26.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இவ்வுலகில் ஒரேயொரு தந்தை மாத்திரமே தன்னலமற்ற சேவையைச் செய்கிறார், ஏனெனில், நீங்கள் நிச்சயமாகச் செய்த செயல்கள் அனைத்தினதும் பலனைப் பெறுகிறீர்கள்.
கேள்வி:
நாடகத்திற்கேற்ப, 100% நிச்சயமான எவ்விடயம் குழந்தைகளாகிய உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றது?பதில்:
நாடகத்திற்கேற்ப, புதிய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட உள்ளது என்பது நிச்சயமானதாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்னும் சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. நிச்சயமாக இப்பழைய உலகம் அழிவடைய உள்ளது. குழந்தைகளான நீங்கள் அதிகமாக முயற்சி செய்கையில், ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள்.பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதால், நாங்கள் முழு உலகையும் கண்டுகொண்டோம், பூமி, ஆகாயம், அனைத்தும் எங்களுக்கே உரியவை.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எதனைக் கூறுகிறீர்களோ, அதே விடயங்களையே பாபாவும் கூறுகிறார். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, உங்களைக் கண்டுகொண்டதால், நாங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறோம். தந்தையும் கூறுகிறார்: குழந்தைகளே, மன்மனாபவ! இது அதே விடயமே. இந்த ஆன்மீக ஒன்றுகூடலுக்குச் செல்வதனால், நீங்கள் எதனைப் பெறுகிறீர்கள் என மக்கள் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய உங்களை வினவுகிறார்கள். ஆகவே, பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் பாப்தாதாவினூடாக உலக அதிபதிகள் ஆகுகிறோம். வேறு எவராலும் உலக அதிபதி ஆகமுடியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். சிவபாபாவால் உலக அதிபதியாக முடியாது. குழந்தைகளான நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். உங்கள் தந்தை உலக அதிபதி ஆகுவதில்லை. அத்தகைய தன்னலமற்ற சேவையைச் செய்கின்ற வேறு எவரும் கிடையாது. அனைவரும் நிச்சயமாகத் தாங்கள் செய்கின்ற சேவையின் பலனைப் பெறுகிறார்கள். அது சமூக சேவையாக இருந்தாலென்ன அல்லது மக்கள் பக்தி மார்க்கத்தில் அல்லது வேறு எங்கேயாவது எதனைச் செய்தாலென்ன, அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் செய்தவற்றின் பலனைப் பெறுகிறார்கள்; அரசாங்கம் அவர்களுக்குப் பணம் கொடுக்கிறது. தந்தை கூறுகிறார்: நான் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற, தன்னலமற்ற சேவையைச் செய்கிறேன், ஆனால் நான் அவ்வாறு ஆகுவதில்லை, நான் குழந்தைகளாகிய உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகிறேன்; நான் உங்களைச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்கி, உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்து, பின்னர் என்னுடைய நிர்வாணா தாமத்துக்குச் சென்று, ஓய்வு ஸ்திதியில் இருக்கிறேன். அசரீரி உலகமே ஓய்வு எனக் கூறப்படுகிறது. மக்கள் ஓய்வு பெறுகிறார்கள்: அவர்கள் அனைத்தையும் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு, ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்கிறார்கள். முக்திக்கான பாதை காண்பிக்கப்படுவதற்காக அவர்கள் குருமார்களை ஏற்றுக் கொள்கிறார்கள். எந்த மனிதராலும் முக்திக்கான அல்லது ஜீவன்முக்திக்கான பாதையை எவருக்கும் காண்பிக்க முடியாது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்களால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. அவர்களால் அதனைத் தங்களுக்குத் தாங்களே கொடுக்கவும் முடியாது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே சற்கதியைக் கொடுக்க முடிந்தால், அதனை அவர்களால் ஏனையோருக்கும் கொடுக்க முடியும். தந்தை பரந்தாமத்தில் இருந்து வருகிறார். அவரே அந்த இடத்தில் வசிப்பவர். குழந்தைகளாகிய நீங்களும் அந்த இடத்தில் வசிப்பவர்கள். நீங்கள் இந்தச் செயற் களத்தில் உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். குழந்தைகளான உங்களுக்காக பாபா இங்கு ஒருமுறை வரவேண்டும். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டு வருவதனால், நரகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். சிவபாபா, பிரம்மாவினூடாக ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு 5000 வருடங்களும் நீங்கள் வந்து, உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகப் பிரம்மாவினூடாகச் சிவபாபாவின் குழந்தைகள் ஆகுகிறீர்கள் என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. அவர் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். அவரே ஞானம் நிறைந்தவரும், ஞானக்கடலும் ஆவார். அவர் உங்களுக்கு யோகத்தை, அதாவது, நினைவைக் கற்பிக்கிறார். ஆனால் எவ்வாறு அசரீரியான ஒருவரால் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? இதனாலேயே அவர் கூறுகிறார்: பிரம்மாவினூடாகவே, நான் உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறேன். அதாவது, நான் தேவ தர்மத்தின் ஸ்தாபனையைத் தூண்டுகிறேன். இப்பொழுது தேவ தர்மம் இல்லை; அது மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். நான் மீண்டும் ஒருமுறை ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையைத் தூண்டி, திரும்பவும் அனைவரையும் முக்தி தாமத்துக்கு அழைத்துச் செல்கிறேன். பாரதமே புராதன தேசமாகும், இதனாலேயே உண்மையில் பாரதத்தின் சனத்தொகையே அனைத்திலும் பெரியதாக இருக்க வேண்டும். அத்தகைய விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் சனத்தொகையே அனைத்திலும் பெரியதாக இருக்க வேண்டும். அது 5000 வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஏனைய அனைவரும் 2500 வருடங்களுக்குப் பின்னரே வருகிறார்கள். இஸ்லாமியர்களின் சனத்தொகை குறைவாக இருக்க வேண்டும். சிறிது காலத்துக்குப் பின்னர், பௌத்தர்கள் வருகிறார்கள், ஆகவே அவர்கள் மத்தியில் சிறிதளவு வேறுபாடு இருக்க வேண்டும். இஸ்லாமியர்களும், பௌத்தர்களும் முதலில் சதோபிரதானாக இருக்கிறார்கள், பின்னர் அவர்கள் படிப்படியாகத் தமோபிரதான் ஆகுகிறார்கள். அந்தக் கணக்கும் உள்ளது. இவ்விடயங்களைப் பற்றி விசேடமான விவேகிகளாக உள்ள குழந்தைகள் சிந்திக்க வேண்டும். இந்நாட்களில், சீனாவின் சனத்தொகையே அனைத்திலும் பெரியது என்று அவர்கள் எழுதுகிறார்கள். எவ்வாறாயினும், மக்களுக்கு உலகச் சக்கரத்தின் இந்த ஞானம் இருப்பதில்லை. இந்த இரகசியங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் உள்ளது. இது கல்விமான்களுக்கு விபரமாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். தேவ தர்மம் இருந்ததிலிருந்து 5000 வருடங்கள் ஆகி விட்டன. ஆகவே, இந்நேரத்தில் அவர்களின் சனத்தொகையே அனைத்திலும் பெரியதாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், தேவ தர்மத்துக்கு உரியவர்கள் ஏனைய சமயங்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். முதலில், பலர் முஸ்லீம்கள் ஆகினார்கள், பின்னர் பலர் பௌத்தர்கள் ஆகினார்கள். இங்கும், பல பௌத்தர்களும், எண்ணற்ற கிறிஸ்தவர்களும் உள்ளார்கள். தேவ தர்மத்தின் குறிப்பே கிடையாது. நாங்கள் பிராமணர்கள் என்று எங்களை நாங்கள் கூறினாலும், அவர்கள் எங்களை இந்துக்கள் என்னும் நிரலினுள் இடுகிறார்கள். ஸ்ரீமத்துக்கேற்ப, பிராமணர்களாகிய எங்களினூடாக, ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் புரிந்துணர்வு இருக்க வேண்டும். சமயங்கள் நினைவுகூரப்படுகின்றன. இங்கு மக்கள் தங்களை இந்துக்களாகக் கருதுகிறார்கள். இந்து சமயமே அனைத்திலும் பழைமையான, ஆரிய சமயம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாரத மக்கள் முதலில் ஆரிய மக்களாக (நாகரிகமானவர்களாக) இருந்தார்கள்; அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள். அவர்கள் இப்பொழுது ஆரிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் ஆகிவிட்டார்கள். எவருக்கும் எவ்விவேகமும் இருப்பதில்லை. தங்கள் மனங்களில் தோன்றுகின்ற எச்சமயத்தின் பெயரையாவது அவர்கள் பயன்படுத்துகிறார்கள். விருட்சத்தின் முடிவில் சிறிய கிளைகளும், இலைகளும் இருக்கின்றன. புதியவர்களுக்கான மரியாதை இருக்க வேண்டும். நீங்கள் பாபாவிடம் இருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஆகவே, உங்களுக்கு