22.12.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    17.03.2003     Om Shanti     Madhuban


சதா உங்களின் சுயமரியாதையுடன் இருந்து, எல்லோருக்கும் மதிப்பளித்து, அவர்களைச் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குவதற்காக அவர்களுடன் ஒத்துழையுங்கள்.


இன்று, பாக்கியத்தை அருள்பவரான பாப்தாதா, எங்கும் உள்ள தனது ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் மூன்று பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். ஒன்று, இறை பராமரிப்பின் பாக்கியத்திற்கான ரேகை. இரண்டாவது, உண்மையான ஆசிரியரின் மேன்மையான கற்பித்தல்களின் பாக்கிய ரேகை. மூன்றாவது, ஸ்ரீமத்தின் பிரகாசிக்கும் ரேகை. இந்த மூன்று ரேகைகளும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருடைய நெற்றியின் மத்தியிலும் அழகாகப் பிரகாசிக்கின்றன. நீங்கள் எல்லோரும் உங்களின் மூன்று வகையான பாக்கிய ரேகைகளையும் பார்க்கிறீர்கள்தானே? பாக்கியத்தை அருள்பவர், குழந்தைகளான உங்களின் தந்தையாக இருக்கும்போது, உங்களைத் தவிர வேறு எவராலும் இத்தகைய மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருக்க முடியுமா? உலகில் பல மில்லியன் ஆத்மாக்கள் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். ஆனால் அந்த மில்லியன்களில், இது 600000 பேர்களைக் கொண்டதொரு குடும்பம் ஆகும். நீங்கள் வெகு சிலரே இருக்கிறீர்கள். அதனால், நீங்கள் பலமில்லியன்களில் கையளவினர்தானே? பொதுவாக, இந்த மூன்று விடயங்களும் - பராமரிப்பு, படிப்பு, மேன்மையான வழிகாட்டல்கள் - ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் வாழ்க்கையில் அத்தியாவசியமானவை. எவ்வாறாயினும், இந்த இறை பராமரிப்பிற்கும் வழிகாட்டல்களுக்கும் தேவாத்மாக்களிடமிருந்தும் மனித ஆத்மாக்களிடமிருந்தும் பெறப்படுகின்ற பராமரிப்பிற்கும் படிப்பிற்கும் இடையே பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. எனவே, உங்களின் பாக்கியம் மிக மேன்மையானது. நீங்கள் ஒருபோதும் அதைக் கற்பனைகூடச் செய்யவில்லை. எவ்வாறாயினும், இப்போது, உங்கள் ஒவ்வொருவரின் இதயமும், ‘நான் அதை அடைந்துவிட்டேன்!’ எனப் பாடுகிறது. நீங்கள் அதை அடைந்துவிட்டீர்களா அல்லது இன்னமும் அதை அடைய வேண்டியுள்ளதா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் அதை அடைந்து விட்டீர்கள்தானே? இத்தகைய குழந்தைகளின் பாக்கியத்தைப் பார்த்து தந்தையும் களிப்படைகிறார். குழந்தைகள் கூறுகிறார்கள்: ‘ஆஹா பாபா! ஆஹா!’ (இது பாபாவின் அற்புதம்!) தந்தையும் கூறுகிறார்: ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ (இது குழந்தைகளான உங்களின் அற்புதம்!) இந்தப் பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் மட்டும் வைத்திருக்காதீர்கள். ஆனால், அந்த விழிப்புணர்வின் சதா சொரூபங்களாக இருங்கள். சில குழந்தைகள் மிக நன்றாக சிந்திக்கிறார்கள். ஆனால், நீங்கள் எண்ணங்களின் சொரூபம் (சோச்னா ஸ்வரூப்) ஆகக்கூடாது. நினைவின் சொரூபம் (ஸ்மிருதி ஸ்வரூப்) ஆகுங்கள். நினைவின் சொரூபம், சக்தி சொரூபம் (சமர்த் ஸ்வரூப்) ஆகும். எண்ணங்களின் சொரூபம், சக்தி சொரூபம் இல்லை.

