22.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள், அப்பொழுது நீங்கள் குளிர்ச்சி அடைந்து விகாரங்கள் என்ற துர்நாற்றம் அகற்றப்படும், அத்துடன் நீங்கள் அகநோக்குடையவர்கள் ஆகி ஒரு மலராகவும் ஆகுவீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் பாப்தாதா கொடுக்கின்ற இரு ஆசீர்வாதங்கள் எவை? அவற்றைப் பயிற்சியில் இடுவதற்கான வழி என்ன?பதில்:
பாபா குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் அமைதியும் சந்தோஷமும் என்ற ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் மௌனத்தில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். எவராவது வீணான விடயங்களைக் கூறினால், அவர்களுக்குப் பதிலளிக்காதீர்கள். நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். வம்பளக்கவோ அல்லது வீணான எதையும் பேசவோ வேண்டாம். எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். உங்கள் வாயில் மௌனம் என்ற மணியை இடுங்கள். அப்பொழுது உங்களால் இந்த இரு ஆசீர்வாதங்களையும் பயிற்சியில் இட முடியும்.ஓம்சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் சிலவேளைகளில் முன்னிலையில் இருக்கிறார்கள், சிலவேளைகளில் மிகவும் தொலைவிற்குச்; சென்று விடுகின்றார்கள். பாபாவை நினைவு செய்பவர்களே அவரின் முன்னிலையில் இருக்கின்றார்கள். ஏனெனில், அனைத்தும் நினைவு யாத்திரையிலேயே அடங்கியுள்ளது. ஓர் ஆத்மா ஒரு கணப் பார்வையில் அப்பால் செல்கிறார் என்பது நினைவு கூரப்படுகின்றது. ஓர் ஆத்மாவின் பார்வை பரமாத்மா மீது ஈர்க்கப்படுகிறது. அவர் வேறு எதனையும் விரும்புவதில்லை. அவரை நினைவு செய்வதன் மூலம், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. ஆகையால் நீங்கள் உங்களையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் நினைவுசெய்யாத பொழுது, உங்கள் யோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை மாயை புரிந்து கொள்வதனால், அவள் உங்களைத் தன்பால் ஈர்க்கின்றாள். அவள் உங்களை ஏதாவது ஒரு பிழையான செயலைச் செய்ய வைக்கின்றாள். இவ்வாறு செய்வதனால், ஆத்மாக்கள் தந்தையை அவதூறு செய்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடுவதுண்டு: பாபா, வேறு எவருமன்றி, நீங்களே என்னுடையவர். ஆகவே, தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இலக்கு மிகவும் உயர்வானது. நீங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவே அதியுயர் இலக்காகும். இதற்கு உங்களுக்கு மிகவும் நல்ல பயிற்சி தேவையாகும். இல்லாவிட்டால், தீய செயல்களைச் செய்பவர்கள் அவதூறை ஏற்படுத்துவார்கள். உதாரணமாக, ஒருவர் கோபப்பட்டு உங்கள் மத்தியில் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டால், அப்பொழுது அதுவும் அவதூறே ஆகும். இதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் பொழுதும், உங்கள் புத்தியைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். எவருமே முழுமை அடைந்து விட்டார்கள் என்றில்லை; இல்லை. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் சரீர உணர்விற்கு வரும்பொழுது, நீங்கள் ஏதாவது ஒரு பிழையான செயலைச் செய்கின்றீர்கள். உண்மையில், இது தந்தைக்கு அவதூறை ஏற்படுத்துகின்றது. தந்தை கூறுகின்றார்: சத்குருவை அவதூறு செய்பவர்களால் இலக்ஷ்மி நாராயணன் ஆகுதல் என்ற இலக்கை அடைய முடியாது. ஆகவே தொடர்ந்தும் முழு முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் மிகவும் குளிர்ச்சி அடைவீர்கள். ஐந்து விகாரங்கள் என்னும் விடயங்கள், உங்களிலிருந்து அகற்றப்படுவதால் நீங்கள் தந்தையிடமிருந்து, பெருமளவு சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் வேலைகள் போன்றவற்றையும் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் செயல்கள் எதனையும் செய்யக்கூடாது என்று தந்தை கூறுவதில்லை. அங்கே, உங்கள் செயல்கள் நடுநிலையாக இருக்கும். கலியுகத்தில் செய்யப்படும் செயல்கள் பாவகரமானவை ஆகுகின்றன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்திலேயே கற்க வேண்டும். அங்கே கற்பது என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே உங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற கற்பித்தல்களை நீங்கள் அங்கே உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: புறநோக்கு நல்லதல்ல. அகநோக்குடையவர் ஆகுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் அகநோக்குடையவர் ஆகுவதற்கான காலம் வரும்; நீங்கள் தந்தையைத் தவிர எவரையும் நினைவுசெய்ய மாட்டீர்கள். நீங்களும் இவ்வாறே வந்தீர்கள்; நீங்கள் எவரையும் நினைவு செய்யவில்லை. ஒரு குழந்தை கருப்பையில் இருந்து வெளியே வந்த பின்னரே, இவர்கள் தனது தாயும் தந்தையும், இவர் இன்னார் என்பதைப் புரிந்து கொள்கின்றார். ஆகவே, இப்பொழுது நீங்கள் அவ்வாறே திரும்பிச் செல்ல வேண்டும். நாங்கள் ஒரேயொரு தந்தைக்கு உரியவர்கள். உங்கள் புத்தி அவரைத் தவிர எவரையும் நினைவு செய்யக்கூடாது. இன்னமும் காலம் எஞ்சியிருந்த பொழுதிலும் நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சரீரத்தில் தங்கியிருக்க முடியாது. உங்கள் வீட்டில் முரண்பாடு எதுவும் கொண்டிருக்காமல் அமைதியைப் பேணுவதற்கு நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல், இவர் பெருமளவு அமைதியற்று இருக்கின்றார் என அனைவரும் கூறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முற்றிலும் மௌனமாக இருக்க வேண்டும். நீங்கள் அமைதி எனும் உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். இப்பொழுது நீங்கள் முட்களின் மத்தியில் வாழ்கின்றீர்கள். நீங்கள் பூந்தோட்டத்தில் இல்லை. நீங்கள் முட்களின் மத்தியில் வாழும்பொழுதும் மலர்கள் ஆக வேண்டும். நீங்களே ஒரு முள்ளாகி விடக்கூடாது. நீங்கள் தந்தையை அதிகளவு நினைவு செய்யும் பொழுது, நீங்கள் அதிகளவுக்கு அமைதியாக இருப்பீர்கள். எவராவது வீண் கதைகள் எதனையும் கூறும்பொழுது, அமைதியாக இருங்கள். ஆத்மாக்கள் அமைதிநிறைந்தவர்கள். ஆத்மாக்களின் ஆதிதர்மம் அமைதியாகும். நீங்கள் அந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை அமைதிக்கடல். அவர் கூறுகின்றார்: நீங்களும் அமைதிக்கடல்கள் ஆக வேண்டும். வீணான வம்பளத்தல் பெரும் பாதிப்புகளை எற்படுத்துகின்றது. தந்தை உங்களுக்கு வழிகாட்டலைக் கொடுக்கின்றார்: நீங்கள் அத்தகைய விடயங்களைப் பேசக்கூடாது. அதன்மூலம் நீங்கள் தந்தையின் பெயரை அவதூறு செய்கின்றீர்கள். மௌனமாக இருக்கும் பொழுது, அவதூறோ அல்லது பாவகரமான செயல்கள் போன்றனவோ செய்யப்பட மாட்டாது. தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அதிகளவுக்கு அழிக்கப்படும். நீங்கள் அமைதியற்றவராக ஆகவோ அல்லது வேறு எவரையும் அமைதியற்றவர் ஆக்;கவோ கூடாது. நீங்கள் ஒருவருக்குத் துன்பம் விளைவித்தால், அந்த ஆத்மா குழப்பம் அடைகின்றார். தங்கள் முறைப்பாடுகளை எழுதுகின்ற பலர் உள்ளார்கள்: பாபா, இவர் வீட்டில் பெருமளவு குழப்பத்தை விளைவிக்கின்றார். பாபா பதிலளிக்கின்றார்: நீங்கள் உங்கள் அமைதி தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஹத்தமத்தாய் பற்றிய ஒரு கதையுள்ளது. அவரது வாயினுள் ஒரு மணியை இடுமாறு அவருக்குக் கூறப்பட்டது. அதனால் அவரால் வாயிலிருந்து எந்த ஓசையையும் வெளிப்பட முடியாததுடன், அவராலும் பேச முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் அமைதிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும். மக்கள் அமைதியைத் தேடிப் பெருமளவுக்கு