28.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, திறமைச்சித்தி அடைவதற்கு, எப்பொழுதும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தீய சகவாசத்திலிருந்தும் மாயையின் புயல்களிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:
நீங்களும் செய்ய வேண்டிய எந்தச் சேவையை, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்காகச் செய்கிறார்?பதில்:
தனது அன்பிற்கினிய குழந்தைகள் என்று தந்தை உங்களை அழைத்து உங்களை வைரங்கள் ஆக்குவதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் உங்களுடைய இனிமையான சகோதரர்களை வைரங்களாக ஆக்க வேண்டும். இதில் சிரமம் கிடையாது. அவர்களிடம் கூறுங்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் வைரங்களைப் போன்று ஆகுவீர்கள்.கேள்வி:
தனது குழந்தைகளுக்குத் தந்தை கொடுத்துள்ள கட்டளை எது?பதில்:
குழந்தைகளே, இந்த உண்மை வருமானத்தைச் சம்பாதித்து, ஏனையோரும் அதனைச் செய்யத் தூண்டுங்கள். எவரிடமிருந்தும் கடன்களைப் பெறுவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை.பாடல்:
இப்பாவ உலகிலிருந்து எங்களைத் தொலைவாக ஓய்வும் சௌகரியமும் உள்ள பூமிக்கு அழைத்துச் செல்லுங்கள்….ஓம் சாந்தி.
புதிய உலகிற்குச் செல்ல இருக்கின்ற, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை “காலை வணக்கம்” கூறுகிறார். இவ்வுலகிலிருந்து மிகத் தொலைவான இடத்திற்குச் செல்லப் போகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எங்கே செல்லப் போகின்றீர்கள்? உங்கள் இனிமையான மௌன இல்லத்திற்காகும். ஆத்மாக்களாகிய நாங்கள் மௌனதாமமான அங்கிருந்தே வந்தோம், அது மிகத் தொலைவில் உள்ளது. அது அசரீரி உலகம், இது பௌதீக உலகம். அதுவே ஆத்மாக்களாகிய எங்களின் வீடாகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் எங்களைத் திரும்பவும் அவ் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது. பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் ஆன்மீகச் சேவையைச் செய்கிறீர்கள். உங்களுக்கு இதைக் கற்பித்தவர் யார்? உங்களைத் தொலைதூரத்திற்கு அழைத்துச் செல்கின்ற தந்தையே ஆவார். எத்தனை பேரை அவர் தொலைதூரத்திற்கு அழைத்துச் செல்வார்? எண்ணற்ற ஆத்மாக்களை. ஒரேயொரு வழிகாட்டிக்குச் சொந்தமான குழந்தைகளாகிய நீங்கள் அனைவருமே வழிகாட்டிகள் ஆவீர்கள். உங்கள் பெயரே பாண்டவ சேனையாகும். அனைவருக்கும் தொலைதூரம் செல்லும் பாதையைக் குழந்தைகளாகிய நீங்கள் காட்டுகிறீர்கள்: “மன்மனாபவ!” மற்றும் “தந்தையை நினைவுசெய்யுங்கள்!”. நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எங்களை இவ்வுலகிலிருந்து தொலைதூரத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். புதிய உலகில், நீங்கள் இதைக் கூற மாட்டீர்கள். இங்கு, இராவணனின் இராச்சியம் உள்ளதால், நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களை இங்கிருந்து மிகத் தொலைவிற்கு அழைத்துச் செல்லுங்கள். இங்கு சௌகரியம் கிடையாது. அதன் பெயரே துன்பபூமி ஆகும். தந்தை உங்களைத் தடுமாறித் திரியச் செய்வதில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் தந்தையைத் தேடிப் பெருமளவில் தடுமாறினீர்கள். தந்தையே கூறுகிறார்: நான் மறைமுகமாக உள்ளேன். இக்கண்கள் மூலம் என்னை