட்டுகிறார். மதுவனத்திற்கு முதல் தடவை வருவதற்காகக் கொடுக்கப்படும் இந்த தில்குஷ் தோளியை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். அந்தத் தோளியை நீங்கள் வாயில் போட்டதுமே கரைந்துவிடும். ஆனால், இந்த அழியாத தில்குஷ் தோளி எப்போதும் உங்களுடன் இருக்கும். நல்வரவுகள்! பாப்தாதாவும் இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த முழுக் குடும்பமும் எமது சகோதர, சகோதரிகளான உங்களைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆபிரிக்காவில் இருப்பவர்கள், ரஷ்யாவில் இருப்பவர்கள், இலண்டனில் இருப்பவர்களும் உங்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து கண்டங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால், அங்கே இருந்தாலும், அவர்கள் எல்லோருமே உங்களின் பிறந்த நாளுக்காக உங்களை வாழ்த்துகிறார்கள். அச்சா.
பாப்தாதாவின் ஆன்மீக அப்பியாசம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்.) இப்போது, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும், அவர் பழையவரோ அல்லது புதியவரோ, சிறியவரோ அல்லது மூத்தவரோ - உண்மையில், சிறியவர்களால் விரைவில் தந்தையைப் போல் ஆகமுடியும் - இப்போது உங்களின் மனங்கள் ஒரு விநாடியில் நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஸ்திரமாகவும் ஒருமுகப்பட்டதாகவும் ஆகவேண்டும். சதா இந்த ஒருமுகப்படும் அப்பியாசத்தைச் செய்யுங்கள். இப்போது, ஒரு விநாடியில் உங்களின் மனதின் அதிபதியாகி, ‘நானும் எனது பாபாவுமே எனது உலகம், வேறு யாரும் இல்லை’ என்ற விழிப்புணர்வில் ஸ்திரமாகுங்கள். அச்சா.
எங்கும் உள்ள தீவிர முயற்சியாளர் குழந்தைகள் எல்லோருக்கும் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதன் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கும் தமது சுயமரியாதை என்ற ஆசனங்களில் சதா அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் தமது மனங்களின் சக்தியால் உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு ஒரு துளி சந்தோஷத்தையும் அமைதியையும் வழங்கும் சதா கருணைநிறைந்த மற்றும் கனிவான குழந்தைகளுக்கும் சதா தந்தையின் அன்பிலே திளைத்திருப்பதுடன் அவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
நீங்கள் எல்லோரும் மிக, மிக, மிக சந்தோஷமாக இருக்கிறீர்களா? சந்தோஷமாக இருக்கிறீர்களா? மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? எந்தளவிற்கு சந்தோஷமாக இருப்பீர்கள்? எனவே, சதா அப்படியே இருங்கள். என்ன நடந்தாலும் அது நடக்கட்டும். இப்போது, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் பறக்க வேண்டும். யாரும் உங்களைக் கீழே கொண்டு வரமுடியாது. அதை உறுதியாக்குங்கள். இது உறுதியான சத்தியமா? அது எந்தளவிற்கு உறுதியானது? சதா சந்தோஷமாக இருந்து, எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். உங்களுக்கு ஏதாவது பிடிக்காவிட்டாலும் உங்களின் சந்தோஷத்தை இழக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவிற்கு அந்தச் சூழ்நிலையைச் சிறப்பாகக் கையாளுங்கள். ஆனால் உங்களின் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள். அந்தச் சூழ்நிலை எப்படியும் முடிந்துவிடும். ஆனால், உங்களின் சந்தோஷம் உங்களுடன் செல்ல வேண்டும், அல்லவா? எவ்வாறாயினும், உங்களுடன் என்ன போக வேண்டுமோ, அதை நீங்கள் கைவிடுகிறீர்கள். எது உங்களை விட்டு நீங்க வேண்டுமோ, எதை நீங்கள் கைவிட வேண்டுமோ, நீங்கள் அதை உங்களுடன் வைத்திருக்கிறீர்கள்! இப்படிச் செய்யாதீர்கள்! அமிர்த வேளையில், ஒவ்வொரு நாளும் எல்லாவற்றுக்கும் முதலில், உங்களுக்கு சந்தோஷப் போஷாக்கினை ஊட்டுங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பிலே திளைத்திருக்கும் உங்களின் இனிய மௌனமான ஸ்திதியால் சக்திவாய்ந்த பற்றை வென்ற ரூபம் ஆகுவீர்களாக.