27.04.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 03.02.2005 Om Shanti Madhuban
அப்பாற்பட்டு இருப்பதுடன் எல்லையற்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பதன் மூலம் என்றும் தயார் ஆகி, அதனால் தந்தை பிரம்மாவைப் போல் சம்பூரணமானவர் ஆகுங்கள்.
இன்று, முப்பாட்டனார் எங்கும் உள்ள, பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரும் அந்தக் கைப்பிடி அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுசிலரான தனது குழந்தைகளின் பாக்கியத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். இத்தகைய விசேடமான பாக்கியத்தை வேறு எவராலும் பெற முடியாது. ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பைக் கண்டும் பாபா களிப்படைகிறார். தமது இதயபூர்வமாக பாப்தாதாவுடன் ஓர் உறமுறையை ஏற்படுத்திக் கொண்ட குழந்தைகள் எல்லோருக்கும் நிச்சயமாக ஏதாவதொரு சிறப்பியல்பு உள்ளது. அவற்றில் முதலாவது சிறப்பியல்பானது, சாதாரணமான ரூபத்தில் வந்த தந்தையை நீங்கள் இனங்கண்டு, அவரை ‘எனது பாபா’ என ஏற்றுக் கொண்டீர்கள். இவ்வாறாக இனங்கண்டதே எல்லாவற்றிலும் மிகப்பெரிய சிறப்பியல்பு ஆகும். நீங்கள் உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா’ என ஏற்றுக் கொண்டீர்கள். தந்தையும் ‘எனது குழந்தைகளே’ என ஏற்றுக் கொண்டார். பெரும் பண்டிதர்களாலும் விஞ்ஞானிகளாலும் தர்மாத்மாக்களாலும் இனங்காண முடியாத ஒரேயொருவரை சாதாரணமான குழந்தைகளான நீங்கள் இனங்கண்டு, உங்களின் உரிமைகளையும் பெற்றீர்கள். இந்த ஒன்றுகூடலில் உள்ள குழந்தைகளான உங்களை யாராவது வந்து பார்த்தால், அப்பாவித் தாய்மார்களும் சாதாரணமான குழந்தைகளுமான நீங்கள் இத்தகைய மகத்தான தந்தையை இனங்கண்டுள்ளீர்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, தந்தையை இனங்கண்ட சிறப்பியல்பு, அவரை இனங்கண்டு அவரை உங்களுக்குச் சொந்தம் ஆக்கிக் கொண்டது, பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரான குழந்தைகளான உங்களின் பாக்கியத்தில் உள்ளது. குழந்தைகளான நீங்கள் எல்லோரும், தனிப்பட்ட முறையில் நீங்கள் இங்கே அமர்ந்திருந்தாலென்ன அல்லது வெகு தொலைவில் இருந்தாலென்ன, நீங்கள் பாபாவிற்கு முன்னால் அமர்ந்திருப்பதைப் போன்றே அனுபவம் செய்கிறீர்கள். எனவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் இதயபூர்வமாக பாபாவை இனங்கண்டுள்ளீர்கள். நீங்கள் அவரை இனங்கண்டீர்களா அல்லது நீங்கள் இன்னமும் அவரை இனங்காண்பதற்கு முயற்சி செய்கிறீர்களா? பாபாவை இனங்கண்டு கொண்டவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அவரை இனங்கண்டு கொண்டீர்களா? அச்சா. எனவே, பாபாவை இனங்கண்ட சிறப்பியல்பைக் கொண்டுள்ள ஒவ்வொரு குழந்தையையும் பாப்தாதா பாராட்டுகிறார். ஆஹா பாக்கியசாலிக் குழந்தைகளே! ஆஹா! நீங்கள் ஒவ்வொருவரும் இனங்காண்பதற்காக ஒரு மூன்றாம் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். பாப்தாதா தொடர்ந்தும் குழந்தைகளான உங்களின் இதயப் பாடலைக் கேட்கிறார். அது என்ன பாடல்? ‘நான் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்துவிட்டேன்.’ தந்தையும் கூறுகிறார்: ஓ அதியன்பிற்குரிய குழந்தைகளே, நீங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொண்டீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு குழந்தையே. அத்துடன் எண்ணற்ற ஆன்மீகப் பொக்கிஷங்களுக்கும் அதிபதி ஆவார்.
