24.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைத் தொடர்ந்து பின்பற்றும் போது, தந்தையே உங்களுக்குப் பொறுப்பாவார். தந்தையின் வழிகாட்டல்: நடந்தும், உலாவித் திரியும்போதும் என்னை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
சிறந்த, நற்குணங்களை உடைய குழந்தைகளின் பிரதான அடையாளங்கள் யாவை?

பதில்:
அவர்கள் முட்களை மலர்களாக மாற்றுகின்ற, மிகச்சிறந்த சேவையைச் செய்கிறார்கள். அவர்கள் முட்களைப் போன்று எவரையும் குத்துவதில்லை. அவர்கள் என்றுமே தம்மிடையே சண்டை போடுவதில்லை. அவர்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. அவர்களுக்குத் துன்பம் விளைவிப்பது என்றால், அவர்களை முட்களைப் போல் குத்துவது போன்றதாகும்.

பாடல்:
காலம் கடந்து செல்கிறது.

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள், செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இந்தப் பாடலின் கருத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். ‘வரிசைக்கிரமம்’ எனக் கூறப்படுகின்றது. ஏனெனில், சிலருக்கு முதற்தரமான புரிந்துணர்வும், சிலருக்கு இரண்டாம் தரம், ஏனையோருக்கு மூன்றாம் தரப் புரிந்துணர்வும் உள்ளன. நீஙகள் ஒவ்வொருவரும் உங்களுக்குரிய முறையில் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய புத்தியிலும் உங்கள் சொந்த, தனிப்பட்ட நம்பிக்கை உள்ளது. தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். சிவபாபா இவர் மூலம் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார் என்றே எப்பொழுதும் கருதுங்கள். அரைக் கல்பமாக நீங்கள் அசுர வழிகாட்டல்களையே பின்பற்றி வருகின்றீர்கள். இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் உங்களுடைய படகு அக்கரைக்குச் செல்லும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இந்த வழிகாட்டல்கள் கடவுளிடமிருந்து அல்ல, ஒரு மனிதரிடமிருந்தே கிடைக்கிறது என்று நீங்கள் கருதினால் நீங்கள் குழப்பம் அடைவீர்கள். தந்தை கூறுகிறார்: எனது வழிகாட்டல்களைப் பின்பற்றினால், நான் உங்களுக்குப் பொறுப்பாவேன். இவரினூடாகச் செய்யப்படும் செயல்களுக்கு நானே பொறுப்பாவேன். நான் அதனைச் சரியாக்குவேன். எனது வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். மிகச் சரியாக நினைவு செய்பவர்களே எனது வழிகாட்டலைப் பின்பற்றுகின்றார்கள். இவை கடவுளின் வழிகாட்டல்கள் என்பதை ஒவ்வோர் அடியிலும் நீங்கள் புரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால் நீங்கள் ஒருபோதும் இழப்பை அனுபவம் செய்ய மாட்டீர்கள். நம்பிக்கை கொண்டிருப்பதனால் வெற்றி கிட்டும். இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளாத பல குழந்தைகள் உள்ளனர். சிறிதளவு ஞானத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதனால், சிறிதளவு யோகமே உள்ளது. ஞானம் என்றால் வரலாற்றையும், புவியிலையும் தெரிந்து கொள்வதாகும். இது மிகவும் இலகுவானது. இங்குள்ள மக்கள் அதிகளவில் விஞ்ஞானத்தைக் கற்கிறார்கள். இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. யோகத்திற்கே முயற்சி தேவை. யோகம் செய்யும்போது நல்ல போதை கொண்டிருந்ததாக எவராவது பாபாவிடம் கூறினால், பாபா அவரை நம்ப மாட்டார். பாபா ஒவ்வொருவருடைய செயல்களையும் அவதானிக்கின்றார். தந்தையை நினைவு செய்கின்றவர்களே மிகவும் அன்பானவர்கள். எவ்வாறாயினும் நீங்கள் நினைவு