22.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் பரலோகத் தந்தை உங்களுக்காக உருவாக்குகின்ற உலக அதிசயமான சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
கேள்வி:
தந்தையின் சகவாசத்தில் இருப்பதால், நீங்கள் என்ன பேறுகளைப் பெறுகின்றீர்கள்?பதில்:
தந்தையின் சகவாசத்தில் இருப்பதால், நாங்கள் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான உரிமையைக் கோருகின்றோம். தந்தையின் சகவாசம் எங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றது. பாபா எங்களைத் தனக்கு உரியவர்களாக ஆக்கி, எங்களை ஆஸ்திகர்களாகவும், திரிகாலதரிசிகளாகவும் (முக்காலத்தையும், அறிந்தவர்கள்) ஆக்குகின்றார். நாங்கள் படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்கின்றோம்.பாடல்:
ஓ மனிதனே! பொறுத்திரு, உனது சந்தோஷ நாட்கள் வரவிருக்கின்றன……ஓம் சாந்தி.
இதனைக் கூறுபவர் யார்? தந்தையே இதனைக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார். குழந்தைகள் அனைவரும் சந்தோஷமற்றும், பொறுமையற்றும் இருப்பதால், தந்தை இதனைக் குழந்தைகள் அனைவருக்கும் கூறவேண்டியுள்ளது. அவர்கள் தந்தையை நினைவு செய்து கூறுகின்றார்கள்: வாருங்கள், வந்து எங்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து, சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுங்கள். தாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம் என்பதை மனிதர்கள், குறிப்பாக, பாரத மக்கள் மறந்துள்ளனர். பாரதம் மிகவும் பழைமையான, அற்புதமான இடமாகும். மக்கள் உலக அதிசயங்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். இங்கே இராவண இராச்சியத்தில் அவர்கள் ஏழு அதிசயங்களைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவை பௌதீகமான அதிசயங்கள். அவை துன்பத்தைக் கொடுக்கும் மாயையின் அதிசயங்களாகும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தையாகிய இராமரின் அற்புதமே சுவர்க்கமாகும். அதுவே உலக அதிசயம். சுவர்க்கமாக இருந்த பாரதமே வைரம் போன்றிருந்தது. அது தேவர்களின் இராச்சியம். பாரத மக்கள் இவை அனைத்தையும் மறந்து விட்டார்கள். அவர்கள் தேவர்களின் சிலைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றார்கள். ஆனாலும் தாங்கள் வழிபாடு செய்பவர்களின் சுயசரிதையையேனும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இங்கே பரலோகத் தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள் என எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகின்றார். பரலோகத்தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். எந்த மனிதர்களாலும் இந்தப் பணியைச் செய்ய முடியாது. பாபா இவருக்குக் (பிரம்மாவுக்கு) கூறுகின்றார்: ஹேய்! பழைய தமோபிரதான ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மாவே, உங்கள் சொந்தப் பிறவிகளை நீங்கள் அறியாமல் இருக்கின்றீர்கள். நீங்கள் ஸ்ரீகிருஷ்ணராக இருந்த போது சதோபிரதானாக இருந்தீர்கள். இப்போது, 84 பிறவிகளையும் எடுத்ததால், நீங்கள் தமோபிரதானாகி விட்டீர்கள். உங்களுக்கு பல வித்தியாசமான பெயர்கள் கொடுக்கப்பட்டன. இப்போது உங்களுக்கு பிரம்மா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு ஆகுகின்றார். அதாவது, ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுகின்றார். அது ஒரே விடயமாகும். பிரம்மா, விஷ்ணு ஆகுகின்றார். விஷ்ணு, பிரம்மா ஆகுகின்றார். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய குழந்தைகளே பிராமணர்கள், பின்னர் தேவர்கள் ஆகுகின்றனர். அந்தத் தேவர்கள் பின்னர் சூத்திரர்கள் ஆகுகின்றனர். இப்போது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். இப்போது தந்தை இங்கே அமர்ந்திருந்து இவை அனைத்தும் கடவுளின் வாசகங்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மாணவர்கள். ஆகவே நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனினும் அந்தளவு சந்தோஷம் உங்களுக்கு இல்லை. செல்வந்தர்கள் தங்களின் செல்வத்தையிட்டுப் போதை