22.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களை மாற்றிக் கொள்வதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் அசுரக் குணங்களை மாற்றி, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். இது தேவர்கள் ஆகுவதற்கானதொரு கல்வியாகும்.

பாடல்:
வேறு எவராலுமே கற்பிக்க முடியாத எக்கல்வியைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் தந்தையிடமிருந்து கற்கின்றீர்கள்?

பதில்:
நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்காகக் கற்கின்றீர்கள். புதிய உலகிற்குச் செல்வதற்காக, தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக மாறுகின்ற கல்வியை ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவராலுமே உங்களுக்குக் கற்பிக்க முடியாது. தந்தை மாத்திரமே இந்த இலகு ஞானத்தின் மூலமும், இராஜயோகத்தின் மூலமும் தூய இல்லறப் பாதையை ஸ்தாபிக்கின்றார்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உண்மையில், இருவரும் தந்தையர்களே. ஒருவர் எல்லைக்குட்பட்டவர், மற்றையவர் எல்லையற்றவர். அவரும் உங்கள் தந்தை, இவரும் உங்கள் தந்தையே. எல்லையற்ற தந்தை வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் புதிய உலகமாகிய சத்தியயுகத்திற்காகவே கற்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அத்தகையதொரு கல்வியை நீங்கள் வேறு எங்குமே பெற முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பல சத்சங்கங்களுக்குச் சென்றிருக்கின்றீhகள். நீங்கள் பக்தர்களாக இருந்தீர்கள். நீங்கள் பல குருமாரை ஏற்பதுடன், பல சமய நூல்களையும் கற்றிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், தந்தை இப்பொழுது வந்து, உங்களை விழித்தெழச் செய்துள்ளார். தந்தை கூறுகின்றார்: இப்பழைய உலகம் இப்பொழுது மாற்றமடைகின்றது. தற்போது, புதிய உலகிற்காகவே நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நான் உங்கள் ஆசிரியர். ஒரு குருவை ஆசிரியர் என அழைக்க முடியாது. பாடசாலைகளில், ஆசிரியர்களினூடாகவே மாணவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றனர். எனினும், அவர்கள் இவ்வுலகிற்காகவே கற்பிக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது கற்கும் கல்வி புதிய உலகிற்காகவே என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சத்திய யுக உலகம் என அழைக்கப்படுகின்றது. இந்நேரத்தில், உங்கள் அசுரக் குணங்களைச் சீர்திருத்தி, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை மாற்றிக் கொள்வதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். மக்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று கூறுகின்றனர்: நீங்கள் அத்தகையவர்கள், நாங்களோ இவ்வாறானவர்கள். அவர்களது நன்நடத்தைகளே போற்றப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் உங்கள் இலக்கையும், குறிக்கோளையும் பெற்றிருக்கின்றீர்கள். தந்தை எதிர்காலத்திற்கான புதிய உலகை ஸ்தாபிப்பதுடன், உங்களுக்குக் கற்பிக்கின்றார். அங்கு விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இப்பொழுது இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். இராவண இராச்சியத்திலுள்ள அனைவருமே விகாரம் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசனையும், அரசியையும் போன்றே பிரஜைகளும் இருப்பார்கள். இப்பொழுது மக்களை மக்கள் ஆட்சி செய்கின்றார்கள். இதற்கு முன்னர் அரசர்களினதும், அரசிகளினதும் இராச்சியம் இருந்தது. எவ்வாறாயினும், அவர்களும் தூய்மையற்றவர்களாகவே இருந்தனர். தூய்மையற்ற அரசர்களும் ஆலயங்களைக் கட்டி, அங்கு விகாரமற்ற தேவர்களை வழிபட்டனர். அந்தத் தேவர்கள் கடந்த காலத்தில் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களது இராச்சியம் இப்பொழுது இல்லை. தந்தை ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி, நீங்களே அந்த தேவ சரீரங்களுடன் இருந்தவர்கள் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். உங்கள் ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையாக இருந்தன. இப்பொழுது தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்காக மீண்டும் வந்துள்ளார். இதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தந்தை ஒரு கட்டளையைப் பிறப்பிக்கின்றார்: குழந்தைகளே, காமமே மிகக் கொடிய எதிரியாகும். அது ஆரம்பம் முதல், மத்தியூடாக இறுதி வரைக்கும் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றது. நீங்கள் இப்பொழுது வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதே தூய்மையாக வேண்டும். தேவர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருப்பதில்லை என்றல்ல. அங்கு தூய்மையற்ற பார்வை என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் விகாரமற்றவர்களாக இருந்தனர். தந்தை கூறுகின்றார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதே ஒரு தாமரை மலரைப் போன்று தூய்மையாக இருங்கள். ஒரு தூய தம்பதியினரைப் போன்று உங்கள் எதிர்காலத்தை ஆக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆத்மாவும் தொடர்ந்தும் வெவ்வேறு பெயர்களிலும், உருவங்களிலும் பல பாகங்களை நடித்திருக்கின்றனர். இப்பொழுது இது உங்களது இறுதிப் பாகமாகும். பலர் தூய்மை என்ற பாடத்தில், தாங்கள் எவ்வாறு சகபாடிகளாக வாழ முடியும் என்பதையிட்டுக் குழப்பமடைகின்றனர். சகபாடிகளாக இருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? வெளிநாடுகளில், அவர்களுக்கு வயதாகும்போது, ஒரு சகபாடியைக் கொண்டிருப்பதற்காக அல்லது தங்களைப் பராமரிப்பதற்காக அவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கப் பலரும் விரும்புகின்றனர். சந்நியாசிகளின் விடயம் முற்றிலும் வேறானது. இல்லறத்தில் வாழ்ந்துகொண்டே திருமணம் செய்ய விரும்பாத பலர் உள்ளனர். “ஏன் திருமணம் என்ற வலையில் விழுந்து, குழந்தைகளைப் பராமரித்தல் போன்றவற்றில் சிக்கிக்கொள்ள வேண்டும்?” அத்தகைய பலரும் இங்கு வருகின்றார்கள். அவர்கள் 40 வருடங்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துவிட்டு, அதன் பின்னர் திருமணம் செய்வதால் என்ன பயன் எனக் கேட்கின்றார்கள். அவர்கள் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றார்கள். எனவே, அவர்களைப் பார்ப்பதில் தந்தை பூரிப்படைகின்றார். இவர் பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்கின்றார். சரீரத்தின் பந்தனம் மாத்திரமே எஞ்சியுள்ளது. எனவே, உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். கிறிஸ்து போன்ற எச்சரீரதாரிகளையும் நீங்கள் நினைவு செய்யக்கூடாது. அசரீரியான சிவன் ஒரு சரீரதாரியல்ல. அவரது பெயர் சிவன் என்பதாகும். சிவாலயங்களும் உள்ளன. ஆத்மா 84 பிறவிகளின் பாகமொன்றைப் பெற்றிருக்கின்றார். இந்நாடகம் அழிவற்றது, அதில் எதுவுமே மாற்றப்பட முடியாது. ஆரம்பத்தில் மேன்மையானதாக இருந்த உங்களது செயல்களும், தர்மமும் இப்பொழுது சீரழிந்துவிட்டதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தேவ தர்மம் அழிந்துவிட்டது என்றல்ல. தேவர்கள் அனைத்து தெய்வீகக்குணங்களும் நிறைந்தவர்கள் என்பது நினைவு கூரப்படுகின்றது. இலக்ஷ்மி, நாராயணன் இருவரும் தூய்மையாக இருந்தனர். அது தூய இல்லறப் பாதையாக இருந்தது. இப்பொழுதோ இல்லறப்பாதை தூய்மையற்றதாக உள்ளது. உங்கள் 84 பிறவிகளிலும், உங்கள் பெயர்களும், உருவங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தன. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: இனிய குழந்தைகளே, உங்கள் சொந்தப் பிறவிகளையே நீங்கள் அறிந்திருக்கவில்லை. நான் உங்கள் 84 பிறவிகளின் கதையைக் கூறுகின்றேன். எனவே, நிச்சயமாக நான் முதல் பிறவியிலிருந்தே விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், இப்பொழுது விகாரமுடையவர்களாக ஆகிவிட்டீர்கள். எனவே, நீங்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று அவர்களை வணங்குகின்றீர்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் முன்னால் நின்று வணங்குகின்றார்கள் பௌத்தர்கள் புத்தரை வழிபடுகிறார்கள். சீக்கியர்கள் குருநானக்கின் ஆலயத்திற்குச் (குருதுவார்) சென்று வழிபடுகிறார்கள். இதன் மூலமாக ஒருவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. நீங்கள் இந்துக்கள் என அவர்கள் கூறுகின்றனர். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எங்கு சென்றுவிட்டது என்பதை எவருமே அறியமாட்டார்கள், அது மறைந்துவிட்டது. பாரதத்தில் எல்லையற்ற உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். சிவனுக்கும் பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், அவருக்கு சிவன் என்ற ஒரேயொரு பெயரே உள்ளது. அவர் மறுபிறவியெடுப்பதாகவும், அதனால் அவரது பெயர் தொடர்ந்தும் மாறுவது என்றில்லை. இல்லை. மனிதர்கள் பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்திருக்கின்றனர். ஸ்ரீநாத் துவார் ஆலயத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் விக்கிரகங்கள் உள்ளன. அதே விக்கிரகங்கள் ஜெகநாதர் ஆலயத்திலும் காண்பிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் சூரிய வம்சத்திற்குரியவர்களாக இருந்தபோது, எவரையும் வழிபடவில்லை. நீங்கள் முழு உலகையும் ஆட்சி செய்து, சந்தோஷமாக இருந்தீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றியதன் மூலம் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தீர்கள். அது சந்தோஷதாமம் எனப்படுகின்றது. தந்தையே தங்களுக்குக் கற்பிக்கின்றார் எனவும், அவர் தங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக்குகின்றார் எனவும் வேறு எவருமே கூறமாட்டார்கள். அதற்கான அடையாளங்கள் இருப்பதால், அவர்களது இராச்சியம் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். அங்கே கோட்டை போன்றவை இருக்கவில்லை. கோட்டை பாதுகாப்பிற்காகவே கட்டப்படுகின்றது. தேவ இராச்சியத்தில் கோட்டை போன்ற எதுவுமே இருக்கவில்லை. இரண்டாவதாக, அங்கு யுத்தம் புரிவதற்கென எவருமே இருக்கவில்லை. நீங்கள் அதே தேவ தர்மத்திற்கே மாற்றப்படுகின்றீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். அதற்காகவே நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள். நீங்கள் அந்த இராச்சியத்தைக் கோரிக்கொள்ள வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசராக்குகின்றேன். இந்நேரத்தில், அரசர்கள், அரசிகள் எவருமே இல்லை. பெருமளவு சண்டை சச்சரவுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இது கலியுகமாகும். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். தந்தை உங்களை முதலாம் இலக்கத்திற்குரியவர்களாக ஆக்குவதற்காக வந்துள்ளார். அவர் அனைவருக்கும் நன்மை பயக்கின்றார். உங்களுக்கும் நன்மையுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாக முதலில் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். ஏனைய அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்கள் சாந்திதாமத்திற்குச் செல்வார்கள். தந்தை கூறுகின்றார்: அனைவரும் தூய்மையாக வேண்டும். நீங்கள் நிர்வாணதாமம் எனப்படுகின்ற தூய உலகவாசிகள். சரீரமற்ற ஆத்மாவே நிர்வாணதாமத்தில், சத்தத்திற்கு அப்பால் இருக்க முடியும். தந்தை இப்பொழுது உங்களைச் சத்தத்திற்கு அப்பால் அழைத்துச் செல்கின்றார். உங்களைச் சத்தத்திற்கு அப்பாற்பட்ட உலகமாகிய சாந்தி தாமத்திற்கு, அழைத்துச் செல்வதாக வேறு எவருமே கூறமாட்டார்கள். தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இவ்வுலகம் தமோபிரதான் என்பதையும், இங்கு நீங்கள் எச்சுவையையும் அனுபவம்; செய்யவில்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே பழைய உலகை அழித்து, புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகக் கடவுள் இங்கு வரவேண்டியுள்ளது. சிவனின் பிறப்பும் இங்கு கொண்டாடப்படுகின்றது. எனவே, அவர் இங்கு என்ன செய்தார்? எவராவது அதனை உங்களுக்குக் கூறக்கூடியதாக இருக்க வேண்டும். அவர்கள் அவரது பிறப்பைக் கொண்டாடுவதால், நிச்சயமாக