23.06.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மகா பாக்கியசாலிகள், ஏனெனில் ரிஷிகளும் முனிவர்களுமே கற்காததொரு கல்வியைக் கடவுள் உங்களுக்குக் கொடுக்கின்றார்.

கேள்வி:
உலக மக்கள் அறியாத, நாடகத்தின் எந்ததொரு நியதியைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்?

பதில்:
இந்த உருத்திர ஞான யாகத்தில் இருந்து விநாசத்தின் சுவாலைகள் வெளிப்பட உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இப்பழைய உலகம் முழுவதுமே இப்பொழுது அதில் அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த நியதியை எவராலுமே தடுக்க முடியாது. இந்த அழிவற்ற யாகத்திலேயே குதிரை அர்ப்பணிக்கப்பட்டதுடன், அனைத்தும் அர்ப்பணிக்கப்பட உள்ளன. நாங்கள் இந்தத் தூய்மையற்ற உலகிற்குத் திரும்பி வரப் போவதில்லை. இது கடவுளால் உருவாக்கப்பட்ட நியதி அல்ல, ஆனால் இது நாடகத்தினால் உருவாக்கப்பட்ட நியதியாகும்.

பாடல்:
உங்கள் இதயம் என்ற கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்கள். இது மனிதர்களின் உலகமே ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் பிராமண தர்மத்தைச் சேர்ந்த மனிதர்கள். தந்தை ஆத்மாக்களுக்கே கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் ஆதி தர்மத்தின் விழிப்புணர்வில் இருக்கின்றீர்கள்: இந்த ஆத்மாவாகிய நானே இச்சரீரத்தை இயக்குகின்றேன். இது ஆத்மாவின் இரதமாகும். தந்தை இந்த இரதத்தைச் செலுத்துவதைப் போன்றே, ஆத்மாக்களாகிய நீங்களும் இரதங்களைச் (சரீரங்களை) செலுத்துகின்றீர்கள். அவர்கள் அமைதி சொரூபமானவர்கள் என்ற ஞானத்தையும், அசரீரி உலகமே தமது வசிப்பிடமும் என்பதையுமே ஆத்மாக்கள் மறந்துள்ளார்கள். நாங்கள் இச்சரீரங்களை இங்கேயே பெறுகின்றோம். இவ்வாறாக உங்களுடன் நீங்கள் உரையாடலாம். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபமானவர்கள். நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்க விரும்பினால், அப்பொழுது நீங்கள் அமைதி தாமத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் என உங்களைக் கருதுங்கள். உங்களால் சிறிது நேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருக்க முடியும். மக்கள் அமைதியை வேண்டுகின்றார்கள். ஆத்மா கூறுகின்றார்: எனது மனமே அமைதியை விரும்புகின்றது. எவ்வாறாயினும், மக்கள் தாம் ஆத்மாக்கள் என்பதை அறியாதிருக்கின்றார்கள்; இதனை அவர்கள் மறந்து விட்டார்கள். தனது கழுத்திலேயே அணிந்திருந்த அட்டியலை எங்கும் தேடிய ஓர் அரசியைப் பற்றிய ஒரு கதையுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அமைதியே உங்கள் ஆதி தர்மம். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபமானவர்கள் என்பதையும், உங்கள் பாகங்களை நடிக்கவே நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அந்த அங்கங்களில் இருந்து விடுபட்டிருக்கும் பொழுதே, ஆத்மாக்களான நீங்கள் அமைதியாக இருக்கின்றீர்கள். ஓர் ஆத்மா தான் விரும்பியளவிற்குத் தனது அமைதி தர்மத்தில் நிலைத்திருக்க முடியும். உங்கள் சரீரத்தினால் நீங்கள் வேலை செய்ய விரும்பாது விட்டால், அமைதியாக அமர்ந்திருங்கள். இதுவே உண்மையான அமைதியாகும். அதனை நீங்கள் தேட வேண்டியதில்லை. உங்கள் ஆதிதர்மம் அமைதி. நீங்கள் இப்பொழுது இங்கே உங்கள் பாகங்களை நடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் பாகங்களான 84 பிறவிகளை நீங்கள் நடித்திருப்பதைத் தந்தையின் மூலம் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். எவருக்குமே 