எனவே, இன்று, பொக்கிஷங்களுக்கு அதிபதிகளாக இருக்கும் குழந்தைகளின் பொக்கிஷங்களின் அட்டவணைகளைப் பார்த்தார். தந்தை அதே பொக்கிஷங்களின் அதே அளவையே எல்லோருக்கும் வழங்கியுள்ளார். அவர் சிலருக்குப் பலமில்லியன்களையும் ஏனையோருக்கு நூறாயிரக்கணக்கையும் கொடுக்கவில்லை. எவ்வாறாயினும், பொக்கிஷங்களை அறிந்து கொள்வதிலும் அவற்றை அடைவதிலும் உங்களின் வாழ்க்கைகளில் கடைப்பிடிப்பதிலும் நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். தற்காலத்தில், பாப்தாதா மீண்டும் மீண்டும் பல்வேறு வழிகளில் குழந்தைகளான நீங்கள் கவனம் செலுத்த வைக்கிறார். காலம் நெருங்கி வருவதைப் பார்க்கும்போது, நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள், நீங்கள் எதை எடுத்துள்ளீர்கள், அந்தப் பொக்கிஷங்களால் சதா பராமரிக்கப்படுகிறீர்களா எனச் சூட்சுமமான, எல்லையற்ற புத்தியுடன் சோதித்துப் பாருங்கள். இவ்வாறு சோதிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், தற்சமயம், மாயை உங்களை வெவ்வேறு வழிமுறைகளில் இராஜரீகமான கவனயீனத்தையும் இராஜரீகமான சோம்பேறித்தனத்தையும் தொடர்ந்து பரீட்சிக்கிறாள். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் சதா உங்களைத் தொடர்ந்து சோதித்துப் பாருங்கள். அத்தகைய கவனத்துடன் உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்களைக் கவனயீனமான முறையில் சோதிக்காதீர்கள்: நான் தீங்கான எதையும் செய்யவில்லை, நான் எவருக்கும் துன்பம் ஏற்படுத்தவில்லை, என்னிடம் தூய்மையற்ற பார்வை இல்லை. அந்தச் சோதனை இடம்பெற்றது. ஆனால், அனைத்திலும் சிறப்பாக நான் எதைச் செய்தேன்? நான் இயல்பாகவே சதா ஆத்ம உணர்வுப் பார்வையைக் கொண்டிருந்தேனா? அல்லது, நான் நினைவிற்கும் மறதிக்குமான விளையாட்டுக்களை விளையாடினேனா? எத்தனை பேருக்கு நான் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் ஆசீர்வாதங்களையும் கொடுத்தேன்? உங்களின் சேமிப்புக் கணக்கில் நீங்கள் எவ்வளவற்றைச் சேமித்தீர்கள்? அந்தக் கணக்குகள் எப்படி இருந்தன? இந்த நேரத்தில் மட்டுமே உங்களால் உங்களின் கணக்குகளில் சேமிக்க முடியும் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். இந்த நேரத்தின் சேமிப்புக் கணக்குகள், பருவகாலம் முழுவதற்கும் நீங்கள் சேமிப்பவை ஆகும். நீங்கள் எவ்வளவற்றைச் சேமித்துள்ளீர்களோ, அதற்கேற்ப உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவதுடன் பூஜிக்கத்தகுதி வாய்ந்த தேவராகவும் ஆகுவீர்கள். நீங்கள் குறைவாகச் சேமித்திருந்தால், குறைந்தளவு இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். அத்துடன் நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுவதிலும் வரிசைக்கிரமம் ஆகுவீர்கள். நீங்கள் குறைவாகச் சேமித்திருந்தால், குறைவாகவே பூஜிக்கப்படுவீர்கள். சரியான முறையில் ஒழுங்குமுறையுடன் நீங்கள் சேமித்திருக்கா விட்டால், சரியான முறையில் ஒழுங்கு முறையாக நீங்கள் பூஜிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் சிலவேளைகளில் மட்டும் சரியான வழிமுறையைப் பின்பற்றினால், உங்களின் வழிபாடும் நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தும் சிலவேளைகளில் மட்டுமே இருக்கும். பாப்தாதாவிற்கு ஒவ்வொரு குழந்தையின் மீதும் ஆழ்ந்த அன்பு உள்ளது. ஆகவே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் சம்பூரணமாகவும் சமமானவராகவும் ஆகவேண்டும் என விரும்புகிறார். சேவை செய்யுங்கள். ஆனால், நீங்கள் செய்யும் சேவையில் இருந்து அப்பாற்பட்டவராகவும் எல்லையற்றவராகவும் இருங்கள்.
