23.07.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையைப் போல் உண்மையான தூதுவர்கள் ஆகவேண்டும். அனைவருக்கும் வீடு திரும்புவதற்கான செய்தியை வழங்குங்கள்.

கேள்வி:
இந்நாட்களில், மக்களின் புத்திகள் எந்தத் திசையில் அலைபாய்கின்றன?

பதில்:
நவநாகரிகத்தை நோக்கி. பிறரைக் கவருவதற்குப் பல்வேறு விதமான நவநாகரிகங்களை மக்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்த நவநாகரிகத்தைப் படங்களில் இருந்து கற்றுக் கொண்டுள்ளார்கள். பார்வதியும் இவ்வாறான நவநாகரிகத்தைப் பின்பற்றி, அத்தகைய சிகையலங்காரங்களைச் செய்துள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளான நீங்கள் இத்தூய்மையற்ற உலகில் நவநாகரிகமானவர்கள் ஆகக்கூடாது. நவநாகரிகம் தேவைப்படாத அத்தகையதோர் இயற்கை அழகு நிறைந்த ஓர் உலகிற்கு நான் உங்களை அனுப்புகிறேன்.

பாடல்:
நீங்களே தாயும் தந்தையும்!

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இந்தப் புகழ் பாடப்படும்பொழுது, உங்களுடைய புத்திகள் மேலே செல்கின்றன. நீங்களே படகோட்டியும், தூய்மையாக்குபவரும், உண்மையான தூதுவரும் என ஆத்மாக்கள் தங்களது தந்தையிடம் கூறுகிறார்கள். தந்தை வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குச் செய்தியை வழங்குகிறார். ஏனையோர் தூதுவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்: சிலர் இளையவர்கள், சிலர் முதியவர்கள். உண்மையில், அவர்கள் ஒரு செய்தியைக் கொடுப்பதில்லை. அவர்கள் பொய்யாகப் புகழப்படுகின்றார்கள். இந்த மனித உலகில், ஒரேயொருவரைத் தவிர, வேறு எவருக்கும் புகழ் இருக்கக்கூடாது என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இலக்ஷ்மி, நாராயணனுக்கே அதிகபட்ச புகழ் உள்ளது, ஏனெனில் அவர்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆவார்கள். பாரத மக்கள் மட்டுமே இதனை அறிவார்கள். பாரதம் புராதன தேசம் என்பதை மட்டுமே உலகிலுள்ள மக்கள் அறிவார்கள். பாரதத்தில் இறைவர், இறைவியர்களின் இராச்சியம் இருந்தது. ஸ்ரீகிருஷ்ணர் கடவுள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பாரத மக்கள் அவர்களை (இலக்ஷ்மியையும் நாராயணனையும்) இறைவனும், இறைவியும் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியயுகத்தில் ஆட்சிசெய்த, இறைவனும், இறைவியுமாக இருந்தார்கள் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். இறைவர், இறைவியர்களின் இராச்சியத்தைக் கடவுள் ஸ்தாபித்தார். புத்தி கூறுகின்றது: நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதால் நாங்களும் இறைவர், இறைவியர்களாக இருப்போம். அனைவரும் ஒரேயொருவரின் குழந்தைகள், ஆனால் அவர்களை இறைவர், இறைவியர்கள் என்றழைக்க முடியாது; அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தந்தை இங்கிருந்து இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாரத மக்கள் கூறுகிறார்கள்: பாரத மக்களாகிய நாங்கள் முதலில் புதிய உலகில் இருந்தோம். அனைவரும் புதிய உலகை விரும்புகிறார்கள். பாபுஜியும் (காந்திஜி) புதிய உலகையும், புதிய இராம இராச்சியத்தையும் விரும்பினார். எவ்வாறாயினும், “இராம இராச்சியம்” என்பதன் அர்த்தத்தை மக்கள் முற்றாகவே புரிந்து கொள்வதில்லை. இந்நாட்களில், மக்களுக்கு அதிகளவு அகங்காரம் உள்ளது. சத்தியயுகத்தில் அவர்களுக்குத் தெய்வீகப் புத்தி இருக்கின்றது, ஆனால் கலியுகத்திலோ, அவர்கள் கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. சத்தியயுகத்தில், பாரத மக்களுக்குத் தெய்வீகப் புத்தி இருந்தது. இப்பொழுது, இந்தக் கலியுகத்தில், பாரத மக்களுக்குக் கல்லுப் புத்தியே உள்ளது. சிலர் இதனையே சுவர்க்கம் என்று நம்புகிறார்கள். சுவர்க்கத்தில் விமானங்களும், பெரிய மாளிகைகளும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். அவை