26.01.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2003     Om Shanti     Madhuban


தந்தையை வெளிப்படுத்துவதற்காக சாதாரணத்தைத் தனித்துவமாக மாற்றி காட்சிகளை அருளும் ரூபம் ஆகுங்கள்.


இன்று எங்கும் உள்ள ஒவ்வொரு பிராமணக் குழந்தையின் நெற்றியின் மத்தியிலும் மூன்று வகையான பாக்கிய நட்சத்திரங்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறார். அது மேன்மையான பாக்கியமாகும். நீங்கள் அதை இலகுவாகப் பெற்றுள்ளீர்கள். ஒன்று, அலௌகீகமான, மேன்மையான பிறவியின் பாக்கியம். இரண்டாவது, மேன்மையான உறவுமுறைகளின் பாக்கியம். மூன்றாவது, சகல பேறுகளின் பாக்கியம். மூன்று வகையான பாக்கிய நட்சத்திரங்களும் ஜொலிப்பதைப் பார்க்கும்போது பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். உங்களின் பிறவிப் பாக்கியத்தைப் பாருங்கள்: நீங்கள் எல்லோரும் பாக்கியத்தை அருள்பவரான தந்தையின் மூலமாகப் பிறவி எடுத்துள்ளீர்கள். உங்களுக்குப் பிறப்பு கொடுத்த ஒரேயொருவர், பாக்கியத்தை அருள்பவராக இருப்பதனால் உங்களின் பிறப்பும் மிகவும் அலௌகீகமானதும் மேன்மையானதும் ஆகும். உங்கள் எல்லோருக்கும் உங்களின் இந்தப் பிறப்பின் பாக்கியத்தை இட்டுப் போதையும் சந்தோஷமும் உள்ளதல்லவா? அத்துடன்கூடவே உறவுமுறைகளின் சிறப்பியல்பைப் பாருங்கள்: கல்பம் முழுவதும் வேறெந்த ஆத்மாக்களிடமும் இத்தகைய உறவுமுறைகள் கிடையாது. விசேடமான ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே ஒரேயொருவரிடம் இருந்து இந்த மூன்று உறவுமுறைகளையும் பெற்றுள்ளீர்கள். அந்த ஒரேயொருவரே தந்தையும் ஆசிரியரும் அத்துடன் சற்குருவும் ஆவார். பிராமண ஆத்மாக்களைத் தவிர வேறு எவருக்கும் ஒரேயொருவருடன் மூன்று உறவுமுறைகளும் இல்லை. நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள்தானே? தந்தையின் உறவுமுறையில், அவர் உங்களுக்கு ஆஸ்தியை வழங்கி உங்களைப் பராமரிக்கிறார். உங்களின் ஆஸ்தியைப் பாருங்கள். அது மிக மேன்மையானது. அத்துடன் அழியாதது. உலகிலுள்ள மக்கள், இறைவனே தமது பாதுகாவலர் எனச் சொல்கிறார்கள். ஆனால் குழந்தைகளான நீங்களோ நம்பிக்கையுடனும் போதையுடனும் எமது பாதுகாவலர் இறைவனே எனக் கூறுகிறீர்கள். இத்தகைய பராமரிப்பை, இறை பராமரிப்பை, இறையன்பை வேறு யார் இறைவனிடமிருந்து தமது ஆஸ்தியாகப் பெற்றுள்ளார்கள்? எனவே ஒரேயொருவரே தந்தையும் பாதுகாவலரும் ஆசிரியரும் ஆவார்.

