24.10.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வதற்கு, ஒவ்வொரு கணமும் பாபாவுடன் இருங்கள்.
பாடல்:
எந்தக் குழந்தைகள் தந்தையிடமிருந்து அதிக சக்தியைப் பெறுகிறார்கள்?பதில்:
தாமே எல்லையற்ற உலகை மாற்றுவோம் என்பதிலும், தாமே எல்லையற்ற உலகின் அதிபதிகள் ஆகப்போகின்றோம் என்பதிலும் உலகின் அதிபதியான தந்தையே தமக்குக் கற்பிக்கின்றார் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற குழந்தைகள், அதிக சக்தியைப் பெறுகின்றார்கள்.ஓம் சாந்தி.
பரமாத்மாவும் பரம தந்தையுமாகிய ஆன்மீகத் தந்தை இங்கு அமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு, அதாவது ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பித்து, விளங்கப்படுத்துகிறார். ஏனெனில், குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே தூய்மையாகி, மீண்டும் ஒருமுறை உலக அதிபதிகள் ஆகப்போகின்றீர்கள். முழு உலகினதும் தந்தை ஒருவரேயாவார். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. முழு உலகினதும் தந்தையும், ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையுமே குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். இது உங்கள் புத்தியில் உள்ளதா? உங்களுடைய தலை (புத்தி) தமோபிரதானாகவும், இரும்புப் பாத்திரமாகவும், கலியுகத்திற்குரியதாகவும் உள்ளது. புத்தி ஆத்மாவிலேயே உள்ளது. எனவே, இது உங்கள் புத்தியில் உள்ளதா? எல்லையற்ற தந்தை உண்மையாகவே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும், நாங்கள் எல்லையற்ற உலகை மாற்றுகிறோம் என்பதையும் புரிந்துகொள்வதற்கான போதிய சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள். இந்நேரத்தில் எல்லையற்ற உலகம் ஆழ் நரகத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஏழைகள் ஆழ் நரகத்திலும், சந்நியாசிகளும், செல்வந்தர்களும், பதவியிலுள்ளவர்களும் சுவர்க்கத்தில் இருப்பதாகவும் நீங்கள் நம்புகிறீர்களா? தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்நேரத்தில் மனிதர்கள் அனைவருமே ஆழ் நரகத்தில் உள்ளனர். ஆத்மாக்கள் சின்னஞ் சிறியவர்கள் போன்ற விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் ஞானம் முழுவதும் நிலைத்திருப்பதில்லையா, அல்லது நீங்கள் அதனை மறந்துவிடுகின்றீர்களா? உலக ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையே உங்கள் முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். பாபா இங்கு உண்மையில் உங்களுடன் இருக்கிறார் என்று நீங்கள் நாள் முழுவதும் நினைவு செய்கிறீர்களா? இது எவ்வளவு நேரத்திற்கு உங்கள் புத்தியில் இருக்கிறது? ஒரு மணித்தியாலத்திற்கா, அரை மணித்தியாலத்திற்கா அல்லது நாள் முழுவதுமா? இதனை உங்கள் புத்தியில் வைத்திருப்பதற்கு உங்களுக்கு சக்தி தேவை. பரம தந்தை, பரமாத்மாவான கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். வெளியே, நீங்கள் வீட்டில் வாழும்போது, அவர் உங்களுடன் இருப்பதில்லை. இங்கே, அவர் நடைமுறை ரூபத்தில் உங்களுடன் இருக்கிறார். உதாரணமாக, ஒரு பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றபின்னர், அவள் தனது வீட்டில் இருக்கும்போது, தன் கணவர் தன்னுடன் இருக்கிறார் என்று கூறமாட்டாள். எல்லையற்ற தந்தை ஒருவர் மாத்திரமேயாவார். தந்தை அனைவருக்குள்ளும் இருப்பதில்லை. தந்தை நிச்சயமாக ஒரு இடத்தில் மட்டுமே இருக்கின்றார். எல்லையற்ற தந்தை, நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார் என்பது உங்கள் புத்தியில் புகுகின்றதா? நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று இதயபூர்வமாகக் கருதுகின்றீர்களா? இது மிகவும் சந்தோஷத்திற்குரிய விடயமாகும். இதனைவிட சிறந்த சந்தோஷப் பொக்கிஷத்தை