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றித் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். முதலில், நாங்கள் சூரிய வம்ச அரசர்களாகவும், பிரஜைகளாகவும், பின்னர் நாங்கள் சந்திர வம்சத்திலும், அதன்பின்னர் வைசிய வம்சத்திலும் அதன்பின்னர் சூத்திர வம்சத்திலும் இருந்தோம். நாங்கள் மீண்டும் சூரிய வம்சத்தினரில் ஒருவராக ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் மகா பாக்கியசாலிகள். தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிகச்சரியாக விளங்கப்படுத்துகின்றார். இது சத்கதிக்கான பாதையாகும். அனைவருக்கும் சத்கதியை அருள்பவர் ஒரேயொருவரே என்பதை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குச் சத்கதியைப் பெறுவதற்குத் தந்தை உங்களுக்கு உதவுவதை நீங்கள் அறிவீர்கள். வெளியில் உள்ள மக்களுக்கு இவ்விடயங்கள் பற்றி எதுவும் தெரியாது. பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். பிரம்மாகுமாரிகளின் உங்களுக்கு என்ன தெரியும் என்று சிலர் வினவுகின்றார்கள். ஒருவர் பிராமணரா, இல்லையா என்பதைச் சோதிப்பதற்கு ஒரு பரீட்சை இருக்க வேண்டும். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாயின், உங்களுக்கு நிச்சயமாக உலகச் சக்கரத்தைப் பற்றித் தெரிய வேண்டும். உங்களுக்குப் படைப்பவரான தந்தையைத் தெரியுமா? ரிஷிகளும் முனிவர்களுமே படைப்பவரைப் பற்றியோ, படைப்பைப் பற்றியோ எதுவும் அறியாதிருக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் நாஸ்திகர்கள். நீங்களும் நாஸ்திகர்களாகவே இருந்தீர்கள். நீங்களும் படைப்பவரான தந்தையையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறிந்திருக்கவில்லை. கல்வி அறிவில்லாதவர்களே பாடசாலைக்குச் செல்கின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் தாம் பாடசாலையில் இதையும், அதையும் கற்றோம் எனக் கூறுவார்கள். நீங்கள் இப்பொழுது இந்த இறை கல்வியைக் கற்கின்றீர்கள். பரமாத்மாவான பரமதந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனை உங்கள் புத்திகள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரேயொரு சிவபாபாவே படைப்பவர். உருத்திரரே ஞான யாகத்தை உருவாக்கினார் எனச் சமயநூல்களில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பரமாத்மாவான சிவனிற்கும் உருத்திரருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. ஞான யாகத்திலிருந்தே விநாசச் சுவாலைகள் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. அவர்கள் சிவனான உருத்திரனுக்குப் பதிலாக ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். இது அதே கீதையே. விநாசச் சுவாலைகள் இந்த ஞான யாகத்தில் இருந்தே தோன்றின என அவர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, இந்த ஞானயாகம் சுய இராச்சியத்தை அடைவதற்கு உரியது. இதில் இப்பழைய உலகம் அர்ப்பணிக்கப்பட உள்ளது. அவர்கள் தம்மிடமுள்ள சகல ஆகுதிகளையும் யாகத்தினுள் இடுகின்றார்கள்; அவர்கள் அனைத்தையும் அர்ப்பணிக்கின்றார்கள். எனவே உருத்திரரின் இந்த ஞான யாகத்தினுள் முழு உலகமும் அர்ப்பணிக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றீர்கள். நீங்கள் இந்தத் தூய்மையற்ற உலகிற்குத் திரும்பி வர மாட்டீர்கள். இவ்வுலகம் அழிய உள்ளது. இயற்கை அனர்த்தங்கள் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். சிவபாபா கூறுகின்றார்: எனது புத்தியிலேயே நான் ஞானம் முழுவதையும் கொண்டிருக்கின்றேன். தந்தையே உண்மையானவரும் உணர்வுள்ளவரும் ஞானக்கடலும் ஆவார். அவருக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். ரிஷிகளும், முனிவர்களும் தமக்குப் படைப்பவரையும் தெரியாது, படைப்பையும் தெரியாது என்று கூறுகின்றார்கள். இங்கே உங்களுக்கு என்ன கிடைக்கின்றது என மக்கள் வினவும்பொழுது அவர்களிடம் கூறுங்கள்: மகாரிஷிகளும் முனிவர்களும் தமக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியாது எனக் கூறினார்கள். அவர்கள் அறியாததை நாங்கள் இப்பொழுது அறிந்திருக்கின்றோம். வேறு எவராலும் அன்றித் தந்தையினால் மாத்திரமே படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்த முடியும். படைப்பவரால் மாத்திரமே அவற்றை விளங்கப்படுத்த முடியும். இராணித் தேனி ஒன்றுண்டு. ஏனைய அனைத்துத் தேனிக்களும் அதைப் பின்தொடர்ந்தும் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றிற்குத் தாயான இராணித் தேனியுடன் மிகவும் ஆழமானதோர் உறவுமுறை உள்ளது. எல்லையற்ற தந்தை வரும்பொழுது, அவர் குழந்தைகள் அனைவரையும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். பாபா வந்துள்ளார் என்பதையும், அவர் ஆத்மாக்கள் அனைவரையும் அமைதி தாமத்திற்குத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அதன்பின்னர் சத்தியயுகத்தில் எங்கள் பாகங்கள் மீண்டும் ஆரம்பமாகும். அப்பாகங்களை நடிப்பதற்காகவே நாங்கள் இந்தத் தேவ அந்தஸ்தைப் பெறுகின்றோம். மனிதர்களாகிய நீங்கள் தேவ அந்தஸ்தைப் பெறுவதற்கே இங்கே வருகின்றீர்கள். இங்கேயே அனைத்துத் தெய்வீகக் குணங்களும் கிரகிக்கப்பட வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி நாராயணனைப் போன்றவர்கள் ஆக வேண்டும். தெய்வீகக் காட்சிகளில் அன்றி, எவராலும் அவர்களைப் பார்க்க முடியாது. நீங்கள் இப்பொழுது சூரிய வம்சத் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். சுவர்க்க இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை உங்கள் புத்திகள் அறிந்துள்ளன. சத்தியயுகத்தில் தேவ இராச்சியம் இருந்தது. எவ்வாறாயினும், தேவ உலகிலும் அசுரர்கள் போன்றோர் இருந்தார்கள் என மக்கள் சித்தரித்துள்ளார்கள். பாரதம் எவ்வளவு தூய்மையாக இருந்தது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். மக்கள் புகழ் பாடுகின்றார்கள்: நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்…. அவர்களின் விக்கிரகங்களையும் அவர்கள் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவர்களுக்கெனப் பல ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆனால் எவ்வாறு, எப்பொழுது சத்தியயுகத்தின் ஆதி சனாதன தேவதேவியரின் தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். மிகவும் மேன்மையாக இருந்த பாரதம் எவ்வாறு இந்தளவிற்குச் சீரழிந்தது? இதனை எவருமே அறியார். அந்த நியதி ஏற்கனவே உருவாக்கப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றார்கள். எதன் நியதி? இதனையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நாடகத்தின் நியதியை அவர்கள் புரிந்து கொள்வார்களாயின், நாடகத்தைப் படைப்பவரும், அதன் இயக்குனரும் யார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அது கடவுளின் நியதி என அவர்கள் கூறுகின்றார்கள். நாடகத்தைப் பற்றிப் பேசும் ஒருவருக்கு அதன் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியும் தெரிய வேண்டும். ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலம் உங்களால் நாடகத்தை அறிந்து கொள்ள முடியாது. நீங்கள் சென்று நாடகத்தைப் பார்க்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகள் பற்றிய ஒரு நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது எனப் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அதனைப் பார்க்காமல் எவராலும் அதனைப் புரிந்து கொள்ள முடியாது. அதனை அவர்கள் பார்க்கும் பொழுதே, நாடகத்தில் நடப்பவை அனைத்தையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நாடகத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். உலகின் இந்த வரலாறும் புவியியலும் தொடர்ந்தும் சுழல்கின்றன என்று மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் அது எவ்வாறு சுழல்கின்றது என்பது எவருக்கும் தெரியாது. யுகங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன: சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம். அதன்பின்னர் இந்தச் சங்கமயுகம உளளது. எவ்வாறாயினும், மக்கள் இதனையிட்டுக் கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றார் என்றே புரிந்து கொண்டுள்ளார்கள். சத்திய, திரேதா யுகங்களுக்கான சங்கமமும் உள்ளது. ஆனால் அந்தச் சங்கமத்திற்கு எவ்விதமான முக்கியத்துவமும் இல்லை. அந்த நேரத்தில் எதுவும் நடப்பதில்லை. சத்தியயுக சூரிய வம்சம் எவ்வாறு திரேதாயுக சந்திர வம்சத்திடம் கையளிக்கப்பட்டது என்பதை நீங்கள் மாத்திரமே அறிந்திருக்கின்றீர்கள். சந்திரவம்சம் சூரியவம்சத்தை வெற்றி கொள்ளவில்லை; இல்லை. சூரிய வம்சத்தின் அரசரும் அரசியும் சந்திரவம்ச அரசருக்கும் அரசிக்கும் இராச்சிய பாக்கியம் என்ற திலகத்தையிட்டுச் சிம்மாசனத்தில் அவர்களை அமர்த்துகின்றனர். அதன்பின்னர் அவர்களுக்கு அரசர் இராமர் என்றும், அரசி சீதை என்றும் பட்டம் சூட்டப்படுகின்றது. அதனை அவர்களுக்குக் கொடுத்தவர் யார்? சூரிய வம்சமே ‘இப்பொழுது நீங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்யுங்கள்’ எனக் கூறி, அதனை வழங்கியதாகக் கூறப்படும். குழந்தைகளாகிய நீங்கள் இதனைத் தெய்வீகக் காட்சிகளில் கண்டிருக்கின்றீர்கள். ஒரு யுத்தம் இடம்பெறுகின்றது என்றில்லை. ஓர் இராச்சியம் கையளிக்கப்படுவதைப் போன்றே, இந்த இராச்சியமும் கொடுக்கப்படும். சூரியவம்சம் சந்திர வம்சத்திற்குப் பாத பூஜை செய்து, அவர்களுக்கு இராச்சியம் என்ற திலகத்தை இடுகின்றது. அங்கே குரு போன்றோர் எவரும் இருப்பதில்லை. நீங்களே தெய்வீக சுபாவங்கள் நிறைந்தவர்கள் ஆகுவது என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. நாங்கள் சூரிய வம்ச, சந்திரவம்ச இராச்சியங்களில் இருக்கும்பொழுது, அதிகளவு சந்தோஷமாக இருப்போம். பாபா எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்துச் சந்தோஷத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். வேறு எவராலும் எங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்க முடியாது. சாதுக்கள் தாமே அமைதி தாமத்திற்குச் செல்லவே விரும்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அந்தச் சாதுக்களையும் ஈடேற்;றி, அவர்கள் அனைவரையும் அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். சந்நியாசிகள் துவாபர யுகத்திலேயே வருகின்றார்கள். தேவர்களாகிய நாங்கள் மாத்திரமே சுவர்க்கத்தில் இருப்போம். அங்கே வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. சூரியவம்சப் பிரிவானது