26.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, செயல்கள் செய்கின்ற வேளையிலும் உங்களை எனது காதலியாகக் கருதி, ஒரேயொரு அன்பிற்கினியவரான என்னை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் மட்டுமே நீங்கள் தூய்மையாகி, தூய உலகிற்குச் செல்வீர்கள்.

கேள்வி:
இந்த மகாபாரத யுத்த காலத்தில் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தையினால் கொடுக்கப்படும் கட்டளைகள் என்ன?

பதில்:
குழந்தைகளே, தந்தையின் கட்டளைகளாவன: ஆத்ம உணர்வு உடையவராக இருப்பீர்களாக! இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்: தந்தையாகிய என்னையும் இராச்சியத்தையும் நினைவு செய்து, உங்கள் நடத்தையைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். மிக, மிக இனிமையானவர்கள் ஆகுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நினைவில் நிலைத்திருக்கின்ற பழக்கத்தை உறுதியாக்குவதுடன், சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர் ஆகுங்கள். முன்னேறிச் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றார்கள். தாங்கள் அனைவரும் தந்தையின் நினைவில் அமர்ந்திருப்பதாக ஒவ்வொருவரும் கூறுகின்ற ஆன்மீக ஒன்றுகூடல் வேறு எதுவுமில்லை. இதுவே அந்த இடம். பாபா ஒரு வழிகாட்டலைக் கொடுத்துள்ளார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்: நீங்கள் வாழும்வரை தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். பரலோகத்தந்தை மாத்திரமே, ஓ குழந்தைகளே எனக் கூறுகின்றார். குழந்தைகள் அனைவரும் அவருக்கு செவிமடுக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் அல்லாது, அவர் அனைவருக்கும் கூறுகின்றார்: குழந்தைகளே, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள், அதன் மூலம் நீங்கள் பல பிறவிகளின் பாவங்களினால் சேர்த்துக் கொண்ட கறைகள் அகற்றப்படுவதுடன், ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகமுடியும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆதியில் சதோ பிரதானாக இருந்தீர்கள். பின்னர் உங்கள் பாகங்களை நடிக்கும்பொழுது தமோபிரதான் ஆகினீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த மேன்மையான வாசகங்களைப் பேச முடியாது. ஒரு லௌகீகத் தந்தைக்கு இரண்டு அல்லது நான்கு குழந்தைகளே இருக்கின்றார்கள். அவர்களுக்கு இராமரின் பெயரை அல்லது சீதைக்குச் சொந்தமான தூய்மையாக்குகின்ற இராமரின் பெயரை உச்சரிக்கும் படியோ அல்லது ஸ்ரீகிருஷ்ணரை நினைக்கும்படியோ கூறப்படுகின்றது. ஓ குழந்தைகளே, இப்பொழுது உங்களது தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என அவர் கூறுவதில்லை. அவர்களுடைய தந்தை வீட்டிலேயே இருக்கின்றார், எனவே அவரை நினைவுசெய்வது என்ற கேள்வி இல்லை. எல்லையற்ற தந்தை இதைச் சரீரத்தில் உள்ள ஆத்மாக்களுக்கே கூறுகின்றார். ஆத்மாக்களே தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை 5000 வருடங்களுக்குப் பின்னர் ஒருமுறை மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவைச் சந்திக்கும்போதே வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து உங்களுக்கு இந்தப்பாடத்தைக் கற்பிக்கின்றேன். ஓ குழந்தைகளே, “ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!” என நீங்கள் என்னை நினைவு செய்கின்றீர்கள். நான் நிச்சயமாக வருகின்றேன். இல்லையெனில் நீங்கள் எவ்வளவு காலம் என்னைத் தொடர்ந்து நினைவு செய்வீர்கள்? நிச்சயமாக ஒரு எல்லை இருக்கின்றது. மக்கள் கலியுகத்தின் எல்லை பற்றி அதாவது, அது எப்பொழுது முடிகின்றது என்பதை அறியமாட்டார்கள். தந்தையே இதையும் உங்களுக்குக் கூறவேண்டி உள்ளது. ஓ குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! எனத் தந்தையைத் தவிர வேறு எவராலும் கூறமுடியாது. நினைவே பிரதான விடயம். சிருஷ்டிச் சக்கரத்தை நினைவு செய்வது பெரிய விடயமல்ல, தந்தையை நினைவு செய்வதற்கே முயற்சி தேவை. தந்தை கூறுகின்றார்: அரைக் கல்பத்திற்கு