செய்யாதபோது, நீங்கள் பிழையான செயல்களைச் செய்கிறீர்கள். இரவுக்கும் பகலுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது. இப்போது, உங்களால் ஏணிப் படத்தை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். தற்போது, இது ஒரு முட்காடு; அது ஒரு பூந்தோட்டம். பாரதம் ஒரு பூந்தோட்டமாக இருந்ததென்று நீங்கள் மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். காட்டு மிருகங்கள் எப்போதாவது பூந்தோட்டத்தில் வாழ்வதுண்டா? தேவர்களே அங்கு வாழ்கின்றார்கள். தந்தையே அதியுயர்வான அதிகாரியாவார். அதன்பின்னர் மனித குலத்தின் தந்தையான பிரம்மாவும் அதியுயர்வான அதிகாரியாவார். இந்த தாதாவும் அதியுயர்வான அதிகாரியாவார். சிவனும் உள்ளார், மனித குலத் தந்தையான பிரம்மாவும் உள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். உங்களுடைய சரீர வடிவில் நீங்கள் சகோதர சகோதரிகள், அதாவது மனித குலத் தந்தையான, பிரம்மாவின் குழந்தைகள். அவர் அனைவரதும் முப்பாட்டனார். அத்தகைய அதியுயர்வான அதிகாரிக்கு ஒரு கட்டடம் தேவைப்படுகின்றது. இவ்வாறாக எழுதி, இது எவரது புத்தியையாவது தொடுகின்றதா எனப்; பாருங்கள். சிவபாபாவும், மனித குலத் தந்தையான பிரம்மாவும் உள்ளனர்; ஆத்மாக்கள் அனைவரது தந்தையும், மனிதர்கள் அனைவரது தந்தையும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த கருத்தாகும். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் அதனை முற்றாக விளங்கப்படுத்துவதில்லை. இதனை நீங்கள் மறக்கின்றீர்கள். ஏனெனில், இந்த ஞானம் உள்ளது என்ற அகங்காரத்தை நீங்கள் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அது நீங்கள் பாப்தாதாவையும் வெல்லுவதற்கு முயற்சிப்பது போன்றதாகும். இந்த தாதா கூறுகிறார்: ஓகே, நான் கூறுவதை நீங்கள் செவிமடுக்காதிருந்தால், சிவபாபாவே விளங்கப்படுத்துகிறார் என்றும் நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் எப்பொழுதும் நினையுங்கள். இதனைச் செய்யுங்கள், அதனைச் செய்யுங்கள் என்று உங்களுக்கு வழிகாட்டல்களை கடவுளே நேரடியாகக் கொடுக்;கின்றார். அவரே பொறுப்பாவார். கடவுளால் கொடுக்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இவர் கடவுள் அல்ல. நீங்கள் கடவுளிடம் இருந்தே கற்கவேண்டும். கடவுளே உங்களுக்கு வழிகாட்டல்களைச் சதா கொடுக்கிறார் என்றே நினையுங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பாரத மக்களே. அனைவரும் மனிதர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சிவாலயத்தில் வாழ்ந்ததாலேயே அனைவரும் அவர்களுக்கு நமஸ்தே கூறுகிறார்கள். எவ்வாறாயினும் சில குழந்தைகள் முழுதாக விளங்கப்படுத்துவதில்லை. பலர் தங்களுடைய ஞானத்தையிட்டு அகங்காரம் கொள்கிறார்கள். பலரிடம் குறைபாடுகள் உள்ளன. நீங்கள் முழுமையான யோகத்தைக் கொண்டிருந்தால் மாத்திரமே, உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். உலக அதிபதி ஆகுவதென்பது உங்களுடைய சித்தி வீட்டிற்குச் செல்வது போலல்ல. மாயை எவ்வாறு சில குழந்தைகளின் மூக்கில் பிடித்து அவர்களைச் சாக்கடையில் வீசுவதை பாபா பார்க்கிறார். நீங்கள் சந்தோஷத்துடனும் மலர்ந்த முகத்துடனும் தந்தையின் நினைவில் இருக்கவேண்டும். உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆகவேண்டும். இதனை மறந்துவிடும்போது, உங்களுடைய