27.10.24 Avyakt Bapdada Tamil Lanka Murli 08.10.2002 Om Shanti Madhuban
ஆத்ம உணர்வுடைய விக்கிரகமாகி, ஒத்துழைப்பையும் கற்பித்தல்களையும் (திருத்தங்கள்) வழங்குங்கள்.
(பாப்தாதா குறிப்பாக மதுவனவாசி சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறார்)
இன்று, அன்புக்கடலான பாப்தாதா, மாஸ்ரர் ஞானக்கடல்களாக விளங்கும் தனது குழந்தைகளுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறார். இந்த இறையன்பே குழந்தைகளின் பராமரிப்பின் அடிப்படையாகும். இறையன்பானது எப்படி பிராமண வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறதோ, அதேபோல், பிராமண ஒன்றுகூடலின் அடிப்படை, ஆத்ம உணர்வு அன்பாகும். குழந்தைகளான உங்களால் மட்டுமே இந்த ஆத்ம உணர்வு அன்பை அனுபவம் செய்ய முடியும். இன்றைய உலகிலுள்ள ஆத்மாக்கள், இந்த உண்மையான, பரோபகாரமான, ஆத்ம உணர்வு, இறையன்பிற்கான தாகத்துடன் இருக்கிறார்கள். பிராமண ஆத்மாக்களான உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த உண்மையான அன்பை அடைய முடியாது. தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்க்கும் நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு கணமும் இறையன்பிலும் ஆத்ம உணர்வு அன்பிலும் அமிழ்ந்திருப்பதை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சதா அன்பை அருள்பவர்களாகவும் (தாதா) அன்பு தேவர்களாகவும் (தேவதா) இருக்கிறீர்களா? நடக்கும்போதும் அசையும்போதும், உங்களின் மனோபாவத்தில், பார்வையில், வார்த்தைகளில், உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும், அதாவது, உங்களின் செயல்களில் இந்த ஆத்ம உணர்வு அன்பை அனுபவம் செய்கிறீர்களா? ஓர் ஆத்மா எத்தகையவராக இருந்தாலும், பிராமணர்களின் இயல்பான மனோபாவம் உங்களின் பிராமண சுபாவம் ஆகியுள்ளதா? நீங்கள் இதை உருவாக்க வேண்டியுள்ளதா? அல்லது அது ஏற்கனவே உருவாகிவிட்டதா? தந்தையைப் பின்பற்றுங்கள், தாயைப் பின்பற்றுங்கள்! உங்களின் பிராமணப் பிறவியின் ஆரம்ப காலப்பகுதியை நினைத்துப் பாருங்கள். பல்வேறு சுபாவங்களைக் கொண்ட பல ஆத்மாக்கள் தந்தைக்குச் சொந்தம் ஆகியுள்ளார்கள். அன்புக்கடலான தந்தை, உங்கள் எல்லோரையும் தனது அன்புக்கடலின் ரூபத்தின் அநாதியான சுபாவத்தால் தனக்குச் சொந்தம் ஆக்கியுள்ளார். உங்கள் எல்லோருடைய வெவ்வேறு சுபாவங்களை அவர் பார்த்திருந்தால், அவரால் உங்களைத் தனக்குச் சொந்தம் ஆக்கியிருக்க முடியுமா? ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுப் பாருங்கள்: எனது இயல்பான சுபாவம் என்ன? எவருடைய பலவீனமான சுபாவமும் - உண்மையில், பிராமண வாழ்க்கையின் இயல்பான சுபாவம், மாஸ்ரர் அன்புக்கடலாக இருப்பதேயாகும். அன்பால் கல்லையும் கரைக்கலாம் என உலக மக்கள் கூறும்போது, ஆத்ம உணர்வு அன்பையும் இறையன்பையும் பெறுகின்ற, வழங்குகின்றவர்களால் வெவ்வேறு வகையான சுபாவங்களை மாற்ற முடியாதா? உங்களால் இதைச் செய்ய முடியுமா முடியாதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களே, பேசுங்கள்! இதை உங்களால் செய்ய முடியும் என நம்புபவர்கள், ஒரு கையை உயர்த்துங்கள்! உங்களின் கையை உயரே உயர்த்துங்கள், பதிவாக அல்ல! (எல்லோரும் தமது கைகளை உயர்த்தினார்கள்). அச்சா, பாராட்டுக்கள்! சூழ்நிலைகளும் வரும். சூழ்நிலைகள் வரவே வேண்டும். அவை பிராமண வாழ்க்கைப் பாதையில் உள்ள பக்கக் காட்சிகள். இந்தப் பக்கக் காட்சிகள் எப்போதும் ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலது அழகானவை. சிலது அழுக்கானவை. எவ்வாறாயினும், அவற்றைக் கடந்து செல்வதுடன், அந்தப் பக்கக்காட்சிகளை மாற்ற முயற்சி செய்யாமல் இருப்பது ஒரு பயணியின் கடமையாகும். அதனால், பாப்தாதா எதை விரும்புகிறார்? நீங்கள் எல்லோரும் இதை அறிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள் ஆகியுள்ளீர்கள்.