பக்திமார்க்கமும் மற்றைய அரைக் கல்பத்திற்கு இந்த ஞான மார்க்கமும் இருக்கும். நீங்கள் அரைக் கல்பத்திற்கு இந்த ஞானமார்க்கத்தின் வெகுமதியையும், பின்னர் அரைக் கல்பத்திற்கு பக்தியின் வெகுமதியையும் பெறுகின்றீர்கள். இது சந்தோஷத்துக்கான வெகுமதி, மற்றையது துன்பத்திற்கான வெகுமதி. இன்ப, துன்பத்துக்கான சக்கரம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய உலகில் சந்தோஷமும், பழைய உலகில் துன்பமும் உள்ளது. மக்கள் இந்த விடயங்கள் பற்றிய எதையும் அறியமாட்டார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களின் துன்பத்தை நீக்கி எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள்! இராவண இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களின் துன்பத்தை அகற்ற முடியாது என்பதை எவருமே அறியமாட்டார்கள். வைத்தியர்கள் சரீரத்தின் நோய்களைக் குணப்படுத்துகின்றனர், ஆனால் அது தற்காலிகமானது. இது அரைக்கல்பத்திற்கு நிரந்தரமானது. புதிய உலகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே அனைவரும் நிச்சயமாகச் சந்தோஷமாக இருப்பார்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள்? இந்த விடயங்கள் பற்றி எவராலும் சிந்தித்துப் பார்க்க முடியாது. இந்தக்கல்வி புதியது என்பதையும், உங்களுக்குக் கற்பிப்பவரும் புதியவர் என்பதையும் நீங்கள் இப்போது அறிவீர்கள். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம், அரசர்கள் ஆக்குகின்றேன். உண்மையில் சத்தியயுகத்தில் ஒரு தர்மமே இருப்பதால், ஏனைய சமயங்கள் அனைத்தும் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். புதிய உலகம் என்றால் என்ன, பழைய உலகம் என்றால் என்ன, சத்தியயுகத்தில் யார் வசிக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் இராச்சியம் மாத்திரமே இருக்கின்றது. இது நேற்றைய விடயம். இது 5000 வருடங்களுக்கான கதை. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவர்களின் இராச்சியம் இருந்ததாகத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். அவர்கள் 21 பிறவிகள் எடுத்ததனால் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். இதனாலேயே அவர்கள் இப்பொழுது அழைக்கின்றர்கள்: வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! தூய ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகிலேயே வசிக்கின்றார்கள். பின்னர் அவர்கள் தங்களது பாகங்களை நடிப்பதற்காக கீழிறங்கி வந்ததும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கின்றார்கள். சதோபிரதான் ஆகியவர்களே விகாரமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தமோபிரதானாக இருப்பவர்கள் தங்களை விகாரமானவர்கள் என்று அழைக்கின்றார்கள். தேவர்கள் விகாரம் அற்றவர்களாக இருந்தார்கள் எனவும், தாங்கள் விகாரமானவர்கள் எனவும் அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் தேவர்களைப் பூஜிப்பவர்களினது புத்தியில் விரைவாகப் பதியும், ஏனெனில் அவர்கள் தேவதர்மத்திற்குச் சொந்தமானவர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பதையும், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள் என்பதையும் இப்பொழுது அறிவீர்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை வழிபடுகின்றனர், ஏனெனில் அவர்கள் அந்த மதத்திற்குச் சொந்தமானவர்கள். எனவே, நீங்களும் தேவர்களைப் பூஜிப்பதால் இந்த தர்மத்திற்குச் சொந்தமானவர்கள். தேவர்கள் விகாரம் அற்றவர்களாக இருந்தனர். இப்பொழுது விகாரமானவர்கள் ஆகிவிட்டனர். விகாரத்தின் காரணமாகவே அதிகளவு துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் சதா சந்தோஷமானவர்கள் ஆகுவீர்கள். இங்கே தொடர்ச்சியாக துன்பமும், தற்காலிக சந்தோஷமும் உள்ளது. அங்கே ஒவ்வொருவரின் அந்தஸ்திலும் வேறுபாடு உள்ளபோதிலும், அனைவரும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள். சந்தோஷ இராச்சியமும் அத்துடன் துன்ப இராச்சியமும் உள்ளன. தந்தை வருகின்றபோது விகாரமான