23.02.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 17.02.2004 Om Shanti Madhuban
எல்லோருக்கும் உங்களின் ஒத்துழைப்பைக் கொடுத்து, அவர்களையும் ஒத்துழைக்கச் செய்யுங்கள். உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
இன்று, பாப்தாதாவே தனது சொந்தப் பிறந்தநாளையும் அத்துடன் குழந்தைகளின் வைரம் போன்ற பிறந்தநாளையும் சிவஜெயந்தியையும் கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இங்கே உங்களின் பரலோக மற்றும் அலௌகீகத் தந்தையரின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். அத்துடன் தந்தையும் உங்களின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளான உங்களின் பாக்கியத்தைக் கண்டு தந்தை களிப்படைகிறார்: ஆஹா! மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள எனது குழந்தைகளே, ஆஹா! நீங்கள் உலகின் இருளை முடிப்பதற்காகத் தந்தை வந்த அதே வேளையில் அவதாரம் செய்துள்ளீர்கள். கல்பம் முழுவதிலும் தந்தையான இறைவனுடன் குழந்தைகளான நீங்கள் கொண்டாடும் இத்தகைய பிறந்தநாளை வேறு எவரும் கொண்டாட முடியாது. பக்த ஆத்மாக்களும் இந்த அலௌகீக, அதிகபட்ச அன்பான, தனித்துவமான பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், குழந்தைகளான நீங்கள் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால், பக்த ஆத்மாக்கள் புகழை மட்டுமே பாடுகிறார்கள். அவர்கள் புகழைப் பாடுவதுடன் தொடர்ந்தும் அழைக்கிறார்கள். பக்தர்கள் பாடும் புகழையும் அவர்களின் அழைப்பையும் பாப்தாதா கேட்டு, அவர்களின் வரிசைக்கிரமமான நம்பிக்கை உணர்வுகளுக்கேற்ப அவர்களின் பலனையும் வழங்குகிறார். எவ்வாறாயினும், அந்த பக்தர்களுக்கும் குழந்தைகளான உங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. நீங்கள் செய்த மேன்மையான செயல்களினதும் உங்களின் மேன்மையான பாக்கியத்தினதும் ஞாபகார்த்தத்தை அவர்கள் மிக நன்றாகக் கொண்டாடுகிறார்கள். இதனாலேயே, பக்தர்களின் பக்தியின் தெய்வீகச் செயல்களைப் பார்க்கும்போது, பாப்தாதா அவர்களைப் பாராட்டுகிறார். ஏனென்றால், அவர்கள் எல்லோரும் உங்களின் ஞாபகார்த்தங்களை மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். அவர்கள் இந்தத் தினத்தில் ஒரு விரதத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் குறுகிய காலத்திற்கு, தமது உணவிலும் பானத்திலும் தற்காலிகமான சுத்தத்தைக் கடைப்பிடித்து விரதம் இருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பிறவி முழுவதற்கும் உங்களின் உணவு, பழக்கம், வார்த்தைகள், செயல்களில் சம்பூரணமான தூய்மையைக் கடைப்பிடிப்பதற்கான சத்தியத்தைச் செய்கிறீர்கள். சங்கமயுகத்தில் உங்களின் வாழ்க்கையை வாழும்போது, நீங்கள் உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தூய்மை ஆகுவது மட்டுமன்றி, மற்றவர்களையும் தூய்மை ஆக்க வேண்டும். எனவே, பக்தர்களின் புத்திகளும் எந்தவிதத்திலும் குறைவாக இல்லாதிருப்பதைப் பாருங்கள். அவர்கள் உங்களின் ஞாபகார்த்தங்களை மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். நீங்கள் எல்லோரும் வீணானவை அனைத்தையும் அர்ப்பணித்து, சக்திவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். அதாவது, நீங்கள் உங்களின் தூய்மையற்ற வாழ்க்கைகளை அர்ப்பணித்துள்ளீர்கள். உங்களின் அர்ப்பணிப்பின் ஞாபகார்த்தமாக, அவர்கள் பலி கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் பலி கொடுப்பதில்லை. அவர்கள் ஓர் ஆட்டையே பலி கொடுக்கிறார்கள். அவர்கள் உங்களை எவ்வளவு நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள் எனப் பாருங்கள். ஏன் அவர்கள் ஓர் ஆட்டைப் பலி கொடுக்கிறார்கள்? அவர்கள் இதையும் மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். ஆடு என்ன செய்யும்? அது சதா மே, மே, மே (மே என்றால் இந்தியில் நான் என்று அர்த்தம்) என்று கத்தும். அது ‘நான்’ என்ற சரீர உணர்வே. ‘நான்’ என்ற இந்த உணர்வால், சரீர அகங்காரம் ஏற்படுகிறது. இந்த சரீர அகங்காரமே சகல விகாரங்களினதும் விதையாகும்.
