22.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற ஞானமானது மாயாஜால சக்தியுடன் எந்தவிதத் தொடர்பும் அற்றது. கல்வியில் ஒரு மாய மந்திரம் பலனளிக்காது.

பாடல்:
தேவர்கள் புத்திசாலிகளாகவும், மனிதர்கள் அவ்வாறில்லாதிருப்பதற்குமான காரணம் யாது?

பதில்:
காரணம், தேவர்கள் அனைத்து நற்குணங்களாலும் நிரம்பியவர்கள், ஆனால் மனிதர்களோ எந்தவித நற்குணங்களும் அற்றவர்கள். தேவர்கள் புத்திசாலிகளாக இருப்பதனாலேயே மக்கள் அவர்களை வழிபடுகின்றார்கள். அவர்களுடைய மின்கலங்கள் (பற்றரிகள்) சக்தியூட்டப்பட்டுள்ளன. இதனாலேயே அவர்கள் ஒரு பவுண்ட் பெறுமதி மிக்கவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய மின்கலத்தில் சக்தி இறங்கும் பொழுது அவர்கள் ஒரு சதம் பெறுமதியையே உடையவர்கள் ஆகின்றார்கள். எனவே அவர்கள் விவேகமற்றவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
இது பாடசாலை எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இது ஒரு கல்வியாகும். நீங்கள் அந்த அந்தஸ்தை (தேவர்) இந்தக் கல்வியின் மூலம் பெறுகின்றீர்கள். இது ஒரு பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் எனக் கருதப்பட வேண்டும். மக்கள் தொலைவில் இருந்து இங்கு கற்பதற்காக வருகின்றார்கள். அவர்கள் இங்கு எதனைக் கற்பதற்காக வருகின்றார்கள்? அவர்கள் அந்த இலக்கையும் குறிக்கோளையும் தமது புத்தியில் கொண்டிருக்கின்றார்கள். நாம் இங்கு கற்க வருகின்றோம். எமக்குக் கற்பிப்பிக்கின்ற ஒருவர் ஆசிரியர் என அழைக்கப்படுகின்றார். கீதை கடவுளின் வாசகமாகும். வேறெந்த விடயங்களும் இல்லை. கீதை அதைக் கற்பிப்பவரின் புத்தகமாகும். ஆனால் அவர் உண்மையில் ஒரு புத்தகத்தை வாசிப்பதில்லை. அவர் தனது கரத்தில் கீதையை வைத்திருப்பதில்லை. இவை கடவுளின் வாசகங்களாகும். மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. கடவுள் அதியுயர்ந்தவரான ஒரேயொருவர் ஆவார். அசரீரி உலகம், சூட்சும வதனம், பௌதீக உலகம் அனைத்துமே முழு உலகமாகும். நாடகமானது அசரீரி உலகிலோ அல்லது சூட்சும வதனத்திலோ நடிக்கப்படவில்லை. இது இங்கேயே நடிக்கப்படுகின்றது. 84 பிறவிச் சக்கரமும் இங்கேயே உள்ளது. இது 84 பிறவிச் சக்கரத்திற்குரிய நாடகம் என அழைக்கப்படுகின்றது. இது முன்பே நிச்சயிக்கப்பட்டதொரு நாடகமாகும். இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் அதியுயர்ந்த கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். வேறெதுவும் கிடையாது. ஒரேயொருவரே அனைத்து சக்திகளையும் கொண்டவர், உலக சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். அவரே 'சக்திவான்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளங்கப்படுத்துகின்றார். மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் தமோபிரதானமானவர்கள். இது கலியுகம் என அழைக்கப்படுகின்றது. இது சிலருக்குக் கலியுகமாகவும், சிலருக்கு சத்தியயுகமாகவும் ஏனையவர்களுக்கு திரேதா யுகமாகவும் இருப்பதில்லை. இல்லை. இது இப்போது நரகமாகையால், மக்கள் பெருமளவு செல்வத்தையும் சொத்துக்களையும் கொண்டிருந்தாலும் இதை சுவர்க்கம் எனக் கூறமுடியாது. அது