22.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே தந்தை உங்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளார். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதுடன் ஏனையோருக்கும் சேவை செய்யவேண்டும்.

கேள்வி:
பிரம்மாபாபா என்ன பிரத்தியேகமான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றார்? அதற்கு சிவபாபா என்ன கூறுகிறார்? காத்திருந்து பாருங்கள்! எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்!

பதில்:
பாபா கொண்டிருக்கின்ற எண்ணமானது: காலம் மிகவும் பாதகமாக ஆகிக்கொண்டிருக்கிறது குழந்தைகள் நிச்சயமாக அழியாத இந்த ஞான இரத்தினங்களைப் பெற்றுக் கொள்ளத் தந்தையிடம் வரவேண்டும். இத்தனை குழந்தைகளும் வரும்போது எங்கே தங்குவார்கள்? பல கட்டடங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. சிவபாபா கூறுகின்றார்: காத்திருந்து பாருங்கள்! அவர்கள் முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே சரியாக இங்கே வந்து தங்குவார்கள். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்! தொடர்ந்தும் கற்றிடுங்கள்! மன்மனாபவ! நீங்கள் கர்மாதீதம் அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

பாடல்:
உங்களைக் கண்டு கொண்டதால் நாங்கள் முழு உலகையும் கண்டு கொண்டோம். வானம் பூமி அனைத்தும் எங்களுக்கே சொந்தம்.

ஓம் சாந்தி.
தந்தையும் கூட கூறுகின்றார்: குழந்தைகளே ஓம் சாந்தி. வேறு என்ன அவர் கூறுவார்? அவர் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: ஓம் சாந்தி, தத்வம் (அதுவே உங்களுக்கும் பொருந்தும்) ஓ குழந்தைகளே, நீங்களும் அமைதி சொரூபங்கள். அத்துடன் நீங்கள் மாஸ்டர் தூய்மை ஆக்குபவர்கள். வேறு எவருமே இவ்வாறு கூறமுடியாது. கூறப்பட்டுள்ளது: காக்கை எவ்வாறோ அதன் குஞ்சுகளும் அவ்வாறே இருக்கும். நீங்களும் பாபாவைப் போன்றவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஞானக்கடல் ஆவேன். குழந்தைகளாகிய நீங்களும் இந்த ஞானத்தின் மாஸ்டர் கடல்கள் எனப்புரிந்து கொள்கின்றீர்கள். அதாவது நீங்கள் ஆறுகள். கடலுக்கும் குழந்தைகள் உள்ளன. பெரிய ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவையும் உள்ளன. அவை உயிரற்றவை, ஆனால் நீங்களோ உயிருள்ளவர்கள். நீங்கள் கடலில் இருந்தே வெளியாகி உள்ளீர்கள். சில புதல்விகள் இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் புதல்விகள் கல்வியறிவு அற்றவர்கள். பாபா ஒருமுறை கேட்டார்: சீனி எவ்வாறு செய்யப்படுகின்றது? சக்கரை எவ்வாறு செய்யப்படுகின்றது? சக்கரை சிவப்புக் கரும்பினாலும் சீனி வெள்ளைக் கரும்பினாலும் செய்யப்படுகின்றது என அவர்கள் கூறினார்கள். அந்த அப்பாவிகள் கல்வியறிவைப் பெறவில்லை. பாபா அவ்வாறான மகத்தான விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆற்றுநீர் கடல் நீரிலிருந்தே வெளியாகின்றது. சனத்தொகை அதிகரிக்கின்றது. எனவே அதிகளவு நீர் தேவைப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் பல கால்வாய்களைக் கட்டுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இருக்கும் போதும் நடக்கும் போதும் சுற்றித்திரிந்து அனைத்தையும் செய்யும்போதும் எவ்வாறு தூய்மையற்ற உலகைத் தூய்மை ஆக்குகின்றீர்கள் எனச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாடலில் கூறுப்பட்டுள்ளது: பாபா நான் உலக இராச்சியம் என்ற ஆஸ்தியை உங்களிடம் இருந்து கோரிக் கொள்கின்றேன். எவருமே இதை எங்களிடம் இருந்து அபகரிக்க முடியாது. அந்த இராச்சியம் 21 பிறவிகளுக்கு இருக்கும். எல்லையற்ற தந்தை எங்களது பாக்கியமான எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர் எங்களை இராச்சியத்தை ஆளத்தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குவதுடன் தூய்மையும் ஆக்குகின்றார். