29.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் இதயத்தை ஒருபோதும் இப்பழைய உலகுடனோ அல்லது சரீரதாரிகளுடனோ இணைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இதயத்தை அவற்றுடன் இணைத்துக் கொள்வீர்களாயின், உங்கள் பாக்கியம் அகன்று விடுகின்றது.
கேள்வி:
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்நாடகத்தின் எந்த ஆழமான இரகசியத்தைக் கூறியுள்ளார்?பதில்:
குழந்தைகளே, இந்த நாடகம் இப்பொழுது முடிவடைய இருப்பதால், சகல ஆத்மாக்களும் இங்கு பிரசன்னமாக இருக்கவேண்டும். அனைவரதும் தந்தை இப்பொழுது இங்கு பிரசன்னமாக இருப்பதால், அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த ஆத்மாக்கள் அனைவரும் இப்பொழுது இங்கு பிரசன்னம் ஆகுவார்கள். அனைவரும் தந்தையை நமஸ்கரிக்க வந்தாக வேண்டும். அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த ஆத்மாக்கள் ‘மன்மனாபவ’ என்ற மந்திரத்துடன் திரும்பிச் செல்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் ‘மதியாஜிபவ’ என்ற மந்திரத்தைக் கிரகிக்கவோ, அல்லது பூகோளத்தை ஆட்சி செய்பவர்களாகவோ ஆக மாட்டார்கள்.பாடல்:
இதயம் அதன் ஆதாரத்திலிருந்து துண்டிக்கப்படாமலும் அதன் மூலம்; உருவாக்கப்பட்டுள்ள பாக்கியத்தை இழக்காமலும் இருப்பதாக......ஓம் சாந்தி.
அனைத்து நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் இதனை இன்று செவிமடுக்கின்றீர்கள். ஏனைய குழந்தைகள் அதை இரண்டு அல்லது நான்கு நாட்களின் பின்னரே செவிமடுப்பார்கள். நீங்கள் உங்களின் இதயத்தைப் பழைய உலகுடன் அல்லது பழைய சரீரத்துடன் இணைத்துக் கொள்வீர்களாயின், உங்கள் பாக்கியம் அகன்று விடுகின்றது. ஏனெனில், அச்சரீரமும் இப்பழைய உலகத்திற்கு உரியதாகும். நீங்கள் சரீர உணர்வு உடையவராகினால், நீங்கள் உருவாக்குகின்ற பாக்கியம் அகன்று விடுகின்றது. அபாக்கியசாலிகளாக இருந்த நீங்கள் இப்பொழுது மிகவும் பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். எனவே, உங்களின் எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்கு வழங்குகின்ற தந்தையொருவரை இயன்றவரை நினைவு செய்யுங்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். இப்பழைய உலகில் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் இவ்வுலகில் முயற்சி செய்து, நிச்சயமாக சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். தூய்மையாக உள்ள பலர் உள்ளனர். அதேசமயம் அடிக்கடி வீழ்ந்து விடுகின்ற பலரும் உள்ளனர். பாபா கூறுகின்றார்: நீங்கள் சேவையில் தந்தையின் சகபாடிகள் ஆகவேண்டும். இந்த உலகம் முழுவதையும் தூய்மை அற்றதில் இருந்து தூய்மை ஆக்குவது மாபெரும் சேவையாகும். அனைவருமே தந்தைக்கு உதவி செய்வார்கள் என்றில்லை. முன்னைய கல்பத்தில் உதவி செய்த, பிராமண குலத்தின் அலங்காரங்களான பிரம்மா குமாரர்கள், குமாரிகள் ஆகியுள்ளவர்களே விவேகிகள் ஆகுவார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் நினைவு கூரப்படுகின்றது. பிரம்மாவின் குழந்தைகள் நிச்சயமாக பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் நிச்சயமாகக் கடந்த காலத்திலும் இருந்தார்கள். மக்கள் ஆதி தேவனையும், ஆதி தேவியையும்கூட நினைவு செய்கின்றார்கள். கடந்த காலத்தில் இருந்த எதுவும் நிச்சயமாக மீண்டும் இருக்கவே வேண்டும். சத்திய யுகம் கடந்த காலத்தில் இருந்தது என்றும், அப்போது ஆதிசனாதன தேவர்களின் இராச்சியம் அங்கு இருந்தது என்றும் நீங்கள் அறிவீர்கள். அது இப்பொழுது இல்லை. தூய இல்லறப் பாதையில் இருந்து ஆட்சி செய்த தேவர்கள் இப்பொழுது அவர்களின் 84 பிறவிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளனர். அவர்கள் இப்பொழுது தூய்மையாகவும் இல்லை, அவர்களிடம் அந்த இராச்சியமும் இல்லை. அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டனர். தந்தை அவர்களைத் தூய்மை ஆக்குவதற்காக மீண்டும் ஒரு தடவை வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: உங்களின் புத்தியின் யோகத்தைத் தூய்மை அற்றவர்களுடன் இணைக்காதீர்கள். ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையின் ஆலோசனைகளைப் பின்பற்றி உங்களின் ஆஸ்தியை அவரிடமிருந்து கோருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். பாபாவும் உங்களின் ஆஸ்தியைக் கோருவதற்கான வழியை உங்களுக்குக் காண்பிக்கின்றார். மக்கள் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குகின்றனர். சிலர் விஞ்ஞானத்தின் பெருமையைக் கொண்டிருக்கின்றனர், சிலரோ மருத்துவத்தின் பெருமையைக் கொண்டுள்ளனர். ஒருவரின் இதயம் செயற்படா விட்டால், அதற்குப் பதிலாக பிளாஸ்ரிக் இதயத்தை வைக்க முடியும் என அவர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் உண்மையான இதயத்தை அகற்றிவிட்டு, செயற்கையான இதயத்தைச் செயற்பட வைக்கின்றனர். அது அத்தகையதோர் திறமையாகும். அது தற்காலிக சந்தோஷத்திற்கே ஆகும். அவர் நாளைக்கே இறக்க நேரிட்டால், சரீரமும் முடிவடைந்து விடும். எந்தப் பலனுமே இல்லாமல் போய்விடும். அவர் பெற்றுக் கொண்டதெல்லாம் தற்காலிகமானதே. அவர்கள் விஞ்ஞானத்தின் மூலம் பல அற்புதங்களைக் காட்டுகின்றார்கள். ஆனால் அதுவும் தற்காலிகமானதே. இது முற்றிலும் தனித்துவமான விடயமாகும். தூய ஆத்மா 84 பிறவிகள் எடுத்து இப்பொழுது தூய்மையற்றவர் ஆகிவிட்டார். தூய்மையற்ற ஆத்மாக்கள் இப்பொழுது மீண்டும் தூய்மையாக்கப்பட வேண்டும். ஆனால் தந்தையைத் தவிர வேறு எவராலும் அதைச் செய்ய முடியாது. ஒருவருக்கு மாத்திரமே புகழ் உள்ளது. அவரே அனைவரையும் தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், அனைவர் மீதும் கருணைப் பார்வை கொண்டவரும், அனைவர் மீதும் கருணை கொண்ட தலைவரும் ஆவார். மக்கள் தங்களை சர்வோதயத் தலைவர் என அழைக்கின்றனர். “சர்வ” என்றால் “அனைத்து” என்பதாகும். அதில் அனைவருமே உள்ளடங்குகின்றனர். கருணை நிறைந்தவரும், பேரானந்தம் நிறைந்தவருமான தந்தை மாத்திரமே அனைவர் மீதும் கருணை கொண்டவர் என நினைவு கூரப்படுகின்றார். மனிதர்களால் மனிதர்கள்மீது எத்தகைய கருணையைக் கொண்டிருக்க முடியும்? அவர்களால் தங்கள் மீதே கருணை கொண்டிருக்க முடியாதுள்ளது. எனவே, எவ்வாறு அவர்களால் மற்றவர்கள்மீது கருணை கொண்டிருக்க முடியும்? அவர்கள் தற்காலிகமான கருணையையே கொண்டுள்ளனர், இருந்தும் அவர்கள் தங்களுக்கு அத்தகைய பெரிய பெயர்களை வழங்கியுள்ளனர்! தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் சதா ஆரோக்கியமானவராகவும், சதா செல்வந்தராகவும் ஆகுவதற்கான இலகுவான வழியை நான் உங்களுக்குக் காட்டுகின்றேன். இந்த வழிமுறை மிகவும் எளிதானது. நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள் என்பதால் என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் சத்திய யுகத்தில் சந்தோஷமாக இருப்பதால் என்னை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டீர்கள். உங்களுக்கு உங்களின் 84 பிறவிகளின் வரலாறும், புவியியலும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறுதான் நீங்கள் ஆட்சி செய்து, சதா சந்தோஷமாக இருந்தீர்கள். பின்னர், நாளுக்கு நாள் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்து தமோபிரதானாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் ஆகினீர்கள். தந்தை முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே இப்பொழுது மீண்டும் ஒரு தடவை உங்களுக்கு ஓர் ஆஸ்தியை வழங்குகின்றார். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து உங்களின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள். பாப்தாதாவின் வழிகாட்டல்களே ஸ்ரீமத் ஆகும். அவரைத் தவிர வேறு எங்கிருந்து நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறமுடியும்? தந்தை கூறுகின்றார்: அதைப்பற்றிச் சிந்தியுங்கள்: எவரிடமாவது இந்த ஆற்றல் உள்ளதா? இல்லை. தந்தை மாத்திரமே உலகின் அதிபதி ஆகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: இதைத் தவிர வேறு வழிமுறை கிடையாது. தூய்மையாக்குபவரான தந்தை மாத்திரமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கான இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகி விடலாம் என்றில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! நிறைந்துள்ள பாவக்கலசம் யோக அக்கினி மூலம் மாத்திரமே எரிக்கப்பட முடியும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் 84 பிறவிகள் எடுக்கையில் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இந்நாட்களில் அவர்கள் தங்களை “சிவோஹம்” (நான்தான் சிவன்) எனக் கூறி, பின்னர் “தத்வம்” (நீங்களும் அப்படியே ஆகுக) என்றும் கூறுகின்றார்கள். அல்லது, நீங்கள் பரமாத்மாவைப் போன்றவர் என்றோ, ஆத்மாவே பரமாத்மா என்றோ கூறுகின்றனர். தந்தை இப்பொழுது வந்துவிட்டார். நீங்கள் மற்றவர்களுக்கு சிவபாபாவை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதை அறிவீர்கள். பரம தந்தை, பரமாத்மா மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். சிவனுக்குக் கட்டப்பட்ட ஆலயங்கள் ஒரு விடயம், சங்கரரின் உருவம் வேறொன்றாகும். சிவன் அசரீரியானவர் என்பதும், சங்கரருக்கு சூட்சும உருவம் உள்ளது என்பதும் கண்காட்சிகளில் காண்பிக்கப்பட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் பௌதீக ரூபத்திலேயே உள்ளார். அவருடன் ராதையையும் சேர்த்துக் காண்பிப்பது சரியானது. அவர்களே இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றனர் என்பதை இது நிரூபிக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணர் கீதையை உரைப்பதற்காக துவாபர யுகத்தில் வருவதில்லை. மக்கள் கலியுக இறுதியில் தூய்மை அற்றவர்களாகவும், சத்திய யுக ஆரம்பத்தில் தூய்மையானவர்களாகவும் உள்ளனர். எனவே அவர் (ஸ்ரீகிருஷ்ணர்) நிச்சயமாக சங்கம யுகத்திலேயே வருகின்றார். தந்தை மாத்திரமே இதை அறிவார். அவர் மாத்திரமே திரிகாலதரிசி ஆவார். ஸ்ரீகிருஷ்ணரை திரிகாலதரிசி என அழைக்க முடியாது. அவரால் முக்காலங்களினதும் ஞானத்தைக் கூறமுடியாது. அவரிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் இல்லை. அவர் சிறு குழந்தை எனவும், அவர் தேவ இளவரசர், இளவரசிகளின் கல்லூரிக்குக் கல்வி பயிலச் செல்கின்றார் எனவும் அவர்கள் கூறுகின்றனர். முன்னர், இளவரசர்களுக்கும், இளவரசிகளுக்கும் விசேட கல்லூரிகள் இருந்தன, ஆனால் இப்பொழுது அனைத்தும் கலந்துவிட்டன. ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசராக இருந்தார், ஏனைய இளவரசர்கள், இளவரசிகள் பலரும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஒன்றாகவே கற்றிருக்க வேண்டும். அது விகாரமற்ற உலகமாகும். சிவபாபா மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். மனிதர்கள் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர்களாக இருக்க முடியாது. தந்தை மாத்திரமே வந்து அனைவருக்கும் முக்தியையும், ஜீவன் முக்தியையும் கொடுக்கின்றார். தேவர்களின் இராச்சியத்தில் வேறெந்த சமயங்களும் கிடையாது என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டாவது