26.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் யோகசக்தியின் மூலம் நீங்கள் இந்த பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குவீர்கள் என உத்தரவாதம் அளிக்கிறீர்கள். அங்கு ஒரேயொரு தர்மமும் ஒரேயொரு இராச்சியமுமே இருக்கும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் மாயையின் எந்தத் தடையிலிருந்து பாதுகாப்பாக இருப்பதன் மூலம் பாரிய அற்புதங்களைச் செய்ய முடியும்?பதில்:
சரீர உணர்விற்கு வந்து உங்களை ஏனையவர்களின் பெயரிலும் ரூபத்திலும் அகப்படுத்திக் கொள்வதே மாயையின் தடைகளில் பாரிய தடை ஆகும். இந்தத் தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் குழந்தைகள், மாயையின் வஞ்சனையில் இருந்து பாதுகாப்பாக இருப்பதுடன் பல அற்புதங்களையும் காண்பிப்பார்கள். அவர்களின் புத்திகள் சதா சேவைக்கான புதிய எண்ணங்களைக் கொண்டிருக்கும். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகும்போது சேவை விரிவடையும்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கவே தந்தை வந்துள்ளார். நாடகத் திட்டத்திற்கேற்ப அனைத்தும் குறுகிய காலத்திலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இராவண பூமியை விஷ்ணு பூமியாக மாற்றுகின்றோம். தந்தை மறைமுகமானவர், இந்தக் கல்வியும் மறைமுகமானது. பல நிலையங்கள் உள்ளன. பெரிய நகரங்களிலும் சிறிய கிராமங்களிலும் கூட நிலையங்கள் உள்ளன. பல குழந்தைகளும் உள்ளனர். நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். நீங்கள் நிச்சயமாகப் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவீர்கள் என உங்களின் புத்தகங்களில் நீங்கள் எழுதுகின்றீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் இந்த பாரதமே சுவர்க்கமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரிந்தமையினால் நீங்கள் இந்தப் பாரதத்தை மிகவும் நேசிக்கின்றீர்கள். அப்பொழுது பாரதம் மிக இராஜரீகமாகவும், அழகாகவும் இருந்தது. பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான குழந்தைகளாகிய உங்களிடமே இந்த ஞானம் உள்ளது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இந்தப் பாரதத்தைச் சுவர்க்கமாக்க வேண்டும். அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். இங்கு உள்ள விடயங்களில் குழப்பமானவை எவையும் இல்லை. எவ்வாறு இந்தப் படங்களை விளம்பரப்படுத்தலாம் எனவும், எவ்வாறு அவற்றைப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கலாம் எனவும் அமர்ந்திருந்து உங்கள் மத்தியில் கலந்துரையாடுங்கள். உங்கள் மத்தியில் இதைப் பற்றிய கருத்தரங்குகளை நடாத்துங்கள். பௌதீக அரசாங்கம் எவ்வாறு பாரதத்தைப் புதுப்பிக்கலாம் எனச் சந்தித்துக் கலந்துரையாடுவதைப் போன்று நீங்களும் ஒன்றாகக் கூடி, தற்பொழுது இருக்கும் வேறுபட்ட அபிப்பிராயங்களைச் சரியாக்குவது பற்றியும், எவ்வாறு பாரதத்தில் அமைதியும் சந்தோஷமும் இருக்க முடியும் எனவும் கலந்துரையாடுங்கள். நீங்கள் ஆன்மீக பாண்டவ அரசாங்கமும் ஆவீர்கள். இது மகத்தான இறை அரசாங்கம் ஆகும். தூய்மையற்ற குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்குபவராகிய தந்தை தூய்மையாக்கி, உங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த இரகசியங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே பாரதத்தின் பிரதான தர்மமாகும். இதுவே ருத்ர ஞான யாகம் ஆகும். சிவபாபா ருத்ரா என்று அழைக்கப்படுகிறார். தந்தை இப்பொழுது வந்து உங்களை விழித்தெழச் செய்துள்ளார். ஆகவே நீங்கள் ஏனையவர்களையும் விழித்தெழச் செய்ய வேண்டும். நாடகத் திட்டத்திற்கேற்ப நீங்கள் தொடர்ந்தும் விழித்தெழுவீர்கள். நீங்கள் இன்றுவரை