29.06.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.2005 Om Shanti Madhuban
புது வருடத்தில், யோக அக்கினியில் உங்களின் பழைய சம்ஸ்காரங்களை எரித்து, தந்தை பிரம்மாவைப் போல் தியாகம், தவம், சேவையில் முதலாம் இலக்கத்தவர் ஆகுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள உங்கள் எல்லோருக்கும் நீங்கள் பாபாவின் முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது வெகு தொலைவில் இருந்தாலும் அவரின் இதயத்திற்கு நெருக்காக இருந்தாலென்ன, மூன்று வகையான பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். முதலில், புதிய வாழ்க்கைக்காகப் பாராட்டுக்கள். இரண்டாவதாக, புதிய யுகத்திற்காகப் பாராட்டுக்கள். மூன்றாவதாக, இந்தப் புதிய வருட தினத்திற்காகப் பாராட்டுக்கள். நீங்கள் எல்லோரும் இங்கே வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் அத்துடன் புது வருடத்திற்கான வாழ்த்துக்களைப் பெறவும் வந்துள்ளீர்கள். உண்மையில், பிராமண ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே உண்மையான இதயத்துடன் சந்தோஷமான வாழ்த்துக்களை வழங்குகிறீர்கள், அத்துடன் பெறுகிறீர்கள். இன்றைய நாள் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டது. இது விடை பெறுதல் (விதாய்), அத்துடன் வாழ்த்துக்கள் (பதாய்). இது விடை பெறுவதற்கும் வாழ்த்துக்களுக்குமான சங்கமயுகம். இன்றைய நாள், சங்கமத்திற்கான நாள் என்று அழைக்கப்படுகிறது. சங்கமத்தின் புகழ், மிகவும் மகத்தானது. சங்கமயுகத்தின் புகழால், மக்கள் பழைய வருடத்தினதும் புது வருடத்தினதும் சங்கமத்தை மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடுவதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். சங்கமயுகத்தின் புகழாலேயே பழைய வருடத்தினதும் புது வருடத்தினதும் சங்கமம் புகழப்படுகிறது. இரண்டு நதிகள் சந்திக்கும் இடத்தின் சங்கமத்திற்கும் புகழ் உள்ளது. ஒரு நதி, கடலைச் சந்திக்கும் சங்கமத்திற்கும் புகழ் உள்ளது. எவ்வாறாயினும், இந்த சங்கமயுகத்தின், அதி புண்ணிய யுகத்தின் புகழே மகத்தான புகழாகும். இங்கேயே பாக்கியசாலி பிராமண ஆத்மாக்களான நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த போதை உள்ளதல்லவா? நீங்கள் கலியுகத்திலோ அல்லது சத்தியயுகத்திலோ வாழ்ந்தாலென்ன, நீங்கள் எந்தக் காலப்பகுதியில் வாழ்கிறீர்கள் என உங்களிடம் கேட்டால், நீங்கள் போதையுடன் என்ன பதில் சொல்வீர்கள்? இந்த வேளையில், நாங்கள் அதிபுண்ணிய சங்கமயுகத்தில் வாழ்கிறோம். நீங்கள் கலியுகத்தில் இல்லை. நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இந்த சங்கமயுகத்திற்கு ஏன் விசேடமான புகழ் உள்ளது? ஏனென்றால், இறைவனுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சந்திப்பு இப்போதே இடம்பெறுகிறது. ஓர் ஒன்றுகூடல் நடக்கிறது. வேறெந்த யுகத்திலும் நடக்காத ஒரு சந்திப்பு இடம்பெறுகிறது. எனவே, நீங்கள் இந்த மேளாவைக் கொண்டாட வந்துள்ளீர்கள்தானே? நீங்கள் எல்லோரும் இந்த மேளாவைக் கொண்டாடுவதற்காகப் பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளீர்கள். நாடகத்தில் இத்தகைய பாக்கியம் பதிவு செய்யப்பட்டிருக்கும் என ஆத்மாக்களான நீங்கள் கனவில்கூட நினைத்தீர்களா? அது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆத்மாக்கள் பரமாத்மாவைச் சந்திப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் பாக்கியத்தைப் பார்க்கும்போதும் தந்தையும் களிப்படைகிறார். ஆஹா! பாக்கியசாலிக் குழந்தைகளே ஆஹா! உங்களின் பாக்கியத்தைப் பார்க்கும்போது, நீங்கள் இயல்பாகவே உங்களின் இதயபூர்வமாக ‘ஆஹா! ஆஹா!’ என்ற பாடலைப் பாடுகிறீர்கள்தானே? ஆஹா மே (நானே) ஆஹா! ஆஹா எனது பாக்கியமே, ஆஹா! ஆஹா எனது பாபா, ஆஹா! ஆஹா, எனது பிராமணக் குடும்பமே, ஆஹா!
