25.10.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 19.02.2012 Om Shanti Madhuban
வீட்டின் வாயில்களைத் திறப்பதற்கு, உங்களின் எல்லையற்ற விருப்பமின்மை என்ற மனோபாவத்தால் ‘நான்’ என்ற உணர்வைத் துறவுங்கள். உங்களின் பிறந்தநாளில், நீங்கள் பேசுவதையும் செய்வதையும் சமமாக்கும் திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள். அதன் மூலம் வெற்றி ரூபம் ஆகுங்கள்.
இன்று, எங்கும் உள்ள குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எங்கும் இதயங்களில் இருந்து வெளிப்படும் ஒலி, ‘ஆஹா பாபா! ஆஹா!’ என்பதே. தந்தையின் இதயத்தில் இருந்தும் அதே, ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்ற ஒலி வெளிப்படுகிறது. இன்று, அனைவரும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தெய்வீகப் பிறப்பை சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். இன்று, நீங்கள் சந்தோஷத்துடன் கொண்டாடுகிறீர்கள். அத்துடன் கூடவே, தந்தையும் குழந்தைகளின் சந்தோஷத்தைக் கொண்டாடுகிறார். இந்தத் தனித்துவமான பிறந்த தினத்தில் மட்டுமே தந்தைக்கும் குழந்தைகளுக்கும் ஒன்றாக தெய்வீகப் பிறப்பு ஒரே நாளில் உள்ளது. நீங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் வாழ்த்துக்களையும் பெறுகிறீர்கள். ஏனென்றால், தந்தை இந்த யாகத்தை உருவாக்குவதற்காகவே பிறப்பு எடுத்துள்ளார். எனவே, பிராமணக் குழந்தைகள் மட்டுமே இந்த யாகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். எனவே, இந்தப் பிறந்த நாள் மட்டுமே, தந்தையும் குழந்தைகளும் ஒரே நாளில் பிறந்தநாளைக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே, இந்த சிவஜெயந்தி வைரத்தைப் போன்று பெறுமதி மிக்க பிறந்தநாள் எனப்படுகிறது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் மிகுந்த அன்புடன் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக வந்திருப்பதைத் தந்தை பார்க்கிறார். எனவே தந்தையும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இந்தப் பிறந்தநாள் ஆழமான அன்பிற்குரிய பிறந்தநாள் ஆகும். குழந்தைகள் அன்பானவர்கள், தந்தையும் அன்பானவர். அத்துடன் இது அன்பான பிறந்தநாள்.
இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் இருந்தும் குழந்தைகளான உங்களின் அன்பு பாப்தாதாவை வந்தடைந்துள்ளது. தந்தை ஒவ்வொரு அன்பான குழந்தைக்கும் பல்கோடி மடங்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இந்த அன்பானது இலகுவாக ஒவ்வொரு குழந்தையையும் கர்மயோகி ஆக்கிவிடும். இந்த அன்பானது சதா அனைத்தையும் இலகுவாக ஆக்குகிறது. அது உங்களை சக்திசாலி ஆக்குகிறது. இது பாப்தாதாவின் பிறந்தநாள் மட்டுமல்ல. ஏனென்றால், தந்தை எப்போதும் குழந்தைகளுடனேயே இருக்கிறார். நாங்கள் ஒன்றாகவே இருப்போம், ஒன்றாகத் திரும்பிச் செல்வோம், ஒன்றாக இராச்சியத்திற்குள் செல்வோம். இதுவும் உங்கள் அனைவரினதும் சத்தியம், அல்லவா? நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும், ஒன்றாகத் திரும்பிப் பறந்து செல்ல வேண்டும், ஒன்றாக இராச்சியத்தை ஆட்சி செய்ய வேண்டும்.
