28.11.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரம் செவிமடுத்துப் பின்னர் அவர் கூறியதை ஏனையோருக்கும் கூறுங்கள்.
கேள்வி:
நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று, என்ன புரிந்துணர்வைத் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார்?பதில்:
நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற புரிந்துணர்வை பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கொடுத்துள்ளார். ஒரேயொரு தந்தையின் நினைவிலேயே நீங்கள் நிலைத்திருக்க வேண்டும். இந்த ஒரு விடயத்தையே நீங்கள் அனைவருக்கும் கூற வேண்டும். ஏனெனில் நீங்கள் முழு உலகிலுமுள்ள உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டும். நீங்கள் மாத்திரமே இந்தச் சேவை செய்வதற்கான கருவிகள் ஆவீர்கள்.ஓம் சாந்தி.
பொதுவாக, நீங்கள் ஏன் “ஓம்சாந்தி” என்று கூறுகிறீர்கள்? இது உங்களுடைய அறிமுகத்தைக் கொடுப்பதாகும். ஆத்மாக்கள் தங்கள் சொந்த அறிமுகத்தைக் கொடுப்பார்கள். ஆத்மாக்களே தங்கள் சரீரங்களினூடாகப் பேசுகிறார்கள். ஓர் ஆத்மா இல்லாமல் ஒரு சரீரத்தினால் எதையும் செய்ய முடியாது. ஆகவே, ஆத்மாக்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள்: நான் ஓர் ஆத்மா. நான் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தை ஆவேன். ஆத்மாவே பரமாத்மா ஆவார் என அந்த மக்கள் கூறுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகின்றன. பாபா “குழந்தாய், குழந்தாய்” எனக் கூறுவார், இல்லையா? ஆன்மீகத் தந்தை கூறுகிறார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே! உங்கள் பௌதீகப் புலன் அங்கங்களினூடாக, நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முதலில் ஞானமும் பின்னர் பக்தியும் உள்ளன. முதலில் பக்தியும் பின்னர் இந்த ஞானமும் உள்ளன என்றில்லை. முதலில் பகலாகிய இந்த ஞானமும், பின்னர் இரவாகிய பக்தியும் உள்ளன. ஆகவே, பகல் மீண்டும் எப்பொழுது ஆரம்பமாகும்? பக்தியில் விருப்பமின்மை உள்ளபொழுதே ஆகும். கியானும், விக்கியானும் (மௌனம்) உள்ளன என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைக் கற்கின்றீர்கள். பின்னர் நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் இந்த ஞானத்தின் வெகுமதியைப் பெறுகிறீர்கள். இந்த நேரத்தில் பாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார், பின்னர் சத்தியயுகத்தில் இந்தக் கல்வியின் வெகுமதியைப் பெறுகிறீர்கள். இது விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். இப்பொழுது தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் கியானுக்கு அப்பால் மௌனதாமமாகிய, உங்கள் வீடான, விக்கியானுக்குள் (மௌனம்) செல்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது கியான் என்றோ அல்லது பக்தி என்றோ அழைக்கப்படுவதில்லை. அது விக்கியான் என்றே அழைக்கப்படுகிறது. நீங்கள் கியானுக்கு அப்பால் மௌன தாமத்திற்குச் செல்கிறீர்கள். உங்கள் புத்தியில் இந்த ஞானம் அனைத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். எந்த இடத்திற்காக, தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார்? எதிர்காலப் புதிய உலகத்திற்காக அவர் அதை உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்கு முன்னர், முதலில் உங்கள் வீட்டிற்குச் செல்வீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் முக்திதாமத்திற்;கு நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் நிச்சயமாக அங்கு செல்வீர்கள். நீங்கள் மாத்திரமே இந்தப் புதிய விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். வேறு எவராலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு நிச்சயமாக ஓர் ஆன்மீகத் தந்தை இருப்பது அவசியமாகும். ஆன்மீகத் தந்தையும் ஆன்மீகக் குழந்தைகளும் உள்ளனர். ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆன்மீகத் தந்தை மாத்திரமே இருக்கிறார். அவர் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை எவ்வாறு வருகிறார் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நானும் சடப்பொருளின் ஆதாரத்தைப் பெற வேண்டியுள்ளது. இப்பொழுது நீங்கள் தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுக்க வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுத்த பின், உங்கள் சகோதரர்களுக்கும் கூறுங்கள். நீங்கள் நிச்சயமாக ஏதோவொன்றைக் கூற வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். புத்தி அங்கே செல்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்தும்பொழுது, உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. முன்னர், நீங்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை. பக்தி மார்க்கத்தில் உங்களுக்குப் புரிந்துணர்வு இல்லாததினால், இராவணனின் பிடிக்குள் சிக்கியபொழுது, உங்களுக்கு என்ன நிகழ்ந்தது எனப்பாருங்கள். நீங்கள் மிகவும் அழுக்காகினீர்கள். நீங்கள் மது அருந்தியபொழுது, நீங்கள் என்னவாக ஆகினீர்கள்? மது மென்மேலும் அழுக்கைப் பரப்புகிறது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. கல்பம் கல்பமாக, நீங்கள் அதைக் கோரி வந்தீர்கள். ஆகவே, நீங்கள் நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீகக் குணங்களைப் பற்றிய புகழ் அதிகளவில் உள்ளது. வைகுந்தத்தின் அதிபதி மிகவும் இனிமையானவர்! நீங்கள் அதை ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சம் எனக் கூறமாட்டீர்கள்; அது விஷ்ணுவின் வம்சம், அதாவது இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் என்றே கூறப்படுகிறது. தந்தையால் மாத்திரமே சத்தியயுகத்து இராச்சிய வம்சத்தை ஸ்தாபிக்க முடியும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். இந்தப் படங்கள் இல்லாமலும் உங்களால் இதை விளங்கப்படுத்த முடியும். தொடர்ந்தும் பல ஆலயங்கள் கட்டப்படும். ஞானமுள்ளவர்கள் தொடர்ந்தும் ஓடிச்சென்று ஏனையோருக்கு நன்மையளித்து, அவர்களைத் தங்களுக்குச் சமமாக்குவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே சோதித்துக் கேளுங்கள்: நான் இந்த ஞானத்தை எத்தனை பேருக்குக் கொடுத்துள்ளேன்? சிலர் மிகவும் விரைவாக ஞான அம்பினால் தாக்கப்படுகிறார்கள். பீஷ்மபிதாமகர் போன்றோர் கூறினார்கள்: நான் குமாரிகளின் அம்புகளினால் தாக்கப்பட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் தூய்மையான குமாரர்களும் குமாரிகளும் ஆவர், அதாவது, அவர்கள் குழந்தைகள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் குழந்தைகள் ஆவீர்கள். ஆகவே, நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள், சகோதரர்களும் சகோதரிகளும் எனக் கூறுகிறீர்கள். இது ஒரு தூய உறவுமுறையாகும். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். தந்தை உங்களைத் தத்தெடுத்துள்ளார். சிவபாபா உங்களை பிரஜாபிதா பிரம்மாவினூடாகத் தத்தெடுத்தார். உண்மையில், நீங்கள் “தத்தெடுக்கப்பட்ட” என்னும் வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது. எவ்வாறாயினும், நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். அனைவரும் என்னை அழைக்கிறார்கள்: சிவபாபா, சிவபாபா, வாருங்கள்! எவ்வாறாயினும், அவர்களுக்குப் புரிந்துணர்வு இல்லை. ஆத்மாக்கள் அனைவரும் சரீரங்களை ஏற்றுத் தங்கள் பாகத்தை நடிக்கிறார்கள். ஆகவே, சிவபாபாவும் நிச்சயமாக ஒரு