எத்தகைய எவ்வளவு முயற்சிகளைச் செய்துள்ளீர்களோ அதனையே முன்னைய கல்பத்திலும் செய்திருக்கின்றீர்கள். உங்களது யுத்தம் ஆன்மீகமானது. சிலவேளைகளில் மாயை அதிகளவு சக்திவாய்ந்தவளாகவும் சில வேளைகளில் இறைவன் அதிகளவு சக்திவாய்ந்தவராகவும் உள்ளனர். சிலநேரங்களில் சேவை துரிதமாக தொடர்ந்து இடம்பெறுகின்றது, சில நேரங்களில் குழந்தைகள் மாயையின் தடைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். மாயை அவர்களை முற்றாகச் சுய உணர்வை இழக்கச் செய்கிறாள். இது ஒரு போர்க்களமாகும். மாயை இராமரின் குழந்தைகளைச் சுய உணர்விழக்கச் செய்கிறாள். லவன், குசனைப் (இராமரின் குழந்தைகள்) பற்றிய கதையும் உள்ளது. அவர்கள் இராமருக்கு இரு குழந்தைகளைச் சித்தரித்துள்ளனர், ஆனால் பாபாவிற்குப் பல குழந்தைகள் இங்கு உள்ளனர். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் கும்பகர்ண உறக்கத்தில் உள்ளனர். பரமாத்மாவாகிய பரமதந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களது ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்துள்ளார் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. தந்தை பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். அவர்கள் இதனை முற்றாக மறந்து விட்டனர். பாரதமக்களே சுவர்க்க அதிபதிகளாக இருந்தனர். இதனைப் பற்றிய எந்தச் சந்தேகமும் இல்லை. பரமாத்மாவாகிய பரமதந்தையின் பிறப்பு இங்கேயே இடம்பெறுகிறது. இதனாலேயே பாரதமக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆகவே, நிச்சயமாக அவர் இங்கே வந்து ஏதோவொன்றைச் செய்திருக்க வேண்டும். புத்தி கூறுகிறது: சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்காகத் தந்தை இங்கே நிச்சயமாக வந்திருக்க வேண்டும். அவர் தூண்டுதலின் மூலம் அதனை ஸ்தாபித்திருக்க முடியாது. இங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகமும் நினைவு யாத்திரையும் கற்பிக்கப்படுகிறது. தூண்டுதலில் எந்த ஒலியும் இருக்க முடியாது. சங்கர் தூண்டுதலின் மூலமே விநாசத்தை நடாத்துகின்றார் என்று மக்கள் எண்ணுகின்றனர், ஆனால் அதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. குண்டுகள் போன்றவற்றை உருவாக்குவது நாடகத்தில் அவர்களது பாகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் விநாசத்திற்கான கருவிகள் ஆகுகின்றனர். தூண்டுதல் என்பது சமயநூல்களில் உள்ள ஒரு வார்த்தையாகும். ஆனால் இங்கு தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. நாடகத்திற்கேற்ப விநாசம் இடம்பெற வேண்டும். மகாபாரத யுத்தத்தில் ஏவுகணைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்றவை மீண்டும் இடம்பெற வேண்டும். யோகசக்தியின் மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பீர்கள் என நீங்கள் உத்தரவாதம் அளிக்கிறீர்கள். அங்கு ஒரேயொரு தர்மமே இருக்கும். ஆகவே ஏனைய சமயங்கள் எங்கு செல்கின்றன? அவை நிச்சயமாக அழிக்கப்படும். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். ஸ்தாபனை பிரம்மா மூலமாகவும், பராமரிப்பு விஷ்ணு மூலமாகவும் இடம்பெற்றதாகவும், அது நல்லது எனவும் நினைவு கூரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்கள் சங்கரைச் சிவனுடன் கலந்து விட்டனர். அது தவறாகும். அவர்கள் சிவனையும் சங்கரையும் கலந்து விட்டனர். சங்கர் எதனையும் செய்யாதிருப்பதனால் அவர்கள் சிவனைச் சங்கரருடன் கலந்துள்ளனர். எவ்வாறாயினும் சிவபாபா கூறுகின்றார்: நான் அதிகளவு வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது. நான் அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். நான் பௌதீக பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து அவரின் மூலமாக ஸ்தாபனையை மேற்கொள்கிறேன். சங்கரருக்குப் பாகம் இல்லை. சிவன் பூஜிக்கப்படுகிறார். நன்மைபயப்பவராகிய சிவன் மாத்திரமே அனைவரது புத்தியையும் நிரப்புகின்றார். அவர்கள் கூறுகின்றனர்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். இந்த பிரம்மா மக்களின் தந்தை ஆவார். எவ்வாறு பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார் என்பதும், விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகுகின்றார் என்பதும் மிக ஆழமான விடயங்கள் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். விவேகமான குழந்தைகள் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதற்குத் தங்கள் புத்தியை மிக விரைவாகப் பயன்படுத்த முடியும். எப்போது தூய்மையாக்குபவரான தந்தை வருவார் என்பது பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாது. இப்பொழுது இது கலியுகத்தின் இறுதியாகும். கலியுகத்தின் இறுதிக்கு இன்னமும் 40,000 ஆண்டுகள் உள்ளன என அவர்கள் கூறுவார்களாயின், இன்னமும் எந்தளவுக்கு அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகப் போகின்றார்கள்? இன்னமும் எவ்வளவு துன்பத்தை அவர்கள் சகித்துக் கொள்ளப் போகின்றார்கள்? கலியுகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை. எதனையும் புரிந்து கொள்ளாததால், அப்பாவிகளான, அநாதரவான மக்கள் காரிருளில் இருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சந்தித்து, எவ்வாறு சேவையை அதிகரிக்கலாம் எனக் கலந்தாலோசிக்க வேண்டும். தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் திட்டங்களைக் காட்டுவார். ஆகையால் அதன்பின்னர் நீங்கள் ஒன்றாகச் சந்திக்க வேண்டும். படங்களை மிகவும் நன்றாக விளங்கப்படுத்துங்கள். நாடகத்திட்டப்படி இந்தப் படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படும். எந்த நேரம் கடந்து சென்றாலும், நாடகம் மிகச்சரியாக தொடர்கின்றது என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களின் ஸ்திதி தொடர்ந்தும் தளம்பல் அடையும். அதாவது சிலவேளைகளில் உயர்ந்தும், சிலவேளைகளில் தாழ்ந்தும் இருக்கும். பாபா அனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானித்துக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் குழந்தைகளின் மீது மோசமான சகுனம் உள்ளதால், அந்தச் சகுனத்தை அப்புறப்படுத்துவதற்காக, பாபா உங்களைப் பல விடயங்களில் முயற்சி செய்யச் செய்கின்றார். தந்தையை நினைவு செய்யுமாறு மீண்டும் மீண்டும் பாபா உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதாலேயே நீங்கள் தடுமாறுகின்றீர்கள். இங்கே, நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர் ஆக வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு அதிகளவு சரீர உணர்வு உள்ளது. ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள், அப்பொழுது உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். அதன் பின்னர் சேவையும் தொடர்ந்தும் விரிவடையும். ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டியவர்கள் சதா சேவை செய்வதில் மும்முரமாக இருப்பார்கள். அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், அவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். அதன்பின்னர் அவர்களாகவே கூறுவார்கள்: பாபா, என்னால் இவை எதையுமே கிரகிக்க முடியவில்லை. இவை எனது புத்தியில் நிற்பதில்லை. இவ்விடயங்களை நீங்கள் கிரகிக்காது விட்டால், உங்களுக்குள் எந்தச் சந்தோஷமும் இருக்க