கொண்டிருப்பதால், மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள். இங்கே நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகிவிட்ட போதிலும் நீங்கள் அந்தளவிற்கு சந்தோஷமாக இருப்பதில்லை. தாம் கல்லுப்புத்தி உடையவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுடைய பாக்கியத்தில் அது இல்லையாயின், அவர்கள் ஞானத்தைக் கிரகிக்க மாட்டார்கள். இப்போது தந்தை உங்களை, ஆலயத்தில் வீற்றிருப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். ஆயினும், மாயையின் சகவாசமும் குறைந்ததல்ல. நல்ல சகவாசம் அக்கரைக்கு எடுத்துச் செல்லும், தீய சகவாசம் மூழ்கடிக்கும் என்றும் பாடப்பட்டிருக்கின்றது. தந்தையின் சகவாசம் உங்களை முக்திக்கும் ஜீவன்முக்திக்கும் கொண்டு செல்லும். பின்பு இராவணனின் தீய சகவாசம் உங்களை சீரழிந்த நிலைக்குத் கொண்டு செல்லுகின்றது. ஐந்து விகாரங்களின் சகவாசமும் உள்ளது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதனை சத்தியத்தின் சகவாசம் (சத்சங்கம்) எனக் கூறினாலும், அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் இறங்கி கீழே வருகின்றார்கள். ஏணியில் இருப்பவர் தள்ளாடினால் அவர் நிச்சயமாகக் கீழே வீழ்ந்து விடுவார். பாபாவே அனைவருக்கும் சற்கதி அருளுபவர். எவராக இருந்தாலும் கடவுளை மேலேயே சுட்டிக் காட்டுகின்றார்கள். இப்பொழுது தந்தையைத் தவிர வேறு எவரால், அவரது அறிமுகத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும்? தந்தையே தனது அறிமுகத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார். அவர் குழந்தைகளைத் தனக்குரியவர்களாக்கி அவர்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் வந்து உங்களை ஆஸ்திகர்களாக ஆக்குவதுடன் உங்களை திரிகாலதரிசிகளாகவும் ஆக்குகின்றேன். இது நாடகமாகும். சாதுக்களுக்கும் புனிதர்களுக்கும் இது தெரியாது. ஏனைய நாடகங்கள் எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் இந்த நாடகமோ எல்லையற்றது. இந்த எல்லையற்ற நாடகத்தில், நாங்கள் அதிகளவு சந்தோஷத்தையும், அதிகளவு துன்பத்தையும் பார்க்கின்றோம். இந்த நாடகத்தில் கிருஷ்ணருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் என்ன கணக்கு உள்ளதெனப் பாருங்கள்! அவர்கள் யுத்தம் செய்து பாரத இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். எனினும் நீங்கள் யுத்தம் செய்வதில்லை. அவர்கள் தங்களுக்குள் யுத்தம் செய்யும் போது நீங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவரும் இந்த விடயங்களை அறியவில்லை. ஞானக்கடலான ஒரேயொரு தந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் அனைவருக்கும் சத்கதியை அருள்கின்றார். பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்த காலத்தில் நீங்கள் சத்கதி அடைந்திருந்தீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தார்கள். பாரதம் தங்கமயமாக இருந்தது. நீங்கள் அங்கே ஆட்சி செய்தீர்கள். சத்தியயுகம், சூரிய வம்ச இராச்சியமாக இருந்தது. நீங்கள் இப்போது சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கிறீர்கள். இது சாதாரண மனிதனில் இருந்து நாராயணனாக மாறுகின்ற கதையாகும். இதனைப் பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள்: ‘உண்மையான கீதையின் மூலம் பாரதம் பவுண் பெறுமதியுள்ள சத்திய பூமி ஆகுகின்றது. தந்தை வந்து உண்மையான கீதையைக் கூறுகின்றார். அவர் உங்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பிப்பிக்கின்றார். அதனால் நீங்கள் பவுண் பெறுமதி உள்ளவர்கள் ஆகுகின்றீர்கள்’. பாபா அத்தகைய பல சிறு கதைகளை விளங்கப்படுத்துகின்றார். எனினும், சில குழந்தைகள் சரீர உணர்வினால், இதனை மறந்து விடுகின்றார்கள். அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும் போது, அவர்களால் இந்த ஞானத்தையும் கிரகிக்க முடியும். சரீர உணர்வுடையவர்களாக இருப்பதாலேயே அவர்களால் இதனைக் கிரகிக்க முடியாதுள்ளது. தந்தை இப்போது விளங்கப்படுத்துகின்றார்: நான் சர்வவியாபி என நான் கூறவில்லை. என்னை நீங்கள் தாயும் தந்தையும் என்று