சந்தோஷத்தின் வீதம் உயராது. சிலர் தங்களால் வெளியே இருக்கும்போது பாபாவை நினைவு செய்ய முடியாதிருப்பதால், வழிநடத்தபட்ட தியானம் நடாத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காததால், பாபா சிலவேளைகளில் நீங்கள் பின்பற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சிநிரலை அனுப்புகிறார். இருப்பினும், நீங்கள் நினைவு செய்வதற்காக அமர்வதில்லை. அவர்களுடைய புத்தி தொடர்ந்து அங்கும் இங்கும் அலைகிறது. பாபா தனது சொந்த உதாரணத்தைக் கொடுக்கிறார். அவர் நாராயணனின் தீவிர பக்தனாக இருந்ததால் அவர் எங்கு சென்றாலும் நாராயணனின் படம் ஒன்றைத் தன்னுடன் வைத்திருந்தார். இருப்பினும், வழிபாடு செய்யும் போது, அவரின் புத்தி அலைந்து திரியும். அவ்வாறே இங்கும் நடக்கிறது. தந்தை கூறுகிறார்: நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் நீங்கள் தொடர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆனால், உங்களில் பலர் உங்களுக்காக ஒரு சகோதரி குறிப்பாகத் தியானத்தை வழிநடத்த வேண்டும் என்றே விரும்புகிறீர்கள். குறிப்பாகத் தியானம் வழிநடத்த வேண்டும் என்பதற்கான அவசியமே இல்லை. பாபா எப்போதும் கூறுகிறார்: நினைவில் நிலைத்திருங்கள்! யோகத்தில் அமர்ந்திருக்கும்போது சில குழந்தைகள் திரான்சில் சென்று விடுகிறார்கள். அவர்களால் ஞானத்தை நினைவு செய்யவோ அல்லது யோகம் செய்யவோ முடியாதிருப்பதுடன் தூங்கி விழவும் ஆரம்பிக்கின்றார்கள். பலருக்கு அவ்வாறு செய்யும் பழக்கம் உள்ளது. அந்த அமைதி தற்காலிகமானது. அவர்கள் நாள் முழுவதும் அமைதியின்றி இருக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் நடக்கும்போதும், உலாவித்திரியும்போதும் தந்தையை நினைவு செய்யவில்லை என்றால், எவ்வாறு உங்களுடைய பாவச்சுமைகள் நீக்கப்படும்.? இது அரைக் கல்பத்திற்கான சுமையாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்வதற்கு பெரும் முயற்சி தேவை. இன்ன, இன்ன நேரத்தில் தாங்கள் நினைவில் இருந்ததாகக் கூறி பல குழந்தைகள் பாபாவிற்கு எழுதினாலும், அவர்களால் அந்தளவு நீண்ட நேரத்திற்கு நினைவில் இருக்க முடியாது. அவர்கள் உண்மையில் அட்டவணையைப் புரிந்து கொள்வதில்லை. பாபாவே எல்லையற்ற தந்தையாவார். அவரே தூய்மையாக்குபவர். ஆகவே நீங்கள் சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். எப்படியும் நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர்தானே என்று நீங்கள் எண்ணக்கூடாது. எவ்வாறாயினும் இவ்வாறு தாங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள் என்று எண்ணுகின்ற குழந்தைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் அவரை நினைப்பதில்லை. அவர்கள் அவரை நினைவு செய்திருந்தால் அவர்கள் முதலாவது இலக்கத்தவராக ஆகியிருப்பார்கள். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு மிகச்சிறந்த புத்தி தேவை. நாங்கள் பாரதத்தைப் புகழ்கின்றோம். புதிய உலகில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. இப்போது இது கலியுகமான பழைய உலகம். அதுவோ சந்தோஷதாமம். ஆனால் இதுவோ துன்பபூமி. பாரதம் சத்திய யுகமாக இருந்தபோது அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. மக்கள் உங்களிடம் கேட்கிறார்கள்: அது அவர்களின் இராச்சியமாக இருந்ததென்பதை எப்படி நாங்கள் நம்புவது? இந்த ஞானம் அற்புதமானது. ஒவ்வொருவருடைய பாக்கியத்திலும் என்னென்ன