23.03.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.11.2004 Om Shanti Madhuban
உங்களையும் ஈடேற்றி, உங்களை அவமதிப்பவர்களையும் ஈடேற்றுங்கள். சகல சக்திகள் மற்றும் சகல நற்குணங்களால் நிரம்பியவராகி, மரியாதையை அருள்பவர் ஆகுங்கள்.
இன்று, அன்புக்கடலானவர் எங்கும் உள்ள தனது அன்பான குழந்தைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் உங்களின் பௌதீக வடிவில் பாபாவின் முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்கிறீர்களோ அல்லது வெகு தொலைவில் அமர்ந்திருக்கிறீர்களோ, அன்பானது உங்கள் எல்லோரையும் தந்தைக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும் அனுபவத்தை வழங்குகிறது. ஒவ்வொரு குழந்தையின் அன்பும் தந்தை அவருக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவம் அடையச் செய்கிறது. குழந்தைகளான நீங்களும் தனிப்பட்ட முறையில் தந்தை மீதுள்ள அன்பினாலேயே இங்கே வந்துள்ளீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அவரின் இதயத்தில் பாப்தாதாவிற்கான அன்பு அமிழ்ந்திருப்பதை பாப்தாதா கண்டார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயத்தில் ‘எனது பாபா’ என்ற அன்புப் பாடலை இசைக்கிறீர்கள். அன்பே உங்களை உங்களின் சரீரத்தில் இருந்தும் உங்களின் சரீர உறவுகளில் இருந்தும் பற்றற்றவர் ஆக்குகிறது. அன்பே உங்களை மாயையை வென்றவர் ஆக்குகிறது. எங்கே இதயத்தில் அன்பு உள்ளதோ, அங்கே மாயை தொலைவில் இருந்தே ஓடி விடுவாள். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைந்துள்ளீர்கள். ஒன்று அன்பு, மற்றையது சகல சக்திகளையும் கொண்டவரான சர்வசக்திவான் தந்தையிடமிருந்து பெற்ற சகல சக்திகள் என்ற பொக்கிஷம்.
எனவே, இன்று, ஒருபுறம், பாப்தாதா அன்பைப் பார்க்கிறார். மறுபுறம், அவர் சக்தி சேனையின் சக்திகளைப் பார்க்கிறார். எந்தளவிற்கு உங்களுக்குள் அன்பு அமிழ்ந்துள்ளதோ, அந்தளவிற்கு சகல சக்திகளும் உங்களுக்குள் அமிழ்ந்திருக்கும். பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் சமமாகவே சகல சக்திகளையும் வழங்கி உள்ளார். அவர்கள் உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான்களாக, சகல சக்திகளும் கொண்டவர்களாக ஆக்கியுள்ளார். அவர் உங்களில் சிலரைச் சகல சக்திகள் கொண்டவர்களாகவும் ஏனையோரை வெகு சில சக்திகள் கொண்டவர்களாகவும் ஆக்கவில்லை. நீங்கள் எல்லோரும் உங்களின் சுயமரியாதை ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருத்தல், சகல சக்திகளையும் கொண்டவராக இருத்தல் எனக் கூறுகிறீர்கள். அதனால், பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் எல்லோரையும் கேட்கிறார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சகல சக்திகளும் கொண்டவர்களாக அனுபவம் செய்கிறீர்களா? உங்களிடம் சதா சகல சக்திகளுக்கான உரிமையும் உள்ளதா? சகல சக்திகளும் பாப்தாதாவிடம் இருந்து உங்களுக்குக் கிடைத்துள்ள ஆஸ்தி ஆகும். எனவே, உங்களிடம் உங்களுடைய ஆஸ்தியின் உரிமை உள்ளதா? உங்களுக்கு உரிமை உள்ளதா? ஆசிரியர்களே, பேசுங்கள்! உங்களுக்கு உரிமை உள்ளதா? அதைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்த பின்னர் பேசுங்கள். பாண்டவர்களே, உங்களிடம் உரிமை உள்ளதா? சதா உரிமை உள்ளதா? அல்லது சிலவேளைகளில் மட்டும்தானா? சக்தி சேனையில் குறிப்பிட்டதொரு