29.01.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் யோக சக்தியின் மூலம் உங்கள் பாவங்களை அழிக்க வேண்டும். நீங்கள் தூய்மையாகி, உலகையும் தூய்மையாக்க வேண்டும். இதுவே உங்கள் சேவையாகும்.
கேள்வி:
தேவ தர்மத்தின் எந்தச் சிறப்பியல்பு புகழப்படுகின்றது?பதில்:
தேவ தர்மமே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. அங்கே துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்கமாட்டாது. கல்பத்தின் முக்கால் பாகத்திற்குக் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். அரைவாசிப் பாகம் சந்தோஷமும், அரைவாசிப் பாகம் துன்பமுமாக இருந்திருந்தால், அந்தளவு சந்தோஷம் இருக்கமாட்டாது.ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார்: எந்த ஒரு மனிதரையும் கடவுள் என அழைக்க முடியாது எனக் கடவுள் விளங்கப்படுத்துகின்றார். தேவர்களையும் கடவுள் என அழைக்க முடியாது. கடவுள் அசரீரியானவர். அவருக்குச் சரீர ரூபமோ அல்லது சூட்சும ரூபமோ இல்லை. சூட்சும உலகவாசிகளும் கூட சூட்சும ரூபங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இதனாலேயே அந்த இடம் சூட்சும உலகம் என அழைக்கப்படுகின்றது. இங்கே, நீங்கள் பௌதீகச் சரீரங்களைக் கொண்டிருக்கிறீர்கள், இதனாலேயே இது பௌதீக உலகம் என அழைக்கப்படுகின்றது. ஐந்து தத்துவங்களினால் உருவாக்கப்பட்ட இந்தப் பௌதீக சரீரமானது, சூட்சும உலகில் இருப்பதில்லை. இந்த மனித சரீரங்கள் ஐந்து தத்துவங்களினால் உருவாக்கப்பட்டவை. அவை களிமண் பொம்மைகள் என்று அழைக்கப்படுகின்றன. சூட்சும உலக வாசிகளைக் களிமண் பொம்மைகள் என கூறமுடியாது. தேவ தர்மத்தவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்களுடைய மனிதர்கள். அவர்கள் தெய்வீக குணங்களைச் சிவபாபாவிடமிருந்து பெற்றார்கள். தெய்வீகக் குணங்களையுடைய மனிதர்களுக்கும், அசுர குணங்களை உடையவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. மனிதர்களே சிவாலயத்தில் வாழத் தகுதியானவர்களாகவும், விபச்சார விடுதியில் வாழத் தகுதியானவர்களாகவும் ஆகுபவர்கள். சத்தியயுகம் சிவாலயம் என அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் இங்கேயே இருக்கின்றது. அது அசரீரி உலகிலோ அல்லது சூட்சும உலகிலோ இருப்பதில்லை. சிவபாபாவினாலேயே சிவாலயம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் எப்போது அதனை ஸ்தாபித்தார்? சங்கமயுகத்தில் ஆகும். இது அதி மங்களகரமான சங்கமயுகம். இந்த உலகம் இப்பொழுது தூய்மையற்று, தமோபிரதானாக உள்ளது. இதைப் புதிய, சதோபிரதான் உலகம் என அழைக்க முடியாது. புதிய உலகம் சதோபிரதான் ஆனது என அழைக்கப்படுகிறது, அது பழையதாகின்ற போது, தமோபிரதான் ஆனது என்று அழைக்கப்படுகின்றது. எவ்வாறு மீண்டும் அது சதோபிரதான் ஆகுகின்றது? குழந்தைகளாகிய உங்களின் யோக சக்தியினால் ஆகும். யோக சக்தியினாலேயே உங்களுடைய அனைத்துப் பாவங்களும் அழிக்கப்பட்டு நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். தூய்மையானவர்களுக்கு நிச்சயமாக ஒரு தூய உலகம் தேவைப்படுகிறது. புதிய உலகம் தூய்மையானது என்றும், பழைய உலகம் தூய்மையற்றது என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தை தூய உலகை