28.09.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.02.2007     Om Shanti     Madhuban


கவனக்குறைவு, சோம்பேறித்தனம் அல்லது சாக்குப் போக்குகள் என்ற நித்திரையில் இருந்து விழித்திருப்பதே சிவராத்திரியின் உண்மையான ஜாக்ரன் ஆகும்.


இன்று, பாப்தாதா குறிப்பாக எங்கும் உள்ள, இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த அதிகபட்ச அதியன்பிற்குரிய, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். ரூபமற்ற தந்தை குழந்தைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். நீங்கள் எல்லோரும் குறிப்பாக இந்தத் தனித்துவமான பிறந்த நாளைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? கல்பம் முழுவதிலும், வேறு எவராலும் இந்தப் பிறந்த நாளைக் கொண்டிருக்க முடியாது. ஒரே நாளில் தந்தையும் குழந்தைகளும் பிறந்த நாளைக் கொண்டிருப்பது என்பதை நீங்கள் ஒருபோதும் கேட்டிருக்க மாட்டீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட வந்துள்ளீர்களா அல்லது குழந்தைகளின் பிறந்த நாளையும் கொண்டாட வந்துள்ளீர்களா? ஏனென்றால், தந்தையான இறைவனும் இறை குழந்தைகளும் கல்பம் முழுவதும் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் பிறந்தநாட்களும் ஒரே நாளில் உள்ளன. தந்தை மட்டும் தனித்து உலக மாற்றத்திற்கான பணியைச் செய்யப் போவதில்லை. அவர் தனது குழந்தைகளுடனேயே அதைச் செய்ய விரும்புகிறார். இந்தச் சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் ஒன்றாக இருக்கும் அலௌகீக அன்பையும் சகபாடியாக இருக்கும் அன்பையும் அனுபவம் செய்கிறீர்கள். தந்தைக்கும் குழந்தைகளுக்கும் ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பு உள்ளது. அதனால் அவர்களின் பிறந்தநாள் ஒரேநாளில் உள்ளது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் தனியே வசிக்கிறீர்களா அல்லது தந்தையுடன் வசிக்கிறீர்களா? ஒவ்வொரு குழந்தையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ‘நான் தந்தையுடன் ஒன்றிணைந்து இருக்கிறேன்’ எனச் சொல்கிறார். நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள்தானே? நீங்கள் தனியே வசிக்கவில்லை அல்லவா? உங்களின் பிறந்தநாள் ஒன்றாக உள்ளது. நீங்கள் ஒன்றாக வாழ்கிறீர்கள். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய சத்தியம் என்ன? நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள், நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள், உங்களின் இனிய வீட்டுக்கு ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள். வேறு எந்தத் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே இத்தகைய அன்பை நீங்கள் கண்டுள்ளீர்களா? நீங்கள் எத்தகைய குழந்தையாக இருந்தாலும், நீங்கள் எங்கே இருந்தாலும் அல்லது எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்கள் தந்தையுடனேயே இருக்கிறீர்கள். அத்துடன் தந்தையுடனேயே வீட்டுக்குச் செல்லப் போகின்றீர்கள். எனவே, நீங்கள் பிறந்தநாட்கள் எல்லாவற்றிலும் தனித்துவமானதும் அதியழகானதுமான பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்து நீங்கள் கொண்டாடினாலென்ன, இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ இருந்து கொண்டாடினாலென்ன, நீங்கள் எல்லோரும் ஒரே வேளையில் ஒன்றாக இருந்து கொண்டாடுகிறீர்கள்.

எங்கும் உள்ள குழந்தைகள், மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தமது இதயங்களில் ‘ஆஹா பாபா! ஆஹா பாபா! ஆஹா இந்தப் பிறந்தநாள்!’ என்ற பாடலை எப்படிப் பாடுகிறார்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். பாபா ஆளியைப் போட்டதும், அவரால் எங்கும் உள்ளவர்களின் ஒலியை, அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் மிக்க ஒலியை அவரின் காதுகளில் கேட்கக்கூடியதாக உள்ளது. குழந்தைகளான உங்கள் எல்லோருடைய உற்சாகத்தையும் பார்க்கும்போது, உங்களின் தெய்வீகப் பிறந்தநாளுக்காக பாப்தாதா உங்களுக்கு கோடானு கோடி மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். உண்மையில், உற்சவம் (உற்சவ்) என்றால் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் (உற்சாஹ்) இருத்தல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் எல்லோரும் உற்சாகத்துடன் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள். பக்தர்கள் அதற்கு சிவராத்திரி என்ற பெயரைக் கொடுத்துள்ளார்கள்.