அரசர்களின் இராச்சியம் ஒரு முடிவிற்கு வருகின்றது. ஏனெனில் இந்த நேரத்தின் வெகுமதி முடிவடைகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை இப்பொழுது அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறு அமைதிக்கடலாகவும், அன்புக்கடலாகவும் இருக்கின்றேனோ, உங்களையும் அவ்வாறே ஆக்குகின்றேன். இந்தப்புகழ் ஒரு தந்தைக்கே சொந்தமானது. இது எந்த மனிதரதும் புகழும் அல்ல. தந்தை தூய்மைக்கடல் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் பரந்தாமத்தில் இருக்கின்றபோது தூய்மையாக இருக்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த இறைஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். வேறு எவருமே இதைக் கொண்டிருக்க முடியாது. எவ்வாறு கடவுள் ஞானக்கடலாகவும், உங்களுக்கு சுவர்க்கம் எனும் ஆஸ்தியைக் கொடுப்பவராகவும் இருக்கின்றாரோ, அவ்வாறே அவர் தனது குழந்தைகளையும் நிச்சயமாகத் தனக்கு சமமாக ஆக்க வேண்டும். முன்னர் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொண்டிருக்கவில்லை. அதிமேன்மையான புகழுடையவரான கடவுள் எங்களையும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார், எனவே நீங்களும் உங்களை மேன்மையானவர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். சிலர் கூறுகின்றார்கள்: இவரிடம் மிக நல்ல தெய்வீகக் குணங்கள் உள்ளன. அவர் தேவரைப் போன்றவர். அமைதியான சுபாவம் உள்ளவரும், ஒருபோதும் எவரையும் அவமரியாதை செய்யாதவருமான ஒருவர் நல்லவர் எனக் கூறப்படுகின்றார். எவ்வாறாயினும் அவர் தந்தையையோ, அல்லது உலகச் சக்கரத்தையோ அறியமாட்டார். தந்தை இப்பொழுது வந்து உங்களை அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தையைத்தவிர, வேறு எவராலும் உங்களைப் புதிய உலகின் அதிபதிகள் ஆக்க முடியாது. இது பழைய உலகம், அதுவோ புதிய உலகம். அங்கே தேவர்களின் இராச்சியம் இருக்கின்றது. கலியுகத்தில் அந்த இராச்சியம் இல்லை, ஆனால் ஏனைய அனைத்து இராச்சியங்களும் உள்ளன. இப்பொழுது எண்ணற்ற இராச்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஓர் இராச்சியம் ஸ்தாபனை ஆகுகின்றது. இராச்சியம் இல்லாதபோதே, தந்தை வந்து அதை ஸ்தாபிக்கின்றார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதைச் செய்யமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தைமீது அதிகளவு அன்பு வைத்திருக்க வேண்டும். தந்தை உங்களைச் செய்யுமாறு கூறுபவற்றை நீங்கள் நிச்சயமாகச் செய்யவேண்டும். முதலில் தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதுடன், மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுகின்ற சேவையையும் செய்யுங்கள். தேவதர்மத்திற்குச் சொந்தமானவர்களில் நிச்சயமாக இது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் ஒரு தந்தையையே புகழ்கின்றோம். தந்தையிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன, எனவே அவர் எங்களையும் தெய்வீகக் குணங்கள் உள்ளவர்கள் ஆக்கவே வருகின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, மிக இனிமையானவர்கள் ஆகுங்கள்! அமர்ந்திருந்து ஏனையோருக்கும் அன்புடன் விளங்கப்படுத்துங்கள். கடவுள் பேசுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நான் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவேன். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பழைய உலகின் விநாசம் சற்று முன்னால் உள்ளது. முன்னரும்கூட கடவுள் இராஜயோகம் கற்பித்தபோது, மகாபாரதயுத்தம் இடம்பெற்றது. இப்பொழுது எண்ணற்ற மதங்கள் உள்ளன. சத்தியயுகத்தில் ஒரு தர்மமே இருந்தது, அது இப்பொழுது மறைந்து விட்டது. இப்பொழுது தந்தை வந்து ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, எண்ணற்ற மதங்களை அழிக்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இந்த யாகத்தை உருவாக்குவதுடன், உங்களை அமரத்துவ உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றேன். நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்ல