24.06.26 Avyakt Bapdada Tamil Lanka Murli Om Shanti Madhuban
(மம்மாவின் நினைவு தினத்தில் வாசிக்க வேண்டிய அன்னை ஜெகதாம்பாவின் இனிமையான மேன்மையான வாசகங்கள் - 24 ஜூன் 2026)
இந்த செயல்களத்தில், கர்மா என்பது அநாதியானது.
நீங்கள் கர்மங்களைத் துறக்கக் கூடாது, ஆனால் கர்ம யோகிகள் ஆகவேண்டும்.
இந்த உலகம் செயல் களம் ஆகும். இங்கே ஒவ்வொரு மனித ஆத்மாவும் தனது சொந்தப் பாகத்தை நடிக்கிறார். இதில் பரமாத்மாவிற்கும் ஒரு பாகம் உள்ளது. ஆனால், அவர் ஆத்மாக்களைப் போல் பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்திற்குள் வருவதில்லை. ஆத்மாக்களைப் போல், அவரின் செயல்களின் கணக்கானது பாழாகுவதில்லை. அவர் கூறுகிறார்: நான் ஆத்மாக்களான உங்களை விடுவிக்கவே வருகிறேன், இதனாலேயே நான் விடுதலை ஆக்குபவர், உங்களைப் பந்தனத்தில் இருந்து விடுவித்து, உங்களுக்கு முக்தியையும் சத்கதியையும் அருள்பவர் என்று அழைக்கப்படுகிறேன்.
ஆத்மா கட்டுண்டு இருக்கும் மாயையின் பந்தனத்தை அவர் நீக்கி, அந்த ஆத்மாவைத் தூய்மை ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: ஆத்மாக்களை அவர்களின் பந்தனங்களில் இருந்து விடுவித்து, அவர்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதே எனது கடமை ஆகும். நீங்களும் உலகின் அநாதியான சட்டதிட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் - எவ்வாறு இந்த மனித உலகம் வளர்கிறது (அதிகரிக்கிறது), பின்னர் அது குறைவடைகின்ற நேரமும் உள்ளது. அது வளர்ச்சி அடைவதனால், அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்றில்லை. இல்லை. அது குறையவும் செய்கிறது. இந்த உலகில் உள்ள அனைத்தும் ஒரு சட்டப்படியே இயங்குகிறது. உங்களின் சரீரத்தைப் பொறுத்தவரையிலும் கூட ஒரு நியதி உள்ளது. முதலில் அது ஒரு சிசுவாக உள்ளது, பின்னர் ஒரு குழந்தை ஆகுகிறது, பின்னர் இளைஞராகவும் அதன்பின்னர் வயதான நிலையையும் அடைகிறது. அது விரைவாக வயதான நிலையை அடைவதில்லை. வயதாகும்போது, சரீரம் சிதைவடைகிறது. எனவே, அனைத்தும் வளர்கிறது, பின்னர் அதன் முடிவிற்கு வருகிறது - இதுவே நியதி ஆகும். இந்த முறையில், உலகின் சந்ததிகளுக்கும் ஒரு நியதி உள்ளது. உங்களின் வாழ்க்கையிலும் நிலைகள் உள்ளன, உங்களின் பிறவிகளிலும் நிலைகள் உள்ளன. அத்துடன் தொடர்ந்து வருகின்ற சந்ததிகளிலும் நிலைகள் உள்ளன. இந்த முறையில், சகல தர்மங்களுக்கும் அதற்கேயுரிய நிலைகள் உள்ளன. முதல் தர்மம் அதி சக்திவாய்ந்தது. படிப்படியாகப் பின்னால் வருபவை குறைந்தளவு சக்தியைக் கொண்டுள்ளன. தர்மம் பிரிக்கப்படுகிறது, தர்மம் தொடர்கிறது - அனைத்துமே நியதிக்கேற்பவே தொடர்கின்றன. இவை அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த முறையில், தந்தையும் கூறுகிறார்: எனக்கும் இதில் ஒரு பாகம் உள்ளது. நானும் ஓர் ஆத்மா ஆவேன். கடவுளான நான், வேறு