அழைக்கின்றீர்கள். இதன் அர்த்தம் என்ன? “உங்கள் கருணையினால் நாங்கள் பெரும் சந்தோஷத்தைப் பெறுகின்றோம்” என நீங்கள் பாடுகின்றீர்கள். எனினும் இப்போது துன்பம் உள்ளது. இந்தப் புகழ் எந்தக் காலத்திற்கு உரியது? அவர்கள் இதனையுமே புரிந்து கொள்ளவில்லை. பறவைகள் விளக்கம் எதுவும் இன்றி கீச்சிடுவதைப் போல அவர்களும் எதனையும் புரிந்து கொள்ளாது தொடர்ந்தும் கீச்சிடுகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் நியாயமற்றவை. உங்களை நியாயம் அற்றவர்களாக ஆக்கியது யார்? இராவணன். பாரதம் சத்திய பூமியாக இருந்த காலத்தில், அனைவரும் உண்மையையே பேசினார்கள். களவெடுத்தல், ஏமாற்றுதல் போன்றன இருக்கவில்லை. இங்கே, களவெடுத்தல் போன்றவை அதிகளவு இடம்பெறுகின்றன. முழு உலகிலும் ஏமாற்றுதல், ஏமாற்றுதல் மாத்திரமே நிறைந்துள்ளது. இந்த உலகம் துன்ப உலகமான, பாவகரமான உலகம் என்று அழைக்கப்படுகின்றது. சத்திய யுகம் சந்தோஷ உலகம் என அழைக்கப்படுகின்றது. இது விகாரம் நிறைந்த விலைமாதர் இல்லமாகும். சத்தியயுகம் சிவாலயம் ஆகும். தந்தை இங்கே அமர்ந்திருந்து மிகவும் தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். “பிரம்மாகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்” என்னும் பெயர் மிகவும் நல்லது. இப்போது தந்தை வந்து உங்களை விவேகமானவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: இந்த விகாரங்களை வென்று உலகை வென்றவர்கள் ஆகுங்கள். காமமே உங்கள் கொடிய எதிரியாகும். இதனாலேயே குழந்தைகள் அழைக்கின்றார்கள்: வந்து எங்களைத் தேவ, தேவியர்கள் ஆக்குங்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே தந்தையின் சரியான புகழை அறிவீர்கள். மக்கள் தந்தையையோ அல்லது அவருடைய புகழையோ அறியவில்லை. அவர் அன்புக் கடல் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஞானம் அனைத்தையும் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். அவருடைய இந்த அன்பு உங்களுக்கானது. ஓர் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பிப்பதால் எதுவும் அற்றவர்களாக இருந்த மாணவர்கள் மகான்கள் ஆகுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் போல அன்புக் கடலாக வேண்டும். நீங்கள் அனைவருக்கும் அதிக அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே முதற்தரமான அன்பாகும். இந்த மறைமுகமான தானத்தைச் செய்ய வேண்டும். ஒருவர் மீது ஒருவர் எவ்விதமான விருப்பமின்மையும் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறிருந்தால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். நீங்கள் எவரையாவது அலட்சியப்படுத்தினால் தண்டிக்கப்படுவீர்கள். ஒருபோதும் எவரையும் வெறுக்காதீர்கள். எவரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதால் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களை ஆத்ம உணர்வு உடையவர்களாக ஆக்குவதால் நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைந்து விட்டது. சூரிய வம்சத்து சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகளாக இருந்தவர்களே, இப்போது 84 பிறவிகளையும் எடுத்ததால் கீழே இறங்கி வந்து நிலத்தில் வீழ்ந்து விட்டார்கள். தந்தை இப்பொழுது மீண்டும் உங்களைச் சக்கரவர்த்திகள் சக்கரவர்த்தினிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் கருணை உள்ளவர்கள் ஆகி, நாள் முழுவதும் சேவையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தந்தை தொடர்ந்தும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, கருணை உள்ளவர்களாக ஆகுங்கள். அப்போது உங்களால் சந்தோஷம் அற்றிருக்கும் ஆத்மாக்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்கமுடியும். நீங்கள் அவர்களுக்கு மிகவும் சுருக்கமான கடிதங்களை எழுதவேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். ஒரேயொரு சிவபாபா மாத்திரமே புகழப்படுகின்றார். மக்கள் தந்தையின் புகழையேனும் அறியவில்லை. நீங்கள் ஒரு கடிதத்தை இந்தியிலும் எழுதலாம். குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். அனேக