சாத்தியமானதல்ல. இந்த நாடகமானது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. சத்தியயுகம் இப்போது கடந்துவிட்டது. அது இந்த வேளையில் இருக்க முடியாது. இந்த விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து, இந்த விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. பாரத மக்கள் அந்த வேளையில் சத்தியயுகத்திற்கு உரியவர்கள் என அழைக்கப்பட்டார்கள். இப்போது, அவர்கள் நிச்சயமாகக் கலியுகத்திற்கு உரியவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் சத்தியயுகத்திற்கு உரியவர்களாக இருந்தபோது, அது சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. நரகமும் சுவர்க்கம் என்று அழைக்கப்படும் என்பதல்ல. மக்கள் தமது சொந்தக் கட்டளைகளைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் செல்வத்தின் சந்தோஷத்தைக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தாம் சுவர்க்கத்தில் இருப்பதாகக் கருதிக் கொள்கின்றார்கள். 'நான் பெருமளவு செல்வத்தைக் கொண்டிருக்கின்றேன், எனவே நான் சுவர்க்கத்தில் இருக்கின்றேன்’. எவ்வாறாயினும், அது சாத்தியமில்லை என நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இது நரகமாகும். சிலர் 1 அல்லது 2 மில்லியனைக் கொண்டிருந்தாலும், இந்த உலகம் நோயுற்றே இருக்கின்றது. சத்தியயுகம் நோய்களில் இருந்து விடுதலையான உலகம் என அழைக்கப்படுகின்றது. இது அதே உலகமாகும். சத்தியயுகத்தில், இது யோகி உலகம் என அழைக்கப்படுகின்றது. ஆனால் கலியுகத்தில், இது போகி உலகம் (புலனங்கங்களின் சந்தோஷங்களில் ஈடுபடுபவர்) என அழைக்கப்படுகின்றது. அங்கு அவர்கள் யோகிகள், ஏனெனில் அங்கு எந்தவித விகாரங்களும் கிடையாது. எனவே, இது ஒரு பாடசாலையாகும். இங்கு சக்தியைக் கொண்டிருப்பதற்கான கேள்விக்கே இடமில்லை. ஆசிரியர் ஒருவர் தனது சக்தியைக் காட்டுவாரா? நீங்கள் இன்னாராக ஆகுவதற்கான இலக்கையும் குறிக்கோளையும் கொண்டிருக்கின்றீர்கள். இந்தக் கல்வியின் மூலம், நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். இது மந்திரவித்தை அல்லது மாயாஜால சக்திக்குரிய விடயமல்ல. இது ஒரு பாடசாலையாகும். ஒரு பாடசாலையில் மாயாஜால சக்திக்கான தேவை உள்ளதா? அவர்கள் கற்று, வைத்தியர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் ஆகுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் மனிதர்களே. ஆனால் அவர்கள் தூய்மையானவர்கள். இதனாலேயே அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும். இது தூய்மையற்ற பழைய உலகமாகும். உலகம் பழையதாகுவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் எடுப்பதாக மக்கள் நினைக்கின்றார்கள். கலியுகத்தின் பின்னரே சத்தியயுகம் வரும். நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். எவருக்குமே இந்த சங்கமயுகத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் சத்தியயுகத்தை நூறாயிரக்கணக்கான வருடங்கள் கொண்டதாகக் காட்டியுள்ளார்கள். தந்தை வந்து இந்த விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களின் தந்தை பாபா என அழைக்கப்படுகின்றார். அவருக்கு வேறெந்தப் பெயரும் கிடையாது. பாபாவின் பெயர் சிவனாகும். மக்களும் சிவாலயத்திற்குச் செல்கின்றார்கள். பரமாத்மா சிவன் மட்டுமே அசரீரியானவர் என அழைக்கப்படுகின்றார். அவருக்கு மனித சரீரம் கிடையாது. ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு ஒரு பாகத்தை நடிக்க வருகின்றீர்கள், அப்பொழுதே நீங்கள் மனித சரீரத்தைப் பெறுகின்றீர்கள். அவர் சிவன், நீங்களோ சாலிகிராம்கள். மக்கள் சிவனையும் சாலிகிராம்களையும் வழிபடுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் உயிர்வாழும் ரூபத்தில் வாழ்ந்து சென்றுவிட்டனர். அவர்கள் செல்வதற்கு முன்பு எதையாவது செய்திருக்க வேண்டும். இதனாலேயே அவர்கள் பிரபல்யமானவர்களாகவும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். எவருக்கும் அவர்களுடைய முன்னைய பிறப்பைப் பற்றித் தெரியாது. அவர்கள் இந்தப் பிறப்பிலேயே புகழப்படுகின்றார்கள். மக்கள் தேவர்களைப் பூஜிக்கின்றார்கள். இந்தப் பிறப்பில், பலர் தலைவர்களும் ஆகியுள்ளார்கள். வாழந்து, மறைந்த பல மிக நல்ல சாதுக்களையும் புனிதர்களையும் பிரபல்யமானவர்கள் ஆக்கும்பொருட்டு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு எவருடைய பெயர் மகத்துவமானவராக நினைவுகூரப்படும்? இங்கு அனைவரிலும்; மகத்துவமானவர் யார்? கடவுள் மட்டுமே அதியுயர்ந்தவர் ஆவார். அவரே அசரீரியானவர், அவருடைய புகழ் முற்றிலும் வேறுபட்டது. தேவர்களின் புகழானது மனிதர்களின் புகழிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மனிதர்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. தேவர்கள் அனைத்துப் பண்புகளையும் கொண்டவர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் வாழ்ந்து, மறைந்து விட்டார்கள். அவர்கள் உலகின் தூய அதிபதிகளாக இருந்தார்கள். தூயவர்களே பூஜிக்கத்தக்கவர்கள் ஆகையால் அவர்கள் பூஜிக்கப்படுகின்றார்கள். தூய்மையற்றவர்களைப் பூஜிக்கத்தக்கவர்கள் எனக் கூறமுடியாது. தூய்மையற்றவர்கள் எப்போதும் தூய்மையானவர்களைப் பூஜிக்கின்றார்கள். குமாரி ஒருவர் தூய்மையானவராக இருக்கும்போது, அவள் பூஜிக்கப்படுகின்றாள். ஆனால் அவள் தூய்மையற்றவள் ஆகும்போது, அனைவருடைய காலடியிலும் தலைவணங்க வேண்டியுள்ளது. இந்த வேளையில், அனைவரும் தூய்மையற்றவர்கள், ஆனால் சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையானவர்களாகவே இருந்தார்கள். அது தூய உலகமாகும். கலியுகமே தூய்மையற்ற உலகமாகும். இதனாலேயே அவர்கள் தூய்மையாக்குபவரான தந்தையை நோக்கிக் கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் தூய்மையாக இருக்கும்போது அவர்கள் அவரை நோக்கிக் கூவி அழைப்பதில்லை. தந்தையே கூறுகின்றார்: எவரும் என்னைச் சந்தோஷ வேளையில் நினைவு செய்வதில்லை. இது பாரதத்தை மட்டுமே குறிக்கின்றது. தந்தை பாரதத்தில் மட்டுமே வருகின்றார். பாரதம் இவ்வேளையில் தூய்மையற்றதாகி விட்டது. பாரதமே தூய்மையானதாக இருந்தது. நீங்கள் தூய்மையான தேவர்களைப் பார்க்க விரும்பினால், நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று, அங்கு அவர்களைக் காணலாம். தேவர்கள் அனைவரும் தூய்மையானவர்கள். அவர்களில் பிரதானமானவர்கள் ஆலயங்களில் காட்டப்படுகின்றார்கள். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் அனைவருமே தூய்மையானவர்களாக இருந்தார்கள். அரசன், அரசி எவ்வாறானவர்களோ, பிரஜைகளும் அவ்வாறானவர்களே. இந்த வேளையில், அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆவார்கள். அனைவரும், ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனத் தொடர்ந்து கூவி அழைக்கின்றார்கள். சந்நியாசிகள் ஒருபோதும் கிருஷ்ணரைக் கடவுள் என்றோ அல்லது பிரம்மம் என்றோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கடவுளை அசரீரியானவர் என நம்புகின்றார்கள். அவருடைய உருவமானது அசரீரியாக வழிபடப்படுகின்றது. அவருடைய மிகச்சரியான பெயர் சிவனாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு வந்து, ஒரு சரீரத்தை எடுக்கும்போது, உங்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்படுகின்றது. ஆத்மா அழிவற்றவர், ஆனால் சரீரமோ அழியக்கூடியது. ஆத்மாக்கள் ஒரு சரீரத்தை விடுத்து, இன்னொன்றை எடுக்கின்றனர். 84 பிறவிகளே இருக்கமுடியும். 8.4 மில்லியன் பிறவிகள் இருக்கமுடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த உலகமானது சத்தியயுகத்தில் புதியதாகவும் தர்மமானதாகவும் இருந்தது. அதே உலகம் பின்பு அதர்மமானதாகின்றது. அது அனைவருமே சத்தியத்தைப் பேசுகின்ற சத்தியபூமியாகும். பாரதம் சத்தியபூமி என அழைக்கப்படுகின்றது. பொய்மையான பூமி பின்பு சத்தியபூமி ஆகின்றது. உண்மையான தந்தை மட்டுமே வந்து, சத்தியபூமியை உருவாக்குகின்றார். சத்தியமானவரான அவரே உண்மையான சக்கரவர்த்தி என அழைக்கப்படுகின்றார். இது பொய்மையான பூமியாகும். மக்கள் கூறுகின்ற அனைத்தும் பொய்மையானவையே. தேவர்கள் விவேகமான புத்தியைக் கொண்டிருப்பதனாலேயே மனிதர்கள் அவர்களை வழிபடுகின்றார்கள். விவேகமானவர்களும் புத்தியற்றவர்களும் எனக் கூறப்படுகின்றது. யார் உங்களைப் புத்திசாலிகள் ஆக்கியதென்றும் பின்னர் யார் உங்களைப் புத்தியற்றவர்கள் ஆக்கியது என்றும் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தையே உங்களைப் புத்திசாலிகளாகவும் அனைத்துத் தெய்வீகக் குணங்கள் நிரம்பியவர்களாகவும் ஆக்குகின்றார். அவரே வந்து, உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். எவ்வாறு ஆத்மாக்களான நீங்கள் ஒரு சரீரத்தை எடுத்து, உங்களுடைய பாகத்தை நடிக்கின்றீர்களோ, அவ்வாறே நானும் இவரில் ஒரு முறை பிரவேசிக்கின்றேன். அவரே ஒரேயொருவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் மட்டுமே சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். வேறெந்த மனிதரையும் சர்வசக்திவான் என அழைக்கமுடியாது. இலக்ஷ்மி, நாராயணனைக்கூட அவ்வாறு அழைக்கமுடியாது. ஏனெனில், அவர்களுக்குச் சக்தியைக் கொடுக்கின்ற ஒருவர் இருக்கின்றார். தூய்மையற்ற மனிதர்கள் சக்தியைக் கொண்டிருக்க முடியாது. ஆத்மா கொண்டிருந்த சக்தியானது, படிப்படியாக சீரழிகின்றது. அதாவது, ஆத்மா கொண்டிருந்த சதோபிரதான் சக்தியானது பின்னர் தமோபிரதான் சக்தியாகின்றது. அதேபோன்று, ஒரு