அனைத்தும் இப்பொழுது உள்ளன. விஞ்ஞானம் அதிகளவில் முன்னேறியுள்ளது. அதிகளவு சந்தோஷம் காணப்படுகிறது. அதிகளவு நவநாகரிகம் போன்றனவும் உள்ளன. நாள் முழுவதும் அவர்களின் புத்திகள் நவநாகரிகத்தில் அகப்பட்டுள்ளன. அவர்கள் செயற்கையாக அழகானவர்கள் ஆகுவதற்குச் செய்யும் சிகை அலங்காரங்களைப் பாருங்கள்! அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவிடுகிறார்கள்! அந்த நவநாகரிகம் அனைத்தும் படங்களிலிருந்தே தோன்றியுள்ளது. பார்வதியைப் போன்று தாங்களும் சிகையலங்காரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைக் கவருவதற்காகவே அவை அனைத்தையும் செய்கிறார்கள். முற்காலத்தில், பார்சிப் பெண்கள் எவரும் தங்களைப் பார்த்துக் கவரப்படாத வகையில், தங்களின் முகங்களின் மீது கறுப்புத் திரையொன்றை அணிவார்கள். இது தூய்மையற்ற உலகம் என்று அழைக்கப்படுகிறது. ‘நீங்களே தாயும் தந்தையும்” என்று மக்கள் பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் யாருக்கு இதனைக் கூற வேண்டும்? தாயும் தந்தையுமானவர் யார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். தாயும் தந்தையுமானவர் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் ஆஸ்தியை வழங்கியிருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷ ஆஸ்தியை வழங்கினார். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நீங்கள் கூறுவதைத் தவிர, வேறு எவர் கூறுவதையும் நாங்கள் செவிமடுக்க மாட்டோம். சிவபாபாவின் புகழே பாடப்பட்டுள்ளதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பிரம்மாவின் ஆத்மாவும் கூறுகிறார்: நான் தூய்மையாக இருந்தேன், இப்பொழுது தூய்மை அற்றவன் ஆகிவிட்டேன். பிரம்மாவின் குழந்தைகளும் கூறுகிறார்கள்: பிரம்மாகுமாரர்களும், பிரம்மாகுமாரிகளுமான நாங்கள் தேவர்கள் ஆகுகிறோம். இப்பொழுது, எங்கள் 84 ஆவது பிறப்பின் இறுதியில், நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம். முதலாம் இலக்கத் தூய்மையானவராக இருந்தவர், முதலாம் இலக்கத் தூய்மையற்றவர் ஆகிவிட்டார். தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருப்பார்கள். இவர் இதனைக் கூறுகிறார். சிவபாபாவும் கூறுகிறார்: முதலாம் இலக்கப் பூஜிக்கத் தகுதிவாய்ந்த இலக்ஷ்மி, நாராயணனின் வம்சத்தைச் சார்ந்த, இவருடைய பல பிறவிகளில் இறுதிப் பிறவியில் இறுதிப் பகுதியில் நான் வந்துள்ளேன். இது இப்பொழுது சங்கமயுகம் ஆகும். நீங்கள் கலியுகத்தில் இருந்தீர்கள், இப்பொழுது சங்கமயுகத்திற்கு உரியவர்களாகி விட்டீர்கள். தந்தை சங்கம யுகத்தில் மட்டுமே வருகிறார். நாடகத்தின்படி, குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நாங்கள் தேவர்களாக இருந்தோம், பின்னர் சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவும் ஆகினோம். உங்களுக்கு இப்பொழுது முழுச் சக்கரமும் மிக நன்றாகத் தெரியும். இது மிகவும் இலகுவானது. நாங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளோம். இந்தளவேனும் சிலரின் புத்திகளில் தங்குவதில்லை. மாணவர்கள் வரிசைக் கிரமமானவர்கள். வலது பக்கத்தில் இருந்து, அது முதலாம் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் வரை தொடருகிறது. சில குழந்தைகள் கூறுகின்றார்கள்: எனது புத்தி மூன்றாந் தரமானது, என்னால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியவில்லை. அவர்கள் விளங்கப்படுத்துவதற்கு மிகவும் அதிகளவு விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் பேச முடிவதில்லை. எனவே, பாபாவால் என்ன செய்ய முடியும்? இதுவே அவர்களின் செயல்களின் கர்மக் கணக்காகும். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குச் செயல், நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தின் ஞானத்தைக் கூறுகிறேன். நீங்கள் செயற்பட வேண்டும் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். மூன்றாந் தரப் புத்தியைக் கொண்டுள்ள குழந்தைகளால் இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இதுவே இராவண இராச்சியம், ஆனால் எவருக்கும் இது தெரியாது. இராவண இராச்சியத்தில், மக்கள் பாவச் செயல்களை மட்டுமே செய்வதால், அவர்கள் விழவே நேரிடும். துன்ப உலகில் மட்டுமே குருமார்கள் ஏற்கப்படுகின்றார்கள். தங்களைச் முக்திக்குள் அழைத்துச் செல்லக்கூடியதாக, சற்கதியைப் பெறும் வகையில், அவர்கள் ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். அது சத்தத்திற்கு அப்பாற்பட்ட இடமான, நிர்வாணா தாமம் ஆகும். தாங்கள் இப்பொழுது ஓய்வு ஸ்திதியில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அதனை வெறுமனே கூற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் கூறுகிறார்கள். ஓய்வு ஸ்திதியில் உள்ளவர்களின் குழு ஒன்று உள்ளது. அவர்கள் தங்களுடைய சொத்து போன்ற அனைத்தையும் தங்களது குழந்தைகளிடம் கையளித்து விட்டு, பின்னர் ஒரு குருவுடன் சென்று தங்கிவிடுகிறார்கள். நிச்சயமாக அவர்களின் குழந்தைகள் அவர்களுக்கு உணவையும், ஏனைய அனைத்தையும் வழங்குவார்கள். எவ்வாறாயினும், எவரும் “ஓய்வெடுத்தல்” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. எவருடைய புத்தியிலும் தாங்கள் நிர்வாணா தாமத்திற்குச் செல்ல வேண்டும் என்பதும், தாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதும் புகுவதில்லை. அது அவர்களின் வீடு என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒளியானது ஒளியில் இரண்டறக் கலக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். நிர்வாணா தாமம் வசிப்பிடம் ஆகும். முன்பு, அவர்கள் 60 வயதில் ஓய்வெடுப்பது வழக்கம்; அது சட்டமாக இருந்தது. இப்பொழுதும் அவர்கள் அவ்வாறே செய்கிறார்கள். எவராலும் சத்தத்திற்கு அப்பால் செல்ல முடியாது என்பதை இப்பொழுது உங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர்கள் இதற்காகத் தந்தையை அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, பாபா, வாருங்கள்! எங்களைத் தூய்மையாக்கி, திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! முக்தி தாமமே ஆத்மாக்களின் வீடு ஆகும். சத்தியயுகத்தில் யார் வசிக்கின்றார்கள் என்றும், எவ்வாறு அங்கு சனத்தொகை அதிகரிக்கின்றது என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. சனத்தொகையைப் பற்றியும் எவருக்கும் தெரியாது. இராம இராச்சியத்தில் எவ்வளவு சனத்தொகை இருக்கும்? அங்கு குழந்தைகள் எவ்வாறு பிறப்பார்கள்? அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. இந்த நாடகச் சக்கரத்தை விளங்கப்படுத்தக்கூடிய கல்விமான்களோ, ஆசிரியர்களோ, பண்டிதர்களோ கிடையாது. எவ்வாறு 8.4 மில்லியன் பிறவிகளுக்கான சக்கரம் இருக்க முடியும்? அவை அத்தகைய பிழையான கருத்துக்கள்! அவர்கள் முற்றிலும் அனைத்தையும் சிக்கலாக்கி விட்டார்கள்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: தந்தை உங்களுக்குச் செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் உட்கருத்தை விளங்கப்படுத்தி உள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் உங்களுடைய செயல்கள் நடுநிலையானவை. அங்கு தீய செயல்கள் இல்லாததனால், அவை நடுநிலையான செயல்கள் ஆகும். இங்கு மக்கள் செய்யும் செயல்கள் எவையாயினும், அவை பாவச் செயல்களே. இளையவரோ, முதியவரோ, முழு உலகிலுமுள்ள உங்கள் அனைவருக்கும் இப்பொழுது ஓய்வு ஸ்திதியே உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அனைவரும் சத்தத்திற்கு அப்பால் செல்லப் போகின்றீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து தூய்மை