குழந்தைகளின் வெவ்வேறு விளையாட்டுக்களைப் பார்க்கும்போது, பாப்தாதா தொடர்ந்து புன்னகை செய்கிறார். சில குழந்தைகள் எண்ணங்களின் சொரூபங்களாக இருக்கிறார்கள். அவர்கள் சதா நினைவின் சொரூபங்களாக இருப்பதில்லை. சிலவேளைகளில், அவர்கள் எண்ணங்களின் சொரூபங்களாக இருக்கிறார்கள். ஏனைய வேளைகளில் அவர்கள் நினைவின் சொரூபங்களாக இருக்கிறார்கள். நினைவின் சொரூபங்களாக இருப்பவர்கள், சதா தமது இயல்பான ரூபத்தில் இருப்பார்கள். எண்ணங்களின் சொரூபங்களாக இருப்பவர்கள், முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இந்த சங்கமயுகம், முயற்சி செய்வதற்கான யுகம் இல்லை. இது சகல பேறுகளையும் அனுபவம் செய்வதற்கான யுகமாகும். நீங்கள் 63 பிறவிகளாக முயற்சி செய்கிறீர்கள். ஆனால், இது இப்போது அந்த முயற்சிகளின் பலனை அடைவதற்கான யுகம், அதாவது, நேரம் ஆகும்.

சரீரத்தின் விழிப்புணர்விற்கு வருவதற்கு நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா என பாப்தாதா பார்த்தார். ‘நான் இன்னார், நான் இன்னார்’. அதற்கு நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா? அது இயல்பாக வந்ததல்லவா? சரீர உணர்வு உங்களின் சுபாவம் ஆகியதல்லவா? அது எப்படிப்பட்ட கடும் சுபாவம் ஆகியுள்ளது என்றால், இப்போதும், ஆத்ம உணர்வு ஆகுகின்ற வேளையிலும் சரீர உணர்வு அதை நோக்கி சில குழந்தைகளை ஈர்க்கிறது. அதன்பின்னர், நீங்கள் ‘நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மா’ என நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், சரீர உணர்வானது மிகவும் இயல்பானதாகிவிட்டது. உங்களின் விருப்பத்திற்கு மாறாக அல்லது நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்காதபோதுகூட, நீங்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகிறீர்கள். பாப்தாதா கூறுகிறார்: இப்போது, உங்களின் மரணித்து வாழும் பிறவியில், உங்களின் ஆத்ம உணர்விற்கான ஸ்திதி, ஆத்மாக்களின் விழிப்புணர்வும் உங்களின் சுபாவமாகி, இயல்பானது ஆகவேண்டும். ‘நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மா’ என நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை பிறந்து, புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போது, அவருக்கு வயதேறும்போது, அவர் யார் என்றும் யாருக்குச் சொந்தமானவர் என்றும் அறிமுகம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் பிறந்தபோது பிராமணக் குழந்தைகளான உங்களுக்கு என்ன அறிமுகம் வழங்கப்பட்டது? நீங்கள் யார்? ஆத்மாவின் பாடம் உங்களுக்குள் உறுதி ஆக்கப்பட்டதல்லவா? எனவே, இந்த முதல் அறிமுகம், உங்களின் இயல்பான சுபாவம் ஆகவேண்டும். சுபாவம் என்பது இயல்பானதாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும். அதை நினைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. அதேபோல், இப்போதுள்ள நேரத்திற்கேற்ப, ஒவ்வொரு பிராமணக் குழந்தையின் ஆத்ம உணர்வு ஸ்திதியும் இயல்பானதாக இருக்க வேண்டும். சில குழந்தைகளிடம் இந்த ஸ்திதி காணப்படுகிறது. அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை, அவர்கள் நினைவு சொரூபங்களாக இருக்கிறார்கள். நீங்கள் இப்போது நிச்சயமாக எப்போதும், இயல்பாகவும் நினைவு சொரூபம் ஆகவேண்டும். பிராமணர்கள் எல்லோருக்கும் இறுதி வினாத்தாள், பற்றை வென்றவராகவும் நினைவின் சொரூபமாகவும் இருக்கும் இந்தச் சிறிய பரீட்சைத்தாளே ஆகும்.

எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? சில குழந்தைகள் கேட்கிறார்கள்: ‘நாங்கள் இந்த வருடம் என்ன விசேடமான இலக்கைக் கொண்டிருப்பது?’ பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் சதா ஆத்ம உணர்வுடையவராகவும் நினைவின் சொரூபமாகவும் இருப்பீர்களாக. நீங்கள் எப்படியும் ஜீவன்முக்தி அடைய வேண்டியுள்ளது. ஆனால், ஜீவன்முக்தி அடைவதற்கு முன்னர், சிரமப்படுவதில் இருந்து விடுபடுங்கள். இந்த ஸ்திதி காலத்தை நெருக்கமாகக் கொண்டு வந்து, உலகிலுள்ள உங்களின் சகோதர, சகோதரிகள் அனைவரையும் துன்பத்தில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுவிக்கும். உங்களின் இந்த ஸ்திதியானது முக்தி தாமத்தின் வாயில்களைத் திறக்கும். எனவே, உங்களின் சகோதர, சகோதரிகளின் மீது உங்களுக்குக் கருணை இல்லையா? எங்கும் உள்ள ஆத்மாக்கள் துயரத்தில் அழுகிறார்கள். அதனால் உங்களின் முக்தியானது எல்லோரும் முக்தி அடையச் செய்யும். ஆகவே, எந்தளவிற்கு உங்களிடம் இந்த இயல்பான விழிப்புணர்வு இருக்கிறதென்றும் அதனால் ஒரு சக்திவாய்ந்த ரூபம் இருக்கிறதென்றும் சோதித்துப் பாருங்கள். சக்தி சொரூபம் ஆகுதல் என்றால், வீணானவை அனைத்தும் இலகுவாக முடிந்துவிடுதல் என்று அர்த்தம். நீங்கள் மீண்டும் மீண்டும் அந்த முயற்சியைச் செய்ய வேண்டியதில்லை.