இன்று, மதுவனவாசிகளுக்கு ஒரு விசேடமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பொன்னான வாய்ப்பு அல்லவா? இந்தப் பொன்னான வாய்ப்பின் பிரதிபலன் என்ன? நீங்கள் இந்த வாய்ப்பை அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் எடுத்துக் கொண்டுள்ளீர்கள். உண்மையில், கீழே அமர்ந்திருப்பவர்களும் மதுவனவாசிகளே. ( மதுவனவாசி சகோதர, சகோதரிகளுடன், பாண்டவ பவனில் இருந்து பலரும் முரளியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்) எவ்வாறாயினும், இன்று, பாபா குழுக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஆகும். உங்களில் பலரும் ஒன்றுகூடும்போது, நீங்கள் வெகு தொலைவில் இருப்பதைப் போல் தோன்றும். இதனாலேயே, சிறிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் எல்லோருமே உண்மையில் மதுவனவாசிகளே. நிலையங்களில் வசிக்கின்ற எல்லோருடைய நிரந்தர முகவரியும் மதுவனம், அப்படித்தானே? எனவே, ஒரு பிராமணர் என்றால், மதுவனத்தைத் தனது நிரந்தர முகவரியாகக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். உங்களின் வீடு மதுவனம். ஏனைய இடங்கள் அனைத்தும் சேவைத்தலங்களே. ஆகவே, கீழே வேறு இடங்களில் அமர்ந்திருப்பவர்கள், இன்று தாங்கள் மதுவனவாசிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம் என நினைக்கக்கூடாது. இல்லை. நீங்கள் எல்லோரும் மதுவனவாசிகளே. பாப்தாதா உங்களைத் தனக்கு முன்னால் பார்க்க விரும்புகிறார், அவ்வளவுதான். அவரால் இதைச் சிறிய குழுக்களுடனேயே செய்ய முடியும். இப்போதும், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தெளிவாகப் புலப்படவில்லை. முன்னால் அமர்ந்திருப்பவர்கள் தெளிவாகத் தெரிகிறார்கள். ஆனால், பின்னால் அமர்ந்திருப்பவர்கள், இதயத்தில் இருந்து தொலைவில் இல்லை. கீழே அமர்ந்திருப்பவர்களும் இதயத்தில் இருந்து தொலைவில் இல்லை. ஆகவே, தற்சமயம், சட்டத்திற்கும் அன்புக்கும் இடையே ஒரு சமநிலை பேணப்பட வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். எவ்வாறாயினும், அன்பிற்கும் சட்டத்திற்கும் இடையே எத்தகைய சமநிலை இருக்க வேண்டும் என்றால், அது சட்டம் மட்டுமே என்ற உணர்வினை ஏற்படுத்தக்கூடாது. அந்தச் சட்டத்தில் அன்பும் அனுபவம் செய்யப்பட வேண்டும். நீங்கள் பௌதீக ரூபத்தில் தந்தையைக் கண்டீர்கள். சட்டத்துடன் கூடவே, அவர் அதிகளவு அன்பையும் வழங்கினார். அதனால் எல்லோருடைய உதடுகளில் இருந்தும், பாபா என்னை நேசிக்கிறார்! அவர் எனது பாபா! என்ற வார்த்தைகளே வெளிப்பட்டன. நிச்சயமாக, சட்டத்தைக் கடைப்பிடியுங்கள். ஆனால், சட்டத்துடன் கூடவே, அன்பையும் வழங்குங்கள். சட்டத்தை மட்டும் கடைப்பிடிப்பவர் ஆகாதீர்கள். ஆத்மாக்கள் பலவீனமாக இருப்பதனால், சட்டம் மட்டும் இருக்கும்போது, ஆத்மாக்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். நீங்கள் ஆத்ம உணர்வு