அத்தகையதோர் ஆஸ்தியைக் கொடுக்கின்ற தந்தையை நீங்கள் எவ்வளவுக்கு நினைவுசெய்ய வேண்டும்! அவரை நினைவு செய்வதனால், நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற்று, தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் உங்களுடைய லௌகீகத் தந்தையர்களிடம் இருந்து செல்வமாகிய ஆஸ்தியைப் பெறுவதுடன், தூய்மை அற்றவர்கள் ஆகுவதற்கான ஓர் ஆஸ்தியையும் பெறுகிறீர்கள். ஒருவர் உங்களுடைய லௌகீகத் தந்தையும், மற்றவர் இவ்வுலகத்துக்கு அப்பாற்பட்ட தந்தையும், இடையில் இருக்கும் இவர் சூட்சுமத் தந்தையும் ஆவார்கள். இடையிலுள்ள இவரே இரு சாராருடனும் தொடர்புபட்டுள்ளவர். சிவபாபாவுக்கு எச்சிரமமும் இருப்பதில்லை. இவரே பல்வேறு அவதூறுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்! உண்மையில், ஸ்ரீகிருஷ்ணர் அவதூறு செய்யப்படுவதில்லை. இவர் இடைநடுவில் சிக்கிக் கொண்டுள்ளார். தனது சொந்தப் பாதையில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது பிராமணர் அகப்பட்டுக் கொண்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவதூறுகளைப் பெறுவதற்காக இவர் இடையில் சிக்கிக் கொண்டார். சூட்சுமத் தந்தை மாத்திரமே இவ்விடயங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும். சிவபாபா இவரில் பிரவேசித்துத் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகிறார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். தூய்மையாக இருப்பதால், சிலர் அடிக்கப்படுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: நான் அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு வந்துவிட்டேன். மரணம் உங்கள் முன்னிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நிச்சயமாக விநாசம் தேவைப்படுகிறது: விநாசமின்றி, எவ்வாறு அங்கு அமைதியும், சந்தோஷமும் ஏற்பட முடியும்? ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது, யுத்தம் முடிவுக்கு வருவதற்காக மக்கள் யாகம் வளர்க்கிறார்கள். விநாசம் நிச்சயமாக நடைபெறும் என்பதைப் பிராமண குல அலங்காரங்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வேறு எவ்வாறு சுவர்க்க வாசல்கள் திறக்கும்? அனைவருமே சுவர்க்கத்துக்குச் செல்ல மாட்டார்கள். முயற்சி செய்பவர்களே அங்கு செல்வார்கள், ஏனைய அனைவரும் முக்தி தாமத்துக்குச் செல்வார்கள். மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாததால், அவர்களுக்கு அதிகளவு அச்சம் உள்ளது. அவர்கள் அமைதிக்காகத் தொடர்ந்தும் தடுமாறித் திரிகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கருத்தரங்குகளை நடாத்துகிறார்கள். எவ்வாறு சந்தோஷ தாமமும், அமைதி தாமமும் ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். விநாசமின்றி ஸ்தாபனை நடக்க முடியாது. நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்று விட்டீர்கள். எவரும் சண்டை போடாதிருக்கும் வகையில், எவ்வாறு அமைதி ஏற்பட முடியும் என அம்மக்கள் தொடர்ந்தும் வினவுகிறார்கள். ஏகத்துவம் இருக்க வேண்டும் என அனைவரும் கூறுகிறார்கள். தாங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகளான, சகோதரர்கள் என்ற வழிகாட்டல்களை அவர்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையிடம் இருந்தே பெற்றிருப்பின், ஏகத்துவம் இருக்க முடியும். அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகளாக இருப்பின், அவர்கள் தங்கள் மத்தியில் சண்டை போடக்கூடாது. அது அவ்வாறே சத்தியயுகத்தில் இருந்தது. அங்கு, அவர்களில் எவருமே ஒருவரோடொருவர் சண்டை இட்டதில்லை. அது சத்தியயுகம் பற்றிய விடயமாகும். இங்கு, இது கலியுகம். உண்மையிலேயே சத்தியயுகத்தில் தேவர்கள் இருந்தார்கள். நீங்கள் அங்கு இருக்கும்பொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில்லை. சத்தியயுகத்தில் மாத்திரமே ஓர் இராச்சியம் உள்ளது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். அங்கு அமைதியும், சந்தோஷமும் உள்ளன, அங்கு அனைத்தும் உள்ளன. உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளன. உண்மையிலேயே நீங்கள் சத்தியயுகத்தை