27.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று கருணை நிறைந்தவர்களாகவும், பரோபகாரிகளாகவும் ஆகுங்கள். விவேகமான ஒருவர் தானும் முயற்சி செய்து, மற்றவர்களையும் முயற்சி செய்யத் தூண்டுவார்.
பாடல்:
நீங்கள் எவ்வாறு கற்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் எதனை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம்? உங்களுடைய முயற்சி என்ன?பதில்:
நீங்கள் அதியுயர்ந்த பாகத்தையா, ஒரு மத்திமமான பாகத்தையா அல்லது மிகவும் குறைவான பாகத்தையா நடிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு கற்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். மற்றவர்களையும் அதியுயர்ந்தவர்களாக ஆக்குபவர்களே, அதாவது சேவை செய்வதுடன், பிராமணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்பவர்களே அதியுயர்ந்த பாகத்தை நடிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. உங்களுடைய முயற்சி, பழைய சப்பாத்தைக் கழற்றி, புதியதொன்றைப் போடுவதேயாகும். ஓர் ஆத்மா தூய்மையாகியதும், அவரால் ஒரு தூய்மையான, புதிய சப்பாத்தைப் (சரீரம்) பெறமுடியும்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இரண்டு வழிகளில் வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். ஒருபுறம் நினைவு யாத்திரையினாலும், மறுபுறம் 84 பிறவி சக்கரத்தின் ஞானத்தை நினைவு செய்வதனாலும் வருமானம் ஈட்டப்படுகின்றது. இது இரட்டை வருமானம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அஞ்ஞானப் பாதையில், ஒரு கணப் பொழுது ஒற்றை வருமானமே ஈட்டப்படுகின்றது. நினைவு யாத்திரையின் மூலமான உங்கள் வருமானம் மிக மகத்தானதாகும். உங்களுடைய ஆயுட்காலம் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. நீங்களும் தூய்மையானவர்களாகுவதுடன் துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டிருக்கிறீர்கள். வருமானம் மிகப் பெரியதாகும். சத்திய யுகத்தில், உங்களுடைய ஆயுட்காலம் மிகவும் நீண்டதாகும். அங்கு இராவணனின் இராச்சியம் இல்லாததால், துன்பம் என்ற வார்த்தையே கிடையாது. அஞ்ஞானப் பாதையில், கற்பதால் தற்காலிக சந்தோஷம் உள்ளது. மற்றையது சமய நூல்களைக் கற்பதால் கிடைக்கும் சந்தோஷமும் ஆகும். அவர்களுடைய சிஷ்யர்கள் எந்த நன்மையையும் அவர்களிடமிருந்து பெறுவதில்லை. அவர்கள் உண்மையில், அவர்களுடைய சிஷ்யர்களுமில்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் ஆடைகள் போன்றவற்றை மாற்றுவதுமில்லை, தங்கள் வீடுகளைவிட்டுச் செல்வதுமில்லை. ஆகவே அவர்களை எவ்வாறு சிஷ்யர்கள் என்று அழைக்க முடியும்? அங்கு (சத்தியயுகத்தில்) அமைதி, தூய்மை அனைத்தும் உள்ளது. இங்கு தூய்மையின்மையால், ஒவ்வொரு வீட்டிலும் அமைதியின்மை அதிகளவில் உள்ளது. நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களை இறை அரசாங்கமெனக் கருதுங்கள். எவ்வாறாயினும் நீங்கள் மறைமுகமானவர்கள். உங்கள்; இதயத்தில் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறோம். அவரின் சக்தியின் மூலம், நாங்கள் சதோபிரதான் ஆகுகின்றோம். இங்கு நீங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெற மாட்டீர்கள். எங்களுடைய இராச்சிய பாக்கியம் புதிய