அன்பின் விக்கிரகங்கள் ஆகும்போது, உங்களால் மற்றவர்களுக்கு அந்த ஆத்ம உணர்வு அன்பை வழங்க முடியும். ஆத்ம உணர்வு அன்பு என்றால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வைக் கண்டு கொள்ள உதவிசெய்வதில் ஒத்துழைத்தல் என்று அர்த்தம். கற்பித்தல்களை மட்டும் கொடுக்காதீர்கள். கற்பித்தல்களுடன்கூடவே, ஒத்துழைப்பையும் வழங்குங்கள். இது ஆத்ம உணர்வு அன்பின் விக்கிரகமாக ஆகுதல் என்று அர்த்தம். ஆகவே, இன்று, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எங்கும் உள்ள பிராமண ஆத்மாக்கள் எல்லோருக்கும் குறிப்பாக இதைக் கீழ்க்கோடிடுகிறார்: ஆத்ம உணர்வு அன்புள்ள விக்கிரகங்கள் ஆகுங்கள். அத்துடன் ஆத்ம உணர்வு அன்பிற்கான தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்க்கும் அருள்பவர்களாகவும் தேவர்களாகவும் ஆகுங்கள். இது ஓகேயா? அச்சா.
(பாப்தாதா மதுவனவாசிகளுடன் கலந்துரையாடினார். அத்துடன் எல்லோருக்கும் திருஷ்டி கொடுத்து, அவர்களை அப்பால் அழைத்துச் சென்றார்.)
அவ்யக்த பாப்தாதா வைத்தியசாலை வாசிகளையும் அபுவாசிகளையும் ஏனைய குழுக்களையும் சந்திக்கிறார்:
நீங்கள் உங்கள் எல்லோரையும் பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? முழு உலகிலும், அனைவரிலும் மகத்தான பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் யார்? நீங்கள் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடையதே அனைத்திலும் மகத்தான பாக்கியம். நீங்கள் எல்லோரும் இப்படி நினைக்கிறீர்களா? உங்களிடம் சந்தோஷ பாக்கியம் இருந்தால், நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்களா? சிலவேளைகளில் மட்டும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று இல்லையல்லவா? பாப்தாதா பாக்கிய நட்சத்திரங்களான உங்களைப் பிரகாசிக்கச் செய்திருக்கும்போது, பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? உங்களின் இதயத்தில் சதா சந்தோஷ வாத்தியங்கள் இசைக்கிறதா? அவை இசைக்கிறதா? உங்களின் இதயம் என்ன பாடலைப் பாடுகிறது? ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே! நீங்கள் இந்தப் பாடலைப் பாடுகிறீர்களா? கல்பம் முழுவதும் உங்களின் பாக்கியம் புகழப்படுகிறது. அரைக்கல்பத்திற்கு, நீங்கள் உங்களின் பாக்கியத்தை உங்களின் வெகுமதியாக அனுபவம் செய்தீர்கள். அரைக்கல்பத்திற்கு, ஆத்மாக்கள் பலரும் தொடர்ந்து உங்களின் பாக்கியத்தின் புகழைத் தொடர்ந்து பாடுகிறார்கள். அதிவிசேடமான விடயம் என்னவென்றால், முழு உலகிலும், தந்தை யாரை விரும்புகிறார்? அவர் உங்களையே விரும்புகிறார், அப்படித்தானே? பல ஆத்மாக்கள் இருக்கிறார்கள். எனினும் அவர் உங்களையே விரும்பினார். இறைவனால் நேசிக்கப்படுவதை விடப் பெரியது வேறு என்ன இருக்க முடியும்? எனவே, தந்தையை நினைப்பதுடன்கூடவே, எப்போதும் உங்களின் பாக்கியத்தையும் நினைவு செய்யுங்கள். இறைவனும் (பாக்கியத்தை அருள்கின்ற