24.11.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2002     Om Shanti     Madhuban


தந்தைக்குச் சமமானவர் ஆகுவதன் மூலம் உங்களின் தகைமைகளை உங்களின் இலட்சியத்திற்குச் சமமாக ஆக்குவதற்கான நேரம் இதுவே.


இன்று, நானா திசைகளிலும் தமது சுயமரியாதை என்ற ஸ்திதியில் இருக்கும் குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இந்த சங்கமயுகத்தில் குழந்தைகளான நீங்கள் பெறுகின்ற சுயமரியாதையை விடக் கல்பம் முழுவதிலும் வேறெந்த ஆத்மாவாலும் மகத்தான சுயமரியாதையைப் பெற முடியாது. இந்த சுயமரியாதை மிக மகத்தானது. நீங்கள் அதை உணர்ந்திருக்கிறீர்களா? சுயமரியாதையின் போதை மிக மகத்தானது. இது உங்களின் விழிப்புணர்வில் இருக்கிறதா? சுயமரியாதை என்ற மாலை மிகவும் நீண்டது. தொடர்ந்து ஒவ்வொரு மணியையும் எண்ணி, சுயமரியாதையின் இந்தப் போதையின் அன்பிலே உங்களை மறந்திருங்கள். நீங்கள் இந்த சுயமரியாதையை அல்லது இந்தப் பட்டங்களை பாப்தாதாவிடமிருந்தே பெற்றுள்ளீர்கள். நீங்கள் இறைவனிடமிருந்தே சுயமரியாதையைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே, எந்தவொரு அதிகாரத்தாலும் உங்களின் சுயமரியாதைக்குரிய ஆன்மீக போதையை அசைக்க முடியாது. ஏனென்றால், நீங்கள் அதைச் சர்வசக்திவானிடமிருந்தே பெற்றுள்ளீர்கள்.

எனவே, இன்று, அமிர்தவேளையில், குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை சுயமரியாதை மாலைகளை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் சுற்றி வந்தார். இந்த மாலையை அணிந்திருப்பதென்றால், உங்களின் விழிப்புணர்வுடன் அந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருத்தல் என்று அர்த்தம். ஆகவே, எந்தளவிற்கு உங்களிடம் இந்த விழிப்புணர்வின் ஸ்திதி உள்ளதென உங்களையே சோதித்துப் பாருங்கள். எந்தளவிற்கு உங்களிடம் சுயமரியாதையிலும் அதன் ஆன்மீக போதையிலும் நம்பிக்கையின் சமநிலை உள்ளதென பாப்தாதா பார்த்தார். நம்பிக்கை வைப்பதெனில், ஞானம் நிறைந்தவராக இருப்பதாகும். ஆன்மீக போதையைக் கொண்டிருப்பதென்றால், சக்திசாலியாக இருப்பதாகும். எனவே, பாபா இரண்டு வகையான ஞானம் நிறைந்தவர்களைக் கண்டார். ஒன்று, ஞானம் நிறைந்தவராக இருத்தல். மற்றையது, ஞானியாக (ஞான சொரூபம்) இருத்தல். எனவே, உங்களையே கேட்டுப்பாருங்கள்: இதில் நான் எது? குழந்தைகளான உங்களின் இலட்சியம் மிகவும் மேன்மையானது என்பதை பாப்தாதா அறிவார். உங்களின் இலட்சியம் மேன்மையானதல்லவா? எது மேன்மையானது? நீங்கள் எல்லோருமே, நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள் என்றே சொல்கிறீர்கள். அதனால், தந்தை எப்படி அதிமேலானவரோ, அதேபோல், தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இலட்சியமும் அதியுயர்ந்தது. ஆகவே, உங்களின் இலட்சியத்தைப் பார்க்கும்போது பாப்தாதா மிகவும் சந்தோஷப்படுகிறார். ஆனால்....... ஆனால் என்ன என்பதை பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? ஆனால் என்ன? ஆசிரியர்கள் சொல்ல வேண்டும். இரட்டை வெளிநாட்டவர்களே, ஆனால் என்ன என்பதை நீங்கள் செவிமடுப்பீர்களா? நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்களின் தகைமைகள் உங்களின் இலட்சியத்திற்குச் சமமாக இருப்பதைக் காண பாப்தாதா விரும்புகிறார். இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பாருங்கள்: உங்களின் இலட்சியம் உங்களின் தகைமைகளுக்கு, அதாவது, உங்களின் நடைமுறை ஸ்திதிக்குச் சமமாக இருக்கின்றனவா? இது ஏனென்றால், உங்களின் இலட்சியமும் அதன் தகைமைகளும் சமமாக இருப்பதே, தந்தைக்குச் சமமாக இருப்பதாகும். இப்போது, இந்தச் சமநிலையை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான நேரமாகும்.