உலகில் ஆகும். நாங்கள் இப்பொழுது அதனைப் பற்றி அறிந்துள்ளோம். இலக்ஷ்மி, நாராயணனின் 84 பிறவிகளின் கதையை நீங்கள் அவர்களுக்குக் கூறலாம். ஒருவர் எவ்வாறானவராக இருந்தாலும், அல்லது ஓர் ஆசிரியர் எவ்வாறானவராக இருந்தாலும். எவராலும் கூற முடியாது: வாருங்கள். நான் அவர்களின் 84 பிறவிகளின் கதையை உங்களுக்குக் கூறுகிறேன். இந்த விழிப்புணர்வை நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஞானக் கடலையும் கடைகிறீர்கள். இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்த சூரிய வம்சத்தினர் ஆகுகிறீர்கள். பின்னர், சத்திய யுகத்தில், நீங்கள் விஷ்ணு வம்சத்தினர் என்று அழைக்கப்படுவீர்கள். ஞான சூரியன் எழும்போது, அஞ்ஞான இருள் அகன்றுவிடுகிறது. இந்நேரத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகிறீர்கள். இந்த ஞானத்தின் மூலமே நீங்கள் சற்கதி அடைகிறீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் இந்த ஞானம் அரைக் கல்பத்திற்காகும். பின்னர் மற்றைய அரைக் கல்பத்திற்கு அஞ்ஞானம் இருக்கும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் விவேகமானவர்கள் ஆகியுள்ளீர்;கள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக விவேகமானவர்கள் ஆகியிருக்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக, மற்றவர்களையும் உங்களைப்போன்று, ஆக்குவதற்கான முயற்சியை நீங்கள் செய்கிறீர்கள். உங்களுடைய தந்தை கருணை நிறைந்தவரும், பரோபகாரியும் ஆவார். குழந்தைகளாகிய நீங்களும் அவரைப்போன்று ஆகவேண்டும். பரோபகாரிகள் ஆகாத குழந்தைகளை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? உங்களிடம் தைரியம் இருக்கும்போது, தந்தை உதவிசெய்வார் என்பது நினைவுகூரப்படுகிறது. இதுவும் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. வேறு எவ்வாறு நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள்? நீங்கள் செய்யும் சேவைக்கேற்ப, ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இது ஓர் இறை பணியகமாகும். கிறிஸ்தவ, இஸ்லாமியப் பணியகங்கள் எவ்வாறு தங்கள் சொந்தச் சமயத்தின் விரிவாக்கத்தைக் கொண்டிருப்பதைப் போன்று, நீங்களும் உங்கள் பிராமண தர்மத்தையும், தேவ தர்மத்தையும் விரிவாக்கம் செய்கிறீர்கள். நாடகத்திற்கேற்ப, குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக உதவியாளர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் நிச்சயமாக முன்னைய கல்பத்தில் நடித்த பாகத்தை நடிப்பீர்கள். ஒவ்வொருவரும் அதி உயர்ந்த பாகத்தையா, மத்திம பாகத்தையா அல்லது மிகவும் குறைவான பாகத்தையா நடிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். உங்கள் அனைவரையும் அதி உயர்ந்தவர்களாக ஆக்குகின்ற ஒருவரே, அதி உயர்ந்த பாகத்தை நடிக்கிறார். ஆகவே நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதுடன், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களையும் விளங்கப்படுத்த வேண்டும். ரிஷிகளும், முனிவர்களும் கூறுகிறார்கள்: “இதுவுமில்லை, அதுவுமில்லை!” (நெத்தி, நெத்தி). கடவுள் சர்வவியாபி என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நாடகத்திற்கேற்ப, ஆத்மாக்களின் புத்தி, தமோபிரதான் ஆகுகின்றது. அவர்களுடைய