25.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் ஒரு கணப் பார்வையைப் பெறுவதன் மூலம், முழு உலகிலுமுள்ள மனிதர்களால் அப்பால் செல்ல முடிகிறது. இதனாலேயே, ஒரு கணப் பார்வையைப் பெறுவதால், ஆத்மா அப்பால் செல்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

பாடல்:
குழந்தைகளாகிய உங்களின் இதயங்களில் ஏன் சந்தோஷ முரசங்கள் கொட்ட வேண்டும்?

பதில்:
ஏனெனில், உங்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு பாபா வந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நாங்கள் எங்களுடைய தந்தையுடன் வீடு திரும்பவுள்ளோம். விரக்திக் குரல்களின் பின்னர், வெற்றிக் குரல்கள் ஒலிக்கும். தந்தையிடமிருந்து ஒரு கணப் பார்வையைப் பெறுவதால், முழு உலகமும் முக்தியும் ஜீவன்முக்தியும் எனும் ஆஸ்தியைப் பெறும். முழு உலகமும் அப்பால் செல்லும்.

ஓம் சாந்தி.
ஆன்மீக சிவபாபா இங்கமர்ந்திருந்து, தன்னுடைய ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். மூன்றாவது கண் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதிலுமுள்ள ஆத்மாக்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பதற்காகவே தான் வந்துள்ளார் என்பது தந்தைக்குத் தெரியும். தந்தையின் இதயத்தில் ஆஸ்தியின் நினைவு மட்டும் இருக்கிறது. ஒரு லௌகீகத் தந்தையின் இதயத்திலும், ஆஸ்தியின் நினைவே இருக்கிறது; தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் ஓர் ஆஸ்தியைக் கொடுப்பார் என்பதை அவர் நினைவுசெய்கிறார். அவருக்கு ஒரு மகன் இல்லையெனில், அதை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரால் நிச்சயம் செய்ய முடியாமல் உள்ளது. பின்னர் அவர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கிறார். தந்தை இங்கமர்ந்திருப்பதுடன், அவருடைய பார்வை உலகம் முழுவதிலுமுள்ள ஆத்மாக்கள் மீது ஈர்க்கப்படுகின்றது. அனைவருக்கும் ஓர் ஆஸ்தியைத் தான் கொடுக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் இங்கு அமர்ந்திருந்தாலும், அவருடைய பார்வை முழு உலகின் மீதும், உலகிலுள்ள மனிதர்கள் அனைவரின் மீதும் உள்ளது, ஏனெனில் அவர் முழு உலகையும் அப்பால் அழைத்துச் செல்ல வேண்டும். இதுவே அதிமங்களகரமான சங்கம யுகம் என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகிறார். உங்கள் அனைவரையும் அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் அப்பால் செல்வார்கள். கல்பம் கல்பமாக, நாடகத் திட்டத்துக்கேற்ப, அவர்கள் அப்பால் செல்வார்கள். தந்தை குழந்தைகள் அனைவரையும் நினைவுசெய்கிறார். அவருடைய பார்வை அனைவர் மீதும் வீழ்கிறது, ஆனால் அனைவரும் கற்பதில்லை. நாடகத் திட்டத்துக்கேற்ப, அனைவரும் வீடு திரும்ப வேண்டும், ஏனெனில் நாடகம் முடிவடையவுள்ளது. அவர்கள் சிறிதளவு முன்னேறும்பொழுது, இப்பொழுது விநாசம் நடைபெறவுள்ளது என்பதைத் தாங்களே புரிந்துகொள்வார்கள். இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. ஏனெனில் ஆத்மாக்கள் உணர்வுள்ளவர்கள். ஆகவே தந்தை வந்து விட்டது அவர்களின் புத்திகளில் பதியும். வைகுந்தம் ஸ்தாபிக்கப்பட்டு, நாங்கள் அமைதி தாமத்துக்குத் திரும்பிச் செல்வோம். ஏனைய