எவராலும் பார்க்க முடியாது. கிருஷ்ணரின் ஆலயங்களில், அவருடைய மரத்தாலான பாதுகைகளை கீழே விழுந்து வணங்குவதற்காக வைத்துள்ளார்கள். எவ்வாறாயினும், நீங்கள் விழுந்து வணங்குவதற்கு எனக்குக் கால்கள் இல்லை. “எனது அன்பிற்கினிய குழந்தைகளே” என்றே நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் ஏனையோருக்கும் கூறுகிறீர்கள்: இனிய சகோதரர்களே, பரலோகத் தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், அவ்வளவே. வேறு சிரமம் கிடையாது. தந்தை உங்களை வைரங்கள் போன்று ஆக்குவதைப் போன்று குழந்தைகளாகிய நீங்களும் ஏனையோரை வைரங்கள் ஆக்க வேண்டும். மனிதர்களை எவ்வாறு வைரங்கள் போன்று ஆக்குவது என நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நாடகத்துக்கேற்ப, தந்தை வந்து ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமத்தில் எங்களுக்குக் கற்பிக்கிறார். பின்னர் நாங்கள் ஏனையோருக்குக் கற்பிக்கிறோம். தந்தை எங்களை வைரங்களாக ஆக்குகின்றார். இஸ்மாயிலிகளின் குருவாகிய, அகா கான் தங்கம், வெள்ளி, வைரங்களை வைத்து (துலாபாரம்) நிறுக்கப்பட்டார். நேரு தங்கத்தை வைத்து நிறுக்கப்பட்டார். இப்பொழுது அவர்கள் எவரையும் ஒரு வைரமாக ஆக்குவதில்லை. தந்தை உங்களை வைரங்களைப் போன்று ஆக்குகிறார். நீங்கள் அவரை எதைக் கொண்டு நிறுப்பீர்கள்? வைரங்கள் போன்றன மூலம் நீங்கள் செய்யப் போவது என்ன? உங்களுக்கு அவை தேவையில்லை. அம்மக்கள் குதிரைப் பந்தயங்கள் போன்றவற்றில் அதிகளவு பணத்தை வீணடிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கட்டடங்கள், சொத்துக்கள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள், குழந்தைகளாகிய நீங்களோ ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் எவரிடமிருந்தேனும் கடன் வாங்கினால், நீங்கள்; அவருக்கு 21 பிறவிகளுக்குத் திருப்பிக் கொடுக்க நேரிடும். எவரிடமிருந்தும் கடன் பெற உங்களுக்கு உரிமை கிடையாது. இப்பொழுது உழைக்கும் வருமானங்கள் அனைத்தும் பொய்யானவையும் முடிவடைய உள்ளன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நான் வைரங்களைப் பெறவிருந்தேன் என்பதை நான் கண்டபோது, நான் எண்ணினேன்: இச்சிப்பிகளைக் கொண்டு நான் என்ன செய்கிறேன்? நான் ஏன் தந்தையிடம் இருந்து என்னுடைய எல்லையற்ற ஆஸ்தியைப் பெறக் கூடாது?” எப்படியாயினும், உண்பதற்குப் போதுமானளவு இருக்கும். ஒரு கூற்றுள்ளது: சதா கொடுத்துக் கொண்டிருப்பவர்களின் கரங்களே முதலாம் இலக்கத்தை அடைகின்றன. பாபா பங்குத்தரகர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்கள் பழைய பொருட்களைப் பெற்று அவற்றைப் புதியவற்றுடன் பரிமாற்றம் செய்கிறேன். சிலர் இறக்கும்பொழுது, அவர்களுடைய உடைமைகள்; அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பிராமணக் குருக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: நான் உங்களிடமிருந்து எதைப் பெறுகிறேன்? இந்த உதாரணத்தைப் பாருங்கள். ஒரு திரௌபதி மட்டும் இருக்கவில்லை. நீங்கள் அனைவரும் திரௌபதிகள் ஆவீர்கள். பலர் அழைக்கிறார்கள்: ஓ பாபா, துகில் உரியப்;படுவதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! பாபா அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்களின் இந்த