ஸ்தாபிக்கின்றார், இராவணன் தூய்மையற்ற உலகை ஸ்தாபிக்கின்றான். எம் மனிதரும் இந்த விடயங்களை அறியார். இந்த ஐந்து விகாரங்களும் இல்லாவிடில் மக்கள் சந்தோஷம் அற்றவர்கள் ஆகவோ அல்லது தந்தையை நினைவு செய்யவோ மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நானே துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர். மக்கள் ஐந்து விகாரங்களாகிய இராவணனின் உருவத்தை 10 தலைகளுடன் உருவாக்குகின்றார்கள். அவர்கள் இராவணனைத் தங்கள் எதிரியாகக் கருதி, அவனை எரிக்கின்றார்கள். துவாபரயுகத்தின் ஆரம்பத்திலிருந்து அவர்கள் ஒரு கொடும்பாவியை எரிக்க ஆரம்பிக்கிறார்கள் என்றில்லை, இல்லை. அவர்கள் தமோபிரதான் ஆகும்பொழுது, சிலர் அவர்களுடைய புதிய கருத்துக்களுடன் வந்தார்கள். ஒருவர் பெருமளவு துன்பத்தைக் கொடுக்கின்ற பொழுது, அவரது கொடும்பாவி உருவாக்கப்படுகின்றது. இங்கும், மக்கள் பெருமளவு துன்பத்தை அனுபவம் செய்கின்ற பொழுதே, அவர்கள் இராவணனின் கொடும்பாவியைச் செய்து, அதை எரிக்கின்றார்கள். கல்பத்தின் முக்கால் பாகத்;திற்குக் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவஞ் செய்கின்றீர்கள். அது அரைக்கு அரைவாசியாக இருந்தால், அதில் என்ன சந்தோஷம் இருந்திருக்கும்? தந்தை கூறுகின்றார்: உங்களுடைய தேவ தர்மமே உங்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. உலக நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டது. ஏன் உலகம் உருவாக்கப்பட்டது என்றோ அல்லது எப்போது அது முடிவடையும் என்றோ எவருமே வினவ முடியாது. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. கல்பத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனச் சமயநூல்களிலே கூறப்பட்டுள்ளது. உலகம் மாற்றப்படவுள்ள பொழுது, சங்கமயுகம் நிச்சயமாக இருக்க வேண்டும். வேறு எவருமே இவ்வாறு புரிந்துகொள்ள மாட்டார்கள் என இப்பொழுது நீங்கள் உணர்கின்றீர்கள். இராதையும், கிருஷ்ணரும் அவர்களுடைய இளமைப் பருவத்துப் பெயர்கள் என்றும், பின்னர் அவர்கள் திருமணம் செய்கின்றார்கள் என்றும் கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் வெவ்வேறு இராச்சியத்திற்கு உரியவர்கள், பின்னர், அவர்கள் திருமணம் செய்யும் பொழுது இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றார்கள். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் ஒவ்வொருவரின் இதயத்திலுள்ள இரகசியங்களை அறிபவர் என்றில்லை. இப்பொழுது தந்தை வந்து ஞானத்தைக் கொடுக்கிறார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஞானம் பாடசாலைகளிலேயே (கற்பதற்கான இடம்) பெறப்படுகின்றது. ஒரு பாடசாலையில் நிச்சயமாக இலக்கும் குறிக்கோளும் இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். நீங்கள் இந்த அழுக்கான உலகில் ஆட்சிசெய்ய முடியாது. நீங்கள் அழகான உலகில் ஆட்சி செய்வீர்கள். சத்தியயுகத்திலே எவருமே இராஜயோகம் கற்பிப்பதில்லை. சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை இராஜயோகம் கற்பிக்கின்றார். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். தந்தை எப்பொழுது வருகின்றார் என எவருக்கும் தெரியாது. அனைவரும் காரிருளில் இருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் தங்களைச் சூரிய வம்சத்தவர்கள் என அழைக்கின்றார்கள். உண்மையில், தேவர்களே சூரிய வம்சத்திற்கு உரியவர்கள். சூரியவம்ச இராச்சியம் சத்திய யுகத்திலேயே இருக்கின்றது. ஞானசூரியன் உதிக்கும்பொழுது, பக்திமார்க்கம் எனும் இருள் அகல்கின்றது என கூறப்பட்டுள்ளது. புதிய உலகம் பழையதாகவும், பழைய உலகம் புதியதாகவும் ஆகுகின்றது. இந்த உலகம் பெரிய, எல்லையற்ற வீடாகும். இது பெரிய மேடையாகும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் பெருமளவு வேலை செய்கின்றன. இரவிலே பெருமளவு வேலை செய்யப்படுகின்றது. பகலிலே உறங்கி, இரவிலே சபையைக் கூட்டிய அரசர்கள் சிலர் இருந்தார்கள். அவர்கள் பொருட்களை வாங்குவதற்கு இரவிலேயே வெளியே செல்வார்கள். இப்பொழுதும், சில இடங்களில் இது நடைபெறுகின்றது. ஆலைகள் போன்றவை இரவிலே செயற்படுகின்றன. இது எல்லைக்குட்பட்ட பகலும், இரவும் ஆகும். ஆனால் மற்றையதோ எல்லையற்ற விடயமாகும். இவ் விடயங்கள் உங்களைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இருப்பதில்லை. அவர்கள் சிவபாபாவைக் கூட அறியமாட்டார்கள். தந்தை தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். பிரம்மாவையிட்டு, அவரே மனித குலத்தின் தந்தை என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை உலகைப் படைக்க வருகின்ற பொழுது, அவர் நிச்சயமாக ஒருவரினுள் பிரவேசிக்க வேண்டும். சத்திய யுகத்தில் தூய மனிதர்கள் இருக்கிறார்கள். கலியுகத்தில் அனைவரும் விகாரத்தின் மூலம் பிறப்பெடுக்கின்றார்கள். அதனாலேயே அவர்கள் தூய்மை அற்றவர்கள் என அழைக்கப்படுகின்றனர். விகாரம் இல்லாது உலகம் எவ்வாறு தொடர முடியும் என மக்கள் வினவுகின்றார்கள். எவ்வாறாயினும், தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் அத்தகைய சுத்தத்துடனும், தூய்மையுடனும் அவர்களுக்கு ஆலயங்களைக் கட்டுகின்றீர்கள். அந்தப் பிராமணர்களைத் தவிர வேறு எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவது இல்லை. உண்மையில் எந்த விகாரமானவர்களும் அந்தத் தேவர்களின் சிலையைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், இந்நாட்களில் உங்களிடம் பணம் இருந்தால், எதையும் செய்யமுடியும். மக்கள் தங்களின் வீடுகளில் ஆலயம் ஒன்றை வைத்திருக்கும் பொழுது, அவர்கள் ஒரு பிராமணப் புரோகிதரை வருமாறு அழைக்கின்றார்கள். இப்பொழுது அந்தப் பிராமணப் புரோகிதர்களும் விகாரமானவர்கள். அவர்கள் இயல்பாகவே பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவ் உலகம் விகாரமானது, எனவே வழிபாடுகளும், விகாரம் உடையவர்களால் நடாத்தப்படுகின்றன. விகாரம் அற்றவர்கள் எங்கிருந்து வரமுடியும்? சத்தியயுகத்தில் மாத்திரம் விகாரமற்றவர்கள் இருக்கிறார்கள். விகாரத்தில் ஈடுபடாதவர்கள் விகாரம் அற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள் என்றில்லை. அவர்களின் சரீரங்கள் விகாரத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை. இந்த முழு உலகமும் இராவணனது இராச்சியம் என்பதே தந்தை விளங்கப்படுத்தியுள்ள முக்கிய விடயம் ஆகும். இராம இராச்சியத்திலே முற்றிலும் விகாரம் அற்றவர்கள் இருக்கிறார்கள், இராவண இராச்சியத்திலே