பகவான்) பாக்கியமும் (பாக்யா). கல்பம் முழுவதும், ஒவ்வொரு நாளும் இறையன்பை, அவரின் அன்பையும் நினைவுகளையும் பெறுகின்ற ஆத்மாக்கள் யாராவது இருக்கிறார்களா? நீங்கள் தினமும் அன்பையும் நினைவுகளையும் பெறுகிறீர்கள்தானே? அனைவராலும் மிகவும் நேசிக்கப்படுபவர் யார்? நீங்களே மிகவும் நேசிக்கப்படுபவர்கள், அப்படித்தானே? நீங்கள் உங்களின் பாக்கியத்தை சதா நினைக்கும்போது, வீணான விடயங்கள் அனைத்தும் ஓடி விடும். நீங்கள் அவற்றை விரட்ட வேண்டியதில்லை. அவை தானாகவே இலகுவாக ஓடி விடும்.
இப்போது, இந்த நேரத்திற்கேற்ப, நீங்கள் சங்கமயுக நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு விநாடியும் தொடர்ந்து உங்களின் வெகுமதியை மேன்மையானது ஆக்கிக் கொள்ளுங்கள். ஒரு விநாடியேனும் வீணாக்கப்படக்கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு வினாடியும் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு விநாடி வீணாக்கப்படுவது மட்டுமன்றி, அதிகளவு நேரம் வீணாக்கப்படுகிறது. உங்களால் அந்த நேரத்தை மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. உங்களுக்கு நேரத்தின் மிகத் தெளிவான அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளதுதானே? நீங்கள் அதை உணர்ந்துள்ளீர்களா? பாருங்கள், இன்று, உங்கள் எல்லோருக்கும் விசேடமான நேரம் வழங்கப்பட்டுள்ளதல்லவா? நீங்கள் எல்லோரும் ஒன்றாக வந்திருந்தால், உங்களைப் பார்த்திருக்க முடியாது. இப்போது, குறைந்தபட்சம் யார் இங்கே இருக்கிறார்கள் என்பதை பாபாவால் பார்க்க முடிகிறது. நீங்கள் எல்லோரும் விசேடமான ஆத்மாக்கள். உங்களின் சிறப்பியல்பை அறிந்து, அதைச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். நாடகத்தின்படி, ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் ஏதாவதொரு சிறப்பியல்பு உள்ளது. எந்தவொரு சிறப்பியல்பும் இல்லாதவர் என யாரும் இல்லை. எனவே, உங்களின் சிறப்பியல்புகளை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். ஒவ்வொருவரின் சிறப்பியல்பிற்கேற்ப, மிகத் துரிதமான வழிமுறை ஒன்று உருவாக்கப்படும். அதைச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். ஆனால் அதையிட்டு அகங்காரத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், சங்கமயுகத்தில், நாடகத்தின்படி, ஒவ்வொரு சிறப்பியல்பும் இறைபரிசே ஆகும். இறைவனிடமிருந்து பெற்ற பரிசையிட்டு எந்தவிதமான அகங்காரமும் இருக்கக்கூடாது. உதாரணமாக, எவருமே பிரசாதத்தைத் தனது பிரசாதம் எனக் கருத மாட்டார். அது இறை பிரசாதம். இந்தச் சிறப்பியல்புகளும் பிரபு பிரசாதம் (இறைவனிடமிருந்து பெறப்பட்டவை). பிரசாதம் என்பது தனக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதல்ல. ஆனால், அது பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நீங்கள் அதைப் பகிர்ந்தளிக்கிறீர்கள். நீங்கள் மகாதானிகள். நீங்கள் ஆசீர்வாதங்களையும் அருள்பவர்கள். பாண்டவர்களும் சக்திகளுமான நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் மகாதானிகளுமா? ஓரிரு மணிநேரத்திற்கு மகாதானி அல்ல. ஆனால், திறந்த பொக்கிஷக் களஞ்சியமாக இருக்க வேண்டும். இதனாலேயே, தந்தை, எப்போதும் திறந்திருக்கும் பொக்கிஷக் களஞ்சியத்தைக் கொண்டிருக்கும், கள்ளங்கபடமற்ற பிரபு (போலா - பண்டாரி) என்று அழைக்கப்படுகிறார். அவரே திறந்த பொக்கிஷக் களஞ்சியம் ஆவார். தொடர்ந்து ஆத்மாக்களுக்கு ஒரு துளியை வழங்குங்கள். யாசகர்களின் பெரியதொரு வரிசை உள்ளது. நீங்கள் நிரம்பி வழியும் பொக்கிஷக் களஞ்சியம் ஆவீர்கள். உங்களிடம் முடிவற்ற பொக்கிஷக் களஞ்சியம் உள்ளது. அது எப்போதாவது முடியுமா? அதைப் பகிர்ந்தளிப்பதில் நீங்கள் சிக்கனமாக இல்லையல்லவா? இதைத் தாராளமாகப் பகிர்ந்தளியுங்கள். எதையாவது வீணாக்குதல் என்று வரும்போது, சிக்கனமாக இருங்கள். ஆனால், பகிர்ந்தளித்தல் என்று வரும்போது, திறந்த இதயத்துடன் பகிர்ந்தளியுங்கள்.
நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? சிலவேளைகளில், நீங்கள் எதையாவது உணர்கிறீர்கள். சிலவேளைகளில் உங்களுக்கு மனநிலை சரியில்லை என்றும் சிலவேளைகளில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்றும் இல்லைத்தானே? தந்தையைப் பின்பற்றுங்கள். பாப்தாதாவிற்கு எப்போதாவது மனநிலை சரியற்றுப் போகிறதா? ஆகவே, நீங்கள் தந்தையைப் பின்பற்றுகிறீர்கள்தானே? பாப்தாதாவிடம் விசேடமான பிராமணக் குழந்தைகளுக்காக ஒரு தொலைக்காட்சி உள்ளது. ஒவ்வொருவரின் வெவ்வேறு மனநிலைகளும் அதில் தோன்றும். அதைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். எப்போதும், மகாதானிகளாக இருப்பவர்களின் மனநிலை ஒருபோதும் மாறாது. நீங்கள் அருள்பவர்கள். அதனால் தொடர்ந்து அருளுங்கள். ஒரு தேவர் (தேவதா, அருள்பவர்) என்றால் வழங்குபவர் என்று அர்த்தம். நீங்கள் எடுப்பவர்கள் (லேவ்தா) அல்ல, ஆனால் கொடுப்பவர்கள் (தேவ்தா). எத்தனை தடவைகள் நீங்கள் தேவதேவியர் ஆகியுள்ளீர்கள்? பல தடவைகள் அப்படி ஆகியுள்ளீர்கள்தானே? எனவே, ஒரு தேவர் என்றால், கொடுக்கின்ற சம்ஸ்காரங்களைக் கொண்டவர் என்று அர்த்தம். மற்றவர்கள் எதைக் கொடுத்தாலும், நீங்கள் தொடர்ந்து ஒரு துளி சந்தோஷத்தை, ஒரு துளி அமைதியை, ஒரு துளி அன்பைக் கொடுங்கள். மக்களிடம் அமைதியின்மையும் துன்பமும் மட்டுமே உள்ளன. எனவே, அவர்கள் வேறு எதைத்தான் கொடுப்பார்கள்? அவர்கள் அதை மட்டுமே கொடுப்பார்கள், அப்படித்தானே? ஆனால், உங்களிடம் என்ன உள்ளது? சந்தோஷமும் அமைதியும். நீங்கள் எல்லோரும் ஓகேயா? அச்சா. நீங்கள் ஒரு சந்திப்பைக் கொண்டாடினீர்கள். நீங்கள் இறுதியிலே வந்துள்ளீர்கள் என நீங்கள் நினைக்கவில்லைத்தானே? நீங்கள் விசேடமாக வந்துள்ளீர்கள். நீங்கள் மதுவனத்திற்கு அண்மையில் வசிக்கிறீர்கள். நீங்கள் மதுவனத்தை மிகநன்றாகச் சூழ்ந்துள்ளீர்கள்.