அலைந்து திரிகின்றார்கள். உங்கள் இனிய பாபா அமைதிக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் அமைதியை உருவாக்குவதன் மூலம், உலகில் அமைதியை ஸ்தாபிக்கின்றார். உங்கள் எதிர்கால அந்தஸ்தையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். அங்கு ஒரேயொரு தர்மமே இருக்கின்றது; வேறு எச் சமயமும் இல்லை. அது உலகில் அமைதி நிலவிய காலம் என அழைக்கப்படுகின்றது. பின்னர், ஏனைய சமயங்கள் வரும் பொழுது, பெருமளவு குழப்பங்கள் ஏற்படுகின்றன. நீங்கள் இப்பொழுது மிகவும் அமைதியுடன் இருக்கிறீர்கள். அதுவே உங்கள் வீடு என்று நீங்கள் புரிந்து கொள்;கின்றீர்கள். எங்கள் ஆதி தர்மம் அமைதியாகும். சரீரத்தின் ஆதி தர்மம் அமைதி என்று நீங்கள் கூற மாட்டீர்கள். சரீரங்கள் அழியக்கூடியவை, ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்கள் அங்கிருக்கும் வரை அவர்கள் அமைதியில் இருக்கின்றார்கள். இங்கே, முழு உலகிலும் அமைதியின்மை உள்ளதால், அவர்கள் அமைதியை வேண்டுகின்றார்கள். எவ்வாறாயினும், சதா அமைதியாக அங்கேயே இருக்க விரும்பினால், அது எவருக்கும் சாத்தியமில்லை. சிலர் 63 பிறவிகளுக்கு அங்கிருந்த பொழுதிலும், அவர்கள் இறுதியில் இங்கு வர வேண்டும். அவர்கள் தங்கள் சந்தோஷமும் துன்பமும் என்ற பாகங்களை நடித்து, வீடு திரும்புவார்கள். உங்கள் விழிப்புணர்வில் நாடகத்தை மிகத் தெளிவாக வைத்திருங்கள். பாபா, உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் என்ற ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பிரம்மாவின் ஆத்மா அனைத்தையும் செவிமடுக்கின்றார். செவிமடுப்பவர்களில் அவரது செவிகளே மிகவும் நெருக்கமாக உள்ளன. அவரின் வாயும் அவரின் செவிக்கு அருகில் உள்ளது. உங்கள் செவிகள் சற்றுத் தொலைவிலேயே உள்ளன. இவர் மிகவும் விரைவில் செவிமடுக்கின்றார். அவர் அனைத்தையும் புரிந்து கொள்கின்றார். தந்தை கூறுகின்றார்: ஓ இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! அனைவருமே அவரது குழந்தைகள் என்பதால் அவர் அனைவரையும் இனிமையிலும் இனிமையானவர் என்றே அழைக்கின்றார். சரீரத்திலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் தந்தையின் அழிவற்ற குழந்தைகள் ஆவார்கள். சரீரங்கள் அழியக்கூடியவை, தந்தை அழிவற்றவர். ஆத்மாக்களான குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்றவர்கள். தந்தை தனது குழந்தைகளுடன் உரையாடுகின்றார். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மா இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை அனைவரையும் நேசிக்கிறார். ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதான் ஆகிவிட்ட பொழுதிலும் தாங்கள் வீட்டில் இருந்த பொழுது, சதோபிரதானாக இருந்ததை அறிவார்கள். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து அனைவருக்கும் அமைதிக்கான பாதையைக் காட்டுகின்றேன். ஆசீர்வாதம் வழங்குதல் என்ற கேள்விக்கு இடமில்லை. அவர் கூறுவதில்லை: செல்வந்தர் ஆகுவீர்களாக! நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்களாக! இல்லை; நீங்கள் சத்தியயுகத்தில் அவ்வாறு இருந்தீர்கள், ஆனால் பாபா உங்களுக்கு அத்தகைய ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை. நீங்கள் ஆசீர்வாதங்களையோ அல்லது கருணையையோ கேட்க வேண்டியதில்லை. தந்தையே, தந்தை என்பதையும் அவரே ஆசிரியரும் என்பதையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஓ! சிவபாபா தந்தையாவார். அவர் ஆசிரியரும் ஞானக்கடலும் ஆவார். தந்தை இங்கமர்ந்திருந்து, தன்னைப் பற்றியும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் பேசுகின்றார். அதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளரான, சக்கரவர்த்திகள் ஆகுகின்றீர்கள். இது