இறுதிப்பிறவியில் தூய்மையாக இருங்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னுடைய குடும்ப கௌரவத்தைப் பேணுங்கள். உங்கள் குலப் பெயரை அவதூறு செய்ய வேண்டாம். தந்தை உங்களை வைரங்களாக ஆக்குகின்றார் என்னும் தூய போதையை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு கொண்டிருக்க வேண்டும். தந்தை இவரையும் ஒரு வைரமாகவே ஆக்குகின்றார். நீங்கள் அவரை (சிவபாபா) நினைவுசெய்ய வேண்டும். இந்த பாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. நான் உங்கள் குரு அல்ல. அவர் எனக்குக் கற்பிப்பவற்றைப் பின்னர் நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நீங்கள் ஒரு வைரம் போலாக விரும்பினால், தந்தையை நினைவுசெய்யுங்கள். பக்திமார்க்கத்தில் தேவர்களைப் பலர் பூஜித்த போதிலும், அவர்களின் புத்தியோ அவர்களின் வேலை அல்லது வியாபாரம் போன்றவற்றிலேயே அலைந்து திரிகின்றன. ஏனெனில் அதனூடாக அவர்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். பாபா தன்னுடைய அனுபவத்தைக் கூறுகிறார்: என்னுடைய புத்தி இங்குமங்கும் அலைந்தபொழுது, நான் என்னையே கிள்ளி, ஏன் இவ்விடயங்களை நினைவு செய்கின்றேன் என்று கேட்பதுண்டு. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு தந்தையை மட்டும் நினைவுசெய்ய வேண்டும், ஆனால் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கிறாள். அவள் உங்களை மீண்டும் மீண்டும் குத்துகிறாள். மாயை உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கிறாள். இவ்விதமாக நீங்கள் உங்களுடன் பேச வேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது நிலையங்களைத் திறந்து, உங்களுக்கும் ஏனையோருக்கும் நன்மை செய்ய வேண்டும். பல குழந்தைகள் வினவுகிறார்கள்: பாபா, இன்ன இன்ன இடத்தில் நாங்கள் ஒரு நிலையத்தை ஆரம்பிக்க முடியுமா? தந்தை கூறுகிறார்: நான் அருள்பவர். எனக்கென எதுவும் தேவையில்லை. இக்கட்டடங்கள் போன்றன அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்காகவே. சிவாபாபா உங்களை வைரங்களாக ஆக்குவதற்கு வந்துள்ளார். நீங்கள் எதைச் செய்தாலும், அது உங்களுக்கு மட்டுமே பயன்படுகின்றது. இவர் சிஷ்யர்களைக் கொண்டிருக்கும் ஒரு குரு அல்ல. கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குழந்தைகள் மட்டும் தங்குவதற்கானவை. ஆம், அவற்றைக் கட்டுபவர்கள் இங்கு வரும்பொழுது, அவர்களுக்கு ஒரு புதிய கட்டடத்தில் தங்கிக் கொள்வதற்கான உபசரிப்பு வழங்கப்படுகிறது. சிலர் கூறுகிறார்கள்: நாங்கள் ஏன் புதிய கட்டடத்தில் தங்க வேண்டும்? நான் பழைய கட்டடத்தையே விரும்புகிறேன். நீங்கள் வாழும் அதே விதமாகவே நாங்கள் வாழ்வோம். இது கொடுக்கப்பட்டு விட்டதைப் பற்றிய அகங்காரம் எங்களிடம் கிடையாது. அங்கு பாப்தாதா வசிக்கவில்லை எனில், நாங்கள் ஏன் வசிக்க வேண்டும்? உங்களுடன் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் எந்தளவிற்கு உங்கள் அருகில் இருக்கின்றோமோ, அந்தளவிற்கு நன்றாக இருக்கும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் முயற்சி செய்யும் அளவுக்கேற்ப, சந்தோஷப் பூமியில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். பாரதம் தூய, புண்ணியாத்மாக்களின் பூமியாக இருந்தது என்பதைப் பாரத