சக்தி தேவைப்படும் வேளையில், அந்தச் சக்தி உங்களின் கட்டளைக்கேற்ப உங்களின் முன்னால் பிரசன்னம் ஆகுகிறதா? ‘ஆம், எனது பிரபுவே, வந்தேன்’ (ஜீ ஹஸுர், ஹாஸிர்) என உங்களுக்குத் தேவைப்படும் எந்த நேரத்திலும் சொல்கிறதா? இதைப் பற்றிச் சிந்தியுங்கள்! பாருங்கள், உரிமை உள்ள ஒருவர் கட்டளை இடும்போது, அந்தச் சக்தி ‘ஆம், எனது பிரபுவே, வந்தேன்’ எனச் சொல்ல வேண்டும். உங்களால் காலத்திற்கும் சூழலிற்கும் ஏற்ப எந்தவொரு சக்தியையும் நீங்கள் அழைத்த நேரத்தில் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த முறையில் நீங்கள் உரிமையுள்ள ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்களா? ஏனென்றால், தந்தை உங்களுக்கு ஆஸ்தியை வழங்கியுள்ளார். நீங்கள் அந்த ஆஸ்தியை உங்களுடையது ஆக்கியுள்ளீர்கள். நீங்கள் அதை உங்களுடையது ஆக்கியுள்ளீர்கள்தானே? எனவே, உங்களுக்குச் சொந்தமான எதிலும் உங்களுக்கு உரிமை உள்ளது. ஒரு சக்தியைக் குறிப்பிட்ட முறையில் பயன்படுத்துகின்ற தேவை இருக்கின்றபோது, உங்களால் அதைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஏற்றுக் கொள்கின்ற சக்தி தேவைப்படும்போது, அது உங்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ‘ஆம் எனது பிரபுவே’ எனச் சொல்கிறதா? சொல்கிறதா? குறைந்தபட்சம் ஆமோதித்துத் தலை அசையுங்கள்! அது செய்கிறது என்றால் நீங்கள் உங்களின் கையை அசைக்கலாம். அது சிலவேளைகளில் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதா அல்லது எல்லா வேளையும் கீழ்ப்படிகிறதா? ஏற்றுக் கொள்ளும் சக்தி பிரசன்னம் ஆகுகிறது. ஆனால், பத்துத் தடவைகள் எதையாவது ஏற்றுக் கொண்டபின்னர் 11 ஆவது தடவை சிறிது தளம்பல் ஏற்படுகிறதா? அது எப்போதும் இலகுவாகப் பிரசன்னம் ஆகவேண்டும். காலம் கடந்த சென்ற பின்னர் அல்ல. ‘நான் இதைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் அதற்குப் பதிலாக அது நடந்துவிட்டது’. இப்படி இருக்கக்கூடாது. இது சகல சக்திகளின் உரிமையைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் இந்த உரிமையைக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த உரிமையை சதா கொண்டிருப்பவர் ஆகுவதில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அது நிலையாகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும். அது இயல்பாக இருக்க வேண்டும். அது உங்களின் சுபாவமாக இருக்க வேண்டும். இதற்கான வழிமுறை என்னவென்றால், தந்தையும் ஹஸுர் (பிரபு) என்று அழைக்கப்படுகிறார். ஹஸுர் ஹாஸிர் (பிரபு பிரசன்னமாக இருக்கிறார்) என்று சொல்லப்படுகிறது. சகல சக்திகளும் பிரபுவின் ஒவ்வொரு ஸ்ரீமத்தையும் பின்பற்றுகின்ற குழந்தைகளான பிரபுக்களின் முன்னால் பிரசன்னமாக உள்ளன. ‘ஆம் எனது பிரபுவே, நான் வந்துள்ளேன், நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என அவை சொல்கின்றன. அவை ஒவ்வொரு கட்டளைக்கும் எப்போதும் ஜி ஹாஸிர் (ஆம், நான் வந்துள்ளேன்) எனச் சொல்கின்றன. ஒவ்வோர் அடியிலும் அவை ஜி ஹாஸிர் எனச் சொல்கின்றன. ஒவ்வொரு ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதிலும் நீங்கள் ஜி ஹாஸிர் எனச் சொல்லாவிட்டால், ஒவ்வொரு சக்தியும் பிரபுவான உங்களின் முன்னால் ஒவ்வொரு கணமும் பிரசன்னம் ஆகாது. நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தை அல்லது