சகலதுறையும் அடங்கிய சக்கரமாகும். இந்நேரத்தில் முழு உலகமும் இராவண இராச்சியத்தில் உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இராவணன் இலங்கையில் மாத்திரம் இருப்பதில்லை. இது எல்லையற்ற இலங்கை (தீவு) ஆகும்; சுற்றிலும் நீர் உள்ளது. முழு இலங்கையும் இராவணனுக்கு உரியதாக இருந்தது, இப்பொழுது அது மீண்டும் இராமருக்குக் உரியதாகப் போகின்றது. இலங்கை தங்கத்தால் ஆக்கப்பட்டிருந்தது. அங்கே பெருமளவு தங்கம் இருந்தது. ஒருவர் திரான்ஸில் சென்று, அங்கே ஒரு தங்கக்கட்டி இருப்பதைப் பார்க்கின்றார் என்ற உதாரணமும் உள்ளது. இங்கே களிமண் கட்டிகள் இருப்பதைப் போன்று, அங்கே தங்கக் கட்டிகள் இருக்கும். எனவே, அவர் தன்னுடன் ஒரு தங்கக் கட்டியை எடுத்து வரலாம் என்று எண்ணினார். அவர்கள் பல நாடகங்களைத் தயாரித்துள்ளார்கள். பாரதம் மிகவும் பிரபல்யமானது. வேறு தேசங்களில் அந்தளவுக்கு வைரங்களும், இரத்தினங்களும் இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் வழிகாட்டியாகி அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். வாருங்கள் குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள்; அவர்களால் தூய்மையாகாமல், வீடு திரும்ப முடியாது. ஒரேயொரு தந்தையால் மாத்திரமே தூய்மைற்றவர்களைத் தூய்மையாக்க முடியும். ஆகையாலேயே அனைவரும் இங்குள்ளார்கள்; எவராலும் வீடு திரும்ப முடியாது. அதற்கு நியதி இடமளிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, மாயை உங்களை மேலும் விசையுடன் சரீர உணர்வுடையவர் ஆக்குவாள்; நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்கு, அவள் உங்களை அனுமதிக்க மாட்டாள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனாலேயே நீங்கள் போராட வேண்டியுள்ளது. உங்கள் கண்களே உங்களை அதிகளவு ஏமாற்றுகின்றன. நீங்கள் உங்கள் கண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சகோதர, சகோதரி என்ற உணர்விலும் கூட, உங்கள் பார்வை நன்றாக இல்லாதிருப்பது தெரிகின்றது. எனவே உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது: உங்களைச் சகோதரர்கள் எனக் கருதுங்கள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்று அனைவரும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் கத்திக் கொண்டிருக்கும் தவளையைப் போன்றுள்ளார்கள்; அவர்கள் அதன் அர்த்தத்தை முற்றிலும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது ஒவ்வொரு விடயத்தின் அர்த்தத்தையும் மிகச்சரியாகப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் இருந்த பொழுதும் அந்த நேரத்திலும் எனது காதலிகளாகவே இருந்தீர்கள் எனத் தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்; நீங்கள் உங்கள் அன்பிற்கினியவரை நினைவு செய்தீர்கள். மக்கள் துன்பத்தின் பொழுது, அவரை மிகவும் விரைவில் நினைவு செய்கின்றார்கள்: ஓ இராமா! ஓ கடவுளே! என் மீது கருணை கொள்ளுங்கள்! நீங்கள் ஒருபொழுதும் சுவர்க்கத்தில் இவ்வாறு கூறமாட்டீர்கள். அங்கே இராவண இராச்சியம் இருக்க மாட்டாது. பாபா உங்களை இராம இராச்சியத்திற்கு அனுப்புகிறார். ஆகையால் நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் தெய்வீக வழிகாட்டல்களைப் பெறுவீர்கள். கலியுகம் இன்னமும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என்றும், அது இன்னமும் நூறாயிரம் வருடங்கள் தொடரும் என்றும் அனைவருக்கும் கூறப்பட்டிருப்பதால், எவருமே இந்த நன்மையளிக்கின்ற சங்கமயுகத்தைப் பற்றி அறியார். அது பக்தி மார்க்கத்தின் முழுமையான காரிருள் என்றும், ஆனால் ஞானம் ஒளியென்றும் பாபா