மாட்டாது. இவ்விடயங்களைக் கிரகித்துக் கொள்கின்றவர்கள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வார்கள். சிவபாபா வந்துள்ளார் என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இதனை மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டு, பின்னர் அவற்றைப் பிறருக்கு விளங்கப்படுத்துங்கள். சிலர் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு தொடர்ந்தும் முயற்சியும் செய்கின்றார்கள். கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருப்பதுடன், அது மீண்டும் அவ்வாறே இடம்பெறும் என்பதனையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் வெளியில் சொற்பொழிவாற்றச் செல்லும் பொழுது பலவகையான மக்கள் வருகின்றார்கள் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கீதை, வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். படைப்பவரான தன்னைப்பற்றிய, படைப்பின் ஆரம்பம், நடு, இறுதியைப் பற்றிய இரகசியங்களைக் கடவுளே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. கடவுள் யார் என்பது மிகத் தெளிவாகப் படங்களில் காட்டப்பட்டுள்ளது. இவ்விடயங்களைப் புரொஜெக்டர்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்த முடியாது. கண்காட்சிகளில் உங்கள் முன்னிலையில் படங்களை வைத்திருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களால் விளங்கப்படுத்துவதுடன், அவர்களுடன் உரையாடிக் கொள்ளவும் முடியும். அத்துடன் கீதையின் கடவுள் யார் என்றும், யார் ஞானக்கடல் என்றும் அவர்களிடம் வினவவும் முடியும். யார் முக்தியளிப்பவரும் வழிகாட்டியும், தூய்மை, அமைதி, சந்தோஷக் கடலும் ஆவார்? கிருஷ்ணர் என அவர்களால் பதிலளிக்க முடியாது. பரமாத்மாவிற்கான புகழ் வேறுபட்டதாகும். எல்லாவற்றிற்கும் முதலில், இதனை எழுதச் செய்யுங்கள். ஆராய்ந்து கணிப்பீடு செய்யுங்கள், அத்துடன், அவர்களைக் கொண்டு எதனையாவது கையெழுத்திடவும் செய்யுங்கள்! (பறவைகள் மண்டபத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன) இந்த நேரத்தில் முழு உலகத்திலும் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. அவர்கள் அனைவரும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். மனிதர்களின் ஐந்து விகாரங்கள் நினைவு கூரப்பட்டுள்ளன. அவை மிருகங்களைக் குறிக்கவில்லை. விகாரமிக்க உலகமும், விகாரமற்ற உலகமும் மனிதர்களுடன் தொடர்புபடுத்தியே காட்டப்பட்டுள்ளன. கலியுகத்தில் அசுர சமுதாயமும், சத்தியயுகத்தில் தெய்வீக சமுதாயமும் உள்ளன. மக்கள் தாங்களே அசுர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்திருக்காத அளவிற்கு அதிகளவு தமோபிரதான் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தேவ விக்கிரங்களுக்கு முன்னர் சென்று, பாடுகின்றார்கள்: நாங்கள் சீரழிவான பாவம் நிறைந்த பாவிகள் ஆவோம். நாங்கள் தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள், எந்தத் தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்காதவர்கள். அவர்களுக்கு நீங்கள் சரியாக விளங்கப்படுத்துங்கள். ஏணிப்படத்தில் அது மிகவும் தெளிவாக உள்ளது. அதில் எவ்வாறு எழுச்சியும் வீழ்ச்சியும் இடம்பெறுகின்றது என்பது காட்டப்பட்டுள்ளது. ஏணிப்படமே பாரத மக்களுக்கான பிரதான படமாகும். இதுவே அனைத்திலும் மிகச்சிறந்த படமாகும். இந்தப் படத்தைப் பயன்படுத்தி உங்களால் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும். நீங்கள் உங்கள் 84 பிறவிகளை நிறைவு செய்த பின்னர், முதல் இலக்கப் பிறப்பை எடுப்பீர்கள். அதன் பின்னர் இறங்கும் ஸ்திதிக்குச் சென்று, பின்னர் மேலேறும் ஸ்திதிக்குச் செல்வீர்கள். அனைவருக்கும் எவ்வாறு பாதையைக் காட்டலாம் என