இப்போது, குழந்தைகளிடம் கொண்டுள்ள அன்பினால், இந்த வருடம், குழந்தைகளான நீங்கள் எவரும் எந்தவிதமான பிரச்சனையாலும் சிரமப்படுவதை பாப்தாதா பார்க்க விரும்பவில்லை. பிரச்சனையை முடித்து, சக்திவாய்ந்த, தீர்வுகளின் சொரூபம் ஆகுங்கள். இது சாத்தியமா? இது சாத்தியமா? தாதிகளே, கூறுங்கள்! ஆசிரியர்களே, கூறுங்கள்! இது சாத்தியமா? பாண்டவர்களே, இது சாத்தியமா? பின்னர் சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள்: ‘இதனால்தான், இது நடந்ததால்தான்..... இது நடந்திருக்காவிட்டால், இது நடந்திருக்காது’. பாப்தாதா ஏற்கனவே பல விளையாட்டுக்களை, மிக இனிய விளையாட்டுக்களைப் பார்த்துள்ளார். என்னதான் நடந்தாலும், பிரச்சனையின் வடிவம் இமாலய மலையை விட 100 மடங்கு பெரியதாக இருந்தாலும், அந்தப் பிரச்சனை உங்களின் சரீரம், மனம், இன்னொருவர் அல்லது இயற்கையின் பஞ்சபூதங்களால் வந்தாலும், உங்களின் ஆதி ஸ்திதியின் முன்னால் புறச்சூழ்நிலைகளால் வந்த பிரச்சனைகள் எதுவுமேயில்லை. உங்களின் ஆதி ஸ்திதியை உருவாக்குவதற்கான வழிமுறை, சுயமரியாதையைக் கொண்டிருப்பதாகும். இயல்பான முறையில் சுய மரியாதை இருக்க வேண்டும். நீங்கள் அதை நினைப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் அந்த முயற்சியை மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கக்கூடாது. ‘இல்லை, உண்மையில், நான் சுயதரிசனச் சக்கரதாரி, நான் கண்களின் ஒளி ஆவேன், நான் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன், நான் இத்தகையவன்’. வேறு யாராவது இப்படி ஆகப் போகிறீர்களா? சென்ற கல்பத்தில் இப்படி ஆகியவர்கள் யார்? வேறு யாராவது இப்படி ஆகினார்களா அல்லது நீங்கள் அப்படி ஆகினீர்களா? ஒவ்வொரு கல்பத்திலும் நீங்களே அப்படி ஆகினீர்கள், இப்போதும் நீங்களே அப்படி ஆகுகிறீர்கள், நீங்களே அப்படி ஆகுவீர்கள். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாப்தாதா முகங்கள் அனைத்தையும் பார்க்கிறார். நீங்கள் எல்லோரும் சென்ற கல்பத்திற்குரிய அதே ஆத்மாக்கள். நீங்கள் இந்தக் கல்பத்திற்குரியவர்களா அல்லது முன்னர் பல கல்பங்களுக்கு உரியவர்களா? நீங்கள் கல்ப கல்பமாக அதே ஆத்மாக்கள்தானே? அப்படியா? ஒவ்வொரு கல்பமும் அதே ஆத்மாக்கள் என்றவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! அப்படியென்றால், அது நிச்சயிக்கப்பட்டுள்ளது, அப்படித்தானே? நீங்கள் சித்திக்கான சான்றிதழைப் பெற்றுள்ளீர்கள்தானே? அல்லது, நீங்கள் இப்போது அதைப் பெற வேண்டியுள்ளதா? நீங்கள் அதைச் சென்ற கல்பத்திலும் பெற்றீர்கள். அதனால், இப்போது நீங்கள் அதைப் பெற மாட்டீர்களா? இந்த விழிப்புணர்வின் சொரூபங்கள் ஆகுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சான்றிதழைப் பெற்றுள்ளீர்கள். திறமைச் சித்தி எய்துவதற்கும் வெறுமனே சித்தி எய்துவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் நீங்கள் அதே ஆத்மாக்கள். உங்களுக்கு இது உறுதியாக உள்ளதல்லவா? அல்லது, புகைவண்டியில் பயணிக்கும்போது நீங்கள் இதை மறந்துவிடுவீர்களா? நீங்கள் விமானத்தில் செல்லும்போது அதுவும் பறந்துவிடுமா? இல்லை.