கட்டளைகளைச் சிலவேளைகளில் மட்டும் பின்பற்றினால், சக்திகளும் சிலவேளைகளில் மட்டுமே உங்களுக்கு முன்னால் இருக்கின்ற உங்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியும். அந்த வேளையில், உரிமை உள்ள ஒருவராக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் தங்கியிருப்பவர் ஆகுகிறீர்கள். எனவே, பாப்தாதா இந்தப் பெறுபேற்றைச் சோதித்தார். பாபா எதைக் கண்டார்? நீங்கள் வரிசைக்கிரமாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் முதலாம் இலக்கத்தவராக இல்லை. நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கிறீர்கள் இது எப்போதும் இலகுவாக இல்லை. சிலவேளைகளில் இது இலகுவாக இருக்கிறது. சிலவேளைகளில் சக்திகள் சிறிது சிரமத்துடனேயே வெளிப்படுகின்றன.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குச் சமமாக இருப்பதைக் காணவே விரும்புகிறார். நீங்கள் வரிசைக்கிரமமாக இருப்பதைக் காண அவர் விரும்பவில்லை. உங்கள் எல்லோருடைய இலட்சியமும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதேயாகும். உங்களுக்குச் சமமாக ஆகுகின்ற இலட்சியம் உள்ளதா அல்லது வரிசைக்கிரமம் ஆகுகின்ற இலட்சியம் உள்ளதா? உங்களை இதைப் பற்றிக் கேட்டால், நீங்கள் எல்லோருமே சமமானவர் ஆகவேண்டும் என்றே சொல்வீர்கள். எனவே சோதித்துப் பாருங்கள்: 1) என்னிடம் சகல சக்திகளும் உள்ளனவா? ‘சகல’ என்ற வார்த்தையைக் கீழ்க்கோடிடுங்கள். 2) என்னிடம் சகல நற்குணங்களும் உள்ளனவா? 3) எனது ஸ்திதி தந்தையின் ஸ்திதிக்குச் சமமாக உள்ளதா? 4) எனது சொந்த ஸ்திதி வெற்றி அடைகிறதா அல்லது சிலவேளைகளில் இக்கட்டான சூழ்நிலை என்னை வெற்றி கொள்கிறதா? இக்கட்டான சூழ்நிலைகள் வெற்றி கொண்டால், அதற்கான காரணத்தை நீங்கள் அறிவீர்கள்தானே? உங்களின் ஸ்திதி பலவீனமாக இருக்கும்போதே இக்கட்டான சூழ்நிலைகளால் தாக்க முடியும். உங்களின் ஆதி ஸ்திதியானது சதா வெற்றி நிறைந்ததாக இருப்பதற்கு, உங்களின் சுயமரியாதையினதும் மற்றவர்களுக்கான உங்களின் மரியாதையினதும் சமநிலையை சதா வைத்திருங்கள். சுயமரியாதை உள்ளதோர் ஆத்மா சதா மரியாதையை அருள்கின்ற அருள்பவர் ஆவார். உண்மையில், எவருக்கும் மரியாதை கொடுப்பது என்றால் உண்மையில் கொடுப்பது அல்ல. மரியாதை கொடுப்பதெனில் மரியாதையைப் பெறுவதே ஆகும். மரியாதை கொடுக்கும் ஒருவர் இயல்பாகவே எல்லோருடைய இதயத்தின் மரியாதையைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர் ஆகுவார். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். அவர் ஆதிதேவராக இருந்தபோதும், அவரே நாடகத்தின் முதல் ஆத்மாவாக இருந்தபோதும் அவர் சதா குழந்தைகளுக்கு மரியாதை கொடுத்தார். அவர் தான் பெற்றதை விடக் குழந்தைகள் ஆத்மாக்களிடம் இருந்து அதிக மரியாதையைப் பெறச் செய்தார். இதனாலேயே தந்தை பிரம்மா ஒவ்வொரு குழந்தையின் இதயத்தின் மரியாதையைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகினார். எனவே, அவர் மரியாதை கொடுத்தாரா அல்லது மரியாதையைப் பெற்றாரா? மரியாதை கொடுத்தல் என்றால் இதயத்தில் இருந்து மற்றவர்களின் இதயங்களுக்கு அன்பின் விதையை விதைத்தல் என்று அர்த்தம். உலகின் முன்னால், நீங்கள் உலக உபகாரி ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் ஆத்மாக்களுக்கு அன்புடன் மரியாதை கொடுத்தால் மட்டுமே நீங்கள் இதை அனுபவம் செய்வீர்கள்.
