24.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையிடமிருந்து எவ்வாறு மொத்த வியாபாரம் செய்வது எனக் கற்றுக் கொள்ளுங்கள். மன்மனாபவவும், நினைவு செய்வதும், மற்றவர்களுக்கு அல்ஃபாவை ஞாபகப்படுத்துவதும் மொத்த வியாபாரம் ஆகும். ஏனையவை அனைத்தும் சில்லறை வியாபாரமாகும்.
பாடல்:
எக் குழந்தைகளைத் தந்தை தனது வீட்டிற்கு வரவேற்பார்?பதில்:
தந்தையின் வழிகாட்டல்களை மிக நன்றாகப் பின்பற்றுகின்ற குழந்தைகளையும், வேறு எவரையும் நினைவு செய்யாதவர்களையும், தமது சொந்தச் சரீரம் உட்பட சகல சரீர உறவுமுறைகளிலிருந்தும் தமது புத்தியின் யோகத்தைத் துண்டித்து, ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்ற குழந்தைகளை தந்தை தனது வீட்டிற்கு வரவேற்பார். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களை அழகான மலர்கள் ஆக்குகின்றார். பின்னர் மலர்களான குழந்தைகளைத் தனது வீட்டிற்கு வரவேற்பார்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இங்கே தந்தையினதும், சாந்தி தாமத்தினதும் சந்தோஷதாமத்தினதும் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். ஆத்மாக்கள் தமது தந்தையை மாத்திரம் நினைவு செய்து இந்தத் துன்ப உலகை மறக்க வேண்டும். இது தந்தைக்கும் ஆத்மாக்களுக்கும் இடையே உள்ள ஓர் இனிய உறவுமுறை ஆகும். வேறு எந்தத் தந்தையுடனும் அத்தகையதோர் இனிய உறவுமுறை இருக்க முடியாது. ஓன்று தந்தையுடனான உறவுமுறையும், பின்னர் ஆசிரியருடனும், குருவுடனான உறவுமுறைகளும் ஆகும். இங்கே மூன்றும் அந்த ஒரேயொருவராகும். இந்தளவை நீங்கள் நினைவு செய்தாலும், அது பெருமளவு சந்தோஷத்திற்குரிய விடயமாகும். நீங்கள் இலகுவான பாதையைக் காட்டுகின்ற ஒரேயொரு தந்தையைக் கண்டு கொண்டீர்கள். தந்தையையும், சாந்திதாமத்தையும், சந்தோஷதாமத்தையும் நினைவு செய்வதுடன் இந்தத் துன்ப தாமத்தை மறந்திடுங்கள். நீங்கள் எங்கும் பயணிக்கலாம் ஆனால், உங்கள் புத்தியில் இந்த நினைவு மாத்திரம் இருக்கட்டும். இங்கே எந்த உலகாய விடயங்களும் இல்லை. நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை உங்களை மூன்று வார்த்தைகளை மாத்திரமே நினைவு செய்யுமாறு கூறுகின்றார். உண்மையில் அது ஒரு வாக்கியமேயாகும்: தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதனால்;, நீங்கள் இரு ஆஸ்திகளையும் நினைவு செய்கின்றீர்கள். அதாவது சாந்திதாமம், சந்தோஷதாமம்;. தந்தையே உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கின்றார். அவரை நினைவு செய்வதனால், உங்கள் சந்தோஷ பாதரசம் உயரும். குழந்தைகளாகிய உங்களுடைய சந்தோஷம் மிகவும் பிரபல்யமானதாகும். பாபா உங்களை வீட்டிற்கு அழைத்து அங்கே உங்களை வரவேற்பார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. ஆனால், தந்தையின் வழிகாட்டல்களை மிக நன்றாகப் பின்பற்றுபவர்களையும், வேறு எவரையும் நினைவு செய்யாதவர்களையுமே வரவேற்பார். உங்கள் சரீரத்;திலிருந்தும், சகல சரீர உறவுமுறைகளிலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை துண்டித்து, சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் அதிகளவு சேவை செய்தீர்கள். ஆனால் வீட்டிற்குச் செல்லும் பாதையை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான பாதையைக் காட்டுகின்றார். நீங்கள் நினைவு செய்ய வேண்டியது: தந்தையே தந்தையும் ஆசிரியரும் ஆவார். அத்துடன் வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாத உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய ஞானத்தையும் அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். பின்னர், நீங்கள் முதலில் சத்தியயுகத்திற்கு வருவீர்கள், .