அனைவரும் முக்தியைப் பெறுவார்கள், ஆனால் நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள். இப்பொழுது பாபா வந்து விட்டார், நாங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வோம். வெற்றிக் குரல்கள் ஒலிக்கும். இப்பொழுது, அதிகளவில் விரக்திக் குரல்கள் ஒலிக்கின்றன. சில இடங்களில் பஞ்சம் உள்ளது, ஏனைய இடங்களில் யுத்தமும், வேறு இடங்களில் பூமியதிர்ச்சிகளும் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் மரணிக்கிறார்கள். மரணம் இடம்பெற வேண்டும். சத்திய யுகத்தில் இவ்விடயங்கள் நடைபெறுவதில்லை. இப்பொழுது தான் செல்வார் என்பதும், பின்னர் முழு உலகிலும் வெற்றிக் குரல்கள் ஒலிக்கும் என்பதும் தந்தைக்குத் தெரியும். நான் பாரதத்துக்கு மட்டும் செல்வேன். பாரதம் இந்த முழு உலகிலும் ஒரு கிராமத்தைப் போன்று இருக்கும். பாபாவுக்கு அது ஒரு கிராமத்தைப் போன்றுள்ளது. அங்கு மிகச் சொற்ப மனிதர்களே இருப்பார்கள். சத்திய யுகத்தில், முழு உலகமும் ஒரு சிறிய கிராமத்தைப் போன்று இருக்கும். இப்பொழுது பெருமளவில் விரிவாக்கம் உள்ளது. தந்தையின் புத்தியில் அனைத்து விடயங்களும் உள்ளன, இப்பொழுது இச்சரீரத்தினூடாக, அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். உங்களுடைய முயற்சிகளும் ஒவ்வொரு கல்பத்திலும் செய்யப்பட்டதைப் போலவே இப்பொழுதும் இருக்கும்.. தந்தையே கல்ப விருட்சத்தின் விதையாவார். இது பௌதீக விருட்சமும், மேலே அசரீரி விருட்சமும் உள்ளன. எவ்வாறு இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். வேறு எந்த மனிதர்களுக்கும் இந்தப் புரிந்துணர்வு கிடையாது. விவேகிகளுக்கும், விவேகமற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பாருங்கள். விவேகிகளே சுவர்க்க இராச்சியத்தை ஆட்சிசெய்வது வழக்கமாக இருந்தது. அது சுவர்க்கமாகிய, சத்திய பூமி என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். பாபா வந்து விட்டார், இப்பழைய உலகம் நிச்சயமாக மாற்றமடையப் போகின்றது. எவ்வாறாயினும், நீங்கள் செய்த முயற்சிகளுக்கேற்ப, ஓர் அந்தஸ்தை அடைகிறீர்கள். தந்தை அனைவருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய பாடசாலை தொடர்ந்தும் விரிவாக்கம் அடையும். பல பாடசாலைகள் இருக்கும். அனைவரும் ஒரே பாடசாலையில் இருக்க முடியாது. அவர்கள் அனைவரும் எங்கு வசிக்க முடியும்? இப்பொழுது நீங்கள் சந்தோஷ பூமிக்குச் செல்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்லும்பொழுது, அவர் எட்டு தொடக்கம் பத்து ஆண்டுகள் அங்கு வசித்த பின்னர் பாரதத்துக்குத் திரும்பி வருகிறார். பாரதம் ஏழையாக உள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இங்கு சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். உண்மையில், இங்கு குழந்தைகளாகிய நீங்களும் சந்தோஷமாக இல்லை. உங்களைச் சுவர்க்க அதிபதிகளாகிய, தேவர்கள் ஆக்குகின்ற ஒரு மிகவும் மேன்மையான கல்வியை நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு அதிகளவு சந்தோஷம் இருக்கும். அனைவரும் அச்சந்தோஷத்தை நினைவுசெய்கிறார்கள். நீங்கள் இக்கிராமத்தை (கலியுகம்) நினைவுசெய்ய மாட்டீர்கள், ஏனெனில் இங்கு எல்லையற்ற துன்பம் உள்ளது. இன்று, இந்த இராவண