எனவே, தற்சமயம், ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டிய தேவை இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். மரியாதை கொடுக்கும் ஒருவர் மட்டுமே அருள்கின்ற ஆத்மாவாகக் காணப்படுவார். மரியாதை கொடுக்கும் குழந்தைகள் மட்டுமே, நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற பாப்தாதாவின் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியும் கீழ்ப்படிவான குழந்தைகள் ஆவார்கள். மரியாதை கொடுத்தல் என்றால் இறை குடும்பத்திற்காக இதயத்தில் அன்பைக் கொண்டிருப்பதாகும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களால், இலகுவாகத் தமது சுயமரியாதை ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடியும். ஏன்? நீங்கள் மரியாதை கொடுக்கின்றவர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் பெறுகின்ற ஆசீர்வாதங்களின் பொக்கிஷம் இலகுவாகவும் இயல்பாகவும் உங்களுக்கு உங்களின் சுயமரியாதையை நினைவூட்டும். ஆகவே, பாப்தாதா குறிப்பாக எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் இதைக் கீழ்க்கோடிடுகிறார்: மரியாதையை அருள்பவர் ஆகுங்கள்.
பாபாவிடம் வந்த எந்தக் குழந்தையையும் அவர் பலவீனமான குழந்தையோ, தனது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவரோ, பாவச் சுமைகளுடன் வந்தவரோ அல்லது கடுமையான சம்ஸ்காரங்களுடன் வந்தவரோ – பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் என்ன பார்வையுடன் பார்த்தார்? எனது அதியன்பிற்குரிய நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தை, அவர் இறை குடும்பத்தின் குழந்தை என்றே பார்த்தார். எனவே, அவர் அவர்களுக்கு மரியாதை கொடுத்தார். அதனால் அவர்கள் சுயமரியாதை உடையவர்கள் ஆகினார்கள். நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் இலகுவாக சகல நற்குணங்களும் நிரம்பியவராக ஆக விரும்பினால், மரியாதையை அருள்பவர் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இது இலகுதானே? இது இலகுவா அல்லது கஷ்டமா? ஆசிரியர்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது இலகுவா? சிலருக்கு மரியாதை கொடுப்பது இலகுவாகவும் ஏனையோருக்கு மரியாதை கொடுப்பது கஷ்டமாகவும் இருக்கிறதா? அல்லது, எல்லோருக்கும் மரியாதை கொடுப்பது எளிதாக இருக்கிறதா? எல்லோரையும் ஈடேற்றுபவர்கள் என்பதே உங்களின் பட்டம் ஆகும். நீங்கள் உங்களை அவமதிப்பவர்களையும் ஈடேற்றுபவர்கள். எனவே, சோதித்துப் பாருங்கள்! எல்லோரையும் ஈடேற்றுகின்றவராக இருக்கும் பார்வை, மனோபாவம், விழிப்புணர்வு என்னிடம் உள்ளதா? மற்றவர்களை ஈடேற்றுவது என்றால் உங்களையே ஈடேற்றுவதாகும். எனவே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்தானே? அப்போது தனிப்பட்ட முறையில் விடயங்களைக் கிரகிப்பதற்கு முயற்சி செய்வதில் இருந்து நீங்கள் விடுபட்டிருப்பீர்கள். இது ஏனென்றால், காலத்தின் வேகம் துரிதமாகச் செல்வதை பாப்தாதா பார்க்கிறார். காலம் காத்திருக்கிறது. எனவே, நீங்கள் எல்லோரும் ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். காலத்தை இனியும் காத்திருக்கச் செய்யக்கூடாது. நீங்கள் என்ன ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்? நீங்கள் முழுமையானவராகவும் சமமானவராகவும் ஆகும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்கிறீர்கள் எனச் சொல்லாதீர்கள். உங்களின் வேகம் எவ்வளவு துரிதமாக இருக்கிறது எனச் சோதியுங்கள். உங்களின் வேகம் துரிதமாக இருக்கிறதா?