சந்திர வம்சத்தை விட வேறுபட்டது. பின்னர் தொடர்ந்து வருகின்ற இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சந்நியாசிகள் போன்றோரின் பிரிவுகளும் உள்ளன. அவர்கள் அனைவருமே தத்தமது தனிப்பட்ட பிரிவைக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஆட்சிசெய்த பொழுது, வேறு எவரும் இருக்கவில்லை. இத்தகைய வரிசைக்கிரமமான ஒரு மாலை அசரீரி உலகில் உருவாக்கப்படுகின்றது. ஆதி சனாதன தேவதேவியரின் தர்மமே முதல் சமுதாயம் ஆகும். ஏனைய அனைத்துச் சமுதாயத்தினரும் பின்னரே வருகின்றனர். இதுவே அனைத்திலும் அதி மகத்தான சமுதாயம் ஆகும். இதிலிருந்தே ஏனைய சமய ஸ்தாபகர்கள் அனைவரும் வெளிப்படுகின்றனர். நாங்களே முதல் சமுதாயத்தினர், அதன்பின்னர் நூறாயிரம் சிறிய, எல்லைக்கு உட்பட்ட சமுதாயங்கள் உள்ளன. இங்கே, நான்கு பிரதான சமுதாயங்கள் உள்ளன. நாங்கள் முதலில் வருகின்றோம். பின்னர் இஸ்லாமைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். அதன்பின்னர் பௌத்தர்களும், அதன்பின்னர் கிறிஸ்தவர்களும் வருகின்றனர். நாங்கள் இப்பொழுது கீழே வீழ்ந்து விட்டோம். எங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நாங்கள் நடிக்க வேண்டும். இப்பொழுது இறுதி இலக்கத்தில் இருப்பவர்கள், பின்னர் முதல் இலக்கத்தினர் ஆகுவார்கள். தேவர்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்களாக இருப்பதால், அவர்களால் தம்மைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. தேவர்கள் வழிபாடு செய்யப்படுகின்றார்கள், அவர்கள் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கின்றது. சீக்கியர்கள் குரு நானக்கின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் அவரது வம்சாவளி விருட்சத்தைச் சேர்ந்தவர்களே. எங்களது வம்சாவளி விருட்சமே சத்தியயுகத்தில் முதலாவதாகும். இதனை விட உயர்ந்த வம்சாவளி விருட்சம் எதுவும் இருப்பதில்லை. நாங்கள் அதிமேலான சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதிகபட்ச சந்தோஷத்தை அனுபவம் செய்பவர்களும் நாங்களே, பின்னர் ஏழ்மையில் வீழ்பவர்களும் நாங்களே. நாங்களே அதிகபட்ச துன்பத்தை அனுபவம் செய்பவர்களும் ஆவோம். நாங்களே தொடர்ந்தும் கடனாளிகள் ஆகியவர்களும் ஆவோம். நாங்கள் அதிகளவு செல்வந்தராக இருந்தோம், இப்பொழுது மிகவும் ஏழைகள் ஆகியுள்ளோம்; நாங்கள் அனைத்தையும் இழந்துள்ளோம். இது துன்ப உலகமாகும். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்குச் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். ஏனைய அனைவரும் அமைதியில் இருக்கின்றார்கள். அவர்கள் முக்தியை விரும்புகின்றார்கள். சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது என்று அவர்கள் கருதுகின்றார்கள். அவர்களுக்குச் சந்தோஷ உலகத்தின் அனுபவம் எதுவும் இல்லை. உங்களுக்கு அந்தச் சந்தோஷம் உள்ளது. அவர்கள் அதன் புகழைப் பாடிய பொழுதிலும், தூய்மை அற்றவர்கள் ஆகியதால், அதனை மறந்துள்ளார்கள். தந்தை இப்பொழுது ஞாபகப்படுத்துகின்றார்: ஓ பாரதவாசிகளே, நீங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். உங்கள் பெயரை நீங்கள் துவாபர யுகத்திலேயே மாற்றினீர்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் பாடுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நீங்கள் எத்தனை பிறவிகள் தூய உலகிலும், எத்தனை பிறவிகள் இந்தத் தூய்மையற்ற உலகிலும் இருந்தீர்கள் எனத் தந்தை உங்களிடம் கூறியுள்ளார். நீங்கள் இப்பொழுது