இப்பொழுது நீங்கள் இந்த அழுக்கான உலகிலிருந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருந்தாலும், இங்கிருந்து அநேகமாக சென்றே விட்டீர்கள். தந்தையும் சந்தோஷம் அடைகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நீண்ட காலமாக வருமாறு அழைத்;தீர்கள். இப்பொழுது நீங்கள் அவரை வரவேற்றுவிட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அழகிய மலர்கள் ஆக்கிய பின்னர் உங்களைச் சாந்திதாமத்தில் வரவேற்பேன். அதன் பின்னர் நீங்கள் வரிசைக்கிரமமாகச் செல்வீர்கள். அது மிகவும் இலகுவாகும். அத்தகைய தந்தையை நீங்கள் மறந்து விடக் கூடாது. இது மிக இனிய நியாயமான விடயமாகும். அல்ஃபா என்ற ஒரு விடயத்தை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவர் விபரமாக விளங்கப்படுத்தியிருந்தாலும், அவர் இறுதியில் கூறுகின்றார்: வேறு எவரையும் அன்றி அல்ஃபாவை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் பல பிறவிகளுக்கு ஒரேயொரு அன்பிற்கினியவருக்குக் காதலிகளாக இருந்தீர்கள். நீங்கள் பாடினீர்கள்: பாபா, நீங்கள் வரும் பொழுது, நான் உங்களுக்கு மாத்திரம் உரியவராக இருப்பேன். இ;ப்பொழுது அந்தத் தந்தை வந்துள்ளதால்,நீங்கள் ஒரேயொருவருக்கு உரியவராக வேண்டும். புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள். நீங்கள் இராவணனை வெற்றி கொள்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் இராம இராச்சியத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள்; ஒவ்வொரு கல்பத்திலும் இராவணனை வெற்றி கொண்டீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகியவுடனேயே இராவணனை வென்றீர்கள். உங்களுக்கு இராம இராச்சியத்திற்கான உரிமை உள்ளது. நீங்கள் தந்தையை இனங்கண்டு இராம இராச்சியத்துக்கான உரிமையைப் பெற்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் வெற்றி மாலையில் ஒருவராக வேண்டும். வெற்றி மாலை மிகவும் நீண்டதாகும். நீங்கள் அரசர்கள் ஆகினால், நீங்கள் அனைத்தையும் பெறுவீர்கள். பணியாளர்களும், வேலைக்காரர்களும் வரிசைக்கிரமமாக உருவாக்கப்படுகின்றார்கள். அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் மிகவும் நெருக்கமாக இருந்து, அரசர்களும் அரசிகளும் எதனை உண்கின்றார்களோ அதனையே உண்பார்கள். பணியாளர்களும், வேலைக்காரர்களும் சமையலறையில் தயாரிக்கப்படுவதையே உண்பார்கள். அது 36 வகையான உணவு என அழைக்கப்படுகின்றது. அரசர்கள் பல்கோடீஸ்வரர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அங்கே அவர்கள் செல்வத்தைப் பற்றிய அக்கறையைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் மக்களை பல்கோடீஸ்வரர்கள் என அழைக்க முடியாது. எவ்வாறாயினும் அது தேவர்களின் அடையாளமேயாகும். நீங்கள் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சூரிய வம்சத்தில் ஒருவராகுவீர்கள். நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் சக்கரவர்த்திகள் சக்கரவர்த்தினிகள் ஆக வேண்டும். நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்கு தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். இது இராஜயோகம் என அழைக்கப்படுகின்றது. நீங்களே பக்தி மார்க்கத்தில் அதிகளவு சமயநூல்களைக் கற்றிருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்களே அதிகளவு பக்தி செய்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது வந்து, தந்தையைச் சந்தித்துவிட்டீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான, நேரான பாதையைக் காட்டுகின்றார். தந்தையை நினைவு செய்யுங்கள். 