சரீரத்தினூடாகத் தனது பாகத்தை நடிப்பார். சிவபாபா ஒரு பாகத்தை நடிக்கவில்லை என்றால், அவரால் பயன் இருக்காது. அவருக்குப் பெறுமதியும் இருக்காது. அவர் முழு உலகையும் ஜீவன்முக்தியடையச் செய்யும்பொழுதே, அவருக்குப் பெறுமதி கிடைக்கிறது. அதனாலேயே பக்திமார்க்கத்தில் அவர்கள் அவருடைய புகழைப் பாடுகிறார்கள். அவர்கள் சத்கதி அடைந்ததும், அவர்களுக்குத் தந்தையை நினைவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தந்தையாகிய, கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள்; ஆசிரியர் மறைந்துவிடுகிறார். ஒரேயொரு பரமதந்தையே அனைவரையும் தூய்மையாக்குபவர் என்று அவர்கள் கூறவேண்டும் என்பதற்காகவே கூறுகிறார்கள். அந்த ஒரேயொருவரே சத்கதியை அருள்பவர் என்பதையும் அவர்கள் கூறுவதில்லை. அனைவருக்கும் சத்கதியை அளிப்பவர் ஒரேயொருவரே என்பது நினைவுகூரப்பட்டாலும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலேயே இதைக் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது கூறுபவையெல்லாம் அர்த்தமுள்ளவையாகும். இரவாகிய பக்தி, பகலாகிய ஞானத்திலிருந்து வேறுபட்டதாகும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பகலுக்குரிய காலமும் பக்திக்குரிய காலமும் உள்ளன. இவை எல்லையற்ற விடயங்களாகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த எல்லையற்ற ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அரைக்கல்பத்திற்குப் பகலும் மற்றைய அரைக்கல்பத்திற்கு இரவும் உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் இரவைப் பகலாக மாற்றுவதற்கே வருகிறேன். அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது என்பதும் அதில் பல வகையான துன்பம் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியும். பின்னர் தந்தை வந்து உங்களுக்குச் சந்தோஷம் மாத்திரமே இருக்கின்ற புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். இது சந்தோஷத்தையும் துன்பத்தையும் பற்றிய ஒரு நாடகம் என்று கூறப்பட்டுள்ளது. சந்தோஷம் என்றால் இராமர் என்றும் துன்பம் என்றால் இராவணன் என்றும் அர்த்தம். நீங்கள் இராவணனை வெற்றி கொள்ளும்பொழுது, இராம இராச்சியம் ஆரம்பமாகிறது. அரைக்கல்பத்திற்குப் பின்னர், இராவணன் வந்து இராம இராச்சியத்தை வெற்றிகொண்டு, அதை ஆட்சிசெய்கிறான். இப்பொழுது நீங்கள் மாயையை வெல்கின்றீர்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளதாகும். இது உங்களுடைய இறை மொழியாகும். கடவுள் எவ்வாறு பேசுகிறார் என்பதை வேறு எவராலும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? இதுவே தந்தையாகிய கடவுளின் மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஞானம் நிறைந்தவர் என்பதால், அவர் ஞானத்தினால் நிரம்பிய ஒரெயொருவராகிய, ஞானக்கடல் என்று கூறப்படுகின்றது. எனவே உண்மையிலேயே அவர் இந்த ஞானத்தை எவருக்காவது கொடுப்பார். பாபா எவ்வாறு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தையும் உலகச் சக்கரத்தின் ஞானத்தையும் கொடுக்கிறார். பின்னர், இந்த ஞானத்தைப் பெறுவதன் மூலம் நாங்கள் பூகோளத்தை ஆட்சிபுரிபவர்கள் ஆகுகிறோம். சுயதரிசன சக்கரம் உள்ளது. நினைவு செய்வதன் மூலம், எங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இது உங்களுடைய வன்முறையற்ற நினைவுச்சக்கரம் ஆகும். அந்தச் சக்கரம் வன்முறைக்குரியது, அது ஒருவரின் தலையை வெட்டுவதற்கானதாகும். அறியாமையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் ஒருவர் மற்றவரின் தலைகளை வெட்டுகிறார்கள். சுயதரிசன சக்கரத்தை அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை நீங்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்ற