இன்று, இந்தத் தனித்துவமான பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பிரதி செய்த அந்த பக்த ஆத்மாவிற்கு (துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் சிவ வழிபாட்டை ஆரம்பித்தவர்) பாப்தாதா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் இந்த ஞானத்துடனும் அன்புடனும் கொண்டாடினீர்கள். ஆனால் பக்த ஆத்மாக்களோ நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கொண்டாடினார்கள். அவர் உங்களை நன்றாகப் பிரதி செய்துள்ளார். எனவே, இன்று, பாப்தாதா அந்தக் குழந்தைக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். ஏனென்றால், அவர் பிரதி செய்வதில் நல்லதொரு பாகத்தை நடித்துள்ளார். ஒவ்வொரு விடயத்திலும் அவர்கள் எப்படிப் பிரதி செய்துள்ளார்கள் எனப் பாருங்கள். பிரதி செய்வதற்கும் விவேகம் தேவை. பிரதானமான விடயம் என்னவென்றால், இந்தத் தினத்தில் பக்தர்களும் ஒரு விரதம் இருக்கிறார்கள். அவர்கள் உணவிலும் பானத்திலும் விரதம் இருக்கிறார்கள். நம்பிக்கையால் அவர்கள் தமது மனோபாவத்தை மேன்மை ஆக்குவதற்கான சத்தியத்தைச் செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் என்ன சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்? நீங்கள் ஒரு தடவை மட்டுமே சத்தியம் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தச் சத்தியத்தைச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் ஒரு தடவை மட்டுமே இந்தத் தூய்மைக்கான சத்தியத்தைச் செய்தீர்கள். நீங்கள் எல்லோரும் தூய்மைக்கான சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? நீங்கள் உறுதியான ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? உறுதியான தூய்மைக்கான சத்தியத்தைச் செய்துள்ளவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உறுதியானது. சிறிதளவேனும் பலவீனமாக இல்லை. இது உறுதியா? அச்சா. இன்னொரு கேள்வியும் உள்ளது. இந்தச் சத்தியத்தைச் செய்வதற்காகப் பாராட்டுக்கள். எவ்வாறாயினும், தூய்மை இன்மைக்கு ஐந்து பிரதானமான சகபாடிகள் இருக்கிறார்கள். அது சரிதானே? நீங்கள் தலையை அசைக்கலாம். ஓகே, நீங்கள் அந்த ஐந்திற்காகவும் சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? அல்லது, இரண்டு அல்லது மூன்றுக்காக மட்டும் சத்தியத்தைச் செய்துள்ளீர்களா? எங்கே தூய்மை உள்ளதோ, தூய்மை இன்மையின் சிறிதளவு சுவடேனும் இருக்குமாயின், அந்த ஆத்மாவைச் சம்பூரணமான தூய ஆத்மா என்று அழைக்க முடியுமா? அதைவிட, பிராமண ஆத்மாக்களான உங்களுக்குத் தூய்மையே சொத்து, பிராமண வாழ்க்கையின் ஆளுமை மற்றும் இராஜரீகம் ஆகும். எனவே, சோதித்துப் பாருங்கள்: சம்பூரணமான தூய்மையைக் கொண்டிருப்பதில், நீங்கள் தூய்மை என்ற பிரதானமான விடயத்தில் கவனம் செலுத்திவிட்டு, அதன் சகபாடிகளில் சிறிது பின்தங்கி இருப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் சிறியவற்றில் அன்பு வைத்து, பிரதானமானதைச் சரி ஆக்கிக் கொள்கிறீர்கள். ஏனைய நான்கிலும் பின்தங்கி இருக்கலாம் எனத் தந்தை உங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளாரா? தூய்மை என்பது வெறுமனே பிரம்மச்சரியம் மட்டுமல்ல, ஆனால் ஒரு பிரம்மாச்சாரியாகவும் இருப்பதாகும். பிரம்மாச்சாரி ஆகுதல் என்றால், தூய்மைக்கான சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர் என்று அர்த்தம். நீங்கள் எல்லோரும் இதயபூர்வமாக உரையாடினீர்கள். சில குழந்தைகள் தமது இதயபூர்வமான உரையாடல்களில் மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறார்கள்: ‘பாபா, நாங்கள் பிரதானமான விடயத்தில் ஓகே ஆகியுள்ளோம். ஆனால், சிலவேளைகளில் சிறியவை எமது மனங்களில் பிரவேசிக்கின்றன. அவை எமது எண்ணங்களில் வருகின்றன. அவை எமது வார்த்தைகளில் வருவதில்லை. வேறு எவராலும் எண்ணங்களைப் பார்க்க முடிவதில்லை’. ‘பொதுவாக ஒருவருக்குச் சிறிய குழந்தைகளின் மீது அன்பு இருக்கும். அதனால் எமக்கும் இந்த நான்கிடமும் அன்பு உள்ளது. கோபம் உள்ளது, பற்று உள்ளது. எமக்கு அது தேவையில்லை, ஆனால் அது வருகிறது’ எனச் சிலர் கூறுகிறார்கள். பாப்தாதா கூறுகிறார்: யாராவது வந்தால், நீங்கள் கதவைத் திறந்து வைத்திருப்பதனால்தான் அவர்கள் வருகின்றார்கள். எனவே, நீங்கள் ஏன் கதவைத் திறந்து வைக்கிறீர்கள்? நீங்கள் பலவீனம் என்ற கதவைத் திறந்து வைக்கிறீர்கள். பலவீனம் என்ற கதவைத் திறந்து வைத்தல் என்றால் அவற்றை அழைத்தல் என்று அர்த்தம்.