'குழந்தாய், குழந்தாய்!" என பாபா கூறி, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை தன்னைக் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கின்றார். நீங்களே வாரிசுகள் என்பதால் அவர் உங்களிடம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீங்களும் கூறினீர்கள்: பாபா, நீங்கள் வரும் பொழுது, நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். உங்கள் சரீரம், மனம், செல்வம் அனைத்தையும் அர்ப்பணிப்பதாக நீங்கள் கூறினீர்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே அர்ப்பணிக்கின்றீர்கள். ஆனால் பாபா தன்னை 21 தடவைகள் அர்ப்பணிக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபக மூட்டுகின்றார். குழந்தைகள் அனைவரும் தத்தமது முயற்சிக்கு எற்ப, தமது பாக்கியத்தை வரிசைக்கிரமமாகப் பெற்றுக் கொள்வதற்காக வந்துள்ளார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உலக இராச்சியம் எனது சொத்தாகும். இப்பொழுது உங்களால் இயன்றளவிற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதல் இலக்கத்தைக் கொண்டிருப்பவரே இறுதி இலக்கம் ஆகுவார். அதன் பின்னர் அவர் மீண்டும் நிச்சயமாக முதல் இலக்கத்தைப் பெற்றுக்கொள்வார். அனைத்தும் உங்கள் முயற்சியிலேயே தங்கியுள்ளது. தந்தை உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். இப்பொழுது உங்களை ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். அது காமத் தீயாகும். இது யோகத் தீயாகும். காமத் தீயில் எரிந்ததால் நீங்கள் அவலட்சணமாகியுள்ளீர்கள். நீங்கள் முற்றிலும் சாம்பலைப் போல் ஆகி உள்ளீர்கள். நான் இப்பொழுது வந்து உங்களை விழித்தெழச் செய்துள்ளேன். நான் உங்களுக்கு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகும் வழியைக் காட்டுகிறேன். அது மிகவும் எளிதாகும். நான் ஓர் ஆத்மா. நீண்ட காலத்திற்கு சரீர உணர்வுடன் இருந்ததால், நீங்கள் தலைகீழாகத் தொங்கினீர்கள். இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை உங்களை அழைத்துச் செல்லவே வந்துள்ளார். நீங்கள் தந்தையை அழைத்தீர்கள். அவர் வந்தார். அவர் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகின்றார். வழிகாட்டியாகி, ஆத்மாக்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆத்மாவே யாத்திரையில் ஈடுபட வேண்டும். நீங்கள் பாண்டவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பாண்டவர்கள் ஓர் இராச்சியத்தைக் கொண்டிருக்கவில்லை. கௌரவர்களின் இராச்சியம் இருந்தது. இங்கே, அரசர்களின் ஆட்சி இப்பொழுது முடிவடைந்து விட்டது. பாரதத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த உலக அதிபதிகளிலிருந்து இப்பொழுது பூஜிப்பவர்களாக ஆகியுள்ளீர்கள். எனவே எவருமே உலக அதிபதிகளில்லை. தேவர்கள் மாத்திரமே உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள். உலகில் அமைதி நிலவ வேண்டும் என மக்கள் கூறுகின்றார்கள். அவர்களிடம் நீங்கள் வினவலாம்: உலக அமைதி என நீங்கள் எதனை அழைக்கின்றீர்கள். எப்பொழுது உலகில் அமைதி நிலவியது? உலக வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறுகின்றது. சக்கரம் தொடர்ந்தும் சுழலுகின்றது. எப்பொழுது உலகில் அமைதி நிலவியது என என்னிடம் கூறுங்கள். எந்தவிதமான அமைதியை நீங்கள் விரும்புகின்றீர்கள்? அதை எவராலும் உங்களுக்கு