அற்றவர்களான எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எவ்வாறாயினும், தூய, புதிய உலகம் வரும்வரையில், இங்கு இந்தத் தூய்மையற்ற உலகில் தூய்மையான நபர் ஒருவரேனும் இருக்க முடியாது. இந்த முழுத் தூய்மையற்ற உலகமும் அழிக்கப்பட உள்ளது. அப்பொழுது நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும் என்பதை அறிவீர்கள். நீங்கள் எவ்வாறு அங்கு செல்வீர்கள்? உங்களிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது. இது அமரத்துவ உலகான, புதிய உலகிற்கும், தூய உலகிற்குமான புதிய ஞானமாகும். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். பிராமணர்கள் அல்லாத, ஏனைய மனிதர்கள் அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் அனைவரும் சங்கமயுகத்தில் இருக்கிறோம். நாங்கள் சத்தியயுகத்திற்குச் செல்கிறோம். இது உண்மையில் சங்கமயுகம் ஆகும். அது சுவர்க்கம் ஆகும். அதனைச் சங்கமம் என்று அழைக்க முடியாது. இந்த வேளையிலேயே சங்கமயுகம் உள்ளது. இந்தச் சங்கமயுகம் அனைத்திலும் சிறிய யுகமாகும். இது மனிதர்கள் பாவாத்மாக்களில் இருந்து தர்மாத்மாக்கள் ஆகுகின்ற, லீப் யுகம் என்று அழைக்கப்படுகின்றது. அதனாலேயே, இது தர்மயுகம் என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் அதர்மமானவர்கள். அங்கே (சத்தியயுகத்தில்), ஆத்மாக்கள் அனைவரும் தர்மமானவர்கள். பக்தி மார்க்கத்தின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. மக்கள் அவற்றைப் பார்த்ததும் அவர்களின் இதயங்கள் சந்தோஷப்படும் வகையில் கல்லால் ஆன சிலைகளை அவர்கள் செய்கிறார்கள். அது கல்லை வழிபடுவதாகும். அவர்கள் சிவனை வழிபடுவதற்காக, மிகவும் தொலைவில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களால் தங்களுடைய சொந்த வீட்டில் சிவனின் ஓர் உருவத்தை வைக்க முடியும். ஏன் அவர்கள் தொலைதூரத்திற்கு அலைய வேண்டும்? உங்களுடைய புத்திகள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளன. உங்கள் கண்கள் இப்பொழுது திறந்துள்ளன. உங்கள் புத்திகள் இப்பொழுது திறந்துள்ளன. தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தை வழங்கியுள்ளார். பரமாத்மாவாகிய பரமதந்தையே இம் மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரே ஞானக்கடலும், ஞானம் நிறைந்தவரும் ஆவார். ஆத்மாக்களும் அந்த ஞானத்தைக் கிரகிக்கின்றார்கள்: ஓர் ஆத்மாவே ஜனாதிபதி போன்றவர் ஆகுகிறார். சரீர உணர்வு உடையவர்களாக இருப்பதனால், மக்கள் தொடர்ந்தும் சரீரங்களைத் தொடர்ந்தும் புகழ்கிறார்கள். ஆத்மாக்களே அனைத்தையும் செய்கிறார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்து, முற்றிலும் சீரழிந்த நிலையை அடைந்துள்ளீர்கள். ஆத்மாக்களான நாங்கள் இப்பொழுது தந்தையை இனங்கண்டு விட்டோம். நாங்கள் தந்தையிடம் இருந்து எங்களுடைய ஆஸ்தியைக் கோருகிறோம். ஓர் ஆத்மா நிச்சயமாக ஒரு சரீரத்தை எடுக்கவே வேண்டும். சரீரமின்றி, ஓர் ஆத்மாவால் எவ்வாறு பேச முடியும்? எவ்வாறு அவரால் செவிமடுக்க முடியும்? தந்தை கூறுகிறார்: நான் அசரீரியானவர். நானும் ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெறுகிறேன். பிரம்மாவின் இந்தச் சரீரத்தினூடாக, சிவபாபா உங்களுடன் பேசுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரம்மாகுமார்களும், பிரம்மாகுமாரிகளுமான உங்களால் மட்டுமே இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம், பிரம்மாவினூடாக ஸ்தாபிக்கப்படுகிறது. அந்தத் தந்தையே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இதில் குழப்பம் அடைவதற்கு எதுவும் இல்லை. சிவபாபா எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், பின்னர் நாங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்துகிறோம். சிவபாபாவே எங்களுக்கு