28.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இந்தச் சங்கமயுகம் எவ்வாறு ஏறும் யுகமாக இருக்கிறது, பின்னர் சத்தியயுகத்தில் இருந்து கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன என்னும் நாடகத்தின் மறைமுகமான இரகசியத்தை அறிவீர்கள்.
கேள்வி:
அதிமேன்மையான சேவை என்ன? யாரால் அச்சேவையைச் செய்ய முடியும்?பதில்:
பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதும், பிச்சைக்காரர்களை இளவரசர்கள் ஆக்குவதும், தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதுமே அதிமேன்மையான சேவையாகும். ஒரு தந்தையைத் தவிர எவராலும் அத்தகைய சேவையைச் செய்ய முடியாது. தந்தை அத்தகைய மேன்மையான சேவையைச் செய்த காரணத்தினால், குழந்தைகள் அவருடைய கௌரவத்தைப் பேணுகிறார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் அவருக்கு சோமநாதர் ஆலயத்தைக் கட்டி, அவரைப் பூஜிக்கிறீர்கள்.பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆத்மா மறைமுகமானவர், சரீரம் கண்ணுக்குப் புலப்படுகிறது, ஆதலால், ஓர் ஆத்மாவை இக்கண்களால் காண முடியாது; அவர் மறைமுகமானவர் ஆவார். ஆத்மா நிச்சயமாக இருக்கிறார், ஆனால் சரீரத்தினால் மறைக்கப்பட்டுள்ளார். இதனாலேயே ஆத்மா மறைமுகமானவர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆத்மாவே கூறுகிறார்: நான் அசரீரியானவர். நான் இங்கு பௌதீகத்தினுள் வந்து, மறைமுகமானவர் ஆகுகிறேன். அசரீரி உலகம் ஆத்மாக்களினுடையது ஆகும். அங்கு மறைமுகமான எவற்றினதும் கேள்வியே கிடையாது. பரமாத்மாவாகிய பரமதந்தையும் அங்கேயே வசிக்கிறார். அவர் அதிமேன்மையான, பரம் என்று அழைக்கப்படுகிறார். பரமாத்மாவாகிய பரமதந்தையே அப்பாற்பட்டு வாழ்பவர் ஆவார். தந்தை கூறுகிறார்: நீங்கள் மறைமுகமானவர்களாக இருப்பதைப் போன்று, நானும் ஒரு மறைமுகமான வழியில் கீழிறங்கி வர வேண்டும். நான் கருப்பை என்னும் சிறையில் பிரவேசிப்பதில்லை. என்னுடைய பெயர் எப்பொழுதும் சிவன் என்பதாக மாத்திரமே இருந்து வருகிறது. நான் இவரில் பிரவேசிக்கும் பொழுது, என்னுடைய பெயர் மாறுவதில்லை. இந்த ஆத்மாவின் சரீரத்தின் பெயர் மாற்றம் அடைகிறது. நான் எப்பொழுதும், ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய, சிவன் என்றே அழைக்கப்படுகிறேன். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களில் மறைமுகமானவராக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சரீரங்களினூடாகச் செயல்களைப் புரிகிறீர்கள். நானும் மறைமுகமானவர் ஆவேன். எவ்வாறு ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்தினால் மறைக்கப்பட்டுள்ளேன் என்னும் ஞானத்தை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பெறுகிறீர்கள். ஆத்மாவாகிய நான் மறைமுகமானவர், சரீரம் “புலப்படுவது” ஆகும். நானும் சரீரமற்றவர் ஆவேன். மறைமுகமான தந்தையும் இச்சரீரத்தினூடாகப் பேசுகிறார். நீங்களும் மறைமுகமானவர்கள், உங்கள் உங்களின் சரீரங்களினூடாகச் செவிமடுக்கிறீர்கள். பாபா வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை பாரதத்தை மீண்டும் ஒருமுறை ஏழ்மையில் இருந்து செல்வம்மிக்கதாக ஆக்குவதற்கு வருகிறார். உங்கள் பாரதம் ஏழையாக உள்ளது என்பதை நீங்கள் கூறுவீர்கள். அனைவரும் இதனை அறிவார்கள், ஆனால் எப்பொழுது அல்லது எவ்வாறு எங்கள் பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது என்பதை எவரும் அறியார். உங்கள் பாரதம் மிகவும் செல்வம் மிக்கதாக இருந்தது என்னும் பெரும் போதை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. அங்கு துன்பத்தின் குறிப்பே கிடையாது. சத்தியயுகத்தில் வேறு சமயங்கள் இருக்கவில்லை. அங்கு ஒரு தேவ தர்மம் மாத்திரமே இருந்தது என்பதை எவரும் அறியார். உலகின் வரலாறையும், புவியியலையும் எவரும் அறியார். உங்கள் பாரதம் மிகவும் செல்வம் மிக்கதாக இருந்தது என்பதையும், அது இப்பொழுது மிகவும் ஏழையாகிவிட்டது என்பதையும் நீங்கள் இப்பொழுது மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். அதனை மீண்டும் ஒருமுறை செல்வம் மிக்கதாக ஆக்குவதற்குத் தந்தை இப்பொழுது வந்துவிட்டார். அது தேவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, சத்தியயுகத்தில் பாரதம் மிகவும் செல்வம் மிக்கதாக இருந்தது. அந்த இராச்சியம் எங்கு சென்றது? இது எவருக்கும் தெரியாது. தங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது என்றே ரிஷிகளும், முனிகளும் கூடக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: சத்தியயுகத்துத் தேவர்களுக்குப் படைப்பவரினதோ அல்லது படைப்பினதோ ஞானம் இருந்ததில்லை. அவர்கள் ஆரம்பம், மத்தி அல்லது இறுதியைப் பற்றி அறியார்கள். தாங்கள் ஏணியில் கீழிறங்கி வந்து, ஆழ் நரகத்துக்குச் செல்வார்கள் என்னும் ஞானம் அவர்களுக்கு இருந்திருந்தால், அவர்கள் இராச்சியத்தின் சந்தோஷத்தை மேலும் அனுபவம் செய்ய மாட்டார்கள். அவர்கள் அதனையிட்டுக் கரிசனை கொண்டிருப்பார்கள். எவ்வாறு தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவது என்பதைப் பற்றியே நீங்கள் இப்பொழுது அக்கறைப்படுகிறீர்கள். எவ்வாறு ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரி உலகில் வசித்தோம், பின்னர் எவ்வாறு நாங்கள் சந்தோஷ தாமத்துக்குள் சென்றோம் என்னும் ஞானமும் உங்களுக்கு உள்ளது. நாங்கள் இப்பொழுது மேலேறும் ஸ்திதியில் இருக்கிறோம். இதுவே 84 பிறவிகளின் ஏணியாகும். இடையில் என்ன நடைபெறுகிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அனைவருமே சத்தியயுகத்துக்குச் செல்வார்கள் என்றில்லை. இந்த நாடகத்துக்கேற்ப, நடிகர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக வந்து, தங்களுக்குரிய நேரத்தில் தங்கள் சொந்தப் பாகங்களை நடிப்பார்கள். யார் ஏழைகளின் பிரபு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். உலகம் இதனை அறியாது. இறுதியில் அந்த நாள் வந்துவிட்டது என்பதை நீங்களும் பாடலில் கேட்டீர்கள். அவை அனைத்தும் பக்தியாகும். எப்பொழுது கடவுள் வந்து உங்களைப் பக்தி மார்க்கத்தில் இருந்து விடுவித்து, உங்களைச் சத்கதிக்குள் அழைத்துச் செல்கிறார் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். இராம இராச்சியம் என்று அழைக்கப்படுவது எது என்பதையும், இராவண இராச்சியம் என அழைக்கப்படுவது எது என்பதையும் மனிதர்கள் அறியார்கள். பாபா மீண்டும் ஒருமுறை இச்சரீரத்தினுள் வந்துவிட்டார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆகவே சிவன் நிச்சயமாக வருகிறார். தான் ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தில் பிரவேசிக்கிறார் என அவர் கூறுவதில்லை. தந்தை கூறுகிறார்: ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா 84 பிறவிகளை எடுத்துவிட்டார். முதலாம் இலக்கமாக இருந்தவர், இங்கு இப்பொழுது, இறுதியில் இருக்கிறார், உங்களுக்கும் அதுவே பொருந்துகிறது. நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். நான் வந்து நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை அனுபவம் செய்கிறீர்கள் என்பதைக் கூறுகிறேன். இந்நேரத்தில், எவருமே தன்னைத் தேவ தர்மத்துக்கு உரியவராகக் கருதுவதில்லை, ஏனெனில் அவர்கள் சத்தியயுகத்தை மிகவும் தொலைவாகக் குறிப்பிட்டு விட்டார்கள். அவர்கள் சக்கரத்தின் ஆயுட்காலத்தை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என