இன்று, குறிப்பாக பாப்தாதா உங்களின் பக்தர்களையும் நினைவு செய்கிறார். ஏனென்றால், நீங்கள் செய்தவற்றை உங்களின் பக்தர்கள் மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். துவாபர யுகத்தில், அவர்கள் முதலில் பரந்தாமத்தில் இருந்து வந்தபோது, அவர்களின் முதல் பிறவியும் சதோபிரதானாக இருந்தது. இவ்வாறே அவர்கள் உங்களை மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். எனவே இந்தத் தினத்தில், குழந்தைகளான உங்கள் அனைவரையும் நினைவு செய்வதுடன் கூடவே, பாபா பக்தர்களையும் நினைவு செய்கிறார். இன்று சூட்சும வதனத்தில், அமிர்த வேளையில் குழந்தைகளின் அதிகளவு கோலாகலம் காணப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் உணர்ந்தார்: நான் பாப்தாதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறேன். பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தையின் ஆழ்ந்த அன்புடனான வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டார். எனவே இன்று, இந்தச் சந்திப்பு (மேளா) சூட்சும வதனத்தில் இடம்பெற்றது. ஒருபுறம், குழந்தைகளான நீங்கள் இருந்தீர்கள். இன்னொரு புறம், முன்னோடிக் குழுவில் சென்றுவிட்ட உங்களின் சகபாடிகள் இருந்தார்கள். உங்களின் தாதிகளினதும் விசேடமான மூத்த சகோதரர்களினதும் பட்டியல் மிகப் பெரியதாக இருந்ததை பாப்தாதா கண்டார். ஒவ்வொரு தாதியும் பாப்தாதாவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன் கூடவே, அவர்கள் பாக்கியசாலிக் குழந்தைகளான உங்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். எனவே இன்று, சூட்சுமவதனத்தில், வாழ்த்துக்களின் மேளா இடம்பெற்றது. முன்னோடிக் குழுவில் உள்ள விசேடமான தாதிகளும் சகோதரர்களும் குறிப்பாகத் தமது சகபாடிகளாக இருந்த கருவி ஆத்மாக்களான உங்களை நினைவு செய்து, தமது இதயபூர்வமாக உங்களைப் பாராட்டினார்கள். எனவே, அனைவரின் சார்பாகவும் பாப்தாதா உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சகோதர, சகோதரிகள் அனைவரிடம் இருந்தும் ஓர் ஒலியே வெளிப்படுகிறது: வீட்டுக்குச் செல்லும் வாயில்கள் எப்போது திறக்கும்? எனவே, குறிப்பாக தீதியும் தாதியும் கேட்டார்கள்: எமது சார்பாக எமது நண்பர்களிடமும் எமது சகோதரர்களிடமும் கேளுங்கள்: வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு நீங்கள் என்ன திகதியை நிச்சயம் செய்துள்ளீர்கள்? நீங்கள் அனைவரும் ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள்தானே? நீங்கள் வேறாகத் திரும்பிச் செல்ல மாட்டீர்கள், அல்லவா? வாயில்களைத் திறப்பதற்கு அனைவரும் ஒன்றாக அங்கே இருப்பார்கள். எனவே, அவர்கள் ஒரு திகதியைக் கேட்கிறார்கள். பாப்தாதா புன்னகை செய்தார். ஏனென்றால், தந்தைக்கும் இதுவே தேவையாக உள்ளது: இப்போது, வாயில்களைத் திறப்பதற்கு, குழந்தைகளான நீங்கள் அனைவரும் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இதுவே வாயில்களைத் திறப்பதற்கான சாவி ஆகும். பாப்தாதா தொடர்ந்து கூறுகிறார்: எல்லையற்ற விருப்பமின்மை உடையவர் ஆகுங்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ, அந்தளவிற்கு எண்ணங்கள் மற்றும் நேரம் என்பவற்றை வீணாக்குவதை விட்டுவிடுங்கள். எல்லையற்ற விருப்பமின்மை உடையவர் ஆகுங்கள். ஏனென்றால், சரீர உணர்வே மிகப் பெரிய தடையாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நடக்கும்போதும் அசையும்போதும் அந்தச் சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வில் இருப்பதே எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருத்தலாகும்.