தற்சமயம், குழந்தைகளில் ஒரு விடயத்தைப் பார்க்கும்போது, பாப்தாதாவால் தாங்க முடியாமல் உள்ளது. பல குழந்தைகளும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காக வெவ்வேறு வகையான முயற்சிகளைச் செய்கிறார்கள். தந்தையிடம் நீங்கள் கொண்டிருக்கும் அன்பின் முன்னால், முயற்சி செய்ய வேண்டிய தேவையில்லை. எங்கு அன்பு உள்ளதோ, அங்கே முயற்சி வேண்டியதில்லை. சரீர உணர்வின் தவறான போதை, உங்களின் சுபாவம் ஆகியுள்ளது. அது இயல்பானது ஆகியுள்ளது. சரீர உணர்விற்குள் வருவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டுமா? அல்லது, நீங்கள் 63 பிறவிகளாக அதற்காக முயற்சி செய்தீர்களா? அது உங்களின் சுபாவம் ஆகியது, அது இயல்பாகியது. எனவே, இப்போதும், ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதாக நீங்கள் சிலவேளைகளில் சொல்கிறீர்கள். எனவே, சரீர உணர்வானது உங்களின் சுபாவமாகவும் இயல்பானதாகவும் ஆகியிருப்பதைப் போல், இப்போது ஆத்ம உணர்வு ஸ்திதியானது இயல்பானதாகவும் உங்களின் சுபாவமாகவும் ஆகவேண்டும். உங்களின் சுபாவத்தை மாற்றுவது கடினமானது. அது உங்களின் நோக்கம் அல்ல, ஆனால் அது உங்களின் சுபாவம் என நீங்கள் இப்போதும் சிலவேளைகளில் சொல்கிறீர்கள். எனவே, நீங்கள் அந்த சுபாவத்தை இயல்பானது ஆக்கியுள்ளீர்கள், ஆனால் உங்களால் இயல்பாக உங்களின் சுபாவத்தைத் தந்தைக்குச் சமமாக ஆக்க முடியாதுள்ளது! நீங்கள் தவறான சுபாவத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். தந்தைக்குச் சமமாக இருக்கின்ற சரியான சுபாவத்தைக் கொண்டிருப்பது ஏன் கடினமான வேலையாக உள்ளது? அதனால், இப்போது குழந்தைகள் எல்லோரும் ஆத்ம உணர்வாக இருக்கும் இயல்பான சுபாவத்தைக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: நடக்கும்போதும் அசையும்போதும் எந்தவொரு பணியைச் செய்யும்போதும், ஆத்ம உணர்வு ஸ்திதியே அவரின் இயல்பான சுபாவமாக இருந்தது.

