25.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, குட்டிக்கரண விளையாட்டை நினைவு செய்யுங்கள். முழுச் சக்கரத்தினதும், பிரம்மாவினதும், பிராமணர்களினதும் இரகசியம் இவ்விளையாட்டினுள் அமிழ்ந்துள்ளது.
பாடல்:
சங்கமயுகத்தில், குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தந்தையிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள்?பதில்:
இறை புத்தி ஆகும். கடவுள் தன்னிடமுள்ள தெய்வீகக் குணங்களை எங்களுக்கு ஆஸ்தியாக வழங்குகின்றார். எங்களுடைய புத்தி வைரத்தைப் போன்று தெய்வீகமானதாகின்றது. இப்பொழுது நாங்கள் பிராமணர்களாகி, தந்தையிடமிருந்து மாபெரும் பொக்கிஷத்தைக் கோரிக் கொள்கின்றோம். நாங்கள் எங்களுடைய புத்தியை சகல தெய்வீகக் குணங்களாலும் நிரப்பிக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி.
இன்று நல்ல சகுனங்களைக் கொண்ட தினமாகிய சற்குருவார் தினமாகும். சில தினங்களும் அதி மேன்மையானவை. சற்குருவார் தினம் அதிமேலானது எனக் கூறப்படுகிறது. நல்ல சகுனங்களைக் கொண்ட, விருட்சாபதியின் தினத்தன்றே குழந்தைகள் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் சேர்க்கப்படுகிறார்கள். தந்தையே இந்த மனித உலக விருட்சத்தின் விதையும், அமரத்துவ ரூபமானவரும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அமரத்துவ ரூபமான தந்தையின் அமரத்துவ ரூபமான குழந்தைகள். இது மிக இலகுவானது! நினைவிலேயே சிரமம் உள்ளது. நினைவின் மூலமாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், நீங்கள் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்றதும் அழிவற்றதுமான சகுனங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எல்லைக்குட்பட்ட சகுனங்களும், எல்லையற்ற சகுனங்களும் உள்ளன. தந்தை விருட்சத்தின் பிரபு (விருட்சாபதி) ஆவார். பிராமணர்களே விருட்சத்தில் முதலாவதாகத் தோன்றுபவர்கள். தந்தை கூறுகிறார்: விருட்சாபதியாகிய நானே சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவேன். அவரது புகழ் பாடப்படுகிறது: அவரே அமைதிக்கடலும், ஞானக்கடலும் ஆவார். சத்தியயுகத்தில் சகல தேவர்களும் தூய்மைக் கடலாகவும், அமைதிக்கடலாகவும் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதம் சந்தோஷக் கடலாகவும், அமைதிக்கடலாகவும், தூய்மைக்கடலாகவும் இருந்தது. இதுவே உலகில் அமைதி நிலவுதல் எனப்படுகின்றது. நீங்கள் பிராமணர்கள். உண்மையில், நீங்களும் அமரத்துவ ரூபங்களே. ஒவ்வொரு ஆத்மாவும் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். இவையனைத்தும் உயிருள்ள, அமரத்துவ சிம்மாசனங்களாகும். நட்சத்திரம் என அழைக்கப்படுகின்ற, அமரத்துவ ரூபமான ஆத்மா நெற்றியின் மத்தியில் அமர்ந்திருக்கின்றார். விருட்சபதியாக உள்ளவர் ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுவதால், அவர் நிச்சயமாக வந்தாக வேண்டும். பிரஜாபிதாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகிய பிராமணர்களே முதலில் தேவைப்படுகின்றனர். எனவே, மம்மாவும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குட்டிக்கரணமடிப்பதைப் போன்றே, அதன் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சிவபாபாவே விதையாவார், அதன் பின்னர் பிரம்மா உள்ளார். பிராமணர்கள் பிரம்மா மூலமாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நேரத்தில் நீங்கள் பிராமணர்கள் என்றும், பின்னர் தேவர்களாகுவீர்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். முதலில் நாங்கள் சூத்திர புத்தியைக் கொண்டிருந்தோம். தந்தையே எங்களை இப்பொழுது மீண்டும் ஒரு முறை அதி உன்னதமான புத்தியைக் கொண்டவர்களாக்குகின்றார். அவர் எங்களது புத்தியை வைரத்தைப் போன்று தெய்வீகமானதாக்குகின்றார். அவர் குட்டிக்கரணத்தின் இரகசியங்களையும் உங்களுக்குக் கூறுகின்றார். சிவபாபாவும், பிரஜாபிதா பிரம்மாவும் உள்ளனர், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றனர். நீங்கள் இப்பொழுது மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்டவர்கள் ஆகியுள்ளீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் தேவர்களாகுவீர்கள். இப்பொழுது நீங்கள் இறை புத்தியைக் கொண்டவர்களாகுகின்றீர்கள். அதாவது, நீங்கள் கடவுளிடமுள்ள தெய்வீகக் குணங்களை உங்களுடைய ஆஸ்தியாகப் பெறுகின்றீர்கள். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, இதனை மறந்துவிடாதீர்கள். தந்தை ஞானக்கடலாவார். அவர் முதலாம் இலக்கத்தவர். அவர் உங்களுக்கு ஞானத்தைப் பேசுகின்ற கடவுளாகிய ஞானேஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் ஞானத்தின் மூலமாக சற்கதியை பெறுகின்றீர்கள். அவர் ஞானத்தின் மூலமாகவும், யோகத்தின் மூலமாகவும் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. ஏனெனில், இதன் மூலமாகவே கலியுகம் சத்திய யுகமாக மாறியது. இரு வகையான யோகம் உள்ளது என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடையது ஹத்தயோகமும், இது இராஜயோகமும் ஆகும். அது எல்லைக்குட்பட்டது, இதுவோ எல்லையற்றது. அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள், நீங்களோ எல்லையற்ற சந்நியாசிகள். அவர்கள் தங்களது வீட்டையும், குடும்பத்தையும் துறக்கின்றார்கள், நீங்களோ முழு உலகையுமே துறக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாவீர்கள். இது சிறிய, புதிய விருட்சமாகும். நீங்கள் பழையதிலிருந்து புதியதாகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நாற்று நாட்டப்படுகின்றது. நாங்கள் உண்மையிலேயே குட்டிக்கரணமடிக்கின்றோம். பிராமணர்களாகிய நாங்கள் பின்னர் தேவர்களாகுவோம். நீங்கள் வெறுமனே “ஹம்” (நாங்கள்) என்ற வார்த்தையை மாத்திரமன்றி, “சோ” (அவ்வாறு ஆகவேண்டும்) என்ற வார்த்தையையும் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும். நாங்கள் (ஹம் சோ) சூத்திரர்களாக இருந்தோம். இப்பொழுது பிராமணர்களாகியுள்ளோம். இக்குட்டிக்கரணத்தை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இது மிக இலகுவானது. நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றோம், எவ்வாறு ஏணியில் கீழிறங்குகின்றோம், பின்னர் எவ்வாறு பிராமணர்களாகி மேலேறுகின்றோம் போன்றவற்றை சிறு குழந்தைகளால்கூட விளங்கப்படுத்த முடியும். நாங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாகுகின்றோம். பிராமணர்கள் இப்பொழுது பெரும் பொக்கிஷங்களைப் பெறுகின்றார்கள். அவர்கள் தங்களது புத்தியை நிரப்புகின்றார்கள். சங்கரர் ஞானக்கடல் என அழைக்கப்படுவதில்லை. அவர் எவரது புத்தியையும் நிரப்புவதில்லை. ஓவியர்கள் வெறுமனே அப்படத்திற்கு வர்ணம் தீட்டியுள்ளார்கள். அது