வைத்தியசாலையைச் சேர்ந்தவர்களும் மிக நல்ல சேவை செய்கிறார்கள். சாந்திவானில் இருந்தும் பலர் இங்கே வந்துள்ளார்கள். அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலம் பிரிந்திருந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள். உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் நீண்ட காலம் பிரிந்திருந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள். வெளிநாட்டவர்கள் இல்லாமல் அழகே இல்லை. ஆகவே, நீங்கள் ஒவ்வொரு குழுவிலும் அதன் அழகை அதிகரிப்பதற்காக வருகிறீர்கள். அச்சா.
அவ்யக்த பாப்தாதா சேவாதாரிகளைச் சந்திக்கிறார்:
நீங்கள் எல்லோரும் சேவையின் பெயரால் உங்களின் பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். ஏனென்றால், இந்த யக்யத்திற்குச் சேவை செய்யும் புண்ணியம், மிகவும் மகத்தானது. நீங்கள் உங்களின் சரீரங்களால் சேவை செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களின் மனங்களாலும் சேவை செய்கிறீர்கள். எனவே, இது இரட்டைப் புண்ணியம்: மனதால் சேவை செய்தல், அத்துடன் உடலாலும் சேவை செய்தல். யார் வந்தாலும், அவர்கள் வந்து, சேவாதாரிகளான நீங்கள் செய்யும் சேவையைப் பார்க்கிறார்கள். அவர்கள் இந்தச் சூழலைப் பார்க்கிறார்கள். அதன் நன்மையை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆகவே, சேவை செய்யும் வேளையில் வந்திருக்கும் நீங்கள் எல்லோரும், அந்தளவு புண்ணியத்தையும் ஆசீர்வாதங்களையும் சம்பாதித்துள்ளீர்கள். நீங்கள் உங்களின் சரீரங்களாலும் மனங்களாலும் அத்தகைய சேவையைச் செய்கிறீர்கள். நீங்கள் இரட்டைச் சேவாதாரிகளா அல்லது ஒற்றைச் சேவாதாரிகளா? நீங்கள் யார்? இரட்டைச் சேவாதாரிகள். நீங்கள் இரட்டைச் சேவை செய்கிறீர்களா? நீங்கள் செய்யும் சேவையின் உடனடிப் பலனையும் தொடர்ந்து பெறுகிறீர்கள். நீங்கள் இங்கே தங்கியிருக்கும் காலப்பகுதியில், மேலதிக சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள்தானே? ஆகவே, நீங்கள் உடனடிப் பழத்தையும் உண்கிறீர்கள். அத்துடன் ஆசீர்வாதங்களையும் சேகரிக்கிறீர்கள். எனவே, உங்களின் எதிர்காலத்திற்காகவும் அத்துடன் நிகழ்காலத்திற்காகவும் ஏதோவொன்று உருவாக்கப்படுகிறது. குழந்தைகளான நீங்கள் மிக இலகுவாக உங்களின் வெகுமதியை மேன்மையானது ஆக்கிக் கொள்வதைக் கண்டு பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். அவ்வளவுதான் - சேவை, சேவை, சேவை. வேறு எதிலும் ஈடுபடாதீர்கள். சேவை செய்வதென்றால், சேமித்தல் என்று அர்த்தம். உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைத்தாலும், இரட்டை வருமானத்தைச் சம்பாதியுங்கள். உடனடிப் பலனையும் அத்துடன் எதிர்காலத்திற்கான பலனையும் பெறுங்கள். ஆத்மாக்களான நீங்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். பாப்தாதாவிற்கு சேவாதாரிகளிடம் விசேடமான அன்பு உள்ளது. ஏனென்றால், பாப்தாதாவும் உலக சேவாதாரி ஆவார். எனவே, நீங்கள் சமமானவர்கள், அப்படித்தானே? நீங்கள் உங்களின் மனங்களை மும்முரமாக வைத்திருக்கிறீர்களா அல்லது வெறுமையாக