ஒவ்வோர் ஆத்மாவின் வாழ்க்கையிலும் மூன்று உறவுமுறைகள் அத்தியாவசியமானவை. ஆனால் அந்த மூன்று உறவுமுறைகளும் வெவ்வேறானவை. உங்களுக்கோ அந்த மூன்று உறவுமுறைகளும் ஒரேயொருவருடனேயே உள்ளது. உங்களின் கல்வியைப் பாருங்கள். இது முக்காலங்களைப் பற்றிய கல்வி. இது முக்காலங்களையும் அறிந்தவர் ஆகுவதற்கான கல்வி. கல்வி என்பது வருமானத்தின் ஆதாரம் எனப்படுகிறது. நீங்கள் கற்பதன் மூலம் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். உலகம் முழுவதையும் பாருங்கள்: அனைத்திலும் அதியுயர்ந்த அந்தஸ்து எனப்படுவது இராஜ அந்தஸ்தே. எனவே இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுகிறீர்கள்? நீங்கள் இப்போதும் அரசர்கள். எதிர்காலத்திலும் உங்களுக்கு இராஜ அந்தஸ்து கிடைக்கும். இப்போது உங்களுக்கு சுய இராச்சியம் உள்ளது. நீங்கள் சுய இராச்சியத்தைக் கொண்டுள்ள இராஜயோகிகள். எதிர்காலத்தில் உள்ள இராச்சிய பாக்கியமும் அழியாதது. இதைவிட உயர்ந்த அந்தஸ்து கிடையாது. நீங்கள் ஆசிரியரிடமிருந்து பெறுகின்ற கற்பித்தல்கள், முக்காலங்களை அறிந்தவர் ஆகுவதற்காகும். நீங்கள் பெறுகின்ற அந்தஸ்து, தெய்வீக, இராஜ அந்தஸ்தே. உங்களின் பிராமண வாழ்க்கையில் தவிர உங்களில் எவரும் தமது ஆசிரியருடன் இத்தகைய உறவுமுறையைக் கொண்டிருந்ததில்லை, இனிமேலும் கொண்டிருக்கப் போவதுமில்லை. அத்துடன்கூடவே சற்குருவின் உறவுமுறை – நீங்கள் சற்குருவிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். இந்த ஸ்ரீமத் இன்றும் பக்தி மார்க்கத்தில் நினைவுகூரப்படுகிறது. ‘நாம் எதன் அடிப்படையில் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கிறோம்?’ என நீங்கள் நம்பிக்கையுடன் சொல்கிறீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையிலேயே ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கிறீர்கள். சோதித்துப் பாருங்கள்: உங்களின் ஒவ்வோர் அடியும் ஸ்ரீமத்திற்கேற்ப இருக்கிறதா? நீங்கள் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் வாழ்க்கையில் இந்தப் பாக்கியம் என்ற பேற்றை நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்களா? உங்களின் ஒவ்வோர் அடியும் ஸ்ரீமத்திற்கேற்ப உள்ளதா? அல்லது உங்களின் மனதின் கட்டளைகளும் மற்றவர்களின் கட்டளைகளும் சிலவேளைகளில் அதனுடன் கலந்துவிடுகிறதா? இதை இனங்கண்டு கொள்வதெனில் ஒவ்வோர் அடியும் ஸ்ரீமத்திற்கேற்ப இருந்தால் நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களைச் சேகரிப்பதை அனுபவம் செய்வீர்கள். உங்களின் அடிச்சுவடுகள் ஸ்ரீமத்திற்கேற்ப இருந்தால் இலகு வெற்றி கிடைக்கும். அத்துடன்கூடவே நீங்கள் சற்குருவிடமிருந்து ஆசீர்வாதங்களின் சுரங்கத்தையும் பெற்றுள்ளீர்கள். உங்களிடம் ஆசீர்வாதங்கள் இருக்கும்போது நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை என்பதே ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை இனங்கண்டு கொள்வதாகும். எனவே சற்குருவின் உறவுமுறையில் நீங்கள் சதா மேன்மையான வழிகாட்டல்களையும் ஆசீர்வாதங்களையும் பேறாகப் பெறுவீர்கள். இந்த இலகுவான பாதையின் சிறப்பியல்பு என்னவென்றால் ஒரேயொருவருடன் நீங்கள் மூன்று உறவுமுறைகளையும் கொண்டிருக்கும்போது அந்த ஒரேயொருவரை நினைப்பது இலகுவாக இருக்கும். மூன்று பேரையும் தனித்தனியாக நினைவு செய்ய வேண்டிய தேவையில்லை. இதனாலேயே நீங்கள் எல்லோரும் ‘வேறு எவரும் அன்றி, ஒரேயொரு பாபா’ எனச் சொல்கிறீர்கள். ஒரேயொருவரில் விசேடமான உறவுமுறைகள் அடங்கியிருப்பதால் அது இலகுவானது. எனவே உங்களின் பாக்கிய நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லோரும் தந்தையிடமிருந்து பேறுகளைப் பெற்றுள்ளீர்கள்.