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை அழைக்கவில்லை. அவர்கள் அசரீரியான கடவுளையே அழைக்கின்றார்கள். ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள் என்று கூறும்போது அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை அல்லாது பரமதந்தையையே தமது புத்திகளில் வைத்திருக்கின்றார்கள். தந்தை வந்து அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தைக்கு முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். அவர் ஒரு சாதுவோ அல்லது புனிதரோ அல்லர். அசரீரியான சிவபாபா பிரம்மாவின் இச்சரீரத்தில் பிரவேசித்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அசரீரியான சிவபாபா, பிரம்மாவின் மூலம் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தார் என்பதும் நினைவு கூரப்படுகின்றது. ஸ்தாபனையின் பின்னர் விநாசம் இடம்பெற்றது. இது அவர் பழைய உலகிலேயே வருகின்றார் என்பதை நிரூபிக்கின்றது. புதிய உலகம் பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டு எண்ணிக்கையற்ற மதங்கள் சங்கரரின் மூலம் அழிக்கப்படுகின்றன. சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமே இருந்தது. ஆனால் இப்பொழுது எண்ணிக்கையற்ற மதங்கள் உள்ளன. சக்கரம் போன்றவை ஒரேயொரு தர்மம் இருந்த காலத்தில் இருந்த தேவர்களின் அடையாளங்கள் ஆகும். இலக்ஷ்மி நாராயணன் உலகின் அதிபதிகள் என்று கூறப்படுகின்றனர். சுவர்க்கத்தின் அதிபதிகளே உலகின் அதிபதிகள் ஆவர். இந்த விடயங்கள் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்திகளில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே மன்மனாபவ! குழந்தைகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்படுகின்றார்கள்: தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! நீங்கள் ஏனைய கருத்துக்கள் அனைத்தையும் மறந்தது போன்று இதையும் மறந்து விடாதீர்கள். இதுவே பிரதான கருத்தாகும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் தூய்மை ஆகுவதற்கான வழிமுறையை உங்களுக்கு கூறுகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதானாகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். நீங்கள் 84 பிறவிகள் முழுமையாக எடுத்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகின்றபோதே உங்களால் புதிய உலகிற்குச் செல்ல முடியும். அசரீரி உலகம் தூய்மையானது, அந்தச் சரீர உலகமும் தூய்மையானது. இது தூய்மையற்ற உலகமாகும். ஆத்மாக்கள் இப்பொழுது தமோபிரதானாகி உள்ளார்கள். சரீரங்களும் தமோபிரதான் ஆகியுள்ளன. இது உலக நாடகமாகும். பிரமாண்டமும் சூட்சும உலகமும் இதற்குள் அடங்குகின்றது. இங்கேயே உலகச்சக்கரம் சுழல்கின்றது. சத்திய, திரேதா யுகங்கள் இங்கேயே உள்ளன. அவை சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ இல்லை! அவை இங்கேயே உள்ளன. இது மனித உலகம் என்றும்இ அது ஆத்மாக்களின் அசரீரி உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. மற்றையது பிரம்மா, விஷ்ணு, சங்கரின் சூட்சும உலகமாகும். இந்தச் சரீர