எனவே, இந்த சங்கமயுக வேளையில், நீங்கள் எந்த விடயங்களுக்கு விடை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட்டுள்ளதா? நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி நினைத்தீர்களா? நீங்கள் எல்லா வேளைக்குமாக அவற்றுக்கு விடை கொடுக்க வேண்டும். ஏனென்றால், எல்லா வேளைக்கும் விடை கொடுப்பதன் மூலம், உங்களால் எல்லா வேளைக்கும் சந்தோஷத்துடன் கொண்டாட முடியும். உங்களின் முகத்தைப் பார்க்கும்போது, உங்களுக்கு முன்னால் வருகின்ற எந்தவோர் ஆத்மாவும் அந்த வாழ்த்துக்களைப் பெற்று சந்தோஷமாகும் வகையில் வாழ்த்துக்களைக் கொடுங்கள். எப்போதும் இதயபூர்வமாக வாழ்த்துக்களைக் கொடுக்கின்ற, பெறுகின்ற ஒருவர் எப்படி இருப்பார்? ஒரு சங்கமயுக தேவதை. இதுவே எல்லோரின் முயற்சியும், அப்படித்தானே? ஒரு பிராமணரில் இருந்து தேவதை ஆகுவதும் தேவதை இலிருந்து தேவர் ஆகுவதும். நீங்கள் தந்தையிடம் உங்களின் குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் செயல்களின் சகல வகையான எண்ணங்களையும் சுமைகளையும் கொடுத்து விட்டீர்கள்தானே? நீங்கள் அவரிடம் அந்தச் சுமையைக் கொடுத்து விட்டீர்களா அல்லது இன்னமும் உங்களிடம் சிறிதளவு சுமை எஞ்சியுள்ளதா? இது ஏனென்றால், சிறிதளவு சுமையும் உங்களை ஒரு தேவதை ஆக அனுமதிக்காது. குழந்தைகளான உங்களின் சுமைகளை எடுப்பதற்காகத் தந்தை வந்திருப்பதால், அவரிடம் உங்களின் சுமைகளைக் கையளிப்பது கஷ்டமா? இது கஷ்டமா அல்லது இலகுவா? தமது சுமைகளைக் கையளித்து விட்டோம் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் அதைக் கொடுத்து விட்டீர்களா? கவனமாக இருங்கள், கவனமாகச் சிந்தித்த பின்னர் உங்களின் கையை உயர்த்துங்கள். நீங்கள் சுமையைக் கொடுத்து விட்டீர்களா? அச்சா. நீங்கள் அதைக் கொடுத்து விட்டீர்களா? வாழ்த்துக்கள்! நீங்கள் அதைக் கொடுத்திருந்தால், பற்பல பாராட்டுக்கள்! அதைக் கொடுக்காதவர்கள், அதை எதற்காக வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் சுமைகளை விரும்புகிறீர்களா? உங்களுக்குச் சுமைகள் பிடிக்குமா? பாருங்கள், குழந்தைகளான உங்கள் எல்லோரையும் பாப்தாதா என்னவென்று அழைக்கிறார்? ஓ எனது கவலையற்ற சக்கரவர்த்திக் குழந்தைகளே. ஒருவரின் சுமையை இட்டே ஒருவர் கவலைப்படுவார். தந்தை சுமையை உங்களிடம் இருந்து எடுப்பதற்காக வந்துள்ளார். ஏனென்றால், உங்களின் சுமைகளை 63 பிறவிகளாகச் சுமந்ததன் பலனாகக் குழந்தைகளான நீங்கள் மிகவும் பாரமாக ஆகிவிட்டதைத் தந்தை பார்க்கிறார். ஆகவே, தந்தை குழந்தைகளான உங்களிடம் மிகுந்த அன்புடன் உங்களின் சுமைகளைக் கையளிக்கும்படி சொல்லும்போது, நீங்கள் ஏன் அவற்றை இன்னமும் பிடித்து வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்குச் சுமைகள் பிடிக்குமா? எல்லாவற்றிலும் அதி சூட்சுமமான சுமை, பழைய சம்ஸ்காரங்களின் உடையது ஆகும். பாப்தாதா இந்த வருடத்திற்கான ஒவ்வொரு குழந்தையின் அட்டவணையையும் பார்த்தார். ஏனென்றால், இது இப்போது வருட இறுதியாகும். நீங்கள் எல்லோருமே இந்த வருடத்திற்கான உங்களின் சொந்த அட்டவணைகளைச் சோதித்து இருப்பீர்கள். பாப்தாதா எதைக் கண்டார்? சில குழந்தைகளுக்கு, இந்தப் பழைய உலகிற்கான அவர்களின் கவர்ச்சி சிறிது குறைந்துள்ளது. பழைய உறவுமுறைகளுக்கான இந்தக் கவர்ச்சியும் குறைந்துள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு பழைய சம்ஸ்காரங்களின் சுமை இன்னமும் எஞ்சியுள்ளது. ஏதாவதொரு வடிவத்தில், அது மனதின் மூலமோ - மனதில் தூய்மை அற்ற எண்ணங்கள் இல்லை - ஆனால் வீணான எண்ணங்களின் சம்ஸ்காரங்களின் சதவீதம் இன்னமும் புலப்படுகிறது. இது உங்களின் வார்த்தைகளிலும் புலப்படுகிறது. உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் ஏதாவதொரு சம்ஸ்காரம் இன்னமும் புலப்படுகிறது.