சங்கரரைக் குறிப்பதில்லை. விஷ்ணுவும், பிரம்மாவும் இவ்விடத்திற்குரியவர்கள். அவர்கள் இலக்ஷ்மியையும், நாராயணனையும் தம்பதிகளாக உச்சியில் காட்டியிருக்கின்றார்கள். இது பிரம்மாவின் இறுதிப் பிறவியாகும். முதலில் அவர் விஷ்ணுவாக இருந்து, பின்னர் 84 பிறவிகளை எடுத்து பிரம்மா ஆகினார். நான் அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டேன். நான் அனைவரது பெயர்களையும் மாற்றினேன். காரணம், அவர்கள் துறவு கொண்டிருந்தனர். நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகியபோது, உங்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டன. தந்தை உங்களுக்கு மிகவும் களிப்பூட்டத்தக்க பெயர்களைக் கொடுத்தார். விருட்சபதி இந்த இரதத்தில் அமர்ந்திருக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது பார்த்து, புரிந்துகொள்ளலாம். இது அவரது அமரத்துவ சிம்மாசனமும், இவரது அமரத்துவ சிம்மாசனமும் ஆகும். அவர் இச்சிம்மாசனத்தைக் கடனாக எடுக்கின்றார். அவர் தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பெறுவதில்லை. அவர் கூறுகின்றார்: நான் இந்த இரதத்திற்குள் பிரவேசித்து, உங்களுக்கு எனது அறிமுகத்தைக் கொடுக்கின்றேன். நான் உங்களது தந்தை, எனினும் உங்களைப் போன்று பிறப்பு இறப்புச் சக்கரத்திற்குள் வருவதில்லை. நான் இச்சக்கரத்திற்குள் வந்துவிட்டால், உங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக்குவது யார்? உங்களை அவ்வாறு ஆக்குவதற்கு ஒருவர் தேவைப்படுகின்றார். இதனாலேயே எனது பாகம் அவ்வாறு அமைந்திருக்கின்றது. நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆத்மாக்கள் துன்பத்திலுள்ளதால், அசரீரியான சிவபாபாவைக் கூவியழைக்கின்றனர். குறிப்பாக பாரத மக்களின் ஆத்மாக்கள் என்னைக்
கூவியழைக்கின்றனர். வந்து, தூய்மையற்றிருக்கும் எங்களைத் தூய்மையாக்குங்கள். சத்தியயுகத்தில் நீங்கள் மிகவும் தூய்மையாகவும், சந்தோஷமாகவும் இருந்தீர்கள். நீங்கள் ஒருபோதுமே கூவியழைத்ததில்லை. தந்தையே கூறுகின்றார்: நான் உங்களைச் சந்தோஷமானவர்களாக்கிவிட்டு, பின்னர் ஓய்வு ஸ்திதிக்குச் சென்று அமர்ந்துகொள்கின்றேன். அங்கு (சத்தியயுகத்தில்) நான் தேவைப்பட மாட்டேன். பக்தி மார்க்கத்தில் எனக்குப் பாகம் உள்ளது, பின்னர் அரைக்கல்பத்திற்கு எனக்குப் பாகம் கிடையாது. இது மிக இலகுவானது. இதனையிட்டு எவரும் வினா எழுப்ப முடியாது. துன்ப காலத்திலேயே அனைவரும் கடவுளை நினைவு செய்வதாக நினைவு கூரப்படுகின்றது. சத்திய, திரேதா யுகங்களில் பக்தி மார்க்கம் கிடையாது. நீங்கள் அதை ஞான மார்க்கம் என்றும்கூட அழைக்கமாட்டீர்கள். நீங்கள் சங்கமயுகத்திலேயே ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அதன் மூலமாக 21 பிறவிகளுக்கு ஒரு வெகுமதியைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகவே சித்தியெய்துகின்றீர்கள். சிலர் தோல்வியும் அடைகின்றார்கள். உங்களுடைய யுத்தம் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தந்தை பிரவேசிக்கின்ற இரதம் (பிரம்மா) வெற்றியடைவதையும், பின்னர் குமார்கா போன்ற விஷேட, அதியன்பிற்கினிய குழந்தைகளும் வெற்றியடைவார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர்கள் ஏனைய பலரையும் தங்களைப் போன்று ஆக்குகின்றார்கள். எனவே, இது ஒரு