விகாரமானவர்களே இருக்கிறார்கள். சத்தியயுகத்தில் தூய்மை இருந்தது, அத்துடன் அமைதியும் செழிப்பும் இருந்தன. சத்தியயுகத்தில் எவ்வாறு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என நீங்கள் காட்ட முடியும். அங்கே ஐந்து விகாரங்கள் இருப்பதில்லை. அது கடவுள் ஸ்தாபிக்கின்ற, தூய இராச்சியமாகும். கடவுள் தூய்மையற்ற இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. சத்தியயுகத்தில் மக்கள் தூய்மையற்று இருந்திருந்தால், அவர்கள் கடவுளை அழைத்திருப்பார்கள். அங்கே எவரும் அழைப்பதில்லை. சந்தோஷத்தில் உள்ள எவரும் கடவுளை நினைவு செய்வதில்லை. மக்கள் கடவுளின் புகழைப் பாடி, அவரே சந்தோஷக்கடலும், தூய்மைக்கடலும் எனக் கூறுகின்றார்கள். உலகில் அமைதி நிலவ வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் எவ்வாறு மனிதர்களால் முழு உலகிலும் இப்பொழுது அமைதியை ஏற்படுத்த முடியும்? சுவர்க்கத்திலேயே அமைதி இராச்சியம் இருக்கின்றது. மக்கள் ஒருவருடன் மற்றவர் சண்டையிடும் பொழுது, அவர்களிடையே அமைதியை வேறொருவரே ஏற்படுத்த வேண்டும். அங்கே ஒரேயொரு இராச்சியம் மாத்திரமே இருக்கிறது. தந்தை கூறுகிறார்: இப் பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. அனைவரும் இந்த மகா யுத்தத்தில் (மகாபாரதம்) அழிக்கப்படுவார்கள். “விநாச நேரத்தில் கடவுளின் மீது அன்பான புத்தியைக் கொண்டிராதவர்கள்” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. நீங்களே உண்மையான பாண்டவர்கள்: நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள்: நீங்கள் அனைவருக்கும் முக்தி தாமத்திற்கான பாதையைக் காட்டுகின்றீர்கள். அது அமைதி தாமமாகிய, ஆத்மாக்களின் வீடு ஆகும், ஆனால் இது துன்பதாமமாகும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது இந்தத் துன்ப உலகைப் பார்க்கும் பொழுதும், அதை மறந்து விடுங்கள். நாங்கள் இப்பொழுது அமைதி தாமத்துக்குத் திரும்ப வேண்டும். ஆத்மாவே இதைக் கூறுகின்றார். ஆத்மாவே இதை உணர்கின்றார். “நான் ஓர் ஆத்மா” என்ற விழிப்புணர்வு ஆத்மாவுக்கு இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறாக இருக்கின்றேன் அல்லது எந்த ரூபமாக இருக்கின்றேன் என வேறு எவரும் புரிந்து கொள்வதில்லை. நான் ஒரு புள்ளி என நான் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளேன். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் எவ்வாறு சுற்றி வந்தீர்கள் என மீண்டும், மீண்டும் நினைவுசெய்ய வேண்டும். இதனைச் செய்வதனால், நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்கள். அத்துடன் நீங்கள் வீட்டையும், சக்கரத்தையும் நினைவு செய்வீர்கள். இந்த உலகின் வரலாறு, புவியியல் பற்றி நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். பல்வேறு தேசங்கள் இருக்கின்றன. பலவகையான யுத்தம் போன்றவையும் இருக்கின்றன. சத்தியயுகத்தில் யுத்தம் போன்றவை பற்றிய கேள்விக்கே இடமில்லை. இராம இராச்சியத்திற்கும், இராவண இராச்சியத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். தந்தை கூறுகின்றார்: அது நீங்கள் இப்பொழுது கடவுளின் இராச்சியத்தில் இருப்பதைப் போன்றுள்ளது. ஏனெனில் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்காகக் கடவுள் இங்கே வந்துள்ளார். கடவுள் அந்த இராச்சியத்தை ஆட்சி செய்வதில்லை. அவர் தனக்கென ஓர் இராச்சியத்தையும் கோரிக் கொள்வதில்லை. அவர் தன்னலமற்ற சேவை செய்கின்றார். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய கடவுளே அதி மேன்மையானவர். “பாபா” என்று கூறுவதனால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். உங்கள் இறுதி ஸ்திதியாகிய அதீந்திரிய சுகம் நினைவு கூரப்படுகின்றது. உங்களுடைய பரீட்சைக்கான நாட்கள் அண்மித்து வருகின்ற நேரத்தில், நீங்கள் அனைத்துக் காட்சிகளையும் காண்பீர்கள். குழந்தைகளாகிய உங்களின் அதீந்திரிய சுகம் வரிசைக்கிரமமானது. சிலர் பெருமளவு சந்தோஷத்துடன் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நாள் முழுவதும் இந்த உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்: ஓ பாபா, நீங்கள் எங்களைப் பெருமளவு மாற்றியுள்ளீர்கள்! நாங்கள் உங்களிடமிருந்து பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றோம். தந்தையை நினைவு செய்கின்ற பொழுது அன்புக்கண்ணீர் சிந்துகின்றீர்கள். எவ்வாறு நீங்கள் வந்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்தீர்கள் என்பதுவும் ஓர் அற்புதமே. நீங்கள் எங்களை நச்சுக் கடலிலிருந்து அகற்றி, பாற்கடலுக்கு அழைத்துச் செல்கின்றீர்கள். நாள் முழுவதும் இந்த உணர்வை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு நினைவூட்டும் போது, உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் குமிழியிட வேண்டும். சிவபாபா எங்களுக்கு இராஐயோகம் கற்பிக்கின்றார். சிவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. ஆனால் மக்கள் கீதையில் சிவபாபாவின் பெயருக்குப் பதிலாக, ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்திவிட்டார்கள். இதுவே அவர்கள் செய்த மாபெரும் தவறாகும். இதுவே கீதையில் உள்ள முதற்தரமான தவறாகும். நாடகம் இவ்வாறாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து, இந்தத் தவறைத் திருத்தி, தூய்மையாக்குபவர் தானேயன்றி, ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்று கூறுகிறார். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றினேன். மறுபிறவி எடுக்காதவர், அமரத்துவமான ரூபம் என என்னைப் பற்றிய புகழ் உள்ளது. நீங்கள் ஸ்ரீகிருஷ்ணருக்கு இந்தப் புகழைப் பாட மாட்டீர்கள். அவர் மறுபிறவி எடுக்கின்றார். குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும் இவ் விடயங்கள் அனைத்தையும் தங்கள் புத்தியில் வைத்திருப்பவர்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். ஞானத்துடன் கூடவே உங்கள் நடத்தையும் நன்றாக இருப்பது அவசியம் ஆகும். மாயையும் குறைந்தவளல்ல. முதலில் வந்தவர்கள் நிச்சயமாக அந்தளவு சக்தியைக் கொண்டிருப்பார்கள். பலவிதமான நடிகர்கள் இருக்கின்றனர். பாரத மக்களுக்கே கதாநாயகன், கதாநாயகி ஆகிய பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் இராவண இராச்சியத்திலிருந்து அனைவரையும் விடுவிக்கின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, அவள் உங்களை ஏமாற்றுகிறாள். பாபா