23.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது, நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். கலியுகம் முடிவடைகின்ற பொழுது, சத்தியயுகம் மீண்டும் ஆரம்பமாகும். இந்த இரகசியங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்.
கேள்வி:
தங்கள் பாகங்களை நடிக்கும்போது ஆத்மாக்கள் களைப்படைவற்கான பிரதான காரணம் என்ன?பதில்:
அவர்கள் பெருமளவு பக்தியைச் செய்கின்றார்கள். அவர்கள் பல ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள். அவர்கள் பெருமளவு செல்வத்தைச் செலவழித்துள்ளார்கள். தடுமாறித் திரிந்ததன் மூலம், ஆத்மாக்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகி விட்டார்கள். அவர்கள் தமோபிரதான் ஆகியதால் சந்தோஷமற்று இருக்கிறார்கள். மக்கள் ஏதாவதொரு காரணத்தினால் விரக்தி அடையும்போது அவர்கள் களைப்பு அடைகின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களுடைய களைப்பு அனைத்தையும் அகற்றுவதற்கு வந்துள்ளார்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவருடைய பெயர் என்ன? சிவன் என்பதே. குழந்தைகளாகிய நீங்கள் இங்கே இருப்பதனால், நீங்கள் அனைவரும் இதை மிக நன்றாக நினைவு செய்யவேண்டும். இப்பொழுது இந்த நாடகத்தில் அனைவரது பாகமும் முடிவடைகின்றது. ஒரு நாடகம் முடிவடையவுள்ள பொழுது, தங்கள் பாகங்கள் முடிவடைகின்றன எனவும், பின்னர் தாங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் எனவும் நடிகர்கள் அனைவரும் அறிவார்கள். தந்தையும் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிந்துணர்வைக் கொடுத்துள்ளார். வேறு எவரும் இந்தப் புரிந்துணர்வைக் கொண்டிருப்பதில்லை. தந்தை இப்பொழுது உங்களை விவேகிகள் ஆக்கியுள்ளார். குழந்தைகளே, நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. இப்பொழுது மீண்டும் ஒருமுறை சக்கரம் தொடக்கத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும். புதிய உலகில் சத்தியயுகம் இருந்தது. இப்பொழுது பழைய உலகில் இது கலியுக இறுதியாகும். தந்தையைக் கண்டுகொண்டுள்ள நீங்கள் மாத்திரமே இந்த விடயங்களை அறிவீர்கள். புதிதாக வருகின்றவர்களுக்கு நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கலியுகத்தின் இறுதியின் பின்னர் சத்தியயுகம் மீண்டும் ஒருமுறை ஆரம்பமாகும். இங்கிருக்கும் ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. எனவே மக்கள் பிரளயம் இடம்பெறும் என நம்புகிறார்கள். எவ்வாறு பழைய உலகம் அழிக்கப்படுகின்றது என நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பாரத தேசம் அழிவற்றது. தந்தையும் இங்கேயே வருகின்றார். மற்றைய அனைத்துத் தேசங்களும் அழிக்கப்படும். இந்த எண்ணங்கள் வேறு எவரின் புத்தியிலும் புகமாட்டாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. பின்னர் அது மீண்டும் நடைபெறும். முன்னர் “நாடகம்” என்ற வார்த்தை உங்கள் புத்தியில் இருக்கவில்லை. இது உலக நாடகம், அதில் நாங்கள் அனைவரும் நடிகர்கள் என்று கூற வேண்டும் என்பதற்காகவே அதனைக் கூறினோம். முன்னர் நாங்கள் இதைக் கூறும்போது நாங்கள் எங்களைச் சரீரங்களாகக் கருதினோம். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அது இனிய வீடாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் அந்த அசரீரி உலகில் வசித்தோம். எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இல்லை. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். பழைய உலகம் முடிவடைகின்றபோது, பக்தியும் முடிவுக்கு வருகின்றது. யார் முதலில் வருகின்றார்கள் என்றோ அல்லது எவ்வாறு மதங்கள் வரிசைக்கிரமமாக வருகின்றன என்றோ சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. தந்தை இந்தப் புதிய விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். வேறு எவராலும் அவற்றை விளங்கப்படுத்த முடியாது. தந்தையும் ஒரு தடவை மாத்திரமே விளங்கப்படுத்துவதற்கு வருகின்றார். ஞானக்கடலான தந்தை, இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட்டுப் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்ற போது மாத்திரமே ஒருமுறை வருகின்றார். தந்தையின் நினைவுடன் கூடவே நீங்கள் இந்தச் சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது, நாங்கள் வீட்டுக்குத் திரும்பவுள்ளோம். எங்கள் பாகங்களை நடிக்கின்றபோது நாங்கள் களைப்படைந்து விட்டோம். நாங்கள் பெருமளவு பணத்தையும் செலவு செய்தோம். பக்தி செய்தவண்ணம் நாங்கள் சதோபிரதானில் இருந்து தமோபிரதானாகி விட்டோம். முழு உலகமும் பழையதாகி விட்டது. நீங்கள் நாடகத்தைப் பழையது என அழைப்பீர்களா? இல்லை, நாடகம் ஒருபோதும் பழையது ஆகுவதில்லை. ஒவ்வொரு நாளும் நாடகம் புதிதாக இருக்கின்றது. அது சதா தொடர்கின்றது. எவ்வாறாயினும், இந்த உலகமும் பழையதாகி, நடிகர்களும் தமோபிரதானாகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும், களைப்பு அடைந்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள். நீங்கள் சத்தியயுகத்தில் களைப்படைய மாட்டீர்கள். அங்கே களைப்படைதல் அல்லது எதைப் பற்றியும் விரக்தியடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே பலவகையான விரக்திகளைக் காண வேண்டியுள்ளது. இந்தப் பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் உறவினர் போன்றோர் எவரையும் நினைவு செய்யாதீர்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாவங்களை அழிக்க வேறு எந்த வழியும் இல்லை. கீதையிலே “மன்மனாபவ” என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் உலகின் வாரிசுகளாக, அதாவது, உலக அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது அந்த உலக வாரிசுகள் ஆகுகின்றீர்கள். ஆகையினால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் கலைகள் குறைவடைகின்ற பொழுது, பூந் தோட்டத்து மலர்கள் வாட ஆரம்பிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் மலர்களின் தோட்டமாக ஆகுகின்றீர்கள். சத்தியயுகம் ஒரு பூந்தோட்டமாகும், அது மிக அழகானது. பின்னர் படிப்படியாகக் கலைகள் குறைவடைய ஆரம்பிக்கும். இரு கலைகள் குறைவடைந்தவுடன் பூந்;தோட்டத்து மலர்கள் வாடுகின்றன. அது இப்பொழுது முட்காடாக ஆகியுள்ளது. இப்பொழுது நீங்கள் இதை அறிவீர்கள். உலகிலுள்ள வேறு எவரும் எதையுமே அறியமாட்டார்கள். நீங்கள் இப்பொழுது பெறுகின்ற இந்த ஞானம், புதிய உலகிற்கான புதிய ஞானமாகும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தையே இதைச் செய்பவர். தந்தையே உலகைப் படைப்பவர். அவர்கள் தந்தையை நினைவு செய்து, அவரை அழைக்கின்றார்கள்: வந்து சுவர்க்கத்தை ஸ்தாபியுங்கள்! சந்தோஷ உலகை ஸ்தாபியுங்கள்! ஆகவே, துன்ப உலகம் நிச்சயமாக அழிக்கப்படும். பாபா தினமும் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். இந்த விடயங்களைக் கிரகித்து, அவற்றை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். அனைத்துக்கும் முதலில் ‘எங்கள் தந்தை யார்? நாங்கள் யாரிடமிருந்து எங்களது ஆஸ்தியைக் கோருகின்றோம்?’ என்ற பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள். மக்கள் பக்தி மார்க்கத்திலே தந்தையாகிய கடவுளை நினைவு செய்கின்றார்கள். எங்கள் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளுங்கள் என அவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். ஆகையினால், குழந்தைகளாகிய நீங்களும் இந்த விழிப்புணர்வை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். பாடசாலையில் மாணவர்கள் வீட்டு விடயங்களை அல்லாது, அறிவையே தங்களின் புத்தியில் வைத்திருக்கின்றார்கள். மாணவ வாழ்க்கையில் எந்தவிதமான வியாபார விடயங்களும் இருக்க மாட்டாது. அவர்களுடைய கல்வி மாத்திரமே நினைவு