மக்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: தற்கொலை செய்வது மிகப் பெரிய பாவமாகும். இப்போது சிவபாபாவே குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். அவர் ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா ஆவார். அவர் உங்களை ஸ்ரீ இலக்ஷமி, ஸ்ரீ நாராயணனாக ஆக்குகின்றார். அவர் மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ ஆவார். அவர் என்றுமே சக்கரத்தினுள் வருவதில்லை. நீங்கள் ஸ்ரீ எனும் பட்டத்தைப் பெறுகின்றீர்கள். இந்த நாட்களில் அனைவருக்கும் ஸ்ரீ என்றும் பட்டம் கொடுக்கப்படுகின்றது. அந்த விகாரமற்ற மக்களுக்கும் இந்த விகாரமுள்ள மக்களுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இது பகலுக்கும் இரவுக்கும் உள்ள வித்தியாசம். தந்தை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார்: முதலில் ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். பின்னர் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். நீங்களும் தூதுவரின் குழந்தைகள் ஆவீர்கள். ஒரேயொருவரே அனைவருக்கும் சத்கதி அருள்பவர் ஆவார். சமயத்தை ஸ்தாபித்தவர்கள் குரு என அழைக்கப்பட மாட்டார்கள். ஒரேயொருவர் மாத்திரமே சத்கதியை அருள்பவர் ஆவார். அச்சாஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எவர் மீதும் விருப்பம் இன்மையையோ, வெறுப்பையோ கொண்டிருக்கக் கூடாது. கருணை உள்ளவர்களாகி, சந்தோஷம் அற்றிருக்கும் ஆத்மாக்களைச் சந்தோஷம் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். தந்தையைப் போல மாஸ்டர் அன்புக் கடல் ஆகுங்கள்.2. நீங்கள் கடவுளின் குழந்தைகள் எனும் போதையிலும், சந்தோஷத்திலும் நிலைத்திருங்கள். ஒருபோதும் மாயையின் தீய சகவாசத்திற்குள் செல்லாதீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்களாகி ஞானத்தைக் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையைப் போல் ஆசீர்வாதங்களை அருள்பவராகி, மாஸ்ரர் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவராகி ஒவ்வொருவரின் இதயத்திற்கும் சௌகரியம் அளிப்பீர்களாக.ஆசீர்வாதங்களின் சொரூபங்களாகவும் தந்தையைப் போல் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் இருக்கும் குழந்தைகள் ஒருபோதும் எவருடைய பலவீனங்களையும் பார்ப்பதில்லை. அவர்கள் எல்லோருக்கும் கருணை காட்டுகிறார்கள். எப்படித் தந்தை தனது இதயத்தில் எவரின் பலவீனங்களையும் ஒருபோதும் வைத்திருப்பது இல்லையோ, அதேபோல், ஆசீர்வாதங்களை அருள்பவர்களாக இருக்கும் குழந்தைகள் ஒருபோதும் எவரின் பலவீனங்களையும் கிரகிப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் இதயத்திற்கும் சௌகரியம் அளிக்கும் மாஸ்ரர் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர்கள் ஆவார்கள். ஆகவே, அவர்கள் சகபாடிகளாக இருந்தாலென்ன அல்லது பிரஜைகளாக இருந்தாலென்ன, எல்லோரும் அவர்களின் புகழைப் பாடுகிறார்கள். எல்லோரிடம் இருந்தும் அவர்களுக்காக வெளிப்படும் ஆசீர்வாதமானது, ‘நீங்கள் சதா அன்பானவர்களும் ஒத்துழைப்பவர்களும் ஆவீர்கள்’ என்பதே ஆகும்.
சுலோகம்:
சங்கமயுகத்தில், மேன்மையான ஆத்மாக்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆவார்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
உங்களின் பண்புகளைக் கைவிடுவதன் மூலம் ஒருபோதும் சத்தியத்தை நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள். நல்ல பண்புகளின் அடையாளம் பணிவாகும். இந்தப் பணிவானது, இலகுவாக இந்த மீள்புதுப்பித்தலை நீங்கள் செய்ய வைக்கிறது. இந்த ஞானத்தின் சக்தியானது, அமைதியும் அன்பும் ஆகும். நீங்கள் கோபத்தை, அறியாமைச் சக்தியை மிக நன்றாக உங்களின் சம்ஸ்காரம் ஆக்கியுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் தொடர்ந்தும் அதைப் பயன்படுத்துகிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் தொடர்ந்தும் மன்னிப்பும் கேட்கிறீர்கள். அதேபோல், இப்போது ஒவ்வொரு நற்குணத்தையும் இந்த ஞானத்தின் ஒவ்வொரு கருத்தையும் உங்களின் சம்ஸ்காரம் ஆக்குங்கள். நீங்கள் தொடர்ந்து நல்ல பண்புகளை விருத்தி செய்வீர்கள்.