அன்புக்கடல், எனவே குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று அன்புக்கடல்கள் ஆகவேண்டும். கசப்பான வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் எவருக்காவது துன்பம் கொடுத்தால் துன்பத்திலேயே மரணிப்பீர்கள். நீங்கள் அந்தப் பழக்கங்கள் அனைத்தையும் இப்பொழுதே முடித்து விடவேண்டும். நச்சுக்கடலில் திணறுவதே அதி தீய பழக்கமாகும். தந்தையும் கூறுகின்றார். காமமே உங்களது கொடிய எதிரி. பல புத்திரிகள் அடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தூய்மையாக இருக்கலாம் எனச் சிலர் தங்கள் புத்திரிகளுக்குக் கூறுகின்றனர். ஆ! ஆனால் அவர்களே முதலில் தங்களைத் தாங்களே தூய்மையாக்க வேண்டும். அவர்களுடைய புத்திரிகளைக் கொடுப்பதன் மூலம், குறைந்தபட்சம், அனைத்துச் செலவுகளின் சுமையிலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் புத்திரிகளின் பாக்கியத்தில் என்ன இருக்கின்றது என்பதையும், அவள் ஒரு சந்தோஷமான வீட்டை அடைவாளா, இல்லையா என்பதையும் அறிய மாட்டார்கள். இந்த நாட்களில் பெருமளவு செலவு இருக்கின்றது. ஏழைகள் தங்கள் புத்திரிகளை மிகவிரைவாக அர்ப்பணிப்பார்கள். அதேவேளை சிலருக்குப் பெருமளவு பற்றும் இருக்கின்றது. முன்னர் ஒரு சுதேசிப் பெண்மணி இங்கே வருவது வழக்கம். ஆனால் அவர்கள் மந்திர வித்தைக்குப் பயந்ததால், அவளை ஞானத்திற்குள் வர அனுமதிக்கவில்லை. கடவுள் மந்திர வித்தைக்காரர் எனக் அழைக்கப்படுகின்றார். கடவுள் கருணை நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஸ்ரீகிருஷ்ணரை அவ்வாறு அழைக்க முடியாது. கருணை நிறைந்தவரே உங்களைக் கருணை அற்றவரிடமிருந்து விடுவிக்கிறார். இராவணன் கருணையற்றவன். முதலில் ஞானம் இருக்கின்றது. ஞானம், பக்தி, விருப்பமின்மை இருக்கிறது. பக்தி, ஞானம், பின்னர் விருப்பமின்மை என்று கூறப்படுவதில்லை. “ஞானத்தில் விருப்பமின்மை” என்று நீங்கள் கூறமுடியாது. நீங்கள் பக்தியிலேயே விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். இதனாலேயே ஞானம், பக்தி, விருப்பமின்மை என்ற பதங்கள் சரியானவையாகும். தந்தை உங்களை எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்குமாறு, அதாவது, பழைய உலகம் முழுவதிலுமே விருப்பமின்மையைக் கொண்டிருக்குமாறு தூண்டுகிறார். சந்நியாசிகள் உங்கள் இல்லறத்தில் மாத்திரமே விருப்பமின்மையைக் கொண்டிருக்குமாறு உங்களைத் தூண்டுகிறார்கள். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவை மனிதர்களின் புத்தியில் தங்குவதில்லை. பாரதம் 100 வீதம் செல்வம் மிக்கதாகவும், விகாரமற்றதாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. இங்கே அகால மரணங்கள் ஒருபோதும் இருக்கவில்லை. உங்களில் வெகு சிலராலேயே இந்த விடயங்களைக் கிரகிக்க முடிகின்றது. நல்ல சேவை செய்பவர்கள், மிகுந்த செல்வந்தர்கள் ஆகுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முழு நாளுமே “பாபா, பாபா” என நினைவு செய்யவேண்டும். எவ்வாறாயினும், மாயை இதைச் செய்ய உங்களை அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் சதோபிரதானாக விரும்பினால், நீங்கள் நடக்கும் பொழுதும், உலாவித் திரியும் பொழுதும், உண்ணும் பொழுதும் என்னை