மீண்டும் அந்தத் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். இதுவே சகல கற்கும் இடங்களை (பாட்சாலா) விடவும் சிறந்த கற்கும் இடம். இதுவே யாகங்கள் அனைத்திலும் சிறந்த யாகமாகும். இதில் பழைய உலகம் முழுவதும் முடிவடைய உள்ளது. அவர்கள் ஹோலிக்காவையும் (பெண் அரக்கியின் ஞாபகார்த்தம்) எரிக்கின்றார்கள். அப்பண்டிகைகள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. ஆத்மா சரீரத்தை விட்டுச் செல்வார், சரீரம் அழிக்கப்படும். எந்த ஒரு சந்நியாசியினாலும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. கீதையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவை ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பு சேர்க்கப்பட்டதைப் போன்றதாகும். ஞானம் மறைந்து விடுகின்றது. சிவபாபா கூறுகின்றார்: நான் இந்த யாகத்தை உருவாக்கினேன், அதில் உங்கள் சரீரங்களையும், மனங்களையும், செல்வத்தையும் நீங்கள் அர்ப்பணித்தீர்கள். நீங்கள் மரணித்து வாழ்கின்றீர்கள். இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சந்தோஷ உலகிற்குச் செல்வதற்கு, உங்கள் சுபாவத்தைத் தெய்வீகமாக ஆக்குங்கள். நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தை உங்கள் புத்தியில் வைத்திருப்பதன் மூலம் முகமலர்ச்சியுடன் இருங்கள். இந்த இரகசியங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள்.

2. சுய இராச்சியத்தை அடைவதற்கு, உயிருடன் இருக்கும் பொழுதே உங்கள் சரீரம், மனம், செல்வத்தை இந்த எல்லையற்ற யாகத்தில் அர்ப்பணியுங்கள். அனைத்தையும் புதிய உலகிற்கு இடம்மாற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உண்மை யோகியாக இருப்பதுடன், உங்கள் நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்டப்படுவீர்களாக.

ஞாபகார்த்தங்களில், யோகிகளின் நெற்றியில் மூன்றாவது கண் காட்டப்பட்டுள்ளது. உண்மையான யோகிக் குழந்தைகளான நீங்கள் உங்களுடைய நெற்றியில் உங்களுடைய மூன்றாவது கண்ணைக் காட்டும்பொருட்டு, ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் சதா நிலைத்திருப்பதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். முதலில் தந்தை, இரண்டாமவர் நான், மூன்றாவதாக எவரும் இல்லை. அத்தகையதொரு ஸ்திதி உங்களுக்கு இருக்கும் பொழுதே, பிறர் உங்கள் மூன்றாவது கண்ணைப் பார்ப்பார்கள். உங்கள் புத்தியில் மூன்றாம் நபர் பிரவேசித்தால், அப்பொழுது உங்கள் மூன்றாவது கண் மூடி விடும். ஆகவே, உங்கள் மூன்றாவது கண் திறந்திருப்பதை உறுதி செய்வதற்கு, மூன்றாமவர் எவரும் இருக்கக்கூடாது என்பதை நினைவு செய்யுங்கள்.

சுலோகம்:
கேள்விகளுடன் இருப்பவர் என்றால் தானும் விரக்தி அடைவதுடன், பிறரையும் விரக்தி அடையச் செய்பவராக ஆகுவதாகும்.

அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.

ஒருவர் செய்கின்ற செயல்களுக்கு ஏற்பவே, ஒரு நபருக்குப் பட்டம் கொடுக்கப்படுகின்றது. உங்கள் செயல்கள் மேன்மையாக இருந்தால், ஒரு மேன்மையான இரத்தினம் என்ற பட்டம் உங்களுக்குக் கொடுக்கப்படும். ஒரு மேன்மையான இரத்தினம் ஆகுவதற்கு, உங்கள் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் எளிமையும், சகிப்புத் தன்மையும் எனும் இரு தெய்வீகக் குணங்கள் தேவைப்படுகின்றன. எளிமை இருந்து, ஆனால் சகிப்புத்தன்மை இல்லாது விட்டால், அப்பொழுது உங்களை மேன்மையானவர் என்று கூற முடியாது. ஆகவே, எளிமையுடன் சகிப்புத்தன்மை உடையவராக இருங்கள்.