மோட்டார் கார் அதில் பெற்றோல் இல்லாதபோது நின்றுவிடுகின்றது. இந்த மின்கலத்தின் சக்தியானது மீண்டும் மீண்டும் குறைவதில்லை. அதற்கென மிகச்சரியான காலப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கலியுகத்தின் இறுதியில், மின்கலமானது சக்தியிழந்து விடுகின்றது. சதோபிரதானாக இருந்த உலகின் அதிபதிகள் தமோபிரதான் ஆகியமையால் தமது சக்தியை இழந்துவிடுகின்றார்கள். அவர்களிடம் எந்தவித சக்தியும் கிடையாது. அவர்கள் ஒரு சதமேனும் பெறுமதியற்றவர்கள் ஆகியுள்ளார்கள். பாரதத்தில் தேவ தர்மம் இருந்தபோது, அவர்கள் பவுண்ட் பெறுமதிமிக்கவர்களாக இருந்தார்கள். தர்மமே சக்தி எனக் கூறப்படுகின்றது. தேவ தர்மத்தில் சக்தி உள்ளது. அவர்களே உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் என்ன சக்தியைக் கொண்டிருந்தார்கள்? அவர்கள் சண்டையிடுவதற்கான சக்தியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சர்வசக்திவானான தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுகின்றார்கள். என்ன சக்தி? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்ததுடன், இப்போது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். உலகின் அதிபதிகள் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் உலகின் அடிமைகள் ஆகிவிட்டீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஐந்து விகாரங்களான இராவணன், உங்களுடைய வலிமை அனைத்தையும் பறித்து விட்டான். இதனாலேயே பாரத மக்கள் ஏழ்மையடைந்து விட்டார்கள். விஞ்ஞானிகள் பெருமளவு சக்தியைக் கொண்டிருக்கின்றார்கள் என நினைக்காதீர்கள். அது சக்தி அல்ல. இதுவே சர்வசக்திவானான தந்தையுடன் யோகம் செய்வதன் மூலம் நீங்கள் பெறுகின்ற ஆன்மீக சக்தியாகும். இது இந்த வேளையில் விஞ்ஞானத்திற்கும் மௌனத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெறுவதைப் போன்றதாகும். நீங்கள் மௌனத்திற்குள் சென்று, அதன் மூலம் சக்தியைப் பெறுகின்றீர்கள். மௌன சக்தியைப் பெறுவதன் மூலம், நீங்கள் மௌன உலகிற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்து, உங்களுடைய சரீரத்தில் இருந்து பற்றற்றவர் ஆகுகிறீர்கள். பக்திமார்க்கத்தில், கடவுளிடம் செல்வதற்கு நீங்கள் பெருமளவில் தலையில் அடித்துக் கொண்டீர்கள். எவ்வாறாயினும், அவரை சர்வவியாபி என அழைத்ததனால், உங்களால் பாதையைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். எனவே, இது ஒரு கல்வியாகும். கல்வியை சக்தி என அழைக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: அனைத்திற்கும் முதலில், தூய்மையாகிப் பின்னர் எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது என்ற ஞானத்தையும் புரிந்து கொள்ளுங்கள். தந்தை மட்டுமே ஞானம் நிறைந்தவர் ஆவார். அதில் சக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது எனக் குழந்தைகளுக்குத் தெரியாது. நடிகர்களாகிய நீங்கள் ஒரு பாகத்தை நடிக்கின்றீர்கள், அல்லவா? இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். முன்பு, மக்கள் தமது பாகங்களை நாடகத்தில் நடிக்கும்போது, நடிகர்கள் மாற்றப்படலாம். எவ்வாறாயினும், இப்போது