வைத்திருக்கிறீர்களா? மதுவனம் என்றால் நினைவும் சேவையும் என்று அர்த்தம். நடக்கும்போதும் அசையும்போதும் உங்களின் மனங்கள் நினைவைக் கொண்டிருப்பதிலும் சேவை செய்வதிலும் மும்முரமாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் சிலவேளைகளில் மட்டும் சந்தோஷப்படுபவர்கள் இல்லையல்லவா? நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பவர்கள். உங்களின் சந்தோஷத்தைப் பார்க்கும்போது, மற்றவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். சேவாதாரிகளான உங்களுக்குச் சந்திப்பதற்கான முறை கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? நீங்கள் விசேடமான ஒரு முறையைப் பெற்றுள்ளீர்கள், அப்படித்தானே? மதுவனவாசிகள் என்ற பெயரிலும் நீங்கள் ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றீர்கள். எப்போது சுய மரியாதை என்ற உங்களின் ஸ்திதியுடன் தொடர்ந்து பறந்திடுங்கள். ஒருபோதும் உங்களின் சுய மரியாதையைக் கைவிடாதீர்கள். நீங்கள் நிலத்தைக் கூட்டினாலும், உங்களின் சுய மரியாதை என்ன? உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரிலும், நான் ஒரு மேன்மையான ஆத்மா. ஆகவே, எந்தவொரு வேலையைச் செய்யும்போதும், உங்களின் ஆன்மீக சுயமரியாதையை மறக்காதீர்கள். இந்த போதை உங்களிடம் இருக்கிறதா? ஆன்மீக போதை. நீங்கள் இப்போது யாருக்குச் சொந்தமானவர்கள்? உங்களின் பாக்கியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் அதை மறப்பதில்லைத்தானே? சேவை செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைத்தாலும், அதன் ஒவ்வொரு விநாடியையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். அது வீணாகிப் போவதற்கு அனுமதிக்காதீர்கள். அது சாதாரணமாக இருப்பதற்கும் அனுமதிக்காதீர்கள். உங்களின் நேரம் ஆன்மீக போதையிலும் ஆன்மீகப் பேற்றுடனும் கழிய வேண்டும். நீங்கள் இத்தகைய இலக்கை வைத்திருக்கிறீர்கள்தானே? அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பெனும் விமானத்தால் சதா நெருக்கத்தை அனுபவம் செய்து, அன்பு விக்கிரகம் ஆகுவீர்களாக.பாப்தாதாவின் அன்பானது குழந்தைகளான உங்கள் எல்லோருக்குள்ளும் அமிழ்ந்துள்ளது. அதனால் நீங்கள் எல்லோரும் அன்பின் சக்தியால் முன்னால் பறக்கிறீர்கள். இந்த அன்பெனும் விமானமானது, உங்களின் சரீரங்கள், மனங்கள், இதயங்களால் உங்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது. இந்த ஞானம், யோகம், தாரணை என்பவற்றில் நீங்கள் எல்லோரும் உங்களின் கொள்ளளவிற்கேற்ப வரிசைக்கிரமமாக இருந்தாலும், அன்பிலே எல்லோரும் முதல் இலக்கத்திலேயே இருக்கிறீர்கள். இந்த அன்பே, பிராமண வாழ்க்கையின் பிரதானமான அடிப்படையாகும். அன்பு செலுத்துதல் என்றால், நெருக்கமாக இருத்தல் (பாஸ்), ஒவ்வோர் இக்கட்டான சூழ்நிலையையும் மிக இலகுவாகக் கடந்து செல்வதுடன் (பாஸ்) சித்தி அடைதல் (பாஸ்) என்று அர்த்தம்.
சுலோகம்:
தந்தையை உங்களின் கண்களில் அமிழ்த்திக் கொள்ளுங்கள். மாயையின் பார்வையில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.