22.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் கைகளை இதயத்தில் வைத்து உங்களையே கேளுங்கள்: பாபா இப்பொழுது எனக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்கள் அனைத்தையும் முன்னர் நான் அறிந்திருந்தேனா? நீங்கள் இப்பொழுது செவிமடுப்பவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருங்கள்.
கேள்வி:
உங்களுடைய பிராமண தர்மத்தின் மகத்தான சக்தி என்ன? எப்படி?பதில்:
முழு உலகையும் நீங்கள் பின்பற்றுகின்ற ஸ்ரீமத்தின் அடிப்படையில் சற்கதி அடையச் செய்வதே உங்கள் பிராமண தர்மமாகும். பிராமணர்களே முழு உலகையும் அமைதி நிறைந்ததாக ஆக்குபவர்கள். பிராமண குல அலங்காரங்களாகிய நீங்களே தேவர்களிலும் பார்க்க அதிமேன்மையானவர்கள். நீங்கள் இந்தச் சக்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். பிராமணர்களான நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள்; நீங்கள் மிகப்பெரிய பரிசைப் பெறுகின்றீர்கள். பிரம்மாந்தத்தின் அதிபதிகளாக மாத்திரம் அன்றி நீங்கள் உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான நீண்டகாலம் பிரிந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தை நிச்சயமாக ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே வருகின்றார் என ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ‘சக்கரம்’ என்ற பெயர் பயன்படுத்தப்பட வேண்டும். இந்நாடகத்தின் கால எல்லை, அதாவது இந்த உலகச் சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டது. தந்தை மாத்திரமே இங்கேயிருந்து இந்த விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். ஒரு மனிதனுடைய வாயிலிருந்து இதை நீங்கள் என்றுமே கேட்க மாட்டீர்கள். ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரினதும் ஆன்மீகத் தந்தை அந்த ஒரேயொருவரே என இங்கே அமர்ந்திருக்கின்ற ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எந்த ஒரு மனிதருமே அறியாத தந்தை இங்கே இருந்து குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். கடவுள் அல்லது ஈஸ்வரர் யார் என எவருமே அறியார். தந்தையாகிய கடவுள் என அவரை அழைப்பதால் அவர் மீது அதிகளவு அன்பு இருக்க வேண்டும். அவர் எல்லையற்ற தந்தை, எனவே நீங்கள் நிச்சயமாக எல்லையற்ற ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தையான, சுவர்க்கக் கடவுள் எனும் மிகச்சிறந்த ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய உலகம் சுவர்க்கம் எனவும் பழைய உலகம் நரகம் எனவும் அழைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் எவருமே சுவர்க்கத்தை அறியார். சந்நியாசிகள் அதை நம்புவதில்லை. அவர்கள் ஒருபொழுதும் தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் எனக் கூறுவதில்லை. தந்தையான, சுவர்க்கக் கடவுள் என்ற வார்த்தைகள் மிக இனிமையானவை. அத்துடன் சுவர்க்கமும் பிரபல்யமானது. சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் சக்கரமும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியும் குழந்தைகளாகிய உங்கள் புத்திகளிலே சுழல்கின்றது. அதாவது அது சேவை செய்பவர்களின் புத்திகளில் சுழல்கின்றது. அனைவரும் ஒரேயளவில் சேவையாளர்கள் ஆகுவதில்லை. நீங்கள் மீண்டும் ஒரு தடவை உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஆன்மீகக் குழந்தைகளாகிய நாங்கள் தந்தையின் அதிமேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். இது அதிமேலான தந்தையின் ஸ்ரீமத் ஆகும். ஸ்ரீமத் பகவத்கீதை நினைவுகூரப்படுகின்றது; இதுவே முதற்தரமான சமயநூலாகும். தந்தையின் பெயரை செவிமடுக்கின்ற பொழுது