24.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்ற தந்தையை மிகுந்த அன்புடன் நினைவு செய்யுங்கள். நினைவு இல்லாத இடத்தில் அன்பு இருக்க முடியாது.
கேள்வி:
தந்தை ஏன் ஒவ்வொரு நாளும் தன்னை நினைவு செய்யுமாறு குழந்தைகளாகிய உங்களுக்குச் சமிக்ஞை கொடுக்கின்றார்?பதில்:
நினைவு செய்வதனால் மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள் என்பதால் ஆகும். நினைவு செய்வதன் மூலமே நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆத்மாக்களின் சகல பந்தனங்களும் முடிவடைந்து நீங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு தண்டனையில் இருந்தும் விடுதலை ஆகுவீர்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்து இருக்கிறீர்களோ அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன் உங்கள் இலக்கும் மிகவும் அண்மையில் இருப்பதாக நீங்கள் அனுபவம் செய்வீர்கள். நீங்கள் ஒருபொழுதும் களைப்படையவும் மாட்டீர்கள். ஆனால் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். ஆதலால் நினைவு செய்வதைப் பயிற்சி செய்வது இன்றியமையாதது.பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்துவிடாதீர்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் பாடலின் ஒரு வரியின் அர்;த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் இப்பொழுது உயிருடன் இருக்கும்பொழுதே எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். முழுக் கல்பத்திலும் நீங்கள் எல்லைக்கு உட்பட்ட தந்தையருக்கு உரியவர்களாக இருந்தீர்கள். சத்திய யுகத்திலும் நீங்கள் எல்லைக்கு உட்பட்ட தந்தையருக்கே உரியவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே எல்லையற்ற தந்தைக்கு உரியவர்களாக உள்ளீர்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தையை விட்டுச் சென்றீர்களாயின் உங்களால் உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற முடியாது. மக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்திய போதிலும் சிறிதளவில் எவருமே சந்தோஷப்படுவதில்லை. மக்கள் அதிகளவு செல்வம் வேண்டும் என்று வேண்டுகின்றார்கள். செல்வம் இல்லாது சந்தோஷம் இருக்க முடியாது. செல்வம் அவசியம், அமைதியும் அவசியம், நோயற்ற சரீரமொன்றும் அவசியம். இன்றைய உலகில் என்ன இருக்கிறது என்பதும் நாளை என்ன இருக்கும் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். விநாசம் சற்று முன்னால் உள்ளது. இவ்விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் இல்லை. விநாசம் சற்று முன்னால் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்த போதிலும் தாம் என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. யுத்தம் எந்தக் கணத்திலும் ஆரம்பிக்கலாம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். எங்கேயாவது ஒரு பொறி இருந்தால் அனைத்துமே வெடித்துவிடும். அதற்கு நீண்ட காலம் எடுக்காது. முன்னரும் ஒரு சிறிய விடயத்திலிருந்து பெரிய யுத்தமொன்று மூண்டது. பழைய உலகம் முடிவடையப் போவதால் எவ்வளவு விரைவில் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறமுடியுமோ அவ்வளவு விரைவில் இப்பொழுது அதனைப் பெறவேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் தொடர்ந்தும் தந்தையை எப்பொழுதும் நினைவு செய்தீர்களாயின் உங்களால் மிகுந்த முகமலர்ச்சியுடன் இருக்க முடியும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகியதும் உங்கள் சந்தோஷம் மறைந்து விடுகிறது. நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகும்பொழுது உங்களால் தந்தையை நினவுசெய்ய முடிகிறது. நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகியதும் நீங்கள் தந்தையை மறந்துஇ துன்பத்தை