இராச்சியத்தில் இத் தூய்மையற்ற உலகில், எல்லையற்ற துன்பமும், நாளைய உலகில் எல்லையற்ற சந்தோஷமும் இருக்கும். யோக சக்தி மூலம் நாங்கள் எல்லையற்ற சந்தோஷ உலகை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறோம். இது இராஜயோகம். தந்தையே கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குவதால், உங்களை அவ்வாறு ஆகும்படி செய்கின்ற ஆசிரியரை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஓர் ஆசிரியர் இல்லாமல், உங்களால் ஒரு சட்டநிபுணராக அல்லது ஒரு பொறியியலாளராக ஆக முடியாது. இது ஒரு புதிய விடயம். நீங்கள் நீண்டகாலமாகப் பிரிந்திருந்த, பரமாத்மாவாகிய தந்தையுடன் ஆத்மாக்கள் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் எடுத்துள்ளது? இதைத் தந்தையே விளங்கப்படுத்துகிறார். இவ்வுலகின் ஆயுட்காலமானது நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இல்லை, முதலில் பிரிந்து சென்ற நீங்களே, தந்தையைச் சந்திப்பதற்கு இங்கு 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் வருகிறீர்கள். நீங்களே முயற்சி செய்ய வேண்டியவர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் மனிதர்களே. ஆத்மாக்கள் அழிவற்றவர்களும், சரீரங்கள் அழியக்கூடியவையும் ஆகும். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கிறார். எவ்வாறு ஓர் ஆத்மா ஒருபொழுதும் முதுமை அடைவதில்லை என்பது ஓர் அற்புதம். கற்பிப்பவரும் அற்புதமானவர், கல்வியும் அற்புதமானது. எவ்வாறாயினும், இதை எவரும் நினைவுசெய்வதில்லை. அனைவரும் மறக்கிறார்கள். தனது முன்னைய பிறவியில் தான் என்ன கற்றார் என்பதை எவராவது நினைவுசெய்கின்றாரா? நீங்கள் இப்பிறவியில் கற்றுப் புதிய உலகில் அதன் பெறுபேற்றைப் பெறுகிறீர்கள். இது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தெரியும். இப்பொழுது இது அதி மங்களகரமான சங்கம யுகம் என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல இருக்கிறீர்கள். நீங்கள் இதை நினைவுசெய்தால், தந்தையையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் தன்னை நினைவுசெய்வதற்குத் தந்தை உங்களுக்குப் பல வழிகளைக் காண்பிக்கிறார். அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவரை மூன்று ரூபங்களிலும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் நினைவுசெய்வதற்காகப் பல வழிமுறைகளை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார், ஆனால் மாயை உங்களை மறக்க வைக்கிறாள். தந்தை புதிய உலகை ஸ்தாபிக்கிறார், இதுவே மங்களகரமான சங்கம யுகம் என்பதை நினைவுசெய்யுமாறு தந்தையே உங்களுக்குக் கூறுகிறார், இருப்பினும் உங்களால் இன்னமும் நினைவுசெய்ய இயலாதிருக்கிறது. நினைவுசெய்வதற்குப் பல வழிமுறைகளை அவர் உங்களுக்குக் காண்பிக்கிறார், அத்துடன் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என்றும் அவர் கூறுகிறார். அவள் உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்து, உங்களைச் சரீர உணர்வுடையவர்கள் ஆக்குகிறாள். ஆகவே, சாத்தியமானளவு அவரைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் நடக்கும்பொழுதும், அமரும்பொழுதும், உலாவித் திரியும் பொழுதும் உங்களைச் சரீரங்கள் என்று