மூன்றாவது பாக்கிய நட்சத்திரம், சகல பேறுகளுக்கும் உரியது. ஞாபகார்த்தம் உள்ளது: ‘பிராமணர்களின் பொக்கிஷக் களஞ்சியத்தில் எந்தக் குறையும் இல்லை’. உங்களின் பொக்கிஷக் களஞ்சியங்களை நினையுங்கள். இத்தகைய பொக்கிஷங்களை அல்லது சகல பேறுகளையும் வேறு யாரிடமிருந்தாவது பெறுவது சாத்தியமா? ‘எனது பாபா!’ என உங்களின் இதயபூர்வமாக நீங்கள் சொன்னவுடனேயே பொக்கிஷங்கள் உங்களின் முன்னால் வந்துவிடும். ஆகவே இத்தகைய மேன்மையான பாக்கியம் சதா உங்களின் விழிப்புணர்வில் இருக்கட்டும். இது வரிசைக்கிரமமானது. ஒவ்வொரு குழந்தையும் பலமில்லியன்களில் ஒருவராக இருப்பதால் பாப்தாதா இப்போது குழந்தைகளான உங்கள் எல்லோரையும் வரிசைக்கிரமமாக அன்றி முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும் என விரும்புகிறார். ஆகவே உங்களையே கேட்டுப் பாருங்கள்: நீங்கள் வரிசைக்கிரமம் ஆனவர்களா? அல்லது முதலாம் இலக்கத்தவரா? நீங்கள் எத்தகையவர்? ஆசிரியர்களே, நீங்கள் முதலாம் இலக்கத்தவரா அல்லது வரிசைக்கிரமமானவர்களா? பாண்டவர்களே, நீங்கள் முதலாம் இலக்கத்தவரா அல்லது வரிசைக்கிரமமானவர்களா? நீங்கள் எத்தகையவர்? நீங்கள் முதலாம் இலக்கத்தவர் என்றும் எப்போதும் இப்படியே இருப்பீர்கள் என்றும் நினைப்பவர்கள் - இன்று நீங்கள் முதலாம் இலக்கத்தவராகவும் நாளை வரிசைக்கிரமமாக இருப்பவர்களில் ஒருவராகவும் ஆகுவதில்லை - தமது புத்திகளில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதில் முதலாம் இலக்கத்தவராக இருப்பீர்கள் என்ற இத்தகைய நம்பிக்கை கொண்டவராக இருந்து சதா முதலாம் இலக்கத்தவராக இருப்பவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அத்தகையவர்களா? செய்ய வேண்டும் என்பதற்காக உங்களின் கைகளை உயர்த்தாதீர்கள். கவனமாகக் கருதிய பின்னர் அவற்றை உயர்த்துங்கள். அவற்றை உயரே உயர்த்துங்கள். நீங்கள் அவற்றை அரைவாசி மட்டும் உயர்த்தினால் நீங்களும் அரைவாசியே இருப்பீர்கள். உங்களில் பலர் உங்களின் கைகளை உயர்த்தியுள்ளீர்கள். பாருங்கள். தாதி அவர்களைப் பார்த்தாரா? இப்போது முதலாம் இலக்கத்தவர்களிடம் இருந்து கணக்குவழக்கை வாங்கிக் கொள்ளுங்கள். ஆம், ஜனக், கணக்குவழக்கைப் பெறுங்கள். இரட்டை வெளிநாட்டவர்கள் அவற்றை உயர்த்தினார்களா? கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் முதலாம் இலக்கத்தவரா? உங்களின் கைகளை உயர்த்தியதன் மூலம் நீங்கள் பாப்தாதாவின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினீர்கள். வாழ்த்துக்கள். அச்சா. உங்களின் கையை உயர்த்தினீர்கள் என்றால் உங்களுக்குத் தைரியம் உள்ளது என்று அர்த்தம். உங்களுக்குத் தைரியம் இருந்தால் பாப்தாதா உங்களின் உதவியாளராக இருப்பார். எவ்வாறாயினும் இப்போது பாப்தாதா எதனை விரும்புகிறார்? நீங்கள் முதலாம் இலக்கத்தவர், அது சந்தோஷமான விடயம். ஆனால்..... பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? ஆனால் என்ன? அல்லது, ஆனால் என்பது இல்லையா? எவ்வாறாயினும் பாப்தாதாவிடம் ஓர் ஆனால்... உள்ளது.

