23.08.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.03.2011     Om Shanti     Madhuban


பதற்றத்தில் இருந்து விடுபட்டவராகவும் அனைவருக்கும் ஆதார மூர்த்தியாகவும் ஆகுவதில் உதாரணமாக இருக்கும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். துன்பத்தை அனுபவிக்கும் ஆத்மாக்களுக்கு சந்தோஷ ஆசீர்வாதத்தை வழங்குவதற்கு உங்களின் மனதின் சக்தியைப் பயன்படுத்துங்கள்.


இன்று, முப்பாட்டனார், பலகோடிக் கணக்கானவர்களில் வெகு சிலராகவும் அந்த வெகுசிலரில் கைப்பிடி அளவினராகவும் உள்ள தனது குழந்தைகளின் பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். அவர் ஒவ்வொருவரின் நெற்றியிலும் ஜொலிக்கும் தெய்வீகமான, பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் பார்க்கிறார். அவர்களின் கண்களில் அவர் அன்பின் ரேகையைப் பார்க்கிறார். அவர்களின் உதடுகளில் இந்த ஞானத்தின் ரேகையை அவர் பார்க்கிறார். இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரின் இதயத்தில் அன்பிலே திளைத்திருக்கும் அவர்களின் இதயங்களின் ரேகையை அவர் பார்க்கிறார். அவர்களின் கைகளில் இந்த ஞானப் பொக்கிஷங்களின் ரேகையைப் பார்க்கிறார். அவர்களின் பாதங்களின் ஒவ்வோர் அடியிலும் பல்கோடிகளைக் கொண்ட ரேகையைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் இந்த ரேகை ஒவ்வொன்றிலும் வரிசைக்கிரமமாக நிரம்பி இருந்தார்கள். உங்களைத் தவிர வேறு எவராலும் இந்தப் பாக்கியத்தைக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொருவரின் இத்தகைய மேன்மையான பாக்கியம், ஜொலிப்பது தென்படுகிறது. இந்தப் பாக்கியம் அழியாதது ஆகுகின்றது. ஏன்? ஏனென்றால், அழியாத தந்தையே அதை உங்களுக்கு வழங்கி உள்ளார். இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே எதிர்காலத்திலும் தொடர்கின்ற இந்த மேன்மையான பாக்கியத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்தச் சங்கமயுகம் சகல பேறுகளுக்குமான யுகம் ஆகும். எந்தளவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பாக்கியத்தைச் சேமிக்கிறீர்களோ, அந்தளவிற்குப் பல பிறவிகளுக்கான பாக்கியத்தின் பலனை நீங்கள் தொடர்ந்தும் பெறுவீர்கள். இந்தச் சங்கமயுகத்தின் புகழைக் குழந்தைகளான நீங்கள் மட்டுமே அறிவீர்கள். சங்கமயுகத்தின் பேறுகளே கல்பம் முழுவதிலும் அதி மேன்மையான பேறுகள் ஆகும்.