பெரும்பாலான குழந்தைகள் யோகம் என்ற பாடத்தில், அதாவது, நினைவில் குறைந்தளவு ஆர்வம் இருப்பதையும் குறைந்தளவு கவனம் செலுத்துவதையும் பாப்தாதா பார்த்திருக்கிறார். சேவைக்கே அதிகளவு கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், நீங்கள் சேவையில் அதிகளவு கவனம் செலுத்தி, நினைவைக் கொண்டிராவிட்டால், அதில் வரம்புகள் காணப்படும். அப்போது, அப்பாற்பட்டிருக்கும் மனோபாவம் உங்களுக்கு இருக்காது. அதன்பின்னர், பெயர், மதிப்பு, பதவிக்கான ஆசைகள் கலந்துவிடும். எல்லையற்ற மனோபாவம் குறைந்துவிடும். இதனாலேயே, பலமில்லியன்களில் கையளவினரிலும் அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுசிலருமான தனது குழந்தைகள் எல்லோரும் இப்பொழுதில் இருந்தே என்றும் தயார் ஆகவேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். ஏன்? சில குழந்தைகள் தாம் சரியான நேரத்தில் தயார் ஆகிவிடுவோம் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், காலம் உங்களின் படைப்பு. உங்களின் படைப்பை நீங்கள் உங்களின் ஆசிரியர் ஆக்குவீர்களா? இரண்டாவதாக, இந்தக் கணக்கானது நீண்ட காலத்திற்குச் சேமிப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீண்ட காலத்திற்கு நிரம்பியிருப்பது, நீண்ட காலத்திற்கு நீங்கள் பேறுகளைப் பெறச் செய்யும். ஆகவே, இப்போது, காலத்தின் நெருக்கத்திற்கேற்ப, நீண்ட காலத்திற்குச் சேகரிப்பது அவசியமாகும். பின்னர், நீண்ட காலத்திற்குச் சேமிப்பதற்கு இன்னமும் நேரம் இருந்தது என நீங்கள் நினைத்தீர்கள் என உங்களால் முறைப்பாடு செய்ய முடியாது. இப்பொழுதில் இருந்தே நீண்ட காலத்திற்குச் சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? கவனம் செலுத்துங்கள்!
குழந்தைகளான உங்களில் எவருக்கும் எந்தவொரு பாடத்திலும் ஒரு பலவீனம்கூட எஞ்சியிருக்கக் கூடாது என்பதை பாப்தாதா விரும்புகிறார். நீங்கள் தந்தை பிரம்மாவின் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்தானே? தந்தை பிரம்மாவின் மீதுள்ள அன்பின் பிரதிபலன், நீங்கள் அந்த அன்பின் பிரதிபலனைக் கொடுப்பீர்கள்தானே? எனவே, அன்பிற்கான பிரதிபலன், உங்களின் பலவீனங்களைச் சோதித்து, பிரதிபலனைக் கொடுப்பதாகும். அதாவது, உங்களையே மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை மாற்றிக் கொள்வதே பிரதிபலனைக் கொடுப்பதாகும். எனவே, பிரதிபலனைக் கொடுப்பதற்கான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் உங்களின் கைகளை உயர்த்தி, பாபாவை அதிகளவில் களிப்படையச் செய்கிறீர்கள். உங்களின் உயர்த்திய கைகளைப் பார்க்கும்போது, பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இப்போது, உங்களின் இதயங்களில் ஒரு மிக உறுதியான சத்தியத்தைச் செய்யுங்கள்: ஒரு சதவீதமேனும் பலவீனம் உள்ள சத்தியமாக இருக்கக்கூடாது. மிக, மிக உறுதியான சத்தியம். ‘நான் பிரதிபலனைக் கொடுக்க வேண்டும், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்’.
