25.03.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் குழந்தைகளாகிய நீங்களே அதிபதிகள் ஆவீர்கள். நீங்கள் தந்தையிடம் அடைக்கலம் பெறவில்லை. ஒரு குழந்தை ஒருபொழுதும் தனது தந்தையிடம் அடைக்கலம் பெறுவதில்லை.

கேள்வி:
மாயை உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு, நீங்கள் சதா கடைய வேண்டிய விடயம் என்ன?

பதில்:
நீங்கள் தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள். அவர் அசரீரியானவர். ஆயினும், அவர் எங்கள் பாபாவும், எங்கள் ஆசிரியரும், எங்கள் சற்குருவும் ஆவார். அசரீரியான தந்தையே அசரீரியான ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இவ் விடயத்தைச் சதா கடைந்தால், உங்கள் சந்தோஷத்தின் கலைகள் உயரும், மாயையினால் உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்த முடியாது.

ஓம் சாந்தி.
தானே திரிமூர்த்தி தந்தை என்று திரிமூர்த்தி தந்தையே, குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அனைவரதும் தந்தையே மூவரையும் படைப்பவர், ஏனெனில் அந்தத் தந்தை மாத்திரமே அதிமேலானவர். நீங்கள் அவரது குழந்தைகள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. தந்தை பரந்தாமத்தில் வசிப்பதைப் போன்றே ஆத்மாக்களாகிய நீங்களும் பரந்தாமத்திலேயே வசிக்கிறீர்கள். இதுவே நாடகம் என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். நாடகத்தில் எது நடந்தாலும், அது ஒருமுறை மாத்திரமே நடக்கின்றது. தந்தையும் எங்களுக்குக் கற்பிப்பதற்கு ஒருமுறை மாத்திரமே வருகின்றார். நீங்கள் அடைக்கலம் பெறுவதில்லை. ‘நான் உங்களிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்’ என்ற வார்த்தைகள் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். ஒரு குழந்தை என்றாவது தனது தந்தையிடம் அடைக்கலம் புக முடியுமா? குழந்தைகள் அதிபதிகள் ஆவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் அடைக்கலம் பெறவில்லை. தந்தை உங்களைத் தனக்குரியவர் ஆக்கியுள்ளார், அத்துடன் குழந்தைகளும் தந்தையைத் தங்களுக்கு உரியவர் ஆக்கியுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ பாபா, வாருங்கள்! வந்து, எங்களை எங்கள் வீட்டிற்குத் திரும்பி அழைத்துச் செல்லுங்கள். அதாவது, எங்களுக்கு இராச்சியத்தைக் கொடுங்கள். ஒன்று அமைதி தாமம், மற்றையது சந்தோஷ தாமம். சந்தோஷ தாமம் தந்தையின் சொத்தாகும். துன்ப உலகம் இராவணனின் சொத்தாகும். ஐந்து விகாரங்களிடம் சிக்கிக் கொள்வதால், துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் அசரீரியானவர். ஆயினும், அவர் தந்தையும் ஆசிரியரும் ஆவார். அசரீரியான ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிப்பவரும் அசரீரியானவரே. அவர் ஆத்மாக்களின் தந்தையாவார். நீங்கள் இவ்விடயத்தைச் சதா கடைந்தால், உங்கள் சந்தோஷ பாதரசம் உயரும். நீங்கள் இதனை மறக்கும் பொழுது மாத்திரமே, மாயை உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகின்றாள். நீங்கள் தந்தையுடன் அமரும் போது, தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்கின்றீர்கள். புத்தியில் இலக்கும் இலட்சியமும் உள்ளன. நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை நினைவு செய்வது மிகவும் இலகுவானது, ஆனால் சிவபாபாவை நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. நீங்கள் உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவர் ஸ்ரீ கிருஷ்ணராக இருந்தால், குறிப்பாக, ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற குழந்தை வேண்டும் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற கணவர் வேண்டும் என்று நினைக்கின்ற தாய்மார்கள் உட்பட அனைவரும் உடனடியாகத் தங்களை அவருக்கு அர்ப்பணிப்பார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நான் வந்துள்ளதால், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற குழந்தையையோ அல்லது ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற கணவரையோ பெறுவீர்கள். அதாவது, அவரைப் போன்று, தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவரும், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவருமாகிய, தெய்வீகக் குணங்கள் உடையவரை நீங்கள் காண்பீர்கள். சுவர்க்கத்தில், அதாவது, கிருஷ்ணதாமத்தில் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கிருஷ்ண தாமத்திற்குச் செல்வதற்காகவே நீங்கள் இங்கே கற்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைவருமே சுவர்க்கத்தை நினைவு செய்கின்றார்கள். ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்றே மக்கள் கூறுகின்றார்கள். ஆகையால் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவ்வாறாயின், அவர் நரகத்தை விட்டுச் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்ற உண்மைக்குக் கரகோஷம் இடவேண்டும். அது நல்லதே. இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று ஒருவர் கூறுவாராயின், அவரிடம் கேளுங்கள்: அவர் எங்கிருந்து சென்றார்? அவர் நிச்சயமாக நரகத்தில் இருந்தே சென்றிருக்க வேண்டும். ஆகையால் அது பெரும் சந்தோஷத்திற்குரிய விடயமாகும். எனவே நீங்கள் அனைவரையும் அழைத்து தோளி வழங்க வேண்டும். எவ்வாறாயினும், இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அவர் 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தில் இருப்பார் என்று அவர்கள் கூற மாட்டார்கள். அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று மாத்திரமே அவர்கள் கூறுகிறார்கள். நல்லது, அவ்வாறாயின், அந்த ஆத்மாவை அவர்கள் ஏன் மீண்டும் இங்கே வரவழைக்கின்றார்கள்? அவருக்கு ஏன் நரகத்தின் உணவை ஊட்ட வேண்டும்? அவரை நீங்கள் மீண்டும் நரகத்திற்கு அழைக்கக்கூடாது. தந்தை இங்கமர்ந்திருந்து இந்த ஞான விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். வந்து உங்களைத் தூய்மை ஆக்குமாறு நீங்கள் தந்தையை அழைப்பதால், தூய்மையற்ற சரீரங்கள் அனைத்தும் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். அனைவரும் மரணிக்கும் பொழுது, யார் மற்றவர்களுக்காக அழுவார்கள்? நீங்கள் உங்கள் சரீரங்களை நீக்கி விட்டு, உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல இருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது எவ்வாறு உங்கள் சரீரத்தை நீக்குவது என்பதைப் பயிற்சி செய்கின்றீர்கள். அத்தகைய முயற்சியைச் செய்கின்ற வேறு எவரேனும் இருப்பார்களா? இது உங்கள் பழைய சரீரம் எனற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கொண்டிருக்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு பழைய சப்பாத்தைக் கடனாகப் பெறுகின்றேன். நாடகத்தில், இந்த இரதமே கருவியாகி உள்ளார். இதனை மாற்ற முடியாது. இதனை நீங்கள் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் காண்பீர்கள். நீங்கள் நாடகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். தந்தையைத் தவிர வேறு எவருக்கும் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கான சக்தி இல்லை. இந்தப் பாடசாலை மிகவும் அற்புதமானது. ‘நாங்கள் இறைவர், இறைவிகள் ஆகுவதற்கு, கடவுளின் பாடசாலைக்குச் செல்கின்றோம்’ என வயோதிபர்கள் கூடக் கூறுகின்றார்கள். ஒருபொழுதும் வயதான பெண்மணிகள் பாடசாலைகளில் கற்பதற்குச் செல்வதில்லை. நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்று எவரும் உங்களிடம் வினவினால் அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இராஜயோகத்தைக் கற்கின்ற, கடவுளின் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றோம். அவர்கள் வியப்படையும் வகையில் அத்தகைய வார்த்தைகளை அவர்களிடம் கூறுங்கள். வயோதிபர்கள் கூட, தாங்கள் கடவுளின் பாடசாலைக்குச் செல்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள். இங்கு, கடவுளுடன் கற்பதற்கு நாங்கள் வருவது ஓர் அற்புதமே. வேறு எவராலும் இதனைக் கூற முடியாது. அப்பொழுது அவர்கள் கேட்பார்கள்: எங்கிருந்து அசரீரியான தந்தை வருகின்றார்? கடவுள் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றே அவர்கள் எண்ணுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது இந்தப் புரிந்துணர்வுடனேயே பேசுகின்றீர்கள். உங்களுக்கு இப்பொழுது ஒவ்வொரு விக்கிரகத்தின் தொழிலும் தெரியும். அதிமேலானவர் சிவபாபா என்றும், நாங்கள் அவரது குழந்தைகள் என்பதும் உங்கள் புத்தியில் உறுதியாக உள்ளது. நல்லது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகவாசிகள் என்று நீங்கள் கூற வேண்டும் என்பதற்காகக் கூறுவதில்லை. பிரம்மாவினூடாக எவ்வாறு ஸ்தாபனை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை நீங்கள் இதயபூர்வமாக அறிந்துள்ளீர்கள். உங்களைத் தவிர, வேறு எவராலும், சரிதத்தைக் கூற முடியாது. தமது சொந்தச் சரிதத்தைக் கூட அவர்கள் அறியாமல் உள்ளார்கள். எனவே, வேறு ஒருவரின் சரிதத்தை அவர்களால் எவ்வாறு உங்களுக்குக் கூற முடியும்? இப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தெரியும். தந்தை கூறுகிறார்: நான் எனக்குத் தெரிந்தவை அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். தந்தையைத் தவிர, வேறு எவராலும், இராச்சியத்தைக் கொடுக்க முடியாது. இலக்ஷ்மியும், நாராயணனும் யுத்தம் மூலம் இராச்சியத்தைப் பெறவில்லை. அங்கு யுத்தம் எதுவுமில்லை. ஆனால் இங்கு மக்கள் தொடர்ந்தும் பெருமளவு சண்டை இடுகிறார்கள். ஏராளமான மக்கள் உள்ளனர். தாதாவின் மூலமாக நீங்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பது உங்கள் இதயத்தில் புக வேண்டும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவர் எவரில் பிரவேசிக்கின்றாரோ, அவரையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும் என்று அவர் கூறுவதில்லை. இல்லை. அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். அந்தச் சந்நியாசிகள் தங்கள் பெயரிட்ட புகைப்படங்களைக் கொடுக்கின்றார்கள். உங்களால் எவ்வாறு சிவபாபாவின் புகைப்படத்தை எடுக்க முடியும்? ஒரு புள்ளியின் மேல் எவ்வாறு பெயரை எழுத முடியும்? புள்ளியின் மேல் “சிவபாபா” என்று எழுதினால், மேலே எழுதப்படுகின்ற பெயர் பெரியதாக இருக்கும். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆகவே, குழந்தைகளே, சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையிட்டு நீங்கள் மிகவும் சந்தோஷம் அடைய வேண்டும். ஆத்மாக்களே கற்கின்றார்கள், ஆத்மாக்களே சம்ஸ்காரங்களையும் எடுத்துச் செல்கின்றார்கள். பாபா இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களை இந்தச் சம்ஸ்காரங்களினால் நிரப்புகின்றார். அவர் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். உங்களுக்குத் தந்தை கற்பிப்பவற்றை நீங்கள் பிறருக்குக் கற்பிக்க வேண்டும். உலகச் சக்கரத்தை