எனவே, இந்தத் தினத்தில், நீங்கள் தந்தையின் பிறந்த நாளையும் உங்களின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறீர்கள். ஆனால் நீங்கள் பிறப்பு எடுத்த நாளில் ஒரு சத்தியத்தையும் செய்கிறீர்கள். தந்தை உங்களுக்குக் கொடுத்த முதலாவது ஆசீர்வாதம் என்ன? உங்களுக்கு அது நினைவிருக்கிறதா?உங்களின் பிறந்தநாள் ஆசீர்வாதம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாபா கொடுத்த ஆசீர்வாதம் என்ன? நீங்கள் தூய்மையாக இருப்பீர்களாக, நீங்கள் யோகியாக இருப்பீர்களாக. உங்கள் எல்லோருக்கும் இந்த ஆசீர்வாதம் நினைவிருக்கிறதா? உங்களுக்கு இது நினைவிருக்கிறதா? நீங்கள் அதை மறக்கவில்லை, அப்படித்தானே? ‘நீங்கள் தூய்மையாக இருப்பீர்களாக’ என்ற ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ஒரு விடயத்தில் மட்டுமல்ல, ஆனால் ஐந்து விடயங்களிலும். எனவே, இன்று, பாப்தாதாவிற்கு என்ன வேண்டும்? நீங்கள் உங்களின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். நீங்களும் தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள்தானே? நீங்கள் இங்கே சிவராத்திரியைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் பிறந்த நாளுக்காக ஒரு பரிசைக் கொண்டு வந்துள்ளீர்களா அல்லது வெறுங்கையுடன் வந்துள்ளீர்களா? ஸ்தாபனையின் எழுபது வருடங்கள் இப்போது பூர்த்தியாகி விட்டன. உங்களுக்கு இது நினைவிருக்கிறதுதானே? சிந்தித்துப் பாருங்கள், இது இப்போது 70 ஆவது வருடம். நீங்கள் பிந்தி வந்திருந்தாலும் இது இப்போது ஸ்தாபனையின் 70 ஆவது வருடம்தானே? நீங்கள் அண்மையில் வந்திருந்தாலும் நீங்கள் ஸ்தாபனைப் பணியில் சகபாடிகள், அல்லவா? நீங்கள் சகபாடிகள்தானே? நீங்கள் இங்கே முதல் தடவை வந்திருந்தாலும் - முதல் தடவையாக மதுவனத்திற்கு வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! அச்சா. நீங்கள் ஒன்று அல்லது இரண்டு வருடங்களாக வந்திருந்தாலும், உங்களை நீங்கள் என்னவென்று அழைக்கிறீர்கள்? நீங்கள் பிரம்மாகுமார்கள் குமாரிகளா அல்லது புருஷாரத் (முயற்சி செய்யும்) குமார்கள், குமாரிகளா? நீங்கள் உங்களை என்னவென்று அழைக்கிறீர்கள்? உங்களில் எவராவது உங்களைப் புருஷாரத்தி குமார்கள் என்று அழைக்கிறீர்களா? நீங்கள் பிரம்மா குமார்கள் என்ற அறிவிப்புப் பலகையைப் போட்டுள்ளீர்கள்தானே? நீங்கள் எல்லோரும் உங்களை BK என்று அழைக்கிறீர்களா அல்லது PK என்று அழைக்கிறீர்களா? புருஷாரத்தி குமார்கள். எனவே, செய்த சத்தியம் என்ன? நீங்கள் ஒன்றாக இருப்பீர்கள், ஒன்றாக வீடு திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இருப்பீர்கள். எனவே, ஒன்றிணைந்து இருப்பதற்கு உங்களுக்கு சமத்துவம் அவசியம்.

