26.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த அநாதியான நாடகம் தொடர்ந்தும் சுழல்கிறது. அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. இதில் எந்த இரு ஆத்மாக்களின் பாகமும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. இதனை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, சதா முகமலர்ச்சியோடு இருங்கள்.
பாடல்:
கடவுள் ஏற்கனவே வந்து விட்டார் என்பதை எந்த வழிமுறை மூலம் நீங்கள் எல்லோருக்கும் நிரூபிக்க முடியும்?பதில்:
கடவுள் வந்து விட்டார் என்று எவரிடமும் நேரடியாகக் கூறாதீர்கள். இவ்வாறு நீங்கள் கூறுவீர்களாயின், இக்காலத்தில் பலரும் தம்மை கடவுள் என்று கூறுவதால், மக்கள் உங்களைப் பார்;த்து எள்ளி நகையாடி விமர்சனம் செய்வார்கள். ஆகையால், முதலில் இரு தந்தையரின் அறிமுகத்தையும் மிகவும் சாதூர்யமாகக் கொடுங்கள். ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தையும் மற்றவர் எல்லையற்ற தந்தையும் ஆவார், எல்லைக்குட்பட்ட ஆஸ்தி எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து பெறப்படுகின்றது எல்லையற்ற தந்தையோ எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அப்பொழுது நீங்கள் கூறுவதை அவர்கள்; புரிந்து கொள்வார்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த ஓர் உலகம் மாத்திரமே உள்ளது என்பதால் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகத் தந்தை இங்கேயே வர வேண்டும். அசரீரி உலகில் எதனையுமே விளங்கப்படுத்த முடியாது. அனைத்தும் பௌதீக உலகிலேயே விளங்கப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருப்பதால், அவர்களால் எப்பயனும் இல்லை என்பது தந்தைக்குத் தெரியும். இந்த உலகில் துன்பத்தின் மேல் துன்பமே உள்ளது. இப்போது நீங்கள் நச்சுக்கடலில் இருக்கிறீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முன்னர், நீங்கள் பாற்கடலில் இருந்தீர்கள். விஷ்ணுவின் உலகமே பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது. இங்கே பாற்கடல் இருக்க முடியாது என்பதால் அவர்கள் ஏரியொன்றை உருவாக்கினார்கள். அங்கே பாலாறுகள் பாய்ந்தன என்றும் அங்குள்ள பசுக்கள் முதற்தரமானவை என்றும் கூறப்படுகிறது. இங்கே மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். ஆனால் அங்கேயோ பசுக்களுமே நோய்வாய்ப்படுவதில்லை. அவை முதற்தரமானவை. அங்கே மிருகங்கள் போன்றனவும் நோய்வாய்ப்படுவதில்லை. அதற்கும் இதற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. தந்தை மாத்திரமே வந்து இதை உங்களுக்குக் கூறுகிறார். இந்த உலகில் வேறு எவருக்குமே இது தெரியாது. தந்தை வந்து எல்லோரையும் திரும்ப அழைத்துச் செல்லும் அதிமங்களகரமான சங்கமயுகம் இதுவென்று உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: அல்லாவை அல்லது கடவுளை, பகவானை குழந்தைகள் அனைவரும் கூவி அழைக்கிறார்கள். அவர்கள் எனக்கு பல பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள். நல்லதோ, கெட்டதோ தங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம் எனக்குக் கொடுக்கின்றார்கள். பாபா வந்துள்ளார் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்;. உலகில் உள்ளவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. 