எடுக்கிறீர்கள். நீங்கள் தந்தையை அதிகளவு நினைவு செய்வதற்கு ஏற்ப எல்லையற்ற தந்தையிடம் இருந்து அந்தளவிற்குச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். நீங்கள் இலக்ஷ்மி நாராயணனைப் போன்றவர்கள் ஆகுவதற்கே இங்கே வந்துள்ளீர்கள். ஓர் அரசர் அரசியின் பணியாட்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் அவர்களின் பிரஜைகளுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. இப்பொழுது செய்கின்ற முயற்சி ஒவ்வொரு கல்பத்திற்கும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இறுதியில் நீங்கள் ஒவ்வொருவரும் செய்த முயற்சி எவ்வளவு என்பதற்கான காட்சியைக் காண்பீர்கள். இப்பொழுதும் தந்தை கூறுகிறார்: உங்கள் ஸ்திதியைத் தொடர்ந்தும் கவனியுங்கள்: ‘எங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தருகின்ற அனைவரிலும் மிகவும் இனிமையான பாபாவை நான் எவ்வளவிற்கு நினைவு செய்கின்றேன்?’ உங்களுக்கான அனைத்துமே நினைவு செய்வதிலேயே தங்கியுள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு அவரை நினைவு செய்கின்றீர்களோ அந்தளவிற்கு அதிகளவு சந்தோஷம் இருக்கும். நீங்கள் நெருங்கி வந்து விட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். சிலர் களைப்படைவதால் இலக்கிற்கு இன்னமும் எவ்வளவு காலம் உள்ளதோ என அங்கலாய்க்கிறார்கள். அவர்கள் தமது இலக்கை அடைவார்களாயின் அவர்களின் முயற்சிகள் பயனுள்ளதாக இருந்திருக்கும். கடவுள் யாரென்பதை இவ்வுலகிலுள்ள எவருக்குமே தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே! அதன் பின்னர் கடவுள் கற்களிலும் கூழாங்கல்லிலும் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்! நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் வசித்தாலும் அங்கிருக்கும் போதும் நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தையை நினைவு செய்யாது ஓர் ஆத்மாவினால் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக முடியாது. நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நான் உங்களிடம் இருந்து எனது முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்வேன். எங்கள் பாபா ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டதைப் போன்று நானும் முயற்சி செய்து நிச்சயமாக அவரின் சிம்மாசனத்தைப் பெற்றுக் கொள்வேன். மம்மாவும் பாபாவும் அரசனும் அரசியும் ஆகுகின்றார்கள் என்பதால் நாங்களும் அவ்வாறு ஆகுவோம். பரீட்சை அனைவருக்கும் ஒன்றே. உங்களுக்கு ஒரு சிறிதளவே கற்பிக்கப்படுகிறது: தந்தையை நினைவு செய்தால் போதும். இதுவே இலகு இராஜயோகத்தின் சக்தி எனப்படுகிறது. யோகத்தின் மூலம் அதிகளவு சக்தியைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நீங்கள் ஏதாவது பாவச் செயலைச் செய்தால் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்வதுடன் உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். நினைவு செய்தலிலேயே மாயை தடைகளை உருவாக்குகிறாள். நீங்கள் தூய உலகிற்குச் செல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பிராமணர்கள் ஆகுபவர்களே இதற்குக் கருவிகள் ஆகுகின்றனர். நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றலாகிய பிராமணன் ஆகாமல் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை உங்களால் பெறமுடியாது. ஒரு லௌகீகத் தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்கே அவர்களை உருவாக்குகின்றார். எவ்வாறாயினும் நாங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்காகவே அவர் ஒரு புதிய உலகை உருவாக்குகிறார். சரீரதாரிகளுக்கே ஓர் ஆஸ்தி கொடுக்கப்படுகிறது. ஆத்மாக்கள் மேலேயே வசிக்கிறார்கள். அங்கே ஓர் ஆஸ்தி அல்லது ஒரு வெகுமதி