வேறு எவரும் பெறமாட்டார்கள். இப்போது நீங்கள் இவ்வாறு ஆகப்போகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தேவர்கள் எந்தத் தேசத்திற்கு அதிபதிகளாக இருந்தார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பாரதத்திற்கே தேவர்கள் வந்து, பின்னர் சென்றார்கள். அவர்கள் உலக அதிபதிகள் ஆகப்போகின்றார்கள். இது உங்கள் புத்தியில் உள்ளதா? நீங்கள் அத்தகைய செயற்பாடுகளைக் கொண்டுள்ளீர்களா? அவ்வாறான பேசும் முறையும், புத்தியும் உங்களிடம் உள்ளதா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் விரைவில் கோபப்பட்டு, எவருக்கேனும் இழப்பை ஏற்படுத்துவதாகவோ அல்லது எவரையாவது அவதூறு செய்யும் வகையிலோ உங்கள் நடத்தை இருக்கக்கூடாது. சத்திய யுகத்தில் அவர்கள் ஒருபோதும் எவரையும் அவதூறு செய்யமாட்டார்கள். அவதூறு செய்யும் அழுக்கான எண்ணங்கள் கொண்ட எவரும் அங்கு இல்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களை மிகவும் வலிமையுடன் ஈடேற்றுகின்றார். நீங்கள் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் கரங்களை உயர்த்துகிறீர்கள் (இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்கு), ஆனால் உங்களுடைய செயற்பாடுகள் அவர்களுடையதைப் போன்று உள்ளனவா? தந்தை இங்கு அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கிறார். இது உங்கள் புத்தியில் உறுதியாகப் பதிந்துள்ளதா? பலருடைய போதை சோடாவைப் போன்று ஆகுகின்றது என்பதை பாபா அறிவார். அனைவருடைய சந்தோஷப் பாதரசமும் அந்தளவுக்கு உயர்வதில்லை. இது அவர்களின் புத்தியில் பதியும்போதே அவர்களுடைய போதை உயரும். தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இங்கு அனைவரும் தூய்மையற்ற இராவண சமுதாயத்தினர் ஆவர். இராமர் குரங்குச் சேனையொன்றை அழைத்துச் சென்று அதையும் இதையும் செய்ததாகக் கதை ஒன்றுள்ளது. பாபா உங்களை இராவணனை வெற்றிகொள்ளச் செய்து, இலக்ஷ்மி நாராயணன் ஆக்குகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். இங்கு எவராவது குழந்தைகளாகிய உங்களிடம் வினவினால், கடவுளே உங்களுக்குக் கற்பிப்பதாக உடனடியாகவே நீங்கள் கூறுவீர்கள். கடவுள் பேசுகிறார். உங்களை ஒரு சட்டநிபுணராக அல்லது இன்னார் இன்னாராக ஆக்குவதாக ஓர் ஆசிரியர் கூறுவார். நீங்கள் அப்படி ஆகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். கற்பவர்களும் வரிசைக்கிரமமே. பின்னர் அவர்கள் வரிசைக்கிரமமாக அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இதுவும் ஒரு கல்வியாகும். பாபா உங்களுக்கு முன்னாலுள்ள உங்கள் இலக்கையும், குறிக்கோளையும் உங்களுக்குக் காட்டுகிறார். இக்கல்வி மூலம் நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது சந்தோஷத்திற்கான விடயமாகும். ஐ.சி.எஸ் கற்பவர்களும் புரிந்துகொள்வார்கள்: நான் இதனைக் கற்று, ஒரு வீட்டைக் கட்டி, இவ்வாறு செய்வேன். அவை அனைத்தும் அவர்களின் புத்தியில் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும். இங்கு, தந்தை அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அனைவரும் கற்று, தூய்மையாக வேண்டும். நீங்கள் எந்தத் தூய்மையற்ற செயல்களையும் ஒருபோதும் செய்யமாட்டீர்கள் என்று தந்தைக்கு சத்தியம் செய்யவேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஏதாவது பிழையான செயல்களைச் செய்தால், நீங்கள் சம்பாதித்த அனைத்தும் இழக்கப்பட்டுவிடும். மரணபூமியான இது பழைய உலகமாகும். நாங்கள் புதிய உலகிற்காகக் கற்கிறோம். பழைய உலகம் முடிவுக்கு வருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அவ்வாறு உள்ளது. தந்தை அமரத்துவ பூமிக்காக எங்களுக்குக் கற்பிக்கிறார். முழு உலகினதும் சக்கரத்தைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை தனது கரங்களில் எந்த நூல்களையும் வைத்திருப்பதில்லை. அவர் வாய்வழியாகவே விளங்கப்படுத்துகிறார். தந்தை விளங்கப்படுத்தும் முதலாவது விடயம்: நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஓர் ஆத்மா, தந்தையான கடவுளின் குழந்தையாவார். பரமதந்தையான பரமாத்மா, பரந்தாமத்தில் வசிக்கிறார். ஆத்மாக்களாகிய நாங்களும் அங்கேயே வசிக்கிறோம். பின்னர் நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்காக, வரிசைக்கிரமமாகத் தொடர்ந்து கீழே இறங்கி வருகிறோம். இது ஒரு பெரிய, எல்லையற்ற மேடையாகும். நடிகர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக இந்த மேடைக்கு, முதலில் புதிய உலகமான பாரதத்திற்கு வருகிறார்கள். இது அவர்களுடைய செயற்பாடாகும். நீங்களும் அவர்களின் புகழைப் பாடுகிறீர்கள். நீங்கள் அவர்களைப் பல்கோடீஸ்வரர்கள் என்று அழைப்பீர்களா? அந்த மக்களிடம் எண்ணற்ற செல்வம் உள்ளது. தந்தை அவர்களை ‘அந்த மக்கள்’ என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் அவரே எல்லையற்ற தந்தையாவார். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஆகவே, சிவபாபா அவர்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்கியதால், பின்னர் அவர்கள் பக்தி மார்க்கத்தில் சிவனை வணங்குவதற்கு அவருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டினார்கள். அனைத்திற்கும் முதலில் அவர்கள் தங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கிய ஒருவரை வணங்கினார்கள். தந்தை உங்களுக்குப் போதையை ஏற்படுத்துவதற்காகத் தினமும் அதிகளவு விளங்கப்படுத்துகிறார். தமது முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகப் புரிந்துகொண்டவர்கள், சேவையில் ஈடுபட்டிருந்தால் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள், இல்லாவிட்டால் சோர்ந்துவிடுவார்கள். நீங்கள் பாரதத்தில் ஆட்சி செய்தபோது, உண்மையில் அந்நேரத்தில் எந்தச் சமயங்களும் இருக்கவில்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. பின்னர் ஏனைய சமயங்கள் வந்தன. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாடசாலையில் நீங்கள் ஒரு இலக்கையும், குறிக்கோளையும் கொண்டிருக்க வேண்டும். சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் அரசாட்சி செய்த பின்னர் அவர்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தார்கள். இது ஓர் எல்லையற்ற கல்வி என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் பிறவி பிறவியாக எல்லைக்குட்பட்ட கல்வியைக் கற்று வந்தீர்கள். இதில் நீங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். முழு உலகையுமே மாற்றுகின்ற, அதாவது உலகை மீண்டும் புதுப்பிக்கின்ற ஒருவர், அதாவது, நரகத்தைச் சுவர்க்கமாக்குகின்ற தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்வது நிச்சயம், அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள். தந்தை இப்போது எங்களை இந்த நச்சுக் கடலிலிருந்து, இந்த விபச்சார விடுதியிலிருந்து அகற்றுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் இது இப்போது ஒரு விபச்சார விடுதியாகும். இது எப்போது ஆரம்பமானது என்பதும் இப்போது உங்களுக்குத் தெரியும். இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இராவண இராச்சியமும், பக்தியும் ஆரம்பமாகின. அந்நேரத்தில் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களே பாவப் பாதையில் சென்றார்கள். பக்தி செய்வதற்கு மக்கள் ஆலயங்களைக் கட்டுகிறார்கள். அவர்கள் சோமநாதருக்குப் பெரியதோர் ஆலயத்தைக் கட்டினார்கள். அந்த ஆலயத்தில் என்ன இருந்ததென்ற வரலாற்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அந்நேரத்தில் அவர்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். அங்கு