27.01.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடையும்போது விஷ்ணு தாமத்திற்குச் செல்வீர்கள். திறமைச்சித்தி எய்துகின்ற குழந்தைகள் மாத்திரமே கர்மாதீதம் அடைகின்றார்கள்.

கேள்வி:
இரு தந்தையரும் குழந்தைகளாகிய உங்களையிட்டு என்ன முயற்சியைச் செய்கிறார்கள்?

பதில்:
பாபா, தாதா ஆகிய இருவரும் குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்களாகவும், முற்றிலும் நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆக்குவதற்கான முயற்சியைச் செய்கிறார்கள். அது நீங்கள் இரட்டை என்ஜினைப் பெற்றுள்ளதைப் போன்றதாகும். நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களுடைய இராச்சியத்தைப் பெறத்தக்கதாக, அத்தகையதோர் அற்புதமான கல்வியை அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார்.

பாடல்:
உங்களுடைய குழந்தைப் பருவ நாட்களை மறந்துவிடாதீர்கள்…

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, நீண்ட நாட்களுக்கு முன்னர் தொலைந்து, இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளே, நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, அத்தகைய பாடல்கள் உங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திரைப்படப் பாடல்களைக் கொண்டு பாபா முரளியைப் பேசுகின்றார் என்று மக்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஞானம் எவ்வகையானது? நீங்கள் சமயநூல்கள், வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு, திரைப்படப் பாடல்களில் முரளியை நடாத்துகிறீர்கள். உங்களுக்கு அதீந்திரிய சுகத்தைக் கொடுக்கின்ற அந்த எல்லையற்ற தந்தைக்கே நீங்கள் உரியவர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. ஆகவே நீங்கள் அத்தகையதோர் தந்தையை மறந்து விடக்கூடாது. தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே பல பிறவிகளுக்கான பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் பாபாவை நினைவு செய்வதை நிறுத்தியதால், உங்கள் பாவங்கள் அழியாதுள்ளன என்றிருக்கக் கூடாது. உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். அத்தகைய தந்தையை மிக நன்றாக நினைவு செய்வதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். இருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம்பெறும்போது, அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவு செய்வது போன்று, நீங்களும் இப்போது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடையும்போது விஷ்ணு தாமத்திற்குச் செல்வீர்கள். இப்போது சிவபாபாவும், பிரஜாபிதா பிரம்மாபாபாவும் இருக்கிறார்கள். நீங்கள் இரண்டு என்ஜின்களைப் பெற்றிருக்கின்றீர்கள். ஒருவர் அசரீரியானவர், மற்றவர் சரீரதாரியாவார். குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்காக இருவரும் முயற்சி செய்கிறார்கள். நீங்கள் முற்றிலும் நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் முழுமையாக நிறைந்தவர்களாகவும் ஆகவேண்டும். நீங்கள் இங்கு ஒரு பரீட்சையில் சித்தியெய்த வேண்டும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. மிகவும் அற்புதமான இக்கல்வி, உங்களின் எதிர்கால 21 பிறவிகளுக்கானது. ஏனைய கல்வி அனைத்தும் மரண பூமிக்கானதாகும். ஆனால் இக்கல்வியோ அமரத்துவ பூமிக்கானதாகும். எவ்வாறாயினும், அதற்கு நீங்கள் இங்கேயே கற்கவேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகாமல் உங்களால் சத்திய யுகத்திற்குச் செல்லமுடியாது. ஆகையாலேயே தந்தை சங்கம யுகத்தில் வருகிறார். நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்கள் போன்ற பெறுமதியானவர்கள் ஆகுகின்ற இக்காலமே அதி மங்களகரமான நன்மை பயக்கும் சங்கமயுகம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். சிவபாபா