அனைவரும், ‘எனது பாபா, இனிய பாபா, அன்பான பாபா!’ என்று சொல்கிறார்கள். உங்களின் இதயபு௧௦ர்வமாக ‘எனது’ என்று நீங்கள் சொல்லும்போது, ‘நான்’ என்ற வடிவில் வரும் சரீர உணர்வு..... தந்தை எப்போதும் கூறுகிறார்: எப்போதும் உங்களிடம் உள்ள ‘நான்’ என்ற உணர்வு, ‘நான் செய்வதே, நான் சொல்வதே சரி’ என்பதாக உள்ளது. ‘நான்’ என்ற ஒன்று பொதுவானது – நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம். மற்றைய நான் என்பது சூட்சுமமானது. உங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ள, ‘நான் இதைச் செய்தேன், நான் இதைச் செய்கிறேன், என்னைப் பொறுத்தவரை நான் சரி’ என்பதில் உள்ள சூட்சுமமான ‘நான்’ என்பதை நீங்கள் முடிக்க வேண்டும். சரீர உணர்வு இந்த வடிவிலேயே வருகிறது. எனவே இன்று, இந்த ‘நான்’ என்ற சூட்சுமமான வடிவம், இது உங்களைச் சிலவேளைகளில் தந்தையின் சிறப்பியல்பை உங்களுடையது எனக் கருதச் செய்கிறது, இந்த ‘நான்’ என்ற உணர்வை நீங்கள் முடிக்க வேண்டும். உருவாக்கப்பட்டுள்ள ஞாபகார்த்தங்களைப் பாருங்கள். அவர்கள் பலி கொடுக்கும்போது, உண்மையில் அவர்கள் தங்களைப் பலி கொடுப்பதில்லை. ஆனால் அவர்கள் எதைப் பலி கொடுக்கிறார்கள்? ஓர் ஆடு. ஏன் பலி கொடுப்பதற்காக ஆட்டைத் தேர்ந்து எடுத்துள்ளார்கள்? ஏனென்றால் ஆடு எப்போதும் ‘மே, மே’ (நான்) என்றே கத்தும். பக்தர்கள் உங்களை மிக நன்றாகப் பிரதி செய்துள்ளார்கள். எனவே இந்தத் தினத்தில், உங்களால் முயற்சி செய்து இந்த ‘நான்’ என்ற சரீர உணர்வை முடிக்க முடியுமல்லவா? நீங்கள் இங்கே தந்தையின் பிறந்த நாளுக்காக வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் ஒரு பரிசு கொடுப்பீர்கள்தானே? தந்தைக்கு வேறெந்தப் பரிசுகளும் வேண்டாம். ஆனால் இந்தச் சூட்சுமமான ‘நான்’ என்ற உணர்வு மட்டுமே வேண்டும். தந்தை கூறுகிறார்: இந்தப் பிறந்தநாளில் இந்தப் பரிசைத் தந்தைக்குக் கொடுங்கள். உங்களால் இதைக் கொடுக்க முடியுமா? நீங்கள் அதைக் கொடுக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயர்த்தியதன் மூலம் நீங்கள் பாபாவை களிப்படையச் செய்தீர்கள். எனவே, உங்களின் கைகளை உயர்த்தியதன் மூலம் நீங்கள் பரிசை வழங்கி விட்டீர்கள். நீங்கள் பரிசாகக் கொடுத்த எதையும் உங்களில் எவராவது திருப்பி எடுத்துக் கொள்வீர்களா? சில குழந்தைகள் சொல்கிறார்கள்: பாபா, எங்களுக்கு அது தேவையில்லை, ஆனால் அது திரும்பி வந்துவிடுகிறது. அதற்கான காரணம் என்ன? உங்களைக் காரணம் என்னவென்று கேட்டால், நீங்கள் மிக நல்ல பதிலைக் கொடுக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும், நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் அது திரும்பி வந்தால் நான் என்ன செய்ய முடியும்? என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் கொடுத்த ஏதாவது உங்களிடம் திரும்பி வந்தால், ஏற்கனவே கொடுத்த எதையும் உங்களுடன் வைத்துக் கொள்வீர்களா? எனவே, நீங்கள் உங்களின் இதயபூர்வமாகக் கொடுத்திருந்தால், அது திரும்பி வந்தாலும் உங்களுடன் அதை வைத்துக் கொள்வீர்களா? அதற்கான