எனவே, இன்று, வாழ்த்துக்களுடன் கூடவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இந்த சமிக்கையை வழங்குகிறார்: இன்னமும் எஞ்சியிருக்கும் இந்த சம்ஸ்காரம், உங்களை ஏதோவொரு கட்டத்தில் ஏமாற்றி விடும். இறுதியிலும், அது உங்களை ஏமாற்றுவதற்குக் கருவி ஆகிவிடும். ஆகவே, இன்று, சம்ஸ்காரங்களின் தகனக்கிரியைச் செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் சொந்த சம்ஸ்காரங்களைப் பற்றித் தெரியும். நீங்கள் அவற்றைத் துறக்க விரும்புகிறீர்கள். நீங்கள் அவற்றை இட்டு சலிப்படைந்து விட்டீர்கள். ஆனால், எல்லா வேளைக்கும் அவற்றை மாற்றுவதில் நீங்கள் தீவிர முயற்சியாளர்கள் ஆகவில்லை. நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் தீவிர முயற்சியாளர்கள் கிடையாது. இதற்கான காரணம் என்ன? ஏன் உங்களால் தீவிர முயற்சி செய்ய முடியவில்லை? இதற்கான காரணம்: எப்படி நீங்கள் இராவணனைக் கொல்கிறீர்களோ, நீங்கள் இராவணனைக் கொல்வது மட்டுமன்றி, அவனை எரித்தும் விடுகிறீர்கள். அதேபோல், நீங்கள் சம்ஸ்காரங்களைக் கொல்வதற்கும் முயற்சி செய்கிறீர்கள். அவை சிறிதளவு மயக்கம் அடைகின்றன. அவை எரியாததால், அவ்வப்போது மயக்கத்தில் இருந்து விழித்து எழுகின்றன. இதற்கு, உங்களின் பழைய சம்ஸ்காரங்களின் தகனக்கிரியைச் (ஒருவர் இறக்கும்போது செய்யும் இறுதிச் சடங்கு) செய்யுங்கள். புது வருடத்தில் யோக அக்கினியால் அவற்றை எரிப்பதற்கு திடசங்கற்பத்துடன் கவனம் செலுத்துங்கள். இந்தப் புது வருடத்தில் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள்தானே? சேவை என்பது வேறு விடயம். ஆனால், முதலில் இது உங்களைப் பற்றிய ஒரு விடயம். நீங்கள் யோகம் செய்கிறீர்கள். ஏனென்றால், குழந்தைகளான நீங்கள் யோகத்தைப் பயிற்சி செய்வதை பாப்தாதாவும் பார்க்கிறார். நீங்கள் அமிர்த வேளையில் அதிகளவு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் உங்களின் யோக தபஸ்யா தீவிர அக்கினி ரூபத்தில் இல்லை. நீங்கள் நிச்சயமாக பாபாவை அன்புடன் நினைக்கிறீர்கள். நீங்கள் இதயபூர்வமாகவும் உரையாடுகிறீர்கள். நீங்கள் பாபாவிடம் இருந்து சக்தியை எடுத்துக் கொள்வதையும் பயிற்சி செய்கிறீர்கள். ஆனால் அவற்றுக்கு விடை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட்டதும் உண்மையிலேயே அவற்றுக்கு விடை கொடுக்கும் அளவிற்கு நீங்கள் உங்களின் நினைவைச் சக்திவாய்ந்தது ஆக்கவில்லை. நீங்கள் யோகத்தை யோக அக்கினியின் வடிவத்தில் பயன்படுத்துவதில்லை. ஆகவே, உங்களின் யோகத்தைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். குறிப்பிட்ட சம்ஸ்காரங்களை எரிப்பதற்குக் குறிப்பாக ஒருமுகப்படுத்தும் சக்தி அவசியம். நீங்கள் என்ன ரூபத்தில் ஸ்திரமாக விரும்புகிறீர்களோ, அதில் எவ்வளவு நேரத்திற்கு ஸ்திரமாக இருக்க விரும்புகிறீர்களோ, ஒருமுகமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். அப்போது உங்களால் அதை எரிக்க முடியும். இதுவே சகல பெயர் மற்றும் சுவடுகளை முடிக்கும் யோக அக்கினி என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் எதையாவது கொல்லும்போது, அதன் பிணம் எஞ்சி இருக்கும். அதை எரிக்கும்போது, அதன் பெயர், சுவடு எல்லாமே முடிந்துவிடும். எனவே, இந்த