எதுவும் அல்ல. நானும் ஓர் ஆத்மா, ஆனால் எனது கடமை மிகவும் மகத்தானதும் அதியுயர்ந்ததும் ஆகும். இதனாலேயே நான் கடவுள் என்று அழைக்கப்படுகிறேன். நீங்கள் எப்படி ஓர் ஆத்மாவோ, அதேபோல் நானும் ஓர் ஆத்மாவே. நீங்கள் மனிதர்களாக இருப்பதைப் போல், உங்களின் குழந்தையும் ஒரு மனிதனாகவே இருக்கிறார். இதில் எந்தவிதமான வேறுபாடும் இல்லையல்லவா? எனவே, நானும் ஓர் ஆத்மாவே. ஆத்மாக்களுக்கு இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஆனால் எமது கடமைகளில் பாரிய வேறுபாடு உள்ளது. இதனாலேயே, எனது கடமை ஏனைய அனைவரிலும் இருந்து வேறுபட்டது எனக் கூறப்படுகிறது. நான் ஓர் எல்லைக்கு உட்பட்ட தர்மத்தை ஸ்தாபிப்பவர் அல்ல. நான் உலகையே படைப்பவர், ஆனால் ஏனையோர் தமது தர்மங்களைப் படைப்பவர்கள். எப்படி அந்த ஆத்மாக்கள் தமக்கே உரிய நேரத்தில் தமது பணியைச் செய்கிறார்களோ, அதேபோல், நான் எனக்கு உரிய நேரத்தில் வருகிறேன். எனது கடமை எல்லையற்றது, பரந்தது. எனது கடமை மகத்தானது, தனித்துவமானது. இதனாலேயே, கூறப்படுகிறது: உங்களின் பணி தனித்துவமானது. அவர் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகிறார். ஆத்மாக்கள் அனைவரையும் மாயையின் பந்தனங்களில் இருந்து விடுவித்து, புதிய உலகிற்கான மரக்கன்றை நடுவதே அதி சக்திவாய்ந்த பணி ஆகும். இதனாலேயே, ஆங்கிலத்தில் அவர் ஹெவன்லி கோட்ஃபாதர் என்று அழைக்கப்படுகிறார். கிறிஸ்து, கிறிஸ்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரை ஹெவன்லி கோட்ஃபாதர் என்று அழைக்க முடியாது. பரமாத்மாவான கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். எனவே, சுவர்க்கம் என்பது ஓர் உலகம், அப்படியல்லவா? சுவர்க்கம் ஒரு தர்மம் கிடையாது. எனவே, அவரே உலகை ஸ்தாபிக்கும் ஒரேயொருவர் ஆவார். அந்த உலகில், ஒரு தர்மமும் ஓர் இராச்சியமும் இருக்கும். பஞ்ச பூதங்கள் அனைத்தும் மாறியிருக்கும். இதனாலேயே, அவர் ஹெவன்லி கோட் பாதர் (சுவர்க்கத்தின் இறைதந்தை) என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டாவதாகக் கூறப்படுகிறது: கடவுள் சத்தியம் ஆவார். எனவே, சத்தியம் என்றால் என்ன? எதில் சத்தியம் உள்ளது? இதையும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையைப் பேசுபவர்களே கடவுள் என்று சிலர் நினைக்கிறார்கள். கடவுள் என்பது வேறு எதுவும் அல்ல, ஆனால் உண்மையைப் பேசுபவரே கடவுள். ஆனால், அப்படியில்லை. கடவுளே சத்தியம் என்பதன் அர்த்தம், கடவுள் வந்தார், வந்து எங்களுக்கு அனைத்தினதும் சத்தியத்தைக் கூறினார் என்பதே ஆகும். கடவுளே சத்தியம் என்றால் கடவுள் எங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறார் என்று அர்த்தம். அவரிடம் மட்டுமே சத்தியம் உள்ளது. இதனாலேயே அவர் ஞானம் நிறைந்தவர் எனப்படுகிறார். ஞானக்கடல், பேரானந்தக்கடல், கடவுள் அறிவார். எனவே, நிச்சயமாக, அவர் அறிந்தது ஏதோவொன்று இருக்க