சரீரங்களின் புத்தி என்று நீங்கள் கூறமாட்டீர்கள். மனமும், புத்தியும் ஆத்மாவிலேயே இருக்கின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இதனை நன்றாகப் புரிந்துகொண்டு, பின்னர் கடையவேண்டும். பின்னர் நீங்கள் அதனை விளங்கப்படுத்த வேண்டும். சமய நூல்கள் போன்றவற்றைக் கூறுவதற்காக அந்த மக்கள் பல கடைகளைத் திறந்திருக்கிறார்கள். உங்களுடையதும் ஒரு கடையாகும். பெரிய நகரங்களில் பெரிய கடைகள் உங்களுக்குத் தேவை. திறமையான குழந்தைகளிடம் அதிகளவு பொக்கிஷம் இருக்கிறது. எவரிடமாவது அதிகளவு பொக்கிஷம் இல்லையென்றால், அவரால் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. இதன் தாரணை வரிசைக்கிரமமாக இடம்பெறுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இதனை மிக நன்றாகக் கிரகித்துக்கொள்ள வேண்டும். அப்போது உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். இது ஒரு பெரிய விடயமல்ல. இது ஒரு விநாடிக்கான விடயமாகும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை இனங்கண்டதால், நீங்கள் எல்லையற்றதன் அதிபதிகள் ஆகியிருக்கிறீர்கள். அதிபதிகளும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். அரசரே அதிபதியாவார், பிரஜைகளும் கூறுகிறார்கள்: நாங்களும் அதிபதிகள். இங்கும் அனைவரும் கூறுகிறார்கள்: இது எங்கள் பாரதமாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதாக நீங்களும் கூறுகிறீர்கள். பின்னர், சுவர்க்கத்தில் ஓர் இராச்சியம் இருக்கும். பல தரங்களில் அந்தஸ்தும் இருக்கும். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது எந்தளவுக்கு முயற்சி செய்து ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்களோ, அவ்வாறே கல்பம் கல்பமாக அது நிச்சயிக்கப்படும். பரீட்சையில் எவருக்காவது குறைந்தளவு புள்ளிகள் கிடைத்தால், அவர்களுக்கு இதயவழுவல் ஏற்படுகின்றது. இது எல்லையற்ற ஒரு விடயமாகும். நீங்கள் முழு முயற்சி செய்யாது விட்டால், மனச்சோர்வு அடைவதுடன், தண்டனையும் பெறவேண்டும். அந் நேரத்தில் உங்களால் என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது! ஆத்மா என்ன செய்வார்? அந்த மக்கள் தங்களை மூழ்கடித்து, தற்கொலை செய்கிறார்கள். இங்கு தற்கொலை என்ற கேள்விக்கு இடமில்லை. ஆத்மா அழிவற்றவர்கள் என்பதால், ஆத்மாக்கள் தற்கொலை செய்ய முடியாது. எவ்வாறாயினும், உங்கள் பாகத்தை நடிக்கின்ற சரீரம் தற்கொலை செய்து கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் பழைய சப்பாத்தைக் நீக்குவதற்கான முயற்சியைச் செய்;கிறீர்கள். அப்போது உங்களால் ஒரு புதிய தெய்வீக சப்பாத்தை எடுக்க முடியும். இதனை யார் கூறுகிறார்? ஆத்மா. எனக்குப் பதிய ஆடைகளைக் கொடுங்கள் எனக் குழந்தைகள் கூறுவது போன்று, ஆத்மாக்களாகிய எங்களுக்கும் புதிய ஆடைகள் வேண்டும். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்களும் புதியவர்கள் ஆகவேண்டும். அப்போதே நீங்கள் ஒரு புதிய சரீரத்தைக் கொண்டிருப்பதுடன், அழகாகவும் இருப்பீர்கள். ஆத்மாக்கள் தூய்மையாகும்போது, ஐந்து தத்துவங்களும் புதியதாகுகின்றன. சரீரங்கள் ஐந்து தத்துவங்களால் உருவாக்கப்படுகின்றன. ஓர் ஆத்மா சதோபிரதானாக இருக்கும்போது, அவர் ஒரு சதோபிரதான் சரீரத்தைப் பெறுகிறார். ஓர் ஆத்மா தமோபிரதானாக இருக்கும்போது, அவர் ஒரு தமோபிரதான் சரீரத்தைப் பெறுகிறார். உலகம் முழுவதிலுமுள்ள பொம்மைகள் அனைத்தும் இப்பொழுது தமோபிரதானாகும். நாளுக்கு நாள் உலகம் தொடர்ந்தும் பழையதாகுவதுடன், தொடர்ந்து வீழ்கிறது. அனைத்தும் புதியதிலிருந்து பழையதாகுகின்றன. அது பழையதாகும்போது, அழிக்கப்படுகிறது. இது முழு உலகிற்குமான கேள்வியாகும். புதிய உலகம் சத்தியயுகமென்றும், பழைய உலகம் கலியுகமென்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் எவருக்கும் இந்தச் சங்கமயுகத்தைப் பற்றித் தெரியாது. இந்தப் பழைய உலகம் மாறவேண்டும் என்பது உங்களுக்கு மாத்திரமே தெரியும். தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமான எல்லையற்ற தந்தையின் கட்டளைகளாவன: தூய்மையாகுங்கள். மிகப் பெரிய எதிரியான காமத்தை வென்று, உலகை வென்றவர்கள் ஆகுங்கள். உலகை வென்றவர்கள் ஆகுவது என்றால் விஷ்ணுவின் வம்சத்தில் ஒருவர் ஆகுதல் என்று அர்த்தமாகும். இரண்டும் ஒன்றேயாகும். இந்த வார்த்தைகளின் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைத்திற்கும் முதலில் உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை இருக்கவேண்டும். ஒரு குழந்தை வளர்ந்து வரும்போது, அவர் தனது தந்தையை நினைவு செய்யவேண்டும். பின்னர் அவர் தனது ஆசிரியரையும், அதன்பின், குருவையும் நினைவு செய்ய வேண்டும். அவர் இம் மூவரையும், வெவ்வேறு நேரங்களில் நினைவு செய்வார். இங்கே நீங்கள் மூவரையும் ஒரே சமயத்தில் கண்டுள்ளீர்கள். தந்தையும், ஆசிரியரும், குருவும் ஒருவரேயாவார். ஓய்வு பெறும் ஸ்திதி என்பதன் அர்த்தத்தைகூட அம்மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஓய்வுபெறும் ஸ்திதிக்குச் செல்லவேண்டும். இதனாலேயே அவர்கள் தாங்கள் ஒரு குருவைக் ஏற்க வேண்டும் என்று நம்புகிறார்கள். 60 வயதிற்குப் பின்னர் அவர்கள் ஒரு குருவை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தச் சட்டம் இப்பொழுதே வெளிவந்துள்ளது. தந்தை கூறுகிறார்: இவரின் பல பிறவிகளின் இறுதியில், அவரது ஓய்வு பெறும்ஸ்திதியில் நான் அவரின் சற்குரு ஆகுகின்றேன். இந்த பாபாவும் கூறுகிறார்: 60 வயதிற்குப் பின்னர், நிர்வாணபூமிக்குச் செல்வதற்கான நேரத்தின்போதே, நான் சற்குருவைக் கண்டுகொண்டேன். அனைவரையும் நிர்வாணபூமிக்குக் கூட்டிச் செல்வதற்காகத் தந்தை வருகிறார். நீங்கள் நிர்வாண பூமிக்குச்சென்று, பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருகிறீர்கள். தாங்கள் ஓய்வு ஸ்திதியை அடையும்போது, பலர் ஒரு குருவை ஏற்றுக்கொள்கிறார்கள். குரு தானத்தை பெற வேண்டும் என்பதற்காக, இந் நாட்களில் அவர்கள் சிறு குழந்தைகளையும் ஒரு குருவை ஏற்றுக் கொள்ளச் செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் குழந்தையை ஒரு மதகுருவின் மடியில் அமர்த்தி, ஞானஸ்தானம் செய்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் நிர்வாண பூமிக்குச் செல்ல மாட்டார்கள். தந்தை இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். கடவுள் மாத்திரமே தனது இறுதியை (எல்லைகளை) உங்களுக்குக் கூறுகிறார்கள். அவர் அதனை