21.10.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிகாலையில் விழித்தெழுந்து, பாபாவுடன் இனிய சம்பாஷணைகளைக் கொண்டிருங்கள். இந்த ஞானக்கடலைக் கடைவதற்கு, அதிகாலை மிகச் சிறந்த நேரமாகும்.

கேள்வி:
பக்தர்கள் கடவுளை ~~சர்வசக்திவான்|| என அழைப்பதற்கும், குழந்தைகளாகிய நீங்கள் அவரை அந்தப் பெயரால் அழைப்பதற்கும் இடையிலான வேறுபாடு என்ன?

பதில்:
கடவுளால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும், அனைத்தும் அவரது கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், பாபா கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்: நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். நாடகமே சர்வசக்திவான். அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற சக்தி தந்தையிடம் இருப்பதால், அவர் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். எவருமே உங்களிடமிருந்து அபகரிக்க முடியாத அத்தகையதோர் இராச்சியத்தை அவர் ஸ்தாபிக்கின்றார்.

ஓம் சாந்தி.
அவ்வாறு கூறியவர் யார்? பாபா. ஓம் சாந்தி. அவ்வாறு கூறியவர் யார்? தாதா. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிமேன்மையானவரின் புகழ் மிகவும் மகத்துவமானது என்பதை இனங்கண்டு விட்டீர்கள். அவர்கள் கூறுகின்றனர்: கடவுள் சர்வசக்திவான் என்பதால், அவரால் என்னதான் செய்ய முடியாது? பக்தி மார்க்கத்தில், “சர்வசக்திவான்” என்ற வார்த்தைக்கு மக்கள் மிக நல்ல அர்த்தத்தைக் கொடுக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: அனைத்தும் நாடகத்திற்கேற்பவே நிகழ்கின்றது. நான் எதையும் செய்வதில்லை. நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் சர்வசக்திவான்கள் ஆகுகின்றீர்கள். தூய்மையாக இருப்பதால், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள். தந்தையே சர்வசக்திவான். அவர் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நீங்கள் சர்வசக்திவான்களாகி உலகை ஆட்சிசெய்வீர்கள். உங்களிடம் சக்தி இல்லாது விட்டால், எவ்வாறு நீங்கள் ஆட்சிசெய்வீர்கள்? நீங்கள் யோகம் செய்வதன் மூலம் சக்தியைப் பெறுகின்றீர்கள், இதனாலேயே பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமான நினைவைக் கொண்டிருந்து, அதற்கேற்ப சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். தந்தையை நினைவு செய்வதனால். உங்களால் உலக இராச்சியத்தை அடைய முடியும் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களிடமிருந்து அதை அபகரிக்கக்கூடிய பலம் எவரிடமும் இல்லை. அனைவரும் அதிமேன்மையான தந்தையைப் புகழ்கின்றனர், எனினும் எவரும் எதையும் புரிந்துகொள்வதில்லை. இது ஒரு நாடகம் என்பதை ஒரு மனிதரேனும் அறியார். இது ஒரு நாடகம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தால், ஆரம்பத்திலிருந்து இறுதி வரையான அனைத்தையும் அவர்கள் நினைவுசெய்வார்கள். இல்லாவிடில், அதை ஒரு நாடகம் என அழைப்பது பிழையாகி விடும். இது ஒரு நாடகம் என்றும், நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்க வந்திருக்கின்றோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் இந்நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்திருக்க வேண்டும். தாங்கள் மேலிருந்து வருவதாகவும், இதனாலேயே சனத்தொகை அதிகரிக்கின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர். சத்திய யுகத்தில் வெகு சில மனிதர்களே இருந்தனர். இந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனர்? இந்நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டதும், அழிவற்றதும் என்பதுடன், அது ஆரம்பம் முதல் இறுதி வரை மீண்டும் மீண்டும் தொடர்கின்றது; என்பதையும் எவருமே புரிந்துகொள்வதில்லை. நீங்கள் ஒரு திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்த்துவிட்டு, பின்னர் மீண்டும் அதைப் பார்க்கும்பொழுது, அது இரண்டாவது தடவையாகவும் நிச்சயமாக அதேபோன்று மீண்டும் நிகழ்கின்றது; அதில் சிறிதளவேனும் வேறுபாடு இருக்க மாட்டாது. தந்தை எவ்வாறு இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் எனப் பாருங்கள்! தந்தை மிக இனிமையானவர்! பாபா, நீங்கள் மிக இனிமையானவர். பாபா, நாங்கள் இப்பொழுது எங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்லப் போகின்றோம். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுது, அவர்கள் அங்கு பாலையும் தூய்மையாகப் பெறுவார்கள் என்பதை நாங்கள் இப்பொழுது அறிவோம். அந்த மேன்மையான தாய்மார்கள் மிக இனிமையானவர்கள். அவர்கள் சரியான நேரத்திற்குத் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவார்கள். அவர்களுடைய குழந்தைகள் அதற்காக அழ வேண்டியதில்லை. நீங்கள் இவ்வாறாக இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். அதிகாலையில் பாபாவுடன் பேசுவதனால், நீங்கள் பெருமளவில் களிப்படைவீர்கள். பாபா, நீங்கள் மேன்மையான இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கான நல்ல வழிகளை எங்களுக்குக் காட்டுகின்றீர்கள். பின்னர் நாங்கள் மேன்மையான தாய்மாரின் மடிகளுக்குச் செல்வோம். அந்தப் புதிய உலகிற்கு எண்ணற்ற தடவைகள் சென்றவர்கள் நாங்களே. எங்களின் சந்தோஷ நாட்கள் வரப் போகின்றன. இந்தச் சந்தோஷப் போஷாக்கு பற்றிக் கூறப்பட்டுகின்றது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோப, கோபியரைக் கேளுங்கள். நாங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டு விட்டோம். அவர் எங்களைச் சுவர்க்கத்தின் மேன்மையான அதிபதிகள் ஆக்குகின்றார். நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் எங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றோம். நாங்கள் தோல்வியை அனுபவம் செய்த பின்னர், வெற்றி பெறுகின்றோம். இப்பொழுது நாங்கள் தந்தையை நினைவு செய்வதனால், இராவணனை வெற்றி கொள்ள வேண்டும். பின்னர் நாங்கள் தூய்மையாகுவோம். அங்கு யுத்தம் அல்லது வேதனை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை அங்கு எவ்விதச் செலவுகளும் இல்லை. பக்தி மார்க்கத்தில், பிறவிபிறவியாக நாங்கள் ஏராளமாகச் செலவழித்தோம். நாங்கள் அதிகளவில் தடுமாறித் திரிந்து, பல குருமாரையும் ஏற்றிருந்தோம். இப்பொழுது நாங்கள் அரைக் கல்பத்திற்கு எந்தக் குருமாரையும் ஏற்க மாட்டோம். நாங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று, பின்னர் அச்சந்தோஷ தாமத்திற்குச் செல்வோம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அச்சந்தோஷ தாமத்திற்கான பயணிகள். இப்பொழுது நீங்கள் துன்ப தாமத்திலிருந்து அச்சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டும். எங்கள் அற்புதமான பாபா! அவர் எவ்வாறு எங்களுக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! இங்கிருககின்ற எங்கள் ஞாபகார்த்தங்கள் பெரியதோர் அற்புதமாகும். தில்வாலா ஆலயத்திற்கு எல்லையற்ற புகழ் உள்ளது. நாங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றோம். எனவே, இதன் ஞாபகார்த்தம் நிச்சயமாக உருவாக்கப்படும். இது அதேபோன்ற எங்;கள் ஞாபகார்த்தமாகும். பாபாவும், மம்மாவும், குழந்தைகளும் அங்கு அமர்ந்திருக்கின்றனர். தரையில் அவர்கள் யோகப் பயிற்சி செய்வதும், அவர்களுக்கு மேலே சுவர்க்க இராச்சியமும் காட்டப்படுகின்றன. விருட்சத்தின் படத்தில் இந்த ஞானம் மிகத் தெளிவாக உள்ளது. எவ்வாறு பாபா காட்சிகளை அருளிப் படங்களைச் செய்வித்தார் எனப் பாருங்கள். பாபா அக்காட்சிகளைக் அருளி, திருத்தங்களையும் செய்வித்தார். அது அத்தகையதோர் அற்புதமாக இருந்தது. இந்த ஞானம் அனைத்தும் புதியது. எவரும் இந்த ஞானத்தை அறியார். தந்தை மாத்திரமே