வேண்டும். எனவே, அவர் அறிந்துள்ள அந்தத் தகவல் என்ன? இவர் எதையோ திருடியுள்ளார், கடவுள் அறிவார் என்பதல்ல. அவருக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் வீழ்ந்துவிட்ட எமது உலகம் எவ்வாறு மீண்டும் ஈடேற்றப்பட முடியும் என்பதன் அடிப்படையிலேயே அவரின் புகழ் உள்ளது. அவர் இந்தச் சக்கரத்தைப் பற்றிய அனைத்தையும் அறிவார். இதனாலேயே, கடவுள் அறிவார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே, இவ்வாறே கடவுள் புகழப்படுகிறார். இது மனிதர்களின் புகழில் இருந்து வேறுபட்டது. ஏனென்றால், அவர் அறிந்து கொண்டது முற்றிலும் வேறுபட்டது. மனிதர்கள் அறிந்து கொண்டவை எல்லைக்கு உட்பட்டவை. மனிதர்கள் அறிந்து கொண்டவை குறுகிய காலத்திற்கு உரியவை என்று சொல்லப்படுகிறது. ஆனால் கடவுளுக்கோ அவர் எல்லாம் அறிந்தவர் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் நொலேட்ஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) என்று கூறப்படுகிறது. அதாவது, அவர் எல்லாம் அறிந்தவர், அதாவது, அனைத்தையும் அறிந்த ஒரேயொருவர் ஆவார். அனைத்தையும் அறிந்த ஒரேயொருவரால் மட்டுமே சத்தியத்தை அறிந்து கொள்ள முடியும். அனைத்தினதும் மிகச்சரியான ஞானத்தைக் கொண்ட ஒரேயொருவரால் மட்டுமே அதை அனைவருக்கும் வழங்க முடியும். அவருக்கே ஞானம் இல்லாவிட்டால், அவர் அதை மற்றவர்களுக்கு வழங்காவிட்டால், அதில் எங்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? எனவே, அவர் அறிந்து கொள்ளட்டும். ஆனால் அப்படியில்லை. அவர் அனைத்தையும் அறிந்திருப்பதனால் அதனூடாக நாங்கள் ஏதோவொரு நன்மையைப் பெறுகிறோம். இதனாலேயே, நாங்கள் அவரின் குணாதிசயங்களைப் பற்றிய புகழைப் பாடுகிறோம். நாங்கள் அவரைத் துரத்திச் செல்கிறோம். ஏதாவது நடக்கும்போது, ஓ கடவுளே! இப்போது நீங்களே இதைச் செய்ய வேண்டும்! எனக் கூறுகிறோம். ‘கருணை காட்டுங்கள், இரக்கம் காட்டுங்கள், எனது துன்பத்தை நீக்குங்கள்’. எனவே, நாங்கள் அவரிடம் இவற்றை வேண்டுகிறோம், அல்லவா? எங்களுக்கு அவருடன் ஏதோ உறவுமுறை உள்ளது, இதனாலேயே நாங்கள் அவரை அந்த முறையில், அவர் எங்களுக்கு ஏதோவொரு உபகாரம் செய்திருக்க வேண்டும் என்ற முறையில் நினைவு செய்கிறோம். அவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால், நாங்கள் ஏன் அவருக்காக எமது தலைகளை அடித்துக் கொள்ள வேண்டும்? கஷ்டமான நேரத்தில் யாராவது உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் உங்களின் இதயத்தில் உணர்வீர்கள்: இவர் கஷ்ட காலத்தில் எனக்கு அதிகமாக உதவி செய்தார், தேவையான நேரத்தில் அவர் என்னைப் பாதுகாத்தார். அதனால் உங்களுடைய இதயத்தில் அவருக்காக அன்பு இருக்கும். அதேபோல், கடவுளுக்காகவும் அவர் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்தார் என்ற அதே அன்பு உங்களுக்குள் உள்ளது. எவ்வாறாயினும், ஒரு நபருக்கு ஏதாவது நல்லது