உதாரணமாக, இந்த வருடம், சிவராத்திரியை மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் எங்கும் கொண்டாட வேண்டும் என்ற திடசங்கற்பம் உங்களுக்கு இருந்தது. அதனால் அதை நீங்கள் கொண்டாடினீர்கள்தானே? உங்களின் திடசங்கற்பத்தால், உங்களுக்குள் இருந்த எந்த எண்ணமும் நிறைவேறியதல்லவா? எனவே, இது எதன் அற்புதம்? ஒற்றுமையினதும் திடசங்கற்பத்தினதும். நீங்கள் 67 நிகழ்ச்சிகளைச் செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்தீர்கள். ஆனால், பல குழந்தைகள் அந்த எண்ணிக்கையை விட அதிகமான நிகழ்ச்சிகளைச் செய்திருப்பதை பாப்தாதா கண்டார். இதுவே சக்திவாய்ந்த ரூபத்தின் அடையாளம் ஆகும். இது ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் நடைமுறை ரூபம் ஆகும். நீங்கள் இயல்பாகவே இதை எங்கும் செய்தீர்கள், அல்லவா? அதேபோல், நீங்கள் எல்லோரும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதுடன், நாங்கள் நிச்சயமாக இப்போது காலத்தை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும், ஆத்மாக்கள் முக்தி அடையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் நினைவு சொரூபங்களாகி, உங்களின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் போதே அது நடக்கும்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள், ஒரு விசேடமான சிநே-மிலனை அல்லது ஒரு சந்திப்பைக் கொண்டிருக்கப் போவதாகவும் பாரதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு சந்திப்பை நடத்தப் போவதாகவும் பாப்தாதா கேள்விப்பட்டார். எனவே, அந்த மீட்டிங்கில் சேவைக்கான திட்டங்களை மட்டும் செய்யாதீர்கள். திட்டங்களைச் செய்யுங்கள், ஆனால் சமநிலையும் இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மாஸ்ரர் சர்வசக்திவான்களாகித் தொடர்ந்தும் முன்னால் பறக்கும் வகையில் ஒருவரோடு ஒருவர் ஒத்துழையுங்கள். அருள்பவராகி, ஒத்துழைப்பை வழங்குங்கள். சூழ்நிலைகளைப் பார்க்காதீர்கள். ஆனால் ஒத்துழையுங்கள். உங்களின் சுயமரியாதையில் இருந்து, மதிப்பளிப்பதன் மூலம் ஒத்துழையுங்கள். ஏனென்றால், உங்களின் இதயபூர்வமாக எந்தவோர் ஆத்மாவிற்கும் நீங்கள் மதிப்பு அளிக்கும்போது, அது மிகப் பெரியதொரு புண்ணியச் செயலாகும். நீங்கள் ஒரு பலவீனமான ஆத்மாவிற்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தீர்கள். எனவே, அது மகத்தான புண்ணியம். ஏற்கனவே விழுந்தவர்களைக் கீழே தள்ளாதீர்கள். ஆனால், அவர்களைக் கட்டியணையுங்கள். புறத்தே அல்ல. அவர்களைக் கட்டியணைத்தல் என்றால், அவர்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்குதல் என்று அர்த்தம். அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்.