உள்ளது என்பதும் நீங்கள் ஒவ்வொருவரும் என்னென்ன முயற்சியைச் செய்கிறீர்கள் என்றும் தெளிவாகப் புலப்படுகிறது. அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து உங்களால் கூறமுடியும். எவ்வாறாயினும், உண்மையில், சத்திய யுகத்திலும், கலியுகத்திலும் நீங்கள் மனிதர்களே. எனவே, மக்கள் ஏன் அந்த விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, விழுந்து வணங்குகின்றார்கள்? அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். எவராவது மரணித்தால் இன்னார், இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதே இல்லை. இந்நேரத்தில் அனைவரும் நரகத்தில் வசிப்பவர்கள். எல்லோரும் இங்கு நிச்சயமாக மறுபிறப்பு எடுக்கிறார்கள். பாபா தொடர்ந்து அனைவருடைய நடத்தையையும் அவதானிக்கிறார். உங்களில் சிலரோடு பாபா மிகவும் சாதாரணமாகவே பேச வேண்டியள்ளது. அவர் உங்களைப் பராமரிக்க வேண்டும். தந்தை சகலதையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். இது சரியென்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இருப்பினும், நீங்கள் ஏன் பெரிய முட்களாக ஆகுகிறீர்கள்? ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிப்பதால் நீங்கள் முட்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் அந்தப் பழக்கத்தை கைவிடுவதில்லை. தோட்டக்காரரான தந்தை இப்போது பூந்தோட்டம் ஒன்றை உருவாக்குகிறார். அவர் தொடர்ந்து உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகிறார். அது அவரின் பணியாகும். முள்ளாக இருக்கும் ஒருவர் எப்படிப் பிறரை மலர்களாக மாற்ற முடியும்? கண்காட்சிகளுக்கு யாரை அனுப்புவது என்பதில் நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நல்ல, தெய்வீகக் குணங்களையுடைய குழந்தைகளே முட்களை மலர்களாக மாற்றுகின்ற சிறந்த சேவையைச் செய்கிறார்கள். அவர்கள் முட்களைப் போன்று எவரையும் குத்துவதில்லை. அதாவது, அவர்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் தங்களுக்கிடையே சண்டை போடுவதில்லை. குழந்தைகளான நீங்கள் மிகச்சரியாக விளங்கப்படுத்த வேண்டும். இதில் எவரையும் அவதூறு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. சிவஜெயந்தி வரவிருப்பதால், நீங்கள் பல கண்காட்சிகளை நடத்தவேண்டும். நீங்கள் சிறு கண்காட்சிகளை நடத்தியும் விளங்கப்படுத்தலாம்: “ஒரு விநாடியில் சுவர்க்கத்தில் வசிப்பவர்கள் ஆகுங்கள். அதாவது தூய்மையற்ற சீரழிந்தவர்களிலிருந்து, தூய்மையானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் ஆகுங்கள். ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுங்கள்”. அவர்கள் ஜீவன்முக்தி என்பதன் அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். எல்லோரும் தந்தையிடமிருந்து முக்தி, ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். எவ்வாறாயினும் நீங்களும் நாடகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் சுவர்க்கத்திற்குள் வருவதில்லை. எல்லோரும் தங்களுக்குச் சொந்தப் பிரிவிற்குள் திரும்புவார்கள். பின்னர் அவர்கள் தங்களுக்குரிய நேரத்தில் தங்களுடைய சமயங்களை ஸ்தாபிப்பதற்காக கீழே இறங்குவார்கள். இது விருட்சத்தின் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சற்குருவைத் தவிர வேறு எவராலும் அனைவருக்கும் சற்கதியைக் கொடுக்க முடியாது. எவ்வாறாயினும் உங்களுக்குப் பக்தியைக் கற்பிப்பதற்குப் பல குருமார்கள் இருக்கிறார்கள். எந்த மனித குருவினாலும் சற்கதியை அருள முடியாது. விளங்கப்படுத்துவதற்கான விவேகமே உங்களுக்குத் தேவை. இதில் நீங்கள் உங்களுடைய புத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாடகம் மிக அற்புதமாக நடிக்கப்படுகின்றது. உங்களில் மிகச்சிலரே இதனால் போதையுற்று இருக்கிறீர்கள். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு – 18/03/1968