குட்டிக்கரணம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்களது புத்தியில் வைத்திருக்க வேண்டும். சிறு குழந்தைகளால்கூட இதனைப் புரிந்துகொள்ள முடியும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: இதனைக் குழந்தைகளுக்கும் கற்பியுங்கள். அவர்களுக்கும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கின்றது. அது அவர்களுக்கு மிகையாக இருக்காது. சிறிதளவு ஞானத்தை அறிந்துகொண்டாலும், அது ஒருபோதுமே அழிக்கப்பட மாட்டாது. அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். கிறிஸ்து ஸ்தாபித்த கிறிஸ்தவ மதம் அத்தகையதோர் பெரிய சமயமாகும். தேவ தர்மம் அதை விடவும் பெரியது. அது ஆரம்பத்தில் இருந்தது. அது இரு யுகங்களுக்கு நீடித்தது. எனவே, அதன் சனத்தொகையும் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும். எனினும், அவர்கள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொண்டார்கள். பின்னர், 330 மில்லியன் தேவர்கள் இருப்பதாக, அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின், அவர்கள் ஏன் தங்களை இந்துக்கள் என அழைக்கின்றனர்? மாயை அவர்களது புத்தியை முற்றிலும் அழித்துவிட்டாள். அதனால் அவர்களது நிலைமை இவ்வாறு ஆகிவிட்டது. தந்தை கூறுகின்றார்: மாயையை வெற்றி கொள்வது சிரமமானதல்ல. நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் மாயையை வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் ஒரு சேனையாவீர்கள். இராவணனாகிய ஐந்து விகாரங்களையும் வெற்றிகொள்ள உதவுகின்ற தந்தையை நீங்கள் கண்டுவிட்டீர்கள். உங்கள்மீது இப்பொழுது வியாழ திசை உள்ளது. பாரதத்தின்மீது சகுனங்கள் உள்ளன. இப்பொழுது இராகுவின் சகுனங்கள் உள்ளன. விருட்சபதியாகிய தந்தை வருவதால், நிச்சயமாக பாரதத்தின்மீது வியாழ திசை இருக்கும். அனைத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நீங்கள் நோய்களிலிருந்து விடுபட்ட சரீரத்தைப் பெறுவீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு மரணம் என்பதற்கான கேள்வியே கிடையாது. அது அமரத்துவ பூமியாகும். இன்னார் இன்னார் மரணித்துவிட்டார் என நீங்கள் கூறமாட்டீர்கள். அங்கு மரணம் என்பதே கிடையாது. நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுப்பீர்கள். சரீரமொன்றை எடுப்பதிலும், நீக்குவதிலும் சந்தோஷமே உள்ளது. துன்பம் என்பதே கிடையாது. இப்பொழுது வியாழ திசை உங்கள்மீது உள்ளது. அனைவர்மீதும் வியாழ திசை இருக்க முடியாது. ஒரு பாடசாலையில், சிலர் சித்தியெய்துகின்றார்கள், சிலர் தோல்வியடைகின்றார்கள். இதுவும் ஒரு பாடசாலையாகும். நீங்கள் இராஜயோகம் கற்பதாகக் கூறுகின்றீர்கள், அவ்வாறாயின் அதை உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? எல்லையற்ற தந்தையே ஆவார். எனவே, நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில் வேறு எதுவுமே கிடையாது. தூய்மையே பிரதான விடயமாகும். எழுதப்பட்டுள்ளது: ஓ குழந்தாய்! உங்களது சரீரத்தையும், சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இவை கீதையின் வாசகங்களாகும். கீதை அத்தியாயம் நடிக்கப்படுகின்றது. இதிலும்கூட, மக்கள் அனைத்திலும் குழப்பமடைந்த நிலையிலுள்ளார்கள். அது ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பு இருப்பதைப் போன்றதாகும். அது குழந்தைகளால்கூட புரிந்துகொள்ளக்கூடிய மிக இலகுவான விடயமாகும். அவ்வாறிருந்தும், நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? பக்தி மார்க்கத்திலும் நீங்கள் கூறுவதுண்டு: பாபா, நீங்கள் வரும்போது நான் வேறு எவருக்குமன்றி, உங்களுக்கேயுரியவனாக இருப்பேன். நான் உங்களுக்குரியவனாக இருந்து, உங்களிடமிருந்து முழு ஆஸ்தியையும் கோரிக்கொள்வேன். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்வதற்காக அவருக்குரியவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தத்தெடுக்கப்படும்போது, தந்தையிடமிருந்து எதைப் பெறுவீர்கள் என்பதை அறிந்து கொள்கின்றீர்கள். நீங்களும் தத்தெடுக்கப்பட்டவர்களேயாவீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியாகிய உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் வேறு எதன் மீதும் பற்றைக் கொண்டிருக்கமாட்டீர்கள். உதாரணமாக, ஒருவருக்கு லௌகீகத் தந்தை இருந்தால், அவரிடமிருந்து அவர் எதைப் பெற்றுக்கொள்வார்? அநேகமாக அவர் நூறு முதல் நூற்றைம்பதாயிரம் வரை கொண்டிருப்பார். இந்த எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியை வழங்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அரைக்கல்பமாகப் பொய்யான கதைகளையே செவிமடுத்து வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து சத்தியக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். எனவே, அத்தகைய தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் கவனத்துடன் அவர் கூறுவதைச் செவிமடுக்க வேண்டும். “ஹம் சோ” (நான் எவ்வாறிருந்தேனோ அவ்வாறு ஆகுகின்றேன்) என்பதன் அர்த்தத்தையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாவே பரமாத்மா என அவர்கள் கூறுகின்றனர். 84 பிறவிகளின் கதையை வேறு எவராலுமே உங்களுக்குக் கூறமுடியாது. தந்தையை பூனையிலும், நாயிலும், அனைத்திலும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் தந்தையை அவதூறு செய்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பாபா எவரையும் குற்றஞ் சாட்டுவதில்லை. நாடகம் அவ்வாறே உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஞானத்தின் மூலமாக உங்களை தேவர்களாக்குபவரை நீங்கள் அவதூறு செய்ய ஆரம்பித்தீர்கள். இவ்வாறாக நீங்கள் குட்டிக்கரணமடிக்கின்றீர்கள். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். நான் வந்து, மீண்டும் ஒரு தடவை உங்களை ஈடேற்றுகின்றேன். அது உங்களது தவறல்ல என்பதை நான் அறிவேன்;. இது ஒரு விளையாட்டாகும். நான் உங்களுக்குக் கதையை விளங்கப்படுத்துகின்றேன். இது சத்தியக்கதையாகும். இதன் மூலமாக நீங்கள் தேவர்களாகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பின்னர் பல கதைகளை உருவாக்கியுள்ளனர். அவர்களிடம் இலக்கு, குறிக்கோள் எதுவும் கிடையாது. அவையனைத்தும் விழுவதற்கேயாகும். அப்பாடசாலைகளில், அவர்கள் கல்வியை வழங்குகின்றார்கள். எனினும், நீங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான இலக்கையே அங்கு கொண்டிருந்தீர்கள். பண்டிதர்கள் அமர்ந்திருந்து, தங்களது சரீரங்களின் ஜீவனோபாயத்திற்கான கதைகளையே கூறுகின்றனர். மக்கள் அவர்களின் முன்னிலையில் பணத்தை வைத்தாலும், அவர்கள் பேறுகள் எதனையும் பெறுவதில்லை. இப்பொழுது நீங்கள் ஞானஇரத்தினங்களைப் பெறுகின்றீர்கள். அதன் மூலமாக