23.09.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைத்தையும் யோகசக்தியுடன் செய்யுங்கள். தந்தையிடம் எதைப் பற்றியும் வினவுவதற்கான கேள்வியே இல்லை. நீங்கள் கடவுளின் குழந்தைகள், ஆகவே அசுரத்தனமான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

கேள்வி:
உங்கள் யோகசக்தி செய்கின்ற அற்புதம் எது?

பதில்:
இந்த யோகசக்தியால் உங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும். உங்களுக்கு யோகசக்தி இல்லாவிட்டால், உங்களால் தூய்மையாக முடியாது. யோக சக்தியினாலேயே முழு உலகமும் தூய்மை ஆகுகிறது. ஆகவே, தூய்மையாகி, உங்கள் உணவைத் தூய்மை ஆக்குவதற்கு நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். அனைத்தையும் சாதுரியமாகச் செய்யுங்கள். அனைவருடனும் பணிவுடன் பழகுங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். எவ்வாறு ஆன்மீகத் தந்தை வந்து, சுவர்க்கமாகிய புதிய உலகை ஸ்தாபிக்கிறார் என்பதை உலகிலுள்ள எவரும் அறிய மாட்டார்கள். எவருக்கும் இது தெரியாது. தந்தையிடம் உங்களால் எதைப் பற்றியும் வினவ முடியாது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் எதைப் பற்றியும் கேட்கத் தேவையில்லை. அவர் தொடர்ந்தும் அனைத்தையும் தானாகவே விளங்கப்படுத்துகிறார். தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு கல்பமும், இங்கு, பாரத தேசத்தில் வந்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு இது தெரியாது. அவர் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகிறார். எவரும் எந்தக் கேள்வியும் கேட்காது விட்டாலும், அவர் தொடர்ந்தும் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். சிலசமயங்களில், குழந்தைகளுக்குத் தங்கள் உணவையும், பானத்தையும் இட்டுச் சிரமம் இருப்பதால், என்ன செய்வது என பாபாவிடம் கேட்கிறார்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அனைத்தையும் யோகசக்தியுடன் செய்யுங்கள் என பாபா உங்களிடம் ஏற்கெனவே கூறியுள்ளார். நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, அனைத்தையும் செய்யுங்கள். நீங்கள் எங்கே சென்றாலும், தந்தையை நிச்சயமாக நினைவு செய்வதும், எந்த அசுரச் செயல்களைச் செய்யாமல் இருப்பதுவுமே உங்களுக்கான பிரதான விடயமாகும். நாங்களே கடவுளின் குழந்தைகள் ஆவோம். அவரே அனைவருக்கும் தந்தையும் ஆவார். அவர் அனைவருக்கும் ஒரே கற்பித்தல்களையே கொடுக்கிறார். தந்தை கொடுக்கும் கற்பித்தல்: குழந்தைகளே, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகவேண்டும். ஓர் இராச்சியத்திலும் பல்வேறு தராதரங்கள் உள்ளன. ஒவ்வொருவரது அந்தஸ்தும் அவரவரின் முயற்சிக்கேற்ப உள்ளது. குழந்தைகளே முயற்சி செய்ய வேண்டும், குழந்தைகளான நீங்களே வெகுமதியையும் பெற வேண்டும். உங்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்குத் தந்தை வருகிறார். தந்தை எப்பொழுது வருகிறார், அவர் வரும்பொழுது என்ன செய்கிறார் அல்லது அவர் உங்களை எங்கே அழைத்துச் செல்கிறார் என்பதைப் பற்றிய எதனையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. நாடகத் திட்டத்துக்கேற்ப தந்தையே வந்து நீங்கள் எங்கிருந்து வீழ்ந்தீர்கள் என்பதை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மிகவும் உச்சியில் இருந்து வீழ்ந்தீர்கள். நீங்கள் யார் என்பது உங்கள் புத்திக்கு முற்றாகவே எட்டவில்லை. நீங்கள் இப்பொழுது அதை உணர்கிறீர்கள். தந்தை வந்து என்ன செய்வார் என்பதை நீங்கள் ஒருபொழுதும் கனவிலும் கண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் முற்றாகவே எதையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டுகொண்டு