‘நான்’ என்ற இந்த சரீர உணர்வே நீங்கள் உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதற்குத் தடையாக இருக்கிறது என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். நான் ஒரு சரீரம் அல்லது சரீர உறவுகள் அல்லது சரீரத்தின் உடமைகள் என்பதைப் பொறுத்தவரை ‘நான்’ என்ற பொதுவான உணர்வை அர்ப்பணிப்பது இலகுவானது. நீங்கள் ஏற்கனவே இதைச் செய்துள்ளீர்கள்தானே? அல்லது, இன்னமும் இல்லையா? இது இன்னமும் செய்யப்படவில்லையா? எந்தளவிற்கு நீங்கள் அதிகமாக முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு ‘நான்’ என்ற உணர்வானது அதிகபட்சம் சூட்சுமமாகவும் ஆழமாகவும் இருக்கும். ‘நான்’ என்ற எந்தவிதமான புற உணர்வையும் முடிப்பது இலகுவானது. எவ்வாறாயினும், ‘நான்’ என்ற ஆழமான உணர்வானது - அதாவது, நீங்கள் உங்களின் இறை பிறப்புரிமையாகப் பெற்றுள்ள சிறப்பியல்புகளுக்காக, உங்களிடம் உள்ள புத்தியின் ஆசீர்வாதத்திற்காக அல்லது இந்த ஞானத்தின் சொரூபமாக ஆகுவதற்கான ஆசீர்வாதத்திற்காக, சேவை செய்வதற்கான ஆசீர்வாதத்திற்கும் சிறப்பியல்புகளுக்கும் அல்லது இறை பரிசுக்காக, நான் என்ற உணர்வை விருத்தி செய்தால், அவை ‘நான்’ என்ற ஆழ்ந்த உணர்வு என்று அழைக்கப்படுகிறது. நான் எதைச் செய்தாலும் அல்லது நான் எதைக் கூறினாலும் அதுவே சரி, அதுவே நடக்க வேண்டும். இந்த ‘நான்’ என்ற இராஜரீகமான உணர்வானது, ஒரு சுமையாகி, பறக்கும் ஸ்திதிக்குச் செல்வதை உங்களைத் தடுக்கிறது. எனவே, தந்தை கூறுகிறார்: இதிலும் ‘நான்’ என்ற உணர்வை அர்ப்பணியுங்கள். இறைபரிசைப் பொறுத்தவரை, ‘நான்’ என்ற உணர்வு எதுவும் இருக்கக்கூடாது. ‘நான்’ என்பதும் கிடையாது, ‘எனது’ என்பதும் கிடையாது. இது ஓர் இறைபரிசு. இறைவனிடமிருந்து பெற்ற ஆசீர்வாதம். இறைவனிடம் இருந்து பெற்ற ஒரு சிறப்பியல்பு. எனவே, உங்கள் எல்லோருடைய அர்ப்பணிப்பும் மிகவும் ஆழமானது. எனவே, சாதாரண விடயங்களிலும் இராஜரீக ரூபத்திலும் இரண்டிலும் ‘நான்’ என்ற உணர்வை நீங்கள் அர்ப்பணித்து விட்டீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் இதைச் செய்துவிட்டீர்களா? அல்லது, நீங்கள் இதை இன்னமும் செய்கிறீர்களா? நான் எப்படியும் இதை அர்ப்பணிக்க வேண்டும். நாங்கள் எப்படியும் இறக்க (தலைவணங்க) வேண்டியுள்ளது என நகைச்சுவையாக நீங்கள் எல்லோரும் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், இவ்வாறு இறத்தல் என்பது, இறைவனின் மடியில் வாழ்வதாகும். இவ்வாறு இறத்தல் என்பது இறப்பதல்ல. இது 21 பிறவிகளுக்கு