தற்காலத்தில், தாதிகள் குறிப்பாக எப்படி தேவதை ஸ்திதியையும் கர்மாதீத் ஸ்திதியையும் தந்தைக்குச் சமமாக ஆகுகின்ற ஸ்திதியையும் உங்களின் இயல்பான சுபாவம் ஆக்குவது என்பதைப் பற்றி இதயபூர்வமாக உரையாடுகிறார்கள் என்ற செய்திகளை பாப்தாதா செவிமடுத்தார். அது உங்களின் சுபாவம் ஆகவேண்டும். நீங்கள் இந்த இதயபூர்வமான உரையாடலை மேற்கொண்டீர்கள்தானே? இதையே தாதிஜி மீண்டும் மீண்டும் நினைக்கிறார், அப்படித்தானே? அதாவது, நீங்கள் தேவதை ஆகவேண்டும், நீங்கள் கர்மாதீத் அடைய வேண்டும், அதன் மூலம் தந்தை வெளிப்படுத்தப்படுவார். எனவே, தேவதை ஆகுவதற்கான அல்லது அசரீரி கர்மாதீத் ஸ்திதியை உருவாக்குவதற்கான விசேடமான வழிமுறை, அகங்காரம் அற்றவர் ஆகுவதாகும். அகங்காரமற்ற ஒருவராலேயே அசரீரியானவர் ஆகமுடியும். இதனாலேயே, பிரம்மாவினூடாகத் தந்தை வழங்கிய கடைசி மந்திரம் என்னவென்றால், அசரீரியானவராக இருப்பதுடன்கூடவே, அகங்காரம் அற்றவராகவும் ஆகுங்கள் என்பதாகும். சரீர அகம்பாவம் அல்லது சரீர உணர்வு என்பது உங்களின் சரீரத்தில் அல்லது மற்றவர்களின் சரீரத்தில் அகப்பட்டுக் கொள்வது மட்டுமல்ல. இதை மட்டும் சரீர அகம்பாவம் அல்லது சரீர உணர்வென்று அழைக்க முடியாது. சரீர அகம்பாவமும் சரீர உணர்வும் உள்ளன. உங்களின் சொந்தச் சரீரத்தையும் மற்றவர்களின் சரீரங்களையும் உணர்ந்தவராக இருத்தல், அவற்றின் மீது பற்று வைத்தல் என்பவற்றில் பெரும்பாலானோர் சித்தி அடைந்துள்ளீர்கள். முயற்சி செய்வதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பவர்கள், உண்மையான முயற்சியாளர்கள், இந்தப் புற ரூபத்திற்கு அப்பால் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், சரீர உணர்வில் பல சூட்சுமமான ரூபங்கள் உள்ளன. உங்களுக்கிடையே இவற்றைப் பற்றிய ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள். இவற்றைப் பற்றி இன்று பாப்தாதா உங்களுக்குக் கூறப் போவதில்லை. இன்று, இந்தளவு சமிக்கையே போதுமானது. ஏனென்றால், நீங்கள் எல்லோரும் விவேகிகள். நீங்கள் எல்லோரும் அவற்றை அறிவீர்கள்தானே? உங்கள் எல்லோரையும் கேட்டால், நீங்கள் எல்லோரும் மிகுந்த கெட்டித்தனத்துடன் அவை அனைத்தையும் கூறுவீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா உங்களுக்கு இந்த மிகவும் எளிமையான, இலகுவான முயற்சியைச் செய்யும்படி கூறுகிறார். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் அசரீரியானவர், அகங்காரம் அற்றவர், விகாரம் அற்றவர் என்ற மூன்று வார்த்தைகளின் கடைசி மந்திரத்தை சதா நினைப்பதுடன் கடைப்பிடியுங்கள். எந்தவோர் எண்ணத்தை நீங்கள் உருவாக்கும்போதும், அது மகாமந்திரத்தினால் நிறைந்திருக்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள். அதேபோல், இந்த மூன்று வார்த்தைகளையும் உங்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் வைத்திருந்து, அவற்றைச் சமம் ஆக்குங்கள். இது இலகுவானதுதானே? உங்களுக்கு முழு முரளியையும் நினைவு செய்யும்படி சொல்லவில்லை, ஆனால் மூன்று வார்த்தைகளை மட்டுமே நினையுங்கள். இந்த மகாமந்திரம் உங்களின் எண்ணங்களை மேன்மையானவை ஆக்கும். உங்களின் வார்த்தைகளில் அது பணிவைக் கொண்டுவரும். உங்களின் செயல்களில் சேவை செய்கின்ற உணர்வைக் கொண்டுவரும். உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் நல்லாசிகளும் மேன்மையான உணர்வுகளுக்குமான மனோபாவத்தை சதா உருவாக்கும்.