நினைவு செய்வதுடன், பிறர் அதனை நினைவு செய்யவும் அவர்களைத் தூண்டுங்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குத் தன்னிடமுள்ள தெய்வீகக் குணங்களைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவேன். நான் உங்களையும் அவ்வாறு ஆக்குகின்றேன். நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் நீங்கள் எவருக்கும் ஒருபொழுதும் துன்பத்தைக் கொடுக்கக்கூடாது. இந்த இனிய விடயங்களை அனைவரது காதுகளுக்குள்ளும் கூறுங்கள்: சிவபாபாவை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். பாபா வந்திருக்கிறார் என்றும், இந்த ஆஸ்தியை அவர்கள் அவரிடமிருந்து பெற வேண்டும் என்ற செய்தியை நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். இறுதியில் இது செய்தித் தாள்களிலும் அச்சடிக்கப்படும். இறுதியில், அனைவரும் கூறுவார்கள் என உங்களுக்குத் தெரியும்: ஓ கடவுளே! உங்கள் அற்புதமான விளையாட்டுக்கள் தனித்துவமானவை. நீங்கள் மாத்திரமே எங்களுக்குச் சற்கதியை அருள்கின்றீர்கள். நீங்கள் அனைவரையும் துன்பத்தில் இருந்து விடுதலை செய்து, அவர்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். இதுவும் மந்திரவித்தை ஆகும். அவர்களின் மந்திர வித்தைகள் குறுகிய காலத்திற்கானவை. அவர் உங்களை 21 பிறவிகளுக்கு மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். நீங்கள் “மன்மனாபவ” என்ற மந்திரத்தினால் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றீர்கள். மந்திரவாதி, நகைவியாபாரி போன்ற அத்தகைய பெயர்கள் அனைத்தும் சிவபாபாவிற்கே உரியதாகும், பிரம்மா பாபாவிற்கு அல்ல. பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய நீங்கள் அனைவரும் கற்கின்றீர்கள். நீங்கள் கற்று, பின்னர் பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். தந்தை தானாகவே அனைவருக்கும் கற்பிப்பதில்லை. தந்தை ஒன்றாக உங்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றார், பின்னர் நீங்கள் மற்றவர்களுக்கும் கற்பிக்கிறீர்கள். தந்தை இராஜயோகம் கற்பிக்கின்றார். தந்தை மாத்திரமே படைப்பவர், ஸ்ரீகிருஷ்ணர் ஒரு படைப்பு ஆவார். நீங்கள் படைப்பவரிடம் இருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள், படைப்பிடமிருந்து அல்ல. நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவதில்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் விஷ்ணுவின் இரு வடிவங்கள் ஆவார்கள். அவர்களின் குழந்தைப் பருவத்தில் அவர்கள் இராதையும் கிருஷ்ணரும் ஆவார்கள். இவ் விடயங்களை மிகவும் உறுதியாக நினைவு செய்யுங்கள். வயோதிப ஆண்கள் விரைவாக முன்னேறிச் சென்றால் அவர்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும், ஆனால் வயோதிபப் பெண்களுக்கு இன்னமும் சற்று பற்று உள்ளது: அவர்கள் தங்கள் சொந்தப் படைப்பின் வலையில் சிக்கி உள்ளார்கள். அவர்கள் பலரையும் நினைவு செய்கின்றார்கள். அவர்கள் அனைவரிடத்தில் இருந்தும் தங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டித்து, ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் அதை இணைத்துக் கொள்வதில் மாத்திரமே முயற்சி உள்ளது. நீங்கள் மரணித்து வாழ வேண்டும். அம்பு ஒருமுறை புத்தியின் இலக்கைத் தாக்கினால் போதும், அவ்வளவுதான்! இருப்பினும் நீங்கள் மிகவும் சாதுரியத்துடன் தொடர வேண்டும். நீங்கள் எவருடனும் பேசாமல் இருக்க வேண்டும் என்றல்ல. நீங்கள் உங்கள் இல்லறத்தில் இருக்கலாம். நீங்கள் அனைவருடன் பேசலாம். நீங்கள் அவர்களுடன் ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்கலாம். தந்தை