ஒருவர் ஆஸ்தியையும் உடனடியாக நினைவுசெய்கிறார். தந்தையாகிய கடவுளிடமிருந்து என்ன பெறப்படுகின்றது என உலகிலுள்ள எவருமே அறியார். ‘புராதன யோகம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் யார் இந்தப் புராதன யோகத்தைக் கற்பித்தார் என எவருமே புரிந்து கொள்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் அது ஸ்ரீகிருஷ்ணர் எனக் கூறுகின்றார்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார், அதன்மூலம் நீங்கள் அனைவரும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அடைந்தீர்கள் என இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பாரதத்திலேயே சிவபாபா வந்தார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவரது பிறந்ததினமும் பாரதத்திலேயே கொண்டாடப்படுகின்றது. ஆனால் கீதையில் அவரது பெயர் மறைந்து விட்டதால் அவரது புகழும் மறைந்து விட்டது. முழு உலகினருமே அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகின்ற அந்தத் தந்தையை அவர்கள் மறந்து விட்டார்கள். இது ஒரு தவறு உள்ள நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. அவர்கள் தந்தையை அறியாததே மிகப்பெரிய தவறாகும். சிலநேரங்களில் அவர் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றோ அல்லது அவர் மீன், முதலை போன்றவற்றில் அவதாரம் செய்துள்ளார் என்றோ அல்லது கற்களிலும் கூழாங்கற்களிலும் உள்ளார் என்றோ அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தவறுக்கு மேல் தவறு செய்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்குகின்றார்கள். அவர்களின் கலைகள் தொடர்ந்தும் குறைகின்றன. அவர்கள் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப சுவர்க்கத்தைப் படைப்பவரும் பாரதத்தைச் சுவர்க்கத்தின் அதிபதி ஆக்கியவருமான தந்தை, கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கின்றார் எனக் கூறப்பட்டுள்ளார். நீங்கள் எவ்வாறு தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்குகின்றீர்கள் எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். எவருமே எதையுமே அறியார்; அவர்கள் தொடர்ந்தும் நாடகம் என்றால் என்ன? எனக் கேட்கின்றார்கள். இந்த உலகம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? “புதிய உலகம் எப்பொழுது இருந்தது?” என்று நீங்கள் அவர்களிடம் வினவும்பொழுது “நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர்” எனப் பதிலளிக்கின்றனர். பழைய உலகம் இன்னமும் பல வருடங்கள் கடந்து செல்ல இருக்கின்றது என அவர்கள் நினைக்கின்றார்கள். இது அறியாமை இருள் என அழைக்கப்படுகின்றது. நினைவு கூரப்படுகின்றது: சற்குரு ஞானத்தைலத்தைக் கொடுத்த பொழுது அறியாமை இருள் அகற்றப்பட்டது. படைப்பவரான தந்தை நிச்சயமாகச் சுவர்க்கத்தை உருவாக்குகின்றார் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையே வந்து நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார். படைப்பவரான தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் இறுதியிலேயே வருகின்றார். இதற்கு நிச்சயமாக நேரம் எடுக்கின்றது. நினைவு யாத்திரை போல் ஞானத்திற்கு அந்தளவு நேரம் எடுக்க மாட்டாது எனவும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 84 பிறவிகளின் கணக்கு ஒரு கதை போன்றது: 5000 வருடங்களுக்கு முன்னர் அது யாருடைய இராச்சியமாக இருந்தது? அந்த இராச்சியம் எங்கே சென்றது? குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது இந்த முழு ஞானமும் உள்ளது. நீங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். அவர் அஜாமில் போன்ற பாவிகளையும் கல்லுப்புத்தி உடையவர்களையும் கூன்முதுகு உடையவர்களையும் சுதேசிகளையும் அதிமேன்மையானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் எவ்வாறாக இருந்ததில் இருந்து என்னவாக ஆகியுள்ளீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தை வந்து பழைய உலகம் இப்பொழுது என்ன நிலையை அடைந்துள்ளது எனப் பார்க்குமாறு கூறுகின்றார். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை மனிதர்கள் அறியார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் கைகளை இதயத்தில் வைத்து முன்னர் இதில் எதையேனும் நீங்கள் அறிந்திருந்தீர்களா? என உங்களையே கேளுங்கள்! எதுவுமே இல்லை! பாபா மீண்டும் ஒருமுறை எங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுப்பதற்கு வந்துள்ளார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். உலக இராச்சியம் என்றால் என்ன என்பது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. உலகம் என்றால் முழு உலகமும் என்று அர்த்தமாகும். அரைக் கல்பத்திற்கு எவருமே எங்களிடம் இருந்து அபகரிக்க முடியாத அவ்வாறான இராச்சியத்தைத் தந்தை எங்களுக்கு கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் தந்தையிடம் இருந்து பலமுறை இராச்சியத்தைக் கோரியுள்ளீர்கள். தந்தையே சத்தியமானவர். அவரே உண்மையான ஆசிரியர். அவரே சற்குருவும் ஆவார். நீங்கள் முன்னர் இதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் அவரது குழந்தைகள். எனவே உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். இந்நாட்களில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய குருமார்களின் படங்களை உருவாக்கிக் கழுத்தில் அணிகின்றார்கள் அல்லது வீட்டில் அவற்றில் ஒன்றை வைத்திருக்கின்றார்கள். இங்கே அற்புதம் என்னவென்றால் தந்தை, ஆசிரியர், சற்குரு அனைவரும் ஒருவராக இருப்பதாகும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை என்னுடன் திரும்பவும் வீட்டுக்குத் அழைத்துச் செல்வேன். “நீங்கள் என்ன கற்கின்றீர்கள்?” என உங்களிடம் கேட்கப்படும் பொழுது “நாங்கள் புதிய உலக இராச்சியத்தைக் கோருவதற்காக இராஜயோகம் கற்கின்றோம்” என அவர்களிடம் கூறுங்கள். சட்டத்தரணிகளின் யோகம் இருப்பதைப் போன்று இது இராஜயோகமாகும். அவர்களுடைய புத்தியின் யோகம் நிச்சயமாக ஒரு சட்டத்தரணியிடம் செல்லும்; அவர்கள் நிச்சயமாகத் தங்களுடைய ஆசிரியரை நினைவு செய்வார்கள். நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை அடைவதற்காகக் கற்கின்றீர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். யார் எங்களுக்குக் கற்பிக்கின்றார்? தந்தையாகிய கடவுள் சிவன். அவருக்கு ஒரு பெயர் மாத்திரமே இருக்கின்றது, அதுவே தொடர்கின்றது. அந்தப் பெயர் இரதத்தினுடைய பெயரல்ல, என்னுடைய பெயர் சிவன். “தந்தை சிவன்” என்றும் “இரதமான பிரம்மா” என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். இது எவ்வளவு அற்புதமானது என இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். சரீரம் ஒன்றே. இவர் ஏன் “பாக்கிய இரதம்” என அழைக்கப்படுகின்றார்? ஏனெனில் சிவபாபா இவரினுள் பிரவேசித்ததால் ஆகும். நிச்சயமாக இரண்டு ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள்; வேறு எவரும் இது பற்றிச் சிந்தித்தும் இருக்க மாட்டார்கள். அவர்கள் பாக்கிய இரதம் (பகீரதன்) கங்கையைக் கொண்டு வந்ததாக விளங்கப்படுத்துகின்றார்கள். தண்ணீரா கொண்டு வரப்பட்டது? யார் அதைக் கொண்டு வருகின்றார் அவர் என்ன கொண்டு வருகின்றார் (ஞானம்) என நீங்கள் இப்பொழுது நடைமுறையில் காண