மாத்திரமே ஸ்ரீ, ஸ்ரீ என்று அழைக்கப்படுகிறார். மணிமாலையின் அர்த்தமும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. முதலிலுள்ள குஞ்சம், சிவபாபாவும், பின்னர் இரட்டை மணிகளும் காட்டப்பட்டுள்ளன. ஏனெனில் இது இல்லறப்பாதையாகும். பின்னர் வெற்றி அடைபவர்களின் மணிகள் உள்ளன. இது இவர்களின் உருத்திரரின் மணி மாலை, பின்னர் இது விஷ்ணுவின் மணி மாலை ஆகுகின்றது. இந்த மணிமாலையின் அர்த்தம் எவருக்கும் தெரியாது. தந்தை இங்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறவேண்டும். நீங்கள் 63 பிறவிகளாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். இப்போது நீங்கள் அனைவரும் ஒரேயொரு அன்புக்குரியவரின் காதலர்கள். நீங்கள் அனைவரும் ஒரேயொரு கடவுளின் பக்தர்கள். அவர் மாத்திரமே கணவருக்கெல்லாம் கணவரும், தந்தையருக்கு எல்லாம் தந்தையும் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசராக ஆக்குகிறார். அவர், அவ்வாறு ஆகுவதில்லை. தந்தை மீண்டும், மீண்டும் விளங்கப்படுத்துகின்றார்: தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்கள் என்று ரிஷிகளும், புனிதர்களும் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களே நல்ல சம்ஸ்காரங்களையும், தீய சம்ஸ்காரங்களையும் எடுத்துச் செல்கின்றார்கள். ‘எங்கு பார்த்தாலும் நான் கடவுளை மாத்திரமே காண்கின்றேன்’ ‘இவை அனைத்தும் கடவுளின் அற்புதமான விளையாட்டே’ என்று அம்மக்கள் கூறுகின்றார்கள். அவர்கள் பாவப்பாதையில் முற்றாக அழுக்காகி விட்டார்கள். நூறாயிரக்கணக்கானோர் அத்தகைய மக்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மூன்று உலகங்களையும் எப்போதும் உங்களுடைய புத்தியில் வைத்திருங்கள்: ஆத்மாக்கள் வாழ்கின்ற சாந்திதாமம் (அமைதி தாமம்), நீங்கள் செல்வதற்கு இப்போது முயற்சி செய்யும் சுக்தாமம் (சந்தோஷ பூமி), அரைச்சக்கரத்தின் பின்னர் ஆரம்பமாகின்ற துக்க தாமம் (துன்ப பூமி). தந்தையான சுவர்க்கக் கடவுள் என்றே கடவுள் அழைக்கப்படுகின்றார். அவர் நரகத்தை ஸ்தாபிப்பதில்லை. தந்தை கூறுகிறார்: நான் சந்தோஷ தாமத்தை மாத்திரமே ஸ்தாபிக்கிறேன். இது வெற்றியும், தோல்வியும் நிறைந்த நாடகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராவணனாகிய மாயையை வெல்கின்றீர்கள். பின்னர் அரைச் சக்கரத்தின் பின் இராவண இராச்சியம் மீண்டும் ஆரம்பமாகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது யுத்த களத்தில் இருக்கிறீர்கள். இதனை நீங்கள் உங்களுடைய புத்தியில் கிரகித்துக் கொள்வதுடன் பின்னர் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் அந்த வீட்டை மறந்துவிட்டதால், நீங்கள் குருடர்களுக்கு ஊன்றுகோலாகி அவர்களுக்கு வீட்டுக்கான பாதையைக் காட்டவேண்டும். இது ஒரு நாடகம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அது நூறாயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இராவணன் உங்களை மிகவும் குருடாக்கி விட்டான்! தந்தை இப்பொழுது அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுகிறார். எனினும், அதன் அர்த்தம் ஒவ்வொருவருக்குள்ளும் என்ன நடக்கின்றது என்பதை அவர் அறிவார் என்பதல்ல. மாயாஜால சக்திகளைக் கற்பவர்களுக்கே உங்களுடைய மனதில் என்ன உள்ளது என்பதைக் கூறமுடியும். ஞானம் நிறைந்தவர் என்பதன் அர்த்தம் அதுவல்ல, இது தந்தையின் புகழ்ச்சியாகும். அவர் ஞானக்கடல், பேரானந்தக்கடல் ஆவார். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அனைத்தும் அவருக்குத் தெரியுமென மக்கள் கூறுகிறார்கள். அவரே ஆசிரியர் என்றும், அவர் எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். அவர் ஆன்மீகத் தந்தையும், ஆன்மீக சற்குருவுமாவார். ஏனையோர் சரீரதாரி ஆசிரியர்களும், குருமாரும் ஆவார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறானவர்கள். அவர்கள் மூவரும் ஒருவராக இருக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில் ஒருவருடைய லௌகீகத் தந்தை, அவருக்கு ஆசிரியராகவும் இருப்பார். ஆனால் அவரே, அவரது குருவாகவும் இருக்க முடியாது. அப்படியிருந்தாலும், அவர்கள் அனைவரும் மனிதர்களே. இங்கு பரமதந்தை, பரமாத்மாவே உங்களுக்குக் கற்பிக்கிறார். ஓர் ஆத்மாவைப் பரமாத்மா என்று அழைக்க முடியாது. எவரும் இதனையேனும் புரிந்து கொள்வதில்லை. பரமாத்மா அர்ஜுனனுக்கு ஒரு காட்சியைக் காட்டியபோது, அர்ஜுனன் ‘தயவு செய்து அதனை நிறுத்துங்கள்! என்னால் இந்த ஒளியின் பிரகாசத்தைத் தாங்கமுடியாது’ என்று கூறியதாக அவர்கள் கூறுகின்றார்கள். மக்கள் இவ்வாறான கதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதால், பரமாத்மா ஒரு பிரகாசமான ஒளி என்று நம்புகின்றார்கள். முன்னர் பாபாவிடம் வந்த சிலர் திரான்சில் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கூறுவதுண்டு: இதனை நிறுத்துங்கள்! அது அதிக பிரகாசமாக உள்ளது! என்னால் அதனைத் தாங்க முடியவில்லை! முன்னர் எவற்றையெல்லாம் செவிமடுத்தார்களோ, அந்த பக்தி உணர்வு இன்னும் அவர்களின் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகிறார்: எவ்வாறான பக்தி உணர்வுடன் அவர்கள் என்னை நினைவு செய்கிறார்களோ அவற்றை நான் நிறைவேற்றுகிறேன். அவர்கள் பிள்ளையாரை வழிபடுபவர்களாக இருந்தால், அவர்களுக்கு நான் பிள்ளையாரின் காட்சியைக் கொடுக்கிறேன். ஒரு காட்சி கிடைக்கும்போது தாங்கள் முக்தி தாமத்தை அடைந்துவிட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், எவருமே முக்தி தாமத்திற்குச் செல்லமுடியாது. நாரதரின் உதாரணமும் உள்ளது. அவர் அதிசிறந்த பக்தராக நினைவு கூரப்படுகிறார். இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய முடியுமா என்று அவர் கேட்டபோது, அவரது முகத்தைக் கண்ணாடியில் பார்க்குமாறு அவருக்குக் கூறப்பட்டது. பக்தர்களின் மாலையும் உள்ளது. பெண்களுள் மீராவும் ஆண்களில் நாரதரும் பிரதான பக்தர்களாக நினைவு கூரப்படுகிறார்கள். இங்கு, ஞானத்தில் சரஸ்வதியே பிரதானமானவர் ஆவார். எல்லோரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் மாயையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடவுள் வந்தும்கூட என்னால் ஆஸ்தியைப் பெறமுடியாது போய்விட்டதே என்று நீங்கள் இறுதியில் அழுது மனம் வருந்துமளவிற்கு, மாயை உங்களை அத்தகைய தவறான செயல்களைச் செய்விப்பாள். நீங்கள் பிரஜைகளின் பணிப்பெண்களாகவும், வேலைக்காரர்களாகவும் ஆகுவீர்கள். பின்னர் இந்தக் கல்வி முடிவடைந்துவிடும். நீங்கள் அதிகளவு வருந்த நேரிடும். இதனாலேயே தந்தை நீங்கள் இறுதியில் வருந்தாதவாறு, ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நினைவு என்ற தீ மூலம் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் மேலும், மேலும் கலப்படம் உங்களில் கலக்கும்போது நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். சத்திய, திரேதா, துவாபர, கலியுகம் என்ற பெயர்கள் உள்ளன. இப்போது நீங்கள் கலியுகத்திலிருந்து சத்தியயுகத்திற்குச் செல்லவேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகாதவரை அங்கு செல்ல முடியாது. சத்திய யுகத்தில் தூய்மை இருந்தது. அத்துடன் அமைதியும், செழிப்பும் நிறைந்திருந்தன. இங்கு தூய்மை இல்லை. ஆகவே, அமைதியோ, செழிப்போ இல்லாதுள்ளது. இதில் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. ஆகவே தந்தை கூறுகிறார்: உங்களுடைய குழந்தைப் பருவ நாட்களை மறந்துவிடாதீர்கள். தந்தை உங்களைத் தத்தெடுத்துள்ளார். அவர் பிரம்மா மூலம் உங்களைத் தத்தெடுத்துள்ளார். இது தத்தெடுத்தல் ஆகும். மனைவி தத்தெடுக்கப்படுகிறார். ஆனால் குழந்தைகள் படைக்கப்படுகிறார்கள். ஒரு மனைவி படைப்பு என்று அழைக்கப்படுவது இல்லை. இந்தத் தந்தையும் உங்களைத் தத்தெடுக்கிறார். முன்னைய சக்கரத்தில் என்னால் தத்தெடுக்கப்பட்ட, என்னுடைய அதே குழந்தைகளே நீங்கள். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளே தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறார்கள். அதிமேலான தந்தையிடமிருந்து நீங்கள் மிகவும் மேன்மையான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். கடவுள் முதலாமவர். பின்னர் சத்திய யுகத்தின் அதிபதிகளான இலக்ஷ்மியும், நாராயணனும் இரண்டாம் இலக்கத்தவர்கள். நீங்கள் இப்போது சத்திய யுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இன்னும் சம்பூரணமானவர்கள் ஆகவில்லை. நீங்கள் அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். தூய்மையாகுவதுடன், மற்றவர்களையும் தூய்மையாக்குவதே உண்மையான ஆன்மீக சேவையாகும். இப்போது நீங்கள் ஆன்மீக சேவை செய்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள் மிகவும் மேன்மையானவர்கள். சிவபாபா தூய்மை அற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகிறார். நீங்களும் மற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகிறீர்கள். இராவணன் உங்களுடைய புத்தியை மிகவும் சீரழிந்ததாக ஆக்கியுள்ளான். தந்தை இப்போது உங்களைப் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். அத்தகைய தந்தை கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கிறார் என்று எப்படி அவர்களால் கூறமுடியும்? தந்தை கூறுகிறார்: இந்த நாடகம் முன்னரே நிச்சயிக்கப்பட்டது. அடுத்த சக்கரத்திலும் அவ்வாறே இடம்பெறும். நாடகத்திற்கேற்ப உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக நான் வந்துள்ளேன். இதில் சிறிதளவு மாற்றம்கூட இருக்க முடியாது. தந்தை வருவதை ஒரு விநாடியால்கூட தாமதிக்க முடியாது. பாபாவின் மறு அவதாரம் இருப்பது போன்று, குழந்தைகளாகிய உங்களுக்கும் மறு அவதாரம் உள்ளது. நீங்கள் இங்கு மறு அவதாரம் எடுத்துள்ளீர்கள். ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை ஒரு சரீர உருவில் நடிப்பதற்காக மேலிருந்து இங்கு கீழிறங்கி வருகிறார்கள். இது அவதாரம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக மேலிருந்து கீழிறங்கி வந்தீர்கள். தந்தையின் பிறப்பு தெய்வீகமானதும், தனித்துவமானதும் ஆகும். தந்தை தானே கூறுகிறார்: நான் பஞ்சதத்துவங்களின் உதவியைப் பெறவேண்டியுள்ளது. நான் இந்த சரீரத்தில் பிரவேசிக்கிறேன். இந்த சரீரம் எனக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது அத்தகையதோர் அற்புதமான நாடகமாகும். இந்நாடகத்தில் ஒவ்வொருவருடைய பாகமும், முன்னரே நிச்சயிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் அதனை நடித்தாக வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கான பாகத்தை அதேமாதிரி மீண்டும் நடிப்பீர்கள். நீங்கள் தெளிவான ஞானத்தையும் பெற்றிருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா மகாராத்திகளைப் புகழ்கிறார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையிலான ஒரு யுத்தம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கதைகள் அனைத்தும் கட்டுக் கதைகள் ஆகும். அவர்கள் பௌதீகமாக இரட்டை வன்முறையாளர்கள் என்பதையும், ஆனால் நீங்களோ ஆன்மீக இரட்டை அஹிம்சாவாதிகள் என்பதையும் இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுடைய இராச்சியத்தைப் பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு சாதாரணமாக அமர்ந்திருக்கின்றீர்கள் என்று பாருங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த ஒரேயொரு அக்கறையே உங்களுக்கு உள்ளது. நினைவு செய்வதிலேயே முழு முயற்சியும் உள்ளது. இதனாலேயே பாரதத்தின் புராதன