தேவர்களின் மடியில் பிறப்பு எடுப்பதாகும். இதனாலேயே, நீங்கள் உங்களைச் சந்தோஷமாக அர்ப்பணிக்கிறீர்கள்தானே? நீங்கள் உங்களை அழுதவண்ணம் அர்ப்பணிப்பதில்லையே? இல்லை. பக்தியிலும், அழுகின்ற ஒரு பலியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, தமது எல்லைக்குட்பட்ட ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவற்றை அர்ப்பணிப்பவர்களால் பிறவி பிறவியாக சந்தோஷமாக ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆகவே, சோதித்துப் பாருங்கள்: வீணான எண்ணங்கள், வீணான வார்த்தைகள் மற்றும் வீணான செயல்களை மாற்றுவது என்று வரும்போது, நீங்கள் அந்த மாற்றத்தைச் சந்தோஷமாகச் செய்கிறீர்களா அல்லது கட்டாயத்தின் பேரில் செய்கிறீர்களா? நீங்கள் அன்பினாலா அல்லது முயற்சி செய்தா உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள்? குழந்தைகளான நீங்கள் எல்லோரும் பிறப்பு எடுத்தபோது, உலகை மாற்றுபவர்களாக உங்களின் வாழ்க்கைத் தொழிலை ஆக்கிக் கொண்டீர்கள். இதுவே உங்கள் எல்லோருடைய பிராமணப் பிறவியின் தொழில், அப்படித்தானே? இது உறுதியாக இருந்தால், உங்களின் கைகளை அசையுங்கள். நீங்கள் உங்களின் கொடிகளை அசைக்கிறீர்கள். மிகவும் நல்லது. (எல்லோரும் தம்மிடம் உள்ள சிவபாபா கொடியை அசைத்தார்கள்). இன்று கொடிகளின் தினம் ஆகும். மிகவும் நல்லது. எவ்வாறாயினும், கொடிகளை வெறுமனே அசைக்காதீர்கள். கொடிகளை அசைப்பது மிகவும் இலகுவானது. ஆனால், நீங்கள் இப்போது உங்களின் மனங்களை அசைக்க வேண்டும். நீங்கள் உங்களின் மனங்களை மாற்ற வேண்டும். நீங்கள் தைரியசாலிகள்தானே? உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு அதிகளவு தைரியம் இருக்கிறது. அச்சா.
மிகுந்த சந்தோஷத்திற்குரிய ஒரு விடயத்தை பாப்தாதா கண்டார். அது என்ன? உங்களுக்கு அது தெரியுமா? இந்த வருடத்திற்காக விசேடமான ஒரு பரிசை பாப்தாதா உங்களுக்கு வழங்கியுள்ளார்: இந்த வருடம் எந்தவொரு பணிக்காகவும் சிறிதளவு தைரியம் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் - அது சுய மாற்றத்திற்கோ, எந்தவொரு பணிக்கோ அல்லது உலகச் சேவைக்காகவோ இருந்தாலும் - நீங்கள் அதைத் தைரியத்துடன் செய்தால், இந்த வருடம் நீங்கள் மேலதிக உதவியைப் பெறுவதற்கான ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது. எனவே, பாப்தாதா கண்ட சந்தோஷமான செய்திகள் அல்லது காட்சி என்ன? இந்த வருடம் சிவஜெயந்திக்கான சேவையில், எல்லோரும் அதிக, அதிக, அதிகளவு