பாப்தாதா சேவைச் செய்திகளைக் கேட்கிறார். தற்காலத்தில், நீங்கள் சேவையில் வெவ்வேறு பாடநெறிகளைக் கொடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், இப்போது ஒரு பாடநெறி இன்னமும் எஞ்சியுள்ளது. அது விசையான பாடநெறியை வழங்குவது. அதாவது, ஆத்மாக்களுக்குத் தேவையான சக்தியால் அவர்களை நிரப்புவது. இது அவர்களைச் சக்தியால் நிரப்புகின்ற பாடநெறி. அவர்களுக்கு வார்த்தைகளால் சொல்கின்ற பாடநெறி அல்ல. வார்த்தைகளால் வழங்கப்படும் பாடநெறியுடன் கூடவே, அவர்களைச் சக்தியால் நிரப்புகின்ற பாடநெறியும் இருக்க வேண்டும். இதன் மூலம், இது நல்லது என அவர்கள் சொல்வது மட்டுமல்ல, ஆனால், அவர்களே நல்லவர்கள் ஆகுவார்கள். இன்று தாங்கள் ஒரு துளி சக்தியைப் பெற்றோம் என அவர்கள் சொல்ல வேண்டும். இதன் ஒரு துளியை அனுபவம் செய்வதே, அந்த ஆத்மாக்களுக்கு மகத்தான விடயம் ஆகும். பாடநெறிகளைக் கொடுங்கள், ஆனால் முதலில் உங்களுக்கே இந்தப் பாடநெறியை வழங்கிய பின்னர், மற்றவர்களுக்குக் கூறுங்கள். எனவே, பாப்தாதா எதை விரும்புகிறார் என்பதை நீங்கள் கேட்டீர்களா? உங்களின் இலட்சியத்திற்கேற்ப உங்களின் தகைமைகளைச் சமம் ஆக்கிக் கொள்ளுங்கள். எல்லோருடைய இலட்சியத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா மிக, மிக மகிழ்ச்சி அடைகிறார். இப்போது அவற்றைச் சமமாக்குங்கள். நீங்கள் மிக இலகுவாகத் தந்தைக்குச் சமமானவர் ஆகமுடியும்.

பாப்தாதா குழந்தைகளைத் தனக்குச் சமமாக இருப்பதைவிட, அதியுயர்ந்தவர்களாகவே மதிக்கிறார். அவர் உங்களைத் தன்னை விட உயர்ந்தவர்களாக மதிப்புக் கொடுக்கிறார். பாப்தாதா எப்போதும் குழந்தைகளைத் தனது தலைக்கிரீடம் என்றே அழைக்கிறார். கிரீடங்கள் தலையை விட உயர்ந்தவை, அப்படித்தானே? ஆசிரியர்களே, நீங்கள் தலைக்கிரீடங்கள்தானே?

