22.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை கூறுகின்ற விடயங்களை மாத்திரம் செவிமடுங்கள். தீயதைப் பேசாதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள், தீயதைக் கேட்காதீர்கள்.

கேள்வி:
தந்தை குழந்தைகளாகிய உங்களை எந்த நம்பிக்கையை கொண்டிருக்கத் தூண்டுகிறார்?

பதில்:
அவரே உங்களுடைய தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கத் தூண்டுகிறார். இந்த விழிப்புணர்வைப் பேணுவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். எவ்வாறாயினும், மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். அறியாமைப் பாதையிலே, மாயை என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி:
உங்களுடைய அட்டவணையைச் சோதிக்கும் பொழுது, எந்த விடயத்தில் உங்களுக்கு எல்லையற்ற, பரந்த புத்தி தேவையாகும்?

பதில்:
உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையை எவ்வளவு நேரம் நினைவு செய்கின்றீர்கள் என்று சோதிக்கும் பொழுதே. உங்கள் அட்டவணையில் இந்த விடயத்தைச் சோதிக்கும் பொழுது, உங்களுக்கு எல்லையற்ற பரந்த புத்தி தேவை. நீங்கள் ஆத்ம உணர்விற்கு வந்து தந்தையை நினைவு செய்யும் பொழுது மாத்திரமே உங்களது பாவங்கள் அழிக்கப்படும்.

ஓம் சாந்தி.
ஆசிரியர் வந்துள்ளார் என மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவரே தந்தையும் ஆசிரியரும் பரமசற்குருவும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது குழந்தைகளாகிய உங்களது விழிப்புணர்வில், நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமாக இருக்கின்றது. அவரே உங்களுடைய தந்தை, ஆசிரியர், சற்குரு எனத் தெரிந்து கொண்ட பின்னர், நீங்கள் அதை மறக்கக்கூடாது என்பதே நியதி. ஆனால், இங்கே மாயை உங்களை அதை மறக்கச் செய்கிறாள். அறியாமைப் பாதையிலே மாயை உங்களை மறக்கச் செய்வதில்லை. தங்களுடைய தந்தை யார், அல்லது அவரது தொழில் என்ன என்று குழந்தைகளால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர்கள் தாமே தமது தந்தையின் செல்வத்திற்கு அதிபதி என்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கற்கின்ற போதிலும், அவர்கள் தந்தையின் சொத்தையும் பெறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே கற்கின்றீர்கள், நீங்கள் தந்தையின் சொத்தையும் பெறுகிறீர்கள். நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள் என்றும் தந்தை மாத்திரமே உங்களுக்கு சற்கதிக்கான பாதையைக் காட்டுகிறார் என்ற நம்பிக்கையை நீங்கள் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளீர்கள். ஆகையினால் அவரே சற்குரு ஆவார். இந்த விடயங்கள் மறக்கப்படக்கூடாது. தந்தை கூறுகின்ற விடயங்களை மாத்திரமே நீங்கள் செவிமடுக்க வேண்டும். “தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! தீயதைப் பேசாதீர்கள்!” என்ற சுலோகத்துடன் குரங்குகளின் படங்கள் உள்ளது. இது மனிதர்களுக்கே பொருந்தும். தந்தை கூறுகிறார்: அசுரத்தனமான விடயங்களை பார்க்கவோ, பேசவோ, செவிமடுக்கவோ வேண்டாம். அவர்கள் “தீயதைக் கேட்காதீர்கள்” என்ற சுலோகத்தை குரங்குகளின் உதாரணத்துடன் உருவாக்கி உள்ளார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள் மனிதர்களின் உதாரணத்துடன் அதை உருவாக்கி உள்ளார்கள். நளினி இதைச் செய்து காட்டும் ஒரு படத்தை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். தந்தையை அவதூறு செய்கின்ற விடயங்கள் எதனையும் நீங்கள் செவிமடுக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: அவர்கள் என்னைப் பெருமளவு அவதூறு செய்துள்ளார்கள். ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களின் முன்னால் ஊதுபத்திகள் கொழுத்தி வைக்கப்படுகின்ற பொழுது, இராமரின் பக்தர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்வார்கள் என உங்களுக்குத் தெரியும். ஒருவரின் ஊதுபத்தியின் நறுமணத்தை மற்றையவர் விரும்புவதில்லை! இது அவர்கள் எதிரிகள் ஆகியுள்ளதைப் போன்றதாகும். நீங்கள் இப்பொழுது இராமரின் அல்லது இறை குலத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் இராவணனின் குடும்பத்துக்குச் சொந்தமானவர்கள். இங்கு, ஊதுபத்தி என்ற கேள்வியில்லை. தந்தையை சர்வவியாபி என்று அழைத்ததன் மூலம் நீங்கள் என்ன நிலையை அடைந்துள்ளீர்கள் என உங்களுக்குத் தெரியும். அவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என கூறுவதன் மூலம், உங்களுடைய புத்தி கல்லாக மாறிவிட்டது. உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்ற எல்லையற்ற தந்தையைப் பற்றிப் பெருமளவு அவதூறு உள்ளது. அவர்கள் எவரிடமும் ஞானம் இல்லை. அவர்கள் கூறுகின்ற விடயங்கள் எல்லாம் ஞான இரத்தினங்கள் அல்ல, கற்களேயாகும். நீங்கள் இப்பொழுது, தந்தையை நினைவு செய்யவேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னைச் சரியாக நான் யாரென்றும், என்னவாக இருக்கின்றேன் என்றும் எவருமே புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய உங்களிடையேயும் இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் தந்தையைச் சரியாக நினைவு செய்யவேண்டும். அவரும் ஒரு சிறிய புள்ளியாவார். அவரினுள்ளே முழுமையான பாகமும் உள்ளது. உங்களை நீங்கள் ஓர் ஆத்மா எனக்கருதுவது போலவே, நீங்கள் தந்தையைச் சரியாகத் தெரிந்து கொண்டு அவரை நினைவு செய்யவேண்டும். நாங்கள் அவரது குழந்தைகளாக இருந்த போதிலும், தந்தையின் ஆத்மா பெரியதென்றோ, நாங்கள் சிறியவர்கள் என்றோ இல்லை. தந்தை ஞானம் நிறைந்தவராக இருந்த போதிலும், அவரது ஆத்மா எங்களை விடப் பெரியதல்ல, ஆத்மாக்களாகிய உங்களிலும் ஞானம் இருக்கின்றது, ஆனால் அது வரிசைக்கிரமானது. பாடசாலையிலுள்ள மாணவர்கள் வரிசைக்கிரமாக சித்தி அடைகின்றனர். அவர்கள் குறைந்த புள்ளிகளையும் எடுப்பார்கள், ஆனால் எவருமே பூச்சியத்தை எடுக்க மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானம் மறைந்துவிடும். விக்கிரங்களும், சமயநூல்களும் மீண்டும் உருவாக்கப்படும். தந்தை ஆத்மாக்களாகிய உங்களிடம் கூறுகின்றார்: தீயதைக் கேட்காதீர்கள்.... இந்த அசுர உலகில் பார்ப்பதற்கு என்னதான் இருக்கின்றது? இந்தத் தீய உலகையிட்டு நீங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். இந்த உலகம் பழையது என ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தெரிந்து கொள்கின்றீர்கள். எனவே அதனுடன் தொடர்பை வைத்திருக்க ஏன் விரும்புகின்றீர்கள்? இந்த உலகைப் பார்த்தும் பார்க்காதிருக்க வேண்டும் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுடைய அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நீங்கள் நினைவு செய்யவேண்டும். நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள், எனவே நீங்கள் இந்த விடயங்களை நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும், அதிகாலையில் எழுந்து மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். அவர்கள் அதிகாலை வேளையின் சகுனம் மிக மங்களகரமானது எனக் கருதுகிறார்கள். பிராமணர்களாகிய உங்களுக்கான சகுனமும் உள்ளது. பிரம்மபோஜனத்தின் புகழ்ச்சியும் இருக்கின்றது. இது பிரம் போஜனம் அல்ல, ஆனால் பிரம்மா போஜனாகும். அம்மக்கள் பிரம்மாகுமாரிகள் என்பதற்குப் பதிலாக பிரம்-குமாரிகள் என உங்களை அழைக்கின்றார்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமாரர்களும், பிரம்மாகுமாரிகளும் ஆவார்கள். பிரம்மம் என்பது ஒளித்தத்துவமாகும். அது ஆத்மாக்கள் வசிக்கும் இடமாகும். அதற்கான புகழ் என்ன? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு முறைப்பாடு செய்கின்றார்: ஒரு புறத்தில் நீங்கள் என்னை வழிபடுகின்றீர்கள், மறுபுறத்தில் நீங்கள் என்னை அவதூறு செய்கின்றீர்கள். என்னை அவதூறு செய்ததால், நீங்கள் முற்றிலும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தமோபிரதானாக வேண்டும்: சக்கரம் மறுபடியும் சுழலவேண்டும். ஒரு முக்கிய பிரமுகர் வருகின்ற பொழுது, நீங்கள் நிச்சயமாக நாடகச் சக்கரத்தை அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும். நாடகச் சக்கரம் 5000 வருடங்கள் கொண்டதாகும். இதற்கு நீங்கள் பெருமளவு கவனம்; செலுத்த வேண்டும். பகல் நிச்சயமாக இரவைத் தொடர்ந்து வரும். இரவுக்குப்பின் பகல் என்பது அசாத்தியமானது இல்லை. கலியுகத்தின் பின்னர் நிச்சயமாக சத்தியயுகம் வரும். இந்த உலகின் வரலாறும், புவியியலும் மறுபடியும் இடம்பெறும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ஆத்மாவாகக் கருதவேண்டும். அவர்களுடைய பாகங்களை நடிக்கும் பொழுது ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். தாம் நடிகர்கள் என்பதையும், தாம் இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருக்க வேண்டும் என்பதையும் எவரும் அறியாமல் இருக்கிறார்கள். இந்த உலகின் வரலாறும் புவியியலும் மறுபடி இடம்பெறும். ஆகையினால் இது ஒரு நாடகமாகும். விநாடிக்கு விநாடி கடந்த காலத்தில் என்ன நடந்ததோ, அது தொடர்ந்து மீண்டும் இடம்பெறும். இந்த விடயங்களை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. மிகவும் திறமை அற்றவர்கள் எப்பொழுதும் தோல்வி அடைவார்கள். எனவே அவர்களுடைய ஆசிரியரால் அதுபற்றி என்ன செய்யமுடியும்? நீங்கள் உங்களது ஆசிரியரை உங்கள் மீது கருணை காட்டுமாறு அல்லது ஆசீர்வாதம் கொடுக்குமாறு கேட்பீர்களா? இதுவும் கூடக் கல்வியே ஆகும். இந்தக் கீதைப் பாடசாலையில் இறைவனே இராஜயோகம் கற்பிக்கின்றார். கலியுகம் நிச்சயமாக மாற்றப்பட்டு சத்தியயுகம் ஆக்கப்படும். தந்தை நாடத்திற்கு ஏற்ப வரவேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமத்தில் வருகின்றேன். “நான் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என வேறு எவருமே கூறுவதில்லை. அவர்கள் சிவோகம் (நானே சிவன்) என தங்களைப்பற்றி கூறுகின்றார்கள். அதன் மூலம் என்ன நடக்கும்? சிவபாபா உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளார். அவர் உங்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். எந்தவொரு சாதுவையோ, புனிதரையோ கடவுள் சிவன் என அழைக்க முடியாது. கிருஷ்ணா அல்லது இலக்ஷ்மி அல்லது நாராயணன் என தங்களை அழைக்கின்ற பலர் இருக்கின்றார்கள். சத்தியயுகத்து இளவரசனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கும், கலியுகத்து தூய்மையற்ற