உலகின் சனத்தொகை மிகப் பெரியது. சத்தியயுகத்தில் உலக சனத்தொகை மிகவும் சிறியது, ஒரு தர்மமே அங்கு உள்ளது. அங்கேயும் அசுரர்கள் இருந்தார்கள் என்று மக்கள் கூறுகின்றவை எல்லாம் பொய்யே. புதிய உலக ஸ்தாபனையும் பழைய உலகின் விநாசமும் நினைவு கூரப்படுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சத்தியயுக சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டு மீதி அனைத்துமே அழிக்கப்படும். நீங்களும் தந்தையுடன் சேர்ந்து சேவை செய்கின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே சேவை செய்ய வந்துள்ளார். அவர் எல்லையற்ற தந்தை ஆவார். தன்னுடைய குழந்தைகள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாக இருப்பதை அவர் பார்க்கின்றார். எனவே அவர் நிச்சயமாக அவர்கள் மீது கருணை கொள்கின்றார். அவர் கருணை நிறைந்த தந்தை ஆவார். இப்பொழுது முழு உலகிலும் அமைதியற்ற நிலை இருக்கின்றது. ஒரு தந்தையைத்தவிர வேறு எவராலும் அமைதியைக் கொண்டுவர முடியாது. பல ஹத்த யோகிகள் இருக்கின்றனர். அவர்கள் ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை எனக்கூறுகின்றனர். அவர்கள் பிழையான விடயங்களையே மக்களுக்குக் கூறுகின்றனர். உண்மையில் ஆத்மாக்களிலேயே சுத்தம் இருக்க வேண்டும். ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது, எவருமே இதை அறியமாட்டார்கள். கூறப்பட்டுள்ளது: இவர் ஓர் பாவாத்மா ஏனெனில் இவர் பல பாவங்களைச் செய்கின்றார். இவர் ஒரு மகாத்மா அல்லது புண்ணிய ஆத்மா. அவர்கள் ஒருபோதும் மகா பரமாத்மா எனக் கூறுவதில்லை. சந்நியாசிகள் அனைத்தையும் துறந்தவர்கள் என்பதால் தூய ஆத்மாக்கள் என அவர்கள் கூறுகின்றனர். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்றவர் பரமாத்மாவாகிய தந்தையைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. தூய்மையற்ற உலகில் எந்தத்தூய்மையான ஆத்மாக்களும் இருக்க மாட்டார்கள். இப்பொழுது நாற்று நாட்டப்படுகின்றது. படிப்படியாக வளர்ச்சி இடம்பெறும். இந்தச் சிறிய மதப்பிரிவுகளும் மத அனுசரணைகள் போன்றவையும் சிறுகிளைகளே. அவற்றிற்கு எந்த முயற்சியும் தேவையில்லை. அவர்கள் பலவிதமான மந்திரங்களைக் கொடுக்கின்றார்கள். இதுவும் மனதை ஒழுங்குபடுத்தும் மந்திரமே. அதன்மூலம் நீங்கள் ஐந்து விகாரங்களை வெற்றி கொள்கின்றீர்கள். மக்கள் ராமா ராமா என்ற மந்திரத்தை ஓதுகின்றார்கள். ஆனால் அதனால் எந்தவிதமான நன்மையும் இல்லை. இங்கே தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு நீங்கள் தூய ஆத்மாக்கள் ஆகுவீர்கள். நினைவு, யோகம் என்றும் அழைக்கப்படுகின்றது. பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. இந்த யோகத்தினாலேயே நீங்கள் உலகை வெற்றி கொள்கின்றீர்கள். பாரதத்தின் இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. வேறு எவருமன்றி தந்தையாலேயே இதைக் கற்பிக்க முடியும். நீங்கள் பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். பிகே கள் இங்கேயே இருக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் நிச்சயமாக பிரம்மாவுடனேயே இருக்க வேண்டும். இந்தப் பிராமண குலமும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. இதுவே அதிமேன்மையான பிராமணக்குலம் என்று அறியப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள், பின்னர் நீங்கள் மாறுவீர்கள். நீங்கள் குத்துக்கரணம் அடிக்கின்றீர்கள். நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பின்னர் நீங்கள் தேவர்கள், ஷத்திரியர்கள் போன்றவர்கள் ஆகுவீர்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே இது மிகவும் சிறிய விடயமாகும். தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். பாபா 84 பிறவிகளின் முக்கியத்துவத்தை உங்களுக்குக் கூறுகின்றார் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. 