நீங்கள் அனைவரும் சிந்தித்துப் பாருங்கள். இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திக்காது விட்டால், உங்களால் எவ்வாறு சேவை செய்ய முடியும்? படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது இலகுவாகும். சத்தியயுகத்தின் பின்னர், நீங்கள் ஏணியில் இறங்க வேண்டும். நாங்கள் இப்பொழுது இடம் மாற்றப்படுகின்றோம் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும் நாங்கள் நேரடியாகச் சத்தியயுகத்திற்குச் செல்வதில்லை. நாங்கள் முதலில் மௌனதாமத்திற்குச் செல்ல வேண்டும். நாங்கள் நடிகர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நாடகத்தில் நீங்கள் உங்களை நடிகர்கள் எனக் கருதுவதில் நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். தாங்கள் எவ்வாறு நடிகர்கள் என்பதனை இந்த உலகில் உள்ள வேறு எவராலும் கூறமுடியாது. இந்த எல்லையற்ற நாடகத்தின் நடிகர்களாக இருந்த பொழுதிலும், நாடகத்தின் இயக்குனரையும், கதாநாயகனையும், நாடகத்தின் ஆரம்பம், நடு, இறுதியையும் பற்றி எந்த மனிதருக்கும் தெரியாது என்றும் நாங்கள் எழுதுகின்றோம். காரணம், அவர்கள் விவேகம் அற்றவர்கள்! இதை எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை. இதை நீங்கள் ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டுவிடக் கூடாது. சேவையைத் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. சேவை இன்னும் அதிக சேவை. சில குழந்தைகள் சில நேரங்களில் தீய சகுனத்தை அனுபவம் செய்கின்றார்கள் என்பது பாபாவுக்கு தெரியும். தீய சகுனம் இருக்கும் போது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதைத் தந்தை அறிவார். செல்வந்தர்கள் ஏழைகள் ஆகும்போது, அதற்கு ஏதோ ஓரு காரணம் இருக்க வேண்டும். குழந்தைகளே, ஒருபோதும் எவரினதும் பெயரிலோ உருவத்திலோ அகப்பட்டு விடாதீர்கள் என பாபா உங்களிற் பலருக்குத் தொடர்ந்து விளங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இல்லாவிட்டால் மாயா உங்கள் மூக்கைப் பிடித்து உங்களைப் படுகுழிக்குள் எறிந்து விடக்கூடியவள். மாயை உங்களைப் பெருமளவு ஏமாற்றுகின்றாள். நீங்கள் இங்கே காதலன், காதலி ஆகி விடக் கூடாது. சிலர் விகாரத்தின் காரணமாக காதலர்களாவும் காதலிகளாகவும் ஆகுகின்றனர். மற்றவர்கள் ஒருவருடைய வெளித் தோற்றத்தினால் கவரப்படுகின்றனர். பல நிலையங்களில் மாயாவின் பல தடைகள் காணப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் யாராவது ஒருவரின் பெயரிலும் உருவத்திலும் அகப்பட்டு விடுகின்றனர். பெண்மணி ஒருவர் இன்னொரு பெண்மணியின் பெயர், உருவத்திலோ, அல்லது குமாரி ஒருவர் இன்னொரு குமாரியின் பெயர் உருவத்திலோ அகப்பட வைக்கும் அளவுக்கு மாயை சக்தி வாய்ந்தவள். நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும்போது கூட மாயை உங்களை முழுமையாக மடக்கி விடுகின்றாள். இதனால்;தான் பாபா உங்களை எச்சரிக்கின்றார்: குழந்தைகளே, மாயை உங்களைப் பிடித்து விடுவதற்குப் பெருமளவு முயற்சி செய்வாள், ஆனால் நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள். சரீர உணர்வுக்கு ஆளாகி விடாதீர்கள். உங்களை ஆத்மாக்கள் என்று கருதிக் கொண்டு, தந்தையை நினைவு செய்யுங்கள்! மாயையின் ஏமாற்றுதலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தந்தை குழந்தைகளான உங்களை மலர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளார். நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் கொண்டிருக்க கூடாது. உங்கள் இதயத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்களால் சிறப்பாகச் சேவை செய்ய முடியாது. நீங்கள் உங்களுக்குள் தொடர்ச்சியாக