எழுதிவிட்டார்கள். உண்மையில், நாடகத்தின் வரலாறு மிகவும் குறுகியதாகும். சில மதங்களுக்கு 500 வருடங்களுக்குரிய வரலாறே உள்ளது, ஏனையோருக்கு 2500 வருடங்களின் வரலாறே உள்ளது. உங்களுடைய வரலாறு 5000 வருடங்களுக்கு உரியதாகும். தேவ தர்மத்துக்கு உரியவர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள். ஏனைய சமயத்தவர்களோ, அதன்பின்னரே வருவார்கள். தேவ தர்மத்துக்கு உரியவர்கள் ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். நாடகத்துக்கேற்ப, அவர்கள் மீண்டும் அதேவழியில் மதம் மாற்றப்பட்டு, தங்கள் சொந்த தர்மத்துக்கு திரும்புவார்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாபாவே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எனவே, நாங்கள் ஏன் சுவர்க்கத்தில் இருக்கக்கூடாது? நாங்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருவோம். அவர்கள் இதனைக் கூறும்பொழுது, அவர்கள் இந்தத் தர்மத்துக்கு உரியவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. இந்தத் தர்மத்துக்கு உரியவர்களாக இல்லாதவர்கள் இங்கு வர மாட்டார்கள். அவர்கள் கூறுவார்கள்: எங்களுடையது அல்லாத ஒரு தர்மத்துக்கு நாங்கள் ஏன் செல்ல வேண்டும்? நீங்கள் சத்தியயுகத்துப் புதிய உலகில் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்தீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அங்கு தங்கத்தினாலான மாளிகைகள் இருந்தன. சோமநாதர் ஆலயத்தில் அதிகளவு தங்கம் இருந்தது. அதைப் போன்று வேறு ஆலயங்கள் இருந்தில்லை. அதில் பல வைரங்களும் இரத்தினங்களும் இருந்தன. பௌத்தர்கள் போன்றோர் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டிருக்கவில்லை. குழந்தைகளாகிய உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்கிய தந்தைக்கு நீங்கள் அதிகளவு கௌரவத்தைக் கொடுத்தீர்கள். ஏதாவது நல்லதைச் செய்து பின்னர் சரீரத்தை விட்டு நீங்கியவர்களுக்கே கௌரவம் அளிக்கப்படுகிறது. அனைத்திலும் அதிசிறந்த வேலையைச் செய்து முடித்ததும், தூய்மையாக்குபவராகிய தந்தை சென்றுவிடுகிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். எல்லையற்ற தந்தை வந்து அதிமேன்மையான சேவையைச் செய்கிறார் என ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள். அவர் எங்களைப் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்களாக, பரம ஏழைகளில் இருந்து அரசர்களாக ஆக்குகிறார். பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குபவரை எவரும் கௌரவிப்பதில்லை. பின்னர் கொள்ளை இடப்பட்ட, சோமநாதர் ஆலயமே அதிமேன்மையான ஆலயமாக நினைவு கூரப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்ஷ்மி நாராயணன் ஆலயங்களை எவரும் எப்பொழுதுமே கொள்ளை இட்டதில்லை. சோமநாதர் ஆலயமே கொள்ளை இடப்பட்டு வந்தது. அவர்கள் பக்திமார்க்கத்தில் மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள். அரசர்களும் வரிசைக்கிரமமானவர்கள் ஆவார்கள். குறைந்த அந்தஸ்து உடையவர்கள் உயர்ந்த அந்தஸ்தை உடையவர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார்கள். அவர்கள் சபையில் வரிசைக்கிரமமாக அமர்கிறார்கள். பாபா அனுபவம் வாய்ந்தவர் ஆவார். இங்கேயுள்ள சபைகள் தூய்மையற்ற அரசர்களுக்கு உரியவையாகும். தூய அரசர்களுக்கு உரிய சபை எதைப் போன்று இருக்கும்? அவர்களுக்கு அதிகளவு செல்வம் இருப்பதனால், அவர்களுடைய வீடுகளும் மிகவும் அழகியவையாக இருக்கும். பாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதையும், சுவர்க்கத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நாங்கள் சுவர்க்கத்தின் சக்கரவர்த்திகளும் சக்கரவர்த்தினிகளும் ஆகிப் பின்னர் வீழ்கிறோம். நாங்களே