முடியும். யார் இந்தச் சரீரத்தில் பிரவேசித்துள்ளார்? தந்தையே அதில் பிரவேசித்துள்ளார். மனிதரில் இருந்து தண்ணீர் பிரவேசிப்பது மிகவும் அரிதாகும். ஒருவருடைய சடாமுடியிலிருந்து தண்ணீர் வெளியாகுவதும் அரிதே. மனிதர்கள் இவ்விடயங்கள் பற்றி ஒருபொழுதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. “தர்மமே சக்தி” என்று கூறப்படுகின்றது. தர்மத்திலே சக்தி இருக்கின்றது. எந்தத் தர்மம் அதிகளவு சக்தியைக் கொண்டது என கூறுங்கள். (பிராமண தர்மம்). ஆம் அது சரி. என்ன சக்தி உள்ளதோ பிராமண தர்மமே அதைக் கொண்டுள்ளது. வேறெந்தச் சமயங்களிலும் சக்தியில்லை. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள். பிராமணர்களாகிய நீங்கள் தந்தையிடம் இருந்து சக்தியைப் பெற்று அதன் மூலம் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அதிகளவு சக்தியைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் பிராமண தர்மத்திற்குச் சொந்தமானவர்கள் எனக் கூறுகின்றீர்கள். இது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. பல்வகை ரூபம் உருவாக்கப்பட்டுள்ள பொழுதிலும் அது சம்பூரணமானதல்ல. படைப்பரையோ அல்லது அவரது முதற் படைப்பையோ எவரும் அறியாததே பிரதான விடயமாகும். தந்தையே படைப்பவர் பிராமணர்களே உச்சிக்குடுமிகள். இதிலே சக்தி இருக்கின்றது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகள் நிச்சயமாக வரிசைக்கிரமமானவர்கள். நீங்களே இந்த உலகின் அதிமேன்மையான பிராமண குலத்தின் அலங்காரங்கள். நீங்கள் தேவர்களிலும் பார்க்க அதிமேன்மையானவர்கள். நீங்கள் இப்பொழுது சக்தியைப் பெறுகின்றீர்கள். பிராமண தர்மத்திலேயே மகத்தான சக்தியுள்ளது. பிராமணர்கள் என்ன செய்கின்றார்கள்? அவர்கள் முழு உலகையும் அமைதி நிறைந்ததாக ஆக்குகின்றார்கள். நீங்கள் பின்பற்றுகின்ற ஸ்ரீமத்தின் அடிப்படையில் அனைவரையும் விடுதலை அடையச் செய்வதே உங்கள் தர்மமாகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நான் உங்களை என்னிலும் பார்க்க மேன்மையானவர்கள் ஆக்குகின்றேன். நீங்கள் பிரம்மாந்தத்தின் அதிபதிகளாகவும் உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் முழு உலகையும் ஆட்சி செய்வீர்கள். ‘பாரதம் எங்கள் தேசம்’ என அவர்கள் பாடுகின்றார்கள். சிலநேரங்களில் அவர்கள் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுகின்றார்கள். மற்றைய நேரங்களில் “பாரதம் அடைந்துள்ள நிலையைப் பாருங்கள்” எனக் கூறுகின்றார்கள். பாரதம் எப்பொழுது அவ்வாறு அதிமேன்மையாக இருந்தது என அவர்கள் அறியார்கள். சுவர்க்கம், நரகம் இரண்டும் ஒன்றாக இங்கேயே உள்ளன என மனிதர்கள் நம்புகின்றார்கள். செல்வத்தையும் மோட்டார் வாகனங்கள் போன்றவற்றையும் வைத்திருப்பவர்கள் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றார்கள். புதிய உலகமே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அனைத்துமே இங்கேயே கற்கப்பட வேண்டும். விஞ்ஞானத்தின் ஆற்றல்கள் பின்னர் அங்கே பயன்படும். விஞ்ஞானம் அங்கே சந்தோஷத்தைக் கொடுக்கும். இங்கே இருக்கின்ற அனைத்தின் மூலமும் தற்காலிகச் சந்தோஷமே இருக்கின்றது. அங்கே இவை குழந்தைகளாகிய உங்களுக்கு நிரந்தரச் சந்தோஷமாகி விடும். அனைத்தும் இங்கேயே கற்கப்பட வேண்டும். அப்பொழுது அந்தச் சம்ஸ்காரங்கள் அங்கே எடுத்துச் செல்லப்பட முடியும். புதிய ஆத்மாக்கள் அங்கே சென்று அதைக் கற்க மாட்டார்கள். இங்கேயுள்ள குழந்தைகள் விஞ்ஞானத்தைக் கற்று அங்கே செல்வார்கள். அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ஆகுவார்கள். அவர்கள் அங்கே பயன்படக்கூடிய அனைத்துச் சம்ஸ்காரங்களையும் எடுத்துச் செல்வார்கள். இப்பொழுது