தைரியத்துடனும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகிறார்கள். (எல்லோரும் கைதட்டினார்கள்) ஆம், நீங்கள் கைதட்டலாம். நீங்கள் எப்போதும் இந்த முறையில் கைதட்டுவீர்களா அல்லது சிவராத்திரியின் போது மட்டுமா? எப்போதும் தொடர்ந்து கைதட்டுங்கள். அச்சா. நீங்கள் எல்லா இடங்களில் இருந்தும் உங்களின் செய்திகளை மதுவனத்திற்கு எழுதுகிறீர்கள். பாப்தாதா அதைச் சூட்சும வதனத்தில் இருந்து பார்க்கிறார். உங்களிடம் நல்ல உற்சாகம் உள்ளது. அத்துடன் நீங்கள் நல்ல திட்டங்களையும் செய்துள்ளீர்கள். அதேபோல், சேவைக்கான ஊக்கமும் உற்சாகமும் உலகிலுள்ள ஆத்மாக்களிலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும். பாருங்கள், கருவியான தாதிஜி நாட்டிய கன்று, அற்புதங்களைச் செய்துள்ளதல்லவா? பெறுபேறு நன்றாக உள்ளது. இதனாலேயே, ஒவ்வொரு நிலையத்தினதும் பெயரை இப்போது குறிப்பிட மாட்டார். ஆனால், சகல சேவையாளர் குழந்தைகளுக்கும் அவர்கள் எங்கும் செய்த சேவையின் பெறுபேறுகளுக்காக அவர்களின் சிறப்பியல்புகளையும் பெயர்களையும் நினைத்து, பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களை பாப்தாதா வழங்குகிறார். அவர்களும் அங்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த இடங்களில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் வெளிநாடுகளிலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏனென்றால், நீங்கள் எல்லோருமே குறிப்பாக உலகிலுள்ள ஆத்மாக்களின் இஷ்ட தெய்வங்கள் ஆவீர்கள். குழந்தைகளான உங்களின் ஒன்றுகூடலை பாப்தாதா பார்க்கும்போது, அவர் உங்களின் மூன்று ரூபங்களில் பார்க்கிறார்:
1) தற்போதைய சுய இராச்சிய அதிகாரிகள். நீங்கள் இப்போது அரசர்களாகவும் இருக்கிறீர்கள். உலகிலும் ஒரு தந்தை தனது குழந்தைகளை, ‘எனது ராஜாக் குழந்தைகள், எனது ராஜாக் குழந்தை’ என்றே கூறுவார். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், ‘எனது ராஜாக் குழந்தை’ என்றே அவர் கூறுவார். எவ்வாறாயினும், இப்போது சங்கமயுகத்தில், தந்தை குழந்தைகளான உங்கள் எல்லோரையும் சுய இராச்சிய அதிகாரிகளாகவே பார்க்கிறார். நீங்கள் அரசர்கள்தானே? நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகள், உங்களுக்கே அதிபதிகள் ஆவீர்கள்.
2) தற்சமயம், சுய இராச்சிய அதிகாரிகள். எதிர்காலத்தில் உலகை ஆள்பவர்கள்.
3) துவாபர யுகத்தில் இருந்து கலியுகம் வரை, நீங்கள் பூஜிப்பதற்கான உரிமையுடைய பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள்.
பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரையும் இந்த மூன்று ரூபங்களிலும் பார்க்கிறார். அவர்கள் உங்களைச் சாதாரணமானவர்களாகப் பார்ப்பதில்லை. நீங்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் பாப்தாதா உங்கள் எல்லோரையும் சுய இராச்சிய அதிகாரிகளாக, ராஜாக் குழந்தைகளாகவே பார்க்கிறார். நீங்கள் இராஜ யோகிகள்தானே? இங்கே யாராவது பிரஜாயோகியாக (பிரஜை) இருக்கிறீர்களா? பிரஜா யோகிகள் யாராவது இருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் எல்லோரும் இராஜயோகிகள். எனவே, ஓர் இராஜயோகி என்றால் ஓர் அரசர் என்று அர்த்தம். இத்தகைய சுய இராச்சிய அதிகாரிகளின் சுய அதிபதிகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தந்தையே வந்துள்ளார். பாருங்கள், இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்து உங்களின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள்! இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எந்தத் தேசம் வெகு தொலைவில் உள்ளது? அது அமெரிக்காவா அல்லது அதைவிடத் தொலைவில் ஏதாவது நாடு உள்ளதா? எவ்வாறாயினும், பாப்தாதா எங்கிருந்து வந்துள்ளார்? பாப்தாதா பரந்தாமத்தில் இருந்து வந்துள்ளார். எனவே, அவருக்குக் குழந்தைகளான உங்களின் மீது அன்பு உள்ளது. உங்களின் பிறந்தநாள் மிக மேன்மையானது. அதனால் இறைவனே வந்துள்ளார். (பல்வேறு மொழிகளில் ‘பாபா, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்!’ என்று எழுதிய பதாகை செய்திருந்தார்கள்) ஆம், நீங்கள் நல்லதொரு பதாகை செய்துள்ளீர்கள். நீங்கள் அதைச் சகல மொழிகளிலும் எழுதியுள்ளீர்கள். பாப்தாதா சகல நாடுகளிலும் உள்ள வெவ்வேறு மொழிகளையும் பேசுகின்ற குழந்தைகள் எல்;லோருக்கும் அவர்களின் பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.
பாருங்கள், நீங்கள் தந்தையின் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் தந்தை எப்படிப்பட்டவர்? ஒரு புள்ளியானவர். நீங்கள் ஒரு புள்ளியின் அவதாரத்தை, ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். யாருடைய பிறந்தநாள் வைரத்தைப் போன்றது? புள்ளியானவரின் பிறந்தநாள். ஒரு புள்ளி. எனவே, ஒரு புள்ளிக்கு (ஸீரோ) மகத்தான புகழ் உள்ளது. இதனாலேயே பாப்தாதா கூறுகிறார்: சதா மூன்று புள்ளிகளை நினையுங்கள். 7 மற்றும் 8 என்ற இலக்கங்கள் எழுதுவதற்குச் சிக்கலாக இருக்கும். ஆனால் ஒரு புள்ளி வைப்பது இலேசானது. சதா இந்த மூன்று புள்ளிகளையும் நினையுங்கள். உங்களுக்கு இந்த மூன்றையும் மிக நன்றாகத் தெரியும்தானே? நீங்கள் ஒரு புள்ளி, தந்தை புள்ளியானவர். நீங்கள் புள்ளியானவரின் குழந்தைகளான புள்ளிகள். நீங்கள் நடிக்க வேண்டியிருக்கும் போது, இந்த உலக மேடையில் நடிப்பதற்காக வருகிறீர்கள். இந்த நாடகம் உலக மேடையிலேயே நடக்கிறது. எனவே, இந்த நாடகத்தில் நீங்கள் என்ன செயல்களைச் செய்கிறீர்களோ, அவை கடந்த காலம் ஆகிவிடுகின்றன. எனவே, ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். முற்றுப்புள்ளி என்பது என்ன? ஒரு புள்ளி. ஆகவே, சதா இந்த மூன்று புள்ளிகளையும் நினையுங்கள். சகல அற்புதங்களையும் பாருங்கள். இன்றைய உலகில், மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது எது? பணம். பணத்திற்கே முக்கியத்துவம் உள்ளது, அப்படித்தானே? பணத்தின் முன்னால், பெற்றோரே மதிப்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். பணமே எல்லாமாக இருக்கிறது. அதிலும் நீங்கள் 1 இன் பின்னால் ஒரு பூச்சியத்தைப் போட்டால், அது என்னவாகும்? அது பத்து ஆகும். இரண்டாவது பூச்சியத்தைப் போடுங்கள், அது 100 ஆகும். மூன்றாவது பூச்சியத்தைப் போடுங்கள், அது 1000 ஆகும். எனவே, இதுவே ஒரு புள்ளியின் அற்புதம். பணத்தில், அது பூச்சியத்தின் அற்புதம். மேன்மையான ஆத்மா ஆகுவதைப் பொறுத்தவரை, அது புள்ளியின் அற்புதம். கரன்கரவன்ஹாரும் ஒரு புள்ளியே. எனவே, எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது எது? புள்ளி, அப்படித்தானே? புள்ளியை மட்டும் நினையுங்கள். எந்தவிதமான விரிவாக்கத்திற்குள்ளும் செல்லாதீர்கள். உங்களால் புள்ளியை நினைக்க முடியும். ஒரு புள்ளி ஆகுங்கள். புள்ளியானவரை நினைத்து, ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். அவ்வளவுதான். இதுவே முயற்சி ஆகும். இது கஷ்டமா? அல்லது இது இலகுவானதா? இது இலகுவானது என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இலகுவானது. அப்படியாயின், நீங்கள் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏதாவது பிரச்சனைகள் வந்தால், நீங்கள் முற்றுப்புள்ளி வைப்பீர்களா அல்லது கேள்விக்குறி போடுவீர்களா? கேள்விக்குறி போடாதீர்கள், முற்றுப்புள்ளி வையுங்கள். கேள்விக்குறி மிகவும் கோணலானது. ஒரு கேள்விக்குறி எழுதிப் பாருங்கள். அது மிகவும் கோணலாகவே உள்ளது. ஆனால் முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் இலகுவானது. எனவே, ஒரு புள்ளி ஆகுவது எப்படி என உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள்.