எல்லாமே உங்களின் மனங்களில் அமிழ்ந்திருப்பதையும் ஆனால் அது உங்களின் மனங்களில் மட்டுமே இருப்பதையும் உங்களின் முகங்களிலும் நடத்தையிலும் அது வெளிப்படாமல் இருப்பதையுமே பாப்தாதா கண்டார். இப்போது பாப்தாதா உங்களின் நடத்தையிலும் உங்களின் முகங்களிலும் முதலாம் இலக்க ஸ்திதியைக் காண விரும்புகிறார். இப்போது காலத்திற்கேற்ப முதலாம் இலக்கத்தவர் எனக் கூறுபவர்கள் தமது ஒவ்வொரு செயல்களினூடாகவும் காட்சிகளை அருளும் ரூபங்களாகத் தென்பட வேண்டும். நீங்கள் காட்சிகளை அருளும் ரூபங்கள் என்பது உங்களின் முகங்களில் புலப்பட வேண்டும். கடைசிப் பிறவியிலும் இறுதிக் காலப்பகுதியிலும் உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் காட்சிகளை அருளும் ரூபங்களாக அனுபவம் செய்யப்படுகின்றன. ஆகவே உயிர்வாழும் ரூபத்திலும் நீங்கள் தந்தை பிரம்மாவை பௌதீக ரூபத்தில் கண்டீர்கள். அவர் பின்னரே தேவதை ஆகினார். ஆனால் பௌதீக ரூபத்தில் இருந்தபோதும் உங்கள் எல்லோராலும் எதைக் காணக்கூடியதாக இருந்தது? அவர் சாதாரணமானவராகத் தோன்றினாரா? அவரின் கடைசி 84 ஆவது பிறவியிலும் அவரின் வயதான காலத்தில் அவருக்கு 60 வயதாக இருந்த போதும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அவர் காட்சிகளை அருளும் ரூபமாக இருந்ததை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்தீர்கள்தானே? நீங்கள் இதை பௌதீக ரூபத்தில் அனுபவம் செய்தீர்கள்தானே? முதலாம் இலக்கத்தவராக இருப்பதற்காகத் தமது கைகளை உயர்த்தியவர்களுக்கும் அதைப் போன்றே இருக்க வேண்டும். நீங்கள் இதைத் தொலைக்காட்சியில் பதிவு செய்தீர்கள்தானே? பாப்தாதா உங்களின் பைலைப் பார்ப்பார். பாபாவிடம் ஒரு பைல் உள்ளதல்லவா? எனவே இப்பொழுதில் இருந்து உங்களின் ஒவ்வொரு செயல்களிலும் இது அனுபவம் செய்ய வேண்டும். சாதாரணமான செயலாக இருந்தாலும் நீங்கள் என்னதான் செய்தாலும் நீங்கள் வியாபாரம் செய்தாலென்ன அல்லது வேறு ஏதாவது செய்தாலென்ன, நீங்கள் ஒரு வைத்தியராகவோ அல்லது சட்டத்தரணியாகவோ வேலை செய்தாலென்ன, நீங்கள் எதைச் செய்தாலும் மற்றவர்களுடன் தொடர்பில் வருகின்ற போதெல்லாம் அல்லது மற்றவர்களுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்துகின்ற பொழுதெல்லாம் உங்களின் நடத்தையினூடாக நீங்கள் வேறுபட்டவர் என்றும் தனித்துவமானவர் என்றும் அவர்கள் உணர வேண்டும். அல்லது நீங்கள் சாதாரணமானவர்கள், ‘லௌகீக மக்களும் அதைச் செய்கிறார்கள்தானே’ என நீங்கள் நினைக்கிறீர்களா? அது வேலையின் சிறப்பியல்பு அல்ல. ஆனால் உங்களின் நடைமுறை வாழ்க்கையின் சிறப்பியல்பு. ‘இது மிக நல்லதொரு வியாபாரம், அவர் மிக நல்லதொரு சட்டத்தரணி, அவர் மிக நல்லதொரு இயக்குனர்...’ இவ்வாறு பலர் இருக்கிறார்கள். விசேடமான ஆத்மாக்களின் பெயர்கள் உள்ள புத்தகம் ஒன்று உள்ளது. அதில் பல மனிதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வாறு பலர் இருக்கிறார்கள். இவர் இந்த விசேட செயலைச் செய்தார். அவர் அந்த விசேட செயலைச் செய்தார். அதனால் அவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும் உங்களின் கைகளை உயர்த்தியவர்கள், உண்மையில் நீங்கள் எல்லோரும் கைகளை உயர்த்தியிருக்க வேண்டும், ஆனால் அவற்றை உயர்த்தியவர்கள், நீங்கள் அவற்றை உயர்த்தவே வேண்டும், உங்களின் நடைமுறை நடத்தையில் ஒரு மாற்றத்தை மக்கள் காண வேண்டும். இந்த சத்தம் இன்னமும் வெளிப்படவில்லை. நீங்கள் தொழிற்சாலையில் இருந்தாலென்ன அல்லது வேலை செய்தாலென்ன ஒவ்வோர் ஆத்மாவும் சாதாரணமான வேலை செய்யும்போதும் ‘இவர் காட்சிகளை அருளும் ரூபமாக இருக்கிறார்’ எனச் சொல்ல வேண்டும். இது சாத்தியமா? இது சாத்தியமா? முன்னால் இருப்பவர்கள் பேசுங்கள்! இது சாத்தியமா? இப்போது பெறுபேறுகளிலே இது அந்தளவிற்கு நடக்கவில்லைப் போல் தெரிகிறது. மிகச் சாதாரண தன்மையே தென்படுகிறது. ஆம், நீங்கள் ஒரு விசேடமான பணியைச் செய்து விசேட கவனத்தைச் செலுத்தும்போது அப்போது இது மிகவும் தென்படுகிறது. எவ்வாறாயினும் உங்களுக்குத் தந்தையிடம் அன்பு உள்ளது. உங்களுக்குத் தந்தையிடம் அன்பு உள்ளதல்லவா? எத்தனை சதவீதம்? ஆசிரியர்களே உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஆசிரியர்கள் பலர் வந்துள்ளனர்! இது சாத்தியமா? அல்லது நீங்கள் சிலவேளைகளில் சாதாரணமானவராகவும் சிலவேளைகளில் விசேடமானவராகவும் இருக்கிறீர்களா? நீங்கள் எந்தவொரு பணியைச் செய்யும்போதும் வெளிப்படுகின்ற வார்த்தைகள், அதாவது உங்களின் மொழி, அலௌகீகமாக இருக்க வேண்டும். சாதாரணமான மொழியாக இருக்கக்கூடாது.