மக்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. கடவுள் அவர்களில் இருக்கின்றார் என நீங்கள் கூறமாட்டீர்கள். நீங்கள் கோவில்களுக்குச் சென்று பக்தர்களிடம் சத்தியயுகத்தில் ஆட்சி செய்த தேவர்கள் எங்கே? எனக் கேளுங்கள். சத்தியயுகத்தின் பின்னர், நிச்சயமாக திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இருக்கவே வேண்டும். சூரியவம்ச இராச்சியம், சத்தியயுகத்திலும் சந்திரவம்சம், திரேதாயுகத்திலும் இருந்தன. இந்த ஞானம் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களது புத்தியிலேயே உள்ளது. நீங்கள் பிரம்மாகுமாரர்கள் குமாரிகள், எனவே பிரஜாபிதா பிரம்மாவும் நிச்சயமாக இருக்க வேண்டும். இந்த மனித உலகம் பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிரம்மா படைப்பவர் என அழைக்கப்படுவதில்லை. அந்த ஒருவரே இறை தந்தை ஆவார். அவர் எவ்வாறு படைக்கின்றார்? அவர் உங்களின் முன்னால் தனிப்பட்ட முறையில் வரும்போது மாத்திரமே இதை அவரால் விளங்கப்படுத்த முடியும். எவ்வாறு கிறிஸ்து அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்திய பின்னரே பைபிள் உருவாக்கப்பட்டதோ, அவ்வாறே அந்தச் சமயநூல்களும் பின்னரே உருவாக்கப்பட்டன. அவருடைய புகழ் பின்னர் பாடப்பட்டது. தந்தை மாத்திரமே அனைவரையும் தூய்மையாக்குபவர் என்றும் அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்றும், அனைவருக்கும் முக்தியளிப்பவர் என்றும் புகழப்படுகின்றார். மக்கள் அவரை நினைவு செய்து அவருக்குக் கூறுகின்றார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே, கருணை காட்டுங்கள்! தந்தை என்று ஒருவர் மாத்திரமே இருக்கின்றார். இந்த முழு உலகிலுள்ள அனைவருக்கும் அவரே தந்தையாவார். மக்களுக்கு அவர்களைத் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர் யார் என்று தெரியாது. இப்பொழுது இந்த உலகமும் பழையது, மனிதர்களும் கூட பழையவர்கள் மற்றும் தமோபிரதான் ஆகி உள்ளனர். இது கலியுக உலகம். சத்தியயுகமும் இருந்தது. ஆகையால், அது மீண்டும் திரும்பிவரும். விநாசமும் இடம்பெறும். இது உலக மகாயுத்ததத்தின் மூலமும், பல இயற்கை அனர்த்தங்களாலும் இடம்பெறும். இப்பொழுது அதே காலப்பகுதியாகும். உலக மனித சனத்தொகை பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இறைவன் வந்துவிட்டார் என நீங்கள் கூறுகின்றீர்கள். ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் பிரம்மாவின் மூலம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது எனக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரிடமும் சவால் விடுகிறீர்கள். நாடகத்திற்கு ஏற்ப அவர்கள் நீங்கள் கூறுவதைக் கேட்பார்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். உங்களிடம் எந்தத் தெய்வீகக் குணங்களும் இருக்கவில்லை என உங்களுக்குத் தெரியும். காமம் என்ற விகாரமே முதலாவது குறைபாடாகும். அது உங்களைப் பெருமளவு தொந்தரவு செய்கின்றது. மாயையுடன் குத்துச்சண்டை நடக்கிறது. மாயையின் புயல் உங்களின் விருப்பத்துக்கு எதிராக உங்களை விழச்செய்கின்றது. இது கலியுகம். அவர்கள் தங்களின் முகங்களை அழுக்காக்கிக் கொள்கின்றனர். நீங்கள் அதைக் கருநீலம் என அழைக்க முடியாது. விஷப்பாம்பின் கடியை சித்தரிக்கும் முகமாக அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைக் கருநீல நிறமாகக் காட்டி இருக்கின்றார்கள். அவரது கௌரவத்தைப் பேணுவதற்காக, அவரது முகத்தை அவர்கள் கருநீலமாகக் காட்டியுள்ளார்கள். அவரது