5000 வருடங்களுக்கு முன் இதைப் புரிந்து கொண்டவர்களே இதைப் புரிந்து கொள்வார்கள். இதனாலேயே, ‘பல கோடிக்கணக்கானவர்களுக்குள் ஒரு கைப்பிடியளவினரும், அக்; கைப்பிடியளவினரில் வெகுசிலரும்’ என்று நினைவுகூரப்பட்டுள்ளது. நான் யார், நான் என்ன செய்கின்றேன், குழந்தைகளாகிய உங்களுக்கு நான் என்ன கற்பிக்கிறேன் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே தெரியும். வேறு யாராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஒரு சரீரதாரியிடம் கற்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்குக் கற்பிப்பவர் அசரீரியானவர் ஆவார். அசரீரியானவர் மேலே இருப்பதால், அவர் எவ்வாறு உங்களுக்குக் கற்பிக்க முடியும் என்று மக்கள் நிச்சயமாகக் குழப்பம் அடைவார்கள். அசரீரியான ஆத்மாக்களாகிய நீங்களும் மேலேயே வசிக்கிறீர்கள். பின்பு, நீங்கள் வந்து இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறீர்கள். இந்த சிம்மாசனம் அழிந்து போகக் கூடியது. ஆத்மாவோ அழிவற்றவர். ஆத்மா மரணத்தை அனுபவிப்பதேயில்லை. சரீரமே மரணிக்கின்றது. இது உயிருள்ள சிம்மாசனம். அமிர்தசரஸிலும் ‘அமரத்துவ சிம்மாசனம்’ இருக்கிறது. அது மரத்தாலான சிம்மாசனம். ஆத்மா அமரத்துவமானவர் என்றும் ஆத்மாவை மரணம் விழுங்க முடியாதென்றும் அந்த அறியாத, அப்பாவிகளுக்குத் தெரியாது. அமரத்துவ வடிவமாகிய ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறார். ஆத்மாவுக்கு இரதமொன்று தேவையாகும். அசரீரியான தந்தைக்கும் ஒரு மனித சரீரம் என்னும் இரதம் தேவையாகும். ஏனெனில், தந்தை ஞானேஸ்வரராகிய ஞானக்கடலாவார். பலருக்கும் ஞானேஸ்வரன் என்று பெயர் இருக்கிறது. அவர்கள் தம்மைக் கடவுள் எனக் கருதி, பக்தியின் புராணங்களில் உள்ளவற்றை எடுத்துரைக்கிறார்கள். தங்களுக்கு அவர்கள் ஞானேஸ்வரர் அதாவது ஞானத்தைக் கொடுக்கும் பிரபு என்று பெயரிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அதற்கு ஞானக்கடலே தேவையாவார். அவர் மட்டுமே தந்தையாகிய கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இங்கே பலரும் கடவுள் ஆகியுள்ளார்கள்! அதிகளவு அவதூறு இடம்பெறும் போதும், அவர்கள் மிகவும் ஏழைகளாகவும் சந்தோஷமற்றவர்களாகவும் ஆகும் போதும் தந்தை வருகிறார். ஏழைகளின் பிரபு என தந்தை அழைக்கப்படுகிறார். இறுதியில், ஏழைகளின் பிரபுவாகிய தந்தை வரும் நாள் வருகின்றது. தந்தை வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கே எல்லையற்ற செல்வம் இருக்கிறது. அங்கே பணம் எண்ணப்படுவதேயில்லை. இங்கேயோ எத்தனை மில்லியன்களும் பில்லியன்களும் செலவிடப்பட்டிருக்கின்றன என்று எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்கிறார்கள். அங்கே இப்படியான ஒன்றே இல்லை. அவர்களிடம் அளவற்ற செல்வம் இருக்கிறது. பாபா இப்போது எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். குழந்தைகள் தங்கள் வீட்;டை மறந்து விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தடுமாறி அலைந்து திரிகிறார்கள். இது இரவு என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்து கடவுளைத் தேடித் திரிகின்றார்கள். ஆனாலும் எவருமே அவரைக் கண்டறிவதேயில்லை. கடவுள் வந்து விட்டார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது தெரியும். உங்களுக்கு இந்த நம்பிக்கையும் உள்ளது. அனைவருமே இந்த உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கின்றார்கள் என்று கூற முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் மாயை