கூறுகின்றார்: புண்ணியம் வீட்டில் ஆரம்பம் ஆகின்றது. நீங்கள் அவர்களுடன் ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்கா விட்டால், அவர்களை எவ்வாறு ஈடேற்ற முடியும்? நீங்கள் இரு பகுதியினரின் பொறுப்புக்களையும் பூர்த்திசெய்ய வேண்டும். சிலர் பாபாவிடம் வினவுகின்றார்கள்: நான் திருமணத்திற்குச் செல்லலாமா? பாபா கூறுகின்றார்: ஏன் செல்லக்கூடாது? தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரியாகும். நீங்கள் அதனை வெற்றி கொண்டால், பின்னர் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். சத்திய யுகத்தில் அவர்கள் அனைவரும் விகாரம் அற்றவர்கள். படைப்பு யோக சக்தியினால் இடம்பெறுகின்றது. தந்தை கூறுகின்றார்: விகாரமற்றவர் ஆகுங்கள். நீங்கள் சிவபாபாவுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதையும், அவர் உங்களுக்கு 84 பிறவிகளின் கதையைக் கூறுகின்றார் என்பதையும் முதலில் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழலுகின்றது. அனைத்துக்கும் முதலில், தேவர்கள் வருகின்றார்கள். அவர்கள் சதோபிரதானாக உள்ளார்கள். பின்னர் அவர்கள் மறு பிறவிகள் எடுக்கும்போது, தமோபிரதான் ஆகுகின்றார்கள். உலகம் பழையதாகவும், தூய்மை அற்றதாகவும் ஆகுகின்றது. ஆத்மாக்களும் தூய்மை அற்றவர்களே. இந்த உலகிற்குரிய எதிலும் சக்தி இருப்பதில்லை. சத்தியயுகத்தின் மலர்களுக்கும் பழங்களுக்கும், இங்கே உள்ளவற்றிற்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. அங்கே ஒருபொழுதுமே புளிப்பான அல்லது பழைய பொருட்கள் இருக்க மாட்டாது. நீங்கள் அவ் விடத்தின் காட்சிகளைக் காண்கின்றீர்கள். அங்குள்ள மலர்களையும், பழங்களையும் இங்கு எடுத்து வருவதற்கு உங்கள் இதயம் விரும்புகின்றது. ஆனால் நீங்கள் திரும்பி வரும் போது, அவை மறைந்து விடுகின்றன. இக் காட்சிகளை அருள்வதால், தந்தை குழந்தைகளுக்குக் களிப்பூட்டுகின்றார். அந்த ஆன்மீகத் தந்தையே உங்களுக்குக் கற்பிப்பவர். ஆத்மாவே கற்கின்றார், சரீரமல்ல. தந்தையிடம் இருந்து தனது ஆஸ்தியைப் பெற்று, தான் உலக அதிபதி ஆகுகின்றேன் என்ற தூய பெருமையை ஆத்மா கொண்டுள்ளார். நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஆனால் நீங்கள் அனைவருமே இலக்ஷ்மியும் நாராயணனும் என அழைக்கப்படுவதில்லை. ஆத்மாக்களே ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். தந்தையைத் தவிர, வேறு எவராலும், உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. இது ஒரு பல்கலைக்கழகம். இங்கே இளையவர்கள், முதிர்ச்சி அடைந்தோர், முதியவர்கள் அனைவரும் கற்கின்றார்கள். அத்தகைய ஒரு கல்லூரியை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கின்றீர்களா? அவர்கள் சட்டத்தரணிகளாகவோ அல்லது வைத்தியர்களாகவோ ஆகுகின்றார்கள். ஆனால் இங்கோ, நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். பாபா உங்கள் ஆசிரியரும், சற்குரு என்பதையும், அத்துடன் அவர் உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர் உங்கள் கல்விக்கு ஏற்ப, நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் சென்று உங்கள் அந்தஸ்தைக் கோருவீர்கள். தந்தை உங்களின் சத்தியயுகத்தை என்றுமே பார்ப்பதில்லை. சிவபாபா வினவுகின்றார்: நான் சத்திய யுகத்தைப் பார்க்கின்றேனா? அது ஒரு சரீரத்தின் மூலமே பார்க்கப்பட வேண்டும். ஆனால், அவருக்கென ஒரு சரீரம் இல்லை. எனவே அவரால் எப்படிப் பார்க்க முடியும்? அவர் இங்கே குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். அத்துடன் முழு உலகமும் பழையதாகி