ஆசிரியர்கள்: பாருங்கள், ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு குழுவில் இத்தனை பல ஆசிரியர்கள் இருந்தால், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை ஆசிரியர்கள் இருப்பார்கள்? பாப்தாதாவின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுகின்ற எண்ணம் ஆசிரியர்களிடம் உள்ளது. ஆனால், நீங்கள் அதை பாபாவின் முன்னால் கொண்டுவரவில்லை. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலில், பாப்தாதா உங்களிடம் வாரிசுகளின் மாலையை உருவாக்கும்படி கூறினார். வாரிசுகளின் மாலை. பொதுவான மாலை அல்ல. இரண்டாவதாக, உங்களுடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் இருப்பவர்களை மைக்குகள் ஆக்குங்கள். நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றுவதில்லை. ஆனால், உங்களின் சார்பாக அவர்கள் ஊடகம் ஆகவேண்டும். உங்களின் சொந்த ஊடகத்தை உருவாக்குங்கள். ஊடகத்துறை என்ன செய்யும்? அவர்கள் ஒலியைப் பரப்புவார்கள்: அது சரியாகவோ அல்லது பிழையாகவோ இருக்கலாம். ஆகவே, ஊடகத்துறை செய்வதைப் போன்று வெளிப்படுத்துகையின் சத்தத்தைப் பரப்புகின்ற மைக்குகளைத் தயார் செய்யுங்கள். ‘இறைவன் வந்துவிட்டார், இறைவன் வந்துவிட்டார்!’ என நீங்கள் சொல்லுவீர்கள். அவர்கள் இதைப் பொதுவான ஒன்றாகவே கருதுகிறார்கள். எவ்வாறாயினும், மற்றவர்கள் அதை உங்களின் சார்பாகச் சொல்ல வேண்டும். ஏதாவது அதிகாரம் கொண்டவர்கள் இதைக் கூற வேண்டும். அவர்கள் அனைத்திற்கும் முதலில் உங்களைச் சக்திகளாக வெளிப்படுத்த வேண்டும். சக்திகள் வெளிப்படுத்தப்படும்போது, தந்தையும் வெளிப்படுத்தப்படுவார். எனவே, அவர்களை ஊடகம் ஆக்குங்கள். ஊடகத்துறையைத் தயார் செய்யுங்கள். அப்போது நாங்கள் பார்ப்போம். நீங்கள் இதைச் செய்துள்ளீர்களா? நீங்கள் அவர்களைத் தயார் செய்துள்ளீர்களா? ஓகே, ஒரு மாலை செய்வதை விட்டுவிடுங்கள், ஒரு கைக்காப்பையாவது தயார் செய்தீர்களா? நீங்கள் அதைத் தயார் செய்தீர்களா? இத்தகையவர்களைத் தயார் செய்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் யாரைத் தயார் செய்துள்ளீர்கள் என பாப்தாதா பார்ப்பார். ஓகே, நீங்கள் தைரியத்தைப் பேணினீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கேட்டீர்களா? சிவராத்திரிக்கு, வாரிசு தரத்தைக் கொண்டவர்களைத் தயார் செய்யுங்கள். மைக்குகளைத் தயார் செய்யுங்கள். பின்னர், அடுத்த வருடம் சிவராத்திரியின் போது, தந்தை சிவன் வந்துவிட்டார் என்ற ஒலி பரவும். இந்த முறையில் சிவராத்திரியைக் கொண்டாடுங்கள். நீங்கள் மிக நல்ல நிகழ்ச்சிகளைத் திட்டம் இட்டுள்ளீர்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு நிகழ்ச்சியை அனுப்பி வைத்துள்ளீர்கள்தானே? நீங்கள் மிக நல்ல நிகழ்ச்சிகளைச் செய்துள்ளீர்கள். எவ்வாறாயினும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், சில மைக்குகள் உருவாக்கப்பட வேண்டும். சில வாரிசுகள் தயார் செய்யப்பட வேண்டும். இந்த முயற்சியைச் செய்யுங்கள். நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றினீர்கள், அவர்கள் சென்றுவிட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. இப்போது 66 வருடங்கள் ஆகிவிட்டன. நீங்கள் சேவை செய்வதிலும் 50 வருட பூர்த்தியையும் கொண்டாடி விட்டீர்கள். இப்போது, சிவராத்திரியின் வைர விழாவைக் கொண்டாடுங்கள். இரண்டு வகையான ஆத்மாக்களையும் தயார் செய்யங்கள். பின்னர் முரசங்கள் அடிக்கப்படுகின்றனவா இல்லையா எனப் பாருங்கள். நீங்கள் முரசங்களை அடிக்க மாட்டீர்கள். நீங்கள் இறைவிகள், நீங்கள் காட்சிகளை அருளுவீர்கள். முரசங்களை அடித்து, நடைமுறையில், சிவசக்திகள் வந்தனர் என்ற பாடலைப் பாடுகின்றவர்களைத் தயார் செய்யுங்கள். சிவராத்திரியின் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டீர்களா? சொற்பொழிவுகளை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் முடித்துவிடாதீர்கள். அப்போது நீங்கள் எழுதுவீர்கள்: பாபா, 500000 பேர் வந்தார்கள். அவர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்தியைக் கொடுத்தீர்கள். ஆனால், இப்போது எத்தனை வாரிசுகளும் எத்தனை மைக்குகளும் வெளிப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகளை பாபாவிடம் கொடுங்கள். இதுவரை நீங்கள் செய்தவை அனைத்தும், நீங்கள் நிலத்தைத் தயார் செய்தீர்கள், செய்தியை வழங்கினீர்கள், அவை அனைத்தும் நன்றே என்று பாபா கூறுகிறார். அந்தச் சேவை வீணாகிப் போகவில்லை. அது சக்திவாய்ந்ததாகவே இருந்தது. பிரஜைகள் உருவாக்கப்பட்டனர். இராஜ குடும்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், அரசர்களும் அரசிகளும் தேவைப்படுகிறார்கள். சிம்மாசனத்தில் உள்ள அரசர்களும் அரசிகளும் அல்ல. அங்குள்ள சபையில், அரசன் அரசியுடன் கூடவே, அரசர்களுக்குச் சமமானவர்களும் இருப்பார்கள். அரச சபை அழகாகும் வகையில் இத்தகையவர்களையும் உருவாக்குங்கள். சிவராத்திரிக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டீர்களா? பாண்டவர்களே, நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் கவனமாகக் கேட்டீர்களா? ஓகே, சீனியர் மகாராத்திகள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அச்சா. பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி. இதுவும் இதயபூர்வமான அன்பேயாகும். ஏனென்றால், எப்போது வெளிப்படுத்துதல் நிகழும் என்ற எண்ணம் உங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. எப்போது வெளிப்படுத்துதல் நிகழும்? எனவே, பாப்தாதா தொடர்ந்து செவிமடுக்கிறார். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், எதைக் கேட்டீர்கள்? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், இதைக் கேட்டீர்களா? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள். மதுவனம், சாந்திவான், ஞான சரோவர் அனைத்தும் மதுவனவாசிகளே. அச்சா.

