29.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் சரீரம் உட்பட நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் அழிக்கப்படவுள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, இப்பழைய உலகை நீங்கள் மறந்துவிட வேண்டும்.

பாடல்:
எவ்வார்த்தைகளினால் நீங்கள் தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுக்க முடியும்?

பதில்:
எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காக, எல்லையற்ற தந்தை வந்துள்ளார் என்பதை அனைவருக்கும் கூறுங்கள். எல்லைக்குட்பட்ட ஆஸ்திக்கான காலம் இப்பொழுது முடிவிற்கு வந்துவிட்டது. அதாவது பக்தி இப்பொழுது முடிவிற்கு வந்துவிட்டது. இராவண இராச்சியம் இப்பொழுது முடிவடைகின்றது. ஜந்து விகாரங்களாகிய இராவணனின் சிறையிலிருந்து உங்களை விடுவிப்பதற்காகத் தந்தை வந்துள்ளார். இது அதி மங்களகரமான சங்கமயுகமாகும். எனவே நீங்கள் முயற்சி செய்து, தெய்வீகக் குணங்கள் உடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்தைப் புரிந்து கொண்டால். உங்கள் ஸ்திதி மேன்மையானதாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் கலப்படமற்ற நினைவில் அமர்;ந்திருக்கின்றீர்கள். ஒன்று கலப்படமற்ற நினைவு, மற்றையது கலப்படமுள்ள நினைவு ஆகும். கலப்படமற்ற நினைவோ அல்லது கலப்படமற்ற பக்தியோ முதலில் ஆரம்பிக்கும்போது, அனைவரும் சிவனையே வழிபடுகின்றனர். அவர் மாத்திரமே அதி மேலான கடவுள். அவரே தந்தையும், ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்? அவர் உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறார். தேவர்களிலிருந்து மனிதர்களாகுவதற்கு, குழந்தைகளாகிய உங்களுக்கு 84 பிறவிகள் எடுக்கின்றன. மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றது. நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அத்துடன் அவரே எங்களின் ஆசிரியரும், சற்குருவும் ஆவார். நாங்கள் ஒரேயொருவரின் நினைவில் நிலைத்திருப்பதற்காக அவர் எங்களுக்கு யோகம் கற்பிக்கின்றார். அவரே கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, ஓ குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதால், சரீர உறவுமுறைகள் அனைத்தையும் துறந்திடுங்கள். இப்பழைய உலகம் இப்பொழுது மாற்றமடைகின்றது. நீங்கள் இனியும் இங்கிருக்க வேண்டியதில்லை. அவர்கள் பழைய உலகை அழிப்பதற்காகப் போர்க்கருவிகள்; போன்றவற்றைத் தயாரித்துள்ளார்கள். இயற்கை அனர்த்தங்களும் அதற்கு உதவி புரியும். விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் பழைய உலகையும், பழைய சரீரத்தையும் துறக்கவேண்டும். உங்கள் சரீரம் உட்பட இவ்வுலகில் நீங்கள் பார்க்கின்ற அனைத்துமே அழியப்போகின்றன. சரீரங்களும் அழிக்கப்பட வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் முதலில் வீட்டிற்குத் திரும்பிச் செல்லாது, புதிய உலகிற்குச் செல்ல முடியாது. நீங்கள் அதி மேன்மையான மனிதர்களாகுவதற்காக இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். தேவர்களே அதி மேன்மையான மனிதர்கள். அனைவரிலும் அதி மேலானவர் அசரீரியான தந்தையாவார். பின்னர், மனித உலகில், தேவர்களே அதிமேலானவர்கள். அவர்களும் மனிதர்களேயாயினும், அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் அவர்கள் அசுர குணங்களுடையவர்கள் ஆகுகின்றனர். இப்பொழுது நீங்கள் அசுரக் குணங்களைக் கொண்டவர்களிலிருந்து தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்களாக மாறவேண்டும். நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்ல வேண்டும். யார் அங்கு செல்ல வேண்டும்? குழந்தைகளாகிய நீங்களே அங்கு செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் செய்தியைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்காக எல்லையற்ற தந்தை வந்துள்ளார். எல்லைக்குட்பட்ட ஆஸ்தி இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. மனிதர்கள் அனைவரும் ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் சிறைக்குள் உள்ளனர் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அனைவரும் தொடர்ந்தும் துன்பத்தையே எடுக்கின்றனர். அவர்கள் காய்ந்த சப்பாத்திகளையே பெறுகின்றனர். தந்தை வந்து, அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவித்து, உங்களைச் சதா சந்தோஷமுடையவர்கள் ஆக்குகின்றார். தந்தையைத் தவிர வேறு எவராலுமே மனிதர்களைத் தேவர்களாக்க முடியாது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்காகவே இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். இப்பொழுது இது கலியுகமாகும். பல சமயங்கள் உள்ளன. தந்தையே இங்கிருந்தவாறு, குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பவரினதும், படைப்பினதும் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் “கடவுள்” என்றும், “பரமாத்மா” என்றும் வெறுமனே கூறுவதுண்டு. அவரே உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அவர் சற்குரு என அழைக்கப்படுகின்றார். அவர் அமரத்துவ ரூபம் என்றும் அழைக்கப்படுகின்றார். நீங்கள் ஆத்மாக்கள் என்றும், மனிதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றீர்கள். அந்த அமரத்துவ ரூபம் இப்பொழுது இச்சரீரம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். அவர் பிறவியெடுப்பதில்லை. அமரத்துவ ரூபமாகிய தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: எனக்கென ஒரு சொந்தச் சரீரம் கிடையாது. எனவே, நான் எவ்வாறு குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்க முடியும்? எனக்கு ஒரு இரதம் தேவை. அமரத்துவ ரூபத்திற்கும் ஒரு சிம்மாசனம் தேவைப்படுகின்றது. மனிதர்களே ஓர் அமரத்துவ சிம்மாசனத்தைக் கொண்டிருக்கின்றார்கள். வேறு எவரிடமும் இந்தச் சிம்மாசனம் இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிம்மாசனம் தேவையாகும். அமரத்துவ ரூபமாகிய அந்த ஆத்மாவானவர் இங்கு பிரசன்னமாகியிருக்கின்றார். அவரே அனைவரினதும் தந்தையாவார். அவர் மகாகாலன் என அழைக்கப்படுகின்றார். அவர் மறுபிறவி எடுப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் மறுபிறவி எடுக்கின்றீர்கள். நான் சக்கரத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன். பக்தி இரவு என்றும், ஞானம் பகல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை மிக உறுதியாக நினைவு செய்யுங்கள். பிரதான விடயங்கள் இரண்டு உள்ளன: அல்பாவும் பீற்றாவும், தந்தையும், இராச்சியமும். தந்தை வந்து, உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றார். அதனை எவ்வாறு அடைவது என்பதை அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனாலேயே இது பாடசாலை என்றும் அழைக்கப்படுகின்றது. கடவுள் பேசுகின்றார்: கடவுள் அசரீரியானவர். அவரது பாகமும் இருக்க வேண்டும். அவரே அதிமேலான கடவுள். அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில், என்னை நினைவு செய்யாத எந்த மனிதருமே இல்லை. அனைவரும் தங்கள் இதயத்தில் என்னை நினைவு செய்கின்றனர்: ஓ கடவுளே! ஓ விடுதலையளிப்பவரே! ஓ தந்தையாகிய கடவுளே. அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். அவர் நிச்சயமாக எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு லௌகீகத் தந்தை எல்லைக்குட்பட்ட சந்தோஷத்தையே கொடுப்பார். தந்தை இப்பொழுது வந்துவிட்டார் என்பதை எவருமே அறியமாட்டார்கள். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, அனைவரிடமிருந்தும் துண்டித்து, உங்கள் தந்தையாகிய என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் புதிய உலகில் தேவர்களாக வசிக்கின்றீர்கள் எனவும் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். அங்கு அளவற்ற சந்தோஷம் உள்ளது. அங்குள்ள சந்தோஷத்திற்கு முடிவே கிடையாது. புதிய வீட்டில் எப்பொழுதும் சந்தோஷமே இருக்கும். பழைய வீட்டிலோ துன்பமே அனுபவம் செய்யப்படுகின்றது. இதனாலேயே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்காகப் புதிய கட்டடமொன்றைக் கட்டியிருக்கின்றார். குழந்தைகளாகிய உங்களின் புத்தியின் யோகம் புதிய கட்டடத்திற்குத் திசை திரும்புகின்றது. அது எல்லைக்குட்பட்டதாகும். எல்லையற்ற தந்தை இப்பொழுது புதிய உலகை உருவாக்குகின்றார். இப்பழைய உலகில் நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் மயானமாகப்போகின்றது. தேவதைகளின் பூமி இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் கலியுகத்தையும், அத்துடன் சத்தியயுகத்தையும் பார்க்கலாம். சங்கமயுகத்தில், நீங்கள் அனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கின்றீர்கள். கண்காட்சிகளுக்கோ அல்லது அருங்காட்சியங்களுக்கோ மக்கள் வரும்போது, அவர்கள் சங்கமயுகத்தைப் பற்றி அறியுமாறு செய்யுங்கள். ஒருபுறம் கலியுகம் உள்ளது, மறுபுறம் சத்தியயுகம் உள்ளது, நாங்கள் நடுவில் இருக்கின்றோம். தந்தை வெகுசில மனிதர்களையே கொண்ட புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். ஏனைய சமயங்களைச் சேர்ந்த எவரும் அங்கு செல்லமாட்டார்கள். நீங்களே அங்கு முதலில் செல்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள் .உங்களைத்; தூய்மையாகுவதற்காக, ஓ பாபா, எங்களைத் தூய்மையாக்கி, தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள். ‘சாந்திதாமத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ என நீங்கள் கூறுவதில்லை. பரந்தாமம் இனிய வீடு என அழைக்கப்படுகின்றது. நாங்கள் இப்பொழுது முக்தி தாமம் என்றும் அழைக்கப்படுகின்ற வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும். இதற்காகவே சந்நியாசிகள் போன்றோரும் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்கள். அவர்களால் சந்தோஷதாமம் பற்றிய ஞானத்தைக் கொடுக்க முடியாது. அவர்கள் துறவறப் பாதையைச் சார்ந்தவர்கள். எந்த மதம் எந்த நேரத்தில் வருகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மனித உலக விருட்சத்தில் உங்கள் அத்திவாரமே முதலாவதாக உள்ளது. விதையானவர் விருட்சத்தின் பிரபு என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: விருட்சத்தின் பிரபுவாகிய நான் மேலே வசிக்கின்றேன். விருட்சம் முற்றிலும் உக்கிய நிலையை அடையும்போது, நான் தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வருகின்றேன். அத்திவாரம் ஏதுமின்றி நின்றுகொண்டிருக்கும் அற்புதமான ஆலமரமொன்று உள்ளது. இந்த எல்லையற்ற விருட்சத்திலும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இல்லை. ஏனைய சமயங்கள் அனைத்தும் இங்கு உள்ளன. அசரீரி உலகவாசிகளாக இருந்த நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக இங்கு கீழிறங்கி வந்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சகலவிதமான பாகங்களையும் நடிக்கின்றீர்கள். எனவே, அதி கூடுதலாக 84 பிறவிகளும், அதி குறைவாக 1 பிறவியும் உள்ளன. மக்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுகின்றார்கள். யார் இத்தனை பிறவிகளை