26.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்கள் சத்தியயுக இராச்சியத்தை ஸ்தாபிப்பதைச் சதா அறிந்திருங்கள், நீங்கள் முடிவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளால் இந்த ஞானம் என்ற உணவை ஜீரணிக்க முடியாதுள்ளது?பதில்:
தவறு செய்பவர்களால் ஆகும்; அழுக்காகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகிய பின்னர் வகுப்பில் வந்து அமர்பவர்களால் இந்த ஞானத்தை ஜீரணிக்க முடியாது. ‘காமமே கொடிய எதிரி’ எனக் கடவுள் பேசுகின்றார் என்று அவர்களால் ஒருபொழுதும் கூற முடியாது. அவர்களின் மனச்சாட்சி தொடர்ந்தும் அவர்களை உள்ளுர உறுத்தும், அவர்கள் அசுர சமுதாயத்தினர் ஆகுவார்கள்.ஓம் சாந்தி.
தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் எந்தத் தந்தை? குழந்தைகளாகிய நீங்கள் அந்தத் தந்தையையே புகழ வேண்டும். நினைவுகூரப்படுகின்றது: சத்தியமான சிவபாபர் உண்மையான ஆசிரியரான சிவன்; உண்மையான குருவான சிவன். அவரே சத்தியமானவர். நீங்கள் சத்தியமான சிவனைக் கண்டுகொண்டு விட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்திற்கு ஏற்ப, ஒரேயொருவரின் வழிகாட்டல்களையே பின்பற்றுபவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: முதலில், ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகி, தந்தையை நினைவு செய்யுங்கள். அவரை நீங்கள் அதிகளவு நினைவு செய்வதற்கேற்ப, அதிகளவு நன்மை அடைவீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அது முன்னர் உங்கள் இராச்சியமாக இருந்தது. தேவ தர்மத்தைச் சேர்ந்த நாங்கள் 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது சங்கமயுகத்தில் எங்கள் இறுதிப் பிறவியில் இருக்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் அன்றி, வேறு எவரும் இந்த அதிமேன்மையான சங்கமயுகத்தைப் பற்றி அறியார். பாபா உங்களுக்குப் பல்வேறு கருத்துக்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, நீங்கள் மிகவும் நன்றாக நினைவில் நிலைத்திருந்தால், மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். எனினும், தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாகச் சில குழந்தைகள் உலகாய விடயங்களில் சிக்கிக் கொள்கின்றார்கள். நீங்கள் ஸ்ரீமத்திற்கு ஏற்ப உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதை நினைவுசெய்ய வேண்டும். கடவுள் அதிமேன்மையானவர் என நினைவு கூரப்படுகின்றார். அவரது வழிகாட்டல்களே (ஸ்ரீமத்) அதிமேன்மையானவை. ஸ்ரீமத் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றது? இலகு இராஜயோகம். இராச்சியத்தை எவ்வாறு அடைவது என்பதை அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை உங்கள் தந்தையிடமிருந்து அறிந்து கொள்வதுடன், நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். ஒருபொழுதும் தந்தையை எதிர்க்காதீர்கள்! பல குழந்தைகள் தங்களைச் சேவையாளர்கள் எனக் கருதி, மிகவும் அகங்காரம் உடையவர்கள் ஆகுகின்றார்கள். அவ்வாறான பல குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்கள் சிலவேளைகளில் தோற்கடிக்கப்படுகின்றார்கள். பின்னர் அவர்களின் போதை மறைந்து விடுகின்றது. தாய்மார்களாகிய நீங்கள் கல்வியறிவு அற்றவர்கள். நீங்கள் கல்வி உடையவர்களாக இருந்திருந்தால், அற்புதங்களை நிகழ்த்தி இருப்பீர்கள். ஆண்கள் மத்தியிலும் சிலர் கல்வி