உள்ளதையும் அவர் பார்க்கின்றார். ஒரு சரீரம் இல்லாத போது அவரால் எதனையும் பார்க்க முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையற்ற உலகில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசித்து, உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். நான் சுவர்க்கத்தைப் பார்ப்பதும் இல்லை. நான் இன்னொருவரின் சரீரத்தின் மூலம் இரகசியமாக அதைப் பார்க்க முடியும் என்றில்லை, இல்லை. அது எனது பாகத்திலும் இல்லை. நீங்கள் பல புதிய விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். எனவே நீங்கள் உங்கள் இதயத்தில் இப்பழைய உலகின் மீது பற்று வைக்கக்கூடாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்தளவிற்குத் தூய்மையானவர் ஆகுகின்றீர்களோ, அதற்கேற்ப நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். இவை அனைத்தும் நினைவு யாத்திரை என்ற விளையாட்டாகும். மக்கள் ஒரு யாத்திரை செல்லும் பொழுது தூய்மையாக இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் வீடு திரும்பும்பொழுது, மீண்டும் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் உள்ளது. நீங்கள் சுவர்க்கம் என்ற உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடம் இருந்து கோருகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். 63 பிறவிகளாக உங்கள் மீது துரு படிந்துள்ளது, அதனை இப்பிறவியில் நீங்கள் அகற்ற வேண்டும். வேறு எந்தச் சிரமமும் இல்லை. நஞ்சை அருந்துவதற்கு உங்களுக்கு உள்ள பசியை நீங்கள் துறக்க வேண்டும். நீங்கள் அதனைப் பற்றி சிந்திக்கவும் கூடாது. தந்தை கூறுகின்றார்: அந்த விகாரங்களின் மூலம் நீங்கள் பல பிறவிகளுக்குச் சந்தோஷம் அற்றிருந்தீர்கள். அவருக்குக் குமாரிகள் மீது அதிகளவு கருணை உள்ளது. சினிமா பார்க்கச் செல்வதன் மூலம் அனைவரும் தீயவர்கள் ஆகுகின்றார்கள். இதன் மூலமே அவர்கள் நரகத்திற்குச் செல்கின்றார்கள். ‘நீங்கள் ஒரு சினிமாப் படத்தைப் பார்த்தால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் செல்வதைப் பார்த்து, மேலும் பலர் அவற்றைப் பார்க்க ஆரம்பிப்பார்கள்’ எனச் சிலருக்கு பாபா கூறுகின்றார். இதனாலேயே நீங்கள் அவற்றைப் பார்க்கச் செல்லக்கூடாது. இவர் பகீரதன் (பாக்கிய இரதம்) ஆவார். நாடகத்தில், இவரே தனது இரதத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கருவி ஆகியுள்ள பாக்கிய இரதம் ஆவார். பாபா இவருக்குள் பிரவேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவரே ஹுசைனின் குதிரை ஆவார். அவர் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். தந்தையே அழகானவர் ஆவார், அவரே இந்த இரதத்தைப் பெற்றுள்ளார். நாடகத்தில் அவரது பாகம் அத்தகையதாகும். இப்பொழுது அவலட்சணம் ஆகியுள்ள ஆத்மாக்கள் சத்தியயுகத்திற்கு உரியவர்கள் ஆக்கப்பட வேண்டும். தந்தையா அல்லது நாடகமா சர்வசக்திவான்? நாடகமேயாகும். பின்னர் அதற்குள் நடிக்கின்ற நடிகர்களில் யார் சர்வசக்திவான்? சிவபாபா, அடுத்ததாக இராவணன் ஆவான். அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியமும், அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளன. சில குழந்தைகள் தாங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறந்து விடுவதாகக் கூறித் தந்தைக்கு எழுதுகின்றார்கள். அவர்கள் சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஓ! நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். ஆகவே நீங்கள் ஏன் சந்தோஷம் அற்றவர்கள் ஆகவேண்டும்? நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். பாபாவினால் வெறுமனே