அவர் இங்கு வந்திருக்க வேண்டும். அவர் இந்த இரதத்தில் பிரசன்னமாகின்றார். அவர்கள் இதனைக் குதிரை இரதமாகச் சித்தரித்துள்ளனர். தந்தை இங்கிருந்தவாறு, தான் எந்த இரதத்தைச் செலுத்துகின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இதனைக் கூறுகின்றேன். இந்த ஞானம் பின்னர் மறைந்துவிடும். பாபா இவரின் 84 பிறவிகளின் இறுதியில் வர வேண்டும். வேறு எவராலுமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஞானம் பகலும், பக்தி இரவும் ஆகும். மக்கள் தொடர்ந்தும் கீழிறங்குகின்றனர். பக்தி மார்க்கத்தில் பெருமளவு பகட்டு உள்ளது. பல கும்பமேலாக்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. நீங்கள் தூய்மையாகி, புதிய உலகிற்குச் செல்ல வேண்டும் என எவருமே அங்கு உங்களுக்குக் கூறமாட்டார்கள். இப்பொழுது இது சங்கமயுகம் எனத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் ஒரு கல்பத்திற்கு முன்னர், மனிதர்களிலிருந்து தேவர்களாகும்போது கற்ற அதே கல்வியையே பெறுகின்றீர்கள். மனிதர்கள் தேவர்களாக்கப்பட்டார்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. நிச்சயமாக, தந்தையே அவர்களை அவ்வாறு ஆக்கினார். நீங்கள் தூய்மையற்ற இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பதையும், தந்தை உங்களைத் தூய இல்லறப் பாதைக்குரியவர்களாக ஆக்குவதற்காக இப்பொழுது மீண்டும் வந்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். அதி மேலான தந்தை உங்களை அதி மேன்மையானவர்களாக ஆக்குகின்றார். தந்தையின் வழிகாட்டல்களே அனைத்திலும் அதி மேலானதாகும். நீங்கள் மேன்மையானவர்களாக ஆகுகின்றீர்கள். ஸ்ரீ ஸ்ரீ என்பதன் அர்த்தத்தை எவருமே அறியமாட்டார்கள். இப்பட்டம் சிவபாபாவிற்கே பொருந்துமாயினும், பலர் தங்களையும் ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கின்றனர். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டுகின்றனர். மாலையின் மணிகள் 108 ஆகும். அவர்கள் 16108 மணிகளைக் கொண்ட மாலையை உருவாக்கியிருக்கின்றார்கள். 8 மணிகளின் மாலை நிச்சயமாக அதன் ஒரு பாகமாகவே இருக்கும். நான்கு தம்பதியினரும், ஒரு தந்தையும் உள்ளனர். 8 இரத்தினங்கள் உள்ளன, நான் ஒன்பதாவது இரத்தினம் ஆவேன். அவர்கள் இரத்தினங்கள் என அழைக்கப்படுகின்றனர். தந்தையே அவர்களை அவ்வாறு ஆக்குகின்றார். நீங்கள் தந்தையினால் தெய்வீகப் புத்தியைக் கொண்டவர்களாக ஆக்கப்படுகின்றீர்கள். ரங்கூனுக்கு அருகில் ஏரியொன்று உள்ளது. அதில் நீராடினால் நீங்கள் ஒரு தேவதையாகுவீர்கள் எனக் கூறப்படுகின்றது. உண்மையில், இந்த ஞானத்தில் நீராடுவதன் மூலமே நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும், ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரிய விடயங்களாகும். வெறுமனே நீராடுவதால் மாத்திரம் நீங்கள் தேவதையாகுவது சாத்தியமல்ல. அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். அவர்கள் பல்வேறு கதைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். அவர்கள் எதனையுமே புரிந்துகொள்வதில்லை. குருசிகார், தில்வாலா போன்றவை உங்களது ஞாபகார்த்தங்களே என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை அதி உயர்ந்த இடத்தில் வசிக்கின்றார். தந்தையும், ஆத்மாக்களாகிய நீங்களும் வசிக்கின்ற இடம் பரந்தாமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சூட்சுமலோகம் காட்சிகளை அருள்வதற்கேயாகும், அது ஓர் உலகம் அல்ல. உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என ஆத்மலோகத்தைப் பற்றியோ அல்லது சூட்சுமலோகத்தைப் பற்றியோ கூறப்படுவதில்லை. ஒரேயொரு உலகமே உள்ளது. உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது என இந்த உலகைப் பற்றியே கூறப்படுகின்றது. உலகில் அமைதி நிலவ வேண்டும் என மனிதர்கள் கூறுகின்றனர். எனினும், ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதி என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அமைதியைக் காடுகளில் பெறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தையும், ஏனைய