அரைச் சக்கரத்திலேயே வருகின்றனர். எனவே, எவ்வாறு அவர்கள் சத்திய யுகத்தில் இருந்திருக்க முடியும்? அவர்கள் சந்நியாசப் பாதையைச் சேர்ந்த ஹத்த யோகிகள். அவர்களால் இராஜ யோகத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இந்த இராஜ யோகம் இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்களுக்கு உரியது. பாரதம் தூய இல்லறப் பாதையைக் கொண்டதாக இருந்தது. இப்பொழுது, கலியுகத்தில், அவர்கள் தூய்மையற்ற இல்லறப் பாதையைக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் பேசுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நீங்கள் உங்களின் இதயத்தை பழைய உலகுடனோ, சரீர உறவுகளுடனோ இணைப்பீர்களாயின், உங்களின் பாக்கியம் அகன்று விடுகின்றது. பலரின் பாக்கியம் இல்லாமல் போய்விடுகின்றது. ஏதாவது தவறுகள் செய்யப்படுமாயின், அவை இறுதி நேரத்தில் உங்கள் முன்னால் தோன்றும், நீங்கள் அவற்றின் காட்சிகளைப் பெறுவீர்கள். சில குழந்தைகள் பலவற்றை மறைக்கின்றனர். நீங்கள் இப்பிறவியில் செய்த பாவங்களைத் தந்தைக்குக் கூறுவதால் அவற்றில் அரைவாசி மன்னிக்கப்படும். எவ்வாறாயினும், நீங்கள் வெட்கப்பட்டு, அதை பாபாவிற்குக் கூறுவதில்லை. பலர் அழுக்கான செயல்களைச் செய்கின்றனர். அவற்றை பாபாவிற்குக் கூறுவதால் தாங்கள் அதிலிருந்து விடுதலை பெறுவோம் என்பதை அவர்களின் புத்தி அறிந்திருக்கின்றது. அவர் அநாதியான சத்திர சிகிச்சையாளர். நீங்கள் வெட்கப்பட்டு உங்களின் நோயை சத்திர சிகிச்சையாளரிடம் மறைப்பீர்களாயின், எவ்வாறு நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள்? நீங்கள் செய்த பாவங்களை பாபாவிற்குக் கூறும்போது, அவற்றில் அரைவாசி மன்னிக்கப்படும். நீங்கள் பாபாவிடம் கூறாவிட்டால், அவை தொடர்ந்தும் அதிகரிப்பதுடன், நீங்கள் மேலும் மேலும் சிக்கிக் கொள்வீர்கள். பின்னர் உங்களின் பாக்கியம் முடிவடைந்து, அபாக்கியம் ஏற்படும். தந்தை கூறுகின்றார்: சரீரத்துடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்காதீர்கள். சதா தொடர்ந்தும் என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் அழுக்கான செயல்கள் எதையும் செய்ய மாட்டீர்கள். அவரே தர்மராஜூம் ஆவார். எனவே, நீங்கள் அவரிடம் எதையாவது மறைப்பீர்களாயின், அதிக தண்டனை அனுபவிப்பவர் (நீங்களேயன்றி) வேறு எவராகவும் இருக்க முடியாது. காலம் நெருங்கி வரும்போது, அனைவரும் தொடர்ந்தும் காட்சிகளைப் பெறுவார்கள். இப்பொழுது அனைவருக்கும் இது தீர்வுக்கான காலப்பகுதி ஆகும். அனைவரும் தூய்மை அற்றவர்களாகவே உள்ளனர். நீங்கள் செய்துள்ள பாவங்களுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். ஜீவன் முக்தி ஒரு விநாடியில் கிடைப்பது போன்றே, தண்டனையும் ஒரு விநாடியில் கடுமையாக உணரப்படும். எனினும், அதை நீண்ட நேரம் அனுபவிப்பது போன்றிருக்கும். இது மிகவும் சூட்சுமமான ஒரு பொறிமுறை ஆகும். இப்பொழுது இது அனைவருக்கும் தீர்வு காலமாகும். தண்டனை நிச்சயமாக அனுபவிக்கப்பட வேண்டும். பின்னர் சகல ஆத்மாக்களும் தூய்மை ஆக்கப்பட்டுத் திரும்பிச் செல்வார்கள். தந்தை மாத்திரமே வந்து தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மை ஆக்குகின்றார். தந்தையைத் தவிர வேறு எவருக்குமே இதைச் செய்வதற்கான சக்தியில்லை. 