அமர்ந்திருந்து, எவ்வாறு மனிதர்கள் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றார்கள் என்பதை விளங்கப்படுத்துகின்றார். மனித உலக சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. பக்தி முன்னேறுகையில், அதுவும் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றது. நீங்கள் இப்பொழுது இங்கு சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். “மன்மனாபவ” என்ற பதமும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் யார் என்பதை அவர்கள் அறியாதுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் விழித்தெழுந்து, மக்களுக்கு எவ்வாறு கடவுளின் அறிமுகத்தைக் கொடுப்பது என்பதையிட்டு இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். பக்தியிலும், மக்கள் அதிகாலையில் விழித்தெழுந்து, அமர்ந்திருந்து, தங்கள் அறைகளின் சிறிய மாடங்களில் வழிபாடு செய்கின்றனர். இதுவும் ஞானக்கடலைக் கடைவதாகும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு மூன்றாவது கண்ணின் கதையைக் கூறுகின்றார். மூன்றாவது கண்ணின் கதை, அமரத்துவக் கதை, சத்திய நாராயணன் ஆகுகின்ற கதை அனைத்தும் மிகவும் பிரபல்யமானவை. ஒரேயொரு தந்தையே அவற்றைக் கூறுகின்றார். பின்னர் அவை பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் கூறப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் செழிப்பானவர்கள் ஆகுகின்றீர்கள், இதனாலேயே தேவர்கள் பல்கோடீஸ்வரர்கள் என்று கூறப்படுகின்றனர். தேவர்கள் பல்கோடீஸ்வரர்களான, பெரும் செல்வந்தர்கள் ஆகுகின்றனர். கலியுகத்தைப் பார்த்துவிட்டு, பின்னர் சத்திய யுகத்தைப் பாருங்கள். இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது! முழு உலகமும் சுத்தமாக்கப்படுவதற்குக் காலம் எடுக்கின்றது. இவ்வுலகம் எல்லையற்றது. பாரதமே என்றும் மறைந்து விடாத, அழிவற்ற தேசமாகும். அரைக் கல்பத்திற்கு, இந்த ஒரு தேசம் மாத்திரமே இங்கு இருக்கின்றது. பின்னர் ஏனைய தேசங்கள் அனைத்தும் வரிசைக்கிரமமாகத் தோன்றுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவுக்கு இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: உலக வரலாறும், புவியியலும் எவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதை வந்து, புரிந்துகொள்ளுங்கள். புராதன ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் அதிக மரியாதை வழங்கப்படுகின்றது. எனினும், அவர்களும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறியார்கள். அவர்கள் ஹத்தயோகிகள். எவ்வாறாயினும், அவர்கள் தூய்மைச் சக்தியைக் கொண்டிருப்பதன் மூலம், பாரதத்திற்கு ஆதாரமாக உள்ளனர். இல்லாவிடில், பாரதம் என்னவாகும் என உங்களுக்கு ஒருபொழுதும் தெரியாது. ஒரு கட்டடத்திற்கு வெள்ளை அடிக்கும்பொழுது, அது அழகாகத் தோன்றுகின்றது. பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, அதே பாரதமே இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது. அங்கு உங்கள் சந்தோஷம் நீண்ட காலத்திற்கு நீடிக்கின்றது. அங்கு உங்களிடம்; ஏராளமான செல்வம் இருந்தது. நீங்கள் மாத்திரமே பாரதத்தில் வாழ்ந்தீர்கள். அது உங்கள் இராச்சியமாக இருந்தது. இது நேற்றைய விடயமாகும். பின்னர், ஏனைய சமயங்கள் அனைத்தும் வந்தன. அவர்கள் வந்து, உலகைச் சிறிது சீர்திருத்தி, தங்கள் பெயர்களைப் புகழடையச் செய்தனர். இப்பொழுது அவர்கள் அனைவரும் தமோபிரதானாகி விட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்! நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் புதியவர்களுக்குக் கூறக்கூடாது. முதலில், அவர்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளுமாறு செய்யுங்கள். உங்களுக்குத் தந்தையின் பெயர், ரூபம், இடம், காலம் என்பவற்றைத் தெரியுமா? அதிமேன்மையான தந்தையின் பாகம் மிகவும் பிரபல்யமானது. அந்தத் தந்தையே எங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எனது உதவியாளர்கள். நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். எனவே, தூய உலகம் நிச்சயமாக உங்களுக்காக ஸ்தாபிக்கப்பட வேண்டும். பழைய உலகம் இப்பொழுது மாற்றமடைந்து, பின்னர் சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள்; இருக்கும் என நீங்கள் எழுதலாம். அதன்பின்னர், இராவண இராச்சியம் தொடரும். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிக இனிமையாக இருக்கும். காலங்கள்;, திகதிகள் போன்ற அனைத்தும் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. “பாரதத்தின் புராதன இராஜயோகம்” என்றால் நினைவு என்பதாகும். நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன, இதனைக் கற்பதன் மூலம் நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். ஆம், நிச்சயமாக மாயையின் புயல்கள் இருக்கவே செய்யும். அதிகாலையில் விழித்தெழுந்து, பாபாவுடன் பேசுவது மிக நல்லது. பக்தி, இந்த ஞானம் இரண்டிற்கும் இது மிகச் சிறந்த நேரமாகும். மிக இனிய சம்பாஷணையைக் கொண்டிருங்கள். நாங்கள் இப்பொழுது மேன்மையான உலகிற்குச் செல்லவுள்ளோம்: தாங்கள் இப்பொழுது தங்கள் சரீரங்களை நீக்கி விட்டு, ஒரு கருப்பையினுள் செல்லப் போகின்றார்கள் என்பது முதியவர்களின் இதயங்களில் புகுகின்றன. பாபா அவர்கள் அனைவரையும் மிகவும் போதையடையச் செய்கின்றார்! அமர்ந்திருந்து, இவ்வாறு பேசுங்கள், நீங்கள் பெருமளவில் சேமித்துக் கொள்வீர்கள். சிவபாபா எங்களை நரகத்தில் வசிப்பவர்களிலிருந்து சுவர்க்கத்தில் வசிப்பவர்கள் ஆக்குகின்றார். நாங்களே முதலில் வருபவர்கள். நாங்கள் சகலதுறைப் பாகங்களையும் நடிக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: அந்த அழுக்கான ஆடைகளைத் துறவுங்கள். உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, முழு உலகையும் மறந்து விடுங்கள். இது எல்லையற்ற துறவறம். அங்கு, உங்களுக்கு வயதாகும்பொழுது, எவ்வாறு நீங்கள் மீண்டும் ஒரு குழந்தையாகப் போகின்றீர்கள் என ஒரு காட்சி கிடைக்கும். அங்கு பெருஞ் சந்தோஷம் இருக்கின்றது. குழந்தைப் பருவமே அனைத்திலும் சிறந்தது. அதிகாலையில் அமர்ந்திருந்து இவ்விதமாக இந்த ஞானக் கடலைக் கடையுங்கள். கருத்துக்கள் வெளிப்படும்பொழுது, நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை உணர்கின்றீர்கள். ஒன்று முதல் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை சந்தோஷமாகச் செலவிடப்படுகின்றன. நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகப் பயிற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களின் சந்தோஷம் அதிகரித்து, களிப்படைவீர்கள். நீங்கள் நடந்தும், உலாவித் திரியும்பொழுதும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். உங்களுக்குப் பெருமளவு நேரம் இருக்கின்றது. தடைகள் வரும் என்பதில் சந்தேகமில்லை. வியாபாரம் செய்யும்பொழுது, மக்கள் ஒருபொழுதும் தூங்குவதில்லை. சோம்பேறிகளே தூங்குகின்றார்கள். இயன்றவரை தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் உணவு தயாரிக்கும்பொழுதும், சிவபாபாவை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். “நான் சிவபாபாவிற்காகவே இதைச் செய்கின்றேன்.” பெருஞ் சுத்தத்துடன் உணவு தயாரிக்கப்பட வேண்டும். சிக்கல்களை உருவாக்குகின்ற எதுவும் இருக்கக்கூடாது. பாபாவும் (பிரம்ம பாபா) நினைவில் நிலைத்திருக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் விழித்தெழுந்து, பாபாவுடன் இனிய சம்பாஷணையைக் கொண்டிருங்கள். ஒவ்வொரு நாளும் சந்தோஷப் போஷாக்கைக் கொண்டிருப்பதனால், நீங்கள்; அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கின்றீர்கள்.