எடுப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் 84 பிறவிகளையே எடுக்கின்றீர்கள் என்பதைத் தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்களே முதலில் என்னை விட்டுப் பிரிந்தவர்கள். முதலில், சத்தியயுகத்து தேவர்கள் உள்ளனர். அந்த ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை இங்கு நடிக்கும்போது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கு செல்வார்கள்? அந்நேரத்தில் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் சாந்திதாமத்திலேயே இருப்பார்கள் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். எனவே, சாந்திதாமம் வேறானது. எவ்வாறாயினும், இந்த உலகம் மாத்திரமே உள்ளது. இங்கேயே பாகங்கள் நடிக்கப்படுகின்றன. புதிய உலகில் நீங்கள் சந்தோஷமான பாகம் ஒன்றை நடிக்க வேண்டும். பழைய உலகிலோ துன்பமான பாகம் ஒன்றை நடிக்கவேண்டும். இது இன்ப துன்பம் பற்றிய நாடகமாகும். அது இராம இராச்சியமாகும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதென்பதை உலகிலுள்ள எந்த மனிதருமே அறியமாட்டார்கள். அவர்கள் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறியமாட்டார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினது ஞானம் எந்தச்சமய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. நானே இதனை உங்களுக்குக் கூறுகின்றேன். பின்னர் அது மறைந்துவிடுகின்றது. அது சத்தியயுகத்தில் இருப்பதில்லை. பாரதத்தின் புராதன இலகு யோகம் மாத்திரமே நினைவு கூரப்படுகின்றது. “இராஜயோகம்” என்ற பெயர் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, இராச்சியம் என்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். படைப்புகளிடமிருந்து நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறமுடியாது. நீங்கள் படைப்பவராகிய தந்தையிடமிருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். மனிதர்கள் ஒவ்வொருவரும் படைப்பவர்களே. ஏனெனில்; அவர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகளை உருவாக்குகின்றார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட பிரம்மாக்கள். இவரோ எல்லையற்ற பிரம்மா ஆவார். அந்த ஒரேயொருவரே அசரீரியான ஆத்மாக்களின் தந்தையாவார். ஒரு பௌதீகத் தந்தை, லௌகீகமான தந்தையாவார். ஆனால், இவரோ பிரஜாபிதா (மனிதர்களின் தந்தை) ஆவார். பிரஜாபிதா எப்பொழுது இருந்திருக்க வேண்டும்? சத்தியயுகத்திலா? இல்லை. அவர் அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே இருக்க வேண்டும். சத்தியயுகம் எப்போது இருக்கும் என்பதை மக்கள் அறியமாட்டார்கள். சத்தியயுகமும் கலியுகமும் நூறாயிரக்கணக்கான வருடங்கள் நீடிப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்கள் கொண்டவை. 84 பிறவிகளின் கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு கீழிறங்கி வருகின்றீர்கள் என்பதைக் காட்டும் ஏணியின் கணக்கும் இருக்க வேண்டும். முதலில், தேவர்களே அத்திவாரமாக உள்ளனர். அவர்களுக்குப் பின்னர் இஸ்லாமியரும், பௌத்த சமயத்தினரும் வருகின்றனர். தந்தை விருட்சத்தின் இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. மக்கள் உங்களை வினவுகின்றனர்: இப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? அதனை உங்களுக்குக் கற்பித்தவர் யார்? அவர்களிடம் கூறுங்கள்: பாபா எங்களுக்கு திரான்சில் அதனைக் காட்டினார், நாங்கள் பின்னர் இங்கு அதனை உருவாக்கினோம். பின்னர், தந்தை இந்த இரதத்தினுள் பிரவேசித்து, 'இன்ன இன்ன மாதிரிச் செய்யுங்கள்" என்று கூறி அவைகளைத் திருத்துகின்றார். அவரே அதனைத் திருத்துகின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் சியாம் - சுந்தர் என அழைக்கப்படுகின்றார். ஆனால் அவர் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவர் வைகுந்தத்தின் அதிபதியாக இருந்தபோது, அழகானவராக இருந்தார். பின்னர், அவர் ஒரு கிராமத்துப் பையனாகிய போது, அவலட்சணமானவராகினார், இதனாலேயே அவர் சியாம்- சுந்தர் என அழைக்கப்படுகின்றார். அவரே முதலில் வருகின்றவர். அது உங்களுக்கும் பொருந்தும். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் தொடர்கின்றது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிப்பவர் யார்? எவருக்குமே அது தெரியாது. அவர்கள் பாரதத்தை மறந்துவிட்டு, இந்துக்கள் இந்துஸ்தானில் வசிப்பவர்கள் எனக் கூறுகின்றார்கள். நான் பாரதத்தில் மாத்திரமே வருகின்றேன். பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது, அது இப்போது மறைந்துவிட்டது. அதனை மீண்டும் ஒருமுறை ஸ்தாபிப்பதற்காக வருகின்றேன். அனைத்திற்கும் முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் உள்ளது. இந்த விருட்சம் தொடர்ந்து வளர்கின்றது. புதிய இலைகள், பிரிவுகள், சிறுபிரிவுகள் என்பன இறுதியில் வருகின்றன. எனவே, அவையும் அழகை அதிகரிக்கின்றன. பின்னர், இந்நேரத்தில், முழு விருட்சமும் முற்றிலும் உக்கிய நிலையை அடையும்போது, நான் மீண்டும் ஒரு தடவை வருகின்றேன். இவ்வாறு கூறப்படுகின்றது: அதர்மம் உச்சக்கட்டத்தை அடையும்போது, நான் வருகின்றேன்....... ஆத்மாக்களுக்குத் தங்களையோ அல்லது தந்தையையோ தெரியாது. நீங்கள் தொடர்ந்தும் உங்களையும், தந்தையையும், தேவர்களையும் அவதூறு செய்கின்றீர்கள். நீங்கள் தமோபிரதானாகவும், விவேகமற்றவர்களாகவும் ஆகும்போது நான் வருகின்றேன். நான் தூய்மையற்ற உலகிற்கு வரவேண்டியுள்ளது. நீங்கள் மனிதர்களுக்கு வாழ்க்கைத்தானம் அளிக்கின்றீர்கள், அதாவது, நீங்கள் மனிதர்களை தேவர்களாக்குகின்றீர்கள். நீங்கள் அவர்கள் அனைவரையும் சகல துன்பங்களில் இருந்தும் அகற்றுகின்றீர்கள், அதுவும் அரைக்கல்பத்திற்கு அகற்றுகின்றீர்கள். 'தாய்மார்களுக்கு வந்தனங்கள்" என்பது நினைவு கூரப்படுகின்றது. எந்தத் தாய்மாரை நீங்கள் புகழ்கின்றீர்கள்? தாய்மார்களாகிய நீங்களே, முழு உலகையும் சுவர்க்கமாக மாற்றுகின்றீர்கள். இங்கு ஆண்கள் இருப்பினும், தாய்மார்களாகிய நீங்களே பெரும்பான்மையானவர்கள். இதனாலேயே தந்தை தாய்மார்களாகிய உங்களைப் புகழ்கின்றார். தந்தை வந்து உங்களை அதிகளவு புகழ்ச்சிக்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

ஆசீர்வாதம்:
நீங்கள் மேன்மையான நேரத்திற்கேற்ப மேன்மையான செயல்களைச் செய்யும்போது. சதா ‘ஆஹா! ஆஹா!’ என்ற பாடல்களைப் பாடுகின்ற பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

இந்த மேன்மையான நேரத்தில், மேன்மையான செயல்களைச் செய்யும்போது, உங்களின் மனதில் சதா ‘ஆஹா! ஆஹா!’ என்ற பாடல்களைப் பாடுங்கள். ‘ஆஹா எனது மேன்மையான செயல்கள்!’ அல்லது ‘ஆஹா எனக்கு மேன்மையான செயல்களைக் கற்பிக்கும் பாபா!’ எனவே, சதா ‘ஆஹா! ஆஹா!’ என்ற பாடல்களைப் பாடுங்கள். துன்பத்தால் அல்லது நீங்கள் துன்பமான காட்சிகளைப் பார்த்தாலும், தவறுதலாகவேனும் நம்பிக்கை இழந்து பரிதவிக்கும் வார்த்தைகள் வெளிப்பட அனுமதிக்காதீர்கள். ‘ஆஹா நாடகமே! ஆஹா!’ ‘ஆஹா பாபா, ஆஹா!’ நீங்கள் வீட்டில் இருந்தபடியே, நீங்கள் நினைத்திராத அல்லது கனவுகூடக் கண்டிராத பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்தப் பாக்கியத்தின் போதையைப் பேணுங்கள்.

சுலோகம்:
எந்தவொரு குழப்பத்திலும் நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருக்கும் வகையில் உங்களின் மனதையும் புத்தியையும் மிகவும் சக்திவாய்ந்தது ஆக்குங்கள்.