முகத்தை அவலட்சணமாகக் காட்டியிருந்தால் அது அவரின் கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியதைப் போன்றதாகும். பயணி மிகவும் தொலைவிலுள்ள அசரீரியான இடத்திலிருந்து இங்கே வருகின்றார். அவர் கலியுக உலகில் வந்து, தூய்மையற்ற சரீரத்திற்குள் பிரவேசித்து அதனை அழகாக ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். என்னை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் விஷ்ணுபூமியின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஞானத்தின் இந்த விடயங்கள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். பாபா ரூப்பும், பசானும் ஆவார். அவர் மிகவும் பிரகாசமான புள்ளி வடிவத்தைக் கொண்டுள்ளார். அவர் ஞானத்தையும் கொண்டுள்ளார். அவர் பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவருடைய ரூபம் என்ன என்று இந்த உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நானும் ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றேன், ஆனால் நான் பரமாத்மா ஆவேன். பரமாத்மாவே கடவுள் ஆவார். அவர் தந்தையும், ஆசிரியரும் ஆவார். அவர் ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றார். அவர் ஞானம் நிறைந்தவர் ஆகையால், ஒவ்வொருவருடைய இதயத்திலும் என்ன இருக்கின்றது என அவர் அறிவார் என மக்கள் நம்புகின்றார்கள். கடவுள் சர்வவியாபகராக இருந்தால், பின்னர் அனைவருமே ஞானம் நிறைந்தவர்கள் ஆகி விடுவார்கள். எனவே, ஏன் அவரை மாத்திரம் ஞானம் நிறைந்தவர் என அழைக்கின்றனர்? மக்களின் புத்தி மிகவும் சீரழிந்ததாக ஆகிவிட்டது. அவர்கள் ஞானத்தில் எந்த ஒரு விடயத்தையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை இங்கேயிருந்து ஞானத்திற்கும், பக்திக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை உங்களுக்குக் கூறுகின்றார். முதலில் ஞானமாகிய, பகல் இருக்கின்றது. அது சத்திய, திரேதா யுகங்களைக் கொண்டிருக்கிறது. பின்னர் துவாபர, கலியுகங்களாகிய இரவு இருக்கின்றது. ஞானத்தின் மூலமே சற்கதி அடையப்படுகின்றது. இராஜயோகிகளின் ஞானத்தை, ஹத்த யோகிகளால் விளங்கப்படுத்த முடியாது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் அதை விளங்கப்படுத்த முடியாது, ஏனெனில் அவர்கள் தூய்மை அற்றவர்கள். எனவே யாரால் இராஜயோகம் கற்பிக்க முடியும்? சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும் என்று கூறுகின்ற ஒருவரால் மாத்திரமே அது முடியும். சந்நியாசப் பாதைக்கு உரியவர்களின் தர்மம், இல்லறப் பாதைக்கு உரியவர்களின் தர்மத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆகையினால், அவர்களால் இல்லறப் பாதைக்குரிய ஞானத்தை எவ்வாறு கூற முடியும்? இங்கே அனைவரும் கூறுகின்றார்கள்: தந்தையாகிய கடவுளே சத்தியமானவர். தந்தை மாத்திரமே உண்மையைக் கூறுகின்றார். ஆத்மாக்களான நாங்கள் இப்பொழுது பாபாவை அறிந்திருப்பதாலேயே, நாங்கள் தந்தையை நினைவு செய்து, எப்படி சாதாரண மனிதரிலிருந்து சத்திய நாராயணன் ஆகுவது என்ற உண்மைக் கதையை வந்து எமக்குக் கூறுமாறு அவரைக் கேட்கின்றோம். நான் இப்பொழுது உண்மையான நாராயணனின் கதையை உங்களுக்கு கூறுகின்றேன். முன்னர், நீங்கள் பொய்யான கதைகளை செவிமடுத்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் உண்மையான கதையை செவிமடுக்கின்றீர்கள். அந்தப் பொய்யான கதைகளை செவிமடுப்பதன் மூலம் எவராலுமே நாராயணனாக ஆக முடிவதில்லை. எவ்வாறு