உங்களுக்கு ஆரம்பத்திலிருந்து கூறிவருகிறார். அவர் உங்களுக்குத் தனது சொந்த இலக்கைக் கூறுவதுடன், உலகின் ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறார். கடவுளே வந்து, ஆதி சனாதன தேவி, தேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார். அதாவது அவர் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் பெயர் பாரதமாகும். அவர்கள் கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி, அதிகளவு குழப்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இதுவும் நாடகமாகும். இது வெற்றிக்கும் தோல்விக்குமான நாடகமாகும். எவ்வாறு வெற்றியும் தோல்வியும் உள்ளதென்பதைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. இலக்ஷ்மி, நாராயணனுக்கும் தாங்கள் பின்னர் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது தெரியாது. பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். சூத்திரர்களுக்கும் இது தெரியாது. தந்தை மாத்திரமே வந்து, உங்களைப் பிராமணர்களிலிருந்து தேவர்கள் ஆக்குகிறார். “ஹம் சோ’ என்பதன் பொருள் “ஓம்” என்பதன் பொருளிலிருந்து முற்றாக வேறுபட்டது. அவர்கள் எந்தப் பொருளுமின்றி, மனதில் தோன்றியவற்றைத் தொடர்ந்து கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் இறங்கி வருகிறீர்கள் என்பதையும், பின்னர் எவ்வாறு நீங்கள் ஏறுகிறீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந் நேரத்தில் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். நாடகத்திற்கேற்ப, ஒரு கல்பத்தின் பின்னர் தந்தை மீண்டும் வந்து, உங்களுக்கு மீண்டும் கூறுவார். அனைத்துச் சமய ஸ்தாபகர்களும் வந்து, அவர்களுக்குரிய நேரத்தில் அவர்களின் சமயத்தை ஸ்தாபிப்பார்கள். அவர்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக இதனைச் செய்கிறார்கள் என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அவர்கள், நேரத்திற்கேற்ப, வரிசைக்கிரமமாகக் கீழே வந்து, தங்கள் சொந்தச் சமயங்களை ஸ்தாபிக்கிறார்கள். தந்தை மாத்திரமே, தான் எவ்வாறு பிராமண குலத்தை ஸ்தாபிக்கிறார் என்பதையும், பின்னர் சூரிய வம்சத்தையும், அதன் பின்னர் சந்திர வம்சத்தையும் ஸ்தாபிக்கிறார் என்பதையும் விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்த சூரிய வம்சத்தவர்கள். பின்னர் நீங்கள் விஷ்ணு வம்சத்தவர்கள் ஆகுகிறீர்கள். எவரும் எந்தப் பிழையையும் கண்டுபிடிக்காதவாறு, நீங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக எழுதவேண்டும். இந்த ஞானத்தின் ஒவ்வொரு மேன்மையான வாசகமும் ஓர் இரத்தினம் அல்லது வைரம் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் விளக்கங்களில் மிகவும் தெளிவானவர்களாக