2. சத்திய யுகத்து இராச்சியத்தை ஸ்தாபிப்பதில் தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுவதற்கு, தூய்மையாகுங்கள். நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்களை அழித்து விடுங்கள். பெருஞ் சுத்தத்துடன் உணவைத் தயாரியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு திருப்தியான ஆத்மா ஆகுவதன் மூலம், தெய்வீகக் குணங்களை வரவழைப்பதனால், உங்கள் குறைபாடுகள் அனைத்தினதும் அர்ப்பணிப்பைச் செய்வீர்களாக.

தீபாவளியில், சுத்தத்திற்கும், ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. அதேபோல், நீங்கள் சகல விதத்திலும் சுத்தத்தைக் கொண்டிருப்பதற்கும், ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்குமான ஓர் இலக்கை வைத்திருக்கவும் வேண்டும். அப்பொழுது நீங்கள் ஒரு திருப்தியான ஆத்மா ஆகுவீர்கள். திருப்தியாக இருப்பதனால் மாத்திரமே சகல தெய்வீகக் குணங்களையும் நீங்கள் வரவழைப்பீர்கள். உங்கள் குறைபாடுகள் அனைத்தினதும் அர்ப்பணம் அப்பொழுது இயல்பாகவே செய்யப்படும். சகல பலவீனங்களையும், குறைபாடுகளையும், சக்திக் குறைவையும் அல்லது உங்களில் இருக்கின்ற சிக்கல்களையும் முடித்து விட்டு, ஒரு புதிய கணக்கை ஆரம்பியுங்கள். உங்கள் புதிய சம்ஸ்காரங்கள் எனும் புதிய ஆடைகளை அணிந்து, ஓர் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