சிவராத்திரி இப்போது வருகிறது. எனவே, குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் மிகுந்த அன்புடன் தந்தையின் பிறந்தநாளை, அதனால் உங்களின் சொந்த பிறந்த நாட்களைக் கொண்டாடுவதற்கான மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. நீங்கள் மிக நல்ல நிகழ்ச்சிகளை ஆயத்தம் செய்கிறீர்கள். நீங்கள் மிக நல்ல சேவைத் திட்டங்களைச் செய்கிறீர்கள். பாப்தாதா அவற்றால் களிப்படைகிறார். ஆனால் (லேக்கின்)..... ஆனால்... எனச் சொல்வது நல்லதல்ல. லேக்கின் (ஆனால்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம், அன்னை ஜெகதாம்பா சிந்தி மொழியில் ‘லே கின்’ என்றால் குப்பை என்று அர்த்தம் எனக் கூறுவதுண்டு. ‘ஆனால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது என்றால், ஏதாவதொரு வகையான குப்பையை எடுத்தல் என்று அர்த்தம். எனவே, பாபா ‘ஆனால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர் அதைச் சொல்ல வேண்டியுள்ளது. நீங்கள் ஏனைய வகையான சேவைக்காகத் திட்டங்களைச் செய்வதைப் போல், நீங்கள் மேலும் திட்டங்களையும் செய்வீர்கள், இப்போது நான் பிரதிபலனைக் கொடுக்க வேண்டும் என்ற சத்தியத்தைச் செய்வதற்கும் ஒரு நிகழ்ச்சியைச் செய்யுங்கள். பாப்தாதா அல்லது வேறு எவராவது உங்களிடம் ‘நீங்கள் நலமா?’ எனக் கேட்டால், உங்களில் பெரும்பாலானோரின் பதில், ‘நான் மிகவும் நன்றாக இருக்கிறேன், ஆனால் பாப்தாதா விரும்பும் அளவிற்கு நன்றாக இல்லை’ என்றே உள்ளது. இப்போது, ‘நான் பாப்தாதா விரும்பும் வகையில் இருக்கிறேன்’ என்பதே பதிலாக இருக்க வேண்டும். பாப்தாதா என்ன விரும்புகிறார் எனக் குறித்து, அந்த விடயங்களின் பட்டியலைச் செய்யுங்கள். உங்களையே சோதித்துப் பாருங்கள்: நீங்கள் பாப்தாதா விரும்பும் வகையில் இருக்கிறீர்களா அல்லது இல்லையா? உலக மக்கள் மூதாதையர்களான உங்களிடம் இருந்து முக்தியை விரும்புகிறார்கள். அவர்கள் கதறி அழுகிறார்கள்: ‘எங்களுக்கு முக்தி தாருங்கள்! எங்களுக்கு முக்தி தாருங்கள்!’ பெரும்பாலான குழந்தைகளில் நீங்கள் சுபாவம் என்று அழைக்கின்ற - இயல்பானது அல்ல, ஆனால் சுபாவம் - பழைய சம்ஸ்காரங்களில் இன்னமும் சிலது எஞ்சியுள்ளன, நீங்கள் அவற்றில் இருந்து விடுபடவில்லை. நீங்கள் அப்படி ஆகும்வரை, ஆத்மாக்கள் எவராலும் முக்தியைப் பெற முடியாது. ஆகவே, பாப்தாதா கூறுகிறார்: ஓ முக்தியை அருள்பவரின் குழந்தைகளே, ஓ மாஸ்ரர் முக்தியை அருள்பவர்களே, இப்போது உங்களை விடுவியுங்கள். அதன்பின்னர் ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்திக்கான வாயில் திறக்கும். அந்த வாசலுக்கான சாவி என்னவென்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எல்லையற்ற விருப்பமின்மை. சகல பணிகளையும் செய்யுங்கள். ஆனால், உங்களின் சொற்பொழிவுகளில் இல்லறத்தவர்களுக்கு ஒரு தாமரை மலர் போல் ஆகும்படி சொல்வதைப் போல், எல்லாவற்றையும் செய்யும்போதும், அதைச் செய்யும் விழிப்புணர்வு எதில் இருந்தும் பற்றற்றவர் ஆகுங்கள். பற்றற்றவர் ஆகுங்கள். வசதிகள் அல்லது