நீங்கள் இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்டீர்கள்தானே? மதிப்பளிப்பதுடன், உங்களின் சுய மரியாதையையும் பேணுங்கள். சக்திசாலியாகி, மற்றவர்களையும் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குங்கள். உங்களை வீணான சூழ்நிலைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். பலவீனமான ஆத்மாக்கள் எப்படியும் பலவீனமானவர்களே, நீங்கள் தொடர்ந்து அவர்களின் பலவீனங்களைப் பார்த்தால், எப்படி நீங்கள் ஒத்துழைப்பவர் ஆகுவீர்கள்? ஒத்துழைப்பைக் கொடுங்கள், நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். வேறு எதுவும் உங்களால் செய்ய முடியாதபோது, எல்லாவற்றிலும் இலகுவான முயற்சி என்னவென்றால், ஆசீர்வாதங்களைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதேயாகும். மதிப்பை அளித்து, புகழத் தகுதிவாய்ந்தவர் ஆகுங்கள். மதிப்பளிப்பவர்கள் மட்டுமே எல்லோரிடம் இருந்தும் மரியாதையைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவார்கள். இப்போது நீங்கள் எந்தளவிற்கு மரியாதைக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களிடம் இராச்சிய உரிமையும் இருக்கும், அத்துடன் நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவீர்கள். தொடர்ந்து வழங்குங்கள். பெறுவதைப் பற்றி நினைக்காதீர்கள். நீங்கள் பெறும்போது மட்டும் கொடுப்பதென்பது, வியாபாரியின் செயல். நீங்கள் அருள்பவரின் குழந்தைகள். எங்கும் குழந்தைகள் செய்யும் சேவையைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் எல்லோரும் மிக நல்ல சேவை செய்துள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது முன்னேற வேண்டும்தானே? நீங்கள் வார்த்தைகளால் மிக நல்ல சேவை செய்துள்ளீர்கள். வசதிகளால் சேவை செய்வதிலும் நீங்கள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் பலரின் முறைப்பாடுகளை முடித்துள்ளீர்கள். அத்துடன்கூடவே, காலத்தின் துரித வேகத்தைப் பார்க்கும்போது, ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டும் நீங்கள் சேவை செய்வதை பாப்தாதா விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்தியை அருள்வதற்கான கருவிகள் ஆவீர்கள். ஏனெனில் நீங்கள் தந்தையின் சகபாடிகள் ஆவீர்கள். அதனால், காலத்தின் வேகத்திற்கேற்ப, நீங்கள் ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளைச் செய்ய வேண்டும். ஒன்று, உங்களின் வார்த்தைகளால். பின்னர், உங்களின் சக்திவாய்ந்த ஸ்திதியால். மூன்றாவது, உங்களின் மேன்மையான ஆன்மீக அதிர்வலைகளால். நீங்கள் எங்கே சேவை செய்தாலும், ஆன்மீக அதிர்வலைகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி இலகுவாக அனைவரும் கவரப்படும் வகையில் ஆன்மீக அதிர்வலைகளைப் பரப்புங்கள். உங்களின் கடைசிப் பிறவியிலும் உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் சேவை செய்வதைப் பாருங்கள். அவை வார்த்தைகளால் எதையாவது பேசுகின்றனவா? அவற்றின் அதிர்வலைகள் எத்தகையதென்றால், பக்தர்கள் இலகுவாகத் தமது பக்தியின் பலனைப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த முறையில், அதிர்வலைகள் சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டும். சகல சக்திகளின் கதிர்களும் அந்த அதிர்வலைகளினூடாகப் பரவ வேண்டும். அதனால் அவை சூழலையே மாற்ற வேண்டும். அதிர்வலைகள் எத்தகையவை என்றால், அவை உங்களின் இதயத்தில் பதிகின்றன. உங்களின் இதயத்தில் யாராவது ஒருவரின் நல்ல அல்லது தீய அதிர்வலைகள் பதிந்தால் அதன் விளைவு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதை நீங்கள் எல்லோரும் அனுபவம் செய்திருக்கிறீர்கள். அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்தானே? நீங்கள் அதை நீக்க விரும்பினாலும், உங்களால் அதை நீக்க முடியாது. யாராவது ஒருவரின் தீய அதிர்வலைகள் உங்களின் இதயத்தில் பதிந்து விட்டால், உங்களால் அவற்றை இலகுவாக நீக்க முடியுமா? எனவே, சகல சக்திகளின் கதிர்களுக்குரிய உங்களின் அதிர்வலைகள் பதிவுகள் போல் செயல்படும். வார்த்தைகள் மறந்து போகலாம். ஆனால், அதிர்வலைகளால் பதிந்தவற்றை இலகுவாக நீக்க முடியாது. நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள்தானே? உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதல்லவா?

பாப்தாதா குஜராத்திற்கும் பம்பாய்க்கும் அவர்கள் காட்டிய ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் பலமில்லியன் மடங்கு பாராட்டுக்களை வழங்குகிறார். ஏன்? உங்களின் சிறப்பியல்பு என்ன? ஏன் பாபா உங்களைப் பாராட்டுகிறார்? நீங்கள் தொடர்ந்து பெரிய நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். ஆனால் பாபா ஏன் குறிப்பாக உங்களைப் பாராட்டுகிறார்? இவை இரண்டினதும் சிறப்பியல்பானது, ஒற்றுமையும் திடசங்கற்பமும் ஆகும். எங்கே ஒற்றுமையும் திடசங்கற்பமும் உள்ளனவோ, அங்கே, ஒரு வருடத்திற்குப் பதிலாக, ஒரு வருட வேலை ஒரு மாதத்தில் பெறப்பட்டுவிடும். குஜராத்தையும் பம்பாயையும் சேர்ந்தவர்கள் இதைக் கேட்டீர்களா?