இருக்கவேண்டும். தவறுதலாக ஏதாவது ஒரு வார்த்தை தவறவிடப்பட்டுவிட்டால், அதனை உடனடியாகச் சரிசெய்து, பின்னர் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். தந்தையை மறப்பதே மிகப் பெரிய தவறாகும். தன்னை மாத்திரம் சதா நினைவு செய்யுமாறு தந்தை உங்களுக்குக் கட்டளையிடுகிறார். நீங்கள் இதனை மறந்துவிடக்கூடாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் எனது மிகப் பழைய காதலர்கள். காதலர்களாகிய உங்கள் அனைவருக்கும் ஒரேயொரு அன்பிற்கினியவரே இருக்கிறார். அந்த மக்கள் ஒருவரையொருவர் பார்த்ததும் காதலிக்கிறார்கள். இங்கு ஒரேயொரு அன்பிற்கினியவரே இருக்கிறார். அந்த ஒரேயொருவரால் எத்தனை காதலர்களை நினைவு செய்ய முடியும்? பலருக்கு ஒரேயொருவரை நினைவு செய்வது இலகுவாகும். ஆனால் ஒரேயொருவரால் எவ்வாறு பலரை நினைவு செய்யமுடியும்? நீங்கள் பாபாவிற்குக் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களை நினைவு செய்கிறேன். நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்களா? ஆ! தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்கள் ஆகுவதற்காக, நீங்கள் அவரை நினைவு செய்யவேண்டும். உங்களை நினைவு செய்வதற்கு நான் தூய்மையற்றவரில்லை. நீங்கள் தூய்மையாகவேண்டும் என்பதால், என்னை நினைவு செய்வது உங்கள் கடமையாகும். ஒருவர் எந்தளவுக்கு நினைவு செய்வதுடன், சிறந்த சேவையும் செய்கிறாரோ அதற்கேற்ப, அவரால் கிரகித்துக் கொள்ள முடியும். நினைவு யாத்திரை மிகவும் கஷ்டமானதாகும். இதிலேயே ஒரு யுத்தமுள்ளது. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தை மறந்துவிடுவீர்கள் என்றில்லை. இந்தக் காதுகள் ஒரு தங்கப் பாத்திரம் போன்று ஆகவேண்டும். நீங்கள் அதிகளவு நினைவு செய்தால், உங்களால் சிறந்த முறையில் கிரகித்துக் கொள்ள முடியும். இதில் சக்தி இருக்கும். இதனாலேயே நினைவு சக்தி இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஞானத்தின் மூலம் ஒரு வருமானம் உள்ளது. நினைவின் மூலம் நீங்கள் அனைத்து சக்திகளையும் வரிசைக்கிரமமாகப் பெறுகிறீர்கள். வாள்களிலும், அவை கொண்டுள்ள சக்தியில் வரிசைக்கிரமமான வேறுபாடு உள்ளது. அது ஒரு பௌதீகமான விடயமாகும். தந்தை உங்களுக்கு பிரதானமான ஒரு விடயத்தை மாத்திரம் கூறுகிறார்: அல்பாவை நினைவு செய்யுங்கள். உலக விநாசத்திற்காக, அணுகுண்டுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வேறு எதுவுமில்லை. அதற்கு இராணுவமோ அல்லது இராணுவத் தலைவரோ தேவையில்லை. இப்பொழுது தாங்கள் எங்கு அமர்ந்திருக்கின்றார்களோ, அங்கிருந்து அனுப்பக்கூடிய குண்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருந்தவாறு, உங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அங்கு இருந்தவாறு அவர்கள் அனைத்தையும் அழித்து விடுவார்கள். உங்களுடைய ஞானமும், யோகமும் அவர்களிடமுள்ள மரணத்திற்கான பொருட்களுக்குச் சமமாகும். இதுவும் ஒரு நாடகமாகும். அனைவரும் நடிகர்கள். பக்தி மார்க்கம் முடிவடைந்துவிட்டது. தந்தை மாத்திரமே வந்து, தனது அறிமுகத்தையும், படைப்பின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதி பற்றியும் உங்களுக்குக் கொடுக்கிறார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: பக்தி மார்க்கத்திற்கான விடயங்களை நீங்கள் செவிமடுக்கக்கூடாது. இதனாலேயே நீங்கள் தீயவை எதனையும் கேட்கக்கூடாது. இதன் உருவம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் அது குரங்குகளுக்குச் செய்யப்பட்டது. இப்பொழுது அவர்கள் மனிதர்களுக்குச் செய்திருக்கிறார்கள். ஏனெனில் மனிதர்கள், மனிதர்களின் முகத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களின் குணங்கள் குரங்கைப் போன்று