நடக்கும்போது, அதைக் கடவுளே செய்தார், கடவுளே அவ்வாறு செய்கிறார் என்று நீங்கள் சொல்வதில்லை. அவரின் பணி மகத்தானது, அவரின் பணி உலகிற்கானது. அது முழு உலகத்துடனும் தொடர்புடையது. ஆனால், ஒருவர் சிறிதளவு பணத்தைப் பெற்றுக் கொண்டதும் அது கடவுளே செய்தார் என்பதல்ல. அது எமது நல்ல செயல்கள், நாங்கள் அந்த நல்ல செயல்களின் பலனைப் பெறுகிறோம். நல்ல, தீய செயல்களின் கணக்கு உள்ளது. நாங்கள் தொடர்ந்து அதைப் பெறுகிறோம். ஆனால், கடவுள் வந்துள்ளார், வந்து எங்களுக்குக் கற்பிக்கிறார் என்ற செயல்களின் பலன் வேறுபட்டது. உங்களின் புத்தியின் அடிப்படையில் தற்காலிகமான சந்தோஷமும் பெறப்படுகிறது. அவர் எங்களுக்கு வழங்கியுள்ள ஞானம் எல்லா வேளைக்கும் சந்தோஷத்தைத் தருகிறது. எனவே, கடவுளின் பணி வேறுபட்டது. இதனாலேயே கூறப்படுகிறது: நான் வந்து உங்களுக்கு செயல்களின் உண்மையான ஞானத்தைக் கற்பிக்கிறேன். இது கர்மயோகம் மேன்மையானது எனக் குறிப்பிடப்படுகிறது. உங்களின் செயல்களையோ அல்லது உங்களின் வீட்டையோ துறப்பது என்ற கேள்வி இதில் இல்லை. எப்படி உங்களின் செயல்களைத் தூய்மை ஆக்கலாம் என்ற ஞானத்தையே நான் உங்களுக்கு வழங்குகிறேன். எனவே, நீங்கள் உங்களின் செயல்களைத் தூய்மை ஆக்க வேண்டும், நீங்கள் அவற்றைத் துறக்க வேண்டியதில்லை. செயல்கள் அநாதியானவை. இந்தச் செயல்களமும் அநாதியானது. எங்கே மனிதர்கள் இருக்கிறார்களோ, அங்கே செயல்களும் இருக்கும். ஆனால் நான் வந்து, எப்படி அந்தச் செயல்களை மேன்மையானiவை ஆக்க முடியும் என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறறேன். இதன் மூலம் உங்களின் செயல்களின் கணக்கானது நடுநிலை ஆகுகிறது. நடுநிலையான செயல்கள் என்றால் நீங்கள் தீங்கான எதையும் சேமிக்க மாட்டீர்கள் என்று அர்த்தம்.
தந்தை கூறுகிறார்: நான் இந்த பௌதீக உலகிற்குள், இந்தக் குறுகிய சங்கமயுகத்தில் உங்களுக்காக வந்துள்ளேன். எனவே, குறைந்தபட்சம், எவ்வளவு நேரம் உள்ளதோ, உங்களிடம் உள்ள அந்தக் குறுகிய காலப்பகுதியில் என்னைப் பற்றி நினையுங்கள். இப்போது நீங்கள் பாபாவிற்குச் சொந்தமானவர் ஆகியுள்ளதால், குறைந்தபட்சம் அந்த நேரத்திற்குத் தூய்மையாக இருங்கள். அதன்பின்னர், நீங்கள் கடினமாக உழைக்கவே தேவை இல்லாதபடி அத்தகைய வெகுமதியை நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள். இப்போது, சிறிதளவு முயற்சியே செய்யப்பட வேண்டும். எவ்வளவிற்கு முடியுமோ, நீங்கள் இறக்க நேரிட்டாலும் கூட, தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள். திடசங்கற்பத்துடன் இருங்கள். உங்களின் தாரணையைப் பேணுவதில் முழுமையான முயற்சி செய்யுங்கள். தந்தை மிகத் தெளிவாக உங்களுக்குக் கூறுகிறார்: இந்தக் குறுகிய காலப்பகுதியில் முயற்சி செய்யுங்கள். வேறு எதற்காகவும் உங்களை முயற்சி செய்ய நான் வைப்பதில்லை. நீங்கள் பெறுவதுடன் ஒப்பிடும்போது, இந்த முயற்சி எதுவுமே இல்லை.