ஓர் ஆலயம் மாத்திரம் இருந்திருக்க மாட்டாது. அதன் வரலாற்றில் அவர்கள் ஒரு பெயரை மாத்திரம் சேர்த்திருக்கிறார்கள். பல அரசர்கள் ஆலயங்களைக் கட்டினார்கள். ஒருவரையொருவர் பார்த்து, அனைவரும் வழிபாட்டை மேற்கொண்டார்கள். அங்கு பல ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட ஆலயம் ஒன்று மாத்திரம் இருந்திருக்காது. அருகே வேறு ஆலயங்களும் இருந்திருக்க வேண்டும். அங்கு கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்கவில்லை. அங்கு புகையிரதங்கள் போன்றவை இருக்கவில்லை என்பதால், அவை ஒன்றுக்கொன்று அருகிலேயே இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் அண்மையிலேயே வாழ்ந்திருக்க வேண்டும். பின்னர் உலகம் (சனத்தொகை) தொடர்ந்து விரிவடைந்தது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது கற்கின்றீர்கள். அனைத்துத் தந்தையரிலும் அதி மகத்தானவரே இப்போது உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இந்த போதையைக் கொண்டிருக்க வேண்டும். வீடுகளில் எவ்விதமான அழுகுரல்களோ, புலம்பல்களோ இருக்கக்கூடாது. இங்கு நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவேண்டும். இந்த அதி மங்களகரமான சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இதுவே நீங்கள் மாற்றமடைகின்ற, இடைப்பட்ட காலப்பகுதியாகும். நீங்கள் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் இப்போது அதி மங்களகரமான சங்கம யுகத்தில் கற்கின்றீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் முழு உலகையும் முற்றாக மாற்றுகிறார். அவர் பழைய உலகைப் புதியதாக்குகிறார். ஆகவே நீங்கள் அந்தப் புதிய உலகின் அதிபதிகள் ஆகவேண்டும். வழிமுறையைக் காட்டுவதற்குத் தந்தை கட்டுப்பட்டுள்ளார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் இந்த இடத்து வாசிகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அது உங்கள் இராச்சியமாக இருந்ததென்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. இராவண இராச்சியத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறீர்கள் எனத் தந்தை இப்போது விளங்கப்படுத்தியுள்ளார். இது விகாரம் நிறைந்த உலகம் என அழைக்கப்படுகிறது. அந்த தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். மக்கள் தங்களை விகாரமானவர்கள் என்று அழைக்கிறார்கள். இராவணனின் இராச்சியம் எப்போது ஆரம்பமாகியதென்றோ அல்லது என்ன நடந்ததென்றோ எவருக்கும் தெரியாது. அவர்களுடைய புத்தி முற்றாக தமோபிரதானாக உள்ளது. அவர்கள் சத்திய யுகத்தில் இருந்தபோது, அவர்களுக்கு தெய்வீகப் புத்தி இருந்ததுடன், உலக அதிபதிகளாகவும் இருந்தார்கள். அதாவது, அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். அது சந்தோஷபூமி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எல்லையற்ற துன்பம் உள்ளது. சந்தோஷமான உலகம் எவ்வாறு இருக்கும் என்பதையும், துன்பமான உலகம் எவ்வாறு இருக்கும் என்பதையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். மக்களுக்கு எதுவும் தெரியாது: எவ்வளவு காலம் சந்தோஷம் இருக்குமென்றோ அல்லது எவ்வளவு காலம் துன்பம் இருக்குமென்றோ அவர்களுக்குத் தெரியாது. உங்கள் மத்தியிலும், நீங்கள் தொடர்ந்து வரிசைக்கிரமமாகவே புரிந்துகொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஸ்ரீகிருஷ்ணரை எல்லையற்ற தந்தை என்று அழைக்க முடியாது. உங்களால் அதனை இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறாயினும் எவரைத் தாங்கள் தந்தையென அழைக்கலாம் என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. கடவுள் விளங்கப்படுத்துகிறார்: மக்கள் என்னை அவதூறு