இப்போது, ஒரு விநாடியில் ஞான சூரியனின் ஸ்திதியில் ஸ்திரமாகி, சகல சக்திகளின் கதிர்களை பயத்துடனும் குழப்பத்திலும் உள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் பரப்புங்கள். அவர்கள் பயந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு சக்தி கொடுங்கள். அதிர்வலைகளைப் பரப்புங்கள். அச்சா. (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்.)

எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரிடமிருந்தும் பாப்தாதா பல கடிதங்களையும் ஈமெயில்களையும் பெற்றார். ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்: எனது நினைவை பாபாவிடம் கொடுங்கள். எனது நினைவை பாபாவிடம் கொடுங்கள். பாப்தாதா கூறுகிறார்: ஒவ்வோர் அன்பான குழந்தையின் அன்பும் நினைவுகளும் பாப்தாதா வந்தடைந்துள்ளன. தொலைவில் அமர்ந்திருந்தாலும், நீங்கள் பாப்தாதாவின் இதயத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். எனவே, எனது நினைவைக் கொடுங்கள், எனது நினைவைக் கொடுங்கள்! எனக் கூறியவர்களின் நினைவானது பாபாவை வந்தடைந்துள்ளது. குழந்தைகளின் இந்த அன்பும் தந்தையின் அன்பும் குழந்தைகளான உங்களைப் பறக்கச் செய்கின்றன. அச்சா.

எங்கும் உள்ள அதிகபட்ச பாக்கியசாலிக் குழந்தைகள் எல்லோருக்கும் பலமில்;லியன்களில் கையளவினரான விசேடமான ஆத்மாக்களுக்கும் சதா தமது சுயமரியாதையுடன் இருந்து, மற்றவர்களுக்கு மரியாதை அளிக்கின்ற சேவையாளர் குழந்தைகளுக்கும் சதா நினைவின் சொரூபங்களாகவும் அதனால் சக்தி சொரூபங்களாகவும் உள்ள ஆத்மாக்களுக்கும் சகல சக்திகளின் சொரூபங்களாக இருப்பதுடன் சதா தமது ஆட்ட, அசைக்க முடியாத ஆசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

தாதிஜியிடம்: பாப்தாதா குறிப்பாக உங்களையிட்டு மகிழ்ச்சி அடைகிறார். ஏன் அவர் மகிழ்ச்சி அடைகிறார்? எப்படித் தந்தை பிரம்மா எல்லோருக்கும், ‘நீங்கள் இதைச் செய்ய வேண்டும், நீங்கள் இதை இப்போதே செய்ய வேண்டும்’ எனக் கட்டளை இடுவதைப் போல், நீங்களும் அதில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதையிட்டு அவர் மகிழ்ச்சி அடைகிறார். (நீங்களும் என்னுடன் இருக்கிறீர்கள்). அது உண்மையே. ஆனால் நீங்கள்தான் கருவி ஆகியுள்ளீர்கள், அப்படித்தானே? உங்களிடம் உள்ள திடசங்கற்பத்தால் எங்கும் வெற்றி ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, நீங்கள் அதிகளவு மறைமுகமான ஆன்மீக சக்தியால் நிரம்பி உள்ளீர்கள். உங்களின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நீங்கள் அதிகளவு ஆன்மீக சக்தியால் நிரம்பியுள்ளீர்கள். அதனுடன் ஒப்பிடும்போது உங்களின் ஆரோக்கியம் எதுவுமேயில்லை. அது ஓர் அற்புதமே, இல்லையா?