அனைவரும் அமைதியையும் பெறுகின்றனர். இங்கு வருகின்ற அனைவரும் முதலில் சாந்திதாமத்திற்கும், பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் செல்கின்றனர். சிலர் தாங்கள் ஞானத்தைப் பெறமாட்டார்கள் எனவும், பின்னர் தாமதமாக வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, அதுவரைக்கும் அவர்கள் முக்தி தாமத்திலேயே இருப்பார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முக்தி தாமத்தில் இருப்பது நல்லதே. பின்னர், அதிகபட்சம் அவர்கள் ஓரிரு பிறவிகளுக்கே ஓர் அந்தஸ்தைப் பெறுவார்கள். அதில் என்ன பெறுமதி உள்ளது? அது, நுளம்புகள் வந்து, மரணிப்பதைப் போன்றதாகும். எனவே, இங்கு ஒரு பிறவியில் எத்தகைய சந்தோஷம் உள்ளது? அது, அவர்களால் எப்பயனும் இல்லாததைப் போன்றதாகும். அவர்கள் நடிப்பதற்கு பாகம் எதுவும் இல்லாததைப் போன்றே உள்ளது. உங்கள் பாகங்கள் மிக மேன்மையானவை. நீங்கள் அனுபவிக்கின்ற அளவு சந்தோஷத்தை வேறு எவருமே அனுபவிக்க முடியாது. இதனாலேயே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் இதனைச் செய்கின்றீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்திலும் முயற்சி செய்தீர்கள். நீங்கள் செய்த முயற்சிக்கேற்பவே உங்களது வெகுமதியையும் பெற்றுக்கொண்டீர்கள். முயற்சி செய்யாமல் உங்களால் ஒரு வெகுமதியைப் பெற முடியாது. நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எப்பொழுது முயற்சி செய்ய ஆரம்பிப்பீர்கள் என்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்களால் வெறுமனே அவ்வாறு தொடர முடியாது (முயற்சி செய்யாமல்). நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். முயற்சியின்றி எதுவுமே நிகழ முடியாது. இருமல் எவ்வாறு தானாகவே நிற்கும்? நீங்கள் மருந்தெடுப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டும். சிலர் நாடகம் பற்றிய ஞானத்தைக் கேட்டதும், “நாடகத்தில் எது உள்ளதோ, அதுவே நிகழும்” என நினைக்கின்றனர். இந்த ஞானத்தைத் தவறான முறையில் உங்கள் புத்தியில் பதிக்காதீர்கள். இதுவும் மாயையினால் விளைவிக்கப்படும் தடைகள் ஆகும். சில குழந்தைகள் கற்பதை நிறுத்திவிடுகின்றனர். இது மாயையினால் தோற்கடிக்கப்படுவது எனப்படுகின்றது. இது மாபெரும் யுத்தமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மேன்மையான இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு, ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தந்தையின் உதவியாளராகுங்கள். தேவர்கள் விகாரமற்றிருப்பதைப் போன்று, வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதே விகாரமற்றவர் ஆகுங்கள். தூய இல்லறத்தை உருவாக்குங்கள்.

2. நாடகக் கருத்தைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள். “நாடகம்!” என்று கூறிவிட்டு, வெறுமனே அமர்ந்திருக்காதீர்கள். கல்வியில் முழுக்கவனம் செலுத்துங்கள். முயற்சி செய்வதன் மூலம் ஒரு மேன்மையான வெகுமதியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியில் தாமரை மலரின் அடையாளத்தை வைத்திருப்பதன் மூலம் உங்களை ஒரு எடுத்துக் காட்டாகக் கருதி, பற்றற்றவராகவும் அன்பாகவும் இருப்பீர்களாக.

இல்லறத்தில் வாழ்பவர்களுக்கான அடையாளம் தாமரை மலராகும். எனவே ஒரு தாமரை ஆகி, இதனைப் பயிற்சியில் இடுங்கள். நீங்கள் இதனை பயிற்சி செய்யாத போது, உங்களால் ஒரு தாமரை ஆக முடியாது. எனவே, தாமரை மலரின் அடையாளத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து, உங்களை ஓர் எடுத்துக்காட்டாகக் கருதி வாழுங்கள். சேவை செய்யும் போது, பற்றற்றவராகவும் அன்பாகவும் இருங்கள். வெறுமனே அன்பாக மட்டுமல்லாது, முதலில் பற்றற்றவராக இருங்கள், அதன் பின்னர் அன்பாக இருங்கள். ஏனெனில் அன்பு சிலநேரங்களில் பற்றாக மாற இடமுண்டு. எனவே எந்தவொரு சேவையைச் செய்யும் போதும், பற்றற்றவராகவும் அன்பாகவும் இருங்கள்.

சுலோகம்:
மாயையினால் அன்பின் பாதுகாப்பு குடைக்குள் செல்ல முடியாது.