8.4 மில்லியன் பிறவிகள் அல்லாது 84 பிறவிகளின் கணக்கே இருக்கவேண்டும். எவருமே இதை அறியமாட்டார்கள். 8.4 மில்லியன் பிறவிகளின் கணக்கை எவருமே உங்களுக்கு கொடுக்க முடியாது. மனிதர்களாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வருகின்றீர்கள். ஆத்மாக்கள் அவர்களுடைய பாகத்தை நடிப்பதற்காக மேலிருந்து வருகின்றார்கள். சத்தியயுகத்தில் இருந்து கலியுக முடிவுவரை அவர்கள் தொடர்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு ஆத்மாவும் அவரது சொந்தப் பாகத்தை நடிக்கின்றார். மனிதர்கள் இந்த விடயங்களை அறியமாட்டார்கள். ஒரு தந்தையே இந்த விடயங்களை அறிவார். மனிதர்களை பரமாத்மா அல்லது தந்தையாகிய கடவுள் என்று அழைக்க முடியாது. தந்தையாகிய கடவுள் என்று நீங்கள் கூறுகின்றபோது புத்தி அசரீரியான சிவபாபாவை நோக்கியே செல்கின்றது. உயிர்வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். அசரீரியான தந்தையின் பெயர் சிவன் ஆகும். உங்களுக்கும் ஒரு பெயர் உண்டு: ஆத்மா. ஆயினும் சரீரங்களுக்கு பல வித்தியாசமான பெயர்கள் உண்டு. பரமதந்தை பரமாத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசித்து இந்த ஞானத்தைப் பேசுகின்றார். அவர் அதை ஒரு சரீரமில்லாது பேசமுடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இவர் தனது சொந்தப் பெயரைக் கொண்டுள்ளார். எனக்கு சரீரத்திற்கான பெயரில்லை. நான் மறுபிறவி எடுப்பதில்லை. நான் இவரினுள் பிரவேசிக்கின்றேன். இவரும் அதைப்பற்றி அறியமாட்டார். ஒரு குறிப்பிட்ட திகதியோ அல்லது நேரமோ இல்லை. ஆம் நான் கல்பத்தின் முடிவிலே வருகின்றேன். அதாவது இரவில் வருகின்றேன். இப்பொழுது இரவாகும். இது தூய்மை அற்றவர்களின் உலகமாகும். நான் உலகைத் தூய்மையாக்க வருகிறேன். அதாவது பகலைக் கொண்டு வருகிறேன். பாபா இவரினுள் எப்போது பிரவேசித்தார் என்பதை இவரும் அறிந்து கொள்ளவில்லை. ஆம் இவர் விநாசத்தின் காட்சிகளைக் கண்டார். பலர் திரான்ஸ்சில் சென்றார்கள். அவர்களால் திகதி, நேரம் அல்லது கணத்தைத் தெளிவாகக் கூற முடியவில்லை. மக்கள் ஸ்ரீகிருஷ்ணரை வணங்குவதுடன் அவரின் பிறப்பு இரவில் இடம் பெற்றதாகக் காட்டுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட நேரத்தை சரியாக விநாடிவரைக்கும் காட்டுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் அசரீரியானவர். என்னுடைய பிறப்பு ஏனையோரைப் போன்றதல்ல, எனது பிறப்பு தெய்வீகமானதும் தனித்துவமானதும் ஆகும். நான் இவரினுள் பிரவேசித்துப் பின்னர் சென்று விடுகின்றேன். எவருமே நாள் முழுவதும் எருதில் சவாரி செய்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் என்னை நினைவு செய்கின்றபோது நான் பிரசன்னம் ஆகின்றேன். மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது அவர்கள் “ராமா ராமா” அல்லது நமஸ்தே கூறுவதைப் போன்று தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களைச் சந்திப்பதுடன் “காலைவந்தனம்” கூறுகின்றார். ஆன்மீக எல்லையற்ற தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவரதும் தந்தை ஆவேன். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள், சிவபாபாவின் குழந்தைகள். குழந்தைகளாகிய உங்களுக்குள்ளே சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். எல்லையற்ற தந்தை வந்து எங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களைக் காணும்போது மிகுந்த சந்தோஷத்தை உணர்கின்றார். பல குழந்தைகள் இருக்கின்றார்கள்! பாபா உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்கி இராச்சியத்தைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். “பாரதம் எங்கள் தேசம்” என்று பாரதமக்கள் கூறுவது போன்று அரசன் மற்றும் பிரஜைகள் அனைவரும் “இது எங்கள் தேசம்" என்று கூறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நரகவாசிகள், பின்னர் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! தந்தை உங்களுக்கு வேறு எந்தக் கஷ்டமும் கொடுக்கவில்லை. நீங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழவேண்டும். நீங்கள் இங்கே வந்து தங்கமுடியாது. அனைவரும் இங்கே ஓடிவந்திருந்தால் பாபா உங்களை எங்கே தங்க வைப்பார்? எவ்வாறு குழந்தைகளாகிய உங்களில் பலர் இங்கு ஒரே தடவையில் வரமுடியும்? எவ்வாறு அனைத்து நிலையங்களில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் ஒரே நேரத்தில் வந்து பாபாவைச் சந்திக்க முடியும்? அவர்கள் எங்கே தங்குவார்கள்? அது கஷ்டமானது. நாளுக்கு நாள் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்கின்றது. இதற்குச் சில திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இங்கே சுற்றியிருக்கின்ற கட்டங்கள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும். வீட்டு உரிமையாளர்களிடம் அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் எனக் கேட்க வேண்டும். நேரம் வரும்போது அவற்றை வாங்க வேண்டும். பணம் என்ற கேள்வியில்லை. நேரம் மிகவும் பாதகமாகிக் கொண்டிருக்கின்றது. தந்தை, குழந்தைகள் இருவரும் அழியாதவர்கள். அவர் அழியாத பொக்கிஷங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். பல குழந்தைகள் இங்கு வர விரும்புகின்றனர். பாபா அவர்களை எங்கே தங்க வைக்கலாம் எனச் சிந்திக்கின்றார். சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் ஏன் அதுபற்றிக் கவலைப்படுகின்றீர்கள்? காத்திருந்து பாருங்கள்! தொடர்ந்தும் கற்றிடுங்கள்! மன்மனாபவ! நீங்கள் இப்பொழுது உங்களுடைய கர்மாதீத நிலையை அடைந்து சதோபிரதான் ஆகவேண்டும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே நீங்கள் தூய்மையாக முடியும். பாபா கூறுகின்ற அனைத்தும் மிகவும் இலகுவானது. இது அதிகளவு இலகுவானது. பாபாவை நினைவு செய்யுங்கள். ஒரு பசுக்கன்று தனது தாயை நினைவு செய்கின்றபோது அது கத்துகின்றது. அது ஒரு மிருகமாகும். குழந்தைகளாகிய நீங்களும் அழைத்தீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது அனைவரும் அதிகளவு அழைப்பார்கள். அவர்கள் அவரை அதிகளவு நினைவு செய்வார்கள். பாபா இப்பொழுது வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். விநாசம் இடம் பெறவேண்டும். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். அனைவரும் தொடர்ந்து தங்களுக்குள்ளே சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் குண்டுகள் போன்றவற்றைத் தயாரிப்பதில் அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றார்கள். அதிகளவு செலவு செய்யப்படுகின்றது. எவ்வாறு அந்தச் செலவுகள் ஈடுகட்டப்படும்? மக்களிடம் மரணபயம் உள்ளது. ஆனால் அவர்கள் குண்டுகள் தயாரிப்பதை நிறுத்துகின்றார்கள் இல்லை. குண்டுகளினால் யுத்தம் இடம்பெறும். குண்டுகள் வீசியவுடனேயே மக்கள் இறக்கக்கூடியதான குண்டுகளை இப்பொழுது அவர்கள் தயாரிக்கின்றார்கள். முதலில் பொருட்களைச் செய்வதற்கு நேரம் எடுத்தது. ஆனால் இப்பொழுது “ஒரு நிமிடத்தில் ஒரு மோட்டார்” போன்று உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் மிக விரைவாக அனைத்தையும் செய்கின்றனர்! அவர்கள் வெகுசில குண்டுகளை மாத்திரம் செய்யப் போவதில்லை! இந்தப்பழைய உலகம் அழிக்கப்படப் போகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் இருந்து உங்களின் ஆஸ்தியைக் கோரவேண்டும். கீதை பாரதமக்களாகிய உங்களுக்கே ஆகும். இது தேவதர்மத்தின் சமயநூலாகும். மீதி அனைத்துமே முக்கியத்துவம் குறைந்ததாகும். அவை நினைவு கூரப்படுவதில்லை. பிராமணதர்மமே அனைத்திலும் அதிமேன்மையானது. சமயக் கதைகளைக் கூறுவது பிராமணப் பூசாரியின் கடமையாகும். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளான பிரம்மாகுமாரர்கள் குமாரிகள் என்றும் உங்கள் பாட்டனாரின் சொத்தை நீங்கள் பெறுகின்றீர்கள் எனவும் உங்களால் கூறமுடியும் அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாடகத்தின் ஒவ்வொரு இரகசியத்தையும் புரிந்துகொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்! தொடர்ந்தும் கற்றிடுங்கள். மன்மனாபவவில் நிலைத்திருந்து கர்மாதீதம் ஆகுகின்ற அக்கறையைக் கொண்டிருங்கள். உங்களை சதோபிரதான் ஆக்குங்கள்.

2. சிவபாபாவின் குழந்தைகளான ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள். நீங்கள் சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் அக ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் உண்மையான அன்பைக் கொண்டவராகி தந்தையினதும் உங்களினதும் மறைமுகமான ரூபத்தை வெளிப்படுத்துவீர்களாக.

தமது அக ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் குழந்தைகளால் தமது அக ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் அகநோக்கில் இருப்பவர்களால் வேறு எவற்றிலும் ஈடுபட முடியாது. அவர்களால் தற்காலிகமான, பகட்டான இந்தப் பழைய உலகம், உறவுகள், செல்வம் அல்லது பௌதீகச் சொத்துக்களால் ஏமாற்றப்பட முடியாது. உங்களின் அக ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் உங்களின் மறைமுகமான சக்தி ரூபம் வெளிப்படுத்தப்படும். இந்த வடிவத்தின் மூலம் தந்தை வெளிப்படுத்தப்படுவார். இத்தகைய மேன்மையான பணியைச் செய்பவர்கள் உண்மையான அன்பைக் கொண்டிருப்பார்கள்.

சுலோகம்:
உங்களின் நம்பிக்கையினதும் இறை பிறப்புரிமையினதும் பெருமையையும் கௌரவத்தையும் பேணுங்கள் நீங்கள் துயரப்பட மாட்டீர்கள்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

சுத்தம், இலேசான தன்மையின் அடையாளம். எந்தளவிற்கு நீங்கள் இலேசாக இருக்கிறீர்களோ, அதற்கேற்ப, சுத்தம் இருக்கும். ஆகவே நீங்கள் அனைவரையும் உங்களை நோக்கிக் கவருவீர்கள். உங்களின் சுபாவத்தை இலேசாகவும் எளிமையாகவும் ஆக்கும்போது நேர்மையும் சுத்தமும் காணப்படும். இலகுவான சுபாவத்தைக் கொண்டவர்களால் பல்துறைகளில் திறமை உடையவர் (பல வடிவங்களை எடுக்கக்கூடியவர்) ஆகமுடியும். இலகுவான சுபாவத்தைக் கொண்டவர்கள் சதா மலர்ச்சி நிறைந்தவர்களாக இருந்து அனைவரையும் கவருவார்கள்.