காரணம் என்ன? உங்களுக்குத் தந்தையின் மீது அன்பு உள்ளது. அந்த அன்பினால் தந்தை என்ன சொன்னாலும் நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறீர்கள். இந்தப் பெறுபேறு தந்தையிடம் வருகிறது. ஆனால், என்ன நிகழ்கிறது என்றால் உங்களிடம் திடசங்கற்பம் குறைவாக உள்ளது. எனவே, திடசங்கற்பத்தைப் பயன்படுத்துங்கள்! உங்களுக்கு எண்ணம் ஏற்படுகிறது, ஆனால் எண்ணத்தைக் கொண்டிருப்பது ஒரு விடயம், திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பது வேறொரு விடயம். எனவே, மீண்டும் மீண்டும் உங்களின் எண்ணங்களில் திடசங்கற்பத்தை ஏற்படுத்துங்கள். இந்தக் கவனமே குறைவாக உள்ளது. திடசங்கற்பம் வெற்றிக்கான சாவி. எனவே, இன்று நீங்கள் என்ன செய்வீர்கள்? வெறுமனே எண்ணங்களைக் கொண்டிருப்பீர்களா அல்லது திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருப்பீர்களா? உங்களின் எண்ணங்களில் திடசங்கற்பம் இருக்கும்போது, அதற்கான அடையாளம்: திடசங்கற்பமே வெற்றிக்கான சாவி. சாவியைப் பிரயோகிப்பதில் ஏதோ குறைவதனால் உங்களால் முழுமையான வெற்றி பெற முடிவதில்லை.
எனவே இன்று, இது குழந்தைகளினதும் தந்தையினதும் பிறந்தநாள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். ஆகவே, இது ஒரு விசேடமான தினம், அல்லவா? கல்பம் முழுவதிலும் தந்தையும் குழந்தைகளும் ஒரே நாளில் பிறந்தநாளைக் கொண்டிருப்பதே இந்தப் பிறந்தநாளின் சிறப்பியல்பு. அதனால் இந்தத் தினத்தில், குழந்தைகளான நீங்கள் அனைவரும் இன்று உங்களின் இதயங்களில் திடசங்கற்பத்தைக் கொண்டிருந்து, வீணான எண்ணங்களை முடிப்பதற்கும் நேரத்தை வீணாக்குவதை முடிப்பதற்குமான திடசங்கற்பமான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று தந்தை விரும்புகிறார். நாள் முழுவதும், அவ்வப்போது உங்களின் நேரமும் எண்ணங்களும் வீணாக்கப்படுகின்றனவா என்பதை கவனமாகச் சோதிக்க வேண்டும். பாப்தாதா அனைவரின் பதிவேடுகளையும் பார்க்கிறார். காலத்தையும் எண்ணங்களையும் சேமித்தல் என்றால், நிறைவிற்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருதல் என்று அர்த்தம். நீங்கள் தயாரா? அல்லது, அவை வந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? என்று இப்போதும் சொல்கிறீர்களா? வீணானவை வருவது அவற்றின் கடமை. ஆனால் உங்களின் கடமை என்ன? எண்ணங்களை வரவேற்பதா? நீங்கள் அவற்றை அங்கேயே இருத்தி விடுவதால்தான் அவை அதைத் தமது வீடாக ஆக்கிக் கொள்கின்றன. உங்களுக்கு அந்தத் திடசங்கற்பம் இல்லை என்பதை வீணான எண்ணங்களும் புரிந்து கொள்கின்றன. ஆகவே, இந்த அன்புக்குரிய தினத்தில், இப்போது உங்களின் இதயங்களில் நீங்கள் எதைக் கொண்டிருக்கிறீர்கள்? அமிர்த வேளையில் இருந்து இப்போதுவரை, மீண்டும் மீண்டும் உங்களின் இதயங்களில் பிரவேசிப்பது என்ன? ‘எனது பாபா, எனது பாபா, எனது பாபா!’ தந்தையின் இதயத்திலும், எனது குழந்தைகள், எனது குழந்தைகள், எனது குழந்தைகள்! என்பதே உள்ளது. உங்களில் பெரும்பாலானோர் தந்தையின் நினைவில் இருந்தீர்கள். இந்த நாளின் தாக்கமும் உள்ளது. பாப்தாதா இதை உணர்ந்து கொண்டார். இது அன்பின் தினம் என்பதனால், அனைவரும் மீண்டும் மீண்டும் நீண்ட நேரத்திற்கு, ‘எனது பாபா, எனது பாபா’ என்றே நினைவு செய்கிறார்கள். அப்படித்தானே? இதற்காக உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது இன்றைய தினத்திற்கான விடயம். எனது பாபா என்று நீங்கள் நினைவு செய்தீர்களா? நீங்கள் வேறு எதையாவது நினைவு செய்தீர்களா? இல்லை. இந்த முறையில் நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். மிகவும் நல்லது! எனவே ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் உங்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் தந்தையின் அன்புக்குரிய நாளாகும். இன்று, இது விசேட தினம் என்பதனால் நீங்கள் தந்தையை அதிகமாக நினைவு செய்தீர்கள். அதேபோல் அமிர்த வேளையில், சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் எத்தனை மகத்தானது என்பதை சதா உணர்ந்தவராக இருங்கள். இந்தக் குறுகிய பிறவியில், 21 பிறவிகளின் பேறுகளுக்கான உத்தரவாதம் உள்ளது. எனவே, ஒவ்வொரு நாளுக்கும் அதிகளவு முக்கியத்துவம் உள்ளது. 21 பிறவிகளுக்கும் இந்த ஒரு குறுகிய பிறவிக்கும் இடையே அதிகளவு வேறுபாடு உள்ளது.
எனவே இன்று, பாப்தாதா இந்தப் பிறந்தநாள் பரிசைக் குழந்தைகளிடம் இருந்து விரும்புகிறார். நீங்கள் இந்தப் பரிசைக் கொடுப்பீர்களா? கொடுப்பீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! திடசங்கற்பமான நம்பிக்கையுடன் அவற்றை உயர்த்துங்கள். நீங்கள் அதைப் பார்ப்பீர்கள் அல்லது நீங்கள் அதைப் பின்னர் செய்வீர்கள் என்பதல்ல. என்ன நடந்தாலும் துறவறம் என்றால் துறவறமே. இது துறவறம் அல்ல, ஆனால் பாக்கியம். ஆகவே, இன்று நீங்கள் சரியாக உங்களின் கைகளை உயர்த்தி இருந்தால், அது முக்கியம் வாய்ந்ததொரு நாள் ஆகும். உங்களின் முகத்தில், வீணானவை அனைத்தையும் முடித்தது தென்பட வேண்டும். உங்களின் முகத்திலும் உங்களில் செயல்களிலும் சதா நினைவு சொரூபமாக இருப்பது தென்பட வேண்டும். மாயையின் வார்த்தைகளான, ‘ஏன்? என்ன? எப்போது? எப்படி?’ என்பவை முடிய வேண்டும். அப்போது மட்டுமே உங்களின் முகமும் செயல்களும் சேவை செய்யும். தற்சமயம், சொற்பொழிவுகளால் பெரும் தாக்கம் ஏற்படுகிறது. நீங்கள் மிக நல்ல சொற்பொழிவுகள் ஆற்றுவதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் நாளுக்கு நாள், நீங்கள் சொற்பொழிவுகளாலும் வார்த்தைகளாலும் சேவை செய்வதற்கான மிக நல்ல உற்சாகத்தைக் கொண்டிருந்து வெற்றி அடைவதைப் போல், இப்போது காலத்திற்கேற்ப, உங்களின் முகங்களாலும் செயல்களாலும் அளப்பரிய சேவை இடம்பெறும். பயிற்சி செய்து சொற்பொழிவுகள் ஆற்றுவதில் நீங்கள் கெட்டிக்காரர்கள் ஆகியிருப்பதைப் போல், நீங்கள் இதையும் பயிற்சி செய்ய வேண்டும். அதேபோன்று, இப்போது உங்களின் முகத்தாலும் செயல்களாலும் மற்றவர்களுக்கு சந்தோஷ ஆசீர்வாதத்தை வழங்குங்கள். இப்போது உங்களுக்கு மிகக் குறுகிய காலமே இருப்பதனால் இதைப் பயிற்சி செய்யுங்கள். உங்களின் நேரத்தினதும் எண்ணங்களினதும் முக்கியத்துவத்தைப் பேணிய