கூறுகின்றார். நாடகத்திற்கு ஏற்ப, பக்தி மார்க்கம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நிகழும். நீங்கள் கடவுளைக் கண்டடைந்து விட்டதால், அலைந்து திரிய வேண்டியதில்லை என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் பாபாவிடம் செல்கின்றோம். அதற்கு நீங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றீர்கள் என அர்த்தம் ஆகும். மனிதர்களால் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. உங்கள் மத்திலும் கூட, முழு நம்பிக்கை இல்லாதவர்களை மாயை விழுங்கிவிடுகின்றாள். மகாரத்திகளையும் முதலை முழுமையாக விழுங்கி விடுகின்றது. ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது, அவர்கள் வியப்படைகின்றார்கள். பழையவர்கள் சென்று விட்டார்கள். மாயை மிகவும் நல்ல மகாராத்திகளையும் தோற்கடித்து விடுகின்றாள் என்பதும் நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் பாபாவிற்கு எழுதுகின்றீர்கள்: பாபா, உங்கள் மாயையை எங்களிடம் அனுப்பாதீர்கள். ஓ! அவள் எனக்கு உரியவள் அல்ல. இராவணனுக்குத் தனது சொந்த இராச்சியம் உள்ளது. நான் எனது சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றேன். இது ஆரம்பம் முதல் தொடர்ந்து வருகின்றது. இராவணன் உங்கள் கொடிய எதிரியாவான். இராவணன் தங்கள் எதிரி என்பதை மக்கள் அறிந்திருப்பதாலேயே அவர்கள் ஒவ்வொரு வருடமும் அவனை எரிக்கின்றார்கள். மைசூரில் அவர்கள் தசேராவை பெருளவுக்குக்; கொண்டாடுகின்றார்கள், ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. உங்கள் பெயரே சிவசக்தி சேனையாகும். ஆனால் அவர்கள் குரங்குச் சேனை என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளார்கள். நீங்கள் நிச்சயமாக குரங்குகளைப் போன்றிருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது இராவணனை வெற்றி கொள்வதற்காக நீங்கள் சிவபாபாவிடம் இருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்;கின்றீர்கள். தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவர்கள் இதனைப் பற்றி பல கதைகள் இயற்றியுள்ளார்கள். இது அமரத்துவ கதை என்றும் அழைக்கப்படுகின்றது. பாபா உங்களுக்கு அமரத்துவ கதையையே கூறுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், அவர் இதனை மலை மேல் அமர்ந்திருந்து கூறுவதில்லை. சங்கரர் பார்வதியிடம் அமரத்துவக் கதையைக் கூறினார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் சிவனினதும் சங்கரரதும் விக்கிரகத்தை வைத்து, அவர்கள் இருவரையும் ஒருவராக்கியுள்ளார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கம். நாளுக்கு நாள் அனைவரும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். நீங்கள் சதோபிரதானிலிருந்து சதோ ஆகும் பொழுது, இரண்டு கலைகளை இழக்கின்றீர்கள். உண்மையில், திரேதாயுகம் சுவர்க்கம் என்று அழைக்கப்பட முடியாது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்க வாசிகள் ஆக்குகின்றார். பிராமண குலத்துடன், சூரிய, சந்திர வம்சங்கள் இரண்டுமே இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதைத் தந்தை அறிவார். இராமச்சந்திரர் (வில்லுடனும், அம்புடனும் காட்டப்பட்டுள்ளவர்) சத்திரியராக சித்தரிக்கப்பட்டுள்ளார். நீங்கள் அனைவரும் மாயையை வெற்றி கொள்ளும் வீரர்களே. குறைவான புள்ளிகளுடன் சித்தியடைபவர்கள் சந்திர வம்சத்துக்கு உரியவர்கள் என்று அறியப்படுகின்றார்கள். ஆகையாலேயே இராமர் அம்பு, வில்லுடனும் காட்டப்படுகின்றார்; திரேதாயுகத்தில் வன்முறை இருக்க மாட்டாது. இராம இராச்சியமும், அரசரும், பிரஜைகளும் நினைவுகூரப்பட்டுள்ளனர், ஆனால் அவர் ஒரு சத்திரியராகக் காட்டப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பம் அடைகின்றார்கள். அங்கே