கூற இயலாது. உலகில் சுவர்க்கத்திலேயே அமைதி நிலவியது என தந்தை விளங்கப்படுத்துகின்றார். அது வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையிலேயே வைகுந்தம் இருந்தது எனக் கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அவர்களின் புத்தி தெய்வீகம் ஆகுவதும் இல்லை. கல்லாகுவதும் இல்லை. பாரத மக்கள் மாத்திரமே தெய்வீகப் புத்தி உடையவர்களாகவும், கல்லுப்புத்தி உடையவர்களாகவும் ஆகுகின்றார்கள். புதிய உலகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. பழைய உலகை சுவர்க்கம் என அழைக்க முடியாது. தந்தை உங்களுக்கு சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்தியுள்ளார். இது சில்லறை வியாபாரமாகும். மொத்தவியாபாரத்தில் அவர் ஒரேயொரு கூற்றையே பயன்படுத்துகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அதுவும் ஒரு பழைய விடயமாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது. தந்தை உங்களுக்கு உண்மைக் கதையைக் கூறுகின்றார். சத்தியநாராயணனின் கதை, மூன்றாவது கண்ணின் கதை, அமரத்துவக் கதை போன்றன மிகவும் பிரபல்யமானவையாகும். நீங்களும் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். அது மூன்றாவது கண்ணின் கதை எனப்படுகின்றது. அதனை அவர்கள் பக்தி மார்க்கத்திற்கான சமயநூல் ஆக்கியுள்ளார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. சில்லறை, மொத்த வியாபாரங்கள் உள்ளன. பாபா அதிகளவு உங்களுக்கு கொடுக்கின்றார். நீங்கள் முழுக் கடலையும் மையாக்கினாலும், அதன் முடிவை அடையமுடியாது. இது சில்லறை வியாபாரமாகும். மொத்தவியாபாரத்தைப் பொறுத்தவரை அவர் கூறுகின்றார்: மன்மனாபவ. ஒரேயொரு கூற்றே உள்ளது. அதன் அர்த்தத்தை நீங்கள் மாத்திரமே அறிந்து கொள்கின்றீர்கள். வேறு எவராலும் இதனை உங்களுக்கு கூற முடியாது. தந்தை ஞானத்தை சமஸ்கிருதத்தில் கொடுக்கவில்லை. அரசர் எவராக இருந்தாலும், அவர் தனது மொழியையே பயன்படுத்துகின்றார். எங்கள் மொழி ஹிந்தியே ஆகும். அவ்வாறாயின் நீங்கள் ஏன் சமஸ்கிருதத்தைக் கற்கவேண்டும்;? மக்கள் அதிகளவு பணத்தைச் செலவழிக்கின்றார்கள். எவராவது உங்களிடம் வந்தால் அவரிடம் கூறுங்கள்: தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், சாந்திதாமம், சந்தோஷதாமம் என்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், இங்கமர்ந்திருந்து புரிந்து கொள்ளுங்கள். எங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு வேறு எதுவும் இல்லை. அல்ஃபாவை மாத்திரமே தந்தை விளங்கப்படுத்துகின்றார். அல்ஃபாவிலிருந்து மாத்திரமே நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். தந்தையை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மையாகி, சாந்தி தாமத்திற்குச் செல்வீர்கள். மக்கள் கூறுகின்றார்கள்: ஓ அமைதியை அருள்கின்றவரே! தந்தை மாத்திரமே அமைதிக் கடல் என்பதால் அவரை மாத்திரமே அவர்கள் நினைவு செய்கின்றார்கள். தந்தை ஸ்தாபிக்கின்ற சுவர்க்கம் இங்கேயே இருக்கும். சூட்சும உலகில் எதுவும் இல்லை. அவை யாவும் காட்சிகளே ஆகும். நீங்களும் அவர்களைப் போன்று தேவதைகள் ஆக வேண்டும். இங்கேயே நீங்கள் அவ்வாறு ஆக வேண்டும். நீங்கள் தேவதைகள் ஆகி, வீடு திரும்புவீர்கள். நீங்கள் இராச்சியம் என்ற ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். நீங்கள் அமைதி சந்தோஷம் என்ற இரு ஆஸ்திகளையும் பெறு கின்றீர்கள். தந்தையைத் தவிர வேறு எவரையும் கடல் என அழைக்க முடியாது. தந்தையே