ஒவ்வொரு குழந்தையும் சங்கமயுகத்தின் பேறுகளால் எந்தளவிற்கு நிரம்பி உள்ளார் என்று பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் அனைவருமே சங்கமயுகத்தின் சகல பேறுகளையும் சதா அனுபவம் செய்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டுமா? தந்தை அழியாதவர், எனவே பேறுகளும் அழியாதவை. பாப்தாதா உங்கள் அனைவரையும் எந்த ரூபத்தில் பார்க்க விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் சுய இராச்சிய அரசராக, உங்கள் மீது, அதாவது, உங்களின் பௌதீகப் புலன்களின் மீதும் உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீதும் ஆட்சி செய்யும் ஓர் அரசராக ஆகவேண்டும் என்றே விரும்புகிறார். ஆமாம், உங்களிடம் எதிர்காலத்தில் இராச்சியத்திற்கான உரிமை இருக்கும். எனினும் இப்போது நீங்கள் சுய இராச்சிய உரிமையுள்ள அரசராக ஆகவேண்டும். உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் தந்தையிடம் இருந்து சகல சக்திகள் என்ற பொக்கிஷத்தைப் பெற்றுள்ளீர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சுய இராச்சிய அதிகாரி உரிமையுள்ள அரசரின் ரூபத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள் அனைவரும் உங்களை சுய இராச்சிய அதிகாரிகளாக, உங்களுக்கே அதிபதிகளாக இருக்கிறீர்களா? நீங்கள் உங்களின் மனம் மற்றும் புத்தியின் மீது ஆளுகின்ற சக்தியையும் கட்டுப்படுத்தும் சக்தியையும் விருத்தி செய்து கொண்டீர்களா? ஏதாவது தங்கியிருத்தல் இல்லையல்லவா? உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் பாப்தாதாவை உங்களுடன் வைத்திருந்து, தனித்து இருக்காவிட்டால், சதா தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ளும்போது, உங்களின் மனமோ அல்லது புத்தியோ அல்லது சம்ஸ்காரங்களுக்கோ உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் போகும் சக்தி இருக்காது. இதனாலேயே, பாப்தாதா எப்போதும் சக்திகளான உங்களுக்குக் கூறுகிறார்: நீங்கள் ஒருபோதும் தந்தையின் சகவாசத்தை மறக்காதிருக்கும் வகையில் உங்களின் எந்த ரூபத்தை எப்போதும் நினைவு செய்கிறீர்கள்? நான் ஒரு சிவசக்தி என்பதே அந்த ரூபம் ஆகும். சிவனும் சக்தியும் ஒன்றிணைந்து உள்ளார்கள். இந்த விழிப்புணர்வு இயல்பாகவே உங்களை மாயையை வென்றவராகவும் சடப்பொருளை வென்றவராகவும் ஆக்குகிறது. ஏனென்றால், தற்சமயம் பஞ்சபூதங்கள் தமது பணியைத் தொடர்ந்து செய்கின்றன என்று பாப்தாதா உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளார். மனித ஆத்மாக்கள் இயற்கையின் கூறுகளுக்குப் பிரச்சனை கொடுத்ததால், அவையும் மனித ஆத்மாக்களுக்கு பிரச்சனை கொடுக்கின்றன. தற்காலத்தில், பஞ்சபூதங்களும் எங்கேயாவது தமது பணியைச் செய்து கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் சடப்பொருளை வென்றவர்கள் ஆகி, பஞ்சபூதங்களையும் சதோபிரதான் ஆக்குகிறீர்கள். மக்கள் பஞ்சபூதங்களின் குழப்பத்தைப் பார்த்து பயப்பட்டு, நாளை என்ன நடக்குமோ என்று நினைக்கிறார்கள். இது இப்போது சங்கமயுகம், உலகச் சக்கரத்தின் அமிர்த வேளை என்பதனால் அனைத்திலும் சிறந்ததே நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அமிர்த வேளையின் பின்னர் என்ன வரும்? காலை. இருள் முடிவடைந்து, பின்னர் ஒளி ஏற்படுகிறது. சடப்பொருளும் சந்தோஷத்தைக் கொடுக்கும் சந்தோஷ உலகிற்கான உங்களின் இராச்சியம், இப்பொழுது ஏறத்தாழ வந்துவிட்டது. உங்களுக்கு இந்தச் சந்தோஷம் உள்ளதல்லவா? அந்த இராச்சியத்தில், துன்பம் அல்லது அமைதியின்மையின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. ஏனென்றால், நீங்கள் சங்கமயுகத்தில் சடப்பொருளை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் அனைவரிடமும் உள்ள சந்தோஷம் என்ன? எமது இராச்சியம் வரப் போகிறது எனக் கூறுங்கள். உங்களுக்கு இந்த சந்தோஷம் உள்ளதா? இந்த சந்தோஷத்தைப் பேணுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அதற்காகப் பாராட்டுக்கள்! எவ்வாறாயினும், துன்பத்தையும் அமைதி இன்மையையும் அனுபவம் செய்கின்ற உங்களின் சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற கதிர்களால் உங்களின் இந்த சந்தோஷம் சென்றடையச் செய்கிறீர்களா? பாப்தாதா கூறினார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனதால் இத்தகைய சேவையைச் செய்வதற்காக உங்களின் நாளாந்த நேர அட்டவணையில் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். ஏனைய விடயங்களுக்காக நீங்கள் ஒரு நேரத்தை ஒதுக்கி இருப்பதைப் போல், உங்களின் சந்தோஷப் போஷாக்காலும் உங்களின் மனதின் சக்தியாலும் மற்றவர்களுக்கு ஏதாவது ஆசீர்வாதங்களை வழங்கி, அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். தமது மனங்களால் இந்தச் சேவையைச் செய்வதற்காகத் தமது நேரத்தை ஒதுக்கி இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. இதைச் செய்யாதவர்கள் வெகுசிலரே இருக்கிறார்கள். எனவே, இதற்காக இப்போது ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால், அவர்கள் உங்களின் சகோதர, சகோதரிகள் ஆவார்கள், இல்லையா? உங்களுக்குக் கருணை பிறக்கவில்லையா? அல்லது, அவர்களின் மீது உங்களுக்குக் கருணை இல்லையா? உங்களுக்கு இருக்கிறது, அல்லவா? சங்கமயுகத்தின் விலைமதிப்பற்ற இரண்டு விசேடமான விடயங்களைக் காண பாப்தாதா விரும்புகிறார்: ஒன்று எண்ணங்களின் சக்தி. மற்றையது, சங்கமயுக நேரம். ஏனென்றால், சங்கமயுகத்தின் ஒரு பிறவியில் நீங்கள் பல பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்க வேண்டியுள்ளது. தற்காலத்தில், பலருக்கும் குறைந்தளவில் தூய்மையற்ற எண்ணங்கள் இருப்பதையும் ஆனால் தொடர்ந்தும் வீணான எண்ணங்கள் வருவதையும் பாப்தாதா பார்த்தார். இந்த ஒரு பிறவியின் மதிப்பிற்கேற்ப, இப்போது வீணான எண்ணங்கள் முடிவடைய வேண்டும். ஏனென்றால், சங்கமயுகத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப, ஒரு விநாடி உங்களுக்கு அதிகளவு விலைமதிப்பற்ற நேரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இதனாலேயே, நீங்கள் ஒவ்வொருவரும் காலம் மற்றும் எண்ணங்கள் என்ற இந்த இரண்டு விடயங்களின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டும். அத்துடன் உங்களின் நேரத்தையும் எண்ணங்களையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்த வேண்டும். எப்படி நீங்கள் உங்களின் பௌதீகப் பொக்கிஷங்களைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகிறீர்களோ, அத்துடன் அவற்றை இந்த ஒரு பிறவியில் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பல பிறவிகளுக்கு சேமிக்க முடியும் என்பதை அறிவீர்களோ, அதேபோல், இந்த இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்துங்கள். அவற்றைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, வெற்றி ரூபம் ஆகுங்கள்.