வண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். அனைத்தும் சடுதியாக நடக்கப் போகிறது. ஆகவே, உங்களின் பிறந்தநாள் உங்களுக்கு நினைவிருக்கிறது, அல்லவா? பிறந்தநாள் வரப் போகிறது, அது வரப்போகிறது... எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அதை நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? பாப்தாதா வரப் போகிறார், அவர் வரப்போகிறார், நாங்கள் அவரைச் சந்திக்கப் போகிறோம். நீங்கள் இதை எவ்வளவு காலத்திற்கு நினைவு செய்வீர்கள்? இப்போது இந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள்: திடசங்கற்பத்துடன், நாங்கள் வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதையும் எமது நேரத்தை வீணாக்குவதையும் நிறுத்த வேண்டும். உங்களின் இதயங்களில் ‘எனது பாபா, எனது பாபா’ என்பதை அமிழ்த்துங்கள். இதை வெறுமனே சொல்வது வேறு விடயம், ஆனால் இதை உங்களின் இதயத்தில் அமிழ்த்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், இதயத்தின் விடயங்களை ஒருபோதும் மறக்க முடியாது. நீங்கள் கூறியவற்றை மறக்கக்கூடும். ஆனால் இதயத்தின் விடயங்கள், நல்லவையோ கெட்டவையோ, ஒருபோதும் மறக்க முடியாது. எனவே இன்று, பாப்தாதாவிற்காக உங்களிடம் ஒரு பரிசு உள்ளதல்லவா? உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! ஓ! அற்புதம்! இதை ஒரு புகைப்படம் எடுங்கள். பாப்தாதா உங்களின் கைகளை மட்டும் பார்க்கவில்லை, ஆனால் பாப்தாதா உங்களின் இதயங்களையும் பார்க்கிறார்.
எனவே, நீங்கள் உங்களுக்கும் அத்துடன் தந்தைக்கும் இன்று ஒரு பரிசைக் கொடுத்தீர்கள். வீணாக்கப்படுகின்ற உங்களின் நேரமும் எண்ணங்களும் சேமிக்கப்பட்டால், உங்களின் நாள் எப்படிக் கழியும்? உங்களிடம் சதா சந்தோஷ பாக்கியமும் சந்தோஷ நிலையும் இருக்கும். ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில் பாப்தாதாவுடன் சந்திப்பைக் கொண்டாடிய பின்னர், உங்களின் எண்ணங்களை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். அதன்பின்னர் நாள் முழுவதும் தொடர்ந்து சோதியுங்கள். பாப்தாதா ஒரு நேரத்தை நிச்சயம் செய்யவில்லை. ஆனால் நீங்களே உங்களின் சொந்த நேரத்தை நிச்சயம் செய்து கொள்ள முடியும். அவ்வப்போது சோதித்துப் பாருங்கள்: எமது பிறந்தநாளில் பாப்தாதாவிற்கு நான் செய்த சத்தியத்தை நான் நிறைவேற்றினேனா? இதை நீங்களே சோதித்துப் பாருங்கள். அனைவருக்கும் இது தேவைப்படுகிறது. இன்று, பாப்தாதா உங்களின் முகங்களைப் பார்த்தார்: ஆம், நாம் அதைச் செய்ய விரும்புகிறோம், நாங்கள் அதைச் செய்வோம். ஆனால் இந்த வீணானவை வரும்போது, நாங்கள் தந்தைக்குச் செய்த சத்தியத்தை அது மறக்கச் செய்துவிடுகிறது. எனவே, இப்போது வீணானவை அனைத்தையும் முடியுங்கள்! ஆகவே இப்போது, ஒரு நிமிடத்திற்கு ஒரு சக்திசாலி ஆத்மாவாகி இந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள்: நான் நிச்சயமாக வீணானவை அனைத்தையும் முடிக்க வேண்டும். (பாப்தாதா இந்த அப்பியாசத்தைச் செய்வித்தார்) அச்சா.