எனவே, நாங்கள் 70 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். வந்து சேவை செய்வதற்கான வாய்ப்பைக் கொடுத்த ஒவ்வொரு பிராந்தியமும் 70 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை பாப்தாதா பார்த்துள்ளார். உங்களுக்கு கௌரவிக்கும் விழா நடந்ததுதானே? நீங்கள் எல்லோரும் அதைக் கொண்டாடுகிறீர்கள்தானே? நீங்கள் சிறிய பரிசுகளைக் கொடுக்கிறீர்கள், அவ்வளவுதான். எவ்வாறாயினும், முதலில், இன்று பிறந்தநாள். நீங்கள் அதைக் கொண்டாட வந்துள்ளீர்கள்தானே? இது உறுதியா? இரண்டாவதாக, 70 ஆம் வருடம் இப்போது பூர்த்தியாகி உள்ளது. எனவே, நீங்கள் இந்தக் கௌரவிக்கும் விழாவையும் கொண்டாடுகிறீர்கள். அத்துடன் பிறந்த நாளையும் கொண்டாடுகிறீர்கள். எனவே, நீங்கள் என்ன பரிசைக் கொடுப்பீர்கள்? நீங்கள் ஒரு தட்டை அல்லது ஒரு விரிப்பைக் கொடுப்பீர்களா? நீங்கள் என்ன பரிசுகளைக் கொண்டு வந்தீர்கள்? ஓகே, நாங்கள் ஒரு வெள்ளிக் குவளையைக் கொடுப்போம். எவ்வாறாயினும், இந்தத் தினத்தில், நம்பிக்கைத் தீபங்களாக இருக்கும் தனது குழந்தைகளுக்காக பாப்தாதாவின் தூய ஆசை என்னவென்றால், அந்தத் தூய ஆசை என்னவென்று பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? பாபா உங்களுக்குச் சொல்வது மற்றும் நீங்கள் அதைக் கேட்பது என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் உங்களின் காதுகளால் அதைக் கேட்டு, உங்களின் இதயத்தில் அதை அமிழ்த்திக் கொள்கிறீர்கள். நீங்கள் அதை உங்களின் இதயங்களில் இருந்து வெளியே வர விடமாட்டீர்கள்தானே? நீங்கள் அதை உங்களின் இதயங்களில் அமிழ்த்தி விடுகிறீர்கள். எனவே, இந்தத் தினத்தில், முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே - பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அப்படி என்றால் குறைந்தபட்சம் தலையை அசையுங்கள்! ஆசிரியர்களே, நீங்கள் ஆம் என்று தலையை அசையுங்கள். நீங்கள் மிக நன்றாக உங்களின் கொடிகளை அசைக்கிறீர்கள். இரட்டை வெளிநாட்டவர்களே, பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? நீங்கள் இதில் உங்களைக் கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மட்டுமே, பாபா உங்களுக்குச் சொல்வதற்காக ஆம் எனச் சொல்லுங்கள். அதை வெறுமனே சொல்லாதீர்கள்! 70 வருடங்களாக நீங்கள் கவனக்குறைவு, சோம்பேறித்தனம் மற்றும் சாக்குப் போக்குகளைச் சொல்லும் விளையாட்டுகளை விளையாடி வருவதை பாபா பார்த்திருக்கிறார். ஓகே, 70 இல்லா விட்டாலும் அது 50, 40, 30, 20 வருடங்களாக இடம்பெற்று வருகிறது. அந்தக் காலப்பகுதியில், குழந்தைகளான நீங்கள் இந்த மூன்று விடயங்களின் விளையாட்டுக்களை அதிகளவில் விiயாடுவதை பாபா பார்த்திருக்கிறார். இந்தத் தினத்தில், பக்தர்கள் இரவில் விழித்திருக்கிறார்கள் (ஜாக்ரன்). அவர்கள் நித்திரை செய்வதில்லை. எனவே, குழந்தைகளான உங்களுக்கான ஜாக்ரன் என்ன? நீங்கள் எந்த நித்திரையில் மீண்டும் மீண்டும் ஆழ்ந்து விடுகிறீர்கள்? நீங்கள் சௌகரியமாக கவனக்குறைவு, சோம்பேறித்தனம் மற்றும் சாக்குப் போக்குகள் சொல்லும் நித்திரையில் ஆழ்ந்திருக்கிறீர்கள். எனவே, இன்று, எல்லா வேளைக்குமாக இந்த மூன்று விடயங்களிலும் நீங்கள் ஜாக்ரன் செய்ய வேண்டும் என்பதை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். நீங்கள் கோபப்படும்போது, அகம்பாவம் ஏற்படும்போது அல்லது பேராசைப்படும்போது, சாக்குப் போக்காக நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? எந்தவொரு சூழ்நிலை தோன்றும்போதும் ஒரு அடையாள முத்திரையை பாப்தாதாவால் பார்க்க முடிகிறது. அப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘இது ஓகே, இது எல்லா வேளையும் நடக்கிறது.’ அதைச் செய்ய வைத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் கூறும் வார்த்தைகளாவன: ‘இது எல்லா வேளையும் நடக்கிறது, எல்லா வேளையும் இப்படித்தான் நடக்கிறது. இது எதுவும் புதியதல்ல. இது எல்லா வேளையும் நடக்கிறது.’ அவை எல்லாம் என்ன? அது கவனக்குறைவுதானே? ‘இவரும் இதைச் செய்கிறார்.’ கோபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பெரும்பாலானோர், ‘அவர் இதைச் செய்தார், அதனாலேயே இது நடந்தது’ எனச் சொல்கிறார்கள். நான் செய்தது தவறு என அவர்கள் சொல்ல மாட்டார்கள். இது நடந்தது, அவர் இதைச் செய்தார்,அதனாலேயே இது நடந்தது. மற்றவர்களைக் குறை சொல்வது மிகவும் இலகுவானது. அவர் அதைச் செய்யாமல் இருந்திருந்தால், இது நடந்திருக்காது. தந்தை எதையாவது சொன்னால், நீங்கள் அதைச் செய்யக்கூடாது. அவர் எதையாவது செய்தால், இது நடக்கும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் உங்களால் கோபத்தை முடிக்க முடியாதா? தற்காலத்தில், பல வகையான அதிகாரத் தோரணைகள் காணப்படுகின்றன. அது கோபத்தின் குழந்தை. எனவே, இன்று, நீங்கள் ஏனைய நான்கிற்கும் ஒரு சத்தியத்தைச் செய்வீர்களா? உங்களில் பெரும்பாலானோருக்குக் குறிப்பாக முதல் விடயத்தில் திடசங்கற்பமான எண்ணம் உள்ளது. அதேபோல், ஏனைய நான்கிற்கும் அதே எண்ணத்தைக் கொண்டிருங்கள். இதற்காக சாக்குப் போக்குகள் எதையும் செய்யாதீர்கள். ‘இவர் இதைச் செய்தார், அதனாலேயே, நான் இதைச் செய்தேன்.’ எவ்வாறாயினும், தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் நினைக்கவில்லை. மற்ற நபர் என்ன செய்தார் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். எனவே, இதுவும் சாக்குப் போக்குகள் சொல்வதல்லவா? எனவே, இன்று, நீங்கள் நான்கு விடயங்களில் பின்தங்குவதற்குக் காரணமான இந்த மூன்று விடயங்களையும் பாப்தாதா பிறந்தநாள் பரிசாகப் பெற விரும்புகிறார். சம்ஸ்காரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும். இது சம்ஸ்காரங்களுக்கு முகங்கொடுப்பதல்ல. ஆனால், இது ஒரு பரீட்சை ஆகும். இது ஒரு பிறவிக்கான படிப்பும், கல்பம் முழுவதற்குமான பேறும் ஆகும். அரைக்கல்பத்திற்கு இராச்சிய பாக்கியமும், அரைக்கல்பத்திற்குப் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராக ஆகுவதும் ஆகும். கல்பம் முழுவதற்குமான பேறு இந்த ஒரு பிறவியில், அதுவும் இந்தச் சிறிய பிறவியில் பெறப்படுகிறது. இது முழுமையான பிறவியும் இல்லை. சிறியதொரு பிறவியே ஆகும். எனவே, உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? இந்தத் தைரியம் நிச்சயமாகத் தமக்கு உள்ளது என்று உணர்பவர்கள். ‘நாங்கள் முயற்சி செய்வோம், நாங்கள் கவனம் செலுத்துவோம்....’ எனச் சொல்பவர்கள் அல்ல. ‘நாம் இதைச் செய்வோம்... நாம் அதைச் செய்வோம்....’ எனப் பாடியவாறு எதிர்காலத்திற்காக அனைத்தையும் விடுபவர்கள் பாபாவிற்குத் தேவையில்லை. நீங்கள் சிறுவர்கள் கிடையாது. 70 வருடங்கள் இப்போது முடிவிற்கு வருகிறது. மூன்று, நான்கு மாதக் குழந்தைகளே, இத்தகைய மொழியைப் பேசுவார்கள். நீங்கள் தந்தையின் சகபாடிகள், அல்லவா? நீங்கள் உலக உபகாரிகள். அதற்காக எழுபது வருடங்கள் இப்போது பூர்த்தியாகி விட்டன. உங்களைக் கைகளை உயர்த்தும்படி பாபா கேட்கப் போவதில்லை. ஏனென்றால், உங்களின் கைகளை உயர்த்திய பின்னரும் நீங்கள் சிலவேளைகளில் கவனக்குறைவாக ஆகுவதை பாப்தாதா கண்டுள்ளார். ஆனால், என்னதான் நடந்தாலும், மலை போன்று பெரியதொரு பரீட்சைத்தாள் வந்தாலும் நீங்கள் அந்த மலையைப் பஞ்சாக மாற்றி விடுவீர்கள் என்று உணர்பவர்கள் - இத்தகைய திடசங்கற்பமான எண்ணங்களுக்கான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு மிக நல்ல எண்ணங்கள் இருப்பதனால், அந்த எண்ணங்களை நீங்கள் கொண்டிருக்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எனவே, அது என்ன? 70 வருடங்களாக, நீங்கள் இதில் பின்தங்குவதை அனுமதிக்கிறீர்கள். எவ்வாறாயினும், காலத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை பாப்தாதா பார்க்கிறார். இந்த ஞானத்தின் அடிப்படையில், முயற்சியின் ஒவ்வொரு விடயமும் நீண்ட