பதவியின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். ஏதாவதொன்றைப் பெற வேண்டும் என்ற ஆசை என்பது பதவியைக் கொண்டிருப்பது அல்ல. ஆனால் மாயையின் எதிர்ப்பே ஆகும். பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்பு உடையவராகவும் இருங்கள். இது சிரமமா? அன்பாகவும் பற்றற்றவராகவும் இருப்பது சிரமம் என உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (எவரும் தமது கைகளை உயர்த்தவில்லை). எவருக்கும் அது சிரமமாக இல்லாவிட்டால், சிவராத்திரியின் போது எல்லோரும் சம்பூரணம் ஆகமுடியும். அது சிரமமாக இல்லாவிட்டால், நீங்கள் அப்படி ஆகவேண்டும். நீங்கள் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும். உங்களின் எண்ணங்களில், உங்களின் வார்த்தைகளில், நீங்கள் செய்யும் சேவையில் உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் நீங்கள் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும்.
அச்சா. உங்களிடம் தந்தை பிரம்மாவிற்கும் முப்பாட்டனாரான தாதாவிற்கும் 100 வீதத்தை விட அதிகமான அன்பு, அதிகளவு அன்பு உள்ளது என நம்புபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! வெறுமனே பாபாவை சந்தோஷப்படுத்தாதீர்கள். இப்போது மட்டும் பாபாவை சந்தோஷப்படுத்தாதீர்கள். நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். இது தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதுதானே? பின்னர் பாபா சிவராத்திரியில் இந்தத் தொலைக்காட்சியில் பெறுபேற்றினைப் பார்ப்பார். இது ஓகேயா? நீங்கள் சமமானவர் ஆகுவதில் சிறிதளவேனும் வேறுபாடு இருக்கக்கூடாது. அன்பினால் உங்களைத் தியாகம் செய்வது என்பது பெரிய விடயம் அல்ல. உலக மக்கள் தூய்மையற்ற அன்பிற்காகத் தமது உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பாப்தாதாவிற்கு உங்களின் குப்பைகள் மட்டுமே வேண்டும். அந்தக் குப்பையைக் கொடுத்து விடுங்கள். நல்ல விடயங்களைக் கொடுக்காதீர்கள். ஆனால் குப்பைகளைக் கொடுத்து விடுங்கள். பலவீனங்களும் குறைபாடுகளும் என்ன? அவை குப்பைகள்தானே? குப்பையைத் தியாகம் செய்வது என்பது பெரிய விடயம் அல்ல. சூழ்நிலைகளை முடித்துவிடுங்கள். உங்களின் ஆதியான மேன்மையான ஸ்திதி வரவேண்டும். இப்படித்தானே நீங்கள் சொல்கிறீர்கள்? அந்தச் சூழ்நிலை அப்படி இருந்தது. சூழ்நிலைகளின் பெயரைக்கூடச் சொல்லாதீர்கள். ஏனென்றால், அவை உங்களைத் தளம்பல் அடையச் செய்யும். உங்களின் சொந்த ஸ்திதியை சக்திவாய்ந்ததாக வைத்திருங்கள். முறைப்பாடுகளின் திரை திறக்கும்போது நீங்கள் எல்லோரும் எப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும்? பிரகாசிக்கும் தேவதைகளாக. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் பிரகாசமாகத் தென்பட வேண்டும். இதனாலேயே, திரைகள் திறப்பதற்காகக் காத்திருக்கின்றன. உலகிலுள்ள மக்கள், ‘திரையை விலக்குங்கள், திரையை விலக்குங்கள்!’ எனக் கதறுகிறார்கள். ஆகவே, உங்களின் சொந்தத் திட்டங்களைச் செய்யுங்கள். யாராவது ஒருவரால் செய்யப்பட்ட திட்டத்தை உங்களுக்குக் கொடுக்கும்போது, அது வேறு விடயம். உங்களின் சொந்தத் தைரியத்தால் உங்களின் சொந்தத் திட்டத்தைச் செய்யுங்கள். திடசங்கற்பம் என்ற சாவியைப் பயன்படுத்துங்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் திடசங்கற்பமான எண்ணம் உள்ளது. பாப்தாதாவும் ஆஹா குழந்தையே! ஆஹா! எனச் சந்தோஷம் அடைகிறார். உங்களிடம் திடசங்கற்பமான எண்ணம் உள்ளது. ஆனால் அந்தத் திடசங்கற்பத்தில் சிறிது கவனயீனம் கலந்துவிடுகிறது. இதனாலேயே, வெற்றியின் சதவீதம் சிலவேளைகளில் அரைவாசியாகவும் சிலவேளைகளில் முக்கால் பங்காகவும் உள்ளது. எப்படி உங்களிடம் 100 வீதம் அன்பு உள்ளதோ, அதேபோல், உங்களின் முயற்சிகளினூடாக சம்பூரணத்தன்மையும் 100 வீதமாக இருக்க வேண்டும். அது 100 வீதத்தை விடக் கூடுதலாக இருக்கலாம், ஆனால் குறையக்கூடாது. உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் இந்தக் கோலாகலத்தைச் சிவராத்திரியின் போது காட்டுவீர்கள்தானே? நான் இப்படி ஆகவேண்டும். நான் இப்படி ஆகாவிட்டால், வேறு யார்தான் ஆகுவார்? இந்த நம்பிக்கையைக் கொண்டிருங்கள்: நான் அப்படி இருந்தேன், நான் அப்படி இருக்கிறேன், நான் மீண்டும் அப்படி ஆகுவேன். இந்த நம்பிக்கை உங்களை வெற்றி பெறுபவர் ஆக்கும். மற்றவர்களைப் பார்க்காதீர்கள். உங்களை மட்டும் பாருங்கள். சில குழந்தைகள் இதயபூர்வமாக சம்பாஷணை செய்து கூறுகிறார்கள்: ‘அவரைக் கொஞ்சம் சரியாக்குங்கள், அப்போது நான் ஓகே ஆகிவிடுவேன். அவரைக் கொஞ்சம் மாற்றுங்கள், அப்போது நானும் மாறுவேன்.’ எவ்வாறாயினும், அவரும் மாற மாட்டார், நீங்களும் மாற மாட்டீர்கள். நீங்கள் உங்களை மாற்றினால், மற்றவரும் மாறுவார். அது நடந்தால் இது நடக்கும் என்று எதிலும் தங்கிருக்காதீர்கள். நான் அதைச் செய்ய வேண்டும்.
அச்சா. முதல் தடவை வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! முதல் தடவை வந்திருப்பவர்களுக்குக் குறிப்பாக பாப்தாதா கூறுகிறார், சிறிது காலமே எஞ்சியிருக்கும் நேரத்தில் நீங்கள் வந்திருந்தாலும் நீங்கள் கடைசியாக வந்திருந்தாலும் வேகமாகச் சென்று, முதல் இலக்கத்தைப் பெறக்கூடிய வகையில் தீவிர முயற்சி செய்யுங்கள். இப்போது சங்கீதக் கதிரையின் விளையாட்டு இடம்பெறுகிறது. அதனால் இன்னமும் யார் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்படவில்லை. நீங்கள் பிந்தியே வந்துள்ளீர்கள். எனினும், வேகமாகச் செல்வதன் மூலம் நீங்கள் உங்களின் இலக்கை அடைவீர்கள். அமிர்த வேளையில், அமரராக இருக்கும் ஆசீர்வாதத்தை உங்களுக்கே நினைவூட்டிக் கொள்ளுங்கள். அச்சா. சிலர் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளார்கள். சிலர் அண்மையில் இருந்து வந்துள்ளார்கள். பாப்தாதா கூறுகிறார்: உங்களின் வீட்டுக்கு நல்வரவுகள். இந்த ஒன்றுகூடல் அழகாக உள்ளது. நீங்கள் அதைத் தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள். ஒன்றுகூடல் நிரம்பி இருக்கும்போது, அது மிகவும் அழகாக உள்ளது. அச்சா. எனவே, நீங்கள் என்றும் தயாரா? நீங்கள் என்றும் தயாராக இருக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்வீர்கள்தானே? அச்சா.