பின்னர் சிவபாபாவை முதலாவதாகப் பூஜிப்பவர்கள் ஆகுகிறோம். எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்கியவரை நாங்கள் பூஜிப்போம். அவர் எங்களை மிகவும் செல்வந்தர்களாக ஆக்குகிறார். பாரதம் இப்பொழுது மிகவும் ஏழ்மையில் உள்ளது. முன்னர் அது ஏழ்மையில் இருக்கவில்லை. மக்கள் பெரும் சந்தோஷத்தில் வசித்தனர். அந்நாட்களில் 500 ரூபாய்களுக்கு வாங்கக்கூடிய நிலத்தை இப்பொழுது 5000 ரூபாய்களுக்கேனும் வாங்க முடியாது. அங்கு, நிலத்துக்குப் பெறுமதி இல்லை, ஏனெனில் அனைவரும் அவர் விரும்பியளவுக்கு எடுத்துக் கொள்ள முடியும். எங்கும் பெருமளவு நிலம் எஞ்சியிருக்கும். உங்கள் மாளிகைகள் இனிமையான ஆற்றங்கரைகளில் அமைந்திருக்கும். அங்கு மக்கள் குறைந்தளவினரே இருப்பார்கள். இயற்கை உங்களுக்குச் சேவை செய்யும், நீங்கள் மிகவும் அழகிய மலர்களையும், பழங்களையும் காண்பீர்கள். நீங்கள் இப்பொழுது அதிகளவு முயற்சியைச் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், வறட்சி ஏற்படும்பொழுது, உங்களுக்குப் போதுமானளவு உணவு கூட இருப்பதில்லை. நீங்கள் இப்பாடலைக் கேட்கும்பொழுது, உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும். தந்தை ஏழைகளின் பிரபு என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். அவர் யாரைச் செல்வந்தர்கள் ஆக்குகிறார்? நிச்சயமாக இங்கு வருபவர்களையே அவர் செல்வந்தர்களாக ஆக்குகிறார். தூய்மையானவர்களிலிருந்து தூய்மை அற்றவர்கள் ஆகுவதற்கு உங்களுக்கு 5000 வருடங்கள் எடுத்துள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா இப்பொழுது உங்களை உடனடியாகவே தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குகிறார். அவர் உங்களை அதிமேன்மையானவர்கள் ஆக்குகிறார். நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவன். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்களே உலக அதிபதிகள். ஒரு மகன் பிறந்த கணத்திலேயே வாரிசு ஆகுகிறார். அவர்களுக்கு அதிகளவு சந்தோஷம் ஏற்;படுகிறது. எவ்வாறாயினும், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளதைப் பார்க்கும் பொழுது, அவர்களுடைய முகங்கள் வெளிறிப் போகின்றன. இங்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் புத்திரர்கள் ஆவீர்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகினீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பாபா உங்களை அவ்வாறு ஆக்கினார். மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் எப்பொழுது வந்தார் என்பதை அவர்கள் அறியார்கள். அது எப்பொழுது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது என்பதை அவர்கள் அறியார்கள். உண்மையில், பாரதத்தின் சனத்தொகையே பெரிதாக இருக்க வேண்டும். பாரதத்தின் நிலமும் பெரிதாகவே இருக்க வேண்டும். ஆயுட்காலம் நூறாயிரக்கணக்கான வருடங்களாக இருந்திருப்பின், பெருமளவு நிலம் தேவைப்பட்டிருக்கும். முழு உலகின் நிலமும் போதுமானதாக இருக்காது. நூறாயிரக்கணக்கான வருடங்களில் பல மக்கள் பிறந்திருப்பார்கள், அங்கு எண்ணற்ற மக்கள் இருப்பார்கள். இப்பொழுது அத்தனை பேர் இருப்பதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மக்கள் இவ்விடயங்களைக் கேள்விப்படும் பொழுது, அவர்கள் முன்னர் இவற்றைக் கேட்டதுமில்லை, சமயநூல்களில் அவற்றைப் பற்றி வாசித்ததும் இல்லை, அவை அற்புதமான விடயங்கள் என அவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் முழுச் சக்கரத்தின் இந்த ஞானம் உள்ளது. இவர் தனது பல பிறவிகளின் இறுதியில் இப்பொழுது ஒரு தூய்மையற்ற ஆத்மாவாக இருக்கிறார். சதோபிரதானாக