ஞானக்கடல் என்பதால் அவரால் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள முடியும். தந்தை உங்களிடம் வினவுகின்றார்: நான் உங்கள் தந்தையும், ஆசிரியரும் குருவும் என்பதால் நான் உங்களுக்கு ஜீவன்முக்தியை அருள்கின்றேன். பின்னர் யார் உங்களைச் சீரழியச் செய்தது? இராவணன். இது சீரழிவு, சற்கதி என்பவற்றைப் பற்றிய ஒரு விளையாட்டாகும். எவராயினும் குழப்பம் அடைவாராயின், அவர் அதனைப் பற்றி வினவலாம். பக்தி மார்க்கத்தில் பல கேள்விகள் எழுகின்றன. ஆனால் ஞான மார்க்கத்தில் கேள்விகளுக்கு இடம் இல்லை. சமயநூல்களில் அவர்கள் சிவபாபாவிற்கும் தேவர்களுக்கும் அதிகளவு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் எவரையுமே விட்டு வைக்கவில்லை. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் அதனையே மீண்டும் செய்வார்கள். தந்தை கூறுகின்றார்: இந்தத் தேவ தர்மமே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. பின்னர், இந்த துன்பம் இருக்காது. தந்தை உங்களை மிகவும் விவேகமானவர்களாக ஆக்குகின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் விவேகமானவர்கள். ஆகையாலேயே அவர்கள் உலக அதிபதிகள் ஆக இருக்கின்றார்கள். விவேகம் அற்றவர்கள் உலக அதிபதிகள் ஆக முடியாது. முதன் முதலில் நீங்கள் முட்களாக இருந்தீர்கள். இப்பொழுது மலர்கள் ஆகுகின்றீர்கள் என்பதாலேயே பாபா ஒரு ரோஜாவைக் கொண்டு வந்து உங்களிடம் காட்டி நீங்கள் அத்தகைய மலர் போல்; ஆக வேண்டும் எனக் கூறுகின்றார். அவரே வந்து, ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கிய பின்னர் இராவணன் வந்து அதனை முட்கள் நிறைந்த காடாக்குகின்றான். அது மிகவும் தெளிவாகும். நீங்கள் இவை அனைத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஒரேயொருவரை நினைவு செய்வதிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது. நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இது மிகவும் செழிப்பானதாகும். நீங்கள் அமைதி என்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். ஏனெனில் அவர் மாத்திரமே அமைதிக் கடல் ஆவார். நீங்கள் என்றுமே பௌதீகத் தந்தையை இவ்வாறு புகழ மாட்டீர்கள். ஸ்ரீகிருஷ்ணரே அனைவரிலும் வசீகரமானவர். அவரே முதல் பிறவி எடுப்பதால் அனைவராலும் அவர் அதிகளவு நேசிக்கப்படுகின்றார். தந்தை இல்லறத்தைப் பற்றிய முழுச் செய்திகளையும் தனது குழந்தைகளுக்குக் கொடுக்கின்றார். தந்தை உண்மையான வியாபாரி ஆனால், அவரைப் போன்று, வியாபாரத்தை அரிதாகவே எவரும் செய்கின்றார்கள். அத்தகைய மொத்தவியாபாரத்தை அரிதாகவே, சிலர் செய்கின்றார்கள். நீங்களே மொத்தவியாபாரிகள்;. நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். சிலர் சில்லறை வியாபாரத்திற்கான பேரத்தைப் பேசிய பின்னர் மறந்து விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே தெடர்ந்தும் நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்ட பின்னர், என்னை நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலக உறவுமுறைகளில், ஒரு தந்தை முதுமை அடையும் பொழுது, சில குழந்தைகள் இறுதிவரை அவருக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் சிலரோ செல்வம் அனைத்தையும் பெற்றுக் கொண்டதுமே விரயம் செய்து விடுகின்றார்கள். பாபா இவ் விடயங்கள் அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர். ஆகையாலேயே தந்தை அவரை தனது இரதம் ஆக்கிக் கொண்டார். அவர் வறுமை செல்வம் இரண்டிலும் அனுபவம் பெற்றிருக்கின்றார். அவர் அனைத்திலும் அனுபவசாலி. நாடகத்திற்கு