செய்கின்றனர். நான் உங்களைத் தேவர்கள் ஆக்குகிறேன். மக்கள் என்னையும் தேவர்களையும் அதிகளவு அவதூறு செய்துள்ளார்கள். அவர்கள் அந்தளவிற்கு முட்டாள் புத்தி உடையவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கோவிந்தா..... என்ற நாமத்தை உச்சரியுங்கள். தந்தை கூறுகிறார்: ஓ! முட்டாள் புத்தியுடையவர்களே, “கோவிந்தா, கோவிந்தா, இராமா, இராமா” என்று கூறுவதன் மூலம் யாருடைய நாமத்தை நீங்கள் உச்சரிக்கிறீர்கள் என உங்களுடைய புத்தியில் புகுகிறதா? கல்லுப் புத்தி உடையவர்கள், முட்டாள் புத்தி உடையவர்கள் என அழைக்கப்படுவார்கள். தந்தை கூறுகிறார்: நான் இப்போது உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். தந்தையே அனைவருக்கும் ஜீவன் முக்தியை அளிப்பவர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் உங்கள் குடும்பம் போன்றவற்றில் அதிகளவு சிக்கியுள்ளீர்கள். கடவுள் உங்களுக்குக் கூறுவன உங்கள் புத்தியில் பதிவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும். எவ்வாறாயினும், மக்கள் அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள். ஆகவே அவர்கள் எவ்வாறு கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவார்கள்? அவர்களுக்கு கோவிந்தர் என்பது யார் என்றுகூடத் தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் கூறுவீர்கள்: பாபா, நீங்கள் எங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தியிருக்கிறீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாபா, நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் ஆஸ்தியை உங்களிடமிருந்து பெறுகிறோம். நாங்கள் நிச்சயமாக சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவோம். மாணவர்கள் நிச்சயமாகத் தங்கள் கல்வியைப் பற்றியும், தாங்கள் என்னவாக ஆகுவார்கள் என்ற போதையையும் கொண்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் அந்த நம்பிக்கையையும் கொண்டிருப்பார்கள். தந்தை இப்போது கூறுகிறார்: நீங்கள் நற்குணங்கள் யாவும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் எவர்மீதும் கோபப்படக்கூடாது. தேவர்களிடம் ஐந்து விகாரங்களும் இருக்கமாட்டாது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத் முதலில் கூறுகிறது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக, பரந்தாமத்திலிருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய அந்தச் சரீரம் அழியக்கூடியது. ஆத்மா அழிவற்றவர். ஆகவே நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதவேண்டும். ஆத்மாவாகிய நான், ஒரு பாகத்தை நடிப்பதற்காக, பரந்தாமத்திலிருந்து இங்கு வந்திருக்கிறேன். இங்கு நீங்கள் சந்தோஷமற்று இருப்பதால், முக்தி தாமத்திற்குச் செல்லவேண்டுமென்று நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், உங்களைத் தூய்மையாக்குபவர் யார்? மக்கள் அந்த ஒருவரைக் கூவி அழைக்கிறார்கள். ஆகவே தந்தை வந்து கூறுகிறார்: எனது இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களைச் சரீரங்களாக அன்றி, ஆத்மாக்களாகக் கருதுங்கள். நான் இங்கு அமர்ந்திருந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். ஆத்மாவே கூவியழைக்கிறார்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! பாரதத்திலேயே மக்கள் தூய்மையாக இருந்தார்கள். இப்போது அவர்கள் மீண்டும் கூவி அழைக்கிறார்கள்: எங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்களாக்கி, சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணரில் அன்பு உள்ளது. குமாரிகளும், தாய்மாரும் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரில் பல விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பூமிக்கு, அதாவது