மதுவனத்தில் முரசங்கள் முழங்கும். எங்கே அவர்கள் அவற்றை அடிப்பார்கள்? (டெல்லியில்) மதுவனத்தில் இல்லையா? எல்லா இடங்களிலும் எனச் சொல்லுங்கள். அது ஓரிடத்தில் மட்டும் அடிக்கப்பட மாட்டாது. அவை மதுவனத்திலும் அடிக்கப்படும். அத்துடன் எல்லா இடங்களிலும் அடிக்கப்படும். அப்போது மட்டுமே கும்பகர்ணர்கள் விழித்தெழுவார்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் இதைக் கேட்டீர்களா? மிகவும் நல்லது. சேவை செய்யும்போது, நீங்கள் களைப்பற்ற முறையில் உங்களின் சேவை செய்யும் பாகங்களை நடிப்பதைப் போன்று, தொடர்ந்து உங்களின் மனங்களால் சேவை செய்யுங்கள். பௌதீகச் சேவை மட்டும் செய்யாதீர்கள். நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் சேவை செய்கிறீர்கள். ஆனால், இப்போது மேலும் அதிகமாகச் செய்யுங்கள். அச்சா. மதுவனத்தைச் சேர்ந்தவர்களை மறக்கவில்லை. பாப்தாதா மதுவனத்தில் வருகிறார், ஆனால் அவர் மதுவனத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை என மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், மதுவனம் சதா நினைவுசெய்யப்படுகிறது. மதுவனமே இல்லாவிட்டால், எல்லோரும் எங்கே வருவார்கள்? சேவாதாரிகளான நீங்கள் சேவை செய்யாவிட்டால், எப்படி எல்லோரும் இங்கே தங்கியிருந்து, உண்பார்கள்? ஆகவே, பாப்தாதாவும் மதுவனத்தைச் சேர்ந்தவர்களைத் தனது இதயபூர்வமாக நினைத்து, தனது இதயபூர்வமான ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார். பாபாவிற்கு ஆசிரியர்களிடம் அன்பு உள்ளது. பாபாவிற்கு மதுவனத்தின் மீது அன்புள்ளது, ஆசிரியர்களின் மீதும் அன்புள்ளது. பாபாவிற்கு இனிய தாய்மார்களிடமும் அன்புள்ளது. இத்துடன்கூடவே, பாபா மகாவீர் பாண்டவர்களின் மீதும் அன்பு வைத்திருக்கிறார். பாண்டவர்கள் இல்லாமல் சத்கதி பெற முடியாது. ஆகவே, நான்கு கர ரூபத்தின் மகத்தான புகழ் உள்ளது. பாண்டவர்களினதும் சக்திகளினதும் இணைந்த ரூபமே, நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணு ரூபமாகும்.