பாப்தாதாவிற்கு இப்போது குழந்தைகள் எல்லோரின் மீதும் இந்த மேன்மையான நம்பிக்கை உள்ளது. பின்னர் தந்தையை வெளிப்படுத்துதல் இடம்பெறும். உங்களின் செயல்கள், நடத்தை, முகங்கள் இயல்பாகவே இதை வெளிப்படுத்தும். இது சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட மாட்டாது. சொற்பொழிவுகளில் நீங்கள் ஓர் அம்பை எய்கிறீர்கள். ஆனால் உங்களை அப்படி ஆக்கியவர் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர்களே தேடி வருவார்கள். உங்களை யார் இப்படி ஆக்கியது என அவர்களே கேட்பார்கள். படைப்பு, படைப்பவரை வெளிப்படுத்தும்.

எனவே இந்த வருடம் நீங்கள் என்ன செய்வீர்கள்? கிராமங்களில் சேவை செய்யும்படி தாதி உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நீங்கள் இதைச் செய்யலாம். ஆனால் பாப்தாதா இப்போது இந்த மாற்றத்தைக் காண விரும்புகிறார். ஒரு வருடத்தில் இதைச் செய்வது சாத்தியமா? ஒரு வருடத்தில்? அடுத்த தடவை பாபாவின் சந்திப்புக்கள் ஆரம்பம் ஆகும்போது இந்த வேறுபாடு தென்பட வேண்டும். பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற ஒலி சகல நிலையங்களில் இருந்தும் வெளிப்பட வேண்டும். அப்போது நீங்கள் இந்தப் பாடலைப் பாடுவீர்கள்: ‘பரிவர்த்தன் பரிவர்த்தன் (மாற்றம், மாற்றம்)!’ உங்களிடம் உள்ள பாக்கியத்தின் முன்னால் சாதாரணமான வார்த்தைகள் சரியாகத் தென்படவில்லை. இதற்கான காரணம் ‘நான்’ என்பதே. இந்த நான், நான் என்ற உணர்வு: ‘நான்’ என்ன நினைக்கிறேனோ ‘நான்’ என்ன சொல்கிறேனோ ‘நான்’ என்ன செய்கிறேனோ, அது மட்டுமே சரி! ‘நான்’ என்ற இந்த உணர்வால் அகங்காரமும் அத்துடன் கோபமும் உள்ளன. இரண்டும் தமது சொந்தப் பணியைச் செய்கின்றன. அது தந்தையின் புனித பிரசாதமாக இருக்கும்போது எங்கிருந்து ‘நான்’ என்பது வந்தது? புனிதமான பிரசாதத்திற்கு யாராவது ‘எனது’ என்று சொல்ல முடியுமா? உங்களிடம் புத்தி இருக்கும்போது உங்களிடம் ஒரு நிபுணத்துவம் அல்லது சிறப்பியல்பு இருக்கும்போது பாப்தாதா அந்தச் சிறப்பியல்பிற்கும் புத்திக்கும் நன்றி சொல்கிறார். ஆனால் உங்களுக்கு ‘நான்’ என்ற உணர்வு வரக்கூடாது. இப்போது ‘நான்’ என்ற இந்த உணர்வை முடியுங்கள். ‘நான்’ என்ற இந்த உணர்வானது சூட்சுமமானது. அலௌகீக வாழ்க்கையில் ‘நான்’ என்ற இந்த உணர்வானது உங்களைக் காட்சிகள் அருளும் ரூபமாக வர அனுமதிக்காது. எனவே தாதிகள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த மாற்றம் சாத்தியமா? இது சாத்தியமா? மூன்று பாண்டவர்களும் கூறுங்கள். நீங்கள் மூவரும் விசேடமானவர்கள் தானே? நீங்கள் மூவரும் கூறுங்கள்: இது சாத்தியமா? இது சாத்தியமா? சாத்தியமா? அச்சா. இப்போது இதில் கொமாண்டர் ஆகுங்கள். வேறு எதிலும் கொமாண்டர் ஆகாதீர்கள். மாற்றத்தின் கொமாண்டர் ஆகுங்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி ஆகுவீர்களா? நீங்கள் இப்படி ஆகுவீர்களா? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா நீங்கள் இப்படி ஆகுவீர்களா? பம்பாயைச் சேர்ந்தவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (பார்லே நிலையத்தைச் சேர்ந்த யோகினிபென் இங்கே அமர்ந்திருக்கிறார்). பம்பாயைச் சேர்ந்தவர்கள் இப்படி ஆகுவீர்களா? நீங்கள் இப்படி ஆகுவதாக இருந்தால் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா டெல்லியைச் சேர்ந்தவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! டெல்லியைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்வீர்களா? ஆசிரியர்களே பேசுங்கள்! கவனமாக இருங்கள்! பாப்தாதா ஒவ்வொரு மாதமும் அறிக்கையைக் கேட்பார். உங்களுக்கு இந்தத் தைரியம் உள்ளதல்லவா? வாழ்த்துக்கள்.