கருதுவதற்குப் பதிலாக, உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். இதற்கு முயற்சி தேவை, ஆனால் இந்த ஞானமோ மிகவும் இலகுவானது. நாங்கள் நினைவில் நிலைத்திருக்க இயலாதுள்ளது என்று குழந்தைகளான நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய முயற்சி செய்கிறீர்கள், மாயை உங்களைத் தன்னிடம் இழுக்கிறாள். இதைப் பற்றிய ஒரு நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுடைய புத்தி தந்தையுடனான யோகத்திலும், இக்கல்வியின் பாடத்துடனும் இருக்க வேண்டும் என்று நீங்கள் புரிந்துகொண்டாலும், இன்னமும் மறக்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மறக்கக்கூடாது. உண்மையில், இப் படங்கள் அவசியமில்லை, ஆனால் கற்பிக்கும் வேளையில், உங்கள் முன்னிலையில் உங்களுக்கு ஏதாவது தேவைப்படுகிறது. தொடர்ந்தும் பல படங்கள் உருவாக்கப்படுகின்றன. பாண்டவ அரசாங்கத்தின் திட்டத்தைப் பாருங்கள். அந்த அரசாங்கத்திடமும் ஒரு திட்டம் உள்ளது. புதிய உலகில் பாரதம் மட்டும் இருந்தது என்பதையும், அது மிகவும் சிறியதாக இருந்தது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். முழப் பாரதமும் உலக அதிபதியாக இருந்தது; அனைத்தும் புதியனவாக இருந்தன. ஓர் உலகமே இருக்கிறது, அதே நடிகர்களே இருக்கிறார்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. சக்கரம் தொடர்ந்தும் சுழல்வதால், எவ்வளவு விநாடிகளும், எவ்வளவு மணித்தியாலங்களும், எவ்வளவு நாட்களும், வருடங்களும் கடந்து விட்டன என்று உங்களால் கணக்கிட முடியம். “இன்று, நாளை, இன்று நாளை” என்று கூறுகையில், 5000 வருடங்களும் கடந்து விட்டன. காட்சிகள், பக்கக் காட்சிகள், விளையாட்டுக்கள்; அனைத்தும் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. அது அத்தகையதொரு பெரிய எல்லையற்ற விருட்சமாகும். உங்களால் ஒரு விருட்சத்தின் இலைகளைக் கணக்கிட முடியாது. இது ஒரு விருட்சம், இதன் அத்திவாரம் தேவ தர்மம், பின்னர் மூன்று பிரதான கிளைகள் (சமயங்கள்) வெளிப்படுகின்றன. எவ்வாறாயினும், ஒரு விருட்சத்தில் எண்ணற்ற இலைகள் உள்ளன, அவற்றைக் கணக்கிடுவதற்கான சக்தி எவருக்கும் கிடையாது. தற்சமயம், சமயங்கள் அனைத்தினதும் விருட்சம் விரிவாக்கத்தின் இறுதியை அடைந்து விட்டது. இது ஓர் எல்லையற்ற, பெரிய விருட்சம், பின்னர், இச்சமயங்கள் எவையும் இருக்க மாட்டா. இப்பொழுது முழு விருட்சமும் உள்ளது, ஆனால் அதன் அத்திவாரம் இப்பொழுது இல்லை. ஆலமரத்தின் உதாரணம் முற்றிலும் மிகச் சரியானது. இது மட்டுமே ஓர் அற்புதமான விருட்சமாகும். நாடகத்தை விளங்கப்படுத்துவதற்குத் தந்தை இந்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். இப்பொழுது எவ்வாறு அத்திவாரம் அற்றுப் போயுள்ளது என்பது புரிந்துகொள்வதற்குரிய ஒரு விடயம். தந்தை உங்களை மிகவும் விவேகிகளாக்கி விட்டார். இப்பொழுது தேவ தர்மத்தின் அத்திவாரம் கிடையாது, ஆனால் அதனுடைய சில அடையாளங்கள் உள்ளன. அவை ஒரு மூடை மாவில் உள்ள ஒரு பிடி உப்பு போன்றே உள்ளது. அனைத்தும் மறைந்து விட்டன. அந்த அடையாளங்கள் மட்டுமே எஞ்;சியுள்ளன. ஆகவே, இந்த ஞானம் முழுவதும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் பிரவேசிக்க