செய்யப்படும். இங்கே வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து, செயல்களைச் செய்கின்ற போதிலும், தந்தையினால் இந்தக் கல்வியைக் கற்கும்படி உங்களுக்குக் கூறப்படுகின்றது. சந்நியாசிகள் செய்வது போன்று நீங்கள் வீட்டையும், குடும்பத்தையும் நீங்கி வரவேண்டும் என அவர் கூறுவதில்லை. இது இராஜயோகம், இது இல்லறப்பாதை ஆகும். அவர்களுடையது ஹத்தயோகமாகும் என சந்நியாசிகளுக்கும் நீங்கள் கூற முடியும். அவர்கள் தங்கள் வீடுகளைத் துறக்கின்றார்கள். இங்கு அவ்வாறில்லை. இந்த உலகம் மிகவும் அழுக்கானது! அதில் என்ன இருக்கின்றதெனவும் எவ்வாறு ஏழைமக்கள் வாழ்கின்றார்கள் என்றும் பாருங்கள். அதைப் பார்க்கும்போது விருப்பமின்மை ஏற்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தாளிகள் அனைவருக்கும் மிகச்சிறந்த இடங்களே காட்டப்படுகின்றன. எவ்வாறு ஏழைமக்கள் அந்த அழுக்கான இடங்களில் வசிக்கிறார்கள் என்பது அவர்களுக்குக் காட்டப்படுவதில்லை. இது நரகம். எவ்வாறாயினும் செல்வந்தர்கள் வசிக்கும் இடங்களுக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. அவை அனைத்தும் அவர்களின் கர்மக்கணக்காகும். சத்தியயுகத்தில் அவ்வாறு அழுக்கானவை இருக்கமாட்டாது. அங்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. சிலர் தங்கத்தாலும் சிலர் வெள்ளியாலும் சிலர் செங்கற்களாலும் மாளிகைகளைக் கட்டுவார்கள். இங்கே, பல்வேறு நாடுகள் இருக்கின்றன. ஐரோப்பாவும் மிகவும் பெரியது. அங்கே, நாங்கள் மாத்திரமே இருப்போம். இந்தளவையேனும் உங்கள் புத்தியில் வைத்திருப்பதனால், உங்கள் ஸ்திதி மிகவும் மலர்ச்சியாக இருக்கும். மாணவர்களாகிய நீங்கள் தந்தையின் இந்தக் கல்வியையும் ஆஸ்தியையும் மட்டுமே உங்களின் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். மிகச்சொற்ப நேரமே எஞ்சியுள்ளது என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிப் பேசுகின்றார்கள். இங்கே, இது 5000 வருடங்களுக்கான விடயமாகும். உங்கள் இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது எனவும், மீதி உலகம் அழிக்கப்படும் எனவும் குழந்தைகளாகிய உங்களால் புரிந்து கொள்ளமுடியும். இது ஒரு கல்வி. நீங்கள் மாணவர்கள் என்பதையும் கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் உங்கள் புத்தி நினைவு செய்தால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தையும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஏன் இதை மறக்கின்றீர்கள்? மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் இதையும் கூட உங்களை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் அனைவரும் இந்தப் பாடசாலையில் கற்கும் மாணவர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மற்றைய பாடசாலைகளில் உங்களுக்குப் பலவிதமான கல்விகள் கற்பிக்கப்படுகின்றன, பல ஆசிரியர்களும் இருப்பார்கள். ஆனால் இங்கே ஒரேயொரு ஆசிரியரே இருக்கிறார். அத்துடன் இந்த ஒரேயொரு கல்வியும் மாத்திரமே இருக்கின்றது. எவ்வாறாயினும் உதவி ஆசிரியர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். ஒரேயொரு பாடசாலை மாத்திரமே இருக்கின்றது. ஏனைய அனைத்தும் அதன் கிளைகளாகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே எங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை இங்கே வந்து அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அரைக் கல்பத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் என நீங்கள் அறிவீர்கள். ஆகையினால் சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார், அவர் சுவர்க்கம் எனும் படைப்பைப் படைக்கின்றார் என்ற சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்குக் கற்கின்றோம். நீங்கள் உள்ளே பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். வெளியிலுள்ள