22.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுடன், மிக அழகாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த நாடகத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிக நன்றாக அறிவீர்கள்.

கேள்வி:
எந்தக் கவர்ச்சியின் அடிப்படையில் அனைத்து ஆத்மாக்களும் உங்களிடம் ஈர்க்கப்படுகின்றார்கள்?

பதில்:
உங்களுடைய தூய்மையும், யோக சக்தியுமே கவர்ச்சியின் அடிப்படையாகும். இதன் மூலமே உங்கள் விரிவாக்கம் இடம்பெறும். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, மக்கள் தந்தையை உடனடியாகவே இனங்கண்டு கொள்வார்கள். பெருந்தொகையானோர் தமது ஆஸ்தியைக் கோருவதற்கு இங்கு வருகின்றார்கள் என்பதை அவர்கள் பார்க்கும்போது, அவர்களில் பலர் வருவார்கள். அது நீடிக்குமளவிற்கு உங்கள் கவர்ச்சியும் அதிகரிக்கும்.

ஓம் சாந்தி.
ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில் இருந்து கீழிறங்கி இங்கே வந்தீர்கள் என ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது உங்கள் புத்தியில் உள்ளது. அநேகமான ஆத்மாக்கள் கீழிறங்கி வந்து, ஒரு சிலர் மாத்திரமே மேலே எஞ்சியிருக்கும்போதே தந்தை வருகிறார். சக்கரத்தின் இறுதியில் தொலை தூரவாசியானவர் வருகின்றார் என்பதை அனைவருக்கும் விளங்கப்படுத்துவது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இலகுவாக இருக்கும். ஒரு சிலர் மாத்திரமே அங்கு எஞ்சியிருப்பார்கள். இங்கே சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. நீங்களும் இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையையே எவருமே அறியாதிருக்கும்போது, அவர்கள் அவருடைய படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை எப்படி அறிவார்கள்? இந்த நாடகம் எல்லையற்றது. எல்லைக்குட்பட்ட நாடகத்தில், இன்ன இன்னார், இந்த இந்தப் பாகத்தைப் நடிக்கின்றார்கள் என்பதை நடிகர்கள் அறிந்து கொள்வதைப் போன்று, இந்த நாடக நடிகர்களும் அதனைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் கடந்த காலத்தில் நடந்த விடயங்களை குறுநாடகங்களாக உருவாக்குகிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் நடந்த விடயங்களைப் பற்றி மாத்திரமே உருவாக்குகிறார்களே அன்றி, எதிர்காலம் பற்றிய எந்த விடயங்களையும் அவர்களால் உருவாக்க முடியாது. அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கதைகளின் அடிப்படையிலேயே நாடகங்களைத் தயாரிக்கின்றார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கவில்லை. இப்போது தந்தை வந்துவிட்டார் என்பதையும், ஸ்தாபனை இடம்பெறுவதனால், நாங்கள் எங்கள் ஆஸ்தியைக் கோருகின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எவர் வந்தாலும், அவர்களுக்கு தேவ அந்தஸ்தை அடைவதற்கான பாதையை நாங்கள் காட்டவேண்டும். அந்த தேவர்கள் எவ்வாறு மிகவும் மேன்மையானவர்கள் ஆகினார்கள்? எவருமே இதனை அறியவில்லை. உண்மையில் ஆதிசனாதன தர்மம் தேவர்களுக்கே உரியது. அந்த ஆத்மாக்கள் தங்கள் சொந்த தர்மத்தையே மறந்துவிட்டதால், அவர்களைப் பொறுத்தவரை அனைத்துச் சமயங்களும் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். பாபா இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தப் படங்கள் அனைத்தும் பாபாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. பாபா அவர்களுக்கு தெய்வீகக் காட்சிகளைக் கொடுத்து, படங்களை வர்ணம் தீட்ட வைத்தார். எனினும் சிலர் சொந்தப் புத்தியைப் பயன்படுத்தியும் வர்ணம் தீட்டினார்கள். நீங்கள் நிச்சயமாக இவ்வாறு எழுத வேண்டும் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: நீங்கள் இந்த நாடகத்தில் நடிகர்கள். எவ்வாறாயினும் நீங்கள் எவருமே இந்த நாடகத்தின் படைப்பவரையோ, இயக்குனரையோ அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது ஒரு புதிய தர்மத்தை உருவாக்குகின்றார். பழைய உலகம் புதியதாக்கப்பட வேண்டும். இதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். உங்களைப் பிராமணர்கள் ஆக்குவதற்காகவே தந்தை இந்தப் பழைய உலகில் பிரவேசிக்க முடியும். அவர் பின்னர் பிராமணர்களாகிய உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். இந்த வழிமுறை எவ்வளவு நல்லது என்பதைப் பாருங்கள். இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுடன், அது மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு நாளும் நான் உங்களுக்கு ஆழமான சூட்சுமமான புதிய விடயங்களைக் கூறுகின்றேன். குழந்தைகளே, விநாசம் ஆரம்பமாகியதும் நடந்து முடிந்த விடயங்களின் முழு வரலாற்றையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர் நீங்கள் சத்திய யுகத்துக்குச் சென்றதும் இந்தப் பழைய வரலாறு எதனையுமே நினைவு செய்ய மாட்டீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் நடைமுறையில் உங்களுடைய பாகங்களை நடிப்பீர்கள். கடந்தவற்றைப் பற்றி யாருக்குக் கூறுவீர்கள்? இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் கடந்த காலத்தைப் பற்றி எதனையுமே அறியமாட்டார்கள். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன உங்கள் புத்தியில் உள்ளன. எவ்வாறு விநாசம் இடம்பெறும், எவ்வாறு நீங்கள் மாளிகைகளைக் கட்டி, உங்கள் இராச்சியத்தை ஆளுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவை நிச்சயமாகக் கட்டப்படும். சுவர்க்கத்தின் காட்சிகளும், இயற்கைக் காட்சிகளும் முற்றிலும் தனித்துவமானவை. நீங்கள் உங்கள் பாகத்தைத் தொடர்ந்தும் நடிக்கும்போது, அனைத்தையும் அறிவீர்கள். இது காரணம் இல்லாமல் இரத்தம் சிந்துதல் என அழைக்கப்படுகிறது. அநாவசியமான இழப்புகள் தொடர்ந்தும் இடம்பெறும். பூமியதிர்ச்சி ஏற்படும்போது பெரும் சேதம் விளைவிக்கப்படுகிறது. குண்டுகள் வீசுவதும் அநாவசியமானதே. அதனை ஆரம்பிப்பதற்கு எவருமே எதனையும் செய்வதில்லை. விநாசம் இடம்பெற்றது என்பதையும், சண்டை சச்சரவுகள் இடம்பெற்றன என்பதையும் எல்லையற்ற புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்கள் அதனைப் பற்றி நாடகங்களையும் உருவாக்குகிறார்கள். சிலரது புத்தியை நிச்சயமாகச் சில கருத்துக்கள் தொடுகின்றன என்பதனை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் அதை நடைமுறையில் நடிக்கின்றீர்கள். நீங்களும் அந்த இராச்சியத்தில் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகப் புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்பதையும் அறிவீர்கள். பிரம்மாவிடம் இருந்தோ அல்லது பிரம்மாகுமாரிகளிடம் இருந்தோ இந்த ஞானத்தைப் பெற்று பிராமணர்கள் ஆகியவர்களே அங்கு செல்லமுடியும். அனேக பிராமணர்கள் இன்னமும் தங்கள் குடும்பங்களுடன் வீட்டில் வாழ்கின்றார்கள். அவர்களில் பலரை நீங்கள் அறியவும் மாட்டீர்கள். அதிகமானவர்கள் நிலையங்களுக்கு வருவதால், அவர்கள் அனைவரையும் உங்களால் நினைவில் வைத்திருக்க முடிவதில்லை. பல பிராமணர்கள் உள்ளனர். எங்கள் எண்ணிக்கை வளரும்போது, எண்ணற்ற பிராமணர்கள் இருப்பார்கள். அவர்களைச் சரியாகக் கணக்கீடு செய்ய முடியாது. ஒரு அரசனுக்கு தன்னுடைய இராச்சியத்தில் சரியாக எத்தனை பிரஜைகள் இருப்பார்கள் எனத் தெரியாது. அவர்கள் சனத்தொகைக் கணக்கெடுப்பில் அண்ணளவான ஓர் எண்ணிக்கையை வைத்திருப்பார்கள். ஆனால் அதில் வித்தியாசம் இருக்கும். இப்பொழுது நீங்கள் மாணவர்கள். இவரும்கூட ஒரு மாணவனே ஆவார். நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அதாவது ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். சிறு குழந்தைக்குக்கூட “பாபா பாபா” எனக் கூறுவதற்குக் கற்பிக்கப்படுகின்றது. நீங்கள் முன்னேறும்போது, மக்கள் வந்து உடனடியாகத் தந்தையையும் இனங்கண்டு கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு பலர் தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு இங்கு வருகிறார்கள் என்பதை மக்கள் கண்டதும், அவர்களிற் பலரும் இங்கு வருவார்கள். அது நீடிக்கும் அளவிற்கு உங்கள் கவர்ச்சியும் அதிகரிக்கும். நீங்கள் எந்தளவிற்குத் தூய்மையாகி யோகத்தில் நிலைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிக கவர்ச்சி உள்ளவர்கள் ஆகுவீர்கள். மற்றவர்கள் இங்கே ஈர்க்கப்படுவார்கள். தந்தையும் அவர்களைக் கவர்வார். பின்னர் நாங்கள் விரைவாகத் தொடர்ந்தும் விரிவடைவோம். அதற்கும் வழிமுறைகள் உருவாக்கப்படும். கீதையின் கடவுள் யார்? ஸ்ரீகிருஷ்ணர் சரீரதாரி ஆதலால் அவரை நினைவு செய்வது இலகுவானது. அசரீரியான தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அனைத்தும் இந்த விடயத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே அனைவரையும் எழுத வைக்குமாறு பாபா உங்களுக்குக் கூறினார். நீண்ட பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். அதனால் அனேகமானவர்களுக்கு இது தெரியவரும். பிராமணர்களான உங்கள் புத்தியில் உறுதியான நம்பிக்கை இருக்கும்போது, விருட்சம் வளரும். எனினும் மாயையின் புயல்கள் இறுதி நேரம்வரை வரும். நீங்கள் வெற்றியாளர் ஆகியதும் முயற்சியோ, மாயையோ இருப்பதில்லை. நினைவு செய்ய முயற்சி செய்யும்போதே உங்களில் அனேகமானவர்கள் தோல்வியடைகின்றீர்கள். யோகத்தில் நீங்கள் உறுதியாகும் அளவிற்கேற்ப நீங்கள் தோல்வி அடைவதும் குறைவாக இருக்கும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. அது உங்கள் இராச்சியம் என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். வைரங்களும், இரத்தினங்களும் எங்கிருந்து கொண்டுவரப்பபடும்? சுரங்கங்கள் எங்கிருந்து தோன்றும்? அவை யாவும் ஏற்கனவே இருந்தவையே. இதனைப் பற்றி எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது. எது