இன்று, பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு விசேடமான ஆசீர்வாதத்தை வழங்குகிறார். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவராலும் இன்றில் இருந்து உங்களைப் பதற்றத்தில் இருந்து விடுபட்டவராக ஆக்கிக் கொள்ள முடியுமா? இன்றில் இருந்து, பதற்றம் இல்லை, கவனம் மட்டுமே இருக்கும் என்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். குழந்தைகளான நீங்கள் பதற்றத்துடன் இருப்பதை பாப்தாதா பார்க்கும்போது, உடனடியாக உங்களின் புகைப்படத்தை எடுத்து உங்களுக்கு அதை அனுப்ப வேண்டும் என்று பாப்தாதா உணர்கிறார். அப்போது நீங்கள் என்னவாகி உள்ளீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் ஒவ்வொருவரையும் மனதை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆக்கவே பாப்தாதா விரும்புகிறார். எப்படியாயினும், பதற்றம் எங்கிருந்து வருகிறது? அது மனதில் இருந்தே வருகிறது, அல்லவா? நீங்கள் அரசர்கள். நீங்கள் உங்களுக்கே அதிபதிகள், அல்லவா? மனம் உங்களுடையதா அல்லது மனம் உங்களின் அதிபதியா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாள் முழுவதும் எனது மனம் என்றே நீங்கள் சொல்கிறீர்கள், அப்படியல்லவா? அது அதிபதி இல்லைத்தானே? யாருக்குத் தைரியம் உள்ளது? நீங்கள் இலகுவாகத் தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் சிறிது கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் ஆசீர்வாதத்தின் உதவியை அனுபவம் செய்து பின்னர் பாருங்கள். அதன்பின்னர் நீங்கள் எவருடைய முகத்தைப் பார்க்கும்போதும் அது எப்படி இருக்கும்? ஒரு தாமரையைப் போல் அல்லது மலர்ந்த ரோஜாவைப் போல் பதட்டத்தில் இருந்து விடுபட்ட நிலை.