மாணவர்கள் தாங்கள் உண்பதற்கான உணவையும் பானத்தையும் தயார் செய்வதுடன் தமது வீட்டின் வேலைகளையும் செய்யவேண்டும். ஆம், சிலர் விடுதிகளில் தங்குகின்றார்கள், அதனால் அவர்களால் தங்கள் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியும். சில புத்திரிகள் சேவை செய்வதற்காக வெளியில் வசிக்கின்றார்கள். பலவிதமான மக்கள் அங்கே செல்கின்றார்கள். இங்கே, நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள், எவருமே அத்துமீறி வர முடியாது. உங்களுக்கு இங்கே வேறு எவரது சகவாசமும் இல்லை. நீங்கள் தூய்மை அற்றவர்களுடன் பேசத் தேவையில்லை. நீங்கள் எவருடைய முகத்தையும் பார்க்கத் தேவையில்லை. இருந்தபோதிலும் வெளியில் வசிப்பவர்களால் மிகவிரைவாகச் செல்ல முடிகின்றது. வெளியில் வசிப்பவர்கள் பலருக்குக் கற்பித்து அவர்களைத் தங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கி, இங்கே அழைத்து வருவதும் ஓர் அற்புதமேயாகும். அவர்கள் என்ன செய்தியைக் கொண்டு வந்துள்ளார்கள் என பாபா கேட்கின்றார். என்ன வகையான நோயாளிகளை அழைத்து வந்துள்ளீர்கள்? சில நோயாளிகளின் நோய் எப்படிப்பட்டதென்றால், அவர்கள் 7 நாள் பத்தியில் இருத்தப்பட வேண்டும். நீங்கள் எந்தச் சூத்திரர்களையும் இங்கே அழைத்து வரக்கூடாது. இந்த மதுவனம் பிராமணர்களாகிய உங்களின் கிராமம் போன்றது. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் இங்கே அழைத்து வரும் எந்தச் சூத்திரர்களும் அதிர்வலைகளைப் பாழாக்கி விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களின் செயற்பாடுகளும் நடத்தையும் மிகவும் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது அங்கே என்ன நடக்கும் என்றும், அங்கு மிருகங்களும் கூட எவ்வாறு மிக நல்லவையாக இருக்கும் என்ற காட்சிகள் பலவற்றையும் காண்பீர்கள். அனைத்துமே மிக நன்றாக இருக்கும். சத்திய யுகத்திலுள்ள எதுவுமே இங்கே இருப்பதில்லை, அத்துடன் இங்கிருக்கும் எவையுமே அங்கே இருக்க மாட்டாது. நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வதற்கான பரீட்சைகளில் சித்தி அடைகின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் இருக்கின்றது. எந்தளவிற்கு நீங்கள் கற்கிறீர்களோ, அதற்கேற்ப நீங்கள் ஓர் ஆசிரியராகி, மற்றவர்களுக்கும் பாதையைக் காட்டுகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள். நீங்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, நீங்கள் தந்தையிடமிருந்து பெறுகின்ற இந்த ஆஸ்தியைப் பற்றி அவர்களுக்குக் கூறுங்கள். தந்தையே கீதையைப் பேசினார். பிரஜாபிதா பிரம்மா இருக்கின்றார், எனவே பிராமணர்களும் இங்கே இருக்க வேண்டும். பிரம்மாவும் தொடர்ந்தும் சிவபாபாவிடமிருந்து கற்கின்றார். நீங்கள் விஷ்ணுதாமத்திற்குச் செல்வதற்காக இப்பொழுது கற்கின்றீர்கள். அது உங்களின் அலௌகீக வீடாகும். லௌகீக, பரலோக, பின்னர் அலௌகீக வீடுகள் இருக்கின்றன. இவை புதிய விடயங்கள். பக்திமார்க்கத்து மக்கள் ஒருபோதும் பிரம்மாவை நினைவு செய்வதில்லை. எவ்வாறு “பிரம்மாபாபா” எனக் கூறுவது என்றும் எவருக்கும் தெரியாது. அவர்கள் சிவபாபாவை நினைவுசெய்து பிரார்த்திக்கின்றார்கள்: எங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை ஆக்குங்கள்! அவர் பரலோகத் தந்தையும், இவர் அலௌகீகத் தந்தையும் ஆவார். நீங்கள் இவரைச் சூட்சும உலகிலும், இங்கேயும் காண்கின்றீர்கள். லௌகீகத் தந்தையை இங்கே இந்த உலகில் மாத்திரமே காண முடியும். ஆனால் பரலோகத் தந்தையை அப்பாலுள்ள உலகில் மாத்திரமே காண முடியும். இவர் பின்னர் அற்புதமான, அலௌகீகத் தந்தையாவார். மக்கள் இந்த அலௌகீகத் தந்தையைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது குழப்பம் அடைகின்றார்கள். சிவபாபா அசரீரியானவர் என அழைக்கப்படுகின்றார். அவர் ஒரு ஒளிப்புள்ளி என நீங்கள் கூறுகின்றீர்கள். மக்கள் அவர் அநாதியான ஒளி