26.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சர்வசக்திவானான தந்தை உங்களுக்குச் சக்தி கொடுப்பதற்காகவே வந்துள்ளார். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்திருக்கிறீர்களோ அந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் சக்தியைப் பெறுவீர்கள்.

பாடல்:
இந்த நாடகத்தில், குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு அனைத்திலும் மிகச் சிறந்த பாகத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே எல்லையற்ற தந்தைக்குரியவர்கள். கடவுள் ஆசிரியராகி உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார். எனவே நீங்கள் பாக்கியசாலிகள் அல்லவா? உலக அதிபதி உங்கள் விருந்தாளியாக வந்துள்ளார். அவர் உங்கள் ஒத்துழைப்புடன் உலகிற்கு நன்மை செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அழைத்ததால், அவர் வந்துள்ளார். இதுவே இரு கைகளாலும் தட்டுவதாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து முழு உலகையும் ஆட்சி புரிவதற்கான சக்தியைப் பெறுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் ஆசிரியரின் முன்னிலையிலும் அமர்ந்திருக்கின்றீர்கள். அத்துடன் பாபா குழந்தைகளாகிய உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகக் குருவாகவும் வந்துள்ளார் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். தந்தையும் கூறுகின்றார்: ஓ! ஆன்மீகக் குழந்தைகளே, நான் இங்கமர்ந்திருந்து உங்களை அப்பால் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். இவ்வுலகம் பழையதாகி விட்டது, இவ்வுலகம் அழுக்கானது என்பதும் உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்களும் அழுக்காகி விட்டீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி கூறியதுண்டு: ஓ தூய்மையாக்குகின்ற பாபாவே, வந்து தூய்மையற்ற எங்களை இந்தத் துன்ப உலகில் இருந்து அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இப்போது நீங்கள் இங்கமர்ந்திருக்கிறீர்கள். ஆகையால் இது உங்கள் இதயத்தில் இருக்க வேண்டும். தந்தையும் கூறுகின்றார்: நீங்கள் அழைத்ததனால் உங்கள் அழைப்பை ஏற்று நான் வந்துள்ளேன். உண்மையில் “வாருங்கள்” என நீங்கள் கூவி அழைத்ததைத் தந்தை ஞாபகப்படுத்துகின்றார், அப்படியல்லவா? நீங்கள் அவரை அழைத்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவு கூருகின்றீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, முன்னைய சக்கரத்தில் அவர் செய்ததைப் போன்று, பாபா இப்பொழுது வந்துள்ளார். அம்மக்கள் திட்டங்களை வகுக்கின்றார்கள். ஆனால் இதுவோ சிவபாபாவின் திட்டமாகும். இந்நேரத்தில் அனைவரும் தங்களுக்கென்று சொந்தத் திட்டங்களைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் இதைச் செய்வோம், அதைச் செய்வோம்….. என ஐந்து வருடங்களுக்கான திட்டங்களை எல்லாம் தீட்டுகிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள் எனப் பாருங்கள். முன்னர் வழக்கமாக அவர்கள் ஒருபோதும் திட்டங்களைத் தீட்டுவதில்லை. ஆனால் இப்பொழுது அவர்கள் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இது எங்கள் பாபாவின் திட்டம் என்பதை அறிவீர்கள். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, 5000 வருடங்களுக்கு முன்னர் நான் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளேன். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள், இங்கு விலைமாதர் இல்லத்தில் சந்தோஷமற்றவராகியதால், நான் உங்களைச் சிவாலயத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன். அந்த அமைதி தாமமே, சிவனின் அசரீரியான தாமம் (சிவாலயம்) ஆகும். சந்தோஷதாமமே சிவனின் சரீரபூமியாகும் (சிவாலயம்). எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்நேரத்தில் புத்துணர்ச்சி ஊட்டுகின்றார். நீங்கள் தந்தையின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் புத்தியில் தந்தை வந்துள்ளார் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளீர்கள். “பாபா” என்ற வார்த்தை மிக இனிமையானது. ஆத்மாக்களாகிய நீங்களே தந்தையின் குழந்தைகள் என்பதையும் பின்னர் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக, இந்த பாபாவிற்கு உரியவராகியுள்ளீர்கள் என்பதையும் நீங்களும் அறிவீர்கள். நீங்கள் நீண்டகாலமாக பௌதீக பாபாமார்களையும் கொண்டிருந்தீர்கள். சத்திய யுகத்திலிருந்தே உங்கள் சந்தோஷ, துன்ப பாகங்களை நடித்துள்ளீர்கள். இப்பொழுது உங்கள் துன்ப பாகங்கள் முடிவிற்கு வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் 21 பிறவிகள் முழுவதிற்குமான உங்கள் சந்தோஷ பாகங்களை நடித்துள்ளீர்கள். பின்னர் நீங்கள் அரைச் சக்கரத்திற்குத் உங்கள் துன்ப பாகங்களை நடித்துள்ளீர்கள். இப்பொழுது பாபா இதனை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். எனவே பாபா உங்களை வினவுகின்றார்: உண்மையில் அது அவ்வாறு இருந்ததா? இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் சந்தோஷ பாகங்களை அரைச் சக்கரத்திற்கு நடிக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தினால் நிறைந்தவராகிய பின்னர், வெறுமையாகுகின்றீர்கள். பின்னர் தந்தை உங்களை நிரப்பி விடுகிறார். உங்கள் கழுத்தைச் சுற்றி வெற்றிமாலை உள்ளது. உங்கள் கழுத்தைச் சுற்றி ஞான மாலையும் உள்ளது. உண்மையில் நாங்கள் தொடர்ந்தும் சக்கரத்தைச் சுற்றி வருகின்றோம். சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் உள்ளன. பின்னர் நாங்கள் இந்த இனிய சங்கம யுகத்தினுள் வருகிறோம். இது இனிமையானதென அழைக்கப்படுகிறது. அமைதி தாமம் இனிமையானது அல்ல. அதிமங்களகரமான நன்மைபயக்கும் சங்கமயுகமே அனைத்திலும் இனிமையிலும் இனிமையானதாகும். நாடகத்தில் நீங்கள் அனைத்திலும் மிகச்சிறந்த பாகங்களையே கொண்டுள்ளீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தைக்கு உரியவராகியதால் நீங்கள் மிக அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது அத்தகையதொரு மேன்மையான, இலகுவான கல்வியாகும். நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இதில் நீங்கள் முயற்சி எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. வைத்தியர்களும் பொறியியலாளர்களும் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளுக்குத் தங்கள் தந்தையின் வருமானத்தில் உரிமையுள்ளது. நீங்கள் இதனைக் கற்று, 21 பிறவிகளுக்கான ஓர் உண்மையான வருமானத்தை ஈட்டிக் கொள்கிறீர்கள். தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை. இதுவே சத்தமற்று ஓதுதல் என அழைக்கப்படுகிறது. பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தையும் கூறுகிறார்: நான் வந்துள்ளேன். எனவே இரு கைகளும் தட்டிக் கொண்டிருக்கும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், பிறவிபிறவியாகச் செய்த உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஐந்து விகாரங்களான இராவணன், உங்களைப் பாவ ஆத்மாக்களாக ஆக்கிவிட்டான். பின்னர் நீங்கள் தூய்மையாகவும் புண்ணியாத்மாக்களாகவும் ஆகவேண்டும். இது உங்கள் புத்தியில் பதிய வேண்டும். நாங்கள் தந்தையின் நினைவின் மூலம் தூய்மையாகி, பின்னர் அவருடன் மீண்டும் வீட்டிற்குச் செல்வோம். இக்கல்வியின் மூலம் நாங்கள் வலிமை பெறுகிறோம். தேவதர்மத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது: தர்மமே சக்தி ஆகும். தந்தை சர்வசக்திவான் ஆவார். எனவே, உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்காக நாங்கள் பாபாவிடமிருந்து சக்தியைப் பெறுகிறோம். எவராலும் எங்களிடமிருந்து அந்த ஆட்சியுரிமையை அபகரிக்க முடியாது. நீங்கள் அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறு அரசர்கள் தங்கள் கைகளில் அதிக