உண்மையில், நீங்கள் சமயநூல்களைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. நினைவுசெய்வதும், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் புரிந்துகொள்வதுமே பிரதான விடயம். நீங்கள் பூகோள ஆட்சியாளர்களாக வேண்டும். இச்சக்கரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விநாடியில் நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள் என்று இந்நேரத்தையிட்டு நினைவு கூரப்படுகின்றது. பக்தி அரைக் கல்பத்திந்கு நீடிக்கின்றது என்பதும், அப்பொழுது இந்த ஞானம் சிறிதளவு கூட இருக்காது என்பதுமே குழந்தைகளாகிய உங்களுக்கான அற்புதமாகும். தந்தையிடம் மட்டுமே இந்த ஞானம் உள்ளது. நீங்கள் அதனைத் தந்தையிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தத் தந்தை அசாதாரணமானவர். இதனாலேயே மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே வெளிப்படுகின்றனர். அந்த ஆசிரியர்கள் இதனைக் கூற மாட்டார்கள். இவர் கூறுகின்றார்: நானே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவேன். எனவே இதனைச் செவிமடுக்கும்போது, மக்கள் அதிசயிக்கின்றார்கள். பாரதம் தாய்நாடு என்று கூறப்படுகின்றது, ஏனெனில் அம்பாளின் (இறை அன்னை) பெயர் மிகவும் பிரபல்யம் மிக்கது. அவர்கள் பல விழாக்களை அம்பாளிற்கு நடாத்துகின்றார்கள். “அம்பாள்” என்ற வார்த்தை இனிமையானது. சிறு குழந்தைகள் தங்களுடைய தாயைப் பெருமளவு நேசிக்கின்றார்கள், ஏனெனில் அவர் அவர்களுக்கு உணவூட்டி, அருந்தச் செய்து, அவர்களைப் பராமரிக்கின்றார். எவ்வாறாயினும, அம்பாளின் தந்தையும் இருக்க வேண்டும். இந்தக் குழந்தை தத்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கென ஒரு கணவர் இல்லை. இது புதியதொன்று. பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பார். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அம்பாளிற்குப் பல்வேறு மேலாக்கள் இடம்பெற்று, அவர் வழிபடப்படுகின்றார். ஏனெனில் அந்தக் குழந்தை (மம்மா) பெருமளவு சேவை செய்துள்ளார். மம்மா எண்ணற்ற மக்களுக்குக் கற்பித்துள்ளதைப் போல், வேறு எவராலும் அத்தனை குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியாது. மம்மா மிகவும் பிரபல்யமானவர், பல்வேறு மேலாக்கள் நடைபெறுகின்றன. தந்தையே வந்து, ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார் என்;பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளான நீங்களும் தந்தையின் வீட்டை அறிவீர்கள். உங்களுக்குத் தந்தையின் மீதும், வீட்டின் மீதும் அன்பு உள்ளது. இந்நேரத்தில் நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இக்கல்வியின் மூலம் அதிகளவு வருமானம் சம்பாதிக்கப்படுகின்றது. எனவே, சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் முற்றிலும் சாதாரணமானவர். தந்தை வந்து, இந்த ஞானத்தைப் பேசுவதை உலகம் அறியாது. தந்தை