புதிய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கு, நீங்கள் அனைத்தையும் புதிதாகவே பெறுவீர்கள். புதிய உலகில் அனைத்தும் புதிதாகவே இருக்கும். இரத்தினங்கள், வைரங்கள் போன்ற அனைத்தும் புதிதாகவே இருக்கும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஏனைய அனைத்தையும் மறந்து குட்டிக்கரணத்தை நினைவு செய்யுங்கள். பக்கிரிகளும் யாத்திரையின்போது குட்டிக்கரணமடிப்பார்கள். சிலர் இப்போதும் காலால் நடந்து செல்கின்றார்கள். இப்பொழுது அவர்களிடம் மோட்டார் வாகனங்களும், விமானங்களும்கூட இருக்கின்றன. ஏழைகளால் அவ்வாறு செல்ல முடியாது. அதிகளவு நம்பிக்கை கொண்டவர்கள் காலால் நடந்து செல்கின்றார்கள். விஞ்ஞானத்தின் மூலமாக நாளுக்கு நாள் பெருமளவு சௌகரியங்களை நீங்கள் பெறுகின்றீர்கள். அது தற்காலிக சந்தோஷமேயாகும். விமானமொன்று நொருங்கும்போது, அது பெருமளவு சேதத்தை விளைவிக்கின்றது. அப்பொருட்களால் தற்காலிக சந்தோஷம் ஏற்படுகின்றது. எனினும், இறுதியில் அதனால் மரணமே சம்பவிக்கின்றது. அது விஞ்ஞானம், உங்களுடையதோ மௌனம் ஆகும். தந்தையை நினைவு செய்வதால் உங்கள் நோய்கள் அனைத்தும் குணமாகுவதுடன், நீங்கள் நோய்களிலிருந்து விடுபட்டவர் ஆகுவீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் என்றும் ஆரோக்கியமானவராக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இந்த 84 பிறவிகளின் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. தந்தை ஒரேயொரு தடவையே வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் என்னை அவதூறு செய்தீர்கள். உங்களையே அறைந்து கொண்டீர்கள். என்னை அவதூறு செய்ததால் நீங்கள் சூத்திர புத்தியைக் கொண்டவர்களாகி விட்டீர்கள். சீக்கியர்கள் கூறுகின்றனர்: பிரபுவை நினைவு செய்தால், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். அதாவது, மன்மனாபவ ஆகுங்கள். இரு வார்த்தைகளே உள்ளன. ஆனால் பெருமளவில் உங்கள் தலைகளை மோதிக்கொள்ள வேண்டியதில்லை. தந்தை வந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். பிரபுவை நினைவு செய்வதால் நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அவர் அதற்கான பாதையையும் உங்களுக்குக் காட்டுகின்றார். மக்களுக்குச் சரியான பாதை தெரியாது. ஒவ்வொரு கணமும் என்னை நினைவு செய்து, சந்தோஷத்தைப் பெறுங்கள். உண்மையில், சத்தியயுகத்தில் நோய்கள், துன்பம் போன்றன கிடையாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது பொதுவான விடயமாகும். அது சத்தியயுகம் எனப்படுகின்றது, இதுவோ கலியுகம் எனப்படுகின்றது. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. விளக்கம் மிகவும் சிறந்தது. இது ஒரு குட்டிக்கரணமாகும். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள், பின்னர் நீங்கள் தேவர்களாகுவீர்கள். இவ்விடயங்களை நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள். நீங்கள் குட்டிக்கரணத்தை நினைவு செய்தால், இந்த ஞானம் முழுவதையுமே நினைவு செய்வீர்கள். நீங்கள் இரவில் நித்திரைக்குச் செல்லும் முன்னர் தந்தையை இவ்விதமாக நினைவு செய்ய வேண்டும். அதன் பின்னரும் நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களை மறந்துவிடுகின்றேன்! மாயை மீண்டும் மீண்டும் உங்களை மறக்கச் செய்கின்றாள். இது