25.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சிறந்த மதிப்பெண்களுடன் சித்தியடைவதற்கு மாணவர்களாகிய நீங்கள் சுறுசுறுப்பானவர்களாகி ஏதாவது முயற்சி செய்யவேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சோம்பேறிகள் ஆகக்கூடாது. நாள் முழுவதும் தமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு செய்பவர்கள் சோம்பேறிகளாவர்.
கேள்வி:
சங்கம யுகத்தில் அதி பாக்கியசாலிகள் என்று கூறப்படுபவர்கள் யார்?பதில்:
தமது சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலம் அனைத்தையும் வெற்றிகரமானதாக ஆக்கிக்கொண்டவர்களும் இன்னமும் அவ்வாறு செய்து கொண்டிருப்பவர்களுமே அதி பாக்கியசாலிகள் என்று கூறப்படுகிறார்கள். மிகவும் உலோபிகளாக இருப்பவர்களின் பாக்கியத்தில் இது இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. விநாசம் தமக்கு முன்னால் உள்ளது என்பதையும் தாம் எதையாவது தகுதிவாய்ந்த முறையில் செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தை தமக்கு முன்னால் தனிப்பட்ட முறையில் வந்துள்ளார் என்பதைப் பாக்கியசாலிக் குழந்தைகள் புரிந்து கொள்வதால் அனைத்தையும் அவர்கள் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகின்றனர். தைரியசாலிகளாக இருப்பதன் மூலம் அவர்கள் ஏனைய பலரினதும் பாக்கியத்தை உருவாக்குவதற்கு கருவிகள் ஆகுகின்றார்கள்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறு வந்துள்ளேன்…ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களுடைய பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள். கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பேசுவதாக அந்த வாசகங்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும் பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய வாசகங்கள் என்று எதுவும் இருந்திருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணரே இலக்கும் இலட்சியமுமாகும். “நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றேன்” எனக் கடவுள் சிவன் கூறுகின்றார். ஆகையினால் நிச்சயமாக முதலில் ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசர் ஆக்கப்படுகின்றார். எனவே பேசுவதற்கு பகவான் கிருஷ்ணர் இருக்கவில்லை. குழந்தைகளாகிய உங்களுடைய இலக்கும் இலட்சியமும் கிருஷ்ணரே ஆகும். இது ஒரு பாடசாலை. கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகுவதற்காக உங்களுடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். இந்தப் பாடசாலையின் ஆசிரியர் ஸ்ரீகிருஷ்ணர் அன்றி சிவபாபாவே ஆவார். சிவபாபாவே தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்காகவே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பரமதந்தையாகிய பரமாத்மாவிடம் உங்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்காகவே வந்துள்ளீர்கள் என ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுவதே இந்தப் பாக்கியமாகும். இது இராஜயோகம். முதலில் சுவர்க்கத்தின் இரண்டு இலைகளான ராதையும் கிருஷ்ணரும் சிவபாபாவினால் வெளியாக்கப்படுகின்றனர். இந்தப் படம் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்கு சிறந்த படமாகும். கீதை ஞானத்தைக் கற்பதன் மூலம் நீங்கள் உங்கள் பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள். முன்னர் நீங்கள் விழித்தெழச்செய்த பாக்கியம் அனைத்தும் இப்பொழுது முடிவடைந்து விட்டது. நீங்கள் இப்பொழுது உங்களுடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியில் முற்றிலும் தமோபிரதான் ஏழைகள் ஆகிவிட்டீர்கள். ஆகையினால் நீங்கள் இப்பொழுது