மதுவனத்தின் பாண்டவர்களான உங்களுக்கு இந்தப் போதை உள்ளதல்லவா? உங்களுக்குள் போதை உள்ளது. வேறு எதுவும் அன்றி, வெற்றியின் போதையே உள்ளது. நீங்கள் நல்லவர்கள். பாண்டவபவனின் பாண்டவர்கள் இல்லாவிட்டால் - பெரும்பாலானோர் பாண்டவர்களே – உங்களில் எவரும் மதுவனத்தில் உங்களை இரசிக்க மாட்டீர்கள். இதனாலேயே, உங்களை மகிழ்ச்சியாக இருக்க வைக்கும், உங்களுக்கு உணவு பரிமாறும், அத்துடன் உங்களைப் பறக்கச் செய்யும் மதுவனவாசிகளின் மகத்துவம் உள்ளது. இன்று, அமிர்தவேளையில் இருந்து பாப்தாதா மதுவனவாசிகளையே நினைவு செய்கிறார். நீங்கள் இங்கே இருந்தாலென்ன அல்லது மேலே அமர்ந்திருந்தாலென்ன அல்லது இங்கே கடமையில் ஈடுபட்டுள்ள மதுவனவாசிகளாக இருந்தாலென்ன, அமிர்த வேளையில் இருந்து எல்லா இடங்களிலும் உள்ள மதுவனவாசிகளுக்கும் பாப்தாதா நினைவுகளை வழங்குகிறார். அச்சா.

பாப்தாதா உங்களுக்கு வழங்கிய ஆன்மீக அப்பியாசத்தை நீங்கள் எத்தனை தடவைகள் செய்தீர்கள்? அதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்தது? அசரீரியும் தேவதையும். பாபாவும் தாதாவும். ஒரு கணம், அசரீரி ஆகுங்கள். அடுத்தகணம், தேவதை ரூபம் ஆகுங்கள். இரண்டிலும் சரீர உணர்வுகள் எவையும் இருக்காது. ஆகவே, நீங்கள் சரீர உணர்விற்கு அப்பால் செல்ல விரும்பினால், செயல்களைச் செய்யும்போதும் உங்களின் கடமையைச் செய்யும்போதும் ஒரு விநாடியில் இந்த ஆன்மீக அப்பியாசத்தைச் செய்யுங்கள். இது உங்களின் இயல்பான பயிற்சி ஆகவேண்டும். ஒருகணம், அசரீரி ஆகுங்கள். அடுத்தகணம், தேவதை ஆகுங்கள். அச்சா. (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்). நீங்கள் சதா இப்படியே இருப்பீர்களாக.

தந்தையின் நினைவில் திளைத்திருக்கும் எங்கும் உள்ள குழந்தைகளுக்கும், தந்தையைப் போல் ஆகுவதில் தமது இலட்சியத்திற்குச் சமமாகத் தமது தகைமைகளை ஆக்கிக் கொள்பவர்களுக்கும், உலகின் நான்கு மூலைகளிலும் அமர்ந்திருந்து, பகலோ அல்லது இரவோ எதுவாயினும் விழித்திருந்து, விஞ்ஞானத்தின் வசதிகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவும் இதயபூர்வமாக அன்பையும் நினைவுகளையும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார். இந்த வேளையில், எல்லோருடைய இதயமும் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையின் நினைவால் நிரம்பி உள்ளதென்பதை பாப்தாதா அறிவார். பாப்தாதா தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மூலையிலும் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவருடைய பெயருக்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். பாபா அவர்களின் பெயர்களின் மாலையை உச்சரிப்பாராக இருந்தால், முழு இரவும் கடந்து சென்று விடும். பாப்தாதா குழந்தைகள் எல்லோருக்கும் நினைவுகளை வழங்குகிறார். உங்களின் முயற்சிகளில் நீங்கள் என்ன இலக்கத்தில் இருந்தாலும், பாப்தாதா குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் சதா அன்பையும் நினைவுகளையும் வழங்கி, உங்களின் மேன்மையான சுயமரியாதைக்கேற்ப நமஸ்தே சொல்கிறார். அன்பையும் நினைவுகளையும் வழங்கும் வேளையில், பாப்தாதா எங்கும் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் தனக்கு முன்னால் வைத்திருக்கிறார். ஒவ்வொரு மூலையிலும், கிராமத்தில், நகரத்தில், இந்த நாட்டில் அல்லது வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவருக்கும் பாப்தாதா உங்களின் சுயமரியாதையை நினைவூட்டி, அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். உங்கள் எல்லோருக்கும் அன்பிற்கும் நினைவிற்குமான உரிமை உள்ளது. ஏனென்றால், நீங்கள் ‘பாபா’ என்று சொன்னவுடனேயே, உங்களுக்கு அன்பிற்கும் நினைவிற்குமான உரிமை உள்ளது. நீங்கள் எல்லோரும் சுயமரியாதை என்ற மாலையை அணிந்த வடிவத்தில் தனக்கு முன்னால் இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். தந்தைக்குச் சமமாக இருக்கும் உங்களின் சுயமரியாதையுடன் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