காமமே, உங்களுடைய மிகப்பெரிய எதிரியாகும். அது துன்பச்சக்கரம் ஆகும். தந்தை உங்களுக்கு இந்தச் சக்கரத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களை சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்களாக ஆக்குகிறார். அவர்கள் சமயநூல்களில் பல்வேறு கதைகளை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது அவை அனைத்தையும் மறந்துவிட வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும், ஏனெனில் நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே கோர முடியும். தந்தையை நினைவுசெய்து, உங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து கோரிக்கொள்ளுங்கள். அது மிகவும் இலகுவானது! எல்லையற்ற தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதனால், அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு அவரை நினைவுசெய்யுங்கள். இதுவே மன்மனாபவ, மதியாஜிபவ என்பவற்றின் அர்த்தமாகும். தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்வதால், குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷ பாதரசம் உயரும். நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தோம், நாங்கள் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை அந்த அதிபதிகள் ஆகுவோம். நாங்களே பின்னர் நரகவாசிகள் ஆகியவர்கள். நாங்கள் சதோபிரதானாக இருந்தோம், இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டோம். நாங்களே பக்தி மார்க்கத்தில் சென்றவர்கள். நாங்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றிவந்தோம். பாரத மக்களாகிய நாங்கள் முதலில், சூரிய வம்சத்திற்கும் பின்னர் சந்திரவம்சத்திற்கும் உரியவர்கள் ஆகிப் பின்னர், வைசிய வம்சத்திற்குள் இறங்கி வந்தோம். பாரத மக்களாகிய நாங்கள் தேவர்களாக இருந்து பின்னர், கீழே வீழ்ந்தோம். இப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தெரியும். நீங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, மிகவும் அழுக்காகிவிட்டீர்கள். அவர்கள் ஆலயங்களில் அத்தகைய அவலட்சணமான உருவங்களையும் உருவாக்கியுள்ளார்கள். முன்னர், அவர்கள் அத்தகைய வடிவங்களுடன் மணிக்கூடுகளையும் உருவாக்குவது வழக்கமாகும். முன்னர் நீங்கள் மிகவும் அழகாக இருந்தீர்கள் என்பதையும் பின்னர் மறுபிறவி எடுக்கையில் மிகவும் அழுக்காகிவிட்டீர்கள் என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தபொழுது, தெய்வீகக் குணங்களைக் கொண்ட மனிதர்களாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு அசுர குணங்களே உள்ளன, வேறு எந்த வேறுபாடும் இல்லை. ஒரு வாலுடனோ அல்லது ஒரு தும்பிக்கையுடனோ எந்த மனிதர்களும் இருப்பதில்லை. இவ்விடயங்கள் வெவ்வேறு தேவர்களின் அடையாளங்கள் ஆகும். சுவர்க்கம் மறைந்துவிட்டது, அந்தப் படங்கள் அடையாளங்களாக எஞ்சியிருந்தன. சந்திர வம்சத்தின் அடையாளமும் உள்ளது. இப்பொழுது நீங்கள் மாயையை வெல்வதற்கு யுத்தம் செய்கிறீர்கள். யுத்தம் செய்கையில் நீங்கள் சித்தியடையாததற்கான அடையாளமே அம்பும் வில்லும் ஆகும். உண்மையில், பாரதமக்கள் தேவ குலத்திற்கு உரியவர்கள். இல்லாவிட்டால், அவர்களை எந்தக் குலம் எனக் கணக்கிடுவது? எவ்வாறாயினும், பாரதமக்கள் தங்கள் குலத்தைப் பற்றி அறியாததனால், அவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைக்கிறார்கள். இல்லாவிட்டால், நீங்கள் அனைவரும் ஒரே குலத்திற்குரியவர்கள். பாரதத்திலுள்ள அனைவரும் எல்லையற்ற தந்தையால் ஸ்தாபிக்கப்பட்ட, தேவகுலத்திற்கு உரியவர்கள். பாரதத்துக்கு ஒரு சமயநூல் மாத்திரம் உள்ளது. தேவவம்சம் ஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து ஏனைய கிளைகள் வெளிப்படுகின்றன. தந்தை தேவதர்மத்தை ஸ்தாபிக்கிறார். நான்கு பிரதான சமயங்கள் உள்ளன, அவற்றின் அத்திவாரம் தேவதர்மம் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் முக்திதாமவாசிகள். பின்னர் நீங்கள் உங்களுடைய தேவ கிளைக்குள் (அடிமரம்) செல்கிறீர்கள். பாரதத்திற்கு ஓர் எல்லை (அத்திவாரம்) மாத்திரமே உள்ளது. இது வேறெந்த சமயங்களுக்கும் கிடையாது. நீங்கள் ஆதியில் தேவதர்மத்துக்கு உரியவர்கள். பின்னர், நாடகத் திட்டத்திற்கேற்ப, அதிலிருந்து ஏனைய சமயங்கள் வெளிப்படுகின்றன. பாரதத்தின் ஆதிதர்மம், தந்தையினால் ஸ்தாபிக்கப்பட்ட தேவதர்மம் ஆகும். பின்னர் அதிலிருந்து புதிய இலைகள் வெளிப்படுகின்றன. இந்த முழு விருட்சமும் கடவுளின் விருட்சம் ஆகும். தந்தை கூறுகிறார்: நான் இவ்விருட்சத்தின் விதை ஆவேன். இதுவே அத்திவாரம், அதிலிருந்து பிரதான கிளைகள் வெளிப்படுகின்றன. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே பிரதான விடயமாகும். அனைவரும் நினைவுசெய்யும் ஒரேயொருவரே, ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். தந்தை கூறுகிறார்: உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் நீங்கள் பார்க்கின்ற அனைத்தையும் நீங்கள் மறந்துவிட வேண்டும். இந்த விருப்பமின்மை எல்லையற்றது, ஆனால் அவர்களுடைய விருப்பமின்மையோ எல்லைக்குட்பட்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் ஆர்வமின்மையைக் கொண்டுள்ளார்கள். ஆனால் நீங்களோ பழைய உலகம் முழுவதிலும் ஆர்வமின்மையைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் பக்திசெய்வதை பூர்த்தி செய்து கொள்ளும்பொழுது, உங்களுக்குப் பழைய உலகில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. பின்னர் நாங்கள் சாந்திதாமத்தினூடாக புதிய உலகிற்குச் செல்கிறோம். தந்தை கூறுகிறார்: இந்தப் பழைய உலகம் எரிக்கப்படவுள்ளது. உங்கள் இதயம் இந்தப் பழைய உலகில் பற்று வைக்கக்கூடாது. நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகும்வரை, நீங்கள் இங்கேயே தங்க வேண்டும். உங்கள் கணக்குகள் அனைத்தையும் நீங்கள் தீர்க்க வேண்டும். அரைக்கல்பத்திற்காக, நீங்கள் சந்தோஷத்தைச் சேகரித்துக் கொள்கிறீர்கள். அது சாந்திதாமம் எனவும் அது சந்தோஷதாமம் எனவும் அழைக்கப்படுகிறது. முதலில், சந்தோஷமும் பின்னர் துன்பமும் உள்ளது. புதிய ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிலிருந்து கீழே வருகிறார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். உதாரணமாக, கிறிஸ்துவின் ஆத்மா முதலில் வரும்பொழுது, அவர் எந்தத் துன்பத்தையும் அனுபவம் செய்யவில்லை. இந்த நாடகம் முதலில் சந்தோஷத்தையும் பின்னர் துன்பத்தையும் பற்றியதாகும். புதிதாக வருபவர்கள் சதோபிரதானாகவே இருக்கிறார்கள். உங்களுடைய சந்தோஷத்தின் அனுபவம் அவர்களினுடையதை விடவும் கூடுதலாக உள்ளதைப் போன்றே, உங்களுடைய துன்ப அனுபவமும் கூடுதலாகவே உள்ளது. இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பின்னர் நீங்கள் ஏனைய ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தை ஏற்றுக் கொள்கிறேன். இவருடைய பல பிறவிகளின் இறுதியில் நான் இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கிறேன், அதாவது, நான் ஒரு தமோபிரதான் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். பின்னர் அவர் முதலில் வருபவர் ஆகுகிறார். முதலாம் இலக்கத்திற்குரியவர், இறுதி இலக்கத்திற்கு உரியவராகவும், இறுதி இலக்கத்திற்குரியவர், முதலாம் இலக்கத்திற்கு உரியவராகவும் ஆகுகிறார். இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். முதலாவதாக உள்ளவருக்குப் பின்னர் யார் வருகிறார்? மம்மா. அவரும் தன்னுடைய