அவர்கள் திரைப்படங்களைத் தயாரிக்கின்றார்கள். திரைப்படத்தின் உதாரணத்தை உபயோகித்துத் தந்தைக்கு விளங்கப்படுத்துவது சுலபமாகும். அவை சிறிய திரைப்படங்கள், இதுவோ பெரியதொரு திரைப்படமாகும். பௌதீகமான நாடகத்தில், நடிகர்கள் மாற்றப்படலாம். இந்த நாடகம் அநாதியானது. ஏதேனும் ஒன்று ஒரு தடவை படம்பிடிக்கப்பட்டால் பின்னர் அது மாற்றப்பட முடியாது. இம் முழு உலகமும் ஓர் எல்லையற்ற திரைப்படம் ஆகும். இதில் பலத்திற்கான கேள்விக்கே இடம் இல்லை. அம்பாள் சக்தி என அழைக்கப்படுகிறார், ஆயினும் அவருக்குப் பெயர் ஒன்று உள்ளது. அவர் ஏன் அம்பாள் என அழைக்கப்படுகிறார்? அவர் இங்கே இருந்த பொழுது என்ன செய்தார்? அம்பாளும் இலக்ஷ்மியுமே அதிமேலானவர்கள். அம்பாளே பின்னர் இலக்ஷ்மி ஆகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்கிறீhகள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். உங்களுக்குத் தூய்மையும் கற்பிக்கப்படுகிறது. இத் தூய்மை அரைக் கல்பத்துக்கு நீடிக்கிறது. தந்தை வந்து, தூய்மைக்கான பாதையைக் காட்டுகிறார். வந்து, தங்களுக்கு பாதையைக் காட்டுமாறும் தங்கள் வழிகாட்டி ஆகுமாறும் மக்கள் அவரைக் கூவி அழைக்கிறார்கள். அவரே பரமாத்மா. நீங்கள் அதிமேலானவருடன் கற்பதால் அதிமேலானவர்கள் ஆகின்றீர்கள். தூய்மையானவரே அதிமேலானவர் எனப்படுகிறார். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள். தந்தை சதா தூய்மையாக இருக்கிறார். இரண்டிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. சதா தூய்மையாக இருப்பவர் இங்கே வரும்பொழுதே அவர் உங்களுக்குக் ஆஸ்தியைக் கொடுப்பதுடன் கற்பிக்கவும் செய்கிறார். அவர் இவரினுள் பிரவேசித்து, அவரே உங்கள் தந்தை என அவராகவே கூறுகிறார். எனக்கு நிச்சயமாக இரதம் தேவை. அல்லாவிட்டால் ஆத்மா எவ்வாறு பேசுவார்? இந்த இரதமும் பிரசித்தி பெற்றது. 'பாக்கிய இரதம்" நினைவுகூரப்படுகிறது. எனவே 'பாக்கிய இரதம்’ ஒரு மனிதன் ஆவார். இது ஒரு குதிரை இரதம் பற்றிய கேள்வி இல்லை. அவர் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவதற்கு ஒரு மனித இரதம் தேவைப்படுகிறது. அவர்கள் பின்னர் குதிரை இரதத்தைக் காட்டியுள்ளனர். மனிதன் ஒருவரே பாக்கிய இரதம் என அழைக்கப்படுகிறார். இங்கே சில மிருகங்கள் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. அந்தளவுக்கு மனிதர்களேனும் பராமரிக்கப்படுவதில்லை. மக்கள் தங்கள் நாய்களைப் பெருமளவு நேசிக்கிறார்கள்! அவர்கள் குதிரைகளையும் பசுக்களையும் நேசிக்கிறார்கள். அவர்கள் நாய்க் கண்காட்சிகளையும் நடாத்துகிறார்கள். அவை எதுவுமே அங்கே இருக்க மாட்டாது. இலக்ஷ்மியும் நாராயணனும் நாய்களைப் பராமரிப்பார்களா? இப்பொழுது உள்ள மனிதர்கள் எல்லோரும் தமோபிரதான் புத்தியைக் கொண்டுள்ளனர் எனவும் புத்தி சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும் எனவும் நீங்கள் தற்பொழுது அறிவீர்கள். அங்கே, குதிரைகள் போன்றவற்றிற்கு மக்கள் சேவை செய்ய வேண்டிய நிலை இருக்க மாட்டாது. தந்தை கூறுகிறார்: பாருங்கள்! உங்களுடைய நிலைமை எவ்வாறு ஆகிவிட்டது! இராவணன் உங்கள் நிலைமையை