அது உண்மையான நாராயணன் கதையாக இருக்க முடியும்? மனிதர்களால், சாதாரண மனிதர்களை நாராயணன் ஆக்க முடியாது. தந்தையால் மாத்திரமே வந்து உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்கமுடியும். தந்தை பாரதத்தில் வருகின்றார். ஆனால் அவர் எப்போது வருகின்றார் என எவருமே புரிந்து கொள்வதில்லை. அவர்கள் சிவனையும் சங்கரரையும் குழப்பிக் கொண்டு கற்பனைக் கதைகளை உருவாக்கி உள்ளார்கள். சிவபுராணமும் உள்ளது. கீதை ஸ்ரீகிருஷ்ணரினால் கூறப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையினால் சிவபுராணமே மகத்தானதாக இருக்க வேண்டும். உண்மையில் இந்த ஞானம் கீதையிலேயே உள்ளது. கடவுள் கூறுகின்றார்: மன்மனாபவ! இந்தக் கூற்று, கீதையைத்தவிர வேறு எந்த சமயநூல்களிலும் இருக்கமுடியாது. ஸ்ரீமத் பகவத் கீதையே அனைத்து வேதநூல்களினதும் இரத்தினம் என்று கூறப்படுகின்றது. மேன்மையான வழிகாட்டல்கள் கடவுளிடம் இருந்தே வருகின்றன. முதலில் அவர்களிடம் கூறுங்கள்: இன்னும் சில வருடங்களில் புதிய மேன்மையான உலகம் ஸ்தாபிக்கப்படும் என நாங்கள் கூறுகின்றோம். இப்பொழுது இந்த உலகம் சீரழிந்துள்ளது. மேன்மையான உலகில் மிகச்சிறிதளவு மக்களே இருப்பார்கள். தற்போது பெருமளவு மக்கள் இருக்கின்றார்கள். விநாசம் உங்களின் முன்னால் நிற்கின்றது. தந்தை இராஜயோகம் கற்பிக்கின்றார். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். மக்கள் தந்தையிடம் அதையே கேட்கின்றார்கள். ஒருவருக்கு பெருமளவு செல்வமும், குழந்தைகளும் இருக்கும் பொழுது கடவுள் அவை அனைத்தையும் கொடுத்ததாக அவர் கூறுகின்றார். ஆகையினால் கடவுள் ஒருவரே ஆவார். எனவே கடவுள் எவ்வாறு ஒவ்வொருவரிலும் இருக்க முடியும்? தந்தை இப்பொழுது ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: கடவுள் எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தார், அதை நாங்கள் எங்கள் சகோதரர்களுக்குக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் உங்களை ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்கின்றீர்கள்? இந்த விடயத்தையிட்டு அட்டவணையைப் பேணுவதற்கு உங்களுக்கு எல்லையற்ற, பரந்த புத்தி தேவையாகும். நீங்கள் ஆத்ம உணர்வு உள்ளவராகித் தந்தையை நினைவு செய்ய வேண்டும், அப்பொழுதே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஞானம் மிக இலகுவானது. ஆனால் உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதன் மூலமும், தந்தையை நினைவுசெய்வதன் மூலமுமே நீங்கள் முன்னேறுகின்றீர்கள். உங்களில் மிகச் சிலராலேயே இந்த அட்டவணையை வைத்திருக்க முடிகின்றது. ஆத்ம உணர்வு உள்ளவராகித் தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் எவருக்கும் துன்பத்தை விளைவிக்க மாட்டீர்கள். தந்தை சந்தோஷத்தைக் கொடுப்பதற்கே வருகின்றார். ஆகையினால், குழந்தைகளாகிய நீங்களும் அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுக்க வேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும் பொழுது அனைத்துத் தீய ஆவிகளும் ஓடி விடும். இந்த முயற்சி மிகவும் மறைமுகமானது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டு பிடிக்ப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அசுரத்தனமான, தீய உலகிற்கு கண்களை மூடி விடுங்கள். இந்த உலகம் பழையது. ஆகையினால், அதனுடன் மேலும் எந்தத் தொடர்பையும் வைத்து இருக்காதீர்கள்: அதைப் பார்க்கின்ற பொழுதும், பார்க்காதிருங்கள்.