நீங்கள் மிக நன்றாகச் செய்யும் விசேட சேவைக்காக பாப்தாதா விசேடமான பாராட்டுக்களை வழங்குகிறார். நீங்கள் தொடர்ந்தும் அதைச் செய்வீர்கள். ஆனால், எதிர்காலத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் உலக சேவகர்கள். எப்படித் தந்தை பிரம்மா கையொப்பம் இடுவார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உலக சேவகன். எனவே, நீங்கள் உலக சேவகர்கள். அதனால், நீங்கள் சிவராத்திரி சேவை செய்வதால் மட்டும் உலகச் சேவை பூர்த்தி ஆகாது. ஆகவே, ‘நான் ஓர் உலக சேவையாளன்’ என்ற இலட்சியத்தை வைத்திருங்கள். நீங்கள் ஒவ்வொரு மூச்சிலும் ஒவ்வொரு விநாடியும் உலகிற்குச் சேவை செய்ய வேண்டும். யார் வந்தாலும் யார் உங்களுடன் தொடர்பில் வந்தாலும் நீங்கள் ஓர் அருள்பவராகி, அவருக்கு எதையாவது கொடுக்க வேண்டும். எவருமே வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. உங்களின் எல்லையற்ற பொக்கிஷக் களஞ்சியம் எல்லா வேளையும் திறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், எல்லோருக்காகவும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருங்கள். அவர்களைப் பாருங்கள், அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அத்துடன் நல்லாசிகளுடனும் தூய உணர்வுகளுடனும் அவர்களுடன் பழகி, அந்த ஆத்மாக்களுக்கு உங்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள். ஆத்மாக்கள் எல்லோருக்கும் உங்களின் ஒத்துழைப்பே அதிகளவில் தேவைப்படுகிறது. ஆகவே, அவர்களுக்கு உங்களின் ஒத்துழைப்பை வழங்கி, அவர்களையும் ஒத்துழைக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு எந்த வகையான ஒத்துழைப்பையும் அது உங்களின் மனங்கள் அல்லது வார்த்தைகள் அல்லது உங்களின் தொடர்புகள் மற்றும் உறவுமுறைகள் எவற்றின் மூலமாவது கொடுங்கள். எனவே, சிவராத்திரி என்ற இந்தப் பிறந்தநாள் பண்டிகையின் விசேடமான சுலோகனை நினைவு செய்யுங்கள்: ‘உங்களின் ஒத்துழைப்பைக் கொடுத்து, மற்றவர்களையும் ஒத்துழைக்கச் செய்யுங்கள்’. குறைந்தபட்சம், உங்களுடன் யார் தொடர்பில் வந்தாலும் அல்லது உங்களுடன் உறவுமுறையைக் கொண்டிருந்தாலும் எந்தவோர் உறவுமுறையைக் கொண்டிருப்பவரோ அல்லது வேறு எவரோ வந்தாலும் அவர்களுக்கு வேறு ஏதாவது விருந்துபசாரத்தைக் கொடுக்காதீர்கள். ஆனால் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு தில்குஷ் தோளியைக் கொடுங்கள். இங்கே சமையலறையில் செய்த தில்குஷ் தோளி இல்லை. அவர்களின் இதயங்களைச் சந்தோஷப்படுத்துங்கள். அவர்களின் இதயங்களைச் சந்தோஷப்படுத்துதல் என்றால், தில்குஷ் தோளியை அவர்களுக்குப் பரிமாறுங்கள். நீங்கள் அவர்களுக்கு இதைக் கொடுப்பீர்களா? இதில் எந்தவிதமான முயற்சியும் கிடையாது. நீங்கள் மேலதிக நேரத்தை அல்லது