பாப்தாதா உங்களின் சதவீதத்தை எழுதுமாறு கொடுக்கப்பட்ட வேலையின் செய்திகளைச் சில இடங்களில் இருந்து தான் பெற்றுள்ளதை பாப்தாதா பார்த்தார். இங்கிருந்தும் நீங்கள் பெறுபேறுகளைக் கொடுத்துள்ளீர்கள். கவனம் செலுத்தியதற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, செவிமடுப்பதற்கு உங்களுக்குப் போதியளவு நேரம் இருக்காது. ஆகவே, இப்போது நீங்கள் உங்களின் மனம், உங்களின் முகம், மற்றும் உங்களின் செயல்பாடுகளால் சேவை செய்ய வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். இப்போது உங்களுக்குள் உள்ள பயிற்சியானது வரவிருக்கும் காலங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்றில் இருந்து பதட்டத்தில் இருந்து விடுபட்டு இருக்கும் எண்ணத்தை உங்களால் கொண்டிருக்க முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பதற்றத்தில் இருந்து விடுபட்டிருத்தல்! அச்சா, அனைவரின் புகைப்படங்களையும் எடுங்கள். மிகவும் நல்லது. தற்காலத்தில், உலகில் அதிகளவில் பதற்றம் அதிகரிக்கிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப பதற்றத்தைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள், பதற்றத்தில் இருந்து விடுபட்டிருக்கும் உங்களின் அனுபவத்தைப் பார்க்கும்போது, உங்களின் செயல்பாடுகளும் முகமும் பதற்றத்தில் இருந்து விடுபட்டிருப்பதைப் பார்க்கும்போது, நீங்கள் அவர்களின் ஆதார மூர்த்தி ஆகுவீர்கள். இன்று, உலகில் நீங்கள் பயணம் செய்யும்போது அல்லது செய்திகளைக் கேட்கும்போது எதைக் காண்கிறீர்கள்? அவர்கள் தொடர்ந்தும் தங்களைத் தற்காலிகமாக சந்தோஷமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். பதற்றத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு பதற்றத்தில் இருந்து விடுபட்டிருக்கும் உதாரணத்தைக் காட்டுங்கள். அப்போது அவர்களால் ஏதாவது ஆதாரத்தைக் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் பதற்றத்தில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள் என்ற எண்ணத்தை உங்களின் மனதில் கொண்டிருந்தீர்களா? கொண்டிருந்தீர்களா? இது திடசங்கற்பமான எண்ணமா அல்லது சாதாரணமான எண்ணமா? எங்கே திடசங்கற்பம் உள்ளதோ, அங்கு வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. நீங்கள் ஏதாவதொரு வேளையில் அதைச் செய்வீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் நிச்சயமாக அதைச் செய்யப் போகின்றீர்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? இதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள்!