விட்டீர்கள். ஓர் உண்மையான, விசுவாசமான மனைவி தனது கணவனுக்கு முழுமையாகவே தன்னை அர்ப்பணிப்பதைப் போன்று, நீங்கள் அத்தகையதொரு தந்தையிடம் உங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். அவள் மரணச்சிதையில் ஏறுவதற்குக் கூடத் தயங்குவதில்லை; அவள் அந்தளவுக்கு தைரியசாலி. முன்னர், அவர்களில் பலரும் உடன்கட்டை ஏறுவார்கள். இங்கு, பாபா உங்களுக்கு அத்தகைய எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. “ஞானச்சிதை” என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், உங்களை எரிப்பதற்கான கேள்வியே கிடையாது. வெண்ணெயில் இருந்து, ஒரு மயிரை இழுப்பது போன்று இலகுவாகத் தந்தை விளங்கப்படுத்துகிறார். உண்மையிலேயே, உங்கள் தலை மீது பல பிறவிகளின் பாவச்சுமைகள் உள்ளன எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஒருவர் மாத்திரம் அஜாமில் அல்ல் ஒவ்வொரு மனிதரும், மற்றவரை விட அதிகப்படியாகவே அஜாமிலாக இருக்கிறார்கள். தமது முன்னைய பிறவியில் தாங்கள் என்ன செய்தனர் என்பது மனிர்களுக்குத் தெரியாது. நீங்கள் பாவத்தை மாத்திரம் செய்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உண்மையில், ஓர் ஆத்மாவேனும் புண்ணியாத்மா கிடையாது. ஆத்மாக்கள் அனைவரும் பாவிகளாக உள்ளார்கள். ஒருவர் புண்ணியம் செய்தால், அவர் ஒரு புண்ணியாத்மா ஆகுகிறார். எவ்வாறாயினும், புண்ணியாத்மாக்கள் சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கிறார்கள். ஆகவே ஒருவர் ஒரு வைத்தியசாலை போன்றவற்றைக் கட்டினால், அதனால் என்ன! அவரால் ஏணியில் கீழிறங்கி வருவதிலிருந்து தப்ப முடியாது. அவர் மேலேறும் ஸ்திதியில் செல்வதில்லை; அவர் தொடர்ந்தும் கீழேயே இறங்குகிறார். இந்தத் தந்தை கணவர்க்கெல்லாம் கணவரும், தந்தையர்க்கு எல்லாம் அதிமேலான தந்தையும் என்பதால், உங்களை அவரிடம் உயிருடன் அர்ப்பணிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறத்தக்க வகையில், இந்தத் தந்தை அத்தகையதோர் அன்பிற்கினியவர் ஆவார். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்கிறார். உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற அத்தகையதொரு தந்தை, மிகவும் சாதாரணமானவர்! ஆரம்பத்தில், புதல்விகள் நோய்வாய்ப்படும் பொழுது, பாபாவே அவர்களுக்குச் சேவை செய்வது வழக்கம். அவருக்கு எவ்வித அகங்காரமும் இருக்கவில்லை. பாப்தாதாவே அதிமேன்மையானவர். அவர் கூறுகிறார்: நான் செய்யும் செயல்கள் அனைத்தையும், இவர் மூலம் செய்கிறேன் அல்லது நான் இவரை அவற்றைச் செய்யுமாறு தூண்டுகிறேன். இருவரும் ஒருவர் போன்றே உள்ளார்கள். எச்செயலைத் தந்தை செய்கிறார் எனவும், எதைத் தாதா செய்கிறார் எனவும் உங்களால் கூற முடியாது. தந்தையே இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குச் செயல், நடுநிலைச்செயல், பாவச்செயலின் தத்துவத்தை விளங்கப்படுத்துகிறார். தந்தை மிகவும் மேன்மையானவர். மாயையின் செல்வாக்கும் அதிகளவுக்கு உள்ளது. தந்தையான கடவுள் கூறுகிறார்: இதைச் செய்யாதீர்கள்! அப்படியிருந்தும், சிலர் அவர் கூறுவதைச் செவிமடுப்பதில்லை. கடவுள் கூறுகிறார்: இனிய குழந்தைகளே, இதைச் செய்யாதீர்கள். அப்படியிருந்தும் சில குழந்தைகள் பிழையான விடயங்களைச் செய்கிறார்கள். அவர் நீங்கள் பிழையான செயல்களைச் செய்வதை மாத்திரமே தடுக்;கிறார், ஆனால் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். தவறுதலாகவேனும் தந்தையை மறக்காதீர்கள். “நீங்கள் என்னை என்ன செய்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்னை அடித்தால் கூடப் பரவாயில்லை” என நாங்கள் கூறுகிறோம், ஆனால் உண்மையில் தந்தை அவ்வாறு