மக்கள் அறிவார்கள். அங்கு பாவத்தின் பெயர் கூட இருக்கவில்லை. இப்பொழுது அனைவரும் பாவாத்மாவாக ஆகியுள்ளார்கள். இது இராவண இராச்சியம் ஆகும். இராவணன் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. ஒரு கல்பத்தின் பின்னர், மீண்டும் இராவண இராச்சியம் இருக்கும். தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகிறார், இருந்தும் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள இயலாதுள்ளது. ஒவ்வொரு கல்பமும் அதேவிடயமே நடைபெறுகிறது. இது புதியதல்ல. நீங்கள் கண்காட்சிகளை நடத்தும்பொழுது பலரும் வருகிறார்கள். அவர்களிற் பலர் பிரஜைகள் ஆகுவார்கள். வைரங்கள் போன்று ஆகுவதற்குக் காலம் எடுக்கிறது. அவர்கள் பிரஜைகள் ஆகினால் கூட, அதுவும் நல்லதே. இப்பொழுது அனைவருக்கும் கணக்குத் தீர்க்கும் காலமாகும். அனைவருடைய கணக்குகளும் தீர்க்கப்பட்டு வருகின்றன. திறமைச்சித்தி அடைபவர்களைக் கொண்டே எட்டு மணிகளின் மாலை உருவாக்கப்படுகிறது. எட்டு மணிகள் மட்டுமே முதலாவது மாலைக்குள் செல்கிறார்கள். அவர்கள் தண்டனையை அனுபவம் செய்யாமலே தங்கள் கர்மாதீத நிலையை அடைகிறார்கள். பின்னர், 108 மணிகளின் மாலை உள்ளது. அவர்கள் வரிசைக்கிரமமாக இருப்பார்கள். இந்நாடகம் அநாதியாக முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் இதைப் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானித்து, யார் சிறந்த முயற்சிகளைச் செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சில குழந்தைகள் இறுதியில் வந்து தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். இவ்விதமாகத் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், நீங்கள் திறமைச்சித்தி அடைந்து, எட்டு மணிகளின் மாலைக்குள் செல்வது சாத்தியமாகும். ஆம், நீங்கள் முன்னேறிச் செல்கையில், சிலசமயங்களில் தீய சகுனங்கள் இருப்பதும் சாத்தியமே. அனைவரும் எழுச்சி, வீழ்ச்சி என்னும் ஸ்திதிகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். இது ஒரு வருமானம் ஆகும். சிலசமயங்களில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஏனைய சமயங்களில் உங்கள் சந்தோஷம் குறைந்து உள்ளது. மாயையினதும் தீய சகவாசத்தினதும் புயல்கள் உங்களைப் பின்னோக்கித் தள்ளி, உங்கள் சந்தோஷத்தை இழக்கச் செய்கின்றன. நல்ல சகவாசம் உங்களை அக்கரை சேர்க்கிறது என்றும் தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணனின் சகவாசம் உங்களை மூழ்கடிக்கிறது, இராமரின் சகவாசம் உங்களை அக்கரை சேர்க்கிறது. இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றியதால், நீங்கள் அதைப் போன்று ஆகினீர்கள். தேவர்கள் பாவப் பாதையில் வீழ்கிறார்கள். அவர்களுடைய அத்தகைய தீய படங்களை மக்கள் காட்டியுள்ளார்கள். அவை அவர்கள் பாவப் பாதையில் சென்றதற்கான அடையாளங்கள் ஆகும். பாரதத்தில் இராம இராச்சியம் இருந்தது, இப்பொழுது பாரதத்தில் இராவண இராச்சியம் உள்ளது. நீங்கள் இராவண இராச்சியத்தில் 100வீதம் சந்தோஷம் அற்றவர்கள் ஆகுகிறீர்கள். இது ஒரு நாடகமாகும். இந்த ஞானத்தை எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. (பாபாவின் முன்னிலையில் ஒரு மருத்துவ தாதி அமர்ந்திருந்தார்). இக்குழந்தைக்கு பாபா கூறுகிறார்: நீங்கள் ஒரு