63 பிறவிகளாகச் செய்த பாவங்களால் பாவக்கலசம் இப்பொழுது நிறைந்துவிட்டது. அனைவர் மீதும் மாயையின் கிரகணம் உள்ளது. உங்கள் மீதே மோசமான சகுனம் உள்ளது. நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள், இப்பொழுதோ உங்கள்மீது கிரகணம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் பாரதத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள், நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள். நீங்கள் உண்மையிலேயே தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியதால் உங்களை இந்துக்கள் என அழைக்க ஆரம்பித்தீர்கள் என்று அவர் உங்களுக்கு நேரடியாகக் கூறுகிறார். இந்து சமயத்தை எவருமே ஸ்தாபிக்கவில்லை. வெவ்வேறு சமயக் குழுக்களையும், பிரிவுகளையும் வம்சம் என்று அழைக்க முடியாது. அரசர்களே ஒரு வம்சத்தைக் கொண்டுள்ளனர். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது… இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியங்கள் உள்ளன. நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையாக வேண்டியது நிச்சயம். நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருப்பதால் உங்களை நீங்கள் தேவர்கள் என அழைக்க முடியாது. நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக, ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். மக்கள் தத்தமது சமயங்களுக்குரிய உருவங்களை மாத்திரமே வழிபடுகின்றனர். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும் மறந்து விட்டீர்கள். தந்தை உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுத்தார் என்பதையும், நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியபோது உங்களின் சொந்த உருவங்களையே வழிபட ஆரம்பித்தீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்த நீங்கள் இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகிவிட்டீர்கள். பாரதவாசிகளுக்கன்றி வேறு எவருக்கும் இவ்வாறு கூறப்பட மாட்டாது. பாபாவும் உங்களை மீண்டும் ஒரு தடவை தேவர்கள் ஆக்குவதற்கான இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காக பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். பின்னர், சகல ஆத்மாக்களும் தங்களின் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்புவார்கள். சகல ஆத்மாக்களும் தொடர்ந்தும் தந்தையை அழைக்கின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே! இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இந்நேரத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர் உள்ளனர்: ஒருவர் சிவபாபா, மற்றையவர் உங்களின் லௌகீகத் தந்தை, அடுத்ததாக இந்த சூட்சுமத் தந்தையான பிரஜாபிதா பிரம்மா. ஏனைய அனைவருக்கும் லௌகீகத் தந்தை, இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தை என இரு தந்தையரே உள்ளனர். சத்திய யுகத்தில் உங்களுக்கு ஒரு தந்தை மட்டுமே இருப்பார் - உங்களின் லௌகீகத் தந்தை. அங்கு, நீங்கள் அப்பாலுள்ள தந்தையை அறிய மாட்டீர்கள். அங்கு சந்தோஷம் மாத்திரமே உள்ளதால், அவர்கள் ஏன் அப்பாலுள்ள தந்தையை நினைவு செய்ய வேண்டும்? துன்ப வேளையிலேயே அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். இங்கு, உங்களுக்கு மூன்று தந்தையர் உள்ளனர். இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அங்கு, நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பீர்கள், பின்னர் நீங்கள் சரீர உணர்விற்கு வருகின்றீர்கள். இங்கு, நீங்கள் ஆத்ம உணர்விலும் இறையுணர்விலும் இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் தந்தையின் குழந்தைகள், உங்களின் ஆஸ்தியை அவரிடமிருந்து கோருகின்றீர்கள் என்ற தூய பெருமையைக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவரின் இப்புகழ் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அவர் மாத்திரமே வந்து, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் உங்களின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சத்திய