இந்தோரைச் சேர்ந்தவர்களே உங்களின் கைகளை உயர்த்துங்கள். இந்தோரைச் சேர்ந்த ஆசிரியர்களே உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஆசிரியர்கள் இதைச் செய்வீர்களா? இந்தோர் இதைச் செய்வீர்களா? உங்களின் கைகளை அசையுங்கள்! நீங்கள் எல்லோரும் கை அசைக்கவில்லை. நீங்களும் இதைச் செய்து மற்றவர்களும் அதைச் செய்யத் தூண்டுவீர்களா? தாதிகளே பாருங்கள். நீங்கள் அதைத் தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்களே உங்களின் கைகளை உயர்த்துங்கள்! குஜராத் இதைச் செய்யுமா? உங்களின் கைகளை அசைப்பது இலகுவானது. இப்போது நீங்கள் உங்களின் மனங்களை அசைக்க வேண்டும். அந்தத் துன்பங்கள் அனைத்தையும் பார்க்கும்போது உங்களுக்குக் கருணை பிறக்கவில்லையா? இப்போது மாற்றம் ஏற்பட்டால் நல்லதுதானே? இப்போது வெளிப்படுத்தலுக்கான திட்டம் உங்களின் நடைமுறை வாழ்க்கை ஆகும். எவ்வாறாயினும் நீங்கள் செய்யும் நிகழ்ச்சிகள் உங்களை மும்முரமாக வைத்திருப்பதற்கு மிகவும் நல்லது. ஆனால் உங்களின் நடத்தையினூடாகவும் முகங்களினூடாகவும் வெளிப்படுத்துதல் இடம்பெறும். ஏதாவது பிராந்தியம் விடுபட்டுள்ளதா? உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உத்தரப் பிரதேசத்தில் இருந்து வெகுசிலர் வந்துள்ளார்கள். அச்சா உத்தரப்பிரதேசம் இதைச் செய்யுமா? மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உயரே உயர்த்துங்கள்! அச்சா. மகாராஷ்டிரா இதைச் செய்யுமா? வாழ்த்துக்கள்! இராஜஸ்தான் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஆசிரியர்களே உங்களின் கைகளை அசையுங்கள்! கர்நாடகா உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்வீர்களா? ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஓகே நாம் இந்த உரையாடலைச் செய்தோம். இரட்டை வெளிநாட்டவர்களே உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஜயந்தி எங்கே? இரட்டை வெளிநாட்டவர்கள் இதைச் செய்வீர்களா? இப்போது பாருங்கள் நீங்கள் இதை ஒன்றுகூடலில் கூறியுள்ளீர்கள். நீங்கள் எல்லோரும் மிக நல்ல தைரியத்தைக் காட்டியுள்ளீர்கள். அதற்காகப் பலமில்லியன் மடங்கு பாராட்டுக்கள். வெளியில் உள்ளவர்களும் பாபா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமது நாடுகளில் இருந்தும் மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள்.