காலப் பயிற்சியுடன் தொடர்புடையது. ஓகே, நீங்கள் அதை இப்போது செய்வீர்கள் எனச் சொல்லலாம். ஏனென்றால், இது நீண்ட காலக் கணக்குடன் தொடர்புடையது. உங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான பேறு என்ன? இப்போது, உங்களின் கைகளை உயர்த்தும்படி பாபா உங்களைக் கேட்பார். யாராவது இராமர் அல்லது சீதையாக ஆகுவீர்களா? நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகாமல் இராமர் அல்லது சீதை ஆகுவீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களில் எவராவது தமது கைகளை உயர்த்துகிறார்களா? (எவரும் தமது கையை உயர்த்தவில்லை). நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்களின் பாக்கியத்தைப் பெற விரும்புவதால் - இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுதல் என்றால் நீண்ட காலத்திற்கு உங்களின் இராச்சிய பாக்கியத்தை அடைதல் என்று அர்த்தம் - பேறும் நீண்ட காலத்திற்கு உரியதாகவே இருக்கும். ஒவ்வொரு விடயத்திலும் நீண்ட காலம் என்பது இருக்க வேண்டும். இப்போது உங்களிடம் 63 பிறவிகளுக்கு உரிய நீண்ட காலத்தின் சம்ஸ்காரங்கள் உள்ளன. அத்துடன் அது உங்களின் நோக்கமோ அல்லது உணர்வோ கிடையாது, ஆனால் அவை உங்களின் 63 பிறவிகளின் சம்ஸ்காரங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள், அல்லவா? எனவே, அது நீண்ட காலத்திற்கான கணக்கு, இல்லையா? இதனாலேயே, உங்களின் எண்ணங்களில் திடசங்கற்பம் இருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். ‘இது நடக்கும், இது எல்லா வேளையும் நடக்கிறது, அதனால் அது தொடர்ந்து நடக்கட்டும், யார் இன்னமும் முழுமை அடைந்துள்ளார்?’ என நீங்கள் சொல்லும்போது இந்தத் திடசங்கற்பமே அங்கே குறைகிறது. ஒரு விடயத்தை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். பாப்தாதாவும் அதை அவதானித்துள்ளார். உங்களிடம் தைரியம் இல்லாதபோது, ‘மகாராத்திகளும் இதைச் செய்கிறார்கள், எனவே, நாங்கள் அதைச் செய்தால் என்ன?’ என நீங்கள் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா உங்களிடம் கேட்கிறார்: ஒரு மகாராத்தி தவறு செய்யும்போது, அந்த வேளையில் அவர் ஒரு மகாராத்தியா? அதனால், மகாராத்திகளின் பெயரை நீங்கள் ஏன் பாழாக்குகிறீர்கள்? அந்த வேளையில், அவர் ஒரு மகாராத்தி கிடையாது. எனவே, ஒரு மகாராத்தியைக் குறிப்பிட்டு, உங்களைப் பலவீனம் ஆக்குவது என்றால் உங்களையே ஏமாற்றுதல் என்று அர்த்தம். மற்றவர்களைப் பார்ப்பது இலகுவானது. ஆனால் தன்னையே பார்ப்பதற்கு ஒருவருக்குச் சிறிது தைரியம் தேவை. அதனால் இன்று, கணக்கை முடிப்பதற்கான பரிசைப் பெறுவதற்காக பாப்தாதா வந்துள்ளார். பலவீனங்களினதும் சாக்குப் போக்குகள் சொல்வதனதும் கணக்கானது, மிகப் பெரியதொரு புத்தகம் ஆகும். அது முடிக்கப்பட வேண்டும். எனவே, இதை நிச்சயமாகச் செய்து காட்டுவீர்கள், நீங்கள் அதைச் செய்ய வேண்டும், நீங்கள் தலைவணங்கி, உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், மாற்றத்திற்கான விழாவைக் கொண்டாட வேண்டும் என உணரும் நீங்கள் ஒவ்வொருவரும், அந்த எண்ணம் உங்களிடம் உள்ளது என உணருபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இது உறுதியாக உள்ளதா அல்லது சாதாரணமாக உள்ளதா? சாதாரணமான எண்ணங்களும் உள்ளன, திடசங்கற்பமான எண்ணங்களும் உள்ளன. எனவே, உங்கள் எல்லோருக்கும் உறுதியான எண்ணம் ஏற்பட்டதா? நீங்கள் உறுதியான எண்ணத்தைக் கொண்டிருந்தீர்களா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, உங்களின் கைகளை உயர உயர்த்துங்கள்! மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அப்படித்தானே? மிகவும் நெருக்கமாக அமர்ந்திருக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், முன் வரிசை ஆசனங்களில் அமர்ந்துள்ளார்கள். பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் முன்னால் அமர்ந்துள்ளீர்கள். எப்போதும் முன்னால் இருங்கள்.