புதிய குழந்தைகளும் இங்கே அன்புடன் வந்துள்ளார்கள். பாப்தாதா புதிய குழந்தைகளான உங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறார்கள். உங்களின் வீடான, தந்தையின் வீட்டுக்கு வரவேற்புகள். பாராட்டுக்கள்! அச்சா.
கர்நாடகா இந்தத் தடவை சேவை செய்கிறார்கள்: கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! சேவை செய்வதற்காக உங்களின் பொன்னான வாய்ப்புக்குப் பாராட்டுக்கள். பாருங்கள், நீங்கள் முதல் இலக்கத்தைப் பெற்றுள்ளீர்கள். எனவே, நீங்கள் முதல் இலக்கத்தவராக இருக்க விரும்புகிறீர்கள்தானே? நீங்கள் உங்களின் முயற்சிகளில், எல்லாவற்றிலும் வெற்றியாளர் ஆகுவதில் முதலாம் இலக்கத்தை எடுப்பவர்கள். இரண்டாம் இலக்கத்தை எடுக்காதீர்கள். முதல் இலக்கத்தைப் பெறுங்கள். உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? உங்களின் தைரியத்தால், நீங்கள் தந்தையிடம் இருந்து ஆயிரம் மடங்கு உதவியைப் பெறுவீர்கள். நீங்கள் மிக நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் உங்களின் புண்ணியக் கணக்கில் அதிகளவைச் சேமித்துள்ளீர்கள். அச்சா, கர்நாடகாவில் நீங்கள் மெகா நிகழ்ச்சியைச் செய்தீர்களா? நீங்கள் செய்யவில்லைத்தானே? ஏன் செய்திருக்கக்கூடாது? ஏன் நீங்கள் பெரிய நிகழ்ச்சியை நடத்தவில்லை? கர்நாடகா எல்லாவற்றிலும் முதல இலக்கத்தைப் பெற வேண்டும். (அவர்கள் அந்த நிகழ்ச்சியை பங்களுரில் நடத்துவார்கள்). அச்சா. மெகா நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள், எழுந்து நில்லுங்கள்! இதுவரை எத்தனை மெகா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன? (எட்டில் இருந்து பத்து வரை நடைபெற்றுள்ளன, மேலும் ஒன்று நடக்க இருக்கிறது). எனவே, பாப்தாதா மெகா நிகழ்ச்சிகளுக்காக மிகப்பெரிய பாராட்டுக்களை வழங்குகிறார். எத்தனை பிராந்தியங்கள் உள்ளன? ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஏனென்றால் உங்களின் நகரங்களில் முறைப்பாடுகளைச் செய்பவர்கள், முறைப்பாடு செய்ய மாட்டார்கள். நீங்கள் மெகா நிகழ்ச்சிகளைச் செய்யும்போது, ஊடகம், சுவரொட்டிகள், பெரிய விளம்பரப் பலகைகள் அல்லது பல்வேறு வழிமுறைகளினூடாக பெரிதளவில் விளம்பரப்படுத்துகிறீர்கள். அப்போது முறைப்பாடுகளும் குறைந்துவிடும். பாப்தாதா இந்தச் சேவையை விரும்புகிறார், ஆனால்..... ஓர் ஆனால் உள்ளது. நீங்கள் பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினீர்கள். அதற்காக ஏற்கனவே பாராட்டுக்களையும் பெற்றீர்கள். ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குறைந்தபட்சம் 108 மணி மாலையாவது தயார் செய்யப்பட வேண்டும். இன்னமும் அது நடைபெறவில்லை. குறைந்தபட்சம், 108 தயாராக வேண்டும். அதிகபட்சம் 16000 பேர் இருக்க வேண்டும். நீங்கள் அதிகளவு சக்தியையும் பணத்தையும் செலவிட்டுள்ளீர்கள். அதனால் குறைந்தபட்சம், 108 பேர் தயாராகுவதைப் பார்க்க பாப்தாதா விரும்புகிறார். வந்திருக்கும் எல்லோருடைய முகவரிகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். பெரிய நிகழ்ச்சிகளுக்கு மற்றவர்களைக் கொண்டு வந்தவர்களின் அறிமுகம் உங்களிடம் உள்ளது. எனவே, அவர்களை மீண்டும் நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். ‘எமது பங்கை நாம் செய்து விட்டோம்’ என நினைக்காதீர்கள். செய்யப்பட்ட எந்தப் பணியும் ஏதாவது பலனைக் கொடுக்கும். எனவே, பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் அதன் பெறுபேற்றை பாப்தாதாவிற்குக் கொடுக்க வேண்டும். அவர்கள் வெவ்வேறு நிலையங்களில் இருந்தாலென்ன அல்லது ஏனைய நகரங்களில் இருந்தாலென்ன, ஒரு பெறுபேற்றைக் கொடுக்க வேண்டும். இது ஓகேயா? இதைச் செய்யலாம்தானே? நீங்கள் சிறிதளவு கவனம் செலுத்தினால், அவர்கள் வெளிப்படுவார்கள். 108 என்பது எதுவுமேயில்லை. எவ்வாறாயினும், பாப்தாதா பெறுபேற்றைப் பார்க்க விரும்புகிறார். குறைந்தபட்சம் அவர்கள் மாணவர்கள் ஆகவேண்டும். அவர்கள் ஒத்துழைப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டும். உங்களில் எத்தனை பேரை வெளிப்படுத்துகிறீர்கள் என்ற பெறுபேற்றை பாப்தாதா இந்தப் பருவகாலத்தில் காண விரும்புகிறார். இது ஓகேயா? பாண்டவர்களே, இது ஓகேயா? எனவே, யார் முதலாம் இலக்கத்தவர் என நாம் பார்ப்போம். நீங்கள் எத்தனை பேரை வெளிப்படுத்தினாலும் பரவாயில்லை, நிச்சயமாக அவர்களை வெளிவரச் செய்யுங்கள். என்ன நடக்கிறது என்றால், நிகழ்ச்சிகள் முடிந்ததும் எதிர்காலத்தில் அவர்களுடன் தொடர்பில் இருப்பதற்குக் குறைவான கவனமே பேணப்படுகிறது. அவர்களை வெளிப்படச் செய்வது சிரமம் இல்லை. குழந்தைகளின் தைரியத்தைப் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
இப்போது, நீங்கள் எல்லோரும் ஒரு விநாடியில், ஒரு நிமிடமேனும் இல்லை, ஆனால் ஒரு விநாடியில் ‘நான் ஒரு தேவதை, தேவர் ஆகிக் கொண்டிருக்கிறேன்’ என்ற மனதின் அப்பியாசத்தை அனுபவம் செய்யுங்கள். ஒரு விநாடியில் இந்த அப்பியாசத்தை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் செய்யுங்கள். பௌதீக அப்பியாசம் உங்களின் சரீரத்தைப் பலம் வாய்ந்தது ஆக்குவதைப் போல், மனதின் அப்பியாசமும் உங்களின் மனதைச் சக்திவாய்ந்தது ஆக்கும். ‘நான் ஒரு தேவதை, இந்தப் பழைய உலகம், இந்தப் பழைய சரீரம், இந்தப் பழைய சரீரத்தின் சம்ஸ்காரங்கள் அனைத்தில் இருந்தும் பற்றற்று இருக்கும் ஒரு தேவதை ஆத்மா’. அச்சா.