உங்களை மறக்கச் செய்து விடுகிறாள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: அதிசயப்பட்டு, என்னை வந்து பார்த்து, எனக்குச் சொந்தமாகி, மற்றவர்களுக்கும் இந்த ஞானத்தை எடுத்துரைத்தவர்கள் - ஓ மாயா! அவர்களை என்னிடமிருந்து ஓடிச் சென்று விடச் செய்யும் அளவுக்கு நீ சக்தி வாய்ந்தவள். ஓடிச் சென்று விட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை விவாகரத்துச் செய்தவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் எங்கே சென்று பிறப்பார்கள்? மிகவும் தாழ்ந்த பிறப்பொன்றையே அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். தங்கள் பரீட்சைகளில் அவர்கள் தோற்று விடுகிறார்கள். இது மனிதனிலிருந்து தேவர்களாக மாறும் பரீட்சையாகும். எல்லோரும் நாராயணராகுவார்கள் என்று தந்தை உங்களுக்குக் கூறுவதில்லை. இல்லை, மிக நன்றாக முயற்சி செய்பவர்கள் நல்ல அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்வார்கள். நல்ல முயற்சியாளர்கள் யாரென்று தந்தை புரிந்து கொள்கின்றார்: ஏனைய மனிதர்களைத் தேவர்களாக்;குவதற்காக முயற்சி செய்பவர்கள் அதாவது தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பவர்கள். இக்காலத்தில், எதிர்ப்பின் காரணமாக பலரும் தம்மை கடவுள் என்று அழைக்கிறார்கள். உங்களை அவர்கள் பலவீனமானவர்கள் என்றும் அப்பாவிகள் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களுக்குக் கடவுள் வந்து விட்டார் என்று எவ்வாறு நீங்கள் விளங்கப்படுத்துவீர்கள்? கடவுள் வந்து வி;ட்டார் என்று அவர்களிடம் நீங்கள் நேரடியாகக் கூறுவீர்களானால், ஒருபோதும் உங்களை நம்ப மாட்டார்கள். இதனாலேயே அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு திறமையான ஒரு வழிமுறை தேவையாகும். ஒருபோதும், கடவுள் வந்து விட்டார் என்று எவரிடமும் நீங்கள் கூறக் கூடாது. அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: உங்களுக்குத் தந்தையர் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் எல்லையற்ற பரலோகத் தந்தையும் மற்றவர் எல்லைக்குட்பட்ட பௌதீகத் தந்தையும் ஆவார்கள். நீங்கள் சொல்வது சரியென்று அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், நீங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வாறு நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பது எவருக்குமே தெரியாது. ஒரு தந்தையிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது. எவருமே மனிதர்களுக்கு இரு தந்தையர் உள்ளனர் என்று என்றுமே கூறுவதில்லை. எல்லைக்குட்பட்ட லௌகீகத் தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி பெறப்படுகின்றதென்றும், எல்லையற்ற ஆஸ்தி அதாவது புதிய உலகிற்கான ஆஸ்தி எல்லையற்ற, பரலோகத் தந்தையிடமிருந்து பெறப்படுகிறதென்றும் அவர்களுக்கு நீங்கள் நிரூபிக்கின்றீர்கள். புதிய உலகம் சுவர்க்கமாகும். தந்தை வரும் போதே, தந்தையினால் அதனை உங்களுக்குக் கொடுக்க முடியும். அந்தத் தந்தை புதிய உலகைப் படைப்பவர். கடவுள் வந்துள்ளார் என்று நீங்கள் மக்களிடம் சாதாரணமாகக் கூறுவீர்களானால், அவர்கள் உங்களை நம்புவதில்லை அத்துடன் மென்மேலும் உங்களை விமர்சிப்பார்கள். நீங்கள் சொல்வதை அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள். சத்தியயுகத்தில் இதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டியதில்லை. தந்தை