முயற்சியைக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்களுக்குத் தூய உணர்வுகளுடன் தில்குஷ் தோளியைப் பரிமாறுங்கள். அவர்களும் சந்தோஷப்படுவார்கள். நீங்களும் சந்தோஷப்படுவீர்கள். உங்களுக்கு வேறு என்ன தேவை? எனவே, நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பீர்கள். உங்கள் எல்லோருடைய முகங்களும் ஒருபோதும் சீரியஸாக இருக்கக்கூடாது. அதிகளவு சீரியஸாக இருப்பதும் நல்லதல்ல. ஒரு புன்னகை இருக்க வேண்டும். சீரியஸாக இருப்பது நல்லதே. ஆனால் நீங்கள் மிகவும் சீரியஸாக ஆகும்போது, நீங்கள் எங்கேயோ தொலைந்து போனது போல் இருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள், ஆனால் எங்கேயோ தொலைந்து போயிருப்பீர்கள். நீங்கள் பேசிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் எதிலோ தொலைந்து போயிருப்பதைப் போல் பேசிக் கொண்டிருப்பீர்கள். எனவே, அந்த வகையான முகம் நல்லதல்ல. உங்களின் முகங்கள் எப்போதும் புன்னகையுடன் இருக்க வேண்டும். உங்களின் முகங்கள் சீரியஸாக இருக்கக்கூடாது. ‘நான் என்ன செய்வது? எப்படி நான் அதைச் செய்வது?’ என நீங்கள் சொல்லும்போது, சீரியஸ் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும், எந்தளவிற்கு அதிகமான வேலை உங்களுக்கு இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் புன்னகை செய்ய வேண்டும். எப்படி புன்னகை செய்வது என உங்களுக்குத் தெரியும்தானே? உங்களுக்குத் தெரியும். உங்களின் உயிரற்ற விக்கிரகங்களைப் பாருங்கள். அவை எப்போதாவது சீரியஸான முகங்களுடன் காட்டப்படுகின்றனவா? அவை சீரியஸான முகங்களுடன் காட்டப்பட்டால், அதைச் செய்த கலைஞர் சரியில்லை என்றே நீங்கள் சொல்வீர்கள். எனவே, நீங்கள் மிகவும் சீரியஸாக இருந்தால், உங்களுக்கு வாழும் கலை தெரியவில்லை என்றே சொல்லப்படும். எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆசிரியர்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? அச்சா. ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். சேவைக்காக வாழ்த்துக்கள். அச்சா.
ஒரு விநாடியில் உங்களால் உங்களின் மூதாதை மற்றும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தை வெளிப்படச் செய்ய முடியுமா? உங்களால் அதே தேவதேவியரின் விழிப்புணர்வுடன் உங்கள் ஒவ்வொருவரையும் பார்க்க முடிகிறதா? நான் ஒரு மூதாதை தேவர், சங்கமயுகத்திலும் ஒரு மூதாதை, துவாபர யுகத்தில் இருந்து பூஜிக்கத் தகுதி வாய்ந்தவன். சத்திய, திரேதா யுகங்களில் உங்களுக்கு இராச்சிய உரிமை உள்ளது. எனவே, ஒரு விநாடியில், ஏனைய எண்ணங்கள் அனைத்தையும் முடித்து, உங்களின் மூதாதை மற்றும் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ரூபத்தில் ஸ்திரமாகுங்கள். அச்சா.