எங்கும் உள்ள அதிகபட்ச அன்பான குழந்தைகள் எல்லோருக்கும் அன்புக்கடலின் அன்பிலே சதா திளைத்திருக்கும் ஆத்மாக்களுக்கும் சதா சகல சக்திகளுக்கும் உரிமையுள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும் தந்தையால் நேசிக்கப்படுவதுடன் தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற ஆத்மாக்களுக்கும் சதா சுயமரியாதையுடன் இருந்து ஒவ்வோர் ஆத்மாவிற்கும் மரியாதை வழங்குகின்ற ஒவ்வோர் ஆத்மாவிற்கும் எல்லோரிடம் இருந்தும் மரியாதையைப் பெறத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும் எப்போதும் எல்லோரையும் ஈடேற்றும் ஆத்மாக்களுக்கும் தயவு செய்து பாப்தாதாவிடமிருந்து இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் ஆசீர்வாதங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் கூடவே, உலகின் அதிபதிகளான ஆத்மாக்களுக்கும் நமஸ்தே.
தாதிஜியிடம்: மரியாதை கொடுப்பதில் நீங்கள் முதலாம் இலக்கத்தில் சித்தி எய்தியுள்ளீர்கள். இது நல்லது. தாதிகளான உங்கள் எல்லோராலும் மதுவனம் அழகு பெறுகிறது. (ஒன்றுகூடலில் இருப்பவர்களிடம்) நீங்கள் எல்லோரும் தாதிகளின் அழகையும் பிரகாசத்தையும் விரும்புகிறீர்கள். தாதிகளால் மதுவனத்தில் பிரகாசமும் அழகும் இருப்பதைப் போல். நீங்கள் எல்லோரும் தாதிகள் அல்ல. ஆனால் நீங்கள் தீதிகளும் தாதாக்களும் ஆவீர்கள். எனவே, தீதிகளும் தாதாக்களுமான நீங்கள் எல்லோரும் இதைப் பற்றிச் சிந்தித்து இதைச் செய்ய வேண்டும் - நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் அங்கே அழகும் பிரகாசமும் இருக்க வேண்டும். இந்த தாதிகள் அழகையும் பிரகாசத்தையும் கொடுப்பதைப் போல், ஒவ்வோர் இடத்தின் அழகும் பிரகாசமும் இருக்க வேண்டும். ஏனென்றால் தாதிகளின் பின்னால் தீதிகள் இருக்கிறார்கள். நீங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. தாதாக்களும் தீதிக்களும் இருக்கிறார்கள். எனவே, எந்தவொரு நிலையத்திலும் எந்தவிதமான வறட்சியும் இருக்கக்கூடாது. அழகும் பிரகாசமும் இருக்க வேண்டும். ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவருமே உலகிற்கு அழகையும் பிரகாசத்தையும் கொண்டு வருபவர்கள். எனவே, நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் அழகும் பிரகாசமும் உள்ள இடமாகத் தென்பட வேண்டும். இது ஓகேயா? உலகில், எல்லைக்குட்பட்ட அழகும் பிரகாசமும் உள்ளன. ஆனால் உங்கள் ஒவ்வொருவரிடம் எல்லையற்ற அழகும் பிரகாசமும் உள்ளன. நீங்களே அழகையும் சந்தோஷம், அமைதி, அதீந்திரிய சுகத்திற்கான பிரகாசத்தையும் கொண்டிருக்கும்போது, அந்த இடமே அழகாலும் பிரகாசத்தாலும் நிரம்பியிருக்கும். ஏனென்றால் உங்களினூடாகவே சூழல் எங்கும் பரவுகிறது. எனவே, நீங்கள் வாழும் இடத்தில் அழகும் பிரகாசமும் உள்ளதா, எந்தவிதமான துக்கமும் இல்லையே என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். எல்லோரும் சந்தோஷ நடனம் ஆடுகிறீர்களா? அப்படி உள்ளதுதானே? இது தாதிகளான உங்கள் எல்லோருடைய பணியாகும், அல்லவா? தீதிகளையும் தாதாக்களையும் பின்பற்றுங்கள். அச்சா.
