27.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது இந்த எல்லையற்ற, பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது, எனவே, புதிய உலகிற்குச் செல்லும் பொருட்டு, நீங்கள் தூய்மையாக வேண்டும்.
கேள்வி:
மனிதர்கள் புரிந்து கொள்வதற்கு அப்பாற்பட்ட, கடவுளைப் பற்றிய எந்த அற்புதமான விடயங்களை நீங்கள் அறிவீர்கள்?பதில்:
ஆத்மா ஓர் ஒளிப்புள்ளியாக இருப்பதைப் போன்று, பரமாத்மாவும் மிகவும் சூட்சுமமான ஒளிப்புள்ளி என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்த அற்புதமான விடயங்கள் மனிதர்களின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டவை. குழந்தைகளாகிய உங்களிற் சிலரும் கூட இதைப் பற்றிக் குழப்பம் அடைகிறீர்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, குழப்பம் அடையாதீர்கள்! உங்களால் அவரை அவருடைய சின்னஞ்சிறிய ரூபத்தில் நினைவுசெய்ய இயலாதுவிடின், அவரை ஒரு பெரிய ரூபத்தில் நினைவு செய்யுங்கள், ஆனால் நிச்சயமாக அவரை நினைவு செய்யுங்கள்.பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்! விடியல் வெகு தொலைவில் இல்லை.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் இங்கு ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்க வேண்டும். இது வேறு எங்கும் விளங்கப்படுத்தப் படுவதில்லை. நீங்கள் ஆத்ம உணர்வில் அமர வேண்டும் எனச் சாதுக்கள் அல்லது புனிதர்களில் எவரும் கூறுவதில்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே இதனைக் கூறுகிறார். இதனை எவ்வாறு கூறுவது என்று வேறு எவரும் அறியார். வேறு எவராலும் உங்களுக்கு இவ் வழிமுறையைக் காண்பிக்க முடியாது. நீங்கள் ஆத்மாக்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீங்கி, இன்னுமொன்றை எடுக்கிறார். சிலசமயங்களில் ஆத்மா ஒரு சட்டநிபுணர் ஆகுகிறார், சிலசமயங்களில் ஒரு வைத்தியராக ஆகுகிறார். இப்பொழுது ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள், பின்னர் அவர்கள் தூய்மையானவர்கள் ஆகுவார்கள். ஆத்மா இந்த ஞானத்தைக் கிரகிக்கிறார். அசரீரியான தந்தையே ஞானக்கடல், ஆகவே அவர் நிச்சயமாக வந்து இந்த ஞானத்தைப் பேசுகிறார். அவரே தூய்மையாக்குபவர் ஆதலால், அவர் நிச்சயமாக வந்து உங்களைத் தூய்மை ஆக்குகிறார். அவரே பரம்: பரமாத்மாவாகிய பரமதந்தை. நான், ஞானம் நிறைந்தவராகிய பரமாகிய, உங்கள் தந்தை ஆவேன். எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் கிடையாது. ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானம் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். ஆகவே, நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். சரீர உணர்வு எதனையும் கொண்டிருக்க வேண்டாம். பேசுபவர், செவிமடுப்பவர்கள் இருசாராரும் ஆத்ம உணர்வில் இருக்கின்ற வேறெந்த இடமும் கிடையாது. தந்தை அசரீரியானவர். அவர் வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். ஏனைய மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தார்கள் என நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் அவர்களும் தங்கள் சரீரங்களைப் பற்றி அறிந்திருந்தார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அதனைக் கிரகிக்க வேண்டும். அவர் மாத்திரமே ஆத்மாக்களான உங்களுக்கு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியைக் காண்பிக்கின்றார். இது இப்பொழுது முழு உலகினதும் வீழ்ச்சியாகும், அவர் அதனை எழுச்சியடையச் செய்வதற்கு வந்து விட்டார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். “வீழ்ச்சி” என்றால் விநாசமும், “எழுச்சி” என்றால் ஆக்கமும் ஆகும். ஸ்தாபனையும் விநாசமும் - எதன் ஸ்தாபனை? சுவர்க்கமாகிய புதிய