நடக்க இருக்கின்றதோ அதை நீங்கள் நடைமுறையில் காண்பீர்கள். சுவர்க்கம் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். நன்றாகக் கற்பவர்கள், தாங்கள் எதிர்கால இளவரசர்கள் ஆகுவார்கள் என்பதிலும், அவர்களிடம் வைரங்களாலும், இரத்தினங்களாலும் உருவாக்கப்பட்ட மாளிகைகள் இருக்கும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். சேவாதாரிக் குழந்தைகளும் இந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள். ஆனால் குறைந்த அந்தஸ்தைக் கோர இருப்பவர்கள், எவ்வாறு தங்கள் மாளிகைகள் கட்டப்படும் என்பதை நினைத்துப் பார்க்கவும் மாட்டார்கள். அதிக சேவை செய்பவர்களே மாளிகைகளைப் பெறுபவர்கள், அல்லவா? உங்களுக்கு சேவை செய்வதற்கு பணிப்பெண்களும் வேலையாட்களும் இருப்பார்கள். சேவாதாரிக் குழந்தைகளுக்கு மாத்திரமே அந்த எண்ணம் இருக்கும். உங்களில் யார் நல்ல சேவை செய்கிறீர்கள் என்பதையும், யார் கற்றவர்களுக்கு முன்னால் தலை வணங்குவீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ளலாம். பாபாவுக்கும் இந்த எண்ணங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் சிறு குழந்தை போன்றவர் எனக் கூறப்படுவதால், அவர் ஒரு சிறு குழந்தையைப் போலப் பழகத் தொடங்குகின்றார். பாபாவுக்கு செய்வதற்கு ஒன்று மாத்திரமே உள்ளது: அது, குழந்தைகளுக்குக் கற்பிப்பதே. நீங்கள் மாலையில் மணிகள் ஆகவேண்டுமானால் அதிக முயற்சி செய்யவேண்டும். மிக இனிமையானவர்களாகி, ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்களாக முடியும். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கூறும் விடயங்கள் சரியானதா என நீங்களே தீர்மானியுங்கள். நீங்கள் முன்னேறும்போது காட்சிகளைக் காண்பீர்கள். முடிவு நெருங்கி வரும்போது 5000 வருடங்கள் கடந்துவிட்டன என்றும், நீங்கள் இராச்சியத்துக்கு மீண்டும் செல்லவேண்டும் என்பதையும் மீண்டும் நினைவுகூருவீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி, இப்போது நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். வஸ்கொடகாம உலகினைச் சுற்றி வந்தார் எனக் கூறப்படுகிறது. அதே போல நீங்களும் 84 பிறவிகள் எடுக்கையில் உலகினைச் சுற்றி வந்தீர்கள். அங்கே ஒரேயொரு வஸ்கொடகாமாவே உலகைச் சுற்றி வந்தார். இங்கும் உங்களுடைய 84 பிறவிகளின் இரகசியங்களையும் எவ்வாறு வம்சம் தொடர்கின்றது என்பதையும் ஒரேயொருவராலேயே கூறமுடியும். நீங்கள் சரீர உணர்வில் உள்ளீர்களா இல்லையா என்பதை நீங்களே சோதனை செய்யுங்கள். நீங்கள் தோல்வி அடையாமலும், இதனையிட்டுக் குழப்பம் அடையாமலும் இருப்பதற்கு இதைச் சோதியுங்கள். சிவபாபாவை நினைவுசெய்வதன் மூலம் யோக சக்தியை வளர்த்துக் கொள்ளும்போது எவராலும் உங்களை அறைய முடியாது. நீங்கள் யோகம் என்னும் கவசத்தினால் பாதுகாக்கப்படுவதனால், எவருமே உங்களுக்கு எதுவும் செய்யமுடியாது. நீங்கள் புண்பட்டால், நிச்சயமாக உங்களில் சிறிதளவு சரீர உணர்வுள்ளது என்பதே அர்த்தம். நீங்கள் ஆத்ம உணர்வில் இருக்கும்போது எவரினாலும் உங்களைப் புண்படுத்த முடியாது. அது உங்கள் சொந்தத் தவறு ஆகும். ஆத்ம உணர்வில் உள்ளவரை எவராலும் எதுவும் செய்துவிட முடியாது என்பதே