மீண்டும் இளவரசர்கள் ஆகவேண்டும். ராதையும் கிருஷ்ணருமே முதலில் இவ்வாறு ஆகியவர்கள். பின்னர் அவர்களுடைய வம்சம் தொடர்ந்தது. இது ஓர் இராச்சியம் மாத்திரமல்ல. ராதையும் கிருஷ்ணரும் திருமணம் செய்யும்பொழுது இலக்ஷ்மி, நராயணன் என பெயர் மாற்றப்படுகிறார்கள். ஒரு இளவரசன் ஆகுவதும் ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதும் இரண்டும் ஒரே விடயம் தான். இலக்ஷ்மி நாராயணன் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கம் சங்கமயுகத்திலேயே நிச்சயமாக ஸ்தாபிக்கப்படுகிறது. இதனாலேயே இந்தக் காலம் மங்களகரமான சங்கமயுகம் எனக் கூறப்படுகின்றது. அநாதியான தேவதர்ம ஸ்தாபனை இப்பொழுது இடம்பெறுகின்றது. பின்னர் ஏனைய அனைத்து மதங்களும் அழிக்கப்படும். சத்திய யுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. அதன் வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெற வேண்டும். இலக்ஷ்மி நாராயணன் ஆட்சி செய்த பரிஸ்தான் என்று அழைக்கப்படுகின்ற சுவர்க்கம் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்நேரத்தில் இந்த உலகம் மயான பூமியாக உள்ளது. காமச் சிதையில் அமர்ந்ததால் அனைவரும் எரிந்து கொண்டிருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் நீங்கள் மாளிகைகள் போன்றவற்றைக் கட்டுவீர்கள். நிலத்தின் கீழே இருந்து துவாரகா என்ற தங்க நகரமோ அல்லது லங்காவோ வெளிவரும் என்றில்லை. தங்க நகரம் வெளியாகலாம். ஆனால் லங்கா வெளியாக முடியாது. இராம இராச்சியம் தங்கயுகம் என்றும் கூறப்படுகின்றது. பாரதத்திலிருந்து நிஜத்தங்கம் அனைத்தும் சூறையாடப்பட்டது. பாரதம் எவ்வளவு செல்வம் நிறைந்ததாக இருந்தது என்று நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். அது இப்பொழுது ஏழ்மையாகி விட்டது. “ஏழ்மை” என்ற வார்த்தை அவ்வளவு மோசமானதல்ல. சத்திய யுகத்தில் ஒரே தர்மமே இருக்கும் என நீங்கள் விளங்கப்படுத்தலாம். வேறு எந்த மதங்களும் அங்கே இருக்கமாட்டாது. தேவர்கள் மாத்திரம்தான் அங்கே வாழ்ந்தார்களா, இது எவ்வாறு சாத்தியம் எனப் பலர் வினவுகின்றார்கள். பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. இருவருடைய அபிப்பிராயங்கள் ஒரே மாதிரி இல்லாதிருப்பதும் அற்புதமே. எத்தனை நடிகர்கள் இருக்கின்றார்கள்? சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. அதை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் இப்பொழுது சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சதா மலர்ச்சியாக இருப்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மிக மேன்மையான இலக்கையும் குறிக்கோளையும் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக, அதாவது சுவர்க்கவாசிகளாக ஆகுகின்றீர்கள். சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். இந்த விடயங்கள் அனைத்தையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஆனால் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கின்றாள். உங்களின் பாக்கியத்தில் இல்லை என்றால் நீங்கள் உங்களைச் சீர்திருத்திக் கொள்ள மாட்டீர்கள். அரைக் கல்பமாக பொய் பேசிய பழக்கத்தை அகற்றுவதற்கு சிலரால் முடியாமல் உள்ளது. அவர்கள் பொய்மையையும் ஒரு பொக்கிஷமாகக் கருதி தங்களுடன் கொண்டு செல்கின்றார்கள். அவர்கள் அதை விட்டுவிடாததால் அவர்களின் பாக்கியம் அவ்வளவுதான் என ஒருவர் புரிந்துகொள்ளலாம். அவர்கள் தந்தையையும் நினைவு செய்வதில்லை. நீங்கள் உங்களது பற்று முழுவதையும் அகற்றும்போதே உங்களால் அவரை நினைவு செய்ய முடியும். பின்னர் நீங்கள் முழு உலகிலும் விருப்பமின்மை கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்களது நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்தும் பார்க்காமல் இருப்பீர்கள். அவர்கள் அனைவரும் மயான பூமியான நரகத்தில் வசிக்கின்றார்கள் என நீங்கள் அறிவீர்கள். இவை அனைத்துமே அழியப்போகின்றன. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இதனாலேயே நாங்கள் அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்கின்றோம். நேற்று நாங்கள் சுவர்க்கத்தில் வசித்து ஆட்சி செய்தோம். பின்னர் நாங்கள் அந்த இராச்சியத்தை இழந்து இப்பொழுது மீண்டும் அதைக் கோரிக் கொள்கின்றோம். பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவ்வாறு வீழ்ந்து வணங்கினீர்கள், செய்கிறீர்கள் என்றும் எவ்வளவு பணத்தை வீணாக்கினீர்கள் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் தொடர்ந்தும் அழுது புலம்புகின்றார்கள். ஆனால் அவர்கள் எதையுமே பெறுவதில்லை. வந்து தங்களை சாந்தி தாமத்துக்கு அழைத்துச் செல்லுமாறு ஆத்மாக்கள் பாபாவை அழைக்கின்றார்கள். இறுதியில் அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்யும்போதே தந்தையை நினைவு செய்கின்றார்கள். இந்தப் பழைய உலகம் அழியப்போவதை நீங்கள் பார்க்கமுடியும். இப்பொழுது எங்களுடைய கடைசிப் பிறவியில் இந்த ஞானம் அனைத்தையும் நாங்கள் பெறுகின்றோம். நீங்கள் இந்த ஞானத்தை முழுமையாகக் கிரகிக்க வேண்டும். பூமியதிர்ச்சி போன்றவை சடுதியாக இடம்பெறும். பாகிஸ்தான் பிரிவினையின்போது பலர் மரணித்தார்கள். ஆரம்பத்திலிருந்து நிகழ்காலம்வரை அனைத்தையுமே குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இன்னமும் வர இருக்கின்றவற்றையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சோமநாதருக்கு ஒரு ஆலயம் மாத்திரம் தங்கத்தினால் கட்டப்பட்டிருக்க முடியாது. மற்றவர்களுக்கும் தங்கத்தினால் பல ஆலயங்கள் கட்டப்பட்டன, அத்துடன் தங்க மாளிகைகளும் இருந்தன. அவற்றிற்கு என்ன நடந்தது? அவையெல்லாம் எங்கே மறைந்துவிட்டன? பூமியதிர்ச்சி இடம்பெற்றபோது அவை அனைத்தும் நிலத்தின் கீழ் புதையுண்டு விட்டனவா? அவை மீண்டும் வெளியாக மாட்டாதா? அவை நிலத்திற்குள் உக்கிப் போய்விடுமா? என்ன நடக்கும்? நீங்கள் முன்னேறும்போது என்ன நடக்கும் என அறிந்து கொள்வீர்கள். தங்க நகரம் கீழே சென்றுவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. நாடகத்திற்கு ஏற்ப அது கீழே சென்றுவிட்டது என்றும் சக்கரம் சுழலும்போது அது மீண்டும் வெளியாகும் என்றும் இப்பொழுது நீங்கள் கூறுகின்றீர்கள். அவை மீண்டும் கட்டப்பட வேண்டும். உங்கள் மனதிலே இந்தச் சக்கரத்தை சுழற்றும்போது பெருமளவு சந்தோஷம் இருக்கவேண்டும். இந்தப் படத்தை உங்கள் சட்டைப்பையில் வைத்திருங்கள். இந்த பட்ஜும் நன்றாகச் சேவை செய்யக்கூடியது. ஆனால் எவருமே அதைக்கொண்டு அவ்வளவு சேவை செய்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் புகையிரதங்களில் பெருமளவு சேவை செய்யமுடியும். ஆனால் நீங்கள் எவருமே புகையிரதத்தில் இந்தளவு சேவை செய்தோம் என்று உங்களின் சேவையின் செய்தி பற்றி பாபாவுக்கு எழுதுவதில்லை. மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில்கூட உங்களால் நன்றாகச் சேவை செய்ய முடியும். ஒரு கல்பத்தின் முன்னர் இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டவர்களும் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறியவர்களுமே மீண்டும் இதனைப் புரிந்து கொள்வார்கள். மனிதர்கள் தேவர்களாக மாறினார்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. மனிதர்கள் கிறிஸ்தவர்களாகவோ அல்லது சீக்கியர்களாகவோ மாறினார்கள் என்று கூறப்படுவதில்லை. இல்லை! நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். அநாதியான தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதே இதன் அர்த்தம். ஏனைய அனைத்து மதத்தவரும் சென்று தமது சொந்தப் பகுதியில் ஓய்வெடுப்பார்கள். கல்ப விருட்சத்தின் படத்திலே ஒவ்வொரு மதமும் எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது என்பது காட்டப்பட்டுள்ளது. தேவர்கள் இந்துக்கள் ஆகினார்கள். பின்னர் சிலர் இந்துக்களிலிருந்து மற்றைய மதங்களுக்கு மாற்றப்பட்டார்கள். பலர் தங்களுடைய மேன்மையான தர்மத்தையும் கர்மத்தையும் (சமயமும் நடவடிக்கையும்) விட்டு மற்றைய மதங்களுக்குச் சென்று விட்டார்கள். அவர்கள் இறுதியில் மீண்டும் வந்து சிறிதளவு புரிந்துகொண்டு பிரஜைகள் ஆகுவார்கள். அனைவருமே தேவ தர்மத்துக்குச் செல்வார்கள் என்றில்லை. அவர்கள் அனைவரும் சென்று தங்களது சொந்தப் பகுதியில் இருப்பார்கள். இந்த விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளன. உலகிலுள்ள மக்கள் தொடர்ந்தும் என்ன செய்கின்றார்கள் என்று பாபா விளங்கப்படுத்துகிறார். அவர்கள் உணவுக்காகப் பல்வேறு ஆயத்தங்களைச் செய்கின்றார்கள். அவர்கள் பெரிய இயந்திரங்கள் போன்றவற்றையும் தயார் செய்கின்றார்கள். ஆனால் எதுவுமே இடம்பெறவில்லை. உலகம் தமோபிரதான் ஆகியுள்ளதுடன் நீங்களும் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளீர்கள். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை யாவும் தொடர்ந்தும் இடம்பெறும். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தற்பொழுது விஞ்ஞானிகள் அனைத்தையும் கற்கின்றனர். இன்னும் சில வருடங்களில் அவர்கள் திறமைசாலிகள் ஆகுவார்கள். அவர்கள் அங்கே மிகச் சிறந்த பொருட்களை உருவாக்குவார்கள். இந்த விஞ்ஞானம் அங்கே உங்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கும். இங்கே சிறிதளவு சந்தோஷமும் பெருமளவு துன்பமும் உள்ளன! விஞ்ஞானிகள் இந்தப் பொருட்களை உருவாக்கி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? முன்னர் மின்சாரமோ எரிவாயு போன்றவையோ இருக்கவில்லை. இப்பொழுது என்ன நடக்கின்றது எனப் பாருங்கள். அங்கு அனைத்துமே தயார் நிலையில் இருக்கும். அனைத்துமே மிக விரைவாகக் கட்டப்படும். இங்கும்கூட பாருங்கள், எவ்வளவு விரைவாகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அனைத்துமே ஆயத்தமாக உள்ளது. அவர்கள் பல மாடிகளைக் கட்டுகின்றார்கள். அங்கே இவ்வாறு இருக்கமாட்டாது. அங்கு ஒவ்வொருவருக்கும் பெருமளவு நிலம் இருக்கும். அங்கு வரி போன்றவை இருக்கமாட்டாது. அங்கே நிறைந்த செல்வமும் அத்துடன் நிலப்பரப்பும் இருக்கும். அங்கு பல ஆறுகள் இருக்கும். ஆனால் கால்வாய்கள் இருக்கமாட்டாது. அவை பின்னரே வெட்டப்படும். குழந்தைகளாகிய நீங்கள் உள்ளே பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இரட்டை என்ஜினைப் பெற்றுள்ளீர்கள். ஒரு புகையிரதம் மலையில் ஏறும்போது அதற்கு இரட்டை என்ஜின் கொடுக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய ஒத்துழைப்பு எனும் விரலைக் கொடுக்கின்றீர்கள். அங்கே உங்களில் வெகு சிலரே இருப்பீர்கள். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள் எனப் புகழப்படுகின்றீர்கள் என நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்துக்கு ஏற்ப சேவை செய்கின்றீர்கள். பாபாவும் உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளார். அவர் ஏனைய அனைத்து மதங்களையும் அழித்து ஒரே தர்மத்தை ஸ்தாபிக்கிறார். நீங்கள் சிறிது முன்னேறும் பொழுது பல குழப்பங்களைக் காண்பீர்கள். யுத்தம் ஆரம்பமாகி குண்டுகள் போடப்படும் என்று பெருமளவு பயம் இப்பொழுதும்கூட இருக்கின்றது. பல சிறுசிறு