மூச்சுத் திணறிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். இன்னும் சிறிது நேரம்தான் எஞ்சி இருக்கின்றது. பாபாவின் முரளியைச் செவிமடுங்கள், நீங்கள் உற்சாகம் அடைவீர்கள். குழந்தை ஆதம் பிரகாஷ் (இன்டோர்) படங்களையிட்டு, மிக்க கவனம் செலுத்துகின்றார். இது பம்பாயில் உள்ளவர்களின் புத்தியில் நுழைய வேண்டும். பிரதான படம் முதலில் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் இவற்றைப் பற்றி விசாரித்துக் கொள்ள வேண்டும். படங்களை எவ்வாறு மெருகூட்டுவது என்று பாபா பல வழிகாட்டலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். ஏணிப் படத்தை விமான நிலையத்தில் வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஓரு வழிமுறையை உருவாக்குங்கள். அந்தப் படத்தை பார்ப்பவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். முடிவாக யார் இந்த வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். எனவே குழந்தைகள் ஆகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. குழந்தைகள் ஆகிய நீங்கள் யுத்த களத்தில் இருந்து கொண்டு மாயையாகிய, இராவணனுடன் யுத்தம் செய்கின்றீர்கள். மாயா பல தடைகளை உருவாக்குகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.2. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த வளர்ச்சியைப் பற்றியும், எவ்வாறு படங்களைக் காட்டி விளங்கப்படுத்தலாம் என்பதையும், சேவையை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். மக்களால் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் நாங்கள் படத்தில் எதனை உள்ளடக்கலாம்?
ஆசீர்வாதம்:
நீங்கள் சரீர உணர்வைத் துறப்பதன் மூலம் உங்களின் பாக்கியத்தை மேன்மையாக்கி, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.சரீர உணர்வைத் துறப்பதன் மூலம், அதாவது, ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதன் மூலம் நீங்கள் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கும் அனுபவத்தைப் பெறுவதுடன் சகல சக்திகளையும் கொண்டிருப்பீர்கள். இந்த அனுபவமே, சங்கமயுகத்தில் அதி மேன்மையான பாக்கியம் ஆகும். அருள்பவரால் கற்பிக்கப்படும் இந்த வழிமுறையை நீங்கள் கடைப்பிடித்தால், விரிவாக்கம் இடம்பெறும். அத்துடன் நீங்களும் முழுமையான வெற்றி பெறுவீர்கள். உங்களின் சரீர உறவுகளாலும் அவர்களுக்காக நீங்கள் கொண்டிருக்கும் அன்பினாலும் நீங்கள் உங்களின் கிரீடம், சிம்மாசனம், உங்களின் ஆதியான ரூபத்தைத் துறந்தீர்கள். ஆகவே, தந்தையின் மீதுள்ள அன்பினால், உங்களால் உங்களின் சரீர உணர்வைத் துறக்க முடியாதா? இந்த ஒரு துறவறத்தால், நீங்கள் அனைத்துப் பாக்கியங்களையும் பெறுவீர்கள்.
சுலோகம்:
கோபத்தில் இருந்து விடுபடுவதற்கு, சுயநலமாக இருப்பதில் இருந்து மாறி, சுயநலமற்றவர் ஆகுவதுடன் ஆசையின் எந்த வடிவத்தையும் மாற்றுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
தந்தையுடன் கூடவே, நீங்கள் அனைவரும் பஞ்சபூதங்களையும் இயற்கையையும் தூய்மை ஆக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் இந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு, ஒவ்வொரு குழந்தையும் அனைத்திற்கும் முதலில் இந்த உலகின் பற்றில் இருந்து, அது வசதிகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ இருக்கக்கூடும், அவற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். வசதிகளைப் பயன்படுத்துதல், அவற்றின் மீது பற்று வைப்பதில் இருந்து வேறுபட்ட விடயமாகும். எனவே அனைத்திற்கும் முதலில் ஒவ்வொரு குழந்தையும் பற்றில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே பாப்தாதா விரும்புகிறார்.