நிஜம். இதனாலேயே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யவேண்டும். நீங்கள் இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். கடவுள் கூறுகின்றார்: “மன்மனாபவ” எந்தக் கடவுள்? குழந்தைகளாகிய நீங்கள் இதனையும் விளங்கப்படுத்த வேண்டும். இந்த ஒரு விடயத்தின் மூலம் நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள். கடவுள் ஸ்ரீகிருஷ்ணரே இதனைக் கூறினார் என உலகில் உள்ள அனைத்து மக்களின் புத்தியும் நம்புகின்றது. ஆகவே இதனை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது அவர்கள் இது உண்மையாக இருக்கும் எனக் கூறுவார்கள். எனினும் நீங்கள் புரிந்து கொண்டதைப் போன்று, அவர்களும் புரிந்து கொண்டாலே தந்தை எதனைக் கற்பித்தாலும் அவை சரியானவையே என்று அவர்கள் கூறுவார்கள். “நான் யார், எத்தகையவர் என்பதை எவருமே அறியமாட்டார்கள்” என ஸ்ரீகிருஷ்ணர் கூறமாட்டார். அனைவருமே ஸ்ரீகிருஷ்ணரை அறிவார்கள். கடவுள் ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தின் மூலம் பேசுகின்றார் என்பதல்ல, இல்லை. ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கின்றார். அந்த நேரத்தில் கடவுள் எவ்வாறு வரமுடியும்? கடவுள் அதி மங்களகரமான சங்கமயுகத்திலேயே வருகின்றார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அவர்கள் அனைவரையும் இதனை எழுதச் செய்ய வேண்டும். நீங்கள் அவர்கள் அனைவரதும் கருத்துக்களை மிகப் பெரிய புத்தகத்தில் அச்சடித்து வைத்திருக்க வேண்டும். பெருந்தொகையான மக்கள் முன்னரே இவ்விடயங்களை எழுதியிருப்பதை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களும் சிலவற்றை எழுதுவார்கள். அப்பொழுது, கீதையின் கடவுள் யார் எனப் பலரின் கருத்துக்கள் எழுத்தில் உங்களிடம் இருக்கும். தலைப்பில் இவ்வாறு கூறவேண்டும்: தந்தையே அதிமேலானவர். ஸ்ரீகிருஷ்ணரை அதிமேலானவர் எனக் கூறமுடியாது. சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் என அவரால் கூறமுடியாது. கடவுள் பிரம்மாவிலும் உயர்ந்தவர் ஆவார். இதுவே முக்கிய விடயம். இதனைப் புரிந்து கொள்ளாததாலேயே அவர்கள் கடனாளிகள் ஆகுகின்றார்கள். நீங்கள் இங்கேயே இருக்க முடியுமென பாபா கூறவில்லை. இல்லை. நீங்கள் ஒரு முறை சற்குருவை ஏற்றுக்கொண்டதும் வீடு திரும்ப முடியும். ஆரம்பத்தில் ஒரு ‘பத்தி’ உருவாக்கப்பட வேண்டியிருந்தது. சமய நூல்களிலும் பத்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எவருமே ‘பத்தி’ எதனைக் குறிப்பிடுகின்றது என்பதை அறியவில்லை. பத்தி (சூளை) என்பது செங்கட்டியைச் சுடுவதற்காகும். செங்கட்டிகள் சில உறுதி வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் ஏனையவை நொருங்கி விடுகின்றன. இங்கே தங்கம் போல் எதுவுமில்லை. ஆனாலும் கற்களும் கூழாங்கற்களும் போன்று ஏராளம் உள்ளன. புராதனமானவற்றிற்கு பெருமளவு மதிப்பு உண்டு. இப்பொழுது சிவபாபாவிற்கும், தேவர்களுக்கும் பெருமளவு மதிப்பு உள்ளது. எனினும் சத்திய யுகத்தில் மதிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு மக்கள் புராதனமானவற்றைத் தேடிச் செல்வதில்லை. அங்கு நீங்கள் பூரண திருப்தியுடன் இருப்பீர்கள். எனவே