விரும்பினால், மரண உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். தந்தையே புதிய உலகைப் படைப்பவர் ஆவார், எனவே நிச்சயமாக அவர் இங்கேயே வரவேண்டும். விநாசத்தின் சுவாலைகள் முன்னால் உள்ளன. அப்பொழுதே நீங்கள் உண்மையே கூறுகின்றீர்கள் எனவும், இது அதே மகாபாரத யுத்தம் எனவும் மக்கள் நம்புவார்கள். இது மிகவும் புகழ்பெற்றது, எனவே கடவுளும் இந்நேரத்தில் இங்கேயே இருக்க வேண்டும். கடவுள் எவ்வாறு வருகின்றார் என்று நீங்கள் அவர்களுக்குக் கூறலாம். எவ்வாறு கடவுள் உங்களுக்கு நேரடியாகவே விளங்கப்படுத்துகின்றார் என்றும், நீங்கள் அனைவருக்கும் கூறலாம். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! சத்தியயுகத்தில் அனைவரும் சதோபிரதானாக உள்ளனர், ஆனால் அவர்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளனர். இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுங்கள். அதனால் நீங்கள் முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் செல்ல முடியும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் சதோபிரதானாகி, சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நாங்கள் மன்மனாபவ என்ற யாத்திரையில் ஆன்மீக வழிகாட்டிகள். தந்தை வந்து பிராமண, சூரிய, சந்திர வம்ச தர்மங்களை ஸ்தாபிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை நினைவு செய்யாதுவிடின், பல பிறவிகளின் பாவச்சுமை அகற்றப்பட மாட்டாது. இதுவே நீங்கள் கொண்டிருக்கின்ற மாபெரும் அக்கறை. செயல்களைச் செய்யும்போதும், உங்கள் வியாபாரத்தை செய்யும்போதும், ஓ எனது காதலிகளே, உங்கள் அன்பிற்கினியவரான என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை முழுமையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்யுங்கள்! பாவச்செயல்கள் எதையும் செய்யாதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் தொடர்ந்தும் தந்தையின் செய்தியைக் கொடுப்பதுடன், பாரதம் சுவர்க்கமாகவும், இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாகவும் இருந்தது எனவும் அவர்களுக்குக் கூறுங்கள். அது இப்பொழுது நரகம். இது நரகத்தின் விநாசத்திற்கான, அதே மகாபாரத யுத்தமாகும். இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! தந்தையின் கட்டளை: நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களோ, இல்லையோ, நான் உங்களுக்கு ஒரு செய்தியைக் கொடுக்க வந்துள்ளேன். தந்தையின் கட்டளை: அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கூறுங்கள். சில குழந்தைகள் தாங்கள் என்ன சேவை செய்யவேண்டும் எனத் தந்தையிடம் கேட்கின்றனர். பாபா கூறுகின்றார்: தொடர்ந்தும் செய்தியைக் கொடுங்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். உங்கள் இறுதி எண்ணம், உங்களை இலக்கிற்கு இட்டுச்செல்லும். ஆலயங்களுக்கும், கீதைப் பாடசாலைகளுக்கும் செல்லுங்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, பலரைக் கண்டுகொள்வீர்கள். நீங்கள் தேவதர்மத்தைச் சேர்ந்தவர்களை ஈடேற்ற வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மிக மிக இனிமையானவர்கள் ஆகுங்கள்! உங்களுடைய நடத்தை தீயதாக இருந்தால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். மிகச்சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்ற அன்பிற்கினிய தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களில் எவருக்காவது இந்த ஞானத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால், ஏணிப்படத்தின் முன்னால் அமர்ந்திருந்து, நாங்கள் இந்த முறையிலேயே பிறப்புகள் எடுக்கின்றோம், இவ்வாறே சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது எனச் சிந்தியுங்கள். அப்பொழுது உங்களால் இயல்பாகவே பேசமுடியும். நீங்கள் உள்ளுர எதுபற்றி சிந்திக்கின்றீர்களோ, அது நிச்சயமாக வெளியில் வரும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நாங்கள் தூய்மை