மதுவனவாசிகள்: மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறீர்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் விருந்தளிப்பவர்கள். விருந்தாளிகளாக வருபவர்கள், சென்றுவிடுவார்கள். ஆனால் மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் விருந்தளிப்பவர்கள். நீங்கள் நெருக்கமானவர்கள், அன்பான கண்மணிகள். மதுவனத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும்போது நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே சென்றாலும் எல்லோரும் அவர்களை என்ன பார்வையுடன் பார்க்கிறார்கள்? ஆஹா! நீங்கள் மதுவனத்தில் இருந்து வந்துள்ளீர்கள்! அவர்கள் மதுவனம் என்ற பெயரைக் கேட்டதுமே, அவர்கள் மதுவனத்தில் உள்ள பாபாவையும் நினைவு செய்கிறார்கள். இதனாலேயே, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்கள். உங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? இத்தகைய அன்பான பராமரிப்பைப் பெற்றுள்ள இந்த இடத்தைப் பெறுவது பலமில்லியன்களில் கைப்பிடி அளவினர் மட்டுமே. எல்லோரும் மதுவனத்தில் தங்கியிருக்கவே விரும்புகிறார்கள். நாங்கள் மதுவனத்தில் தங்கியிருக்க முடியுமா? என அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் நீங்களோ ஏற்கனவே இங்கேயே வசிக்கிறீர்கள். எனவே, இது நல்லது. மதுவனத்தைச் சேர்ந்தவர்களை பாபா மறப்பதில்லை. பாபா உங்களைப் பற்றிக் கேட்பதில்லை என நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் பாப்தாதா எப்போதும் உங்களைப் பற்றித் தனது இதயத்தில் கேட்கிறார். மதுவனத்தைச் சேர்ந்தவர்களே முதலில் இருக்கிறார்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாவிட்டால், எங்கே எல்லோரும் வருவார்கள்? நீங்கள் சேவைக்குக் கருவிகள்தானே? எத்தனை சேவாதாரிகள் இருந்தாலும் மதுவனத்தைச் சேர்ந்தவர்களே அத்திவாரமாக இருக்கிறார்கள். எனவே, பாப்தாதா மேலே ஞான சரோவரிலும் பாண்டவ பவனிலும் உள்ளவர்களுக்கும் இதயபூர்வமாக ஆசீர்வாதங்களையும் அன்பையும் நினைவையும் வழங்குகிறார். இங்கே தோளி வழங்கப்படும்போது, மதுவனத்தில் மேலே இருப்பவர்கள் அதைப் பெறுவார்களா? எனவே, மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் தோளியையும் பெறுகிறார்கள். அத்துடன் போளியையும் (பேசப்படும் முரளி) பெறுகிறார்கள். நீங்கள் இரண்டையும் பெறுகிறீர்கள். அச்சா.
குளோபல் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்களுடன் பேசுகிறார்: வைத்தியசாலையைச் சேர்ந்த எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? ஏனென்றால், வைத்தியசாலைக்கும் ஒரு விசேடமான பாகம் உள்ளது. அவர்கள் இங்கே கீழே வந்துள்ளார்களா? அச்சா, ஒரு சிலர் வந்துள்ளார்கள். வைத்தியசாலையைச் சேர்ந்தவர்களும் நல்ல சேவை செய்கிறார்கள். பாருங்கள், நெருக்கடியான வேளையில், வைத்தியசாலை மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். வைத்தியசாலை திறந்த காலத்தில் இருந்தே, பிரம்மாகுமாரிகள் வெறுமனே இந்த ஞானத்தை மட்டும் கொடுப்பதில்லை, ஆனால் அவசியமான வேளையில் அவர்கள் உதவியும் செய்கிறார்கள், அவர்களும் சமூக சேவை செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தோன்றியுள்ளது. ஆகவே, வைத்தியசாலை திறந்ததில் இருந்து அபுவில் சூழல் மாறியுள்ளது. ஆரம்பத்தில் அவர்கள் உங்களைப் பார்த்த அதே பார்வையுடன் அவர்கள் உங்களைப் பார்ப்பதில்லை. நீங்கள் ஒத்துழைப்பவர்கள் என்ற பார்வையுடனேயே அவர்கள் இப்போது உங்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, உங்களின் ஒத்துழைப்பின் பார்வையுடனேயே அவர்கள் உங்களைப் பார்க்கிறார்கள். அதனால் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் இந்தச் சேவையைச் செய்துள்ளார்கள். இது நல்லது.