இருக்கிறது. இதனாலேயே ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. நீங்கள் யாருடைய சேனைகள்? சிவபாபாவினதாகும். அவர் உங்களைக் குரங்குகளிலிருந்து, ஆலயத்தில் வைப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குகிறார். அவர்கள் அனைத்தையும் முற்றாக மாற்றி உள்ளார்கள். குரங்கினால் பாலம் போன்றவற்றை அமைக்க முடியுமா? அவை அனைத்தும் கட்டுக் கதைகள். சமய நூல்களை நீங்கள் நம்புகிறீர்களா என்று யாராவது உங்களைக் கேட்டால், அவர்களுக்குக் கூறுங்கள்: அற்புதம்! சமய நூல்களை யார்; நம்பமாட்டார்கள்? நாங்கள் அவற்றை அதிகளவு நம்புகிறோம். நீங்கள் அவற்றை அதிகளவு கற்காது விட்டாலும், நாங்கள் அவற்றைக் கற்கிறோம். நாங்கள் அதனை அரைக் கல்பமாகக் கற்றிருக்கிறோம். சுவர்க்கத்தில் சமய நூல்களோ அல்லது பக்தி சம்பந்தமான விடயங்களோ இருக்கமாட்டாது. தந்தை மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். இருந்தபோதும் உங்களால் மற்றவர்களை உங்களைப்போன்று ஆக்க முடியாது. தங்கள் குழந்தைகளின் மீதுள்ள பற்றினால் அவர்களால் வரமுடியாது உள்ளது. இதுவும் நாடகம் என்று கூறப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒரு கிழமைக்கோ அல்லது இரண்டு கிழமைகளுக்கோ பாடநெறியைப் பெற்று, பின்னர் மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்குவதற்கு ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் இந்தச் சேவையைப் பெரிய நகரங்களுக்கும், தலைநகருக்கும் எடுத்துச் செல்லவேண்டும். அப்பொழுது அவர்களின் (பிரபல்யமானவர்களின்) குரல்கள் வெளிப்படும். பிரபல்யமான மக்களின் குரல்கள் அல்லாது, ஓசை பரவமாட்டாது. அதிகளவு வலுவான சேவை, அனைத்து இடங்களிலும் பரவும்போது, பலர் வருவார்கள். நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய புத்தியை இந்த ஞானத்தினாலும், யோகத்தினாலும் சீர்ப்படுத்துங்கள். தந்தையை மறந்துவிடுகின்ற தவறைச் செய்யாதீர்;கள். ஒரு காதலராகி, அன்பிற்கினியவரை நினைவுசெய்யுங்கள்.2. பந்தனங்களிலிருந்து விடுபட்டு, மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். என்றுமே உங்கள் முயற்சியையிட்டு மனம் தளராதீர்கள்.
ஆசீர்வாதம்:
ஒருமுகப்படுத்தும் ஸ்திதியில் ஒரு நிமிடத்தை செலவழிப்பதன் மூலம் ஏகாந்தத்தில் நிலைத்திருந்து சக்திமிக்க அனுபவத்தை கொண்டிருந்து, பிறருக்கும் அதனை கொடுப்பீர்களாக.ஏகாந்தத்தில் நிலைத்திருப்பது என்றால் ஒரு சக்திமிக்க ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதாகும். உங்களை விதை ஸ்திதியில் ஸ்திரப்படுத்தி, நீங்கள் வெளிச்ச வீடாகவும் சக்திவீடாகவும் ஆகி உலகிற்கு வெளிச்சத்தையும் சக்தியையும் கொடுக்கவோ அல்லது தேவதை ஸ்திதியில் நிலைத்திருந்து உங்களால் அவ்யக்த ஸ்திதியின் அனுபவத்தையோ பிறருக்குக் கொடுக்க முடியும். இந்த ஸ்திதியில் நீங்கள் ஒரு நிமிடமோ அல்லது ஒரு விநாடியோ உங்களை ஒருமுகப்படுத்தும்போது, உங்களுக்கும் பிறருக்கும் உங்களால் அதிகளவு நன்மை செய்ய முடியும். நீங்கள் இதனையே பயிற்சி செய்ய வேண்டும்.
சுலோகம்:
ஒவ்வொரு எண்ணத்தையும் ஒவ்வொரு வார்த்தையையும் தூய்மையின் அதிர்வலைகளில்அமிழ்த்திக் கொண்டிருப்பவரே ஒரு பிரம்மச்சாரி ஆவார். ஓம் சாந்தி