நான் இதைச் செய்வேன், நான் அதைச் செய்வேன். உலகம் என்ன சொல்லும்? அவர் என்ன சொல்வார்? ஓ, உலகம் என்ன சொல்லும், எனச் சொல்லாதீர்கள். அதை ஒருபுறம் ஒதுக்கி விடுங்கள். இப்போது, இந்த உலகமே முடிவடையப் போகிறது. இப்போது, மரணம் உங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. இங்கே நீங்கள் உருவாக்கிய பெரிய, சிக்கலான விடயங்கள் எவையாயினும் அவை அனைத்துமே வீணானவை. தந்தை இப்போது கூறுகிறார்: இப்போது அந்த வீணானவற்றைச் சேமியுங்கள். உங்களின் சரீரம் வாழ்வதற்கு என்ன தேவையோ, அதை நீங்கள் செய்யலாம். உங்களின் படைப்புடன் என்ன கணக்கு உங்களுக்கு இருக்கிறதோ, அந்தளவை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். நான் அதைப் பார்த்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள்தான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எது அவசியமோ, உங்களை நான் அதிலிருந்து விடுவிக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் உருவாக்கும் மேலதிகமானதை உங்களைச் செய்ய வேண்டாம் என்று நான் கூறுகிறேன். ஏனென்றால், இப்போது அனைத்தும் விழப் போகின்றன, எனவே நீங்கள் ஏன் உங்களின் நேரத்தை அநாவசியமான முறையில் வீணாக்குகிறீர்கள்? இந்தப் பயனற்ற சிக்கல்கள் அனைத்தினாலும் நீங்கள் துன்பத்தை அனுபவம் செய்கிறீர்கள். அந்தச் சிக்கல்களில் இருந்து நீங்கள் எப்படி விடுபடுவீர்கள்? இதையே நான் உங்களுக்குக் கூறுகிறேன்! அப்படி இருந்தும் அமர்ந்திருந்து பல சாக்குப் போக்குகளைக் கொடுத்தல், எப்படி உங்களால் இதைச் செய்ய முடிகிறது? பின்னர் தந்தையும் கூறுவார்: பாருங்கள், நீங்கள் நேரடியாக உங்களின் கைவிரலைக் கொடுக்காவிட்டால், உங்களின் கையை எனக்குக் கொடுக்காவிட்டால், பின்னர் நான் உங்களின் மூக்கைப் பிடித்து உங்களை என்னுடன் அழைத்துச் செல்வேன். நீங்கள் மூக்கினால் பிடிக்கப்பட்டீர்கள் என்றால், மூச்சுத் திணறுவீர்கள். அதன்பின்னர் துன்பத்தை அனுபவம் செய்வதுடன் நீங்கள் தண்டனையையும் அனுபவம் செய்ய நேரிடும். இதனாலேயே, உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: உங்களின் கையை அவரின் கையில் கொடுத்து, அவருடன் நேரடியாகச் செல்ல வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. நீங்கள் என்னுடன் நேரடியாகச் செல்லாவிட்டால், உங்களின் மூக்கு எனது கைகளுக்கு வந்துவிடும், அதன்பின்னர் பாருங்கள்! அந்த வேளையில் எதையும் செய்யமுடியாது. உங்களால் எதையும் செய்ய முடியாதிருக்கும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்போது எனக்குச் சொந்தம் ஆகுங்கள், என்னிடம் வாருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். அப்படி இருந்தும் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், அதற்காகப் பெரிய தண்டனை கிடைக்கும். எதையும் அறியாமல் இருப்பவர்களுக்கு, இது வேறு விடயம். ஆனால் அறிந்திருப்பவர்களுக்கு, இங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு, இதைக் கேட்டாலும் கவனயீனமாக ஆகுபவர்களுக்கு, அவர்களுக்கு எதையும் செய்ய முடியாது. எவ்வாறு பத்து மடங்கு நன்மை ஏற்படுகிறதோ, அவ்வாறே பத்து மடங்கு இழப்பும் ஏற்படும். இதனாலேயே கூறப்படுகிறது: உங்களின் இழப்புக்களை மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் புத்திகளை மிக நன்றாகத் திறந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்தால், சக்தியைப் பெறுவீர்கள். எனவே, இந்த விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளுங்கள். மறக்காதீர்கள்.