தற்காலிகச் சந்தோஷமே இருக்கின்றது. இந்தக் குண்டுகள் போன்றவை அனைத்தையும் அழித்துவிடும். மரணம் நிகழாமல் எவ்வாறு அமைதியான ஆட்சி நிலவமுடியும்? இங்கே அமைதியற்ற இராச்சியமே இருக்கின்றது. நீங்கள் முதலில் வீட்டுக்குச் சென்று பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை சந்தோஷ தாமத்திற்குள் பிரவேசிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: எனக்கு வயதான இரதமே தேவை. பக்தி மார்க்கத்தில் நான் அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்கின்றேன். எவ்வாறு பக்தர்கள் தீவிர பக்தி செய்கின்றார்கள் என்று திரான்ஸ் செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்டது. அவர்கள் தேவர்களை (சிலைகள்) அலங்கரித்து வணங்கிய பின்னர் கடலில் மூழ்கடிக்கின்றார்கள். அதிகளவு செலவு இருக்கின்றது. அவர்களிடம் வினவுங்கள்: எப்பொழுது இது ஆரம்பமாகியது? அது தொன்று தொட்ட காலத்திலிருந்தே நடைபெறுவதாக அவர்கள் பதில் அளிக்கின்றார்கள். அவர்கள் அதிகளவில் அலைந்து திரிகின்றார்கள். அவை அனைத்தும் நாடகத்தில் உள்ளது. உங்களை மிகவும் இனிமையானவர்கள் ஆக்குவதற்கே தான் வந்துள்ளதாகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். அந்தத் தேவர்கள் மிகவும் இனிமையானவர்கள். இப்பொழுது மனிதர்கள் மிகவும் கசப்பானவர்கள். முன்னர் தந்தைக்குப் பெருமளவில் உதவி செய்தவர்கள் தொடர்ந்தும் வழிபடப்படுகின்றார்கள். நீங்கள் வழிபடப்படுகின்றீர்கள். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தையும் கோருகின்றீர்கள். தந்தையே கூறுகின்றார்: நான் உங்களை என்னிலும் பார்க்க மேன்மையானவர்கள் ஆக்குகின்றேன். இவை அதிமேலான தந்தையின் மேன்மையான வழிகாட்டல்கள். கீதையிலும் கூட ஸ்ரீமத் மிகவும் பிரபல்யமானது. இந்நேரத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் தனது ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவினுடைய இரதத்திலேயே தந்தை பிரவேசித்துள்ளார். இது அவ்வாறான அற்புதமான விடயம்! இவை ஒருபொழுதும் எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. இதைப் புரிந்து கொண்டவர்களுக்கு இதை விளங்கப்படுத்துவதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். பிராமணர்கள் பிரம்மாவின் அதிமேன்மையான வாய்வழித் தோன்றல்கள் என பாபா எழுதுகின்றார். நீங்கள் மேன்மையான சேவையைச் செய்தால் இந்தப் பரிசைப் பெறுகிறீர்கள். நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆகினால் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக நீங்கள் அனைவரும் பரிசைப் பெறுகிறீர்கள். மனிதர்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்கக்கூடிய வகையில் அதிகளவு சக்தியை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஆன்மீக சேனையினர். இந்தப் பட்ஜை நீங்கள் அணியா விட்டால் நீங்கள் ஆன்மீக இராணுவத்தினர் என மக்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? இராணுவத்தில் உள்ளவர்கள் எப்பொழுதும் ஒரு பட்ஜ் அணிகின்றார்கள். சிவபாபாவே புதிய உலகைப் படைப்பவர். அங்கே தேவர்களின் இராச்சியம் இருந்தது; அது இப்பொழுது இல்லை. ஆகையினால் தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! உங்கள் சரீரத்தையும் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நீங்கள் பின்னர் ஸ்ரீகிருஷ்ணருடைய வம்சத்துக்குள் செல்வீர்கள். இதில் வெட்கப்படுவதற்கான கேள்வியே இல்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்கள். தந்தை இவரைப் (பிரம்மா) பற்றி இவர் நாராயணனைப் பூஜித்து வந்ததாகவும் இவர் நாராயணனின் படத்தைத் தன்னுடன் வைத்திருந்ததாகவும் கூறுகின்றார். நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் இவர் அந்தப் படத்தைப் பார்ப்பார். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் ஞானம் உள்ளதால் நீங்கள் நிச்சயமாக பட்ஜ் அணிய வேண்டும். நீங்களே சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றுபவர்கள். நீங்களே இராஐயோகம் கற்பிப்பவர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றும் சேவையைச் செய்கின்றீர்கள். உங்களைச் சோதியுங்கள்: என்னில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா? குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதாவிடம் வருகின்றீர்கள். தந்தை (பாப்) சிவபாபர் தாதா அவரது இரதம் ஆவார். தந்தை நிச்சயமாக இரதத்தின் மூலமே உங்களைச் சந்திப்பார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் புத்துணர்ச்சி பெறவே வருகின்றீர்கள். நீங்கள் அவரின் முன்னே அமரும்பொழுது அவரை நினைவு செய்வது இலகுவாகும். பாபா உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளார். தந்தை இப்பொழுது உங்கள் முன்னால் அமர்ந்திருப்பதால் அவரின் நினைவு அதிகளவில் இருக்க வேண்டும். மதுபனுக்கு வெளியேயும் நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவு யாத்திரையை அதிகரித்துக் கொள்ள முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களைச் சோதித்துப் பாருங்கள்: என்னிடம் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா? தேவர்கள் மிக இனிமையானவர்கள். நான் அவ்வாறு இனிமையானவர் ஆகிவிட்டேனா?2. உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு தந்தையின் அதிமேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். சேவையாளர் ஆகுவதற்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தையும் சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் ஞானத்தையும் உங்கள் புத்தியானது சுழற்றுமாறு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறைவனின் உதவியாளராக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் இலகுவான நினைவை அனுபவம் செய்யும் இலகு யோகி ஆகுவீர்களாக.இறைவனின் உதவியாளராக இருப்பது என்றால் தந்தையான இறைவன் உங்களுக்கு வழங்கிய சேவையில் சதா மும்முரமாக ஈடுபட்டு இருப்பதாகும். இறைவன் அவரே நீங்கள் செய்யும் இந்த சேவையை உங்களுக்கு வழங்கி இருக்கிறார் என்ற போதையை சதா கொண்டிருங்கள். எந்தவொரு பணியைச் செய்யும்போதும் அந்தப் பணியை உங்களுக்கு வழங்கியவரை உங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. எனவே செயல்களால் சேவை செய்யும்போது தந்தையின் வழிகாட்டல்களின் கீழ் அந்தச் செயலைச் செய்வதை உணர்ந்தவராக இருங்கள். அப்போது நினைவு இலகுவாக இருப்பதையும் நீங்கள் ஓர் இலகு யோகியாக இருப்பதையும் அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
உங்களின் இறை மாணவ வாழ்க்கையை சதா உணர்ந்தவராக இருங்கள். மாயையால் உங்களுக்கு நெருக்கமாக வரமுடியாது.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
நீங்கள் எந்தளவிற்கு எரிமலை ரூபமாகவும் ஸ்தாபனைக்குக் கருவியாகவும் ஆகுகிறீர்களோ அந்தளவிற்கு விநாசத்தீ வெளிப்படுத்தப்படும். நினைவின் ஒன்றுதிரட்டிய எரிமலை ரூபம் உலக விநாசப் பணியைப் பூர்த்தி செய்யும். இதற்கு விசேடமான யோகா நிகழ்ச்சிகள் சகல நிலையங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஏனென்றால் இவை விநாசத் தீச்சுவாலையைக் கொழுந்து விட்டு எரியச் செய்யும். விநாசத்தின் தீச்சுவாலைகள் யோக அக்கினியில் இருந்தே தோன்றும். அந்தத் தீயானது சுவாலைகளால் கொழுந்து விட்டு எரியும்