ஆட்சிசெய்தீர்கள் என்பதையும், அங்கு பெருமளவு சந்தோஷம் இருந்தது என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். அத்தர்மம் பிரிவினையற்றது. வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. நீங்கள் இந்நேரத்தில் ஞானம்-நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகிறார். உங்களுடைய புகழ் தந்தையினுடைய புகழுக்குச் சமமாக ஆகவேண்டும். தெய்வீகக் காட்சிக்கான திறவுகோல் தந்தையிடமே உள்ளது. தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: நான் பக்திமார்க்கத்தில் செயற்பட வேண்டும். மக்கள் யாரை வழிபட்டாலும், அதற்கேற்ப, நான் அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறேன். இங்கு தெய்வீகக் காட்சிகளுக்கான பாகமும் தொடர்கிறது. அர்ச்சுனர் விநாசத்தின் ஒரு காட்சியைக் கண்டதாகக் கூறப்படுகிறது. விநாசம் நிச்சயமாக நடைபெற வேண்டும். விஷ்ணு பூமியின் ஸ்தாபனையும் நிச்சயமாக நடைபெற வேண்டும். தந்தை முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, மிகச்சரியாக விளங்கப்படுத்துகிறார். பாபா எங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகிறார். நாங்கள் தேவர்கள் ஆகும்பொழுது, நிச்சயமாக அசுர உலகம் அழிக்கப்படும். அனைத்துத் திசைகளில் இருந்தும் விரக்திக் குரல்கள் ஒலிக்கும். இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதைப் புத்தியினால் புரிந்துகொள்ள முடியும். கடும் மழையும் இருக்கும். இவை அனைத்தும் அழிக்கப்படும்பொழுது மாத்திரமே, சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படும். பூமி பஞ்ச தத்துவங்களின் பசளையைப் பெறும். பூமி எவ்வளவு பசளையைப் பெறுகிறது எனப் பாருங்கள்! தந்தை கூறுகிறார்: உருத்திர யாகத்தில் அனைவரும் அர்ப்பணிக்கப்படுவார்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வாறு உருத்திர ஞானயாகம் உருவாக்கப்படுகிறது எனப் பாருங்கள். அவர்கள் சிவபாபாவின் சிவலிங்கத்தையும், சிறிய சாலிகிராம்களையும் உருவாக்கி, அவற்றை வழிபட்டு, பின்னர் அவற்றை அழிக்கிறார்கள். பின்னர், மறுநாள், அவர்கள் அவற்றை மீண்டும் உருவாக்குகிறார்கள்; அவர்கள் அவற்றை வழிபட்டு, பின்னர் அவற்றை அழிக்கிறார்கள். சிவபாபாவுடன் சேவை செய்துள்ளவர்களுக்கும் அவர்கள் அதையே செய்கிறார்கள். மக்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியையும் உருவாக்கி, அதனை எரிக்கிறார்கள். வழக்கமாக, ஓர் எதிரியின் கொடும்பாவி ஒருமுறை அல்லது இருமுறை மாத்திரமே உருவாக்கப்பட்டு, பின்னர் எரிக்கப்படுகிறது; அவர்களுக்கு அதனை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்ற வழக்கம் உள்ளது என்பதல்ல, ஒரு தடவை மாத்திரமே அவர்கள் தங்களின் கோபம் அனைத்தையும் அகற்றுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனை எரிக்கிறார்கள். எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பின்னர் அவர்கள் இராவணன் சீதையை அபகரித்ததாகவும் கூறுகிறார்கள். அவர்கள் எதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை. இவை அனைத்தில் இருந்தும் வெளிநாட்டவர்கள் எதனைப் புரிந்து கொள்வார்கள்? எதையும் இல்லை! நாளுக்கு நாள், அவர்கள் இராவணனின் கொடும்பாவியை மென்மேலும் பெரியதாக ஆக்குகிறார்கள், ஏனெனில் இராவணன் பெருமளவு துன்பத்தை விளைவிக்கிறான். நீங்கள் இப்பொழுது இராவணனை வெற்றி கொள்கிறீர்கள். அவன் சத்தியயுகத்தில் இருக்க மாட்டான். நோய்கள் போன்ற கர்ம வேதனை அனைத்தும் இராவணனின் காரணமாகவே ஏற்படுகிறது. இராவணன் இருப்பதால், மக்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவகரமானவையாகவே உள்ளன. உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம் சந்தோஷத்தையும், துன்பத்தையும் பற்றியது. இவ் வரலாற்றையும், புவியியலையும் பற்றி எவரும் அறியார். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள்? எவரும் இதனை அறியார். சிறு குழந்தைகளான நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள்: இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தில் ஆட்சிசெய்தார்கள். அவர்கள் சங்கமயுகத்தில் இராஜயோகத்தைக் கற்று, அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். எவ்வாறு அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) தங்கள் இராச்சியத்தை அடைந்தார்கள் என்பதை இளம் பிரம்மாகுமாரிகள் சென்று பிர்லாவுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது கலியுகமாகும். இது சத்தியயுகம் என அழைக்கப்பட முடியாது. தற்சமயத்தில் இராச்சியம் எதுவும் இல்லை. அரசர்களின் கிரீடங்கள் அகற்றப்பட்டுள்ளன. நான்கு சமயநூல்கள் மாத்திரமே உள்ளன. கீதை எனும் சமயநூலினூடாக, சத்தியயுகத்தில் அன்றி, இந்நேரத்திலேயே மூன்று தர்மங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இலக்ஷ்மி நாராயணர் அல்லது இராமர் ஒரு தர்மத்தை ஸ்தாபிக்கிறார் என்பதல்ல. இத்தர்மங்கள் இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. பின்னர், இஸ்லாமிய, பௌத்த, கிறிஸ்துவ சமயங்கள் இருக்கும். கிறிஸ்தவர்களுக்குப் பைபிள் என்னும் ஒரு சமயநூல் மாத்திரமே உள்ளது - அவ்வளவுதான். பின்னர் வளர்ச்சி நடைபெறுகிறது. தேவ தர்மமே புராதனமானதும், ஆதி தர்மமும் ஆகும். இப்பொழுது தேவ தர்மம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் மிகவும் நன்றாக நாடகத்தின் உட்கருத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். உங்களுக்குச் சந்தோஷமும் ஏற்படுகிறது. நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சிய பாக்கியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு 100% நிச்சயமானது, இதில் யுத்தம் செய்வதற்கான கேள்வியே கிடையாது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது; அது நிச்சயமானதாகும். அது மரணத்தைப் போன்று நிச்சயமானது. நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோருகிறீர்கள் என்பதை அறிவீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். அதிகளவு முயற்சியைச் செய்கையில், நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போ கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குள் தந்தையின் புகழைக் கிரகியுங்கள். தந்தையைப் போன்று புகழத் தக்கவர்கள் ஆகுங்கள். இவ்வுலகத்துக்கு அப்பாலுள்ள தந்தையிடம் இருந்து தூய்மை என்னும் உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். தூய்மை ஆகுவதால் மாத்திரமே நீங்கள் உங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள்.2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்கள் சொந்தச் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சம்பூரணமான, முழுமையான ஸ்திதியின் கடலில் உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் என்ற சாம்பலைக் கரைப்பதன் மூலம் சமமானவராகவும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவீர்களாக.சம்பூரணமாகவும் முழுமையாகவும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கும் உலகம் அழிவதற்கு முன்னர் உங்களின் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை அழித்து விடுங்கள். எந்தவொரு குழப்பத்தின் பெயரோ அல்லது சுவடோ எஞ்சி இருக்காதபடி உங்களை மிகவும் பிரகாசமாக ஆக்குங்கள். நீங்கள் புதிய பிறவி எடுக்கும்போது, உங்களின் முன்னைய பிறவியின் அனைத்தும் மறக்கப்பட்டுவிடும். அதேபோல், உங்களின் பழைய விடயங்களையும் சம்ஸ்காரங்களை எரித்து, உங்களின் சம்பூரணம் மற்றும் முழுமை என்ற ஸ்திதியின் கடலில் அந்தச் சாம்பலைக் கரைத்து விடுங்கள். அப்போது நீங்கள் சமமானவர், சம்பூரணமானவர், முழுமையானவர் எனப்படுவீர்கள்.
சுலோகம்:
எந்தவொரு விரிவாக்கத்தையும் அதன் சாரத்திற்குள் அமிழ்த்தி விடும் மந்திர வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
சகித்துக் கொள்பவர்கள், புறத்தில் உள்ள எந்தவொரு அதிர்வலைகள் மட்டுமன்றி, தமது மனங்களில் எழும் எண்ணங்களாலும் பயப்பட மாட்டார்கள். தமது சகிப்புத்தன்மையால் அவர்கள் அனைத்திற்கும் முகங்கொடுப்பார்கள். அவர்களின் முகங்கள் சதா திருப்தியாகவும் சந்தோஷமாகவும் புலப்படும். அவர்களின் கண்களும் பழக்க வழக்கங்களும் ஒருபோதும் அதிருப்தி அடையும்படி இருக்காது. அவர்கள் திருப்தி இரத்தினங்களாக இருப்பதனால், அவர்கள் சதா திருப்தியாக இருப்பார்கள்.