என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது நீங்கள் முயற்சி செய்வதனால் உங்கள் வெகுமதியைப் பெறுகிறீர்கள். உலகிற்கு இதனைப் பற்றித் தெரியாது. காலம் இப்பொழுது நெருங்கி வருகிறது. இன்னார் இன்னதைச் செய்தால் அவர்களை முற்றாக அழித்துவிடுவார்கள் என அவர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கான ஆயத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அணுகுண்டுகளை அவர்கள் வெறுமனே வைத்திருப்பதற்காக உற்பத்தி செய்யவில்லை. பல ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. பிரித்தானிய ஆட்சி காலத்தில் பாகிஸ்தானும் ஹிந்துஸ்தானும் இருந்ததா? யாதவர்களின் யுத்தத்தைப் பற்றியும் அவர்கள் எழுதியுள்ளார்கள். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் எவ்வித யுத்தமும் நடைபெறவில்லை. யாதவர்களே உண்மையில் இப்பொழுது போர் புரிகிறார்கள். அணுகுண்டுகள் அனைத்துமே தயாராக உள்ளன. தந்தை இப்பொழுது எங்களுக்குக் கட்டளை இடுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அல்லாவிடில் இறுதியில் நீங்கள் பெருமளவு அழவேண்டிவரும். ஒருவர் பரீட்சையில் சித்தி அடையாவிட்டால் அவர் கோபத்தில் தன்னையே மூழ்கடிக்கிறார். இங்கே கோபம் எனும் கேள்விக்கே இடமில்லை. உங்களுக்கு இறுதியில் பல காட்சிகள் கிடைக்கும். நீங்கள் என்னவாகுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியவரும். உங்களை முயற்சி செய்யத் தூண்டுவதே தந்தையின் கடமை ஆகும். அவர் கூறுகிறார்: குழந்தைகளே நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யும்போது என்னை நீங்கள் மறந்து விடுவதாலும் அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்காமல் இருப்பதாலும் வெறுமனே அமர்ந்திருங்கள். தந்தையின் நினைவில் அமர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுடன் சேர்ந்து நினைவு செய்வதற்கு அமரும்போது நீங்கள் உதவியைப் பெறுவதுடன் தந்தையை நன்றாகவும் நினைவு செய்வீர்கள். நீங்கள் இங்கு வந்தாலென்ன வராவிட்டாலென்ன தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். ஒருவர் வெளிநாடு செல்லும்போது அவரால் இங்கே வர முடிவதில்லை. அங்கே நீங்கள் இருக்கும் பொழுது தந்தையை நினைவு செய்வதன் மூலமே தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக முடியும் என்ற ஒரேயொரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தந்தை கூறுகிறார்: ஒரேயொரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள்! தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! என்னை நினைவு செய்யுங்கள்! அப்பொழுது நீங்கள் உலகிற்கு அதிபதி ஆகுவீர்கள். நினைவு செய்தலே பிரதான விடயமாகும். வேறு எங்கேயாவது செல்வது போன்ற கேள்விக்கே இடமில்லை. வீட்டிலிருந்து தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மை ஆகாவிட்டால் உங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாது. அனைவரும் வந்து இங்கே வகுப்பில் அமர்ந்து கற்பார்கள் என்றில்லை. மந்திரத்தைப் பெற்ற பின்னர் நீங்கள் எங்கேயும் (வெளிநாட்டிற்கு) செல்லலாம். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்கான வழியையும் தந்தை உங்களுக்குக் காட்டியுள்ளர். நீங்கள் ஒரு நிலையத்திற்கு வரும்பொழுது புதிய கருத்துக்களை உங்களால் செவிமடுக்க முடியும். எக்காரணத்தைக் கொண்டும் உங்களால் வரமுடியாது போனால் அல்லது மழையோ அல்லது ஊரடங்கு சட்டமோ அமுலில் இருந்தால் உங்களால் வெளியே வரமுடியாது. அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? தந்தை கூறுகிறார்: அது பரவாயில்லை. நீங்கள் எங்கே இருந்தாலும் அங்கே நினைவில் இருங்கள். நீங்கள் நடமாடித் திரியும்போதும் அவரை நினைவு செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதால் பாவங்கள் அழிக்கப்பட்டுத் தேவர்களாக