தமது இதயங்களில் பாப்தாதாவை நினைவு செய்கின்ற எங்கும் உள்ள அன்பான குழந்தைகள் எல்லோருக்கும் கடிதங்கள் மற்றும் ஈமெயில்கள் மூலம் தமது நினைவுகளை அனுப்பி இருப்பவர்களுக்கும் பாப்தாதா அந்தக் குழந்தைகளைத் தொலைவில் இருப்பவர்களாகப் பார்க்கவில்லை, ஆனால் தனது இதய சிம்மாசனத்தில் இருப்பவர்களாகவே பார்க்கிறார். நெருக்கமாக இருப்பது இதயமே. தமது இதயபூர்வமான நினைவுகளை அனுப்பி உள்ளவர்களுக்கும் தமது நினைவுகளை அனுப்பாவிட்டாலும் நினைவில் இருப்பவர்களுக்கும் பாப்தாதா அவர்கள் அனைவரையும் தனது இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களாகவே பார்க்கிறார். அவர் உங்களுக்குப் பதில் அளிக்கிறார். தொலைவில் இருந்தாலும் நீங்கள் முதல் இலக்கத் துரித முயற்சியாளர் ஆகுவீர்களாக.
ஆசீர்வாதம்:
நீங்கள் கவனயீனத்தின் நித்திரையைத் துறந்து, நித்திரையை வென்றவராகி அதனால் உலகை ஆட்சி செய்பவர் ஆகுவீர்களாக.காட்சிகளை அருளும் ரூபம் ஆகி, பக்தர்களுக்குக் காட்சிகளை வழங்கி, அதனால் உலகை ஆள்பவர் ஆகுவதற்கு நித்திரையை வென்றவர் ஆகுங்கள். இது விநாசத்திற்கான நேரம் என்பதை நீங்கள் மறக்கும்போதே கவனயீனத்தின் நித்திரையில் ஆழ்ந்து விடுகிறீர்கள். பக்தர்களின் அழைப்பை, சந்தோஷமற்ற ஆத்மாக்களின் துன்ப அழுகுரலை, தாகமுள்ள ஆத்மாக்களின் பிரார்த்தனை ஒலியை நீங்கள் கேட்கும்போது ஒருபோதும் கவனயீனத்தின் நித்திரை கொள்ள மாட்டீர்கள். இப்போது, சதா விழித்திருக்கும் ஒளியாக ஆகி, கவனயீனத்தின் எந்தவொரு தூக்கத்தையும் துறந்து, காட்சிகளை அருளும் ரூபம் ஆகுங்கள்.
சுலோகம்:
உங்களின் சரீரம், மனம், செல்வத்தாலும் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களாலும் உங்களால் முடிந்த எந்த வழியிலாவது ஒத்துழையுங்கள். நீங்கள் இலகு யோகி ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
‘கடவுள் சத்தியமானவர்’ எனத் தந்தையைப் பற்றிக் கூறப்படுகிறது. தந்தை சத்தியத்தை விரும்புகிறார். பிரபு நேர்மையான இதயத்தை இட்டு மகிழ்ச்சி அடைகிறார். இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சேவையாளர் குழந்தைகளிடம் அவர்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் அவர்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் நேர்மையும் சுத்தமும் புலப்படும். அவர்களின் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமாகவே இருக்கும்.