இருந்தவர் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டார், அவர் மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்தக் கற்பித்தல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆத்மாக்களான நீங்கள் உங்களின் சரீரத்தினூடாகச் செவிமடுக்கிறீர்கள். ஆத்மாக்களான நீங்கள் அச்சரீரத்தினூடாகச் செவிமடுக்கின்ற காரணத்தினால், உங்களின் சரீரங்கள் அசைகின்றன. உண்மையில், ஆத்மாக்களாகிய நாங்கள் 84 பிறவிகளை எடுத்துவிட்டோம். நாங்கள் நிச்சயமாக 84 பெற்றோர்களைப் பெற்றுள்ளோம். இக்கணிப்பீடு உள்ளது. நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதையும், குறைந்த பிறவிகளை எடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உங்கள் புத்திகளில் பிரவேசிக்கிறது. குறைந்தளவினதும், அதிகளவினதும் கணக்கு இருக்கும். தந்தை இங்கே அமர்ந்திருந்து அவர்கள் சமயநூல்களில் எழுதியுள்ள விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். குறைந்தபட்சம், உங்களையிட்டு, நீங்கள் 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கிறீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். என்னையிட்டு, நான் எண்ணற்ற எண்ணிக்கையான, ஒரு முடிவற்ற எண்ணிக்கையான பிறவிகளை எடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்! நான் ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பதாகவும், அல்லது அவர்கள் எங்கு பார்ப்பினும் ஸ்ரீகிருஷ்ணரை மாத்திரமே பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் சர்வவியாபி என மதுரையிலும் பிருந்தாவனத்திலும் அவர்கள் கூறுகிறார்கள். இராதையில் நம்பிக்கை உடையவர்கள் தாங்கள் எங்கும் இராதையை மாத்திரமே பார்ப்பதாகக் கூறுகிறார்கள். தாங்கள் இராதா சுவாமி என்று அவர்கள் கூறுகிறார்கள். கிருஷ்ண சுவாமிகள் வேறுபட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் இராதையில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் எங்கு பார்ப்பினும், இராதையை மாத்திரம் பார்க்கிறார்கள். “நீங்களும் இராதை, நானும் இராதை”. இப்பொழுது தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: நான் உண்மையிலேயே ஏழைகளின் பிரபு ஆவேன். பாரதமே அனைத்திலும் செல்வம் மிக்கதாக இருந்தது. அது இப்பொழுது அனைத்திலும் ஏழையாகி விட்டது, இதனாலேயே நான் பாரதத்தில் வரவேண்டும். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதில் சிறிதளவு வித்தியாசம் கூட இருக்க முடியாது. இது மிகப்பெரியதொரு நாடகமாகும். படமாக்கப்பட்டுள்ள நாடகம் மீண்டும் மீண்டும் அதேபோன்று நடைபெறும். நீங்கள் நாடகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நாடகம் என்றால் நாடகமே! ஏனைய நாடகங்கள் எல்லைக்கு உட்பட்டவை, ஆனால் இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். அதன் ஆரம்பம், மத்தி அல்லது இறுதியை எவரும் அறியார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அன்றி, அசரீரியான கடவுளே ஏழைகளின் பிரபு என்று அவர்கள் நம்புவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் ஒரு செல்வந்த இளவரசராக ஆகுகிறார். கடவுளுக்குத் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இருப்பதில்லை. அவர் வந்து குழந்தைகளாகிய உங்களைச் செல்வந்தர்களாக ஆக்குகிறார். அவர் உங்களுக்கு இராஜயோகத்தின் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். அம்மக்கள் கற்பதனால் சட்டநிபுணர்கள் போன்றோர் ஆகிப் பின்னர் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். இப்பொழுதும் தந்தையும் உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் எதிர்காலத்தில் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகிறீர்கள். நீங்கள் பிறவி