வந்து உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கும்; போதே, நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சந்தோஷத்தின் போது எவருமே கடவுளை நினைவு செய்வதில்லை. ஆனால், துன்பம் வரும் போது அனைவரும் கடவுளை நினைவுசெய்கின்றார்கள். அந்தப் பரலோகத் தந்தையே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் உங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்து, உங்கள் வழிகாட்டியாகி, உங்கள் இனிய வீட்டுக்கு உங்களை அழைத்துச் செல்கிறார். அது இனிய மௌன வீடு என்று அழைக்கப்படுகிறது. எவ்வாறு நாங்கள் அங்கே செல்வோம் என்பது எவருக்குமே தெரியாது. படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியும் அவர்களுக்குத் தெரியாது. பாபா உங்களை நிர்வாணா உலகிற்கு அழைத்துச் செல்லவே வந்திருக்கிறார். ஆத்மாக்கள் அனைவரையுமே அவர் தன்னுடன் அழைத்துச் செல்வார். ஒருவரையுமே அவர் விட்டு விட்டுச் செல்லப் போவதில்லை. அது ஆத்மாக்களின் வீடு. இதுவோ சரீரங்களின் வீடு. எனவே, எல்லாவற்றுக்கும் முதல் நீங்கள் தந்தையை அறிமுகம் செய்ய வேண்டும். அவர் அசரீரியான தந்தையாவார். அவர் பரமதந்தை என்றும் அழைக்கப்படுகிறார். ‘பரம தந்தை’ என்ற வார்த்தைகள் சரியானவையும் இனிமையானவையும் ஆகும். ‘கடவுள்’ அல்லது ‘ஈஸ்வரன்’ என்று கூறுவதால் மாத்திரம் உங்களுக்கு ஆஸ்தியின் நறுமணம் கமழப் போவதில்லை. பரம தந்தையை நீங்கள் நினைவுசெய்கிறீர்கள் என்பதால் உங்களுக்கு ஓர் ஆஸ்தி கிடைக்கிறது. அவர் தந்தையாவார், இல்லையா? சத்தியயுகமே சந்தோஷ உலகம் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சுவர்க்கத்தை அமைதி தாமம் என்று அழைக்க முடியாது. ஆத்மாக்கள் வாழுமிடம் அமைதி தாமமேயாகும் என்பதை மிகவும் உறுதியாக்குங்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, வேதங்கள், சமய நூல்கள் போன்றவற்றைக் வாசிப்பதால் உங்களுக்கு எப் பேறும் கிடைப்பதில்லை. கடவுளை அடைவதற்காகவே மக்கள் புராணங்களை வாசிக்கின்றார்கள். ஆனால் கடவுள் கூறுகிறார்: புராணங்கள் போன்றவற்றை அவர்கள் வாசிப்பதால், நான் எவரையும் சந்திப்பதில்லை. தூய்மையற்ற உலகத்தைத் தூய்மையாக்குவதற்காக இங்கே வருமாறு என்னை நீங்கள் கூவி அழைக்கிறீர்கள். கல்லுப்புத்தி கொண்டவர்களாக இருப்பதால் எவருமே இதைப் புரிந்து கொள்வதில்லை. பாடசாலையில் குழந்தைகள் நன்றாகக் கற்கவில்லை என்றால் ‘உங்கள் புத்தி ஒரு கல்லுப்புத்தி’ என்று அவர்களிடம் கூறப்படுகிறது. சத்தியயுகத்தில் இவ்வாறு கூற மாட்டீர்கள். எல்லையற்ற தந்தையாகிய பரமதந்தையே உங்களைத் தெய்வீக புத்தியுடையவர் ஆக்குகின்றார். இந்த நேரத்தில், நீங்கள் தந்தையுடன் இருப்பதால், உங்கள் புத்தி தெய்வீகமாக உள்ளது. அதன் பின், சத்தியயுகத்தில், ஒரு பிறவிக்கு பின்னரிலிருந்தே சிறிதளவு வேறுபாடு ஆரம்பமாகிவிடுகின்றது. 1250 வருடங்களின் பின்னர், இரு சுவர்க்கக் கலைகள் குறைவடைந்து விடுகின்றன. 1250 வருடங்களில், விநாடிக்கு விநாடி உங்கள் சுவர்க்கக் கலைகள் தொடர்ந்தும் படிப்படியாகக் குறைவடைகின்றன. இந்த நேரத்தில் நீங்கள் தந்தையைப் போல், ஞானக்கடல்களாகவும் சந்தோஷம், அமைதிக் கடல்களாகவும் ஆகுவதால், இப்பொழுது உங்கள் வாழ்க்கை முற்றிலும் சம்பூரணம் ஆகுகின்றது. உங்கள் முழு ஆஸ்தியையும் நீ;ங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே தந்தை இங்கே