மாதேஷ்வரியின் பெறுமதி மிக்க மேன்மையான வாசகங்கள்
தவறுகளைச் செய்யும் ஞானிக் குழந்தைகளின் நூறு மடங்கு தண்டனை இதுவாகும்.
நீங்கள் இந்த ஞானத்தின் அழியாத யாகத்திற்கு வந்துள்ளீர்கள். அத்துடன் பரமாத்மாவின் கையைப் பற்றிப் பிடித்துள்ளீர்கள். எனவே, நீங்கள் ஏதாவது ஒரு காரணத்தால் ஏதாவது பாவம் செய்தால், அதற்கான பாவம் மிகவும் கடுமையானது. எப்படி இந்த ஞானத்தைக் கற்பதனால் உங்களுக்கு 100 சதவீத நன்மை கிடைக்கிறதோ, அதேபோல், ஞானத்தைக் கற்ற பின்னர் நீங்கள் ஒரு தவறைச் செய்தால், அப்போது நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். அதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்தால், பலவீனம் ஆகிவிடுவீர்கள். ஆகவே, தொடர்ந்து உங்களின் சிறிய மற்றும் பெரிய தவறுகளைக் கண்காணியுங்கள். எதிர்காலத்தில் கவனமாக இருந்து, தொடர்ந்து முன்னேறுங்கள். பாருங்கள், விவேகமான, மகத்தான ஒருவர் தவறாக எதையும் செய்தால், அவருக்குக் கடும் தண்டனை கிடைக்கும். ஆனால் ஏற்கனவே வீழ்ந்துவிட்ட ஒருவர் ஏதாவது தவறு செய்தால், அவருக்கு அந்தளவு தண்டனை கிடைக்காது. நீங்கள் இப்போது கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். எனவே, நீங்கள் பல தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் உண்மையான தந்தையிடம் வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் நேர்மையாகவும் உண்மை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
கடவுள் எப்படி ஜனிஜனன்ஹார் (எல்லாவற்றையும் அறிந்தவர்) ஆகுகிறார்?
கடவுள் ஜனிஜனன்ஹார் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் ஜனிஜனன்ஹார் என்றால் எல்லோருடைய இதயத்திலும் இருப்பதை அறிவார் என்பதல்ல. ஆனால், அவர் உலகின் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவார். படைப்பவரான இறைவன் உலகைக் காப்பதுடன் அதை அழிப்பார் என்பதல்ல. அதன் அர்த்தம் என்னவென்றால், கடவுள் உலகைப் படைக்கிறார், அதைக் காக்கிறார், பின்னர் அதை அழிக்கிறார் என்பதாகும். ஆனால் அப்படி இருக்காது. மனிதர்கள் தமது கர்மக் கணக்குகளுக்கு ஏற்பவே பிறவி எடுக்கிறார்கள். எனவே, கடவுள் அமர்ந்திருந்து அவர்களின் நல்ல மற்றும் தீய எண்ணங்களை அறிந்து கொள்கிறார், இந்த ஞானம் இல்லாதவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிவார் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் நாள் முழுவதும் மாயையின் எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஞானி ஆத்மாக்கள் தம்மில் தூய எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். எவ்வாறாயினும், அவர் அமர்ந்திருந்து ஒவ்வோர் எண்ணத்தையும் வாசித்தறிவார் என்பதல்ல. ஆனால், ஆத்மாக்கள் எல்லோரும் இப்போது சீரழிந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்பதைக் கடவுள் அறிவார். ஆகவே, ஜனிஜனன்ஹார் (கடவுள்) அவர்களுக்கு எப்படி சத்கதி கொடுப்பது என்ற ஞானம் அனைத்தையும் கொண்டிருக்கிறார். தமது செயல்களில் சீரழிந்துள்ள மக்களுக்கு எப்படி மேன்மையான செயல்களைச் செய்து, தமது கர்ம பந்தனங்களில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் எனக் கற்பிக்க வேண்டும். கடவுள் இதை அறிவார். கடவுள் கூறுகிறார்: படைப்பவரான என்னைப் பற்றிய ஞானத்தையும் எனது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் நான் அறிவேன். நான் இந்த விழிப்புணர்வை உங்கள் எல்லோருக்கும் வழங்குகிறேன். இப்போது, குழந்தைகளான நீங்கள் அந்தத் தந்தையின் நினைவில் சதா இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். அதாவது, அப்போது மட்டுமே நீங்கள் அமர லோகத்திற்குச் செல்வீர்கள். இவை அனைத்தையும் அறிந்திருப்பதே ஜனிஜனன்ஹாராக இருத்தல் எனப்படுகிறது. அச்சா. ஓம் சாந்தி.