மாயையுடனான உங்களது யுத்தமாகும். பின்னர் அரைக்கல்பத்திற்கு நீங்கள் அவளை ஆட்சி செய்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு இலகுவான விடயங்களையே கூறுகின்றார். இது இலகு ஞானம், இலகு நினைவு எனப்படுகின்றது. தந்தையை நினைவு செய்யுங்கள். வேறு எந்தச் சிரமத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார்? பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு சிரமங்களைக் கடந்துவந்தீர்கள். ஒரு காட்சியைப் பெறுவதற்காக மக்கள் தங்களுடைய கழுத்தைக்கூட வெட்டுவதற்குத் தயாராக இருந்தனர். அவர்கள் காசியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். ஆம். தங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டு, அதனைச் செய்பவர்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டுவிடும். பின் அவர்களுடைய கர்மக் கணக்கு புதிதாக ஆரம்பிக்கும். எவ்வாறாயினும், அவர்கள் என்னிடம் வரமாட்டார்கள். என்னை நினைவு செய்வதன் மூலமாகவே பாவங்கள் அழிக்கப்படுமேயன்றி, தற்கொலை செய்வதன் மூலம் அல்ல. என்னிடம் எவரும் வருவதில்லை. இது மிக இலகுவானது. வயதானவர்களும் அத்துடன் இளையவர்களும்கூட இந்தக் குட்டிக் கரணத்தை நினைவு செய்ய வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக குழந்தைகளுக்கு நமஸ்தே சொலகிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. விருட்சாபதியான தந்தையிடமிருந்து, சந்தோஷம், அமைதி மற்றும் செழிப்பு எனும் ஆஸ்தியைக் கோருவதற்கு, உங்களை அமரத்துவ ரூபமான ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியை தெய்வீகமானதாக்குங்கள்.2. தந்தையிடமிருந்து சத்தியக் கதையைச் செவிமடுத்து, அதனை ஏனையோருக்கும் கூறுங்கள். மாயையை வென்றவர்களாகுவதற்கு, மற்றவர்களை உங்களுக்குச் சமமானவர்களாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்களே வெற்றியாளர்கள் என்பதும், தந்தை உங்களுடனேயே இருக்கின்றார் என்பதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்கட்டும்.
ஆசீர்வாதம்:
பலவீனமாக இருப்பதில் இருந்து பலசாலியாகுவதன் மூலம் சாத்தியமற்றதை சாத்தியமாக்குகின்ற ஒரு தைரியசாலி ஆத்மா ஆகுவீர்களாக."குழந்தை தைரியசாலியாக இருக்கும் போது தந்தை உதவுகிறார்" என்ற ஆசீர்வாதத்தின் அடிப்படையில், நீங்கள் நிச்சயமாக தூய்மை ஆகுவீர்கள் என்ற திடசங்கற்பத்தையே நீங்கள் முதலில் கொண்டிருந்தீர்கள். தந்தை உங்களுக்கு பலமில்லியன் மடங்கு உதவியை வழங்கினார். அவர் கூறினார்: ஆத்மாக்களாகிய நீங்கள் ஆதியாகவும் அநாதியாகவும் தூய்மையாக இருந்தீர்கள். நீங்கள் பல தடவைகள் அவ்வாறு ஆகியுள்ளீர்கள். தொடர்ந்தும் அவ்வாறு ஆகுகிறீர்கள். முன்னர் பல தடவைகள் என்பதன் விழிப்புணர்வின் மூலம் நீங்கள் சக்திசாலிகள் ஆகியிருக்கிறீர்கள். பலவீனமாக இருந்த நீங்கள் பலசாலிகள் ஆகி, மக்களிடம் சவால் விட்டு கூறுகிறீர்கள், உலகை நாங்கள் நிச்சயமாக தூய்மை ஆக்குவோம், அதனை அனைவருக்கும் செய்தும் காட்டுகிறீர்கள். இல்லறத்தின் வாழ்ந்து கொண்டு தூய்மையாக இருப்பது கடினம் என ரிஷிகள், முனிவர்கள், மகாத்மாக்களும் கருதுகிறார்கள். நீங்களோ அது மிகமிக இலகுவாகும் எனக் கூறுகிறீர்கள்.
சுலோகம்:
சத்தியம் செய்வது திடசங்கற்பம் கொள்வதாகும். உண்மையான பக்தர்கள் தமது சத்தியத்தை ஒருபோதும் மீறமாட்டார்கள்.