சத்திய யுகத்திற்குச் செல்லலாம் என்று எண்ணி, தண்ணீர்கூட அருந்தமாட்டார்கள். எவ்வாறாயினும் அவர்களிடம் ஞானம் இல்லை. ஆகவே அவர்கள் பலவந்தமாக அவற்றை அனுஷ்டிக்கிறார்கள். நீங்கள் செய்வன அனைத்தும் மற்றவர்களுக்கு அவற்றைப் பற்றிக் கூறுவதற்காக அல்ல, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பூமிக்குச் செல்வதற்காகவே ஆகும். எவராலும் உங்களை நிறுத்த முடியாது. அந்த மக்கள் அரசாங்கத்திற்குத் தொந்தரவு கொடுப்பதற்காக அவர்களின் முன்னிலையில் உண்ணாவிரதங்கள் போன்றவற்றை நடாத்துகிறார்கள். நீங்கள் அவ்வாறு எந்த வேலைநிறுத்தத்தையும் செய்யவோ அல்லது எவ்வாறு அதனைச் செய்வது என்று உங்களுக்குக் கற்பிக்கவோ வேண்டியதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரே சத்திய யுகத்தின் முதல் இளவரசர். எவ்வாறாயினும் எவருக்கும் அது தெரியாது. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் காட்டியிருக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஞானமும், பக்தியும் இரு வெவ்வேறு விடயங்களாகும். ஞானம் பகலும், பக்தி இரவுமாகும். யாருடையது? அது பிரம்மாவின் இரவும், பகலுமாகும். எவ்வாறாயினும், குருமாரும், அவர்களுடைய சிஷ்யர்களும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தினதும், பக்தியினதும், ஆர்வமின்மையினதும் இரகசியத்தையும் விளங்கப்படுத்துகிறார். ஞானம் பகலாகும். பக்தி இரவாகும். அதன் பின்னர் விருப்பமின்மையாகும். அந்த மக்களுக்கு அது தெரியாது. “ஞானம், பக்தி, விருப்பமின்மை” என்ற வார்த்தைகள் சரியானவை. ஆனால் மக்களுக்கு அவற்றின் அர்த்தம் தெரியாது. தந்தை தருகின்ற ஞானத்தை நீங்கள் கொண்டிருப்பதன் மூலம், பகல் வருகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பக்தி ஆரம்பமாகும்போது அது இரவாகின்றது. ஏனெனில் மக்கள் இருளில் தடுமாறி அலைகின்றனர். பிரம்மாவின் இரவு பிராமணர்களின் இரவாகும். பின்னர் பகல் உள்ளது. ஞானத்தின் மூலம் பகலும், பக்தி மூலம் இரவும் உள்ளது. இரவில் நீங்கள் வனவாசம் இருந்து, பின்னர் பகலில் மிகுந்த செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
உங்கள் இதயத்தைக் கேளுங்கள்:
1. தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற சந்தோஷப் பொக்கிஷங்கள் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கின்றனவா?2. பாபா, உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காக வந்திருக்கிறார். ஆகவே உங்கள் செயற்பாடுகளும், மற்றவர்களுடன் நீங்கள் பேசுகின்ற விதமும் அதற்கேற்ப உள்ளனவா? நீங்கள் எப்போதாவது எவரையாவது அவதூறு செய்திருக்கிறீர்களா?
3. தந்தைக்கு ஒரு சத்தியம் செய்த பின்னர், நீங்கள் தூய்மையற்ற செயல்கள் எதையாவது செய்கின்றீர்களா?
ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் மூலமும் திருப்தியான ஆத்மாவாக இருப்பதன் மூலமும் சகல இக்கட்டான சூழ்நிலைகளையும் விளையாட்டுக்களாக அவதானிப்பீர்களாக.ஓர் இக்கட்டான சூழ்நிலை எந்தளவிற்கு உங்களை அசைக்க முயற்சி செய்தாலும், நீங்கள் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக வேண்டும். அப்போது நீங்கள் எல்லாவற்றையும் நிஜமானதாக அன்றி, ஒரு பொம்மலாட்டம் போன்று அனுபவம் செய்வீர்கள். உங்களின் கௌரவத்தைப் பேணியவண்ணம் நீங்கள் விளையாட்டுக்களை அவதானிக்க வேண்டும். சங்கம யுகத்தின் மேன்மையான கௌரவம், ஒரு திருப்தி இரத்தினமாக இருப்பதுடன், திருப்தியாக இருப்பதும் ஆகும். இந்த கௌரவத்தைப் பேணுகின்ற ஆத்மாக்கள் ஒருபோதும் மனச்சோர்வினை அடைய மாட்டார்கள். சங்கம யுகத்தில் பாப்தாதாவின் விசேடமான பரிசு, திருப்தியே ஆகும்.
சுலோகம்:
உங்களின் மனதில் உள்ள சந்தோஷம் உங்களின் முகத்தில் புலப்படும் வகையில் சந்தோஷமான இதயத்தைக் கொண்டிருங்கள்.