பொதுவாக மேன்மையான ஆத்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான வார்த்தை என்று கூறுவார்கள். ‘மகாராஜா (பிராமணப் பூசாரி) சொல்வதெல்லாம் உண்மை’ என அவர்கள் சொல்வார்கள். எனவே நீங்கள் மகா மகா மகாராஜாக்கள். உங்களின் ஒவ்வொரு வாசகத்தைக் கேட்கும்போதும் அவர்கள் தமது இதயங்களில் அது சத்திய வார்த்தை என்று உணர வேண்டும். உங்களின் மனம் அதிகளவால் நிறைந்துள்ளது. உங்களின் மனங்களில் என்ன உள்ளது என்பதைப் பார்ப்பதற்கு பாப்தாதாவிடமும் ஒரு தொலைக்காட்சி உள்ளது. இங்கே இந்தத் தொலைக்காட்சி வெளி முகங்களை மட்டுமே காட்டுகிறது. ஆனால் ஒவ்வொரு கணமும் உங்களின் மனங்களின் நிலையைப் பார்ப்பதற்கு பாப்தாதாவிடம் ஒரு கருவி உள்ளது. எனவே உங்களின் மனங்களில் அதிகளவு புலப்படுகிறது. உங்களின் மனங்களை அவர் தொலைக்காட்சியில் பார்க்கும்போது அவர் மிக்க மகிழ்ச்சி அடைகிறார். உங்களிடம் அதிகளவு பொக்கிஷங்கள் உள்ளன. அதிகளவு சக்திகள் உள்ளன. எவ்வாறாயினும் அது உங்களின் செயல்களில் வரும்போது கொள்ளளவிற்கேற்பவே உள்ளது. இப்போது அதை உங்களின் செயல்களிலும் உங்களின் வார்த்தைகளிலும் உங்களின் முகத்திலும் நடத்தையிலும் கடைப்பிடியுங்கள். அப்போதே உங்களிடம் உள்ள சக்திகள் வந்தனர் என்ற பாடலைப் போல் நீங்கள் எல்லோரும் சிவனின் சக்திகள் என எல்லோரும் சொல்வார்கள். பாண்டவர்களும் சக்திகளே. பின்னர் சக்திகள் தந்தை சிவனை வெளிப்படுத்துவார்கள். இப்போது சிறிய விளையாட்டுகளை முடியுங்கள். இப்போது உங்களின் ஓய்வெடுக்கும் ஸ்திதி வெளிப்பட வேண்டும். எனவே இந்த வேளையில் பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரையும் பாப்தாதாவின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் நம்பிக்கை நட்சத்திரங்களாகவே பார்க்கிறார். ஏதாவது சூழ்நிலை வந்தால் இந்த சுலோகனை நினைவு செய்யுங்கள்: ‘மாற்றம்! மாற்றம்! மாற்றம்!’

பாப்தாதாவின் இன்றைய வாசகங்களில் இந்த ஒரு வார்த்தையை மறக்காதீர்கள். அது என்ன வார்த்தை? மாற்றம். ‘நான் மாற வேண்டும். மற்றவர்கள் மாறினால்தான் நான் மாறுவேன் என்பதல்ல. நான் என்னையும் மாற்றி மற்றவர்களையும் மாற்ற வேண்டும் - மற்றவர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் மட்டுமே நான் மாறுவேன் என்பதல்ல’. நீங்கள் கருவிகள் ஆகவேண்டும். நீங்கள் அர்ச்சுனர்கள் ஆகவேண்டும். அப்போதுதான் நீங்கள் தந்தை பிரம்மாவைப் போல் முதலாம் இலக்கத்தைப் பெறுவீர்கள். பின்னால் இருப்பவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு பாப்தாதா முதலாம் இலக்க அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.