இப்போது கடந்து செல்லும் நேரத்தை இனங்கண்டு கொள்ளுங்கள். உங்களின் கண்களைத் திறவுங்கள், உங்களின் புத்தியைத் திறவுங்கள், அத்துடன் இந்த நேரத்தின் முழுமையான நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பாக்கியத்தை முழுமையாக விழித்தெழச் செய்யுங்கள். சகவாசத்திற்கேற்ப, நீங்கள் நிறமூட்டப்படும் நிறமும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகவே, யாராவது ஒருவரிடம் சம்பூரணமான தாரணை இல்லாவிட்டால், நீங்கள் மாயையின் சகவாசம் என்ற நிறத்தாலேயே நிறமூட்டப்படுவீர்கள். இதனாலேயே கூறப்படுகிறது: தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள். எவரையும் விட்டுவிடாத சில தீயவர்கள் இருக்கிறார்கள். இங்கும், அவர்கள் ஒருவர் மற்றவரின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறார்கள். இதனாலேயே, சகவாசத்தின் ஆதிக்கத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. சகவாசத்தின் ஆதிக்கம், இங்கே இல்லை, வெளியில் மட்டுமே உள்ளது என்று நினைக்காதீர்கள். இல்லை. இங்கும், அவர்கள் தொடர்ந்து அலைபாய்கிறார்கள், ஏனென்றால், இது அவர்களின் இராச்சியம், அப்படியல்லவா? இதனாலேயே தந்தை கூறுகிறார்: உங்களின் கவசத்தை மிக நன்றாக அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் கவசத்தை அணிந்து கொண்டால், குண்டு உங்களைத் தாக்காது. யோகமே கவசம், ஞானமே வாள் ஆகும். இந்த ஆயுதங்களை உங்களுடன் மிக நன்றாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கூறப்படுகிறது: எதையாவது செய்பவர்கள், அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவும் உங்களின் எதிர்கால வெகுமதியை உருவாக்குகின்ற ஒரு விடயம் ஆகும். நீங்கள் இங்கே உங்களின் வெகுமதியை அனுபவம் செய்யப் போவதில்லை. இல்லை. நீங்கள் இங்கே ஒரு குருவைப் போன்று அமர்ந்திருக்கப் போவதில்லை. எந்தவொரு தவறான புரிந்துணர்வும் இல்லாமல் இருப்பதற்காகவே இவை அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இவை அனைத்தையும் உங்களின் கவனத்தில் வைத்திருந்து, உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இங்கே எந்தவிதமான செலவுகளைப் பற்றியும் பேசக்கூடாது. இந்தச் செலவுகள் அனைத்தும் மற்றவர்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். இப்போது ஒவ்வொரு சதமும் இந்தப் பணிக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். அச்சா.
எச்சரிக்கையுடன் இருக்கும் இனிமையிலும் இனிமையான மிக நல்ல குழந்தைகளுக்கு, பாப்தாதாவினதும் எமது மம்மாவினதும் அன்பும் நினைவும் காலை வணக்கங்களும். அச்சா.
கேள்வி: மம்மா, நடக்கும்போதும் அசையும்போதும் எவ்வாறு யோகத்தின் அதியுயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடியும்?
பதில்: உண்மையில், எமது வாழ்க்கை ஒரு இயல்பான யோகமாக ஆகவேண்டும். ஏனென்றால் யோகம் என்றால் நம்பிக்கை ஆகும். எனவே, நம்பிக்கையை உறுதியாக வைத்திருந்து, நடைமுறையில் அதன் சொரூபம் ஆகுங்கள். அந்த நம்பிக்கையின் வடிவமாகி, உங்களின் பௌதீகமான புலன்களால் செயல்களைச் செய்யுங்கள். அந்த நம்பிக்கையின் ரூபமாகி, உங்களின் பௌதீகப் புலன்களால் செயல்களைச் செய்யுங்கள். உங்களின் பௌதீக அங்கங்கள் தொடர்ந்து எந்தவொரு வேலையையும் செய்யட்டும், ஆனால் நீங்கள் சந்தோஷ சொரூபமாக இருக்கும் அந்த ஸ்திதியில் அமிழ்ந்து இருக்க வேண்டும். உங்களின் முகம் எப்போதும் சந்தோஷ சொரூபமாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு தூய்மையற்ற அல்லது பாவ எண்ணங்களும் இருக்கக்கூடாது. அநாதியான அன்பு ஸ்திதியில், இறைவனின் ஆனந்தத்தில் இருங்கள். உங்களுக்குள் எந்தவொரு தூய்மையற்ற அல்லது பாவ எண்ணங்களும் தோன்றாது. ஒரு தூய இடத்தில் தோன்றும் எத்தகைய எண்ணங்களும் மக்களின் நன்மைக்கும் உங்களின் சொந்த முன்னேற்றத்திற்குமே ஆகும். இது உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அதிகளவில் உதவி செய்யும் மிக இனிமையான ஸ்திதி ஆகும். இனிமையான மற்றும் தூய வாழ்க்கையை உருவாக்குவதற்கான இந்த பொன்னான வாய்ப்பு இந்த நேரத்தில் மட்டுமே உங்களுக்கு உள்ளது. எனவே, இத்தகையதொரு ஸ்திதியை உருவாக்குவதற்கு, சிறிதளவு முயற்சி செய்யுங்கள்.