வருகிறார். எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் அமைதி தாமத்திற்கும், அதன் பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்கிறீர்கள். சாந்தி தாமத்தில் அமைதி மட்டுமே உள்ளது. அதன் பின்னர் நீங்கள் சந்தோஷ உலகிற்குச் செல்கின்றீர்கள். அங்கே சிறிதளவேனும் அமைதியின்மை இருப்பதில்லை. அதன் பின்னர், நீங்கள் கீழே வர வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்குகிறீர்கள். புதிய உலகம் தொடர்ந்தும் பழையதாகின்றது. இதனாலேயே பாபா ‘5000 வருடங்களில் இத்தனை மாதங்கள், இத்தனை மணித்தியாலங்கள் உள்ளது’ என்று உங்களைக் கணக்கிடுமாறு கூறினார். அப்பொழுது மக்கள் வியப்படைவார்கள். இந்தத் தெளிவான கணக்குக் காட்டப்பட்டுள்ளது. மிகச்சரியான கணக்கை நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவேனும் வேறுபாடு இருக்க முடியாது. நிமிடத்திற்கு நிமிடம் அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. முழுச்சுருளும் மீண்டும் சுழல்கின்றது. அது தொடர்ந்தும் சுழல்வதுடன், மீண்டும் மீண்டும் சுழற்சி இடம்பெறுகின்றது. இந்த மிகப் பெரிய சுருள் மிகவும் அற்புதமானதாகும். இதனை அளவிட முடியாது. முழு உலகம் என்ற சுருள் தொடர்ந்தும் நகருகின்றது. எந்த இரு விநாடியும், ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. அவை எல்லைக்குட்பட்ட நாடகங்கள். இதுவோ எல்லையற்ற நாடகம். முன்னர், இது அழிவற்ற ஒரு நாடகம் என்பதைப் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது மீண்டும் ஒருமுறை இடம்பெறுகிறது. நடக்க வேண்டியதே நடக்கின்றது. எதுவுமே புதியதல்ல. இந்த நாடகம் விநாடிக்கு விநாடி தொடர்ந்தும் பல தடவைகள் இடம்பெற்றுள்ளது. எவராலும் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவருக்கு சிவன் என்ற ஒரேயொரு பெயரே உள்ளது. தந்தை கூறுகிறார்: அதர்மம் தழைத்தோங்கும் போது நான் வருகிறேன். இதுவே கலியுகத்தின் கடைசி எனப்படுகிறது. இங்கே அளவற்ற துன்பம் உள்ளது. ‘இக் கலியுகத்தின் கடைசியில் எவ்வாறு உங்களால் தூய்மையாக இருக்க முடியும்?' என சிலர் வினவுகின்றார்கள். ஆனால், உங்களைத் தூய்மையாக்குபவர் யார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். தந்தையே சங்கமயுகத்தில் வந்து தூய்மையான உலகை ஸ்தாபிக்கிறார். அங்கே கணவன், மனைவி இருவருமே தூய்மையாக இருக்கின்றார்கள், ஆனால் இங்கோ இருவருமே தூய்மையற்றவர்கள் ஆவார்கள். இது தூய்மையற்ற உலகம். அதுவோ சுவர்க்கம் என்ற தூய உலகமாகும். இது ஆழ் நரகத்தின் இறுதியாகும். இது நரகமாகும்! இப்போது குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். விளங்கப்படுத்துவற்கு முயற்சி தேவையாகும். ஏழைகள் விரைவில் புரிந்து கொள்கிறார்கள். நாளுக்கு நாள் தொடர்ந்தும் விரிவாக்கம் இடம்பெறுகிறது. அப்பொழுது அப் பெரிய கட்டடங்கள் தேவையாகும். பல குழந்தைகள் இங்கேயே வரவேண்டும், ஏனெனில் தந்தை வேறெங்கும் செல்ல மாட்டார். முன்னர், எவரும் கேட்காமலே பாபா எங்கும் செல்வதுண்டு. இப்போது குழந்தைகள் தாமே இங்கே தொடர்ந்து வருகின்றார்கள். நீங்கள் குளிர்காலத்திலும் வர வேண்டியிருக்கும். நீங்கள் திட்டமிட வேண்டியிருக்கும்;. ‘கூட்டம் அதிகமாக இல்லாத போது, இன்ன இன்ன நேரத்தில் வாருங்கள்.’ எல்லோரும் ஒரே நேரத்தில் வர முடியாது. குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இங்கே குழந்தைகளாகிய நீங்கள் சிறிய கட்டடங்களை கட்டுகின்றீர்கள். ஆனால், அங்கே உங்களிடம் பல மாளிகைகள் இருக்கும். அனைத்து பணமும் மண்ணோடு மண்ணாகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பலரும் குழிகள் தோண்டித் தமது பணத்தை அதில் ஒளித்து வைக்கின்றார்கள். பின்னர், அவற்றைத் திருடர்கள் திருடுவார்கள் அல்லது அவை அப்படியே குழிகளிலேயே இருக்கும். பின்பு மக்கள் தங்கள் வயல்களில் நிலத்தைத் தோண்டும் போது, பணம் வெளிப்படுகின்றது. இப்போது விநாசம் இடம்பெற்று எல்லாமே புதைக்கப்படும். அதன் பின்னர், அங்கே உங்களுக்கு அனைத்தும் புதிதாகக் கிடைக்கும். அரசர்கள் தம்முடைய பல பொருட்களை புதைத்து வைத்துள்ள, பல கோட்டைகள் உள்ளன. பெரிய வைரங்களும் அவற்றிலிருந்து வெளிப்பட்டு, நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான வருவாயை அவர்கள் ஈட்டுகின்றார்கள். சுவர்க்கத்தில் நீங்கள் நிலத்தை அகழ்ந்து வைரங்களை வெளியே எடுப்பதில்லை. இல்லை, அங்கே அனைத்தின் சுரங்கங்களும் புதிதாகவும், நிறைந்தும் காணப்படும். இங்கே பூமி தரிசாக இருப்பதால் அது வளமற்றுள்ளது. அவர்கள் விதைக்கும் விதைகள் செழிப்பானவை அல்ல. அதில் அவர்கள் குப்பைகளையும், அசுத்தமான அனைத்தையும் போடுகிறார்கள். அங்கே அசுத்தம் என எதுவும் இருக்காது. அனைத்தும் புதிதாக இருக்கும். புதல்வியர் சுவர்க்கக் காட்சிகளைக் (திரான்ஸில் சென்று) கண்டு திரும்பி வருகின்றார்கள். அங்கே இயற்கை அழகு நிறைந்திருக்கும். அவ் உலகிற்குச் செல்லவே குழந்தைகளாகிய நீங்கள் இப்போது முயற்சி செய்கிறீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த நேரத்திலேயே நீங்கள் தந்தையைப் போன்று, சம்பூரணமானவர்களாகி, உங்கள் முழு ஆஸ்தியையும் பெற வேண்டும். தந்தையின் கற்பித்தல்கள் அனைத்தையும் கிரகித்து, அவரைப் போன்று ஞானம், சந்தோஷம், அமைதிக் கடல்கள் ஆகுங்கள்.2. உங்கள் புத்தியைத் தெய்வீகமாக ஆக்கிக் கொள்வதற்கு, உங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்துங்கள். புத்தியில் நம்பிக்கை கொண்டவராகி, மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்குரிய பரீட்சையில் சித்தியடையுங்கள்.
ஆசீர்வாதம்:
தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியை பெறுவதன் மூலம் வெற்றியின் உத்தரவாதத்தின் போதையை கொண்டிருப்பதனால், மாயையை வெற்றி கொள்வீர்களாக. தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியை பெறும் தகுதியை கொண்டிருக்கின்ற குழந்தைகள், மாயை தாக்கும் போது, அவளிடம் சவால் விட்டு, வருவது அவளுடைய கடமை, வெற்றி அடைவது எங்கள் கடமை எனக் கூறுகிறார்கள். அத்தகைய குழந்தைகள் சிங்கத்தின் வடிவத்திலுள்ள மாயையை, ஒரு எறும்பின் வடிவமாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், மாயையின் இந்த இராச்சியம் இப்பொழுது முடிவடைய உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியும். பலதடவைகள் வெற்றியடைந்த, வெற்றி ஆத்மாக்களாகிய உங்களுக்கு 100 சதவீதம் வெற்றியின் உத்தரவாதம் உள்ளது. இந்த உத்தரவாதத்தின் போதையானது, பலமில்லியன் மடங்கு உதவியை தந்தையிடம் இருந்து பெறுவதற்கான உரிமையை கோர உங்களுக்கு உதவுகின்றது. இந்த போதையயுடன் நீங்கள் இலகுவாக மாயையை வெற்றி கொண்டவர் ஆகுவீர்கள்.சுலோகம்:
உங்கள் எண்ணத்தின் சக்தியை சேமித்து, அதனுடன் உங்களுக்காகவும் உலகிற்காகவும் பரிசோதனை செய்யுங்கள்.