சுலோகம்:
உங்களைச் சுய மரியாதை எனும் ஆசனத்தில் சதா நிலைநிறுத்தும் பொருட்டு, உங்கள் திடசங்கற்பம் எனும் பட்டியை மிகவும் நன்றாக இறுக்கிக் கொள்ளுங்கள்.


அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.

முதலில், உங்களிலும், உங்கள் சரீர நோய்கள் எதனிலும் மௌனச் சக்தி மூலம் பரீட்சார்த்தம் செய்து, உங்களைச் சோதியுங்கள். இச்சக்தியைப் பயன்படுத்துவதால், உங்கள் கர்ம பந்தனங்கள் தங்களது ரூபங்களை இனிய உறவுமுறைகளாக மாற்றும். மௌனச் சக்தியைப் பயன்படுத்துவதால், கர்ம வேதனை அல்லது கடுமையான கர்ம பந்தனம் எதுவும் நீரின் மேல் இடப்படுகின்ற கோடு போல் அனுபவம் செய்யப்படும். நீங்கள் வேதனைப்படுவதாக உணர மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து, உங்கள் கர்மத்தைத் தீர்த்து, தொடர்ந்தும் காட்சிகளை அவதானிப்பீர்கள்.

மாதேஸ்வரியின் பெறுமதியான வாசகங்கள்.

இந்த அழியாத இறை ஞானத்தைப் பெறுவதற்கு நீங்கள் எந்த மொழியையும் கற்க வேண்டிய அவசியமில்லை.

எங்களுடைய இறை ஞானம் மிகவும் இலகுவானதும், மிக இனிமையானதும் ஆகும், அதன் மூலம் உங்களால் பிறவிபிறவியாக ஒரு வருமானத்;தை ஈட்ட முடியும். இந்த ஞானம் மிக இலகுவானது. ஒரு மகாத்மாவிலிருந்து கற்;புத்தியுடைய அகலிகை (கல்லாக்கப்பட்டவர் - இராமாயணத்தில் நினைவுகூரப்படுகின்ற கதாபாத்திரம்) போன்றவர் வரை, எந்தச் சமயத்தைச் சேர்ந்த சிறுவரிலிருந்து வயோதிபர் வரையில், எவராலுமே அதனைப் பெற முடியும். பாருங்கள், இது மிகவும் இலகுவாக இருந்த பொழுதிலும், உலக மக்கள் இந்த ஞானத்தை மிகவும் கடினமானது எனக் கருதுகிறார்கள். தாங்கள்ம்ட்டுமே, பல வேதங்களையும், சமயநூல்களையும், உபநிடதங்கள் போன்றவற்றையும் கற்கும்பொழுது, சிறந்த கல்விமான்கள் ஆகலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். ஆனால் இவற்றைக் கற்பதற்கு, அவர்கள் ஒரு மொழியைக் கற்பது அவசியம். அவர்கள் பெருமளவு ஹத்தயோகம் செய்தால் மட்டுமே, ஏதோ ஒன்றை அடைய முடியும், ஆனால் எங்களுடைய அனுபவத்திலிருந்து, இந்த ஞானம் மிக எளிமையானதும், இலகுவானதும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில், கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார். எந்தச் சரீர பலவந்தமோ, ஓதுதலோ, தவம் செய்தலோ, மகத்துவமான சமயநூல்களின் பண்டிதர்கள் ஆகுவதோ, சம்ஸ்கிருத மொழியைக் கற்க வேண்டிய தேவையோ கிடையாது. இங்கே, பரமாத்மாவான பரம தந்தையுடன் ஆத்மாக்கள் இயல்பாக யோகம் செய்ய வேண்டும், இந்த ஞானத்தை ஒருவரால் இன்னமும் கிரகிக்க முடியாதிருந்தாலும், யோகம் செய்வதன் மூலம் பெரும் நன்மையைப் பெற முடியும். இதனூடாக முதலில் நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள், இரண்டாவதாக, உங்கள் கர்ம பந்தனங்கள் எரிக்கப்படுகின்றன, நீங்கள் கர்மாதீத் ஆகுகிறீர்கள். சர்வசக்திவான் கடவுளை நினைவுசெய்வதால், அதிகளவு சக்தி ஈட்டப்படுகின்றது, பிரம்மாவின் பௌதீகச் சரீரத்தினூடாக அவர் எங்களுக்கு யோகம் கற்பித்தாலும், நேரடியாக பரமாத்மாவான சிவனின் அந்த ஒளி வடிவத்தையே நாங்கள் நினைவுசெய்ய வேண்டும். இந்த நினைவினாலேயே ஆத்மாக்களாகிய எங்களில் உள்ள அழுக்கானது அகற்றப்படும். அச்சா.