வேண்டும். தந்தையின் புத்தியிலும் இந்த ஞானம் உள்ளது. அவர் உங்கள் அனைவருக்கும் ஞானம் அனைத்தையும் கொடுத்து, உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகிறார். தந்தையே விதையாவார், இது ஒரு தலைகீழ் விருட்சம் ஆகும். இது ஓர் எல்லையற்ற, பெரிய நாடகமாகும். இப்பொழுது உங்கள் புத்திகள் மேல்நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் தந்தையையும், படைப்பையும் அறிந்து கொண்டுள்ளீர்கள். சமயநூல்களில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் கூட இது தெரியாது. இதை ஒருவரேனும் அறிந்திருந்தால், அது அநாதியாக இருந்திருக்க முடியும். சற்கதி ஏற்கனவே கிடைத்திருப்பதால், பின்னர் அதற்கான தேவையும் இருக்காது. இடைநடுவில் எவராலும் வீடு திரும்பிச் செல்ல இயலாது. நாடகம் முடியும்வரைக்கும், தந்தை இங்கு இருக்கும் வரைக்கும் நடிகர்கள் அனைவரும் தொடர்ந்தும் இங்கு இருப்பார்கள். பின்னர், அந்த இடம் (ஆத்ம உலகம்) முற்றிலும் வெறுமையாகும்பொழுது, சிவபாபாவின் ஊர்வலம் வீடு திரும்பும். அதற்கு முன்னர் எவரும் அங்கு சென்று அமர மாட்டார்கள். ஆகவே, தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு இந்த ஞானம் முழுவதையும் கொடுக்கிறார். எவ்வாறு உலகச் சக்கரம் மீண்டும் மீண்டும் சுழல்கிறது என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். சத்திய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் பின்னர் சங்கமமும் உள்ளது. இது நினைவுகூரப்பட்டு வருகிறது, ஆனால் எப்பொழுது சங்கம யுகம் இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. நான்கு யுகங்கள் உள்ளன என்பதையும், இது ஒரு லீப் யுகம் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டு விட்டீர்கள். இது மிகவும் குறுகியது (யுகம்) என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரும் ஒரு சிறுவனாகக் காண்பிக்கப்பட்டுள்ளார். ஆகவே, இது ஞானம் ஆகும். அதை மாற்றி, வளைத்து, பக்தி மார்க்கத்தில் அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்! ஞானத்தின் முழு இழையும் முற்றிலும் சிக்குப்பட்டுள்ளது. ஒரு தந்தையால் மட்டுமே அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். புராதன இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். உண்மையிலேயே இதுவே அந்த யோகம் ஆகும். புராதனம் என்றால் மிகவும் ஆதியில் தோன்றியது என்று அர்த்தமாகும். இலகு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்குத் தந்தை வந்து விட்டார். அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுவதிலும் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். ஆத்மா இதை நினைவுசெய்கிறார். தந்தை கூறுகிறார்: நான் மீண்டும் வந்து, நான் இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்ற அதே ஞானத்தைக் கொடுப்பேன். இது புதிய உலகிற்கான புதிய ஞானமாகும். உங்கள் புத்திகளில் இந்த ஞானத்தை வைத்திருந்தால், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். இப்பொழுது மிகச் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஒரு புறம் சந்தோஷமும், மறுபுறும் அடுத்த கல்பம் வரையில் நாங்கள் அத்தகையதோர் இனிமையான