அவ்யக்த, தெய்வீக அவதாரத்தை எடுத்துள்ள குழந்தைகள் எல்லோருக்கும் தந்தையின் பிறந்தநாளுக்கும் குழந்தைகளான உங்களின், சதா திலாராம் தந்தையின் இதயத்தில் அமிழ்ந்திருக்கும் வலது கரமான சேவையாளர் குழந்தைகளின் பிறந்த நாளுக்கும் ஆசீர்வாதங்களும் அன்பும் நினைவுகளும். இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் சதா புள்ளியின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதன் மூலம் ஒரு புள்ளியின் மேன்மையான ரூபத்தைக் கொண்டுள்ள குழந்தைகள் எல்லோருக்கும் சதா தமது சுயமரியாதையில் ஸ்திரமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கு ஆன்மீக மரியாதையை வழங்கும் மதிப்பிற்குத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும் தமது முடிவில்லாத பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து ஒவ்வொருவருக்கும் எதையாவது வழங்கிக் கொண்டே இருக்கும் மாஸ்ரர் தானிகளாக இருக்கும் அருள்பவரின் குழந்தைகளான மாஸ்ரர் அருள்கின்ற குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும். கோஹினூர் வைரத்தை விட மேன்மையான பிரபு நூர் குழந்தைகளுக்கு (தந்தையின் ஒளி) மேலும் அதிக அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் படைப்பவராகி, உங்களின் ஒவ்வொரு சக்திக்கும் தேவைக்கேற்பக் கட்டளை இடுவீர்களாக.எந்தவொரு செயலைச் செய்ய முன்னரும் அந்தச் செயலுடன் தொடர்புடைய சக்தியை அழையுங்கள். அதன் அதிபதியாக அதற்குக் கட்டளை இடுங்கள். ஏனென்றால், இந்தச் சக்திகள் அனைத்தும் உங்களின் கரங்களைப் போன்றவை. உங்களின் கட்டளைகள் இல்லாமல் உங்களின் கைகளால் எதையும் செய்ய முடியாது. ஒரு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சகித்துக் கொள்ளும் சக்திக்குக் கட்டளை இடுங்கள். வெற்றிக்கு எப்படி உத்தரவாதம் உள்ளதெனப் பாருங்கள். எவ்வாறாயினும், அந்தக் கட்டளை இடுவதற்குப் பதிலாக, நீங்கள் பயப்பட்டு உங்களால் எதையாவது செய்ய முடியுமா இல்லையா என நினைப்பீர்களாயின், இந்த வகையான பயம் உங்களுக்குள் இருக்குமாயின், அந்தக் கட்டளை வேலை செய்யாது. ஆகவே, பயமற்ற மாஸ்ரர் படைப்பவர் ஆகி, ஒவ்வொரு சக்தியையும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப பயன்படுத்துங்கள்.
சுலோகம்:
ஆதாரத்தினை அருள்பவரான தந்தையை வெளிப்படுத்துவதன் மூலம் எல்லோரையும் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்.ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.
எதையாவது கண்டுபிடிப்பவர், ஒரு கண்டுபிடிப்பைச் செய்யும்போது ஏகாந்தத்தில் இருப்பதைப் போல், இங்கும் ஏகாந்தத்தில் இருப்பதென்றால் ஒரேயொருவரின் ஆழத்தில் தன்னை மறந்திருப்பதாகும். நீங்கள் புறக் கவர்ச்சிகளில் இருந்து விலகி ஏகாந்தத்தில் இருக்க வேண்டும். இது உங்களின் அறையில் தனியாக இருப்பதன் மூலம் ஏகாந்தத்தில் இருப்பது என்ற கேள்வி இல்லை. ஆனால் உங்களின் மனம் ஏகாந்தமாக இருக்க வேண்டும். மனதின் ஒருமுகப்பட்ட நிலை என்றால் ஒரேயொருவரின் நினைவில் நிலைத்திருப்பதே. ஒருமுகப்பட்டிருத்தலே உண்மையான ஏகாந்தம் ஆகும்.