தாதிஜியிடம்: நீங்கள் இப்போது நன்றாக இருக்கிறீர்கள். இப்போது, உங்களுக்கு எந்தவித நோயும் இல்லை. அவை எல்லாம் போய்விட்டன. அவை தங்களை உங்களிடம் காட்டவே வந்தன. அதனால், அவை உங்களிடமும் வரும் என்பதை எல்லோருக்கும் காட்டின. எனவே, அது பெரியதொரு விடயம் அல்ல.

தாதிகள் எல்லோரும் மிக நல்ல பாகங்களை நடிக்கிறார்கள். எல்லோருடைய பாகத்தையும் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். (தாதி நிர்மல் சாந்தாவிடம் பேசுகிறார்): நீங்கள் ஓர் ஆதி இரத்தினம், அல்லவா? நீங்கள் ஓர் ஆதி இரத்தினம். அநாதியான ரூபத்தில், நீங்கள் அசரீரியான தந்தைக்கு நெருக்கமானவர். நீங்கள் சதா அவருடனேயே இருக்கிறீர்கள். ஆதி ரூபத்திலும், நீங்கள் அரச சபையில் ஒரு சகபாடி ஆவீர்கள். நீங்கள் அரச குடும்பத்தில் ஓர் அரச உறுப்பினர் ஆவீர்கள். அத்துடன், சங்கமயுகத்திலும் ஓர் ஆதி இரத்தினமாக இருக்கும் பாக்கியத்தையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். எனவே, இது மிகப் பெரிய பாக்கியம். உங்களிடம் இந்தப் பாக்கியம் உள்ளதல்லவா? உங்களின் பிரசன்னமே, எல்லோருக்கும் ஓர் ஆசீர்வாதம் ஆகும். நீங்கள் எதையும் சொன்னாலென்ன சொல்லாவிட்டாலென்ன, நீங்கள் எதையும் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன, உங்களின் பிரசன்னமே எல்லோருக்கும் ஓர் ஆசீர்வாதம் ஆகும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் இறைவனின் சகவாசத்தை அனுபவம் செய்வதன் மூலம் சதா உங்களின் லௌகீக மற்றும் அலௌகீக வாழ்க்கைகளில் பற்றற்றவராக இருந்து, பற்றை அழிப்பவர் ஆகுவீர்களாக.

சதா பற்றற்றவராக இருப்பதன் அடையாளம், இறையன்பை அனுபவம் செய்வதாகும். எந்தளவிற்கு உங்களிடம் அந்த அன்பு உள்ளதோ, அதற்கேற்ப நீங்கள் அவரின் சகவாசத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் பிரிந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் ஒன்றாக இருக்கும்போது அன்பு அனுபவம் செய்யப்படுகிறது. தந்தை உங்களுடன் இருப்பதனால், உங்களின் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்துவிட்டு, இலேசாகுங்கள். பற்றை அழிப்பவர் ஆகுவதற்கான ஒரேயொரு வழிமுறை இது மட்டுமே. எவ்வாறாயினும், முயற்சி என்ற பாடத்தில், சதா என்ற வார்த்தையைக் கீழ்க்கோடிடுங்கள். உங்களின் லௌகீக மற்றும் அலௌகீக வாழ்க்கைகளில் சதா பற்றற்றவராக இருங்கள். அப்போது நீங்கள் அவரின் சதா சகவாசத்தை அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
எந்தவொரு விகாரமென்ற பாம்பையும் உங்களின் படுக்கை ஆக்கிக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் ஓர் இலகு யோகி ஆகுவீர்கள்.