பாப்தாதாவிற்கு ஒரு குழந்தையையேனும் தனக்குச் சமமாக ஆக்காமல் விட்டுவிட விருப்பம் இல்லை. அவர் உங்களின் மீது அன்பு வைத்திருக்கிறார். இந்த நாளில் அன்பின் அடையாளத்தைப் பாருங்கள். கல்பம் முழுவதிலும் ஒரு நாளேனும் இவ்வாறு இருந்ததில்லை. அதாவது ஒரே நாளில் தந்தையினதும் குழந்தையினதும் பிறந்தநாட்கள் வருவது. தந்தை ஒவ்வொரு குழந்தையின் மீதும் தனது இதயபூர்வமான அன்பைக் கொண்டிருக்கிறார்: எனது குழந்தை! இறைவனின் குழந்தை! நீங்கள் என்ன எண்ணத்தைக் கொண்டிருந்தாலும் அது வெற்றி அடைவதாக! ஒவ்வோர் எண்ணத்திலும் சக்தி இருக்க வேண்டும். நீங்கள் பேசுவதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். அதைக் கூறுவது என்றால் அது நடந்து விட்டது என்று அர்த்தம். து}ய எண்ணங்களைக் கொண்டிருங்கள். முன்னோடிக் குழுவிற்கு ஒரு திகதி வேண்டும் என்பதனால் இயல்பாகவே வீணானவை முடிந்துவிடும். உங்களின் மூத்த தாதிகள் மற்றும் உங்களின் மூத்த சகோதரர்களின் மீது உங்களுக்கு அன்பு உள்ளது. நீங்கள் அவர்களை அதிகளவில் நினைவு செய்கிறீர்கள். தாதி, தீதி, சந்திரமணி தாதி..... தொடர்ந்து அனைவரின் பெயர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள் அனைவரையும் நினைவு செய்கிறீர்கள். எனவே, அவர்கள் விரும்புவதைச் செய்வதன் மூலம் இதை நடைமுறையில் செய்து காட்டுங்கள். எனவே, இன்றைய எண்ணம் என்னவாக இருந்தது? நீங்கள் பேசுவதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். இது ஓகேயா? எனவே இந்த நாளில், பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இந்தப் பிறந்தநாள் பரிசை வழங்குகிறார்: நீங்கள் பேசுவதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும். பாப்தாதா இந்த நாளில் திடசங்கற்பம் என்ற பரிசை ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்குகிறார். திடசங்கற்பத்துடன் புண்ணியச் செயலை வெற்றிகரமானது ஆக்குங்கள்.
முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! உங்களின் கைகளை அசையுங்கள்! இங்கு வந்திருப்பதுடன் பாபாவை ‘எனது பாபா’ என்று அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு பாப்தாதா பற்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். குறைந்தபட்சம் இடம்பெறவுள்ள குழப்பத்திற்கு முன்னர் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதை இட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார், அதற்காகப் பாராட்டுக்கள்! இங்கு வந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் திடசங்கற்பமான எண்ணம் உள்ளது. சாதாரணமான எண்ணம் அல்ல. நீங்கள் நிச்சயமாக தீவிர முயற்சியாளர் ஆகவேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். வேகம், சாதாரணமானது அல்ல! எனவே, வரவிருப்பவர்கள் உங்களின் இராச்சியத்திற்குள் வருவார்கள். ஆகவே, சாதாரணமான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கான நேரம் இப்போது முடிந்துவிட்டது. இது இப்போது தீவிர முயற்சி செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் ஆகும். குறைந்தபட்சம் நீங்கள் ஒரு வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் வேந்தர்கள் ஆகியுள்ளீர்கள். ஒவ்வொரு குழந்தையைப் பார்க்கும்போதும் பாப்தாதா மகிழ்ச்சி அடைந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் கூறுகிறார்: நீங்கள் தீவிர முயற்சி செய்தால், தந்தையுடன் திரும்பிச் செல்வதுடன் அவருடனேயே இருப்பீர்கள். எனவே, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
ஒரு குழந்தையேனும் பின்னால் விடுபடக்கூடாது என்பதை பாப்தாதா அவரின் இதயபூர்வமாக விரும்புகிறார். அனைவரும் ஒன்றாகத் திரும்பிச் செல்ல வேண்டும். பின்னால் தொடர்வது நன்றாக இருக்காது. சகவாசமும் அவரின் கையும் இருக்க வேண்டும். நீங்கள் உங்களின் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள். இது இப்போது திரும்பிச் செல்லும் பயணம். அதற்காக, தந்தை பிரம்மா ஒரு தேவதையாக இருப்பதைப் போல், தந்தையைப் பின்பற்றுங்கள். உங்களின் பௌதீக ரூபங்களில் இருந்தபோதும் தேவதைகள் ஆகுங்கள். நீங்கள் யாரைப் பார்த்தாலும் தேவதைகளைத் தவிர வேறு எதையும் பார்க்காமல், தேவதைகளையே பாருங்கள். அப்போது வாயில்கள் திறக்கும். அச்சா. குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் சதா பாக்கியசாலிகளாகவும் சந்தோஷ சொரூபங்களாகவும் இருப்பதற்கு அன்பும் நினைவுகளும் உரித்தாகுக.
ஆசீர்வாதம்:
நீங்கள் அகநோக்கு உடையவராகி, உங்களின் ஒருமுகப்பட்ட ரூபத்தால் சூட்சும சக்திகளால் தெய்வீகச் செயல்களை அனுபவம் செய்வீர்களாக.ஒருமுகப்படுதலின் அடிப்படை, அகநோக்கு. அகநோக்கில் இருப்பவர்கள் தங்களுக்குள் தெய்வீகச் செயல்களின் சக்தியை அனுபவம் செய்வார்கள். ஆத்மாக்களை அழைத்தல், ஆத்மாக்களுடன் இதயபூர்வமாக உரையாடுதல், ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களையும் சுபாவத்தையும் மாற்றுதல், தந்தையுடன் இணைப்பைக் கொண்டிருத்தல் - இத்தகைய ஆன்மீக சேவையை உலகிலுள்ள ஆத்மாக்களுக்குச் செய்வதற்கு நீங்கள் உங்களின் ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சகல வகையான தடைகளும் இயல்பாகவே முடிவடையும்.
சுலோகம்:
தனக்குள் சகல பேறுகளையும் கிரகித்து, உலக மேடையில் வெளிப்படுவதே, வெளிப்படுத்தலுக்கான அடிப்படை ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்களை இகழ்பவர்கள் அல்லது உங்களுக்கு இழப்பை ஏற்படுத்துபவர்களிடம் இருந்து அப்பால் செல்வதற்குப் பதிலாக, தொடர்ந்து அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். இதுவே ஞானோதயம் பெற்றுள்ள ஆத்மாக்களான உங்களின் கடமை. கருணைநிறைந்தவராக இருக்கும் தந்தையின் விசேடமான நற்குணத்தால் தந்தை புகழப்படுகிறார். இந்தத் தேசத்தில் அல்லது வெளிநாடுகளில் தந்தையின் ரூபங்களை நீங்கள் பார்க்கும்போது, அவர் கருணைநிறைந்தவர் என்றே காட்டப்படுகிறார். ஆகவே, நீங்கள் அனைவரும் மாஸ்ரர் கருணைநிறைந்தவர்கள் ஆவீர்கள். எனவே, கருணைநிறைந்தவராகி அனைவரையும் ஈடேற்றுங்கள்.