மருத்துவ தாதி, தொடர்ந்தும் அந்தச் சேவையைச் செய்வதுடன் இந்தச் சேவையையும் செய்யுங்கள். உங்கள் நோயாளிகளுக்கு இந்த ஞானத்தைக் கூறுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதால், 21 பிறவிகளுக்கு எந்த நோயும் இருக்க மாட்டாது. யோகத்தினூடாக நீங்கள் ஆரோக்கியத்தைப் பெறுகிறீர்கள், 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துகொள்வதால், நீங்கள் செல்வத்தைப் பெறுகிறீர்கள். உங்களால் அதிகளவு சேவை செய்ய முடியும், நீங்கள் பலருக்குத் தொடர்ந்தும் நன்மை செய்வீர்கள். இந்த ஆன்மீகச் சேவைக்காக நீங்கள் சம்பாதித்த பணம் அனைத்தையும் பயன்படுத்த முடியும். உண்மையில், நீங்கள் அனைவரும் மருத்துவ தாதிகள்; ஆவீர்கள். தீயவர்களை தேவர்கள் ஆக்குவது ஒரு மருத்துவத் தாதியின் பணி போன்றதே, அல்லவா? தந்தை கூறுகிறார்: தூய்மையற்ற மனிதர்கள் வந்து தங்களைத் தூய்மை ஆக்குமாறு என்னை அழைக்கிறார்கள். நீங்கள் நோயுற்ற மக்களுக்கும் சேவை செய்தால், அவர்கள் உங்களுக்கு அதிகளவு நன்றி கூறுவார்கள். உங்கள் மூலம் அவர்கள் காட்சிகளையும் பெற முடியும். நீங்கள் மிகச்சரியாக யோகத்தில் இணைந்திருந்தால், பெரும் மருத்துவ நிபுணர்களும் வந்து உங்கள் பாதத்தில் வீழ்வார்கள். அதை முயற்சித்துப் பாருங்கள். புத்துணர்ச்சி அடைவதற்கு மேகங்களாகிய நீங்கள் இங்கு வருகிறீர்கள். பின்னர் நீங்கள் சென்று இந்த ஞானத்தை ஏனையோர்கள் மீது பொழிந்து, அவர்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கின்றீர்கள். சில குழந்தைகள் எங்கிருந்து மழை வருகிறது என்பதையேனும் அறியாதுள்ளார்கள். இவர் மழையைப் பொழிபவராகிய இந்திரன் (மழையின் கடவுள்) என்று அவர்கள் நினைக்கின்றார்கள். ஒரு வானவில் என்பது, இந்திரனின் வில் ஆகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சமயநூல்களில் பல்வேறு பொய்க்கதைகள் எழுதப்பட்டுள்ளன. தந்தை கூறுகிறார்: நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதே மீண்டும் இடம்பெறும். நாங்கள் எவரையும் அவதூறு செய்யவில்லை. இந்நாடகம் அநாதியாக, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. அது பக்திமார்க்கத்துக்கு உரியது என்பது புரிந்து கொள்ளப்பட்டது. ஞானம், பக்தி, விருப்பமின்மை என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பழைய உலகில் விருப்பமின்மை உள்ளது. நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு முழு உலகமும் மரணித்துவிடுகிறது. ஓர் ஆத்மா தன்னுடைய சரீரத்தை விட்டுச் செல்லும் பொழுது, அவருக்கு உலகமே மரணித்து விடுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, இக்கல்வியில் கவனயீனமாக இருக்காதீர்கள். அனைத்துமே உங்கள் கல்வியில் தங்கியுள்ளது. சில சட்டநிபுணர்கள் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கிறார்கள், ஏனையோர்களுக்கு அணிவதற்கு ஒரு மேற்சட்டையேனும் கிடையாது. அனைத்துமே கல்வியில் தங்கியுள்ளது. இக்கல்வி மிகவும் இலகுவானது. சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகுங்கள், அதாவது, உங்கள் 84 பிறவிகளின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்து கொள்ளுங்கள். இப்பொழுது விருட்சம் அதன் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது போலவே - அத்திவாரமின்றி, விருட்சத்தின் ஏனைய பாகங்கள் இன்னமும் இருப்பதைப் போலவே - அதேவிதமாக, விருட்சத்தின் அடிமரத்தின் வடிவில் இருந்த ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது இல்லை. இப்பொழுது அனைவருடைய செயல்களிலும் அதர்மமும் அநீதியும் உள்ளன. மனிதர்களால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்தி, சதாகாலமும் உங்களைச் சந்தோஷமாக ஆக்குகிறார். அங்கு ஒருபொழுதும் அகாலமரணம் இருக்காது. அங்கு “இன்ன-இன்னார் மரணித்தார்” என்னும் வார்த்தைகள் இருக்க மாட்டாது. ஆகவே, நீங்கள் பலருக்கும் பாதையைக் காட்டினால், அவர்கள் உங்களிடம் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்று தந்தை உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். சிலருக்கு ஒரு காட்சியைக் காண்பது சாத்தியமாகும். இக்காட்சிகள் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கின்ற இலக்குக்கும் இலட்சியத்துக்கும் உரியவை. நீங்கள் கற்காமல், ஒரு சட்டநிபுணராக முடியாது. ஒரு காட்சியைக் காண்பதால் நீங்கள் முக்தி அடைகிறீர்கள் என்பதல்ல. மீராவுக்கு ஒரு காட்சி கிடைத்தது, ஆனால் அவர் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்லவில்லை. பக்தர்கள் தீவிரமாகப் பக்தி செய்த பின்னர் ஒரு காட்சியைப் பெறுகிறார்கள், இங்கோ தீவிரமாக நினைவுசெய்தலே உள்ளது. சந்நியாசிகள் ஒளித் தத்துவத்தையும் ஐந்து தத்துவங்களையும் பற்றிய ஞானம் உடையவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் ஒளித் தத்துவத்தில் இரண்டறக் கலக்க விரும்புகிறார்கள். எவ்வாறாயினும், ஒளித் தத்துவம் பரமாத்மா அல்ல. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் தொடர்ந்தும் உங்கள் ஜீவனோபாயத்துக்காக உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம், ஆனால் நீங்கள் இப்பொழுது உங்களை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகக் கருத வேண்டும். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். உங்கள் பற்றுக்கள் அனைத்தும் துண்டிக்கப்படும். எதையாவது பெறுவதால், பாபா என்ன செய்வார்? இவர் அனைத்தையும் துறந்தார். அவருக்குத் தனக்கென ஒரு வீட்டையோ அல்லது ஒரு மாளிகையையோ கட்ட வேண்டிய அவசியமில்லை. இன்னமும் பல குழந்தைகள் வரவிருக்கும் காரணத்தால், இக்கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அபு வீதியிலிருந்து இங்குவரை மக்களின் வரிசை இருக்கும். உங்களின் செல்வாக்கு இப்பொழுது பரவியிருப்பின், அவற்றைக் கையாள முயற்சி செய்கையில் உங்களுக்குத் தலைவலி ஏற்பட்டிருக்கும். ஒரு பிரமுகர் வரும்பொழுது, ஒரு பெருங் கூட்டம் சேர்கிறது. இறுதியிலேயே உங்கள் தாக்கம் பரவும், இப்பொழுது அல்ல. தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதற்குப் பயிற்சி செய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். அத்தகைய நினைவில் இருக்கையில் நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்க வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, ஒரு சரீரத்தை நீக்கிப் புதியதொன்றைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கு, அதிகளவு சரீர உணர்வு உள்ளது. அத்தகையதொரு வேறுபாடுள்ளது. நீங்கள் இக்கருத்துக்கள் அனைத்தையும் எழுதிக் கொள்வதுடன் ஏனையோரும் அவற்றை எழுதிக் கொள்ளும்படி செய்ய வேண்டும். நீங்கள் ஏனையோர்களை உங்களைப் போன்று வைரங்கள் ஆக்கவும் வேண்டும். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். ஒரு புனிதரோ அல்லது ஒரு மகாத்மாவோ அன்றி, தந்தையே இதை விளங்கப்படுத்துகிறார். இந்த ஞானம் மிகவும் களிப்பூட்டுவது, நீங்கள் அதை மிகவும் நன்றாகக் கிரகிக்க வேண்டும். நீங்கள் தந்தை கூறுவதைச் செவிமடுத்துப் பின்னர் நீங்கள் கேட்டவற்றை அங்கேயே விட்டுவிடுகிறீர்கள் என்பதல்ல. நீங்கள் பாடலிலும் கேட்டீர்கள்: எங்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். முன்னர், நீங்கள் இவ்விடயங்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளதால், நீங்கள் அவற்றைப் புரிந்துகொள்கிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருபொழுதும் கல்வியில் கவனயீனமானமாக இருக்காதீர்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகுங்கள். ஏனையோரை வைரங்கள் போன்று ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.2. இந்த உண்மை வருமானத்தைச் சம்பாதித்து, அதை ஏனையோர்களும் செய்யுமாறு தூண்டுங்கள். உங்கள் பழைய பொருட்கள் அனைத்தையும் பரிமாற்றம் செய்யுங்கள். தீய சகவாசத்தைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு கணப் பார்வையால் பக்தர்களை அப்பால் எடுத்துச் செல்லும் உலகின் ஒளிகளாகக் காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவீர்களாக.உலகம் முழுவதும், உலகின் ஒளிகள் ஆகுகின்ற உங்களின் கண்களில் இருந்து திருஷ்டியைப் பெறக் காத்திருக்கிறார்கள். உலகின் ஒளிகளான நீங்கள் உங்களின் சம்பூரணமான, முழுமை ஸ்திதியை அடையும்போது, அதாவது, உங்களின் முழுமைக் கண்களைத் திறக்கும்போது, உலக மாற்றமானது ஒரு விநாடியில் இடம்பெறும். காட்சிகளை அருளும் ரூபமான ஆத்மாக்களான உங்களால் பக்தர்களை ஒரு கணப்பார்வையால் அப்பால் எடுத்துச் செல்ல முடியும். ஒரு கணப்பார்வையில் அப்பால் எடுத்து செல்ல வேண்டி, ஒரு நீண்ட வரிசை இருக்கும். ஆகவே, உங்களின் முழுமைக் கண்கள் திறந்திருக்கட்டும். உங்களின் கண்களைக் கசக்குவதை நிறுத்துங்கள். மூச்சுத் திணறுவதை நிறுத்துங்கள். அத்துடன் உங்களின் எண்ணங்களில் தூங்கி விழுவதை நிறுத்துங்கள். உங்களால் காட்சிகளை அருளும் ரூபங்கள் ஆகமுடியும்.
சுலோகம்:
தூய, சுத்தமான சுபாவம் பணிவின் அடையாளம் ஆகும். தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆகுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உங்களின் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்துவதற்கு, சதா ‘மன்மனாபவ’ என்ற மந்திரத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். நடைமுறையில் ‘மன்மனாபவ’ என்ற மந்திரத்தைக் கிரகிப்பதன் மூலம் உங்களால் முதல் இலக்கத்தைக் கோர முடியும். மனதில் ஒருமுகப்படுத்தலைக் கொண்டிருப்பதெனில், ஒரேயொருவரின் நினைவில் இருத்தல், ஏகாந்தத்தில் ஒருமுகப்பட்டிருத்தல் என்று அர்த்தம். நீங்கள் அகநோக்குடையவராகி, சகல கவர்ச்சிகளின் அதிர்வலைகளில் இருந்தும் விடுபட்டிருக்கும்போது, உங்களால் உங்களின் மனதால் முழு உலகிற்கும் சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யக்கூடியதாக இருக்கும்.