யோகம் நினைவு கூரப்படுகிறது. வெளிநாட்டிலுள்ள மக்களும் பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்க விரும்புகிறார்கள். சந்நியாசிகளால் தங்களுக்கு இந்த யோகத்தைக் கற்பிற்க முடியுமென அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் அவர்கள் எதனையும் கற்பிப்பதில்லை. அவர்களுடைய துறவு ஹத்த யோகத்திற்கு உரியதாகும். நீங்கள் இல்லறப் பாதைக்கு உரியவர்கள். உங்களுடைய இராச்சியம் ஆரம்பத்தில் இருந்தது. இப்போது அதன் முடிவாகும். இப்போது மக்;களால் மக்களின் அரசாங்கம் உள்ளது. உலகில் காரிருள் உள்ளது. எவ்வித காரணமுமின்றி இரத்தவெள்ளம் வரப்போகின்றது என்று இப்போது உங்களுக்குத் தெரியும். அவர்களும் அத்தகைய நாடகத்தைக் காட்டுகிறார்கள். எவ்வாறாயினும் இங்கு இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அதிக இரத்த வெள்ளம் இருக்கும். இயற்கை அழிவுகளும் இருக்கும். அனைவருக்கும் மரணம் சம்பவிக்கும். இதுவே எவ்வித காரணமும் இல்லாத இரத்தவெள்ளம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை அவதானிப்பதற்கு உங்களுக்கு அதிக தைரியம் தேவை. பயப்படுபவர்கள் விரைவில் மயக்கம் அடைந்து விடுவார்கள். நீங்கள் இதில் பயமின்றி இருக்கவேண்டும். நீங்கள் சிவசக்திகள். சிவபாபா சர்வசக்திவான். நாங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றோம். தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியைத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் காட்டுகிறார். தந்தை உங்களுக்கு மிகவும் எளிமையான ஆலோசனையைத் தருகிறார். குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்போது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். தந்தை இப்போது கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதுடன், சதோபிரதானாகவும் வருவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையுடன் யோகம் செய்வதால் உங்களுடைய பாவங்கள் எரிக்கப்படும். தந்தையே அதிகாரி. படங்களில் அவர்கள் பிரம்மா, விஷ்ணுவின் தொப்புளிலிருந்து வெளிப்படுவதாகக் காட்டியுள்ளார்கள். அவர் அமர்ந்திருந்து வேதங்களிலும் சமய நூல்களிலும் உள்ள இரகசியங்களை அவர் மூலம் விளங்கப்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றார்கள். பிரம்மா விஷ்ணுவாகவும் அந்த விஷ்ணு பின்னர் பிரம்மாவாகவும் ஆகுகின்றார் என்பது உங்களுக்கு இப்போது தெரியும். பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெறுவதுடன் இடம்பெறுகின்ற படைப்புகளை அவர் பராமரிக்கவும் வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஆன்மீக ஞானத்தைப் புரிந்து கொள்பவர்கள் எவ்வாறு இந்த ஞானத்தை மற்றவர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் என்பதில் அக்கறை செலுத்துவார்கள். உங்களிடம் செல்வம் இருந்தால் ஏன் நீங்கள் ஒரு நிலையத்தைத் திறக்கக்கூடாது? தந்தை கூறுகிறார்: ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு வைத்தியசாலையுடன் கூடிய பல்கலைக்கழகத்தைத் திறவுங்கள். யோகத்தின் மூலம் முக்தியும், ஞானத்தின் மூலம் ஜீவன் முக்தியும் உள்ளன. நீங்கள் இரட்டை ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இதற்கு உங்களுக்கு மூன்று சதுர அடி நிலமே தேவை. இறை தந்தையின் பல்கலைக்கழகத்தைத் திறப்பதற்கு உங்களுக்கு வேறெதுவும் தேவையில்லை. “விஷ்வ வித்தியாலயம்” என்றோ அல்லது பல்கலைக்கழகம் என்றோ அழைத்தாலும் எல்லாம் ஒன்றே. சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கான மிகப்பெரிய பல்கலைக்கழகம் இதுவாகும். எவ்வாறு நீங்கள் உங்களுடைய செலவுகளைச் சமாளிக்கிறீர்களென மக்கள் கேட்கிறார்கள். பிரம்மா குமாரர்களினதும், பிரம்மா குமாரிகளினதும் தந்தைக்குப் பல