தாதிகள் பாபாவைச் சந்திப்பதைப் பார்க்கும்போது, எல்லோரும் நினைக்கிறார்கள்: நானும் ஒரு தாதியாக இருந்திருந்தால், அதேபோல் நானும் சந்தித்திருப்பேனே. நீங்களும் ஒரு தாதி ஆகுவீர்கள். பாப்தாதா தனது இதயத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார். அவர் அதை இன்னமும் உங்களிடம் தரவில்லை. எனவே, பிரம்மாபாபாவின் சாகார் நாட்களில் இருந்து சேவையில் ஆதி இரத்தினங்களாக இருந்தவர்களின் ஒன்றுகூடல், உறுதியாக ஆக்கப்பட வேண்டும். (எப்போது நீங்கள் இதைச் செய்வீர்கள்?) நீங்கள் அதைச் செய்யும்போது. இது உங்களின் கடமை. (தாதி ஜான்கியிடம்) உங்களுக்கும் உங்களின் இதயத்தில் இந்த எண்ணம் ஏற்பட்டதல்லவா? தாதிகளான உங்களின் ஒன்றுகூடல், ஒற்றுமையாகவும் திடசங்கற்பத்துடனும் இருப்பதைப் போல், சேவையில் ஆதி இரத்தினங்களின் ஒன்றுகூடலும் பலமானவர்களாக இருக்க வேண்டும். சேவை அதிகரிக்க வேண்டியிருப்பதனால், இதற்கு பெரும் தேவை உள்ளது. எனவே, ஒன்றுகூடலின் சக்தியால் அது எதை விரும்புகிறதோ, அதைச் செய்ய முடியும். ஐந்து பாண்டவர்கள் ஒன்றுகூடலின் ஞாபகார்த்தத்தின் சின்னமாக இருக்கிறார்கள். அவர்களில் ஐந்து பேரே இருந்தார்கள். ஆனால், அவர்கள் ஒன்றுகூடலின் அடையாளமாக இருக்கிறார்கள். அச்சா. சாகார் பிரம்மாவின் நாட்களில் இருந்து நிலையங்களில் சேவை செய்வதில் ஈடுபட்டிருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள். நிலையங்களில் தங்கியிருப்பவர்கள். இந்தக் குழுவில் சகோதரர்களும் இருக்கிறார்கள். பாண்டவர்கள் இல்லாமல் சத்கதி இடம்பெற முடியாது. இங்கு வெகு சிலரே இருக்கிறார்கள். ஆனால், இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்த ஒன்றுகூடலை ஒன்றாகச் சேர்ப்பது இவரின் (தாதி ஜான்கி) கடமையே ஆகும். இவர் (தாதிஜி) முதுகெலும்பாக இருக்கிறார். அவர்கள் மிக நல்ல இரத்தினங்கள். அச்சா. எல்லாமே சிறப்பாக உள்ளது. நீங்கள் எதைத் தொடர்ந்து செய்தாலும், உங்களின் ஒன்றுகூடலில் மகத்துவம் உள்ளது. உங்களின் கோட்டை பலமானது.

ஆசீர்வாதம்:
உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் சகல இக்கட்டான சூழ்நிலைகளிலும் சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

சதா உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள்: நான் ஒரு வெற்றி இரத்தினம், நான் மாஸ்ரர் சர்வசக்திவான். உங்களின் ஆசனத்தைப் போன்றே, அந்த ஆசனத்திற்கான தகைமைகளையும் நீங்கள் வளர்த்துக் கொள்கிறீர்கள். எந்தவோர் இக்கட்டான சூழ்நிலை உங்களின் முன்னால் வந்தாலும், ஒரு விநாடியில் உங்களை அந்த ஆசனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். தமது ஆசனத்தில் (தமது பதவியில்) அமர்ந்திருப்பவர்களின் கட்டளைகள் மட்டுமே பின்பற்றப்படும். உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருங்கள், நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள். சங்கமயுகம், சதா வெற்றி அடைவதற்கான யுகமாகும். இந்த யுகம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆசீர்வதிக்கப்பட்டவராகி, வெற்றியாளர் ஆகுங்கள்.

சுலோகம்:
தமது பலவீனங்கள் அனைத்திலும் வெற்றி பெறுபவர்களே, சிவசக்தி பாண்டவ சேனையினர்.