பாகத்தை நடிக்க வேண்டும்! அவர் பலருக்கும் கற்பித்தல்களைக் கொடுத்துள்ளார். பின்னர், குழந்தைகளாகிய நீங்கள், பலருக்கும் கற்பிப்பதில் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். கற்பவர்களும் உங்களை விடவும் திறமைசாலிகளாகும் வகையில் அத்தகைய முயற்சியைச் செய்கிறார்கள். தங்கள் ஆசிரியர்களை விடவும் திறமைசாலிகள் ஆகுகின்ற மாணவர்கள் பலர் நிலையங்களில் உள்ளார்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அவதானிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவருடைய நடத்தையிலிருந்தும் உங்களால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். மாயை சிலரை அவர்களின் மூக்கைப் பிடித்து முழுமையாக விழுங்கிவிடுகிறாள். அவர்கள் விகாரத்தில் வீழ்கிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், பலரைப் பற்றிக் கேள்விப்படுவீர்கள். நீங்கள் வியப்படைவீர்கள். “இவர் எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார், அவர் ஏன் ஓடிவிட்டார்? அவர் எங்களைத் தூய்மையாகுமாறு கூறுவது வழக்கம், இப்பொழுது அவரே அழுக்காகிவிட்டார்”. உங்களால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள இயலும். பலர் அழுக்காகுகிறார்கள். பாபா கூறியுள்ளார்: மிகச் சிறந்த மகாராத்திகளையும் மாயை பெருமளவு தொல்லைப்படுத்துவாள். நீங்கள் மாயையைத் தொல்லைப்படுத்தி, அவளை வெற்றிகொள்வது போன்றே, மாயையும் செய்கிறாள். அத்தகைய முதற்தரமான களிப்பூட்டும் பெயர்களைத் தந்தை உங்களுக்குக் கொடுத்தார், ஆனால் ஓ மாயையே! அவர்கள் ஞானத்தால் வியப்படைந்து, அதை ஏனையோர்களுக்குக் கூறிப் பின்னர் ஓடிவிடுகிறார்கள்! அவர்கள் வீழ்ந்துவிடுகிறார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்! இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது ஒரு யுத்தகளம் ஆகும். மாயையுடனான உங்கள் யுத்தம் மிகவும் மகத்தானது! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் இங்கேயே தீர்த்து, அரைக்கல்பத்திற்கான சந்தோஷத்தைச் சேகரித்துக் கொள்ளுங்கள். இப்பழைய உலகின் மீது உங்கள் இதயத்தை இணைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் பௌதீகக் கண்களால் பார்க்கின்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள்.2. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் கல்வியில் விரைவாகப் பாய்ந்து சென்று, முன்னேறுங்கள். ஒரு தந்தை கூறுவதை மாத்திரம் செவிமடுத்து, அவர் கூறுவதை மாத்திரமே ஏனையோருக்குக் கூறுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற பார்வையையும் எல்லையற்ற மனோபாவத்தையும் ஸ்திதியையும் கொண்டிருப்பதன் மூலம் எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற டபிள் லைற் தேவதை ஆகுவீர்களாக.எல்லோரும் தேவதைகளை அதிகம் விரும்புகிறார்கள். ஏனென்றால், தேவதைகள் ஓரிருவருக்கு மட்டுமன்றி, எல்லோருக்கும் சொந்தமானவர்கள். தேவதைகளுக்கு எல்லையற்ற பார்வையும் எல்லையற்ற மனோபாவமும் ஸ்திதியும் உள்ளன. அத்துடன் தேவதைகள் சகல ஆத்மாக்களுக்கும் இறை செய்தியாளர்கள் ஆவார்கள். ஒரு தேவதை இலேசாகவும் ஒளியாகவும் இருப்பவர். எல்லோரும் இறைவனுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்த உதவுபவர். அத்துடன் சரீரங்களில் இருந்தும் சரீர உறவுகளில் இருந்தும் பற்றற்று இருப்பவர். தங்களையும் மற்றவர்களையும் தமது செயல்பாடுகளாலும் முகங்களாலும் தந்தையை ஒத்தவர்களாக ஆக்குபவர்கள், சகலருக்கும் நன்மை செய்கிறார்கள். இத்தகைய தேவதைகள் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்கள்.
சுலோகம்:
தந்தையின் முகம், உங்களின் முகத்தில் புலப்படும்போது, நிறைவு செய்தல் இடம்பெறும்.