குழந்தைகள் இருக்கிறார்கள், இருந்தும் நீங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள்! பலகையில் என்ன எழுதியுள்ளதென்று பாருங்கள். இந்த ஞானம் மிக அற்புதமானது! தந்தையும் அற்புதமானவர். எவ்வாறு நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள்? நீங்கள் சிவபாபாவை ஸ்ரீ, ஸ்ரீ என்று அழைக்கிறீர்கள். ஏனெனில் அவரே அதிமேலானவர். இலக்ஷ்மியும், நாராயணனும் ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். இதுவே உண்மையான அமரத்துவக் கதையாகும். உண்மையான அமரத்துவக் கதை ஒரேயொரு பார்வதிக்கு மாத்திரம் கூறப்பட்டிருக்க முடியாது. மக்கள் பலர் அமர்நாத்திற்குச் செல்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே தந்தையிடம் வருகின்றீர்கள். புத்துணர்ச்சி பெற்றதும் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களையும் புத்துணர்ச்சி பெறச் செய்து நிலையங்களைத் திறவுங்கள். தந்தை கூறுகிறார்: மூன்று சதுர அடி நிலத்தை எடுத்து வைத்தியசாலையுடன் கூடிய பல்கலைக்கழகத்தைத் திறவுங்கள். பலர் அதிலிருந்து நன்மை அடைவார்கள். அதில் எவ்வித செலவும் இல்லை. நீங்கள் ஒரு விநாடியில் செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம், ஆகியவற்றைப் பெறுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிறவியெடுத்து வாரிசுகள் ஆகுகின்றீர்கள். நம்பிக்கை கொண்டிருந்து, உலக அதிபதிகள் ஆகுங்கள். எவ்வாறாயினும் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. காரணமின்றி இரத்தம் சிந்தப்படும் இறுதி நேரக் காட்சிகளைக் காண்பதற்கு, சிவசக்திகளாகிய நீங்கள் மிகவும் பயமற்றவர்கள் ஆகவேண்டும். சர்வசக்திவானை நினைவு செய்வதன் மூலம் உங்களால் அவரிடமிருந்து சக்தியை பெற்றுக் கொள்ள முடியும்.

2. தூய்மையாகி, ஏனையோரையும் தூய்மையாக்குகின்ற உண்மையான ஆன்மீக சேவையைச் செய்யுங்கள். இரட்டை அஹிம்சாவாதி ஆகுங்கள். குருடர்களுக்கு ஊன்றுகோலாகி, அனைவருக்கும் வீட்டிற்கான பாதையைக் காட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
‘நான்’ அல்லது ‘எனது’ என்ற எந்தவோர் உணர்வையும் முடிப்பதன் மூலம் உண்மையான துறவியாகி சமநிலையையும் முழுமையையும் அனுபவம் செய்வீர்களாக.

ஒவ்வொரு விநாடியிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ‘பாபா, பாபா’ என்பதை நினைவு செய்யுங்கள். ‘நான்’ என்ற எந்தவோர் உணர்வையும் முடித்துவிடுங்கள். ‘நான்’ என்பது இல்லாதபோது, ‘எனது’ என்பதும் இருக்காது. எனது சுபாவம், எனது சம்ஸ்காரங்கள், எனது வேலை அல்லது கடமை, எனது பெயர், எனது கௌரவம் - ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற உணர்வுகள் அனைத்தும் முடிவடைந்ததும் சமநிலையும் முழுமையும் காணப்படும். ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவற்றைத் துறப்பதே மகத்தானதும் அதிசூட்சுமமானதும் தியாகமாகும். ‘நான்’ என்ற இந்த உணர்வெனும் குதிரையை அஷ்வமேக யாகத்தில் நீங்கள் பலி இட்டால்தான் இறுதிப்பலி கொடுக்கப்படும். வெற்றி முழக்கங்களும் ஒலிக்கும்.

சுலோகம்:
‘ஹா ஜி’ (ஆமாம்) என்று கூறி, ஒத்துழைப்புக் கரத்தை நீட்டுவதென்றால் ஆசீர்வாதங்களின் மாலையை அணிந்து கொள்ளுதல் என்று அர்த்தம்.

உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.

நீங்கள் ஸ்திரத்தன்மை என்ற ஸ்திதியில் சதா ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்யும்போது, உங்களின் மனதால் உங்களால் சகாஷ் வழங்க முடியும். இதற்கு, அனைத்திற்கும் முதலில் வீணான எண்ணங்களைத் தூய எண்ணங்களாக மாற்றுங்கள். பின்னர், இறையன்பின் அடிப்படையில் மாயையிடமிருந்து வருகின்ற வெவ்வேறு வகையான தடைகளையும் முடியுங்கள். வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் பாடத்தைக் கற்பதன் மூலம் உங்களின் ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள்.