முடியும் என்பதை மற்றவர்களுக்கும் கூறுங்கள். இரண்டு சொற்றொடர்களே உள்ளன. தந்தை கூறுகிறார்: உங்கள் குழந்தைப் பருவத்தை மறவாதீர்கள். இன்று நீங்கள் சிரிக்கிறீர்கள். நாளை நீங்கள் தந்தையை மறந்தீர்களாயின் கண்ணீர் விடுவீர்கள். தந்தையிடம் இருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் நீங்கள் பெறவேண்டும். நாங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வோம் என்றும் அவர்களின் பாக்கியத்தில் எது உள்ளதோ அது நல்லது எனக் கூறும் பலர் உள்ளனர். இது முயற்சி செய்தல் எனப்படுவதில்லை. மக்கள் ஒரு மேன்மையான அந்தஸ்தைப் பெறுவதற்கே முயற்சி செய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் தந்தையிடம் இருந்து உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதால் நீங்கள் ஏன் கவனயீனமாக இருக்கவேண்டும்? பாடசாலையில் கல்வி கற்காதவர்கள், கற்றவர்கள் முன்னிலையில் தலை வணங்கவேண்டி வரும். நீங்கள் தந்தையை முழுமையாக நினைவு செய்யாவிட்டால் நீங்கள் பிரஜைகளின் வேலைக்காரர்களும் பணிப்பெண்களும் ஆகுவீர்கள். அத்துடன் நீங்கள் சந்தோஷம் அடையக் கூடாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே நீங்கள் நேர்முன்னிலையில் வந்து புத்துணர்ச்சி பெற்றுத் திரும்புகிறீர்கள். சிலர் பந்தனத்தில் இருப்பதால் அவர்கள் வீட்டில் இருந்து தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வதும் பரவாயில்லை. உங்களுக்கு அனைத்துமே மிக இலகுவாக விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. மரணம் முன்னால் நிற்கிறது. திடீரென யுத்தம் ஆரம்பிக்கும். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு சிறிய தவறையேனும் செய்தீர்கள் என்றால் நாங்களும் அதையே செய்வோம். அவர்கள் ஒருவரை ஒருவர் முன்னெச்சரிக்கை செய்கிறார்கள். தங்களிடம் இருக்கும் குண்டுகளையிட்டு அவர்கள் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டுள்ளார்கள். தந்தை கூறுகிறார்: யோகசக்தியைப் பொறுத்தமட்டில் குழந்தைகள் இன்னமும் கெட்டிக்காரர் ஆகவில்லை. நீங்கள் ஆயத்தமாக முன்னர் யுத்தம் ஆரம்பிக்கும் என்றிருக்கக் கூடாது. எவ்வாறாயினும் நாடகத்தின்படி அது அவ்வாறு நிகழமாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் இன்னமும் உங்கள் முழு ஆஸ்தியையுமே பெற்றுக் கொள்ளாததால் யுத்தமொன்று ஆரம்பித்தாலும் அது விரைவில் முடிவடைந்துவிடும் எனும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் இராச்சியம் இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை. அதற்குக் காலம் தேவைப்படுகிறது. எந்த நேரம் என்ன நிகழும் என்பது உங்களுக்குத் தெரியாததாலேயே அவர் உங்களை முயற்சி செய்யும்படி தூண்டுகிறார். பஸ் வண்டிகள், ஆகாய விமானங்கள், புகையிரத வண்டிகள் முதலியவை விபத்துக்கு உள்ளாகி இந்நாட்களில் மிக இலகுவாக மரணம் சம்பவிக்கிறது. பூமியும் தொடர்ந்தும் அதிர்கிறது. பூமி அதிர்ச்சியும் தனது உச்சளவு வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் விநாசத்தின் முன்னர் நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து பெறவேண்டும். இதனாலேயே நீங்கள் தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்ய வேண்டும். பாபா உங்களைத் தவிர எங்களுக்கு வேறெவருமே இல்லை. தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் சிறிய குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவது போலத் தந்தை உங்களுக்கு வெகு சுலபமாக விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் தருவதில்லை. என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் காமச்சிதையில் அமர்ந்ததால் முற்றாக எரிந்து விட்டீர்கள். ஆதலால் இப்பொழுது இந்த ஞானச்சிதையில் அமர்ந்து தூய்மை ஆகுங்கள். உங்கள் இலக்கு என்ன என மக்கள் உங்களை வினவுகிறார்கள்: அவர்களுக்குக் கூறுங்கள்: அனைவரினதும் தந்தை கூறுகிறார்: சதா என்னை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சத்கதியை அருள்பவர். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது துரு அகற்றப்படும். இந்தச் செய்தியை நீங்கள் கொடுக்கலாம். நீங்களே நினைவில் இருக்கும்பொழுதே நீங்கள் மற்றவர்களையும் பாபாவை நினைக்கச் செய்யமுடியும். பின்னர் உங்களுக்கு மற்றவர்களுக்கும் கூறும் விருப்பமும் இருக்கும். அல்லாவிடில் அது உங்கள் இதயத்தில் இருந்து வெளிவராது. தந்தை கூறுகிறார்: நீங்கள் எங்கே இருந்தாலும் இயலுமானவரை என்னை நினைவு செய்யுங்கள். உணவு, பானம் முதலியவற்றில் சிறிதளவு சிரமம் இருந்தாலும் நீங்கள் வீட்டிலேயே வசிக்க வேண்டும். வீட்டிலிருந்தவாறே தந்தையை நினைவு செய்யுங்கள். யாரை நீங்கள் சந்தித்தாலும் கற்பித்தல்களையே அவர்களுக்குக் கூறுங்கள்: மரணம் முன்னால் நிற்கிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் தமோபிரதானாகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது என்னை நினைவுசெய்து தூய்மை ஆகுங்கள். ஆத்மாக்களே தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளனர். சத்திய யுகத்தில் ஆத்மாக்கள் தூய்மையானவர்களாக இருப்பார்கள். தந்தையை நினைவு செய்வதனாலேயே ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். வேறெந்த வழியும் இல்லை. இந்தச் செய்தியைத் தொடர்ந்தும் அனைவருக்கும் கொடுங்கள். அப்பொழுது பலர் நன்மை அடைவார்கள். பாபா உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் தருவதில்லை. இம்மாதம் மிகவும் மங்களகரமான புண்ணிய மாதம் (புருஷோத்தம்) ஆகும். யார் மிக மேன்மையானவர்கள் என்பதைச் சென்று விளங்கப்படுத்துங்கள். சத்தியயுக ஆரம்பத்தில் இலக்ஷ்மியும் நாராயணனுமே மிக மேன்மையானவர்களாக இருந்தார்கள். தந்தையே அவர்களை அவ்வளவு மேன்மையானவர்கள் ஆக்கினார். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபித்தார் என்பதே அதன் அர்த்தமாகும். தூய்மையாக்குபவரான தந்தையே ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மை ஆக்குகிறார். தந்தையே உங்களையும் சகலரையும் விட மிகமேன்மையானவர்கள் ஆக்குகிறார். பூஜிக்கத் தகுந்தவர்களாக இருந்தவர்கள் பூஜிப்பவர்கள் ஆகிவிட்டனர். இராவண இராச்சியத்தில் நாங்கள் பூஜிப்பவர்களாகவும் இராம இராச்சியத்தில் நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தோம். இது இப்பொழுது இராவண இராச்சியத்தின் இறுதியாகும். பூஜிப்பவர்களாக இருந்த நாங்கள் மீண்டும் ஒருமுறை பூஜிக்கத் தகுந்தவர்கள் ஆகுகின்றோம். மற்றவர்களுக்கும் தந்தையை நினைவு செய்யும் வழியைக் காட்டுங்கள். வயது முதிர்ந்த தாய்மார்களும் இந்தச் சேவையைச் செய்யவேண்டும். உங்கள் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தீர்களாயின் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். அசரீரியான சிவபாபாவே அனைவருக்கும் சத்கதியை அருள்பவரான பாபா ஆவார். அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இது விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவாக இருக்கும். வயது முதிர்ந்த தாய்மார்களுமே இந்தச் சேவையைச் செய்யலாம். இதுவே பிரதான விடயம் ஆகும். நீங்கள் ஒரு திருமண வைபவத்திற்கு அல்லது வேறெந்த ஒன்றுகூடலுக்குச் செல்லும் போதும் இந்த இரகசியத்தை அவர்களின் காதில் கூறுங்கள். கீதையின் கடவுள் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அனைவரும் இக்கருத்தை விரும்புவார்கள். பெருமளவு பேசவேண்டிய தேவையில்லை. தந்தையின் செய்தியைக் கொடுங்கள்! அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! நல்லது. கடவுள் உங்களைத் தூண்டுகிறார் என்று