அறிவுடையவர்கள். குமாரிகளாகிய நீங்கள் பாபாவின் பெயரை அதிகளவு புகழடையச் செய்ய வேண்டும். நீங்கள் முன்னர் ஸ்ரீமத்திற்கு ஏற்ப, இராச்சியத்தை ஸ்தாபித்தீர்கள்; நீங்கள் சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாக மாறினீர்கள். எனவே உங்களுக்கு அதிகளவு போதை இருக்க வேண்டும். இங்கே மக்கள் சில சதப் பெறுமதியான கல்விக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றார்கள். ஓ, நீங்கள் மிகவும் அழகானவர் ஆகுகின்றீர்கள்! எனவே, ஏன் உங்கள் இதயங்களில் அவலட்சணமான, தூய்மை அற்றவர்கள் மீது பற்றை வைத்திருக்கின்றீர்கள்? இந்த இடுகாட்டின் மீது உங்கள் இதயப் பற்றை வைத்திருக்கக் கூடாது. நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். பழைய உலகின் மீது உங்கள் இதயங்களில் பற்றை வைப்பதென்றால், ஆழ்நரகத்திற்குச் செல்வதாகும். தந்தை உங்களை நரகத்தில் இருந்து விடுவிக்கவே வந்துள்ளார். இருப்பினும், நீங்கள் ஏன் உங்கள் முகத்தை நரகத்தை நோக்கித் திருப்புகின்றீர்கள்? உங்களது இக்கல்வி மிகவும் இலகுவானது. ரிஷிகள் அல்லது முனிவர்கள் எவருக்கும் இது தெரியாது. எந்த ஆசிரியராலோ அல்லது ரிஷிகள் அல்லது முனிவர்களாலோ இதை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. தந்தை உங்கள் ஆசிரியரும், குருவும் ஆவார். அந்தக் குருமார்கள் சமயநூல்களை உரைக்கின்றார்கள்; எனவே அவர்களை ஆசிரியர்கள் என அழைக்கக்கூடாது. அவர்களில் எவருமே தங்களால் உலக வரலாற்றையும், புவியியலையும் பற்றி உரைக்க முடியும் எனக் கூறுவதில்லை. அவர்கள் சமயநூல்களில் உள்ளவற்றை மாத்திரம் கூறுகின்றார்கள். தந்தை உங்களுக்குச் சமயநூல்களின் சாராம்சத்தையும், உலக வரலாறையும், புவியியலையும் கூறுகின்றார். இந்த ஆசிரியர் சிறந்தவரா அல்லது அந்த ஆசிரியர்கள் சிறந்தவர்களா? நீங்கள் அந்த ஆசிரியர்களுடன் எவ்வளவு கற்றாலும், உங்களால் எவ்வளவு வருமானத்தை ஈட்ட முடியும்? அதுவும் கூட உங்கள் பாக்கியத்திலே தங்கியுள்ளது. கற்றுக் கொண்டிருக்கும் போது எவரேனும் விபத்தில் மரணித்தால், அந்தக் கல்வி அனைத்தும் முடிவடைந்து விடும். நீங்கள் இங்கே இக்கல்வியை எவ்வளவுக்குக் கற்றாலும் அல்லது சிறிதளவு கற்றிருந்தாலும் கூட, அவை எதுவுமே வீணாக மாட்டாது. ஆம், எவரேனும் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது, பிழையான செயல்களைச் செய்து, சாக்கடையில் வீழ்ந்தால், அவர் கற்றவை முடிவடைந்து விடுவதில்லை. ஏனெனில், இக்கல்வி 21 பிறவிகளுக்கானது. எவ்வாறாயினும், அவர் வீழ்ந்தால், கல்பம் கல்பமாக அவர் பேரிழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் முகத்தை அழுக்காக்கிக் கொள்ளாதீர்கள். பலரும் தங்கள் முகங்களை அழுக்காக்கிக் கொள்கின்றார்கள்; அவர்கள் அழுக்காகி, பின்னர் வந்து இங்கு அமருகின்றார்கள். அவர்களால் இந்த ஞானத்தை ஒருபொழுதும் ஜீரணிக்க முடியாது; அவர்கள் அஜீரணம் அடைவார்கள். அவர்கள் செவிமடுப்பவை அனைத்தும் அவர்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தும். ‘காமமே கொடிய எதிரி என்பதால் அதனை நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும் எனக் கடவுள் கூறுகின்றார்’ என அவர்களால் எவருக்கும் கூற முடியாது. அதனை அவர்களே வெற்றி கொள்ளா விட்டால், அவர்களால் பிறருக்கு அதை எப்படிக் கூற முடியும்? அவர்களின் மனச்சாட்சி அவர்களை உள்ளுர உறுத்தும். அவர்கள் அசுர சமுதாயத்துக்கு உரியவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அமிர்தத்தைப் பருகும் வேளையில், அவர்கள் நஞ்சைப் பருகி விடுவதால், நூறு மடங்கு அவலட்சணமாகி, அவர்களின் ஒவ்வொரு எலும்பும் நொருங்குகின்றது. தாய்மார்களாகிய உங்களின் ஒன்றுகூடல் மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் ஒரேயொரு தேவ தர்மமே இருந்ததை நீங்கள் அறிவீர்கள். ஒரேயோர் இராச்சியமும், ஒரேயொரு மொழியும், 100 வீதம் தூய்மையும், அமைதியும், செழிப்பும் இருந்தன. தந்தை இப்பொழுது அந்த ஓர் இராச்சியத்தையே ஸ்தாபிக்கின்றார். அதுவே, உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். நூறு வீதமான தூய்மையும், அமைதியும், சந்தோஷமும், செழிப்பும் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றன. விநாசத்தின் பின்னர், ஸ்ரீ கிருஷ்ணர் வருவார் என நீங்கள் காட்டுகின்றீர்கள். இதனை நீங்கள் மிகத்தெளிவாக எழுத வேண்டும். ஒரேயொரு மொழியும், தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் நிறைந்த தேவர்களின் ஒரேயொரு சத்தியயுக இராச்சியம் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. அரசாங்கமும் இதனையே விரும்புகின்றது. சுவர்க்கம் சத்திய, திரேதாயுகங்களில் இருக்கின்றது. ஆனாலும், மக்கள் தங்களை நரகத்தில் வசிப்பவர்கள் எனக் கருதுவதில்லை. நீங்கள் எழுதலாம்: “துவாபர, கலியுகங்களில் வாழ்பவர்கள் அனைவருமே நரகத்தில் வசிப்பவர்கள்”. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்களும் முன்னர், கலியுக, நரகத்தில் வசிப்பவர்களாகவே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்தில் வசிப்பவர்களாகி விட்டீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். எவ்வாறாயினும், அந்தத் தைரியமும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். நீங்கள் சுற்றுலா செல்லும் பொழுது, இலக்ஷ்மி நாராயணனின் படத்தைக் காட்டுங்கள்; அது மிகவும் சிறந்தது. அதன் மீது எழுதுங்கள்: ஆதி சனாதன தேவ தேவியரின் தர்மமும், திரிமூர்த்தி சிவபாபாவின் ஸ்ரீமத்திற்கு ஏற்ப அமைதியும் சந்தோஷமும் நிறைந்த இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றன. நீங்கள் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட பெரிய படங்களை வைத்திருக்க வேண்டும். சிறு குழந்தைகள் சிறிய படங்களையே அதிகளவு விரும்புகின்றார்கள். படங்கள் பெரிதாக இருக்கும் அளவிற்கு, சிறப்பாக இருக்கும்! இலக்ஷ்மி நாராயணனின் படம் மிகவும் சிறப்பானது. அதன் மீது நீங்கள் எழுத வேண்டும்: ஒரேயொரு திரிமூர்த்தி சிவபாபா - சத்தியமானவர். திரிமூர்த்தி சிவன் - உண்மையான ஆசிரியர். திரிமூர்த்தி சிவன் - சத்குரு. நீங்கள் ‘திரிமூர்த்தி’ என்ற வார்த்தையை எழுதா விட்டால், கடவுள் அசரீரியானவர் என்பதால், அவரால் எவ்வாறு ஆசிரியராக இருக்க முடியும் என அவர்கள் அதிசயப்படுவார்கள். அவர்களுக்கு இந்த ஞானம் இல்லை. தகரத்தில் நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் படங்களைத் தயாரித்து எங்கும் வைக்க வேண்டும். ஸ்தாபனை இடம்பெறுகின்றது. பிரம்மாவின் ஊடாக ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வந்து விட்டார், அவர் ஏனைய அனைத்தையும் அழிப்பார். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் போதையை சதா கொண்டிருக்க வேண்டும். அற்ப விடயங்களையிட்டுக் குழந்தைகளாகிய உங்களில் சிலர் ஒரே தீர்மானத்தைக் கொண்டிருக்க முடியாத பொழுது, நீங்கள் மிகவும் விரைவில் குழப்பம் அடைகின்றீர்கள். இது சதாகாலமும் நடக்கின்றது. சிலர் ஒருபுறமும், வேறு சிலர் மறுபுறமும் இருப்பார்கள். அப்பொழுது பெரும்பான்மையானவர்களின் பக்கத்தின் அபிப்பிராயம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதனையிட்டுக் குழப்பம் அடைய தேவையில்லை. எவ்வாறாயினும், சில குழந்தைகள் சிலவேளைகளில் தங்கள் அபிப்பிராயங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் முகம் கோணுகின்றார்கள். அதற்காக அவர்கள் முகங்கோண வேண்டிய அவசியம் என்ன? தந்தை அனைவருக்கும் ஆறுதல் அளிக்கின்றார். மாயை அனைவரையும் முகங்கோணச் செய்து விட்டாள். அனைவருமே தந்தையுடன் முகங்கோணுகின்றார்கள். அவர்கள் தந்தையையும் அறியாமல் இருக்கின்ற பொழுது, ஏன் முகங்கோண வேண்டும்? சுவர்க்க இராச்சியத்தை அவர்களுக்குக் கொடுத்த தந்தையை அவர்களுக்குத் தெரியவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் அனைவரையும் ஈடேற்றுகின்றேன், ஆனால் அதன்பின்னர் நீங்கள் என்னை அவதூறு செய்கின்றீர்கள். பாரதத்தின் நிலைமையைப் பாருங்கள்! உங்கள் மத்தியிலும், வெகுசிலரே போதையுடன் இருக்கின்றீர்கள். இதுவே நாராயணன் ஆகுகின்ற போதை. நீங்கள் இராமர், சீதை போல் ஆகுவோம் எனக் கூறக்கூடாது. உங்கள் இலக்கும் குறிக்கோளும் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதே. அவ்வாறாயின், இராமராகவோ அல்லது சீதையாகவோ ஆகுவதால், நீங்கள் எவ்வாறு திருப்தி அடைய முடியும்? உங்களுக்குத் தைரியம் உள்ளதை நீங்கள் காட்ட வேண்டும். உங்கள் இதயங்களில் பழைய உலகின் மீது சற்றேனும் பற்று வைக்கக்கூடாது. தங்கள் இதயத்தில் இன்னொருவரின் மீது பற்று வைப்பவர்கள் மரணிப்பார்கள். அதன் பின்னர் பிறவிபிறவியாகப் பேரிழப்பு ஏற்படும். பாபாவிடமிருந்து சுவர்க்க சந்தோஷத்தை நீங்கள் பெற இருக்கின்றீர்கள். அவ்வாறாயின், நாங்கள் ஏன் இன்னும் நரகத்தில் இருக்க வேண்டும்? தந்தை கூறுகின்றார்: நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தபொழுது, வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இப்பொழுது நாடகத்திற்கு ஏற்ப, உங்கள் தர்மம் இல்லை. எவருமே தங்களைத் தேவ தர்மத்திற்கு உரியவர்கள் என்ற எண்ணுவதில்லை. ஒரு மனிதருக்குத் தனது சொந்தச் சமயத்தைத் தெரியாதிருந்தால், என்னவென்று சொல்வது? இந்து சமயம் ஒரு சமயம் அல்ல. அதனை ஸ்தாபித்தவர் யார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: மகா காலனாகிய நான் இப்பொழுது அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். மிகவும் நன்றாகக் கற்பவர்கள் அனைவரும் உலக அதிபதிகள் ஆகுவார்கள். இப்பொழுது நாங்கள் வீடு திரும்புவோம். இந்த இடம் வாழ்வதற்குத் தகுதியானது அல்ல. அசுர கட்டளைகள் பின்பற்றப்படுவதால், அதிகளவு குப்பை உருவாக்கப்படுகின்றது. தந்தை இவ்வாறு கூறுவார். உலக அதிபதிகளாக இருந்த, பாரத மக்களாகிய நீங்கள், இப்பொழுது அதிகளவு தடுமாறித் திரிகின்றீர்கள். உங்களுக்கு வெட்கம் இல்லையா? இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ள சிலர் உங்கள் மத்தியில் இருக்கின்றீர்கள்; இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. பல குழந்தைகள் இன்னமும் உறக்கத்தில் இருக்கின்றார்கள். அவர்களின் சந்தோஷப் பாதரசம் உயர்வதில்லை. பாபா எங்களுக்கு மீண்டும் ஒருமுறை