உலகின் ஸ்தாபனை ஆகும். பின்னர் நரகமாகிய பழைய உலகின் விநாசம் உள்ளது. விநாசமும் ஆக்கமும். கலியுகம் பழைய உலகம் ஆகும், அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இந்தப் பெரிய மகாபாரத யுத்தமே விநாசத்தின் அறிகுறியாகும். மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் அவர்கள் மகாபாரத யுத்தத்தை விவரித்துள்ளார்கள். பிரம்மாவினூடாக, தந்தை ஸ்தாபனையை மேற்கொள்கிறார். அவர் நிச்சயமாகப் புதிய உலகை ஸ்தாபிக்கிறார். இது எல்லையற்ற விநாசமும், எல்லையற்ற ஸ்தாபனையும் ஆகும். ஒரு தந்தை மாத்திரமே தனது குழந்தைகளுக்காக ஒரு புதிய வீட்டைக் கட்டுவார். பின்னர் அவர் நிச்சயமாகப் பழையதை அழியச் செய்வார். பாபா புதிய உலகை ஸ்தாபிக்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உங்களைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குவதற்காக, அவர் உங்களைத் தயார் செய்கிறார். மகாபாரத யுத்தம் விநாசத்துக்கு மிகவும் பிரபல்யமானது. “இது அந்த அதேவேளை” என்று அவர்கள் கூறுகிறார்கள். மகாபாரத யுத்தத்தின் பொழுது இருந்த அதே நட்சத்திரங்களே இப்பொழுது மீண்டும் ஒன்றாக வந்துள்ளன. ஏணியின் படத்தில் எழுதப்பட்டுள்ளது: பாரதத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றிய வியக்க வைக்கும் கதை. அந்த வரியில் “ஒவ்வொரு கல்பமும்” என்னும் வார்த்தைகளும் சேர்க்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். இது உங்கள் புத்தியில் உள்ளது. மனிதர்களின் புத்தி முழுமையாகவே கோத்ரெஜ் பூட்டுக்களினால் பூட்டப்பட்டுள்ளது. மனிதர்கள் இவ்விடயங்களை அறிந்துகொள்ள வேண்டும். தங்கள் பாகங்களை நடிப்பதற்காக, இங்கு ஆத்மாக்கள் சரீரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, நீங்கள் ஆரம்பம், மத்தி, இறுதியையும், அத்துடன், இந்த நாடகத்தின் படைப்பவரையும் இயக்குநரையும் பிரதான நடிகர்களையும் அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை முழு நாடகத்திலும் யார், யார் உள்ளார்கள் என்பதான நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து இந்த ஞானம் அனைத்தையும் பெறுகிறீர்கள். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகிறது. லௌகீக விடயங்களின் ஞானம் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக ஞானம் கியான் என்று அழைக்கப்படுகிறது. இவ்விடயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் பதிய வைக்கப்படுகின்றன. 84 பிறவிகளின் இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்பவுள்ளோம். எவ்வாறாயினும், தூய்மையற்ற மனிதர்களால் வீடு திரும்ப முடியாது. இல்லாவிடின், மக்கள் ஏன் பல யாத்திரைகள் சென்று, அதிகளவு தபஸ்யா, செபித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்? அவர்கள் தூய்மை ஆகுவதற்கு, கங்கையில் நீராடச் செல்கிறார்கள், ஆனால் அதனூடாக எவராலும் தூய்மையாக முடியாது. இதனாலேயே எவராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. இன்னார் இன்னார் அப்பாலுள்ள தாமமான, நிர்வாணாவுக்குச் சென்றார் அல்லது அவர்கள் ஒளியில் கலந்தார்கள் எனப் பல பொய்களை அவர்கள் கூறுகிறார்கள். எவராலும் வீடு திரும்ப முடியாது எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். நடிகர்கள் அனைவரும் இங்கேயே உள்ளார்கள். இப்பொழுது நாடகம் முடிவுக்கு வருகிறது, ஆகவே அனைவரும் மேடையில் உள்ளார்கள்; இப்பொழுது அனைவரும் இங்கேயே பிரசன்னமாகி உள்ளார்கள். பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் போன்றோர் எங்கே உள்ளார்கள் என்பதை மக்கள் அறியார்கள். இந்நேரத்தில் மேலிருந்து வந்துள்ள ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முன்னைய கல்பத்திலும் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகினீர்கள். தந்தை மாத்திரமே வந்து ஸ்தாபனையையும் விநாசத்தையும் தூண்டுகிறார். இந்த ஞானம் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குவதற்கானது எனக் கூறப்பட்டுள்ளது. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். ஸ்ரீகிருஷ்ணர் ஸ்தாபனையை மேற்கொள்வதில்லை. தந்தையே படைப்பவர். தந்தையே வந்து விளங்கப்படுத்துகிறார்: உலகம் தூய்மையற்றுள்ள பொழுதே, அனைவரும் என்னை அழைக்கிறார்கள். நான் இல்லாததில் இருந்து அந்தப் புதிய உலகைப் படைக்கிறேன் என்பதல்ல. அவர்கள் மொத்த பிரளயம் நடைபெறுவதைக் காட்டுகிறார்கள்; அவை அனைத்தும் தவறானது. மக்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, அவர் நிச்சயமாகத் தூய்மையற்ற உலகினுள் வருகிறார். தந்தை வந்து உங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பூமியின் காட்சியொன்றைக் கொடுக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் கடலில் அரசமிலையில் மிதந்து வந்ததாக அவர்கள் காண்பிக்கிறார்கள். அது சரியானது. ஸ்ரீகிருஷ்ணரே முதலில் புதிய உலகினுள் வருகிறார். அவர் கடலினுள் வருவதில்லை, ஆனால் கருப்பையாகிய மாளிகையினுள் வருகிறார். அவர் தன்னுடைய பெருவிரலைச் சுவைத்தபடி, கருப்பையாகிய மாளிகையில் பெரும் சௌகரியத்தில் இருக்கிறார். சத்தியயுகத்தில் பிறக்கின்ற குழந்தைகள் அனைவரும் கருப்பையாகிய மாளிகையில் இருக்கிறார்கள். கருப்பையாகிய மாளிகை என்னும் விடயத்தையே அவர்கள் கடலில் ஓர் அரசமிலையில் மிதப்பதாகச் சித்தரித்துள்ளார்கள். அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. தந்தை இங்கே அமர்ந்திருந்து, உங்களுக்கு அச்சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். இங்கு, நீங்கள் கருப்பையாகிய சிறையில் இருக்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் கூறுகிறீர்கள்: என்னை வெளியே செல்ல அனுமதியுங்கள்! நான் இனிமேல் பாவம் செய்ய மாட்டேன்! எவ்வாறாயினும், இராவணனின் உலகில், பாவமே உள்ளது, நீங்கள் பின்னர் மீண்டும் ஒருமுறை பாவம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் அரைக் கல்பத்துக்குச் சிறைக்கைதிகள் ஆகுகிறீர்கள். திருடர்கள் சிறைக்கைதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெளியே வந்ததும், மீண்டும் திருடி, மீண்டும் சிறைக்குச் செல்கிறார்கள்; இதனாலேயே அவர்கள் சிறைப் பறவைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இது இராவண இராச்சியம் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இவ்விடயங்கள் அங்கு இருப்பதில்லை. அது இராம இராச்சியம். அங்கு, கருப்பையாகிய சிறையோ அல்லது மற்றைய சிறையோ இருப்பதில்லை. இங்கு, மக்கள் பலரும் சிறையில் இருக்கிறார்கள். கருப்பையாகிய சிறையும், மற்றைய சிறையும் உள்ளன, ஆகவே இது இரட்டைச் சிறை ஆகும். இது இப்பொழுது கலியுக இறுதி ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆக்கத்தை மேற்கொள்கிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ந்தும் எழுச்சியும், வீழ்ச்சியும் இருக்கின்றன. உலகின் எழுச்சியும், வீழ்ச்சியும் உள்ளன, இதில் பாரதத்துக்கே பிரதான பாகம் உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் பாடுகிறார்கள்: ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள். ஆகவே, இதற்கான கணக்கீடு இருக்க வேண்டும். எந்த ஆத்மாக்கள் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள்? தேவ தர்மத்துக்குரிய ஆத்மாக்களே முதலில் தங்களின் பாகங்களை நடிப்பதற்கு வருகிறார்கள். அந்தத் தேவர்கள் இப்பொழுது இல்லை. வாழ்ந்து ஆட்சிசெய்தவர்களின் அடையாளங்களும், படங்களும் உள்ளன. இராச்சியங்கள் முடிவடைந்து விட்டன. சுவர்க்கம் முடிவுக்கு வரும்பொழுது, அது நரகம் ஆகுகிறது. பின்னர், நரகம் முடிவடையும் பொழுது, அது சுவர்க்கம் ஆகுகிறது. புதிய உலகின் ஆக்கமும், நரகத்தின் விநாசமும் உள்ளன. ஆக்கத்துக்குக் குழந்தைகளாகிய நீங்கள் தேவைப்படுகிறீர்கள். நீங்களே அங்கு வசிக்கப் போகின்றவர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தெய்வீகக் குணங்களையுடைய தேவர்கள் ஆகவேண்டும். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்ட காலம் எடுக்கவில்லை என்பது நினைவு கூரப்படுகிறது. இப்பொழுது மனிதர்கள் மிகவும் தூய்மை அற்றவர்களாக உள்ளார்கள். கடவுள் பேசுகிறார்: வீட்டில் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போன்று வாழுங்கள்! இது மரண பூமியில் உங்கள் இறுதிப் பிறவியாகும். ஆகவே, தூய்மை ஆகுங்கள்! இதனை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துங்கள். மரண பூமியில் இந்த இறுதிப் பிறவியில் நாங்கள் தூய்மையாக இருக்கிறோம். தந்தை கூறுகிறார்: இவ்விகாரங்களை வெற்றி கொள்வதனால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனைச் செவிமடுத்து, பின்னர் இப்பழைய உலகின் விநாசம் முன்னிலையில் உள்ளதை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். இது அதே மகாபாரத யுத்தம் ஆகும். காமமே கொடிய எதிரி. இதனாலேயே நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்ய வேண்டும். நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். இப்பழைய உலகம் நிச்சயமாக அழியப் போகின்றது. அதற்கு முன்னர், நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். விநாசம் நடைபெறும்பொழுது, அத்தகைய விரக்திக் குரல்கள் கேட்கும், கேட்கவும் வேண்டாம்! மரணங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். உங்களால் அவற்றைப் பார்க்கக் கூட இயலாதிருக்கும். ஒருவருக்குச் சத்திரசிகிச்சை செய்யப்படும் பொழுது, அங்கு பலவீனமானவர்களால் நிற்கவும் முடியாது; அவர்கள் மயக்கம் அடைந்து விடுவார்கள். இதனாலேயே குடும்பங்கள் அங்கு செல்வதை வைத்தியர்கள் அனுமதிப்பதில்லை. இது அத்தகையதொரு பெரிய சத்திரசிகிச்சையாக இருக்கப் போகின்றது! அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் கொல்வார்கள். இந்தத் தீய உலகம் முட்காடு ஆகும். சத்தியயுகம் மலர்த்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களே உயிர்வாழும் மலர்கள். பாகிஸ்டில் (சுவர்க்கத்தில்) மலர்த்தோட்டம் இருக்கிறது என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் கேள்விப்பட்டவை அனைத்தையும் கூறுகிறார்கள். அவர்கள் அல்லாவின் மலர்த்தோட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் திரான்ஸிலும் மலர்த்தோட்டத்தைப் பார்த்து, அல்லா தங்கள் கரத்தில் ஒரு மலரை வைத்ததாக எண்ணுகிறார்கள். அவர்கள் கடவுளின் மலர்த் தோட்டத்தைப் பற்றிக் கற்பனை செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் காட்சிகளைப் பெறுவதற்காகப் பக்தி செய்கிறார்கள். அவர்கள் ஒரு காட்சியைக் காணும்பொழுது, அது அவர் சர்வவியாபி என்று அர்த்தப்படுகிறது எனக் கூறுகிறார்கள். கடந்த காலத்தில் நடைபெற்றவை அனைத்தும் மீண்டும் நடைபெறும். குழந்தைகள் என்ன ஆடைகளில் வந்துள்ளார்களோ, அவர்கள் ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் அதே ஆடைகளில் இங்கு வருவார்கள். சிலர் நாடகத்தை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒருவர் பாபாவைச் சந்திக்க வரும்பொழுது, பாபா அந்நபரை வினவுகிறார்: நீங்கள் இங்கு முன்னர் எப்பொழுதாவது வந்திருக்கிறீர்களா? அவர் கூறுவார்: ஆம், பாபா! நான் உங்களை முன்னைய கல்பத்திலும் சந்தித்தேன். நான் என்னுடைய ஆஸ்தியை உங்களிடமிருந்து