உங்களின் கைகளை உயர்த்துவதன் மூலம் நீங்கள் ஒரு விடயத்தால் பாபாவைக் களிப்படையச் செய்கிறீர்கள் என்பதை பாப்தாதா கண்டார். உங்களின் கைகளை உயர்த்துவதன் மூலம் நீங்கள் பாபாவைக் களிப்படையச் செய்தீர்கள். ஆனால் இப்போது என்ன செய்யப் போகின்றீர்கள்? ஒரு திடசங்கற்பமான எண்ணத்திற்கும் சாதாரணமான எண்ணத்திற்கும் இடையில் பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது: அதாவது, ஏதாவதொரு வேளையில் நீங்கள் செய்வீர்கள் என்பதும் நீங்;கள் நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும் என்பதும். இன்று இந்த வருடப் பருவகாலத்தின் கடைசி நாள். ஆனால் அடுத்த பருவகாலத்தின் போது, பாப்தாதா காண விரும்புகிறார், ஒவ்வொரு நிலையமும் அது சிறியதோ அல்லது பெரியதோ, - அதுவரை உங்களிடம் பெருமளவு நேரம் உள்ளது - அடுத்த வருடம் எந்தவொரு காரணங்களையோ அல்லது சாக்குப்போக்குகளையோ காண்பதற்கு பாபா விரும்பவில்லை. ஆனால் உங்களைத் தீர்வுகளின் சொரூபங்களாகக் காண்பதற்கே அவர் விரும்புகிறார். பிராமணக் குடும்பத்தில் பதட்டத்தின் பெயரோ அல்லது சுவடோ எதுவும் இல்லாதிருப்பதற்கு எந்தளவு தைரியத்தையும் உற்சாகத்தையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? இது சாத்தியமா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே இது கேட்கலாம், இது சாத்தியமா? பாப்தாதா இந்த நல்ல செய்திகளைக் கேட்கவே விரும்புகிறார்.

அனைவருக்கும் இதைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை பாப்தாதா கண்டார். ஆனால், பிரச்சனைகள் வரும்போது, அவை உங்களைத் தமக்குச் சொந்தம் ஆக்கிக் கொள்கின்றன. அதன்பின்னர் நீங்கள் மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறீர்கள்: இது நடக்கிறது, அல்லவா? இது நடக்கும். இது எல்லா வேளையும் தொடர்கிறது, அல்லவா? நீங்கள் பாப்தாதாவிற்கு மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறீர்கள். அனைத்திற்குமான தீர்வு, ஓர் அரசன் ஆகுவதே, அவ்வளவுதான்! உங்களுக்கே அதிபதியாக, ஒரு சுய இராச்சிய அதிகாரியாக ஆகுங்கள். பாபா குழந்தைகளான உங்கள் அனைவரையும் பார்க்கிறார். நீங்கள் பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது வெகு தொலைவில் இருந்தவண்ணம் அவரின் இதயங்களில் அமர்ந்திருப்பவர்களாக இருந்தாலென்ன நீங்கள் அனைவரும் அவரின் கண்களின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். வெகு தொலைவில் இருக்கும் உங்கள் அனைவரையும் பாப்தாதா தனது இதயத்தில் இருப்பதைக் காண்கிறார்.