தந்தையை மீண்டும் பார்க்க மாட்டோம் என்கின்ற உணர்வும் உள்ளன. தந்தை மட்டும் அதிகளவு சந்தோஷத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களை அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்வதற்குத் தந்தை வருகிறார். நீங்கள் அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்தால், உங்களால் தந்தையையும் நினைவுசெய்ய இயலும். இத்துன்ப பூமியை மறந்துவிடுங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற விடயங்களைக் கூறுகிறார். பழைய உலகிற்கான உங்கள் பற்று அகற்றப்படும்பொழுது, சந்தோஷம் இருக்கும், பின்னர், பிரதிபலனாக, நீங்கள் சந்தோஷப் பூமிக்குச் செல்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் சதோபிரதான் ஆகுவீர்கள். ஒவ்வொரு கல்பமும் இவ்வாறு ஆகியுள்ளவர்கள், மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். அவர்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்த பின்னர், தங்களுடைய பழைய சரீரங்களை நீக்குவார்கள். பின்னர் அவர்கள் சதோபிரதான் உலகிற்குச் சென்று, புதிய சரீரங்களை ஏற்றுக் கொள்வார்கள். பின்னர் இந்த ஞானம் முடிவடைந்து விடும். இவ்விடயங்கள் மிகவும் இலகுவானவை. இரவில் உறங்கச் செல்லும் வேளையில், இவ்விடயங்களைக் கடையுங்கள். நீங்கள் அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்கின்ற பெருஞ் சந்தோஷம் அதிகளவில் இருக்கும். நாள் முழுவதிலும் அசுர செயல்கள் எவற்றையாவது செய்தீர்களா எனப் பார்ப்பதற்கு, உங்களைச் சோதியுங்கள். ஐந்து விகாரங்களும் உங்களுக்கு ஏதாவது விரக்தியை ஏற்படுத்தினவா? பேராசை இருந்ததா? நீங்கள் உங்களையே சோதித்தவாறு இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோக சக்தி மூலம் எல்லையற்ற சந்தோஷ உலகை ஸ்தாபியுங்கள். இப்பழைய துன்ப உலகை மறந்து விடுங்கள். சத்திய பூமியின் அதிபதிகள் ஆகுகின்ற சந்தோஷம் இருக்கட்டும்.

2. ஒவ்வொரு நாளும் உங்களைச் சோதியுங்கள்: நாள் முழுவதும் விகாரம் ஏதேனும் விரக்தியை ஏற்படுத்தியதா? நான் அசுர செயல்கள் எவற்றையாவது செய்தேனா? நான் பேராசையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தேனா?

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து அதிமேன்மையான செல்வத்தைப் பெறுகின்ற ஆசீர்வாதத்தைக் கோரி, செல்வத்தினால் நிறைந்திருப்பீர்களாக.

ஒருவரிடம் பௌதீகச் செல்வம் மட்டுமே இருந்தால், அவரால் சதாகாலமும் திருப்தியாக இருக்க முடியாது. பௌதீகச் செல்வத்துடன், அவரிடம் சகல நற்குணங்கள் எனும் செல்வமும், சகல சக்திகள் எனும் செல்வமும், இந்த ஞானம் எனும் அதிமேன்மையான செல்வமும் இல்லாது விடின், பின்னர் சதா திருப்தியாக இருக்க முடியாது. உங்கள் அனைவரிடமும் இந்த மேன்மையான செல்வத்தின் வகைகள் அனைத்தும் இருக்கின்றன. உலக மக்கள் பௌதீகச் செல்வத்தை மட்டுமே கொண்டவர்களைச் செல்வந்தர்கள் என்று கருதுகின்றார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஆசீர்வாதங்களை அருள்பவரான, தந்தையிடமிருந்து அதிசெல்வந்தர்களாக இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள்

சுலோகம்:
உண்மையான ஆன்மீக முயற்சி மூலம் விரக்திக் குரல்களை “ஆஹா! ஆஹா!” என்பதாக மாற்றுங்கள்.