அனைத்தையும் கூறுபவர். நீங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக மாறுகிறீர்கள் எனக் கூறுகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது தூய்மையற்ற உலகம்; இது இராவண இராச்சியம் ஆகும். இராவணன் உங்களைப் பாவாத்மாக்கள் ஆக்குகிறான். வேறு எவருக்கும் இது தெரியாது. அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரித்தாலும், எதனையும் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறு இராவணன் சீதையைச் சிறைப்பிடித்தான், அதனைச் செய்தான், இதனைச் செய்தான் எனப் பல்வேறு கதைகளை அவர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் இந்தக் கதைகளைச் செவிமடுக்கும் பொழுது, கண்ணீர் சிந்துகின்றார்கள். அவ்விடயங்கள் அனைத்தும் கட்டுக்கதைகளே. எங்களைப் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆக்குவதற்காக பாபா எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! உங்கள் புத்தியை வேறு எதிலும் ஈடுபடுத்தாதீர்கள்! சிவபாபா எங்களுக்குத் தனது அறிமுகத்தை வழங்கி உள்ளார். தூய்மையாக்குபவரான தந்தை வந்து, எங்களுக்குத் தனது அறிமுகத்தை வழங்கியுள்ளார். எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்கும் வகையில், பாபா மிக இனிமையானவர் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச்செயல்களின் தத்துவத்தைப் புரிந்துகொண்டு, மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். இந்த ஞானத்தைத் தானம் செய்து, தர்மாத்மா ஆகுங்கள்.

2. இது இப்பொழுது ஓய்வு ஸ்திதி. இந்த இறுதிக் கணங்களில் தூய்மையானவராகி, தூய உலகிற்குச் செல்லுங்கள். தூய்மையானவர் ஆகுவதற்கான செய்தியை அனைவருக்கும் வழங்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு திருப்தி இரத்தினமாக திறமைச் சித்தி எய்துவதன் மூலம் அனைவரிடம் இருந்தும் திருப்திக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வீர்களாக.

தங்களுடனும் தமது முயற்சிகளுடனும் தமது சேவையுடனும் பிராமணக் குடும்பத்துடனான தமது தொடர்புகளுடனும் சதா திருப்தியாக இருக்கும் குழந்தைகள் திருப்தி இரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆத்மாக்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கும்போது தங்களையும் மற்றவர்களையும் திருப்தியாக வைத்திருப்பதில் வெற்றியாளர்களாக இருப்பவர்களே வெற்றி மாலையில் மணிகள் ஆகுவார்கள். திறமைச் சித்தி எய்துவதற்கு, நீங்கள் அனைவரிடம் இருந்தும் திருப்திக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வது அவசியம். இந்தக் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு, சகித்துக் கொள்ளும் சக்தி மற்றும் ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கிரகியுங்கள்.

சுலோகம்:
கருணைநிறைந்தவராகி, மனவிரக்தியும் களைப்பும் அடைந்த ஆத்மாக்களுக்கு ஆதாரத்தைக் கொடுப்பதன் மூலம் சேவை செய்யுங்கள்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

சக்திமிக்க நினைவைக் கொண்டிருப்பதற்கு, உங்கள் அன்பு நேர்மையான இதயத்திலிருந்து வரவேண்டும். நேர்மையான இதயத்தைக் கொண்டிருப்பவர்களால் ஒரு விநாடியில் ஒரு புள்ளியாகி, புள்ளியான பாபாவை நினைவு செய்ய முடியும். தமது நேர்மையான இதயத்தினால் பிரபுவை மகிழ்வடையச் செய்வதனால், அத்தகைய ஆத்மாக்கள் தந்தையிடம் இருந்து விசேட ஆசீர்வாதங்களை பெறுகிறார்கள், ஆகையால் அவர்களால் ஒரேயொருவரின் எண்ணத்தில் இலகுவாக நிலைத்திருக்க முடியும். அவர்கள் நினைவை நெருப்பு வடிவத்தில் அனுபவம் செய்வதுடன், அவர்கள் சக்திமிக்க அதிர்வலைகளை எங்கும் பரவச் செய்வார்கள். அவர்களின் நேர்மை சக்தியினால், அவர்களின் புத்தி மிகச்சரியான நேரத்தில் விவேகமாக வேலை செய்யும். எந்தப் பிழையான செயல்களும் செய்யப்படுவதில்லை.