எங்கும் உள்ள அதிகபட்ச பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும் முழு உலகிலும் உள்ள பலமில்லியன் ஆத்மாக்களில் விசேடமான ஆத்மாக்களுக்கும் சதா தமது நடத்தையினூடாகவும் முகத்தினூடாகவும் பாப்தாதாவை வெளிப்படுத்தும் விசேடமான குழந்தைகளுக்கும் ஒத்துழைப்பு மற்றும் அன்பின் பந்தனத்தில் இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் தந்தை பிரம்மாவைப் போல் தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எப்போதும் அலௌகீகச் செயல்களைச் செய்யும் அலௌகீகமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

வெவ்வேறு பிரிவுகளின் சேவைக்காக பாப்தாதாவின் தூண்டுதல்கள்:

வெவ்வேறு பிரிவுகளினூடாக இடம்பெறும் சேவையில் மிக நல்ல பெறுபேறு புலப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் தமது தொடர்புகளை அதிகரிக்க முயற்சி செய்கிறார்கள். எவ்வாறாயினும் பாப்தாதா உங்களை மருத்துவப் பிரிவைப் போல் செயல்பட விரும்புகிறார். மருத்துவத் துறை, இதயத்திற்கும் தியானத்திற்கும் இடையிலான நடைமுறைத் தொடர்பைக் காட்டி இதயத்தின் பிரச்சனைகளை எவ்வாறு தியானத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்ற அத்தாட்சியை வழங்கினார்கள். நீங்கள் அந்த அத்தாட்சியை வழங்கினீர்கள்தானே? நீங்கள் அந்த அத்தாட்சியைக் கொடுத்துள்ளீர்கள் தானே? நீங்கள் எல்லோரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே? இந்த முறையில் உலகிலுள்ள மக்களுக்கு நடைமுறை அத்தாட்சி தேவைப்படுகிறது. அதேபோல் இங்கே வந்துள்ள பிரிவுகள் எல்லோருமே நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய வேண்டும். நீங்கள் இதைச் செய்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களின் நடைமுறைப் பெறுபேறுகள் எல்லோருக்கும் முன்னால் வரும் வகையில் திட்டம் இடுங்கள். பாப்தாதா இதைச் சகல பிரிவுகளுக்கும் சொல்கிறார். அது அரசாங்கத்தையும் சென்றடைகிறது அல்லவா? அந்த ஒலி அங்கும் இங்கும் பரவியுள்ளது. இது தியானத்தின் மூலம் சாத்தியமாகும். இப்போது இதை மேலும் அதிகரியுங்கள்.

இப்போது இதன் நடைமுறை அத்தாட்சியை வழங்குங்கள். எனவே தியானத்தின் மூலம் எப்படி எல்லாமே சாத்தியமாகும் என்பது எங்கும் பரவும். எல்லோருடைய கவனமும் தியானத்தை நோக்கி ஆன்மீகத்தை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?

ஆசீர்வாதம்:
மௌன சக்தியால் வெளிப்படுத்தலின் முரசங்கள் உலகெங்கும் ஒலிக்கும் வகையில் மௌனத்தின் சொரூபம் ஆகுவீர்களாக.

வார்த்தைகள் அன்றி மௌனமே விஞ்ஞானத்தை வெல்லும் எனப் பாடப்படுகிறது. காலமும் முழுமை நிலையும் நெருங்கி வருவதனால் அதிகம் சத்தத்திற்குள் வருவதில் இயல்பாகவே விருப்பமின்மை காணப்படும். உதாரணமாக நீங்கள் இப்போது விரும்புவதனால் அல்லது பழக்கதோஷத்தால் சத்தத்திற்குள் வருகிறீர்கள். அதேபோல் நீங்கள் விரும்பி சத்தத்திற்கு அப்பால் செல்வீர்கள். சத்தத்திற்கு வருவதற்கு நீங்கள் நிகழ்ச்சிகளைச் செய்கிறீர்கள். இந்த மாற்றம் புலப்படும்போது வெற்றி முரசங்கள் அடிக்கப் போகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மௌன சொரூபமாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

சுலோகம்:
பூச்சியமான (ஸீரோ) தந்தையுடன் இருப்பவர்கள் கதாநாயக (ஹீரோ) நடிகர்கள் ஆவார்கள்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால் சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

தற்சமயம் உலகிற்கு நன்மை செய்வதற்கான இலகுவான வழிமுறை உங்களின் மேன்மையான எண்ணங்களின் ஒருமுகப்படுத்தலால் ஆத்மாக்கள் எல்லோருடைய அலைபாயும் புத்திகளை ஸ்திரமடையச் செய்வதும் ஒருமுகப்படுத்துவதும் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள ஆத்மாக்கள் எல்லோரும் குறிப்பாகத் தமது அலைபாயும் புத்திகள் ஒருமுகப்பட வேண்டும் என்றும் தமது மனங்களின் விஷமத்தனம் முடிவடைய வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். நீங்கள் ஒருமுகப்பட்டவராகி உங்களின் மனதால் சக்திகளைத் தானம் செய்தால் மட்டுமே உங்களால் உலகின் இந்த ஆசையைப் பூர்த்தி செய்ய முடியும்.