எண்ணுங்கள். உங்கள் கனவுகளில் காட்சிகள் காண்பீர்கள். அல்லது அவ்வொலியைக் கேட்பீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இந்த ஒரு விடயத்தில் நீங்கள் அக்கறை கொண்டால் எங்கள் படகு அக்கரையை அடையும். நாங்கள் இப்பொழுது நடைமுறைரீதியில் எல்லையற்ற தந்தைக்கு உரியவர்களாக இருந்து அவரிடமிருந்து 21 பிறவிகளுக்கு எங்கள் ஆஸ்தியைப் பெறுகிறோம். ஆதலால் அந்தச் சந்தோஷம் இருக்கவேண்டும். நீங்கள் தந்தையை மறந்துவிடும் பொழுதே சிரமம் ஏற்படுகிறது. தந்தை மிகச் சுலபமாக உங்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அப்பொழுது நீங்கள் சரியான பாதையைக் கண்டு கொண்டீர்கள் என அனைவரும் புரிந்து கொள்வார்கள். இப்பாதையை வேறெவராலும் மற்றவர்களுக்குக் காட்ட முடியாது. நீங்கள் உங்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத காலமும் வரும். நீங்கள் தந்தையின் நினைவிலேயே உங்கள் சரீரத்தை நீக்குவீர்கள். இறுதிக் கணங்களில் சிவபாபாவை நினைவு செய்பவர்கள் நாராயண குலத்தினுள் செல்வார்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் வம்சத்திற்குள் செல்வார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் இராஜ அந்தஸ்தைப் பெறுவார்கள். தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள். நீங்கள் ஒருவரை நினைவுசெய்யாது அவரை எவ்வாறு நேசிப்பது? உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பவரையே நீங்கள் நினைவு செய்வீர்கள். உங்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்ற எவரிலும் நீங்கள் அன்பு செலுத்த மாட்டீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறேன். ஆதலால் என்னை நேசியுங்கள்! தந்தையின் வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தக் கல்வியையிட்டு ஒருபோதும் கவனயீனமாக இருக்காதீர்கள். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளுங்கள்.2. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன் தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சம்பூரணமான தூய்மையுள்ள உண்மையான பிராமணராகி உங்களின் எண்ணங்கள், மனோபாவம் மற்றும் விழிப்புணர்வில் எந்தவிதமான வீணானவற்றையும் நிறுத்துவீர்களாக.உங்களின் எண்ணங்கள், மனோபாவம், விழிப்புணர்வைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்தீர்கள், அதற்காக வருந்தினீர்கள், நீங்கள் மன்னிப்புக் கேட்டீர்கள், பின்னர் அதிலிருந்து விடுபட்டீர்கள் என்பதாக இருக்கக்கூடாது. எவ்வளவுதான் ஒருவர் மன்னிப்புக் கேட்டாலும் ஏதாவது பாவத்தின் சுவடு அல்லது வீணான செயலை ஒருபோதும் அழிக்க முடியாது. பதிவேடு சுத்தமாகவும் கறையற்றதாகவும் இருக்காது. இந்த வழக்கம், சம்பிரதாயத்தை மட்டும் பயன்படுத்தாமல் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நான் சம்பூரணமான தூய ஆத்மா. எனது எண்ணங்கள், மனோபாவம் அல்லது விழிப்புணர்வில் தூய்மை இன்மை தொட முடியாது. இதற்கு ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
சுலோகம்:
தந்தையின் சகவாசத்தைப் பயன்படுத்துங்கள், நீங்கள் ஒருபோதும் மனவிரக்தி அடைய மாட்டீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
தூய்மையின் முக்கியத்துவத்தை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்றால் உங்களின் எண்ணங்களிலேனும் ஐந்து விகாரங்களை வெற்றி கொள்வதாகும். வீணான எண்ணங்கள் கோபத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே எந்தவோர் ஆத்மாவின் மீதும் காமம் நிறைந்த அல்லது வீணான பார்வை இருக்குமாயின் அது தூய்மை என்று கருதப்பட மாட்டாது. எனவே தந்தையின் மீதுள்ள அன்பினால் அந்த வீணான எண்ணங்களை அர்ப்பணித்து விடுங்கள்.