இராச்சியத்தைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சாதுக்களையும் ஈடேற்றுகின்றேன். அவர்களால் தங்களுக்கோ அல்லது பிறருக்கோ முக்தியை அளிக்க முடியாது. அனைவருக்கும் சற்கதி அளிப்பதற்காகச் சங்கமயுகத்தில் வருகின்ற, ஒரேயொரு சற்குரு மாத்திரமே உண்மையான குரு ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் முழு உலகையும்; தூய்மையாக்க வேண்டிய நேரமான, ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமயுகத்தில் வருகின்றேன். தந்தை சர்வசக்திவான் என்பதால், அவரால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என சிலர் நம்புகின்றார்கள். ஓ! ஆனால், தூய்மையற்ற நீங்கள், வந்து, உங்களைத் தூய்மை ஆக்குமாறு என்னை அழைக்கின்றீர்கள். ஆகவே, நான் வந்து அனைவரையும் தூய்மை ஆக்குகின்றேன். நான் வேறு என்ன செய்ய முடியும்? மந்திர சக்தி உடைய பலரும் உள்ளார்கள். நரகத்தைச் சுவர்க்கம் ஆக்குவதே எனது பணியாகும். அது 5000 வருடங்களுக்கு ஒருமுறை உருவாக்கப்படுகின்றது. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். தேவர்களின் தர்மமே ஆதி சனாதன தர்மம், ஏனைய சமயங்கள் அனைத்தும் பின்னரே வருவதை நீங்கள் அறிவீர்கள். அரவிந்த கோஷ் தனது ஆச்சிரமத்தை அண்மையிலேயே (1926) ஆரம்பித்தார். இப்பொழுது அவருடைய ஆச்சிரமங்கள் எத்தனை உள்ளன என்று பாருங்கள்! அங்கே, விகாரமற்றவர் ஆகுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. வீட்டில், குடும்பத்துடன் வாழும்பொழுது, எவராலும் தூய்மையாக இருக்க முடியாது என அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: வீட்டில், உங்கள் குடும்பத்துடன் வாழும் பொழுது, ஒரு பிறவிக்கு மாத்திரம் தூய்மையாக இருங்கள். நீங்கள் பிறவி பிறவியாகத் தூய்மையற்று வருகின்றீர்கள். நான் இப்பொழுது உங்களைத் தூய்மையாக்கவே வந்திருக்கின்றேன். இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள். சத்திய, திரேதா யுகங்களில் விகாரங்கள் இருப்பதில்லை. இலக்ஷ்மி, நாராயணனினதும், ஏணியினதும் படங்கள் மிகவும் சிறந்தவை. அவற்றில் எழுதப்பட்டுள்ளது: சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமும், ஒரேயொரு இராச்சியமும் இருந்தன. நீங்கள் சரியான முறையில் விளங்கப்படுத்துவது அவசியம். நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்தும் வகையில், வயோதிபத் தாய்மார்களுக்கும் கற்பித்து, அவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவருக்கும் இப்படங்களைக் காட்டிக் கூறவேண்டும்: “இதுவே அவர்களது இராச்சியமாக இருந்தது, எனினும் அது இப்பொழுது இல்லை”. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாகி, தூய உலகிற்குச் செல்வீர்கள். தூய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது.” இது மிகவும் இலகுவானது. வயோதிபத் தாய்மார்களாகிய நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்தும் பொழுது, உங்களது பெயர் போற்றப்படும். ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தில் எழுதப்பட்டுள்ளது மிகவும் சிறப்பானது. இந்த வார்த்தைகளைக் கட்டாயமாக நீங்கள் வாசிக்க வேண்டும் என நீங்கள் அவர்களிடம் கூற வேண்டும். இதனை வாசிப்பதன் மூலம் மாத்திரமே உங்களுக்கு நாராயணனாகவும், உலக அதிபதிகளாகவும் ஆகுகின்ற போதை இருக்கும். தந்தை கூறுகின்றார்: நான் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று உங்களை ஆக்குகின்றேன். ஆகவே, நீங்கள் பிறர் மீது கருணை நிறைந்தவர்கள் ஆக வேண்டும். நீங்கள் பிறருக்கு நன்மை செய்தால் மாத்திரமே உங்களுக்கு நீங்கள் நன்மையளிக்க முடியும். வயோதிபத் தாய்மாருக்கு இவ்வாறு கற்பித்து, அவர்களைத் திறமைசாலிகள் ஆக்குங்கள். அப்பொழுதே கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதற்கு வருமாறு எட்டு முதல் பத்துத் தாய்மாரைக் தந்தை அழைக்கும் பொழுது, அவர்கள் உடனடியாக ஓடோடி வருவார்கள். ஒன்றைச் செய்பவர்கள் அதற்கான பலனைப் பெறுவார்கள். உங்கள் முன்னிலையில் உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் காணும்பொழுது, பெருஞ் சந்தோஷம் இருக்கும். “நான் இந்தப் பழைய சரீரத்தை நீக்கி, உலக அதிபதி ஆகுவேன்.” உங்கள் பாவங்கள் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு ஏற்ப, அழிக்கப்படும். கடித உறையில் அச்சிடப்படுகின்றது. ‘ஒரே தர்மம், ஒரே தேவ இராச்சியம் ஒரே மொழி’. அது மிகவும் விரைவில் ஸ்தாபிக்கப்படும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மத்தியிலோ அல்லது தந்தையுடனோ என்றுமே முகங்கோணாதீர்கள். தந்தை உங்களை ஆறுதல்படுத்தவே வந்திருக்கின்றார். ஆகவே என்றுமே குழப்பம் அடையாதீர்கள். தந்தையை என்றுமே எதிர்க்காதீர்கள்.2. இப்பழைய உலகின் மீதோ அல்லது பழைய சரீரத்தின் மீதோ உங்கள் இதயத்தை இணைக்காதீர்கள். உண்மையான தந்தைக்கும், உண்மையான ஆசிரியருக்கும், சற்குருவுக்கும் உண்மையாக இருங்கள். ஒரேயொருவரின் ஸ்ரீமத்தைச் சதா பின்பற்றி, ஆத்ம உணர்வில் இருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் பாக்கியத்தை அருள்பவராகி, உங்கள் தபஸ்வி ரூபத்தின் மூலம் அனைவருக்கும் பேறுகளின் அனுபவத்தைக் கொடுப்பீர்களாக.ஒளியினதும், ஏனைய பல அழியக்கூடிய பேறுகளினதும் அனுபவத்தைச் சூரியன் கொடுப்பதைப் போல், தபஸ்வி ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தபஸ்வி ரூபத்தின் மூலம் அனைவரையும் பேறுகள் எனும் கதிர்களை அனுபவம் செய்யுமாறு செய்ய வேண்டும். இதற்கு, அனைத்திற்கும் முதலில், உங்கள் சேமிப்புக் கணக்கை அதிகரியுங்கள். பின்னர், ஒரு மாஸ்டர் பாக்கியத்தை அருள்பவராகி, நீங்கள் சேமித்துள்ளவற்றைத் தொடர்ந்தும் கொடுங்கள். ஒரு தபஸ்வி சொரூபமாக இருப்பதன் அர்த்தம் என்னவெனில், உங்கள் தபஸ்யா மூலம் மௌனச் சக்தியின் கதிர்கள் பரவுவதை அனுபவம் செய்வதாகும்.
சுலோகம்:
பணிவானவர்களாகி. தொடர்ந்தும் அனைவருக்கும் மரியாதையைக் கொடுங்கள் - இதுவே உண்மையான ஈடேற்றம் ஆகும்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்கள் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
இது நல்லது என்று மக்கள் இப்பொழுது கூறினாலும், நல்லவர்கள் ஆகுவதற்கான தூண்டுதலை அவர்கள் பெறுவதில்லை. அது நடைபெறுவதற்கான ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. கூட்டாக எரிமலை ரூபம் ஆகுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உயிருள்ள கலங்கரை விளக்கமாக வேண்டும். நீங்கள் சேவாதாரிகளும், அன்பானவர்களும், மற்றும் ஒரே பலத்தையும், ஒரே ஆதாரத்தையும் கொண்டவர்கள். அவை அனைத்தும் நல்லதே. எவ்வாறாயினும், மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கின்ற ஸ்திதி உங்களுக்கு இருக்கின்ற பொழுதே, அனைவரும் விட்டிற்பூச்சிகளைப் போல் உங்களைச் சுற்றி வர ஆரம்பிப்பார்கள்.