எதையும் செய்வதில்லை. எவ்வாறாயினும், மிகவும் உச்சக்கட்டமான சூழ்நிலையின் பொழுதே இவ்வாறு கூறப்படுகிறது. பாடலும் உள்ளது: நீங்கள் என்னிடம் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் ஒருபொழுதும் உங்கள் வாசலை விட்டு அகல மாட்டேன். எவ்வாறாயினும் வெளியில் என்ன உள்ளது? புத்தியும் கூறுகிறது: நான் வேறு எங்கே செல்வது? ஒருபொழுதும் நீங்கள் வேறெந்த நேரத்திலும் பெறாத இராச்சியத்தைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களுடைய அடுத்த பிறவியில் நீங்கள் எதனையேனும் பெற முடியும் என்பதல்ல, இல்லை. அவர் உங்களை எல்லையற்ற சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்ற, பரலோகத் தந்தை ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். எவ்வாறாயினும், அதனையிட்டு, தந்தை உங்களுக்கு ஓர் ஆலோசனையையும் கூறுகிறார்: ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் போன்று, உங்கள் கடமையைச் செய்யுங்கள். இல்லா விட்டால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். நீங்கள் உங்கள் உத்தியோகத்தைப் பார்க்க வேண்டும்; சிலவேளையில் நீங்கள் ஒரு கடுமையான பார்வையைக் கொண்டிருக்க நேரிடும். இயன்றளவுக்கு, அனைத்தையும் அன்புடன் செய்யுங்கள். இல்லா விட்டால், சாதுரியத்துடன் கடும் பார்வையைக் காண்பியுங்கள். உங்கள் கரங்களைப் பயன்படுத்தாதீர்கள்! பாபாவுக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள். பாபாவும் குழந்தைகளைப் பற்றி அக்கறைப்படுகிறார். தூய்மையாக இருப்பதே பிரதான விடயம். பிறவிபிறவியாக, நீங்கள் அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எவ்வாறாயினும், நீங்கள் முற்றாகவே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள். அவர்கள் அழைப்பதால், அவர்கள் நிச்சயமாகத் தூய்மையற்றே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரை அழைக்க வேண்டிய தேவையில்லை. அவரை வழிபட வேண்டியதில்லை. கள்ளங்கபடமற்ற, பலவீனமான உங்கள் மீது அதிகளவு துன்புறுத்தல் உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். பாபா தொடர்ந்தும் உங்களுக்குப் பல யுக்திகளைக் காட்டுகிறார். மிகவும் பணிவுடன் தொடர்ந்தும் முன்னேறுங்கள். அவரிடம் கூறுங்கள்: நீங்களே என்னுடைய கடவுள்! அவ்வாறாயின், உங்களுக்கு என்ன வேண்டும்? திருமணம் செய்யும் பொழுது, மணமகன் கூறுகிறார்: நான் உங்களுடைய கணவனும், உங்களுடைய கடவுளும், உங்களுடைய குருவும் ஆவேன்! நானே உங்களுக்கு அனைத்துமாக உள்ளேன்! ஆகவே, இப்பொழுது அவருக்குக் கூறுங்கள்: நான் தூய்மையாக இருக்க விரும்புகிறேன், ஆகவே நீங்கள் ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்? கடவுள் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். நீங்களே என்னைத் தூய்மை ஆக்குபவராக இருக்க வேண்டும். இவ்வாறாக மிகவும் அன்புடனும், பணிவுடனும் பேசுங்கள். அவர் கோபம் அடைந்தால், அவர் மீது மலர்களைப் பொழியுங்கள். சிலசமயங்களில், அவர்கள் தங்கள் மனைவிகளை அடிக்கிறார்கள், பின்னர் மன்னிப்பு கேட்கிறார்கள். ஒருவர் அதிகளவுக்கு மது அருந்தி, மிகவும் போதை அடையும் பொழுது, அவர் தன்னை ஒரு சக்கரவர்;த்தியாகக் கருதுகிறார். இந்த நஞ்சானது அத்தகையது, கேட்கவும் வேண்டாம்! அவர்கள் பின்னர் மனம் வருந்துகிறார்கள். ஆனால், அவர்கள் அப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளதால், அவர்களால் அதை விட முடியாதுள்ளது. அவர்கள் ஓரிரு தடவைகள் விகாரத்தில் வீழ்ந்து போதை அடைந்து, பின்னர் தொடர்ந்தும் வீழ்கிறார்கள். போதையான விடயங்கள் ஆத்மாவுக்குச் சந்தோஷத்தை ஏற்படுத்துவதைப் போன்று, விகாரமும் அவ்வாறானதே. இங்கு நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். யோகசக்தி இல்லாமல், உங்கள் பௌதீகப் புலன்கள் எவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. இதுவே யோகசக்தியின் அற்புதம், இதனாலேயே அதன் பெயர் மிகவும் பிரபல்யமாக உள்ளது. இந்த யோகத்தைக் கற்பதற்கு மக்கள் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள். அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தும், குடும்பத்தில் இருந்தும் தொலைவில் இருக்கிறார்கள். அது அரைக்கல்பத்தின் செயற்கையான அமைதியாகும். உண்மையான அமைதியைப் பற்றி எவரும் அறியார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் ஆதி தர்மம் அமைதியாகும். நீங்கள் உங்கள் சரீரத்தின் மூலம் செயல்களைச் செய்ய வேண்டும். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை ஏற்றுக் கொள்ளும் வரையில், அவர் அமைதியாக இருக்கிறார். அதன்பின்னர், அந்த ஆத்மா எங்காவது சென்று, இன்னுமொரு சரீரத்தில் பிரவேசிக்கிறார். இங்கு, சில ஆத்மாக்கள் தொடர்ந்தும் தங்கள் சூட்சும சரீரங்களில் அலைந்து திரிகிறார்கள். அவை ஒளியாலான சரீரங்கள் ஆகும். சில ஆத்மாக்கள் அதிகளவு துன்பத்தை விளைவிக்கிறார்கள், ஏனையோர் நல்ல ஆத்மாக்கள் ஆவர். இங்கும், எவருக்கும் துன்பத்தை விளைவிக்காத சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஏனையோர் பெருமளவு துன்பத்தை விளைவிக்கிறார்கள். சிலர் சாதுக்களையும், மகாத்மாக்களையும் போன்றவர்கள். தந்தை கூறுகிறார்: ஓ, நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே! நீங்கள் 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை என்னைச் சந்திப்பதற்கு வந்துள்ளீர்கள். இங்கு நீங்கள் எதைப் பெற வந்துள்ளீர்கள்? நீங்கள் எதைப் பெறப் போகிறீர்கள் எனத் தந்தை கூறியுள்ளார். “பாபா, உங்களிடம் இருந்து நாங்கள் பெறப் போவது என்ன என்னும் கேள்வியே கிடையாது. நீங்களே புதிய உலகைப் படைப்பவராகிய, தந்தையான சுவர்க்கக் கடவுள். ஆகவே, நாங்கள் நிச்சயமாக உங்களிடம் இருந்து இராச்சியத்தைப் பெறுவோம்”. தந்தை கூறுகிறார்: ஒருவர் சிறிதளவு இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டாலும்கூட, அவர் நிச்சயமாகச் சுவர்க்கத்துக்குச் செல்வார். நான் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன். கடவுளும், பிரஜாபிதா பிரம்மாவும் அனைவரிலும் மகத்துவமான ஆளுமை கொண்டவர்கள். யார் விஷ்ணு என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எவரும் இதை அறியார். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் அவர்களுடைய குலத்துக்கு உரியவர்கள். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தில் இராச்சியத்தை ஆட்சி செய்கிறார்கள். உண்மையில் இந்தச் சக்கரம் போன்றவை விஷ்ணுவுக்கு உரியவையல்ல. இந்த அணிகலன்கள் பிராமணர்களாகிய எங்களுக்கு உரியவை. இவ்வேளையில், எங்களுக்கு இந்த ஞானம் உள்ளது. இவ்விடயங்கள் எவையும் சத்தியயுகத்;தில் விளங்கப்படுத்தப்படுவது இல்லை. அத்தகைய விடயங்களை விளங்கப்படுத்தும் சக்தி வேறு எவருக்கும் இல்லை. நீங்கள் இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தை அறிவீர்கள். வேறு எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை இதைக் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். இந்த அணிகலன்களை நாங்கள் அணிவது சரியாகத் தோன்றவில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இப்பொழுதும் கற்பித்தல்களைப் பெற்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். பின்னர், நாங்கள் அவர்களைப் போன்று ஆகுவோம். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதால், நாங்கள் தேவர்கள் ஆகுவோம். சுயதரிசனச் சக்கரம் என்றால் படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிவதாகும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதை, உலகிலுள்ள எவராலும் விளங்கப்படுத்த முடியாது. தந்தை அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். இச்சக்கரத்தின் ஆயுட்காலம் அவர்கள் கூறுவதைப் போன்று நீண்டதாக இருக்க முடியாது. அதன் மனித சனத்தொகையின் அடிப்படையிலேயே உலகச் செய்திகள் கூறப்படுகின்றன. அவர்கள் ஆமைகளின் அல்லது மீனின் பெருக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை; அது மனிதர்களுக்கு மாத்திரம் பொருந்துகிறது. மக்கள் உங்களிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் யோகசக்தி மூலம் நீங்கள் உலகைத் தூய்மை ஆக்குகிறீர்கள் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். ஆகவே, யோகசக்தி மூலம், உங்களால் உங்கள் உணவைத் தூய்மையாக்க முடியாதா? அச்சா. நீங்கள் இவ்வாறு ஆகிவிட்டீர்கள்; ஆகவே நீங்கள் ஏனையோரை உங்களைப் போன்று ஆக்குகிறீர்களா? உங்களுக்கு மீண்டும் ஒருமுறை சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஆகவே, நீங்கள் அவரை நிராகரிக்கக் கூடாது. நீங்கள் உலக இராச்சியத்தை நிராகரித்தால், அனைத்தும் முடிவடைகின்றன. அதன்பின்னர் நீங்கள் குப்பைத் தொட்டிக்கே செல்ல நேரிடும். இந்தப் பழைய உலகம் முழுவதும் குப்பையாகவே உள்ளது. அதனால், அது குப்பைத்தொட்டி என்றே அழைக்கப்பட வேண்டும். உலகின் நிலைமையைப் பாருங்கள்! நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். சத்தியயுகத்தில் ஓர் இராச்சியம் மாத்திரமே இருந்தது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் உங்களை நம்புவதில்லை. அவர்களுக்குத் தற்பெருமை உள்ளதனால், அவர்கள் நீங்கள் கூறுவதை முற்றாகவே செவிமடுப்பது இல்லை, அவர்கள் கூறுகிறார்கள்: அவை அனைத்தும் உங்கள் கற்பனை. சரீரம் போன்ற அனைத்தும் கற்பனையின் மூலமே உருவாக்கப்படுகிறது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் முற்றாகவே அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இது கடவுளின் கற்பனை எனவும், கடவுள் விரும்புவதைப் போன்றே அனைவரும் ஆகுகிறார்கள் எனவும், இது அவருடைய விளையாட்டு எனவும் அவர்கள் இலகுவாகக் கூறுகிறார்கள். அவர்கள் அத்தகைய விடயங்களைக் கூறுகிறார்கள், கேட்கவும் வேண்டாம்! இப்பொழுது தந்தை வந்துவிட்டார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வயோதிபத் தாய்மார்களும் கூறுகிறார்கள்: பாபா, 5000 வருடங்களுக்கு ஒருமுறை உங்களிடம் இருந்து எங்கள் சுவர்க்க ஆஸ்தியை நாங்கள் கோருகின்றோம். நாங்கள் இப்பொழுது சுவர்க்க இராச்சியத்தைக் கோருவதற்கே வந்துள்ளோம். நடிகர்கள் அனைவருக்கும் தத்தமக்கென சொந்தப் பாகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இரு வேறு நடிகர்கள் ஒரே பாகத்தைக் கொண்டிருப்பதில்லை. தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு அதே பெயரில், ரூபத்தில், அதேநேரத்தில் நீங்கள் முயற்சி செய்வீர்கள். அத்தகையதொரு பெரும் வருமானம் உள்ளது! ஒருவர் சிறிதளவு இந்த ஞானத்தைக் கேட்டிருந்தாலும், அவர் சுவர்க்கத்துக்குச் செல்வார் என பாபா கூறினாலும், ஒவ்வொரு மனிதரும் மேன்மை ஆகுவதற்கே முயற்சி செய்கிறார். ஆகவே, முயற்சியே முதன்மையானது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாபா, குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த அகங்காரமும் இன்றிச் சேவை செய்வது போன்று, தந்தையைப் பின்பற்றுங்கள். அத்துடன் தந்தையின் ஸ்ரீமத்தையும் பின்பற்றி, உலக இராச்சியத்தைக் கோருங்கள். நிராகரிக்காதீர்கள்!