நினைவு செய்யுங்கள். நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நீங்கள் என்னை நினைவு செய்ய மாட்டீர்களா? உங்களில் பலருக்கு மாயையின் புயல்கள் பல உள்ளன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் நடைபெறும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சுவர்க்கம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும். உலகம் எப்பொழுதுமே புதியதாக இருக்க முடியாது. சக்கரம் சுழல வேண்டும், எனவே நீங்கள் மீண்டும் நிச்சயமாக கீழிறங்க வரவேண்டும். அனைத்தும் நிச்சயமாகப் புதியதிலிருந்து பழையதாக வேண்டும். இந்நேரத்தில் மாயை அனைவரையும் ஏப்ரல் முட்டாள் ஆக்கியுள்ளாள். தந்தை உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு வருகிறார். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நம்ஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று அன்புக்கடல்கள் ஆகுங்கள். ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். கசப்பான வார்த்தைகளைப் பேசாதீர்கள். உங்கள் தீய பழக்கங்கள் அனைத்தையும் முடித்து விடுங்கள்.2. பாபாவுடன் இனிமையாக உரையாடும் பொழுது இந்த உணர்வைப் பேணுங்கள்: ஓ பாபா, நீங்கள் எங்களை அதிகளவு மாற்றியுள்ளீர்கள்! நீங்கள் எங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளீர்கள்! பாபா, நீங்கள் எங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கின்றீர்கள். நாள் முழுவதும் பாபாவின் நினைவைக் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உறவுமுறைகளினதும் சகல நற்குணங்களினதும் அனுபவத்தால் நிரம்பியவராகி, அதன் மூலம் முழுமை ரூபம் ஆகுவீர்களாக.சங்கமயுகத்தில், நீங்கள் குறிப்பாக உங்களைச் சகல பேறுகளாலும் நிரம்பியவர் ஆக்க வேண்டும். ஆகவே, உங்களின் சகல பொக்கிஷங்கள், உறவுமுறைகள், நற்குணங்கள், பணிகளை உங்களின் முன்னால் வைத்து, இந்த விடயங்கள் அனைத்திலும் நீங்கள் அனுபவசாலிகள் ஆகிவிட்டீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். உங்களிடம் ஏதாவது அனுபவம் இல்லாமல் போகுமாயின், அதனால் உங்களைச் சம்பூரணம் ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் ஓர் உறவுமுறை அல்லது நற்குணம் இல்லாவிட்டால், உங்களை முழுமை ஸ்திதி உடையவர் என்றோ அல்லது சம்பூரண ரூபம் என்றோ சொல்ல முடியாது. ஆகவே, தந்தையின் நற்குணங்களையும் உங்களின் ஆதி ரூபத்தின் நற்குணங்களையும் அனுபவம் செய்யுங்கள். நீங்கள் முழுமை ரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
அழுத்தம் கொடுப்பவராக ஆகுவதெனில், உங்களின் மனதில் அழுவதாகும். ஆகவே, இப்போது அழுகின்ற பைலை மூடுங்கள்.உங்களின் சக்திவாய்ந்த மனதால், சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.
உங்களின் மனதினூடாகச் சேவை செய்வதற்கு, சகல சக்திகளையும் உங்களின் வாழ்க்கையின் அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். தந்தையைப் போல், முழுமையானவர் ஆகுங்கள். அப்போது உங்களுக்குள்ளே எந்தவிதமான குறைபாடுகளும் எஞ்சியிருக்காது. அப்போது மட்டுமே உங்களின் மேன்மையான எண்ணங்களின், அதாவது, உங்களின் மனதின் ஒருமுகப்படுத்தலால் உங்களின் சகாஷ் இயல்பாகவே பரவும்.