பொறிகளின் சமிக்கைகள் தெரியும். அவர்கள் தொடர்ந்தும் ஒருவர் மற்றவருடன் சண்டை இடுவார்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட்டு, அதன் பின்னர் நாங்கள் எங்களின் வீட்டிற்குத் திரும்பிச் செல்வோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களுடைய 84 பிறவிகளுக்கான சக்கரம் முடிவுக்கு வருகின்றது. நாங்கள் அனைவரும் ஒன்றாக வீடு திரும்புவோம். உங்களில் மிகச் சிலரே நினைவில் இருக்கின்றீர்கள். நாடகத்திற்கேற்ப சுறுசுறுப்பானவர்கள், சோம்பேறிகள் என இரண்டு விதமான மாணவர்கள் இருக்கின்றார்கள். சுறுசுறுப்பானவர்கள் சிறந்த மதிப்பெண்களுடன் சித்தி எய்துவார்கள். ஆனால் சோம்பேறிகள் முழுநாளும் தொடர்ந்து சண்டை இடுவார்கள். அவர்கள் தந்தையை நினைவு செய்யக்கூட மாட்டார்கள். அவர்கள் முழுநாளும் தங்களது நண்பர்களையும் உறவினர்களையுமே நினைவு செய்வார்கள். நீங்கள் இங்கே அனைத்தையும் மறந்துவிட வேண்டும். நான் ஓர் ஆத்மா. இந்த உடலாகிய வால் எனக்குப் பின்னால் தொங்குகின்றது. நாங்கள் எங்களது கர்மாதீத நிலையை அடையும்போது இந்த வாலை விட்டுவிடுவோம். எங்களுடைய கர்மாதீத நிலையை அடைவதிலும் இந்த சரீரத்தை விட்டுவிடுவதிலுமே நாங்கள் கவனஞ் செலுத்த வேண்டும். நாங்கள் அழுக்கானவர்களில் இருந்து அழகானவர்கள் ஆகவேண்டும். ஆகையினால் நாங்கள் முயற்சி செய்யவேண்டும். ஒரு கண்காட்சிக்கு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது என்று பாருங்கள். மகேந்திரா (போபாலைச் சேர்ந்தவர்) எவ்வளவு தைரியத்தைக் கொண்டிருந்தார் எனக் காட்டினார். அவர் தைரியமாகப் பல கண்காட்சிகளைச் சொந்தமாக நடத்தினார். அவர் நிச்சயமாக அவரது முயற்சியின் பலனைப் பெறுவார். ஒரு தனிநபர் அவ்வாறான அற்புதத்தைச் செய்து காட்டினார். அவர் பலருக்கு நன்மை செய்தார். அவர் நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் பெருமளவு செய்தார். இது ஓர் அற்புதமே. அவர் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அவர்களுடைய பணம் போன்றவற்றை இந்தச் சேவைக்குப் பயன்படுத்துமாறும் இல்லாவிடின் அவர்கள் அதனை வைத்திருந்து என்ன செய்யமுடியும் என்றும் கேட்டார். அவருக்கு ஒரு நிலையத்தைத் திறப்பதற்கான தைரியம் இருந்தது. எனவே பலரும் தமது பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இவ்வாறான ஐந்து அல்லது ஏழு பேர் வெளியாகினால் பெருமளவு சேவை செய்து முடிக்கப்படலாம். சிலர் மிகவும் உலோபிகளாக இருக்கின்றார்கள். இதில் இருந்து அவர்களின் பாக்கியத்தில் இது இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. விநாசம் அவர்களுக்கு முன்னால் நிற்கின்றது என்றும் அவர்கள் எதையாவது செய்ய வேண்டும் என்றும் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது கடவுளின் பெயரால் தானம் செய்யும் மக்கள் அதிலிருந்து எதையுமே பெறமாட்டார்கள். கடவுள் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பதற்காக இப்பொழுது வந்துள்ளார். பணத்தைத் தானம் செய்பவர்கள் எதையுமே பெறமாட்டார்கள். தங்களுடைய சரீரம், மனம், செல்வம் என்பவற்றை இந்தச் சங்கமயுகத்தில் தகுதியான முறையில் பயன்படுத்தியவர்களும் இன்னமும் அதைச் செய்து கொண்டிருப்பவர்களுமே பாக்கியசாலிகள் ஆவர். எவ்வாறாயினும் இது அவர்களின் பாக்கியத்தில் இல்லையெனில் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அந்த பிராமணர்களும் இருக்கின்றார்கள், நீங்களும்கூட பிராமணர்களே என்பதை அறிவீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். அந்த பிராமணர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் கருப்பையின் மூலம் பிறந்தவர்கள். ஆனால் நீங்களோ வாய்வழித் தோன்றல்கள். சிவனின் பிறப்பு