இன்று மதுவனத்தில் சிறிய கீதா பாடசாலைகள் அமைக்கப்படுவதாக பாப்தாதா அறிந்தார். அனைத்திற்கும் முதலில் பாப்தாதா அதிக, அதிக, அதிகளவு அன்பு, பரிவு, தனது இதயபூர்வமான நினைவுகளையும் தரையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் பல்வேறு இடங்களில் இருப்பவர்களுக்கும் வழங்குகிறார். (இன்று 28000 இற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் சாந்திவானை வந்தடைந்து உள்ளார்கள்) சில குழந்தைகள் சிறிதளவு சிரமத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தாலும் சந்தோஷத்தின் காரணத்தால் நீங்கள் எந்தவித சிரமத்தையும் உணரவில்லை என்பதை பாப்தாதா கண்டார். குறைந்தபட்சம் உங்களுக்கு சௌகரியமாகத் தூங்குவதற்கு மூன்றடி நிலம் கிடைத்துள்ளது. பட்- ராணி (தரையில் தூங்கும் ராணிகள்) ஆகி இருப்பவர்களுக்கு பாப்தாதா விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.

மதுவனத்திற்கு அல்லது பாப்தாதாவைச் சந்திப்பதற்கு முதல் தடவை வந்திருப்பவர்களே, எழுந்து நில்லுங்கள்! புதிதாக பிராமணக் குடும்பத்திற்கு முதல் தடவையாக வந்திருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா பற்பல பாராட்டுக்களை தனது சார்பாகவும் பிராமணக் குடும்பத்தின் சார்பாகவும் வழங்குகிறார். ஏனென்றால், நீங்கள் மிகவும் தாமதமாகி வந்திருந்தாலும் குறைந்தபட்சம் வந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் பாப்தாதாவையும் குடும்பத்தையும் கண்டுள்ளீர்கள். இன்று நீங்கள் வந்திருந்தாலும் உங்களின் இதயத்தில் உங்களுக்கு அந்த விருப்பம் இருந்தால் உங்களுக்கு விசேடமான ஆசீர்வாதம் இருப்பதை பாப்தாதா உணர்கிறார். எனவே நீங்கள் கடைசியாக வந்திருந்தாலும் உங்களால் வேகமாகச் செல்ல முடியும், உங்களால் வேகமாக முன்னால் செல்ல முடியும். பாப்தாதாவும் குடும்பமும் ஆத்மாக்களான உங்கள் அனைவரின் மீதும் அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் (பிராமணக் குடும்பம்) ஒத்துழைப்பார்கள். அவர்கள் உங்களுக்கு அன்பைக் கொடுத்து உங்களை முன்னேறச் செய்வார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள். இதனாலேயே, இன்று வந்திருப்பவர்களுக்கு நாடகத்தில் முன்னால் செல்வதற்கான மிக நல்லதொரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் குடும்பம் முழுவதும் உங்களுடன் ஒத்துழைக்கும். நீங்கள் இலகு யோகிகள் ஆகவேண்டும், அவ்வளவுதான். அச்சா.