எடுக்கிறீர்கள். கடலின் அடியிலிருந்து சுவர்க்கம் வெளிப்பட்டது என்பதல்ல. ஸ்ரீகிருஷ்ணரும் பிறவி எடுத்தார். அசுரனாகிய, கம்சனின் பூமி, அந்நேரத்தில் இருப்பதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் அதிகளவுக்குப் புகழப்படுகிறது. அவருடைய தந்தையின் பெயரின் குறிப்பே கிடையாது. அவருடைய தந்தை எங்கே? நிச்சயமாக ஸ்ரீகிருஷ்ணர் ஓர் அரசரின் மகனாகவே இருப்பார். அவர் ஒரு பேரரசருக்குப் பிறப்பார். எவ்வாறாயினும், அந்த அரசர் தூய்மை அற்றவராகவே இருந்து வந்த காரணத்தினால் அவருடைய பெயர் அந்தளவுக்குக் குறிப்பிடப்படுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் பொழுது, அந்நேரத்தில் மிகச்சொற்ப தூய்மையற்ற மக்களே இருக்கிறார்கள். அவர்கள் (தூய்மையற்றவர்கள்) முழுமையாகவே முடிவடையும் பொழுது, அவர் சிம்மாசனத்தில் அமர்கிறார். அவர் தனது இராச்சியத்தைக் கோருகிறார், அப்பொழுது அவருடைய சகாப்தம் (யுகம்) ஆரம்பமாகும். இலக்ஷ்மி நாராயணனுடன் சகாப்தம் ஆரம்பம் ஆகுகிறது. நீங்கள் முழுக் கணக்கையும் எழுதுகிறீர்கள். இவருடைய இராச்சியம் இந்தளவு கால எல்லைக்கு நீடிக்கிறது, அவருடைய இராச்சியம் அந்தளவு கால எல்லைக்கு நீடிக்கிறது. சக்கரத்தின் ஆயுட்காலம் அதனை விட நீண்டதாக இருக்க முடியாது என்பதை மக்களால் அதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். 5000 வருடங்களுக்கான முழுக் கணக்கும் உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியில் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கொண்டிருக்கும்; அதேவேளை, சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சதோபிரதான் ஆகவேண்டும் என்னும் ஓர் அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள்.2. உங்கள் புத்தியில் இந்த எல்லையற்ற நாடகத்தை வைத்திருந்து, முடிவற்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். தந்தைக்குச் சமமான கௌரவத்தை அடைவதற்கு, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உரிமைகளையும் உணர்ந்தவராக இருப்பதன் மூலம் பேறுகளின் சொரூபமாகி, சகல சக்திகளையும் அனுபவம் செய்வீர்களாக.உங்களின் புத்தியானது சதா ஒரேயொரு தந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் சகல சக்திகள் என்ற ஆஸ்தியை உரிமையாகப் பெற்றுக் கொள்வீர்கள். தங்களை உரிமையுள்ள ஒருவராகக் கருதியவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்பவர்கள், எதையும் சொல்ல வேண்டிய அல்லது கேட்க வேண்டிய தேவையில்லை. சகல உரிமைகளையும் கொண்டுள்ள விழிப்புணர்வானது, சகல சக்திகளையும் அடைந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். எனவே, சகல சக்திகளும் உங்களின் பிறப்புரிமை என்ற போதையைக் கொண்டிருங்கள். சகல உரிமைகளையும் கொண்டவராகத் தொடர்ந்து செயல்படுங்கள். அப்போது எந்தவொரு தங்கி இருத்தலும் முடிந்துவிடும்.
சுலோகம்:
உங்களைத் தூய்மை ஆக்குவதுடன், பஞ்சபூதங்களையும் தூய்மை ஆக்குவது என்றால் சம்பூரணமாக பற்றில் இருந்து விடுபட்டு இருப்பதாகும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
உங்களின் தூய்மையின் ஒழுக்கம் பலமாக இருந்தால், உங்களால் பற்று, பொறாமை, கோபம் என்பவற்றில் இருந்து விடுபட முடியும். எரிச்சல் படுவதையும் கொண்டிராதீர்கள். எந்தவொரு விளைவிற்கும் பற்று வைத்திராதீர்கள் - இதுதான் நிச்சயமாக நடக்க வேண்டும். யாராவது சுயநலத்துடன் அல்லது பொறாமையுடன் பேசினால், அவரின் ஆசை நிறைவேறா விட்டால் கோபம் ஏற்படும். ஆகவே, உங்களின் தூய்மை எனும் தூணைப் பலமானது ஆக்குங்கள். உங்களின் தூண் ஒரு வெளிச்சவீட்டைப் போல் செயல்படும்.