சங்கம யுகத்திலேயே இடம்பெறுகின்றது. தந்தை உங்களுக்கு சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கான மந்திரத்தைக் கொடுக்கின்றார்: மன்மனாபவ! தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகி தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். அவ்வாறான அட்டைகளைத் திறமையான முறையில் அச்சிடுங்கள். உலகில் பலர் மரணிப்பார்கள். எங்காவது ஒருவர் மரணிக்கும்போது இந்த அட்டைகளை நீங்கள் அங்கே விநியோகிக்கலாம். தந்தை வரும்போது இப்பழைய உலகம் அழிக்கப்படும். பின்னர் சுவர்க்க வாயில் திறக்கப்படும். எவராவது சந்தோஷ உலகிற்குச் செல்ல விரும்பினால் “மன்மனாபவ” என்ற மந்திரம் உள்ளது. நீங்கள் அனைவரும் அவ்வாறான ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அட்டைகளை வைத்திருக்க வேண்டும். நீங்கள் மயானங்களிலும் அவற்றை விநியோகம் செய்யலாம். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். சேவை செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. இதை மிகத்தெளிவாக எழுதுங்கள். உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் மிகத் தெளிவாக உள்ளது. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய கர்மாதீத் ஸ்திதியை அடைவதற்கு, உங்களுடைய சரீரம் என்ற ரூபத்தில் உள்ள உங்களுடைய வாலை மறந்துவிடுங்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எவரையும் நினைவு செய்யாதீர்கள். தந்தை ஒருவரை நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.2. ஸ்ரீமத்துக்கு ஏற்ப கடவுளின் உதவியாளர்களாகி உங்களுடைய சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி, உங்களுடைய மேன்மையான பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
கர்ம வேதனையின் வடிவத்தில் இருக்கும் சூழ்நிலைகளின் ஈர்ப்புகள் அனைத்தையும் முடித்து பற்றை முற்றாக அழிப்பவர் ஆகுவீர்களாக.இப்போதும் சடப்பொருளால் உருவாக்கப்படும் சூழ்நிலைகள் உங்களின் ஸ்திதியை ஓரளவுக்கே தங்களை நோக்கி இழுக்கின்றன. மிகப்பெரும் ஈர்ப்பு உங்களின் சரீரத்தின் கர்மக்கணக்கும் உங்களின் எஞ்சியுள்ள கர்ம வேதனையின் ரூபத்தில் வருகின்ற சூழ்நிலைகளும் ஆகும். இது உங்களை ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பு முடிவடையும் போது உங்களை முற்றிலும் பற்றை வென்றவர் என்று அழைக்க முடியும். உங்களின் சரீரம் அல்லது பௌதீக உலகின் எந்தவொரு சூழ்நிலையும் உங்களின் ஸ்திதியை அசைக்க முடியாது. இதுவே முழுமை ஸ்திதி ஆகும். நீங்கள் இத்தகைய ஸ்திதியை அடையும்போது இலகுவாக உங்களால் ஒரு விநாடியில் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற உங்களின் ரூபத்தில் ஸ்திரமாக முடியும்.
சுலோகம்:
அதிமேன்மையான உண்மையான நாராயணன் ஆகுவதற்கான சத்தியமே, தூய்மைக்கான சத்தியம் ஆகும். இதில் அதீந்திரிய சுகம் அமிழ்ந்துள்ளது.சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உங்களின் மனதால் சேவை செய்வது என்பது எல்லையற்ற சேவை செய்வதாகும். உங்களின் மனதாலும் வார்த்தைகளாலும் சேவை செய்யும் அளவிற்கு மற்றவர்களும் இயல்பாகவே மாதிரியைப் பார்த்துக் கவரப்படுவார்கள். எந்தவொரு பௌதீகச் செயல்களைச் செய்யும்போதும் உங்களின் மனதால் அதிர்வலைகளைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள். உதாரணமாக, வர்த்தகர் ஒருவர் தனது கனவுகளிலும் தனது வியாபாரத்தையே காண்பார். உலகிற்கு நன்மை செய்யும் உங்களின் பணியும் அப்படிப்பட்டதே. இதுவே உங்களின் தொழில். இந்தத் தொழிலை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலம் இந்தச் சேவை செய்வதில் சதா உங்களை மும்முரமாக வைத்திருங்கள்.