2. நாங்களே இந்த எல்லையற்ற நாடகத்தில் நடிகர்கள். கடந்த காலத்தில் நடந்தவை எல்லாம் வினாடிக்கு வினாடி மறுபடியும் இடம்பெறும். இந்த விழிப்புணர்வைப் பேணி ஒவ்வொரு பாடத்திலும் சித்தி அடையுங்கள். நீங்கள் எல்லையற்ற, பரந்த புத்தியைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் உண்மைத்தன்மையின் மூலம் உங்களுடைய இராஜரீகமான நடைமுறை வடிவத்தைக் காட்டுகின்ற ஓர் உயிர்வாழும் ரூபம் ஆகுவீர்களாக.

ஆத்மாக்களாகிய நீங்கள், உங்களின் உண்மைத் தன்மையினூடாக உங்களின் இராஜரீகத்தை நடைமுறையில் காட்டுகின்ற காலம் இப்பொழுது வரவுள்ளது. வெளிப்படுத்துகை இடம்பெறும் வேளையில், மாலையின் மணிகளின் இலக்கங்கள், எதிர்கால இராச்சியத்தின் வடிவம் இரண்டும் வெளிப்படுத்தப்படும். இப்போது, உங்கள் ஓட்டத்தின் போது, போட்டி என்ற சிறிய தூசியால் ஆன திரை, ஜொலிக்கும் வைரங்களான உங்களை மறைக்கின்றது. இறுதியில், எப்படியும் இந்தத் திரை விலகிவிடும். மறைந்துள்ள வைரங்களான நீங்கள் உங்களின் சம்பூரணமான, முழுமையான ரூபங்களைக் காட்டுவீர்கள். இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்பொழுதில் இருந்தே உங்களின் இராஜரீகத்தைக் காட்டுவீர்கள். அதாவது, நீங்கள் உங்களின் எதிர்கால அந்தஸ்தை வெளிப்படுத்துவீர்கள். ஆகவே, உங்களின் நிஜத்தால் உங்களின் இராஜரீகத்தை வெளிப்படுத்துங்கள்.

சுலோகம்:
எந்தவொரு வழிமுறையையும் பயன்படுத்தி வீணானவை அனைத்தையும் முடித்து, சக்திவாய்ந்தது வெளிப்படச் செய்யுங்கள்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

உங்களுக்கு நன்மை ஏற்படுத்தி, உங்களை மாற்றிக் கொள்வதற்கு, குறிப்பாக ஏகாந்தத்தில் இருந்து அகநோக்கில் இருங்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள். ஆனால், நீங்கள் சக்திவாய்ந்தவர்களாகவும் ஆகவேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையினதும் அனுபவத்தால் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். நான் யாருடைய குழந்தை? என்னிடம் உள்ள பேறுகள் எவை? இந்த முதல் பாடத்தின் அனுபவ சொரூபமாகி, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள். நீங்கள் இலகுவாக மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள்.