அவ்வாறு ஆக்கிவிட்டான். அவன் உங்களுடைய எதிரி. எவ்வாறாயினும் இப் பகைவன் எப்பொழுது பிறக்கின்றான் என நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் சிவனின் பிறப்பையோ அல்லது இராவணனின் பிறப்பையோ அறியமாட்டீர்கள். இராவணன் திரேதா யுக இறுதியில், அதாவது துவாபர யுக ஆரம்பத்தில் வருகிறான். அவன் ஏன் பத்துத் தலைகளுடன் காட்டப்படுகிறான்? மக்கள் ஒவ்வொரு வருடமும் ஏன் அவனுடைய கொடும்பாவியை எரிக்கிறார்கள்? எவருமே அதை அறிய மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்குக் கற்கிறீர்கள். கற்காதவர்கள் தேவர்கள் ஆக முடியாது. அவர்கள் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுது வருகிறார்கள். நீங்கள் தேவ தர்மத்தவர்களாக இருந்தீர்கள் எனவும் இப்பொழுது அதற்கான மரக்கன்று நாட்டப்படுகிறது எனவும் நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் 5000 வருடங்களுக்கு ஒரு முறை வந்து, இவ்வாறு கற்பிக்கிறேன். இப்பொழுது முழு உலகவிருட்சமும் பழையதாகி விட்டது. அது புதியதாக இருந்த பொழுது ஓரேயொரு தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. பின்னர் அவர்கள் படிப்படியாக இறங்கினார்கள். தந்தை ஞானம் நிறைந்தவர் ஆகையால் உங்களுக்கு 84 பிறவிகளின் கணக்கைக் கூறுகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவிடமிருந்து அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மௌன சக்தியை சேகரியுங்கள். நீங்கள் மௌன சக்தியால் மௌன உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்து, சக்தியைப் பெற்று, அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்து, ஓர் அதிபதி ஆகுங்கள்.

2. அதிமேலானவருடன் கற்பதனால், ஆத்மாக்களான நீங்கள் அதிமேலானவர்கள் ஆக வேண்டும். தூய பாதையை மாத்திரம் பின்பற்றி, தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மை ஆக்குங்கள். ஒரு வழிகாட்டி ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அல்பாவின் (இறைவன்) ஞானத்தைக் கொண்டிருந்து, தூய்மை என்ற ஆதி தர்மத்தைப் பின்பற்றும் விசேடமானதோர் ஆத்மா ஆகுவீர்களாக.

பாப்தாதா தனது ஒவ்வொரு குழந்தையும் ஒரு விசேடமான ஆத்மா என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறார். அவர் வயதானவரோ, படிக்காதவரோ, சிசுவோ, இளைஞரோ அல்லது இல்லறத்தவரோ, உலகுடன் ஒப்பிடும்போது, அவர் விசேடமானவரே. உலகில், பெரிய அரசியல்வாதிகள், நடிகர்கள், விஞ்ஞானிகள் இருக்கக்கூடும். ஆனால், அவர்களுக்கு இறைவனைத் தெரியாது விட்டால், அவர்களுக்கு என்னதான் தெரியும்? உங்களின் புத்தியில் நம்பிக்கை உள்ளது. அவர்கள் தொடர்ந்து தேடலாம், ஆனால் நீங்கள் அவரைக் கண்டடைந்து விட்டீர்கள் என நீங்கள் ஆன்மீக போதையுடன் சொல்கிறீர்கள். உங்களின் இல்லறத்தில் வாழும்போது, நீங்௧ள் ஆதி தர்மமமான தூய்மையை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் ஒரு தூய ஆத்மாவாக, ஒரு விசேடமான ஆத்மாவாக ஆகியுள்ளீர்கள்.

சுலோகம்:
சதா சந்தோஷமான இதயத்தைக் கொண்டிருக்கும் ஒருவர், சுயத்தாலும் நேசிக்கப்படுவார், அனைவராலும் நேசிக்கப்படுவார்.