நாங்கள் யோகத்தில் அமர்ந்திருக்கும்போது, எங்களுக்கு ஏதாவது மந்திரம், வழிபாடு அல்லது அகத்தே உச்சாடனம் செய்வது எதுவும் தேவையில்லை. பக்தி மார்க்கத்தில், சிலர் தமது பிரார்த்தனைகளை உள்முகமாகச் செய்வார்கள். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டுவார்கள், அவர்களுக்கு முன்னால் ஒரு விக்கிரகத்தை வைத்து அதற்கு மலர்களைப் படைப்பார்கள். அவர்கள் இதை உள்முகமாகத் தமக்குள் செய்கிறார்கள். இது மனதினால் வழிபடுதல் எனப்படுகிறது. எவ்வாறாயினும், எமது யோகத்தில் நாம் எமது ஆதி ரூபத்தில் ஸ்திரமாகி, சந்தோஷ சொரூபம் ஆகுகிறோம். நாம் எமது மனம் உட்பட எமது பௌதீக அங்கங்களைக் கட்டுப்படுத்துகிறோம், ஒருமுகம் ஆகுகிறோம், அத்துடன் இறை சந்தோஷ சொரூபம் ஆகுகிறோம். இதற்கு, யோகத்திற்காக எமது நேரம் தனிப்பட்ட முறையில் நிச்சயம் செய்யப்படுகிறது. நாம் அமர்ந்திருந்து அதே வேளை அதைப் பயிற்சி செய்கிறோம். நாம் புற விடயங்களுடன் எமது உறவுமுறைகளைத் துண்டித்து, அவ்யக்துடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கிறோம். பின்னர் நினைவானது இலகுவானது ஆகிவிடும். அச்சா.
ஆசீர்வாதம்:
பாப்தாதாவின் சகவாசத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் மாயையைத் தொலைவில் இருந்தே மயக்கம் அடையச் செய்கின்ற மாயை வென்றவராகவும் அதனால் உலகை வென்றவராகவும் ஆகுவீர்களாக.நீங்கள் தந்தையிடம் அன்பு வைத்திருப்பதனால் அவரை உங்களின் சகபாடி ஆக்கியுள்ளீர்கள். அதனால் தொலைவில் இருந்தே மாயை மயக்கம் அடைந்து விடுவாள். நான் உங்களுடனேயே உண்பேன், நான் உங்களுடனேயே இருப்பேன், உங்களுடனேயே ஆத்மாவான நான் ஆறுதல் அடைவேன்.... என்ற சத்தியத்தை நீங்கள் ஆரம்பத்தில் செய்தீர்கள். இந்தச் சத்தியத்திற்கேற்ப தந்தையுடன் சேர்ந்து நாள் முழுவதும் செய்ய வேண்டிய உங்களின் செயல்களைச் செய்யுங்கள். மாயையால் உங்களைக் குழப்ப முடியாது. அவளின் விநாசம் இடம்பெறும். எனவே, எப்போதும் உங்களின் சகபாடியை உங்களுடன் வைத்திருங்கள். அவரின் சகவாசத்தின் சக்தியாலும் அவரைச் சந்திப்பதில் மூழ்கி இருப்பதனாலும் நீங்கள் மாயையை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் அதியுயர்ந்த மனோபாவத்தால் உங்களின் இல்லறத்தின் சூழ்நிலையை மாற்றுங்கள்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
உங்களின் அவ்யக்த ஸ்திதியின் கண்ணாடியைச் சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்திருப்பதற்கு, மூன்று விடயங்களில் கவனம் செலுத்துங்கள்: இலகுத்தன்மை, மகத்துவம், சகிப்புத்தன்மை. இந்த மூன்றில், ஒன்றேனும் இல்லாமல் போகுமாக இருந்தால், அவ்வாறு குறைவதன் கறையானது கண்ணாடியில் புலப்படும். ஆகவே, நீங்கள் என்ன பணியைச் செய்தாலும் அதில் சாதாரணத்தன்மை புலப்படக்கூடாது. சாதாரணத்தன்மையை மகான்தன்மையாக மாற்றுங்கள். ஒவ்வொரு பணியிலும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். அத்துடன் உங்களின் வார்த்தைகளில் இலகுத்தன்மையைக் கிரகியுங்கள். உங்களின் சேவையில் வெற்றி புலப்படும்.