கோருவதற்கு வந்தேன். தந்தை வினவுகிறார்: நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோரினீர்கள்? நீங்கள் மம்மாவையும், பாபாவையும் பற்றிப் பேசுவதனால், நிச்சயமாக அவர்களின் வம்சத்தினுள் வருவீர்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரும்படியான அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளன. உண்மையிலேயே யுத்தம் நடைபெற உள்ளது. நரகம் அழிக்கப்பட வேண்டும். உங்களிடம் முதற்தரமான படங்கள் உள்ளன. நீங்கள் இரு பூகோளங்களுடன் உள்ள ஸ்ரீகிருஷ்ணரின் இப்படத்தையும் அச்சிட வேண்டும். இது மிகவும் தெளிவானது. சுவர்க்க வாசல்கள் திறக்கப்படும் பொழுது, அவர் நரகத்தை அப்பால் உதைக்கிறார். நீங்களும் சுவர்க்கத்தைப் பார்த்தவாறே இருக்கிறீர்கள். இது முழுமையாகவே மிகச்சரியானது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை அறிவீர்கள். ஆகவே, நீங்கள் வீட்டை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் பழைய உலகை மறக்க வேண்டும். இது எல்லையற்ற விருப்பமின்மை என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் பழைய உலகை விட்டு நீங்கி, பாபாவிடம் செல்கிறோம். நினைவு யாத்திரையின் மூலம் மாத்திரமே நாங்கள் அங்கு செல்வோம். நினைவே பிரதான விடயம். அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். தந்தை வந்து உங்களுக்குச் சரியாகக் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! இந்நினைவு கலப்படமற்றதும், அர்த்தமுள்ளதும் ஆகும். சிவபாபா ஒரு புள்ளியே என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை ஒரு புள்ளியான, ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், அத்துடன் தந்தையையும் ஒரு புள்ளியாகக் கருதுங்கள். ஏதாவது புதியதை நீங்கள் பார்க்கும் பொழுது, அதனை மறக்கிறீர்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையையும், வீட்டையும் நினைவு செய்யுங்கள்! சரி, நினைவு செய்வதற்கு, புள்ளி மிகவும் சிறியது எனில், உங்கள் வீடு மிகப்பெரியது ஆகையால், உங்கள் வீட்டை நினைவு செய்யுங்கள். பாபாவும் அங்கேயே வசிக்கிறார். நீங்களும் நானும் பாபா வசிக்கும் இடத்துக்கு செல்வோம். உங்களால் ஒரு புள்ளியை நினைவுசெய்ய இயலாதுவிடின், அப்பொழுது குறைந்தபட்சம் உங்களால் வீட்டையாவது நினைவு செய்ய முடியும். அதுவே அமைதி தாமமும், மற்றையது சந்தோஷ தாமமும் ஆகும். இது துன்ப தாமம் ஆகும். இப்பொழுது உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, நீங்கள் கற்கிறீர்கள், பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்வீர்கள். நீங்களே தந்தையின் குழந்தைகள், ஆகவே நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தை விரும்புவீர்கள். சிவபாபா முன்னைய கல்பத்திலும் வந்து உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுத்தார். நீங்கள் இப்பொழுது அதனை மறந்து விட்டீர்கள். தந்தை கூறுகிறார்: அதனை உங்களுக்குக் கொடுப்பதற்கு நான் மீண்டும் ஒருமுறை வந்து விட்டேன். நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தைப் பெற்று, இழந்து விட்டீர்கள்! நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை எண்ணற்ற தடவைகள் கோரியுள்ளீர்கள். அச்சந்தர்ப்பத்தில் அத்தகையதொரு தந்தையை நீங்கள் ஏன் மறக்கிறீர்கள்? மாயையின் புயல்களுடனான பல யுத்தங்கள் உள்ளன. இதனாலேயே மாயை உங்களை ஒருபுறத்திலிருந்து இழுப்பதாகவும், கடவுள் உங்களை மறுபுறத்திலிருந்து இழுப்பதாகவும் ஒரு நாடகம் காண்பிக்கின்றது. இந்த ஞானத்தில் தடைகள் கிடையாது, ஆனால் நினைவில் தடைகள் உள்ளன. இதற்கு முயற்சி தேவையாகும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது மகாராத்திகள் ஆகுங்கள். இப்பழைய