உங்களிடம் ஒரு சரீரம், அந்தச் சரீரத்தின் உறவுகள் மற்றும் சம்ஸ்காரங்கள் உள்ளன. அத்துடன் மனிதர்களும் உடமைகளும், சூழலும் அதிர்வலைகளும் உள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் உங்களைக் கவர அனுமதிக்காதீர்கள். வெளியே மக்கள் அழுது கொண்டிருக்கக்கூடும். ஆனால் நீங்கள் அசையாதவர்களாக இருக்க வேண்டும். எவ்வளவுதான் சடப்பொருளும் மாயையும் தமது இறுதி விளையாட்டை விளையாடி உங்களைத் தம்மை நோக்கிக் கவர முயற்சி செய்தாலும், அன்பெனும் ஸ்திதியில், பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்புடையவராகவும் இருக்கும் ஸ்திதியில் திளைத்திருங்கள். இதுவே, பார்த்தும் பார்க்காமல் இருப்பது, கேட்டும் கேட்காமல் இருப்பது எனப்படுகிறது. இதுவே அன்பிலே திளைத்திருக்கும் இனிய மௌனமான ஸ்திதி ஆகும். நீங்கள் இத்தகைய ஸ்திதியை உருவாக்கும்போது, பற்றை வென்றவராக இருக்கும் சக்திவாய்ந்த ரூபத்தைக் கொண்டிருப்பதறகான ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
ஒரு புனித அன்னமாகி, குறைபாடுகள் என்ற கூழாங்கற்களையும் கற்களையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, நல்லதன்மை என்ற முத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அவ்யக்த சமிக்கை: இலகு யோகி ஆகுவதற்கு, இறையன்பில் அனுபவசாலி ஆகுங்கள்.
எரிமலை ரூபம் ஆகுவதற்கு, நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை எப்போதும் நினையுங்கள். திரும்பிச் செல்லுதல் என்றால் அப்பால் இருத்தல் என்று அர்த்தம். உங்களின் அசரீரியான வீட்டுக்கு நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி இருப்பதனால், அதற்கேற்ற ஆடையை நீங்கள் செய்ய வேண்டும். எனவே, நீங்கள் திரும்பிச் செல்வதுடன் மற்றவர்களையும் திரும்பவும் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் இயல்பாகவே சகல உறவுமுறைகளுக்கும் சடப்பொருளின் சகலவிதமான கவர்ச்சிகளில் இருந்தும் அப்பாற்பட்டு இருப்பீர்கள். அதாவது, நீங்கள் ஒரு பற்றற்ற பார்வையாளர் ஆகுவீர்கள். ஒரு பற்றற்ற பார்வையாளர் ஆகுவதன் மூலம் நீங்கள் இலகுவாகத் தந்தையின் சகபாடி ஆகவும் தந்தைக்குச் சமமானவராகவும் ஆகுவீர்கள்.
அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, உலக தியான வேளை. இதன்போது, சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் ஒன்றுகூடி மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகம் செய்வார்கள். யோகம் செய்யும் வேளையில், உங்களின் சூட்சுமமான, தேவதை ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, பக்தர்களின் அழைப்பைச் செவிமடுத்து, அவர்களை ஈடேற்றுங்கள். மாஸ்ரர் கருணைநிறைந்தவராகி, கனிவானவராகி, எல்லோர் மீதும் கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களுக்கு முக்தி மற்றும் ஜீவன்முக்தியின் ஆசீர்வாதத்தை வழங்குங்கள்.