அல்லது பிரம்ம தத்துவம் என அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள், ஆனால் உங்களுக்கு ஒரு வழிகாட்டல் மாத்திரம் உள்ளது. தந்தை இவரின் மூலமாக வழிகாட்டல்களைக் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் அதிகளவு விரிவாக்கம் ஏற்பட்டது. ஆகையினால், சிவபாபாவே கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அவர் உங்களைத் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மை ஆக்குகின்றார். இராவண இராச்சியத்தில் நீங்கள் நிச்சயமாகத் தூய்மை அற்றவர்களாகவும் தமோபிரதானாகவும் ஆகவேண்டும். அதன்பெயரே தூய்மையற்ற உலகாகும். அனைவரும் சந்தோஷமற்று இருப்பதால், அவர்கள் தந்தையை நினைவுசெய்து பிரார்த்திக்கின்றார்கள்: பாபா, எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தை அருளுங்கள்! குழந்தைகள் அனைவருக்கும் ஒரேயொரு தந்தை மாத்திரமே இருக்கின்றார். அவர் அனைவருக்கும் சந்தோஷத்தை மாத்திரம் கொடுப்பார். புதிய உலகில் சந்தோஷத்தைத் தவிர உங்களுக்கு வேறெதுவும் இல்லை. ஏனைய அனைவரும் அமைதிதாமத்தில் இருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது அமைதி தாமத்திற்குச் செல்ல இருக்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நேரம் நெருங்கிவரும் பொழுது, இன்றைய உலகம் எவ்வாறுள்ளது என்றும், நாளைய உலகம் எவ்வாறு இருக்கும் என்றும் உங்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும். நீங்கள் அனைத்தையும் காண்பீர்கள். சுவர்க்க இராச்சியம் நெருங்கி வருவதை நீங்கள் காண்பீர்கள். ஆகையினால் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ள பிரதான விடயம்: நீங்கள் ஒரு பாடசாலையில் இருக்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி நினைவு செய்யட்டும். சிவபாபா வந்து இந்த இரதத்தை ஓட்டியவாறே எங்களுக்குக் கற்பிக்கின்றார். இவர் பாக்கிய இரதமாவார். தந்தையும் நிச்சயமாக ஒருமுறை மாத்திரமே வருவார். “பாக்கிய இரதம்” என்ற பெயரின் அர்த்தம் என்ன என்று எவருமே அறியமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே நேரடியாகத் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கும் போது, பாபா வந்துவிட்டார் என்பதை உங்கள் புத்தி நினைவுசெய்ய வேண்டும். அவர் எங்களுக்கு உலகச் சக்கரத்தின் இரகசியங்களை கூறுகின்றார். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். இதைப் புத்தியில் வைத்திருப்பது மிக இலகுவானது! எவ்வாறாயினும் உங்களிற் சிலரால் இதைக்கூட நினைவுசெய்ய முடியாதிருக்கின்றது. சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பின்னர் நாங்கள் புதிய உலகத்திற்குச் சென்று எங்கள் பாகங்களை நடிப்போம். எங்களுக்குப் பின்னர் இன்னார் இன்னார் வருவார்கள். எவ்வாறு முழுச் சக்கரமும் சுழல்கின்றது என்பதையும், எவ்வாறு உலகச் சனத்தொகை அதிகரிக்கின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அது புதியதில் இருந்து பழையதாகவும் பின்னர் பழையதில் இருந்து புதியதாகவும் ஆகுகின்றது. விநாசத்துக்கான ஆயத்தங்களையும் உங்களால் காணமுடியும். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். தயாரிக்கப்பட்டுள்ள பலவகையான குண்டுகளும் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும். மனிதர்கள் சண்டையிடத் வேண்டிய தேவையில்லாத வகையில் குண்டுகள் மூலம் பெருமளவு விநாசம் நடைபெறும். இராணுவத்தில் இருந்து படையணியினர் விடுவிக்கப்பட்டு, குண்டுகள் தொடர்ந்தும் வீசப்படும். ஆகையினால் தங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட அந்த மக்கள் அனைவரும் பட்டினியில் மரணிப்பார்கள். இவை அனைத்தும் நடைபெறவுள்ளது. பின்னர் இராணுவவீரர்கள் என்ன செய்வார்கள்? பூமியதிர்ச்சிகளும் இடம்பெறும். குண்டுகள் தொடர்ந்தும் வீசப்படும். மக்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் கொல்வார்கள். காரணமில்லாமல் இரத்தக்களறி