2. மரணித்து வாழ்ந்து அதிமேலான தந்தையர்க்கு எல்லாம் தந்தையும், கணவர்க்கு எல்லாம் கணவருமான அதி அன்பிற்கினியவரிடம் உங்களை அர்ப்பணியுங்கள். இந்த ஞானச்சிதையில் அமருங்கள். தவறுதலாகக் கூடத் தந்தையை மறப்பதனால், பிழையான செயல்களைச் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற சந்தோஷப் பொக்கிஷங்களால் நிரம்பியிருக்கும் கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.

ஒவ்வொரு நாளும் சந்தோஷக் கடலிடம் இருந்து நீங்கள் எல்லையற்ற சந்தோஷப் பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். அதனால் எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களின் சந்தோஷம் ஒருபோதும் மறைய முடியாது. உங்களால் எந்தவொரு சூழ்நிலையிலும் கவலைப்பட முடியாது. ‘எனது சொத்துக்கு என்ன நடக்கும்?’ அல்லது ‘எனது குடும்பத்திற்கு என்ன நடக்கும்?’ என்ற எண்ணங்கள் எவையும் இருக்காது. மாற்றம் மட்டுமே இருக்கும், அப்படித்தானே? இந்தப் பழைய உலகில் உள்ளவர்கள் எத்தனை மேன்மையான மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் பழையவர்களே. அதனால் நீங்கள் கவலையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். என்ன நடந்தாலும் அது நல்லதற்கே. பிராமணர்களுக்கு, அனைத்தும் நல்லதே, கூடாதது என்று எதுவும் இல்லை. வேறு எவரும் உங்களிடம் இருந்து அதைப் பறித்துக் கொள்ள முடியாதபடியான இராச்சியம் உங்களிடம் இருக்கும்.

சுலோகம்:
இந்த உலகை ஆன்மீக விளையாட்டாகக் கருதுங்கள். அதனால் சூழ்நிலைகள் பொம்மைகள் ஆகிவிடும். நீங்கள் ஒருபோதும் மனச்சோர்வு அடைய மாட்டீர்கள்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

எரிமலை ரூபத்தில் கடைசியான, மிக வேகமான முயற்சி இன்னமும் எஞ்சியுள்ளது. பாண்டவர்களால் யாதவர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். பாண்டவர்களின் மேன்மையான, ஆன்மீக கௌரவமான ஸ்திதி, யாதவர்களின் இக்கட்டான, மன அழுத்தமான சூழ்நிலைகளை முடிக்கும். உங்களின் கௌரவம் மற்றும் சுயமரியாதையால் மன அழுத்தத்தில் உள்ள ஆத்மாக்களுக்கு அமைதி மற்றும் சௌகரியத்தின் ஆசீர்வாதத்தை வழங்குங்கள். எரிமலை ரூபம் என்றால் வெளிச்ச வீடு மற்றும் சக்தி வீடாகி அந்த முயற்சியைத் தொடர்வதாகும்.