யுகத்தில் அது உங்களிடம் இருந்தது, பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுத்து, அதை இழந்து விட்டீர்கள். இதை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது! தந்தை தூய்மையாக்குபவர் என்றும், அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இது தூய்மை அற்றவர்களின் உலகமாகும். எவ்வாறு எவராலும் சற்கதியை அருள முடியும்? சமய நூல்கள் பலவற்றைக் கற்ற ஒருவருக்கு, அதுவே அவரின் இலக்கிற்கு அவரை இட்டுச் செல்லும். பின்னர், அடுத்த பிறவியில் சிறு வயதிலேயே அவரால் அவற்றை மனப்பாடம் செய்துவிட முடியும். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அத்தகைய இனிமையான, அழகான விடயங்களைக் கூறுகின்றார்! குழந்தைகளே, நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள், கலப்படம் அகற்றப்படும். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. அனைவரும் பிரசன்னமாக வேண்டும். கிறிஸ்துவின் ஆத்மாவும், ஏனைய அனைவரும்கூட பிரசன்னமாகவே உள்ளனர். அவர்களும்கூட தந்தையை நமஸ்கரிக்க வருவார்கள். அவர்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகமாட்டார்கள். எனவே, அவர்கள் தந்தையை நினைவுசெய்து, மன்மனாபவ என்ற மந்திரத்தை எடுத்துச் செல்வார்கள். உங்களினுடையது இரட்டை மந்திரம் ஆகும்: மன்மனாபவ, மதியாஜிபவ. தந்தை உங்களுக்கு அத்தகைய சிறந்த வழிமுறையைக் காட்டுகின்றார். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பழைய உலகில் வாழும்போதே, நீங்கள் முயற்சி செய்து, நிச்சயமாக சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். உங்கள் இதயத்தை உங்களின் பழைய சரீரத்துடனோ அல்லது பழைய உலகுடனோ இணைத்துக் கொள்ளாதீர்கள். பாக்கியசாலி ஆகுங்கள்!2. ஆத்ம உணர்விலும், இறையுணர்விலும் இருங்கள். இந்தத் தீர்வுக் காலப்பகுதியில் தந்தையிடம் இருந்து எதையும் மறைக்காதீர்கள். அநாதியான சத்திர சிகிச்சையாளரிடம் இருந்து தொடர்ந்தும் ஆலோசனை பெறுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீய சகவாசத்தின் எந்தவிதமான ஆதிக்கத்தில் இருந்தும் அப்பால் இருப்பதன் மூலம் சதா தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் பாக்கியத்தைக் கொண்டவராகி, அதனால் திறமைச்சித்தி எய்துவீர்களாக.நீங்கள் தந்தைக்கு நெருக்கமாக இருக்க விரும்பினால், தீய சகவாசத்தின் ஆதிக்கத்தில் இருந்து அப்பால் விலகி இருங்கள். பல வகையான பரீட்சைகள் கவர்ச்சிகரமான வடிவங்களில் வரும். ஆனால் அவற்றால் கவரப்படாதீர்கள். பல வகையான சகவாசங்களின் ஆதிக்கங்கள் உள்ளன. வீணான எண்ணங்களின் சகவாசம், மாயையிடம் கவர்ச்சிக்கான எண்ணங்களின் சகவாசம், உறவுகளின் சகவாசம், வார்த்தைகளின் சகவாசம், தூய்மையற்ற உணவின் சகவாசம், செயல்களின் சகவாசம். இந்த சகல வகையான சகவாசத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்பவர்கள், திறமைச்சித்தி அடைவார்கள்.
சுலோகம்:
தேவதைகள் ஆகுங்கள், இக்கட்டான சூழ்நிலைகளில் தந்தையே உங்களின் பாதுகாப்புக் குடை ஆகுவார்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
நீங்கள் நிலையாகவும் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாகவும் ஆகி, மற்றவர்களையும் அப்படி ஆக்கச் செய்வதற்கான விசேடமான சக்தி, நாடகத்தின் கருத்திலேயே தங்கியுள்ளது. இந்த வகையான சக்தியைத் தங்களுக்குள் கிரகிப்பவர்களால் ஒருபோதும் தோற்க முடியாது. எவ்வாறாயினும், அனைத்திற்கும் முதலில், நாடகத்தின் முற்றுப்புள்ளியைப் பிரயோகித்து, வீணான எண்ணங்களைத் தூய எண்ணங்களாக மாற்றுங்கள். பின்னர், இறையன்பின் அடிப்படையில், வருகின்ற மாயையின் வெவ்வேறு வகையான தடைகளையும் முடித்து விடுங்கள்.