அச்சா. பாபா இன்று என்ன சொன்னார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘நான் சம்பூரணம் ஆகவேண்டும். என்னதான் நடந்தாலும், நான் சம்பூரணம் ஆகவேண்டும்’. இந்த ஆழமான அக்கறை மட்டுமே இருக்க வேண்டும். ‘நான் சம்பூரணம் ஆகவேண்டும். நான் சமமானவர் ஆகவேண்டும்’. அச்சா.
பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரும் அந்தக் கைப்பிடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுசிலருமான மேன்மையான ஆத்மாக்களான உங்களுக்கும் இறைவனின் (பகவான் - பாக்கியத்தை உருவாக்குபவர்) பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும் (பாக்கியவான்) தமது தீவிர முயற்சிகளால் தமது எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருந்து மேன்மையான செயல்களைச் செய்பவர்களுக்கும் தமது இலட்சியத்திற்குச் சமமாகத் தமது தகைமைகளை ஆக்கிக் கொள்பவர்களுக்கும் நீண்ட காலத்திற்கு நிலையாகச் செய்யும் தமது முயற்சிகளால் தமது இராச்சிய பாக்கியத்தைப் பெறுவதுடன் வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுபவர்களுக்கும் அன்பின் பிரதிபலனாக தங்களையே மாற்றிக் கொள்கின்ற முதலாம் இலக்கப் பாக்கியசாலிக் குழந்;தைகளுக்கும் வெற்றி பெறுகின்ற பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உலக உபகாரி என்ற மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் பற்றற்ற பார்வையாளராக விநாசத்தின் செயல்பாடுகளை அவதானிக்கக் கூடியவர் ஆகுவீர்களாக.விநாசத்தின் இறுதிக் காட்சிகளை அவதானிப்பதற்கு, உங்களிடம் உலக உபகாரி என்ற மேன்மையான ஸ்திதி இருக்க வேண்டியது அவசியம். இந்த ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதன் மூலம், பௌதீகக் கவர்ச்சிகள், அதாவது, உறவுகள், உடமைகள், சம்ஸ்காரங்களின் கவர்ச்சிகள் மற்றும் இயற்கையின் குழப்பங்கள் அனைத்தும் முடிந்துவிடும். உங்களிடம் இத்தகைய ஸ்திதி இருக்கும்போது, உங்களால் பற்றற்ற பார்வையாளராகி மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்க முடியும். அப்போது உங்களால் ஆத்மாக்கள் எல்லோருக்கும் அமைதி மற்றும் சக்தியின் கதிர்களை வழங்க முடியும்.
சுலோகம்:
இறை சக்திகளால் சக்திசாலி ஆகுங்கள், மாயையின் வலிமை முடிவிற்கு வந்துவிடும்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதங்களை அருள்கின்ற தந்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களான நாங்களும் இருவரும் ஒன்றிணைந்து உள்ளோம். சதா இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். இயல்பாகவே உங்களின் மீது தூய்மையின் பாதுகாப்புக் குடை இருக்கும். ஏனென்றால், எங்கே சர்வசக்திவான் தந்தை இருக்கிறாரோ, அங்கே உங்களின் கனவுகளிலேனும் தூய்மையின்மை இருக்க முடியாது. தந்தையும் நீங்களும் இணைந்திருக்க வேண்டும். தனியாக அல்ல. நீங்கள் தனித்து இருக்கும்போது, சுகாக் (துணையின் சகவாசம்) போய்விடும்.