ஆகுவோம். பின்னர் புதிய உலகை அரசாட்சி செய்வோம். இப்பொழுது எங்களது ஏறுகின்ற ஸ்திதியாகும். உள்ளுர இந்த சந்தோஷம் இருக்க வேண்டும். நாங்கள் முக்திதாமத்திற்கும், பின்னர் ஜீவன்முக்தி தாமத்திற்கும் செல்வோம். வருமானம் மிகப் பெரியது. நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம், ஆனால் உங்கள் புத்தியால் தந்தையை நினைவு செய்யுங்கள். நினைவில் இருக்கும் பழக்கம் உறுதியாக்கப்பட வேண்டும். சுயதரிசன சக்கரதாரிகள் ஆகுங்கள். உங்களுடைய நடத்தை தீயதாக இருந்தால், உங்களால் கிரகிக்க முடியாதிருப்பதுடன் எவருக்கும் இந்த ஞானத்தை விளங்கப்படுத்தவும் முடியாதிருக்கும். முன்னேறிச் செல்ல முயற்சி செய்யுங்கள். நீங்கள் கடைசி இலக்கத்தைக் கோரக்கூடாது. கண்காட்சிகளில் சேவை செய்வதன் மூலம், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். இலகுவாக அவர்களிடம் கூறுங்கள்: தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். சரீரதாரிகளை நீங்கள் நினைவு செய்வதன் மூலமே பாவங்கள் சேர்க்கப்படுகின்றன. நானே உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுப்பவர். நானே அனைவரதும் தந்தை ஆவேன். நான் வந்து உங்களை முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் அழைத்துச் செல்கின்றேன். நீங்கள் கண்காட்சிகளிலும், முக்கிய வைபவங்களிலும் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். சேவையில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குள்ளேயே சிந்திக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை, ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தைமீது முழுமையான அன்பைக் கொண்டிருங்கள். அனைவருக்கும் உண்மையான பாதையைக் காட்டுங்கள். உங்கள் வியாபாரத்தைச் செய்யும்போதும், உங்களை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள். ஒருவரின் நினைவில் நிலைத்திருங்கள்.

2. சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருங்கள். உங்கள் நடத்தையைச் சீர்திருத்தி, சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் கடின உழைப்பாலும் மகத்துவத்தாலும் ஆன்மீகத்தின் அனுபவத்தை வழங்குகின்ற சக்திவாய்ந்த சேவையாளர் ஆகுவீர்களாக.

உங்களுடன் தொடர்புடைய ஆத்மாக்கள் அனைவருக்கும் ஆன்மீக சக்தியின் அனுபவத்தை வழங்குங்கள். உங்களிடம் வருகின்ற ஆத்மாக்கள் தமது சொந்த ரூபத்தையும் ஆன்மீகத்தையும் அனுபவம் செய்யும் வகையில் பௌதீகமான, சூட்சுமமான ஸ்திதியை உருவாக்குங்கள். இத்தகைய சக்திவாய்ந்த சேவையைச் செய்வதற்கு, சேவையாளர் குழந்தைகளான நீங்கள் வீணான எண்ணங்கள், வீணான வார்த்தைகள், வீணான செயல்களின் தளம்பல் எதற்கும் அப்பால் இருந்து, ஒருமுகப்பட வேண்டும். உங்களின் ஆன்மீகத்தில் இருக்கும் சத்தியத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இந்த சத்தியத்தைச் செய்வதன் மூலம், உங்களால் ஞான சூரியனின் அதிசயத்தைக் காட்டக்கூடியதாக இருக்கும்.

சுலோகம்:
தந்தையினதும் அனைவரினதும் ஆசீர்வாதங்களின் விமானத்தில் பறப்பவர்கள், பறக்கும் யோகிகள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

அதிகளவு இகழ்ச்சியை ஏற்படுத்தும் மிகவும் பாவகரமான ஆத்மாக்களோ அல்லது நாரை போன்ற ஆத்மாக்களிலோ நீங்கள் விருப்பமின்மை அல்லது வெறுப்பைக் கொண்டிருக்கக் கூடாது. அவர்களை அவமரியாதை செய்யாதீர்கள். ஆனால் உலக உபகாரி என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து கருணைநிறைந்தவர் ஆகுங்கள். உங்களின் கருணை உணர்வுகளால் அந்த உறவுமுறையை சேவைக்கானது எனக் கருதித் தொடர்ந்து சேவை செய்யுங்கள். நம்பிக்கை இழந்துள்ள ஒருவரில் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சேவை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு ஒரு பரிசைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதுடன் பிரபல்யமான உலக உபகாரி என்றும் புகழப்படுவீர்கள். அத்துடன் அமைதியை உருவாக்குபவர் என்ற பரிசையும் நீங்கள் பெறுவீர்கள்.