உங்களுக்கு அவ்வாறு ஒரு திலகம் இட முடியுமா? நீங்கள் ஞானத்தின் மூலமும், யோகத்தின் மூலமும் சுய இராச்சியம் என்ற திலகத்தை உங்களுக்கு இடுவதற்கு உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்க வேண்டும். தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் உங்களுக்கே ஒரு திலகம் இடுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். சிவபாபா உங்களது இனிய தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அவர் எங்களையும் மிகவும் இனிமையானவர் ஆக்குகின்றார். நீங்கள் நிச்சயமாக ஸ்ரீ கிருஷ்ண தாமத்திற்குச் செல்வீர்கள் என்பதை அறிவீர்கள். பாரதம் 5000 வருடங்களுக்கு ஒருமுறை சுவர்க்கம் ஆகுகின்றது. பின்னர் அது நரகம் ஆகுகின்றது. செல்வந்தர்களுக்கு இது சுவர்க்கம் என்றும், ஏழைகள் நரகத்தில் உள்ளார்கள் என்று மக்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அது அவ்வாறில்லை. இது நரகமேயாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சினிமாவே நரகத்திற்குச் செல்வதற்கான வழியாகும்; எனவே நீங்கள் சினிமாப் படங்கள் பார்க்கக்கூடாது. நினைவு யாத்திரை செல்வதனால், நீங்கள் தூய்மையானவராகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும். உங்கள் இதயத்தில் இப் பழைய உலகின் மீது பற்று வைக்காதீர்கள்.

2. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களினால் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். அனைவரது காதுகளிலும் நீங்கள் இனிமையான விடயங்களையே கூற வேண்டும். தந்தையை நினைவு செய்யுமாறு அனைவருக்கும் நினைவூட்டுங்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் மாத்திரமே உங்கள் புத்தியின் யோகத்தை இணைக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் விழிப்புணர்வு என்ற ஆளியைப் போட்டு, உங்களின் அன்பான புத்தியால் ஒரு விநாடியில் சரீரமற்ற ஸ்திதியை அடைவீர்களாக.

எங்கே கடவுளின் அன்பு இருக்கிறதோ, அங்கே சரீரமற்றவர் ஆகுவது ஒரு விநாடிக்குரிய விளையாட்டாகும். ஒளியைக் கொண்டு வந்த உடனேயே இருள் விலகிவிடுகிறது. அதேபோல், நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டவராகி, உங்களின் விழிப்புணர்வு என்ற ஆளியைப் போடும்போது, சரீரம் மற்றும் பௌதீக உலகத்தின் விழிப்புணர்வு என்ற ஆளி நிறுத்தப்பட்டு விடுகிறது. இது ஒரு விநாடிக்குரிய விளையாட்டு. உங்களின் வாயால் ‘பாபா, பாபா’ எனச் சொல்வதற்கு நேரம் எடுக்கும். ஆனால், பாபாவை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வருவதற்கு நேரமே எடுக்காது. ‘பாபா’ என்ற வார்த்தை ஆத்ம உணர்வு என்ற குண்டாகும், இதனைக் கொண்டே நீங்கள் பழைய உலகை மறக்கிறீர்கள்.

சுலோகம்:
சரீர உணர்வெனும் சேற்றுக்கு அப்பாற்பட்டிருக்கின்ற போது நீங்கள் ஒளியாகவும் இலேசாகவும் (டபிள் லைற்) தேவதை ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மையை வேறுபிரித்தல் என்றால், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகளில் தெய்வீகத்தன்மையை அனுபவம் செய்வதாகும். சிலர் கூறுவார்கள்: நான் எப்போதும் சத்தியமே பேசுவேன். ஆனால், அவர்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் தெய்வீகத்தன்மை எதுவும் இல்லாவிட்டால், அவர்களின் சத்தியத்தில் எந்தவிதமான உண்மையையும் மற்றவர்கள் உணர மாட்டார்கள். ஆகவே, சத்தியத்தின் சக்தியால் தெய்வீகத்தன்மையைக் கிரகியுங்கள். நீங்கள் எதைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் பயப்படாதீர்கள். காலத்திற்கேற்ப சத்தியம் இயல்பாகவே வெளிப்படுத்தப்படும்.