இது இராஜஸ்தான் மற்றும் போபாலின் சேவை செய்வதற்கான முறை: தந்தை பிரம்மாவிற்கு இராஜஸ்தான் மீது அதிகளவு விருப்பம் இருந்ததால் அவர் இராஜஸ்தானில் மதுவனத்தை உருவாக்கினார். இராஜஸ்தானின் சகல இடங்களிலும் மிக நல்ல விரிவாக்கம் நிகழ்வதை பாப்தாதா கண்டார். புதிய ஆத்மாக்களுக்கு தந்தையின் செய்தியைக் கொடுக்கும் மிக நல்ல நிகழ்ச்சிகள் இப்போது இடம்பெற்று வருகின்றன. எவ்வாறாயினும், பாப்தாதா அனைவருக்கும் கூறுகிறார்: ஒவ்வொரு நிலையமும் யக்யத்தின் மீது அன்பு கொண்ட, தாங்களும் முன்னேறி, மற்றவர்களையும் யக்யத்தின் மீது அன்பு கொள்ளச் செய்யும் வாரிசு ஆத்மாக்களின் குழுவை உருவாக்க வேண்டும். பாப்தாதா இதைக் கூறினார்: யக்யத்தின் மீது அன்பு கொண்டுள்ள, சேவையில் அன்பு கொண்டுள்ள, அனைத்தையும் சதா தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதில் முன்னேறுகின்ற ஆத்மாக்களின் விரிவாக்கம் இடம்பெற்று வருகிறது. இது நல்லது. அனைவருக்கும் செய்தியை வழங்கும் பணியில் அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகிறது. சுயத்திலும் சேவையிலும் சமநிலையைப் பேணுபவர்கள், அதிகபட்ச எண்ணிக்கையில் ஒவ்வொரு நிலையத்தில் இருந்து முன்னேறுவதைக் காணவே பாப்தாதா இப்போது விரும்புகிறார். சேவை மட்டுமல்ல, ஆனால் சுயமும் சேவையும் இருக்க வேண்டும். ஏனென்றால், இப்போது சுய மாற்றத்திற்குப் போதுமான அளவு நேரம் இல்லை. இதனாலேயே, முதலில் சுயமும் பின்னர் அத்துடன் கூடவே சேவையும் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு சேவை நிலையமும் தடைகளில் இருந்து விடுபட வேண்டும், சகல சகபாடிகளும் தடைகளில் இருந்து விடுபட வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமன்றி, முழு வகுப்பும் தடைகளில் இருந்து விடுபட வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் சுய மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது, அதை அதிகரியுங்கள். ஒவ்வொருவர் கூறுவதையும் செவிமடுத்து, அவர்களுக்கு ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் இறக்கைகளைக் கொடுங்கள். அப்போது உங்களால் தடைகளில் இருந்து விடுபட்ட நிலையத்தின் செய்திகளை பாப்தாதாவிற்கு வழங்கக் கூடியதாக இருக்கும். இராஜஸ்தானும் முன்னேறுவதை பாப்தாதா கண்டார், அது தொடர்ந்தும் முன்னேறும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் முன்னேறுவதற்காக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அச்சா.

போபால் பிராந்தியம்: அச்சா, இந்தப் பிராந்தியமும் சுய மாற்றத்தைக் கொண்டு வருவதிலும் அத்துடன் சேவையை விரிவாக்குவதிலும் மிக நன்றாக முன்னேறுகிறார்கள். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகத் திட்டங்களைச் செய்வதுடன் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பதையும் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள் என்ற தூய நம்பிக்கை பாப்தாதாவிடம் உள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஊக்கமும் உற்சாகமும் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனாலேயே, நீங்கள் உங்களின் சொந்த இடங்களில் சேவையின் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். எதிர்காலத்திற்காகவும் பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். தொடர்ந்து முன்னேறுங்கள், நீங்களும் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். அச்சா.

இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகள்: வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பரீட்சைத்தாள்கள் வந்தாலும் அவர்கள் அவற்றைப் பற்றி நேர்மையான இதயத்துடன் பேசுகின்ற ஒரு சிறப்பியல்பைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அவர்கள் எதையும் உள்ளே வைத்திருப்பதில்லை, அத்துடன் அவர்கள் நேர்மையான இதயத்துடன் ஒரு தீர்வைக் கண்டு கொள்கிறார்கள். உங்களிடம் சுத்தமான இதயம் இருக்கும்போது, பிரபு பிரசன்னம் ஆகுகிறார் என்பதையிட்டு பாப்தாதா களிப்படைகிறார். இந்த நல்ல பெறுபேற்றைப் பார்க்கும்போது, பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார், அத்துடன் உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார்: நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். ஆசிரியர்களும் நல்ல முயற்சி செய்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மதுவனத்தில் இருந்து அதிகபட்ச நன்மையைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் வெளிநாடுகளில் சிறிய இடங்களிலும் பெரியளவில் சேவை செய்ய ஆரம்பித்து இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் செய்யும் சேவைக்குப் பாராட்டுக்கள். அத்துடன் உங்களின் சுய மாற்றத்திற்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து நீங்களும் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். அச்சா.

இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் உள்ள குழந்தைகள் தமது முயற்சியில் இலகுவாக முன்னேறுவதுடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்வதற்காக பாப்தாதா விசேடமாகப் பாராட்டுகிறார். வரவிருக்கும் நேரத்திற்காக பாப்தாதா ஏற்கனவே ஒரு வழிகாட்டல் கொடுத்து விட்டார்: தீவிர முயற்சியாளர் ஆகுங்கள். ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வையுங்கள். முற்றுப்புள்ளி வைக்கும் பயிற்சி மிகமிக அவசியம். இதில் பின்தங்காதீர்கள். எதுவும் சடுதியாக நடக்கலாம், இதனாலேயே பாப்தாதாவின் தூய விருப்பம் என்னவென்றால், ஒவ்வொரு குழந்தையும் தன்னுடன் இருக்க வேண்டும், தன்னுடன் திரும்பிச் செல்ல வேண்டும், அத்துடன் தந்தை பிரம்மாவுடன் இராச்சியத்தை ஆள வேண்டும் என்பதே ஆகும். அதன்பின்னர் சிவபாபா பற்றற்ற பார்வையாளர் ஆகிவிடுவார். நீங்கள் சகபாடிகள் ஆகப் போகின்றீர்கள், எனவே நிச்சயமாக நீங்கள் பாப்தாதாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும். அச்சா. ஒவ்வொரு குழந்தைக்கும் பாப்தாதாவிடம் இருந்து இந்த வருடத்திற்கும் அடுத்த வருடத்திற்கும் (பருவகாலம்) நிச்சயமாக சதா தந்தைக்கு சமமானவர் ஆகுவதற்காக வாழ்த்துக்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் கடைகின்ற சக்தியால் சக்திவாய்ந்தவர் ஆகுவதன் மூலம் தடைகளின் சகல தாக்குதல்களையும் முடித்து அதனால் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபடுவீர்களாக.

தற்சமயம், ஆத்மாக்களான நீங்கள் உங்களின் கடையும் சக்தியால் சகல சக்திகளாலும் உங்களை நிரப்பிக் கொள்ளும் தேவை உள்ளது. இதற்கு, அகநோக்கு உடையவராகி, ஒவ்வொரு கருத்தையும் கடையுங்கள். அப்போது வெண்ணெய் (சாரம்) பிரித்தெடுக்கப்படுவதுடன் உங்களால் சக்திவாய்ந்தவராகவும் ஆகமுடியும். இத்தகைய சக்திசாலி ஆத்மாக்கள் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வார்கள். அவர்கள் தற்காலிகமான எதனாலும் கவரப்படுவதில்லை. அன்பிலே திளைத்திருக்கும் அவர்களின் ஸ்திதியின் மூலம் உருவாக்கப்படும் ஆன்மீகத்தின் சக்திவாய்ந்த ஸ்திதியானது தடைகளின் சகல தாக்குதல்களையும் முடிக்கக் கூடியதாக இருக்கும்.

சுலோகம்:
பிராமண உலகில் அனைவரின் மதிப்பையும் பெறுபவர்களால் சிம்மாசனத்தில் அமர முடியும்.

அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.

தந்தை பிரம்மாவினதும் தந்தை சிவனினதும் விசேட முன்னுரிமை தூய்மையே ஆகும். எவ்வாறாயினும், தூய்மையின் வரைவிலக்கணம் மிகவும் ஆழமானது. தூய்மை இருக்கும்போது, அங்கே இயல்பாகவே நம்பிக்கை, நேர்மை, சுத்தம் என்பவையும் விருத்தி செய்யப்படும். சம்பூரணமான தூய்மை என்பதன் அர்த்தம், தூய்மை இன்மை உங்களின் மனம் அல்லது புத்தி, உங்களின் கனவுகளில்கூடத் தொடக்கூடாது. இதுவே உண்மையான வைஷ்ணவராக இருத்தல் எனப்படுகிறது.