எனவே, இன்றைய பரிசு, அழகானதொரு பரிசல்லவா? பாப்தாதாவும் மகிழ்கிறார். ஏனென்றால், நீங்கள் தனியே இல்லை. உங்களின் இராச்சியத்தில் உங்களின் பின்னால் உங்களின் அரச குடும்ப உறுப்பினர்கள், உங்களின் அரச பிரஜைகள் இருப்பார்கள். பின்னர் துவாபர யுகத்தில், உங்களின் பக்தர்கள் இருப்பார்கள். மூன்று வகையான பக்தர்கள் இருக்கிறார்கள்: சதோ, ரஜோ, தமோகுணி. உங்களுக்குப் பின்னால் நீண்டதொரு வரிசை உள்ளது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் அதையே செய்வார்கள். நீங்கள் சாக்குப் போக்குகளைச் செய்கிறீர்கள். எனவே உங்களின் பக்தர்களும் அதிகளவு சாக்குப் போக்குகளைச் சொல்கிறார்கள். இப்போது, பிராமணக் குடும்பமும் உங்களைப் பார்த்து, நீங்கள் செய்யும் தவறான செயல்களைப் பிரதி செய்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள் ஆகியுள்ளார்கள். இப்போது, திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். சம்ஸ்காரங்களின் முரண்பாடு இருக்கும்போது, உங்களின் சுபாவங்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்போது - மூன்றாவது விடயம் பலவீனங்கள் ஆகும். யாராவது ஒருவர் இன்னொருவரைப் பற்றி ஒரு பொய் கூறி இருக்கலாம். யாராவது பொய் சொல்லும்போது தமக்கு அதிக கோபம் ஏற்படுவதாகச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அதை நீங்கள் உண்மையான தந்தையுடன் சரிபார்த்தீர்களா? உண்மையான தந்தை உங்களுடன் இருக்கிறார். அதனால் பொய்யான உலகம் முழுவதும் ஒருபுறம் இருந்தாலும் ஒரேயொரு தந்தை உங்களுடன் மறுபக்கத்தில் இருப்பதனால் உங்களின் வெற்றிக்கான உத்தரவாதம் நிச்சயமாக உள்ளது. எவராலும் உங்களை அசைக்க முடியாது. ஏனென்றால், தந்தை உங்களுடன் இருக்கிறார். அவர்கள் சொல்வது பொய்யானது. எனவே, பொய்மை பொய்யாகவே இருக்கட்டும். நீங்கள் ஏன் அதை அதிகரிக்கிறீர்கள்? எனவே, இன்று, சாக்குப் போக்குகள் சொல்வதைத் தந்தை விரும்பவில்லை. இது நடந்தது, அது நடந்தது, இது நடந்தது. ‘இது, அது’ என்ற பாடல் இப்போது முடிவிற்கு வரவேண்டும். எது நடந்ததோ, அது நல்லதே. என்ன நடக்கிறதோ, அது நல்லதாகவே இருக்கும். எல்லாமே நல்லதாகவே இருக்கும். நீங்கள் எல்லோரையும் நல்லவர்கள் ஆக்குவீர்கள். ‘அச்சா, அச்சா, அச்சா’ என்ற பாடலைப் பாடுங்கள். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? நீங்கள் சாக்குப் போக்குகள் சொல்வதை நிறுத்துவீர்களா? நிறுத்துவீர்களா? உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! ஆம், நீங்கள் அவற்றை மிக நன்றாக அசைக்கலாம். அச்சா, பார்த்துக் கொண்டிருப்பவர்களும் தமது கைகளை அசைக்கிறார்கள். நீங்கள் எங்கே இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் உங்களின் கைகளை அசையுங்கள்! குறைந்தபட்சம் நீங்கள் அவற்றை அசைக்கிறீர்கள். ஓகே, நீங்கள் அவற்றைக் கீழே விடலாம். இப்போது, உங்களின் சொந்த மாற்றத்திற்காக நீங்கள் கைதட்டலாம். அச்சா. (எல்லோரும் மிகவும் உரத்துக் கைதட்டினார்கள்.)