அதிகாரத்தைப் பெறுகிறார்கள் எனப் பாருங்கள். மக்களுக்கு அவர்களையிட்டு அதிகப் பயம் உள்ளது. அரசர் ஒருவருக்கு பல பிரஜைகளும் சேனைகளும் உள்ளன. ஆனால் அது தற்காலிகமான சக்தியாகும். இந்தச் சக்தி 21 பிறவிகளுக்கானது. நாங்கள் இப்பொழுது சர்வசக்திவான் தந்தையிடமிருந்து உலகை ஆட்சி புரிவதற்கான சக்தியைப் பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் மீது அந்த அன்பு இருக்கின்றது. தேவர்கள் நடைமுறை ரூபத்தில் இல்லாத போதிலும் அவர்கள் மீது மக்களுக்கு அதிகளவு அன்பு உள்ளது. அவர்களது பிரஜைகள் அவர்களுக்கு முன்னால் நேரடியாக இருக்கும் போது, அவர்கள் மீது அவர்களுக்கு அதிகளவு அன்பு இருக்கும். இந்தச் சக்தி அனைத்தையும் நினைவு யாத்திரையின் மூலமே நீங்கள் பெறுகின்றீர்கள். இவ்விடயங்களை மறந்து விடாதீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் நீங்கள் அதிகளவு சக்தி உடையவர்கள் ஆகுவீர்கள். வேறு எவரையும் சர்வ சக்திவான் என அழைக்க முடியாது. அனைவருமே சக்தியைப் பெறுகிறார்கள். இந்நேரத்தில் எவரிடமும் அந்தச் சக்தி இல்லை. அனைவரும் தமோபிரதானானவர்கள். அந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரும் ஒரேயொருவரிடமிருந்து சக்தியைப் பெற்றிருப்பார்கள். பின்னர் அவர்கள் வந்து அவர்களது சொந்த இராச்சியத்தில் தங்களின் சொந்தப் பாகங்களை நடிப்பார்கள். அவர்கள் தங்களது சொந்தக் கர்மக் கணக்குகளை முடித்து, வரிசைக்கிரமமாகச் சக்திசாலிகள் ஆகுவார்கள். முதலாம் இலக்கச் சக்தி என்பது தேவர்களுடையதாகும். இலக்ஷ்மி நாராயணனே உண்மையில் முழு உலகினதும் அதிபதிகள் ஆவார்கள். நீங்கள் முழு உலகச் சக்கரத்தையும் உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தை உங்களுக்குள் கொண்டிருப்பது போன்று, பாபாவின் ஆத்மாவும் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ளது. இப்பொழுது அவர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நாடகத்தில் பாகம் பதியப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது. அந்தப் பாகம் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் இடம்பெறும். இதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் ஆட்சி செய்யும் போது, தந்தை ஓய்வு பெற்றவராக இருக்கிறார். அவர் மீண்டும் மேடைக்கு எப்போது வருகின்றார்? நீங்கள் எப்போது சந்தோஷமற்றவர் ஆகினீர்கள்? பதிவு முழுவதும் அவரிலேயே பதியப்பட்டுள்ளது என்பதை நீங்களும் அறிவீர்கள். ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவர் என்றாலும் அதிகளவு புரிந்துணர்வைக் கொண்டுள்ளார். தந்தை வந்து உங்களுக்கு அதிகளவில் புரிந்துணர்வைக் கொடுக்கின்றார். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் இவை அனைத்தையும் மறந்து விடுகிறீர்கள். இந்த ஞானத்தை நீங்கள் சத்தியயுகத்தில் கொண்டிருப்பதில்லை. அங்கே நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்களாக இருந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள் என்பதை இந்நேரத்தில் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள். நாங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றோம். இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் மிக நன்றாக நீங்கள் கிரகிக்க வேண்டும். பிறருக்கு விளங்கப்படுத்துவதில் சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகின்றது. அது நீங்கள் அவர்களுக்கு வாழ்க்கையைத் தானம் செய்வது போன்றதாகும். “மரணம் வந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறது” என்று கூறப்படுகின்றது. மரணம் என்று எதுவுமே இல்லை. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். ஆத்மா கூறுகிறார்: நான் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு வேறொன்றை எடுக்கின்றேன். மரணம் என்னை உண்பதில்லை. ஆத்மாவிற்கு உணர்வு உள்ளது. ஆத்மா கருப்பையில் இருக்கும் போது, அவர் காட்சிகளைக் காண்பதுடன் துன்பத்தையும் அனுபவம் செய்கின்றார். ஆத்மா உள்ளார்த்தமாகத் தண்டனையை அனுபவம் செய்வதனாலேயே கருப்பை ஒரு சிறை என அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட அத்தகைய அற்புதமானதொரு நாடகமாகும்! ஆத்மாக்கள் காட்சிகளைக் காணும் போது, கருப்பை என்னும் சிறையில் தண்டனையை அனுபவம் செய்கிறார்கள். அவர் ஏன் தண்டனையைப் பெறுகிறார்? அந்த ஆத்மாவிற்கு ஒரு காட்சி கொடுக்கப்படுகின்றது. நீங்கள் இத்தனை பிழையான விடயங்களைச் செய்ததுடன் இன்ன இன்னாருக்குத் துன்பத்தையும் விளைவித்தீர்கள். நீங்கள் அக்காட்சிகள் அனைத்தையும் கருப்பையினுள் காண்கின்றீர்கள். இருப்பினும் வெளியில் வந்ததும், நீங்கள் பாவாத்மாக்களாகவே ஆகுகிறீர்கள். பாவங்கள் அனைத்தும் எவ்வாறு எரிக்கப்பட முடியும்? அது நினைவு யாத்திரையின் மூலமே நிகழும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதாலும் உங்கள் பாவங்கள் துண்டிக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுகின்ற இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுழற்றினால், பிறவிபிறவியாக நீங்கள் சேர்த்த பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சக்கரத்தையும் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுத்தவரையும் நினைவு செய்ய வேண்டும். பாபா எங்களைச் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவராகவும் ஆக்குகின்றார். அவர் எங்களை அவ்வாறு ஆக்குகின்றார். ஆனால் தினமும் புதியவர்கள் வரும் போது, அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டப்பட வேண்டும். நீங்கள் ஞானம் அனைத்தையும் பெற்று விட்டீர்கள். உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்த நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். இவ்வாறாக நீங்கள் தொடர்ந்தும் சக்கரத்தைச் சுற்றுகின்றீர்களா? குழந்தைகள் அதிகமாக அதனை மறந்து விடுகிறார்கள் எனத் தந்தைக்குத் தெரியும். சக்கரத்தைச் சுழற்றுவதில் எவ்விதச் சிரமமும் இல்லை. அத்துடன் உங்களுக்கு அதிக நேரமும் இருக்கிறது. இறுதியில், நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுகின்ற ஸ்திதியையும் கொண்டிருப்பீர்கள். நீங்களும் அவர்களைப் போல் ஆக வேண்டும். சந்நியாசிகளால் இக் கற்பித்தலைக் கொடுக்க முடியாது. குருமார்களுக்கும் கூட சுயதரிசனச் சக்கரத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் கங்கைக்குச் செல்வோம். பலர் அங்கு நீராடுகிறார்கள். அங்கு நீராட வரும் மக்களிடமிருந்து குருமார்கள் பெருந்தொகையான வருமானத்தை ஈட்டுகின்றார்கள். மக்கள் மீண்டும் மீண்டும் யாத்திரைகளுக்குச் செல்கிறார்கள். அந்த யாத்திரைக்கும் இந்த யாத்திரைக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது எனப் பாருங்கள்! இந்த யாத்திரை, அந்த யாத்திரைகள் அனைத்தையும் முடிவடையச் செய்கிறது. இந்த யாத்திரை மிகவும் இலகுவானது. அத்துடன் சக்கரத்தையும் சுழற்றுங்கள். ஒரு பாடல் உள்ளது: நாங்கள் நான்கு திசைகளையும் சுற்றி வந்தோம். அவ்வாறிருந்தும் உங்களிடமிருந்து தொலைவிலேயே இருந்தோம். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து தொலைவிலேயே இருந்தீர்கள். நீங்கள் அதனை உணர்கிறீர்கள். அம்மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் பல தடவைகள் எங்கும் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதை இப்பொழுது அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது அவை அனைத்திலிருந்தும் விடுபட்டவராகி விட்டீர்கள். எங்கெல்லாம் சுற்றிய போதிலும் நீங்கள் நெருங்கி வரவில்லை. மாறாக நீங்கள் தொலைவிற்கே சென்றீர்கள். இப்பொழுது நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, அனைவரையும் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வதற்குத் தந்தையே வரவேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றித் தூய்மையாகுங்கள். இவ்வுலகைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். புதிய வீடு கட்டப்பட்டு ஆயத்தமாக உள்ள போதிலும் நீங்கள் இன்னும் பழைய வீட்டிலேயே வாழ வேண்டும். உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே தந்தை சங்கம யுகத்தில் வருகிறார். ஓர் எல்லையற்ற ஆஸ்தியானது எல்லையற்ற தந்தையிடமிருந்தே பெறப்படுகிறது. தங்கள் (லௌகீக) தந்தையின் ஆஸ்தி தங்களுடையதே எனக் குழந்தைகளுக்குத் தெரியும். அந்தச் சந்தோஷத்தை அவர்கள் பேணுகிறார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை ஈட்டுவதுடன், தங்கள் (லௌகீக) தந்தையின் ஆஸ்தியையும் பெறுகிறார்கள். நீங்கள் ஓர் ஆஸ்தியை மாத்திரமே பெறுகிறீர்கள்; அங்கு நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியை எவ்வாறு பெற்றீர்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்காது. அங்கு உங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும், ஏனெனில் தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர், அவரே உங்கள் பாவங்களை அழிக்கின்றார். தந்தையை நினைவு செய்து, சுயதரிசனச் சக்கரத்தை நீங்கள் சுழற்றுவதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இதனை நீங்கள் மிகவும் நன்றாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இதனை விளங்கப்படுத்தினால் போதுமானது. நீங்கள் மேலும் முன்னேறும் போது அதிகமாகப் பேசவேண்டியதில்லை. ஒரு சமிக்ஞை போதுமானது. எல்லையற்ற தந்தையை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு விடும். சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதற்கும் சாதாரண பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாக ஆகுவதற்குமே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் அதனை நினைவு செய்கிறீர்கள், அல்லவா? இவ்விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் புகுவதில்லை. நீங்கள் இங்கு வரும் போது, புதிய உலகான சுவர்க்கத்தின் ஆஸ்தியை பாப்தாதாவிடம் கோர வேண்டும் என்பதை உங்கள் புத்தி உணர்கிறது. தந்தை கூறுகிறார்: சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதினால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இப்பொழுது உங்களை வைரம் போலாக்குகின்ற அந்த ஒரேயொருவரையே பாருங்கள். நீங்கள் இதனைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். வேறு எதனையும் பார்க்க வேண்டியதில்லை. இதனை நீங்கள் தெய்வீகக் காட்சியின் மூலம் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாவே இந்தச் சரீரத்தின் மூலம் கற்கின்றார். இந்த ஞானத்தை நீங்கள் இந்நேரத்திலேயே பெறுகிறீர்கள். நாங்கள் என்ன செயலைச் செய்தாலும் ஒரு சரீரத்தை எடுத்த பின்னர் ஓர் ஆத்மாவே அச் செயல்களை செய்கின்றார். பாபா உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவருடைய பெயர் என்றுமே சிவன் என்பதாகும். சரீரங்களின் பெயர்கள் மாறும். இச்சரீரம் என்னுடையதல்ல. இது இவரின் (பிரம்மாவின்) சொத்தாகும். சரீரமே ஆத்மாவின் சொத்தாகும். அதன் மூலம் அவர் தனது பாகத்தை நடிக்கிறார். இது இலகுவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா இருக்கின்றார். ஒவ்வொருவருடைய சரீரத்திற்கும் வெவ்வேறான பெயர் உள்ளது. அவர் பரமாத்மா ஆவார். அவரே அதிமேலானவர். ஒரேயொரு கடவுளே படைப்பவர் என்றும் ஏனைய அனைவரும் தங்கள் பாகங்களை நடிக்கின்ற படைப்புக்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். எவ்வாறு ஆத்மாக்கள் வருகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். முதன்முதலில் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தில் மிகச்சொற்ப ஆத்மாக்களே இருந்தனர். பின்னர் இறுதியில் அவர்களே முதலாவதாக வருவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். இது தொடர்ந்தும் சுற்றிக் கொண்டிருக்கும், உலகச் சக்கரத்தைப் போன்றதொரு மாலையாகும். நீங்கள் ஒரு மாலையைச் சுற்றும் போது, மணிகள் அனைத்தும் ஒரு வட்டமாகவே சுற்றும். சத்தியயுகத்தில் சிறிதளவேனும் பக்தி இருப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: ஓ ஆத்மாக்களே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். விநாசம் முன்னால் உள்ளது. நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன் தண்டனையை அனுபவம் செய்வதிலிருந்தும் விடுவிக்கப்படுவீர்கள். நீங்கள் நல்லதோர் அந்தஸ்தையும் பெறுவீர்கள். இல்லாவிட்டால், பெருமளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். நான் குழந்தைகளாகிய உங்களின் சிறந்ததொரு விருந்தாளி. நான் உலகம் முழுவதையும் மாற்றுகின்றேன். நான் பழைய உலகைப் புதிய உலகாக ஆக்குகின்றேன். பாபா ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து, பழைய உலகைப் புதிய உலகாக ஆக்குகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வுலகம் புதியதிலிருந்து பழையதாக ஆகுவதுடன் பழையதிலிருந்து புதியதாகவும் ஆகுகின்றது. இந்நேரத்தில் நீங்கள் தொடர்ந்தும் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும். தந்தை தனது புத்தியில் இருக்கின்ற ஞானத்தையே பேசுகின்றார். சக்கரம் எவ்வாறு சுற்றுகின்றது என்பதும் உங்கள் புத்தியிலும் உள்ளது. பாபா வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் தூய்மையாகுகின்றோம். நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தொடர்ந்தும் தூய்மை ஆகுவதுடன் பின்னர் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் பெறுகின்றீர்கள். முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டுவது மிக முக்கியமாகும். உங்கள் முயற்சியைத் தூண்டுவதற்காக பல படங்கள் போன்றன உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் இங்கு வருபவர்களுக்கு 84 பிறவிகளின் சக்கரத்தை விளங்கப்படுத்துகின்றீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுகின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியில் ஞானத்தை மிகவும் நன்றாகக் கிரகித்து, பல ஆத்மாக்களுக்கும் வாழ்க்கை என்ற தானத்தை வழங்குங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர் ஆகுங்கள்.

2. இந்த இனிய சங்கம யுகத்தில் உங்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்வதோடு, தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையைச் சதா சந்தோஷம் நிறைந்ததாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
சரியான வேளையில் உங்களின் ஆசீர்வாதங்களை ஒரு பணிக்காகப் பயன்படுத்துவதன் மூலம் பலனுள்ளதாக்கி, பலனின் சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் பாப்தாதாவிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அவ்வப்போது, ஒரு பணிக்காகச் சரியான நேரத்தில் பயன்படுத்துங்கள். அந்த நாளில் ஒரு மிக நல்ல ஆசீர்வாதத்தைக் கேட்பதன் மூலம் மட்டும் சந்தோஷப்படாதீர்கள். நீங்கள் அந்த ஆசீர்வாதத்தைப் பயன்படுத்தும்போதே, அது உங்களுடன் எல்லா வேளையும் தங்கியிருக்கும். அழியாத தந்தையிடமிருந்தே ஆசீர்வாதங்கள் பெறப்படுகின்றன. ஆனால் நீங்கள் அவற்றைப் பலனுள்ளதாக்க வேண்டும். இதற்கு, அந்த ஆசீர்வாதங்களுக்கு மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு என்ற நீரையும் ஆசீர்வாதங்களின் ரூபத்தில் ஸ்திரப்படுத்துதல் என்ற சூரிய ஒளியையும் வழங்குங்கள். நீங்கள் ஆசீர்வாதங்களின் சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
சிறப்பியல்புகள் பிரபு பிரசாதம் (இறைவனுக்குப் படைக்கப்பட்டவை). அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்தி, பகிர்ந்தளியுங்கள். அதன்மூலம் அவற்றை அதிகரியுங்கள்.