ஏற்படும். ஆகையினால் நீங்கள் இங்கே வந்து அமரும்போது, இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். சதா அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். நான் எதனை நினைவு செய்கின்றேன்? என உங்கள் இதயத்தைக் கேளுங்கள். நீங்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருக்காது விடின், உங்கள் புத்தி நிச்சயமாக வேறு எங்காவது அலைபாயும். அதன் மூலம் உங்களது பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். நல்லது. உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாதுவிடின், சக்கரத்தைப் பற்றி நினையுங்கள். அப்பொழுது சந்தோஷம் இருக்கும். எவ்வாறாயினும் நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டாலும் சேவை செய்யாது விட்டாலும் உங்களால் பாப்தாதாவின் இதயத்தில் அமர முடியாது. நீங்கள் சேவை செய்யாது விடின், பலருக்கும் விரக்தியை ஏற்படுத்துவதற்குக் காரணம் ஆகுவீர்கள். சிலர் பலரைத் தங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கி, அவர்களைத் தந்தையிடம் அழைத்து வருகின்றார்கள். ஆகையினால் பாபா அவர்களைப் பார்ப்பதில் மிகவும் பூரிப்படைகின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா முகமலர்ச்சியாக இருப்பதற்கு, இந்தக் கல்வியையும், உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தையையும், உங்கள் புத்தியில் வைத்திருங்கள். உண்ணும் போதும், அருந்தும் போதும், எந்தச் செயலையும் செய்யும்போதும் இந்தக் கல்வியில் முழுக்கவனம் செலுத்துங்கள்.2. பாப்தாதாவின் இதயத்தில் அமர்வதற்கு, ஸ்ரீமத்தைப் பின்பற்றி பலரை உங்களுக்குச் சமமாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
சரீரமற்ற நிலை என்ற ஊசிமருந்தால் உங்களின் மனதைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தக் கூடியவர் ஆகுவீர்களாக.தற்காலத்தில், யாராவது ஒருவரைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, அவர் அதிகளவு குழப்பத்தை விளைவித்தால், அங்குமிங்கும் பாய்ந்து கொண்டு அல்லது பித்துப்பிடித்து நடந்தால், அவரை அமைதிப்படுத்துவதற்காக ஓர் ஊசிமருந்து ஏற்றப்படுகிறது. அதேபோல், உங்களின் எண்ணத்தின் சக்தியானது உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாவிட்டால், சரீரமற்ற நிலை என்ற ஊசி மருந்தை உங்களுக்கே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது உங்களின் எண்ணத்தின் சக்தி அங்குமிங்கும் பாயாது. உங்களால் இலகுவாக ஒருமுகப்பட முடியும். எவ்வாறாயினும், உங்களின் புத்தியின் கடிவாளங்களைத் தந்தையிடம் கொடுத்துவிட்டுப் பின்னர் அவற்றை மீண்டும் எடுத்துக் கொண்டால், உங்களின் மனம் தேவையற்ற, கடின உழைப்பை உருவாக்கும். இப்போது தேவையற்ற, கடின உழைப்பில் இருந்து விடுபடுங்கள்.
சுலோகம்:
உங்களின் மூதாதை ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, ஆத்மாக்கள் எல்லோருக்கும் கருணை காட்டுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
எப்படி ஆத்மாவும் சரீரமும் ஒன்றிணைந்து செயல்களைச் செய்கிறதோ, கர்மமும் யோகமும் ஒன்றிணைந்து இருக்கும். செயல்களைச் செய்யும்போது, நினைப்பதை மறக்காதீர்கள். நினைவில் இருக்கும்போது, கர்மத்தை மறக்காதீர்கள். ஏனென்றால், உங்களின் பட்டமே கர்மயோகி என்பதாகும். செயல்களைச் செய்யும்போது நினைவில் இருப்பவர்கள், சதா பற்றற்றவராகவும் அன்பாகவும் இருப்பார்கள். அவர்கள் இலேசாக இருப்பார்கள். ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதுடன்கூடவே, சக்திவாய்ந்த ஸ்திதியிலும் இருப்பார்கள். ஞானம் நிறைந்தவராக இருப்பதுடன் சக்திவாய்ந்தவராகவும் இருக்கும் ஸ்திதிகள் இரண்டும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அப்போது ஸ்தாபனைப் பணி துரித வேகத்தில் இடம்பெறும்.