அச்சா. இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் பாப்தாதா என்ன சொன்னாரோ, அதன் திடசங்கற்பமான எண்ணத்தின் வடிவத்தில் ஒரு நிமிடம் இருங்கள். நீங்கள் சாக்குப் போக்குகள் சொல்வதை, சோம்பேறியாக இருப்பதை, கவனக்குறைவாக இருப்பதை ஒவ்வொரு கணமும் திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் நிறுத்த வேண்டும். நிச்சயமாக நீண்ட காலப்பகுதிக்கு ஒரு கணக்கைச் சேமியுங்கள். என்னதான் நடந்தாலும் வேறு எதையும் கருத்தில் கொள்ளாதீர்கள். ஆனால் நீங்கள் நிச்சயமாக பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் உலக சிம்மாசனம் என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தின் ரூபத்தில் அமர்ந்திருங்கள். அச்சா.

சதா ஊக்கம் மற்றும் உற்சாகம் என்ற அனுபவத்தில் இருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் வெற்றியின் சாவியான திடசங்கற்பத்தை எப்போதும் பயன்படுத்துபவர்களுக்கும் சதா தந்தையுடன் இருந்து, ஒவ்வொரு பணியிலும் அவரின் சகபாடிகளாக இருப்பவர்களுக்கும் சதா ஒரேயொருவருக்குச் சொந்தமாகவும் சிக்கனமாகவும் இருப்பவர்களுக்கும் சதா தமது ஸ்திரத்தன்மை என்ற வடிவத்தால் தொடர்ந்து முன்னால் பறப்பவர்களுக்கும் பாப்தாதாவின் அதிகபட்ச அதியன்பிற்குரிய, நீண்ட காலம் பிரிந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட விசேடமான குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லைக்கு உட்பட்ட ஆசைகள் எல்லாவற்றையும் துறந்து, ஓர் உண்மையான தபஸ்யா ரூபம் ஆகுவீர்களாக.

எல்லைக்கு உட்பட்ட ஆசைகள் அனைத்தையும் துறந்து, ஓர் உண்மையான தபஸ்யா ரூபம் ஆகுங்கள். தபஸ்யா ரூபம் என்றால் எந்தவொரு ஆசையின் அறிவே இல்லாதவர் என்று அர்த்தம். எதையாவது பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அதைக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பெறுகிறார்கள். ஆனால் எல்லா வேளைக்குமாக அதை இழந்து விடுகிறார்கள். தற்காலிகமான காலப்பகுதிக்கான ஆசைகள், நீங்கள் ஒரு தபஸ்வி ஆகுவதில் ஒரு தடை ஆகிவிடுகின்றன. ஆகவே, நீங்கள் ஒரு தபஸ்யா ரூபமாக இருக்கும் அத்தாட்சியை இப்போது கொடுங்கள். அதாவது, எந்தவோர் எல்லைக்கு உட்பட்ட மரியாதை அல்லது கௌரவத்தைப் பெறுவதைத் துறந்து, பாக்கியத்தை அருள்பவர் ஆகுங்கள். பாக்கியத்தை அருள்பவராக இருக்கும் உங்களின் சம்ஸ்காரங்கள் வெளிப்படும்போது, ஏனைய சம்ஸ்காரங்கள் அனைத்தும் இயல்பாகவே மடிந்துவிடும்.

சுலோகம்:
உங்களின் செயலுக்கான பலனைப் பெறுவதற்கான சூட்சுமமான ஆசையைக் கொண்டிருத்தல் என்றால் ஒரு பழம் பழுப்பதற்கு முன்னர் காயாக அதை உண்பது போன்றதாகும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.

உங்களின் நினைவானது எரிமலை போன்று ஆகும்போது, உங்களால் ஆத்மாக்களைப் பாவத்தில் இருந்து பாதுகாக்க முடியும். அத்துடன் பாவத்தை அழிப்பவராகவும் ஆகமுடியும். நீங்கள் இந்த நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் ஆத்மாக்கள் அனைவரினதும் சக்தியற்ற ஸ்திதி முடிவடையும். இதற்கு, நீங்கள் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு மூச்சிலும் தந்தையுடன் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். எந்தவொரு வேளையிலும் உங்களிடம் சாதாரணமான நினைவு இருக்கக்கூடாது. அன்பு மற்றும் சக்தியின் ரூபம் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.