அந்த ஆயுதங்கள் இருப்பதில்லை. சக்திகளும் வாள்கள் போன்றவற்றுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கு எதுவும் புரிவதில்லை. தந்தையே ஞானக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆகையால், தந்தை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். ஒரு லௌகீகத் தந்தை உங்கள் மீது வைத்திருக்கும் அன்பானது, எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பைப் போன்றிருக்க மாட்டாது. அவர் குழந்தைகளாகிய உங்களை 21 பிறவிகளுக்குச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றார். அவர் அத்தகைய வசீகரமான தந்தை ஆவார். அவர் உங்கள் துன்பங்கள் அனைத்தையும் அகற்றி, சந்தோஷம் என்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்ற, அததகைய வசீகரமான தந்தையாவார். அங்கே, துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்க மாட்டாது. இது இப்பொழுது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் இதனை மறந்து விடக்கூடாது. இது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியதெல்லாம், முரளியைக் கற்பதும் அதனைப் பிறருக்கு வாசிப்பதும் மாத்திரமேயாகும். இருப்பினும், சிலர் ஓர் ஆசிரியர் வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஓர் ஆசிரியர் இல்லாவிட்டால் தங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாதுள்ளது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆ, சிறிய குழந்தைகள் கூட, சத்திய நாராயணனின் கதையை நினைவில் வைத்திருந்து அதனைப் பிறருக்குக் கூற முடியும். நீங்கள் அல்பாவை நினைவு செய்ய வேண்டும் என்றே நான் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றேன். ஏழுநாட் பாடநெறியின் பின்னர், இந்த ஞானம் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். இருப்பினும் குழந்தைகளாகிய நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்! பாபா வியப்படைகின்றார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் ஆசீர்வாதங்களையோ அல்லது கருணையையோ கேட்காதீர்கள். தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் நினைவு செய்து, உங்கள் மீது நீங்களே கருணை காட்டுங்கள். மாயையையிட்டு எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்ற முடியும். ஆகையால் நீங்கள் அவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.2. வீணான வம்பளத்தல் பெருமளவு தீங்கை ஏற்படுத்துகின்றது. ஆகையால், இயன்றவரை, மௌனமாக இருங்கள். உங்கள் வாயில் ஒரு மணியை இட்டுக் கொள்ளுங்கள். ஒருபொழுதும் வீண் கதை எதையும் கூறாதீர்கள். நீங்களே அமைதியற்றவர்கள் ஆகாமலும், பிறரையும் அமைதியற்றவராக ஆக்காமலும் இருங்கள்.
ஆசீர்வாதம்:
தந்தையின் உதவியுடன் சிலுவையை போன்றதை, முள்ளாக மாற்றுகின்றவராகி சதா கவலையற்றதொரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுவீர்களாக.உங்களுடைய பழைய கணக்கு ஒரு சிலுவையை போன்றதாகும், ஆனால் தந்தையின் உதவியுடன், அவை ஒரு முள்ளைப் போன்றதாக ஆகுகின்றது. பாதகமான சூழ்நிலைகள் நிச்சயமாக வரும். ஏனெனில் அனைத்துமே இங்கேயே தீர்க்கப்படல் வேண்டும், ஆனால் தந்தையின் உதவியானது அவற்றை ஒரு முள்ளாக மாற்றுகின்றது. பரம தந்தை உங்களுடன் இருப்பதால், பெரிய விடயங்கள் சிறியதாக மாறுகின்றது. இந்த நம்பிக்கையை கொண்டிருந்து, சதா கவலையற்றவராக இருங்கள். ஒரு நம்பிக்கை பொறுப்பாளராக 'என்னுடையது' என்பதை 'உங்களுடையது' என மாற்றி, இலேசானவர் ஆகும் போது உங்கள் சுமைகள் அனைத்தும் ஒரு விநாடியில் முடிவடைந்து விடும்.
சுலோகம்:
நல்லாசிகளின் இருப்பைக் கொண்டிருந்து எந்தவொரு எதிரானதையும் நேரானதாக மாற்றுங்கள்