நீங்கள் எதனையும் தேடித்திரிய வேண்டிய அவசியமில்லை. எதனையும் நீங்கள் அகழ்ந்து எடுக்க வேண்டியதும் இல்லை. துவாபர யுகம் ஆரம்பிக்கும்போதே அகழ்தலும் ஆரம்பிக்கின்றது. அவர்கள் இக்காலத்தில் கட்டடங்களை நிர்மாணிக்க ஆரம்பிக்கும்போது நிலத்தின் கீழ் எதையும் கண்டுவிட்டால், நிலத்தின் கீழ் பல புராதன பொருட்கள் இருக்க வேண்டுமென எண்ணுகின்றார்கள். சத்திய யுகத்தில் அத்தகைய விடயங்களில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை. அங்கு தங்கத்தைத் தவிர வேறெதுவுமில்லை. செங்கட்டிகளும் தங்கமாகவே இருக்கும். எது நிச்சயிக்கப்பட்டதோ, ஒரு சக்கரத்திற்கு முன்னர் நீங்கள் பார்த்த நிகழ்வு எதுவோ, அதுவே மீண்டும் நிகழ்வதை நீங்கள் பார்ப்பீர்கள். ஓர் ஆத்மாவை வரவழைப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனையிட்டு நீங்கள் குழப்பமடைய வேண்டியதில்லை. வினாடிக்கு வினாடி அந்த ஆத்மா தொடர்ந்தும் தனது பாகத்தை நடித்துவிட்டு மறைந்து விடுகிறார். இது ஒரு கல்வி. பக்தி மார்க்கத்தில் எண்ணற்ற படங்கள் உள்ளன. என்றாலும் உங்கள் படங்கள் அர்த்தம் நிறைந்தவையாக உள்ளன. அர்த்தமற்ற படங்கள் எதனையும் நீங்கள் வைத்திருப்பதில்லை. மக்களுக்கு நீங்கள் படங்களை விளங்கப்படுத்தும் வரைக்கும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். விவேகமானவரும், ஞானம் நிறைந்தவருமான தந்தையால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். இப்பொழுது நீங்கள் கடவுளிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் கடவுளின் வம்சத்திற்கும், கடவுளின் குலத்திற்கும் உரியவர்கள். கடவுள் வந்து உங்கள் வம்சங்களை ஸ்தாபிக்கின்றார். தற்போது உங்களுக்கென ஓர் இராச்சியம் இல்லை. நீங்கள் ஓர் இராச்சியத்தைக் கொண்டிருந்தீர்கள், ஆனால் அது இப்போது இல்லை. தேவ தர்மம் நிச்சயமாக இருந்தது. சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் இருந்தன. பிராமண குலமும், சூரிய சந்திர வம்சங்களும் கீதை மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. அந்நேரத்தில் வேறெந்தச் சமயங்களும் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவீர்கள். முன்னர், பெரும் பிரளயமொன்று இடம்பெற்றதாகவே நீங்கள் எண்ணியிருந்தீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் அரசமிலையில் மிதந்து வந்ததாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணரே முதலாம் இலக்கத்தவராக இருப்பார், எனினும் கடல் என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இவ்விடயங்களை மிக நன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். இந்த ஆன்மீகக் கல்வியை மிக நன்றாகக் கற்பவர்கள் பெரும் சந்தோஷத்தைப் பெறுவார்கள். நன்றாகக் கற்பவர்களே திறமைச் சித்தி எய்துவார்கள். உங்கள் இதயம் எவர் மீதாவது பற்று வைத்திருக்குமாயின், நீங்கள் தொடர்ந்தும் அவரையே நினைவு செய்வீர்கள். நீங்கள் கற்கவேண்டிய நேரத்தில், உங்கள் புத்தி அத்திசையை நோக்கியே செல்லும். இதனாலேயே மாணவர்கள் கற்கும் காலத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். தந்தையைத் தவிர வேறு எவர்மீதும் உங்கள் புத்தி சென்றுவிடக் கூடாது எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. உங்களிற் பலர் இன்னமும் பழைய உலகையே நினைவு செய்கிறீர்கள் என்பதுடன் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போதுகூட அவர் கூறுவதைக் கேட்பதில்லை என்பதையும் பாபா அறிவார். பக்தி மார்க்கத்திலும் இவ்வாறே நடக்கிறது. அவர்கள் ஓர் ஆன்மீக ஒன்றுகூடலில் அமர்ந்திருக்கும் போதும், அவர்களின் புத்தி அங்கும் இங்கும் அலைபாய்கிறது. இது மிகவும் கடினமானதும், முக்கியமானதுமான பரீட்சை. உங்களிற் சிலர் இங்கே அமர்ந்திருந்தாலும் செவிமடுப்பதுகூட இல்லை. ஆனால் ஏனையோரோ அதைக் கேட்டு, சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் பாபாவிற்கு முன்னால் அமர்ந்திருக்கும்போது தொடர்ந்தும் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறார்கள். உங்களுடைய புத்தி தந்தையுடன் யோகத்தில் இருந்தால், உங்கள் இறுதி எண்ணங்கள் எதுவோ, அதுவே உங்களை உங்கள் இலக்குக்கு கொண்டுசெல்லும். இதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் இங்கு ஏராளமான செல்வத்தைப் பெறுகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வெற்றி மாலையின் ஒரு மணியாகுவதற்கு, பெருமளவு முயற்சி செய்யுங்கள், மிக இனிமையானவர் ஆகுங்கள், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.

2. யோகமே உங்களுடைய பாதுகாப்புக் கவசமாகும். எனவே, யோக சக்தியைச் சேமித்துக் கொள்ளுங்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
‘விசேடமானது’ என்ற வார்த்தையை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் நீங்கள் உங்களை மாற்றி, உங்களின் முழுமை இலக்கை அடைவீர்களாக.

சதா இந்த விழிப்புணர்வைக் கொண்டிருந்து உங்களின் சிறப்பியல்பைக் காட்டுங்கள்: ‘நான் விசேட பணிக்குக் கருவியாக உள்ள விசேடமானதோர் ஆத்மா’. குறிப்பாக, ‘விசேடம்’ என்ற வார்த்தையை நினைவு செய்யுங்கள். உங்களின் பேச்சு விசேடமானதாக இருக்க வேண்டும். உங்களின் பார்வை விசேடமானதாக இருக்க வேண்டும். நீங்கள் செய்வது விசேடமானதாக இருக்க வேண்டும். நீங்கள் சிந்திப்பதும் விசேடமானதாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விசேடமானதாக ஆக்குவதன் மூலம், நீங்கள் இலகுவாக சுயத்தை மாற்றுபவராகவும் அதனால் உலகை மாற்றுபவராகவும் ஆகி, முழுமை அடைகின்ற, அதாவது, உங்களின் இலக்கை அடைகின்ற உங்களின் இலட்சியத்தை இலகுவாக நிறைவேற்றுவீர்கள்.

சுலோகம்:
தடைகளை இட்டுப் பயப்படுவதற்குப் பதிலாக, அவற்றைப் பரீட்சைத் தாள்களாகக் கருதி, அவற்றில் சித்தி அடையுங்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

உங்களின் மனதின் தரத்தை அதிகரியுங்கள். தரமான ஆத்மாக்கள் நெருங்கி வருவார்கள். இதில் இரட்டைச் சேவை, சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் இடம்பெறும். நீங்கள் உங்களுக்காக வேறொரு முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் உங்களின் வெகுமதியைப் பெற்றதைப் போல் உங்களின் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். தற்சமயத்திற்கான மேன்மையான வெகுமதி, சுயம் எப்போதும் சகல பேறுகளாலும் நிறைந்திருப்பதுடன் எல்லோரையும் நிறைந்தவர்கள் ஆக்குதல் என்பதேயாகும்.