ஏற்ப, இந்த ஓர் இரதம் மாத்திரமே உள்ளது. இது என்றுமே மாற்றப்பட முடியாது. நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. மொத்தவியாபாரம் சில்லறைவியாபாரம் அனைத்தையும் விளங்கப்படுத்திய பின்னர், அவர் இறுதியாகக் கூறுகின்றார்: மன்மனாபவ, மதியாஜிபவ! அனைத்தும் மன்மனாபவவில் அடங்கும். இந்த மகத்துவமான பொக்கிஷத்தாலேயே அவர் உங்கள் மடியை நிரப்புகின்றார். ஒவ்வொரு அழியாத ஞான இரத்தினமும் இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியானதாகும். நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கிசாலிகள் ஆகுகிறீர்கள். தந்தை இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவராவார். அவர் நாடகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராக பார்க்கின்றார். நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். நான் எனது பாகத்தைப் பற்றற்ற பார்வையாளராக நடிக்கின்றேன்;. நான் பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தினுள் வருவதில்லை. வேறு எவருமே இதிலிருந்து விடுதலை அடைய முடியாது. எவருமே அநாதியான முக்தியைப்பெறமுடியாது. இந்த அநாதியான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கபட்டது. இதுவும் அற்புதமானது. முழுப் பாகமும் ஒரு சின்னஞ் சிறிய ஆத்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அழியாத நாடகம் என்றுமே அழிக்கப்பட முடியாததாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் சேவை செய்கின்ற குழந்தைகளுக்கு உங்கள் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக உங்களுக்கு உங்கள்; தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் இதய ஆழத்திலிருந்து அதிகளவு அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும.; ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை குழந்தைகளிடம் தன்னை அர்ப்பணிப்பதைப் போன்று, உங்கள் சரீரம், மனம் செல்வத்துடன் தந்தையிடம் முழுமையாக உங்களை ஒருமுறை அர்ப்பணித்து, 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.2. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற பெறுமதிமதிமிக்க அழிவற்ற பொக்கிஷங்களினால் உங்கள் மடியை எப்பொழுதும் நிரம்பி வழியச் செய்யுங்கள். நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் என்ற சந்தோஷத்திலும் போதையிலும் எப்பொழுதும் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
பிராமண வாழ்க்கையின் சொத்தையும் ஆளுமையையும் நீங்களும் அனுபவம் செய்து பிறரையும் அனுபவம் செய்ய உதவுவதன் மூலம் ஒரு விசேட ஆத்மா ஆகுவீர்களாக. நீங்கள் பிராமணர்கள் ஆகியிருப்பது, உங்களுடைய மகாபாக்கியம் என பிராமண குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் பாப்தாதா ஞாபகப்படுத்துகின்றார். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையின் ஆஸ்தியும், சொத்தும் திருப்தியாகும். அத்துடன் சந்தோஷம் ஆளுமையாகும். இந்த அனுபவத்தை என்றுமே தவறவிடாதீர்கள் ஏனெனில் இது உங்கள் உரிமையாகும். அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவரும் இந்த பேறுகளை திறந்த இதயத்துடன் உங்களுக்குக் கொடுப்பதால் நீங்கள் அதனை அனுபவம் செய்வதுடன் பிறர் அனுபவம் செய்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும். அப்பொழுது நீங்கள் விசேட ஆத்மா எனப்படுவீர்கள்.சுலோகம்:
இறுதிக் கணங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு மாறாக உங்களுடைய இறுதி ஸ்திதியை பற்றி சிந்தியுங்கள்.