உலகம் தீயில் இடப்படவுள்ளது. பழைய உலகம் முழுவதுமே இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட உள்ளது. ஆகவே, மகாவீரர்கள் ஆகுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாத இராச்சியத்தைக் கோர வேண்டும். எத்தனை புயல்கள் வந்தாலும் மாயையினால் எதனையும் செய்ய முடியாத அத்தகையதொரு வழியில், உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது நீங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ள பொழுது, இறுதியில் உங்கள் ஸ்திதியாக இருக்கும். ஒரு பாடசாலையில், இறுதியில் பரீட்சைகள் நடைபெறும். உங்கள் மாலையும் இறுதியில் கோர்க்கப்படும். நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள்: இன்னார் இன்னார் இவ்வாறு ஆகுவார், இன்னார் இன்னார் அவ்வாறு ஆகுவார். இவர் ஒரு பணிப்பெண் போன்று ஆகுவார். அனைத்தும் காண்பிக்கப்படும். இறுதிக் காலத்தில், உங்களால் எதனையும் செய்ய முடியாதிருக்கும், மனம் வருந்துதல் இருக்கும். “நான் என்ன செய்து விட்டேன்? நான் ஏன் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை?” எவ்வாறாயினும், அந்நேரத்தில் உங்களால் எதனையும் செய்ய முடியாதிருக்கும். பலர் அவ்விதமாக வருந்துகின்றார்கள். மக்கள் ஏனையோரைக் கொல்கிறார்கள், பின்னர் மனம் வருந்துகிறார்கள். எவ்வாறாயினும், கொலை நடைபெற்றது, அப்பொழுது என்ன செய்ய முடியும்? இதனாலேயே தந்தை கூறுகிறார்: கவனயீனமாக இருக்காதீர்கள்! தொடர்ந்தும் உங்கள் சொந்த முயற்சியைச் செய்யுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. 84 பிறவிகளின் நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆகவே, ஆத்ம உணர்வில் இருந்து தூய்மை ஆகுங்கள். சரீர உணர்வு அனைத்தையும் அகற்றுங்கள்.2. உங்களை ஒரு புள்ளியான, ஆத்மாவாகக் கருதி, உங்கள் மனத்தில் உண்மையான அர்த்தத்துடன், ஒரு புள்ளியான, தந்தையின் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருங்கள். ஒரு மகாவீரராகி, உங்கள் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாக ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் வீணான ஒழுக்கு எதையும் நிறுத்துவதன் மூலம் குறைந்தளவு செலவில் அதிகளவு மகிமைப்படுத்தலை ஏற்படுத்துவதுடன் சக்திவாய்ந்தவர் ஆகுவீர்களாக.நீங்கள் சங்கமயுகத்தில் பாப்தாதாவிடம் இருந்து பெற்ற பொக்கிஷங்கள் அனைத்தையும் வீணாகிப் போவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் குறைந்தளவு செலவில் அதிகளவு மகிமையை ஏற்படுத்த முடியும். வீணாகிப் போவதில் இருந்து எதையும் பாதுகாத்தல் என்றால், சக்திவாய்ந்தவர் ஆகுதல் என்று அர்த்தம். எங்கே சக்தி உள்ளதோ, அங்கே வீணாகிப் போகுதல் இருப்பது சாத்தியம் இல்லை. ஏதாவது வீணான ஒழுக்கு இருக்குமாயின், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அல்லது நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டி இருந்தாலும் உங்களால் சக்திவாய்ந்தவர் ஆகமுடியாது. இதனாலேயே, நீங்கள் ஒழுக்கு ஏதாவது இருக்கிறதா எனச் சோதித்து அதை நிறுத்த வேண்டும். அதன்பின்னர், வீணானவற்றில் இருந்து நீங்கள் சக்திவாய்ந்தவர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வாழும்போது, சம்பூரணமாகத் தூய்மையாக இருப்பதே ஒரு யோகி மற்றும் ஞானி ஆத்மாவின் சவால் ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
இறை ஞானத்தின் புதுமை, தூய்மை ஆகும். பஞ்சு நெருப்புடன் வாழ்ந்தாலும் அது தீப்பற்றாது என்று நீங்கள் ஆன்மீக போதையுடன் சொல்கிறீர்கள். உங்களின் சொற்பொழிவுகளிலும் தூய்மை இல்லாமல், உங்களால் யோகி மற்றும் ஞானி ஆத்மாக்கள் ஆக முடியாது என்று கூறுகிறீர்கள். எனவே, இப்போது இந்தச் சவாலை நடைமுறைப்படுத்துங்கள்.