மட்டுமே வந்து, குழந்தைகளான உங்களுக்கு இப்புதிய விடயங்கள் அனைத்தையும் கூறுகின்றார். புதிய உலகம் எல்லையற்ற கல்வி மூலம் உருவாக்கப்படுகின்றது. பழைய உலகில் விருப்பமின்மை உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்குள்ளே இந்த ஞானத்தின் சந்தோஷம் உள்ளது. நீங்கள் தந்தையையும், வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். அனைவரிடமும் தந்தை கூறுவார்: குழந்தைகளே, உங்களுக்கு முக்தியும், ஜீவன்முக்தியும் எனும் ஆஸ்தியைக் கொடுப்பதற்கு நான் வந்து விட்டேன். எனவே, நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? நானே உங்கள் எல்லையற்ற தந்தை. உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு நான் வந்துள்ளேன். ஆகவே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற மாட்டீர்களா? இல்லாவிடின், பேரிழப்பு ஏற்படும். இது ஓர் எல்லையற்ற இழப்பு. நீங்கள் தந்தையின் கரத்தை நீங்கிச் சென்றால், உங்கள் வருமானத்தில் இழப்பு இருக்கும். அச்சா. இரவு வணக்கம். ஓம் சாந்தி.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையை நினைவுசெய்வதன் மூலம் அதியன்பானவர்கள் ஆகுங்கள். நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் செயல்கள் செய்யும்போதும் நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து சந்தோஷமாகவும், முக மலர்ச்சியுடனும் இருங்கள்.

2. ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் ஒவ்வோர் அடியிலும் கடவுளின் வழிகாட்டல்ளைப் பின்பற்றுங்கள். அகங்காரம் உடையவர்கள் (சரீர உணர்வின் போதை உடையவர்கள்) ஆகாதீர்கள். தீய செயல்களைச் செய்யாதீர்கள். குழப்பம் அடையாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சாதாரண செயல்களைச் செய்யும்பொழுதும் சதா இலேசாகவும், ஒளியாகவும் இருப்பதுடன், ஓர் உயர் ஸ்திதியில் ஸ்திரமாகவும் இருப்பீர்களாக.

தந்தை ஒரு சாதாரண சரீரத்தை எடுத்து, உங்களைப் போன்றே, பேசி உலாவித் திரிகின்றார். எனவே, செயல்கள் சாதாரணமாக இருந்தாலும், அவரது ஸ்திதி உயர்வாக இருந்தன. அதேபோல், குழந்தைகளான உங்களின் ஸ்திதியின் உயர்வாக இருக்க வேண்டும். சாதாரணச் செயல்களைச் செய்யும்போதும், இலேசாகவும் ஒளியாகவும் இருந்து, ஓர் உயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். இவ்விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: “நான் மேன்மையான செயல்களைச் செய்யும் பொருட்டு அவதரித்துள்ள, ஓர் அவதாரம்”. சாதாரணமான செயல்கள், பின்னர் அலௌகீகமான செயல்களாக மாற்றம் அடைகின்றன.

சுலோகம்:
தங்கள் பார்வையையும், மனோபாவத்தையும் ஆத்ம உணர்வுடையதாக ஆக்குபவர்களாலேயே இலகுவாகத் தூய்மையைக் கிரகிக்க முடியும்.

உங்கள் சக்திவாய்ந்த மனதால் சகாஷைக் கொடுக்கின்ற சேவையைச் செய்யுங்கள்.

உங்கள் மனம் மூலம் சேவை செய்வதில் உங்களை மும்முரமாக வைத்திருக்கும் அளவிற்கு. மேலும் அதிகமாக இலகுவில் மாயையை வெற்றி கொண்டவர்கள் ஆகுவீர்கள். இதனை உங்களுக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், உங்கள் நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் மூலம் பிறரையும் மாற்றுகின்ற சேவையையும் செய்யுங்கள். இந்த ஞானம், அன்பு, யோகத்தின் மூலம் அந்தத் தூய உணர்வுகளின் சமநிலை இருக்கட்டும். நீங்கள் நன்மை அளிப்பவர்களாகி விட்டீர்கள். இப்பொழுது எல்லையற்ற உலக உபகாரிகளாக ஆகுங்கள்.