வருடம், உங்களின் யோகம் சக்திவாய்ந்த ஸ்திதியை அடைய வேண்டும். நீங்கள் எந்த ரூபத்தில் இருக்க விரும்புகிறீர்களோ, மாஸ்ரர் சர்வசக்திவான்களான நீங்கள் எதையாவது அழிக்கும் சக்திக்குக் கட்டளை இட்டதும், அந்தச் சக்திக்கு உங்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது என்பது சாத்தியம் இல்லை. நீங்களே அதிபதிகள். நீங்கள் உங்களை மாஸ்ரர் என்று அழைக்கிறீர்கள்தானே? ஒரு மாஸ்ரர் கட்டளை இட்டதும் அந்த சக்தி அங்கே வரவில்லை என்றால், அவர் ஓர் அதிபதியா? இப்போதும் ஏதாவதொரு பழைய சம்ஸ்காரத்தின் சுவடு எஞ்சி இருப்பதை பாப்தாதா கண்டார். அந்தச் சுவடு அவ்வப்போது ஒரு சந்ததியை உருவாக்குகிறது. அது உங்களை நடைமுறையிலும் அதைச் செய்ய வைக்கிறது. அதன்பின்னர் நீங்கள் போராட வேண்டியுள்ளது. அதனால், காலத்திற்கேற்ப, பாப்தாதா குழந்தைகளின் தற்போதைய போராடும் ரூபத்தைப் பார்க்க விரும்பவில்லை. ஒவ்வொரு குழந்தையையும் ஓர் அதிபதி என்ற வடிவிலேயே பாப்தாதா காண விரும்புகிறார். நீங்கள் ஒரு கட்டளை இட்டதும், அந்த சக்தியானது அங்கே பிரசன்னம் ஆகவேண்டும்.
எனவே, இந்த வருடம் உங்களுக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டீர்களா? சக்திசாலிகளாக, கவலையற்ற சக்கரவர்த்திகளாக ஆகவேண்டும். ஏனென்றால், இது எல்லோருடைய இலட்சியமும் ஆகும். நீங்கள் எல்லோரையும் கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்? நாங்கள் உலக இராச்சியத்தைக் கோருவோம். நாங்கள் இராச்சிய உரிமையைக் கோருவோம். நீங்கள் உங்களை இராஜயோகிகள் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் பிரஜா யோகிகளா (பிரஜைகள் ஆகுகின்ற யோகிகள்)? இந்த ஒன்றுகூடல் முழுவதிலும் யாராவது பிரஜா யோகியா? யாராவது இராஜயோகி இல்லாமல் பிரஜா யோகியாக இருக்கிறீர்களா? ஆசிரியர்களே, யாராவது அப்படி இருக்கிறீர்களா? உங்களின் நிலையத்தில் யாராவது பிரஜாயோகியா? நீங்கள் எல்லோரும் இராஜயோகிகள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். உங்களில் எவரும் பிரஜா யோகிகள் என்பதற்கு உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள் இல்லை. நீங்கள் அதை விரும்பவில்லைத்தானே? தந்தைக்கும் இந்த போதை உள்ளது. சங்கமயுகத்தில், ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரச குழந்தை என பாப்தாதா போதையுடன் கூறுகிறார். வேறெந்தத் தந்தையும் தனது ஒவ்வொரு குழந்தையும் அரசன் எனச் சொல்ல மாட்டார். எவ்வாறாயினும், தனது ஒவ்வொரு குழந்தையும் சுய இராச்சிய அரசன் என்றே பாப்தாதா கூறுகிறார். நீங்கள் பிரஜா யோகிகள் என்பதற்கு உங்களின் கைகளை உயர்த்தவில்லை. நீங்கள் அரசர்கள்தானே? எவ்வாறாயினும், நீங்கள் யாரையாவது வரும்படி கட்டளை இடும்போது, அவர் வராமல் இருக்கும் அளவிற்கு நீங்கள் பலவீனமான அரசனாக இருக்கக்கூடாது. பலவீனமான அரசன் ஆகாதீர்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நீங்கள் இராஜயோகிகள் என்பதை நம்புவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! சிலர் கலரியிலும் அமர்ந்திருக்கிறார்கள். (இன்று, 18000 சகோதர, சகோதரிகள் மண்டபத்திலும் கலரியிலும் அமர்ந்திருக்கிறார்கள்) பாப்தாதா உங்களைப் பார்க்கிறார். கலரியில் அமர்ந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்!
எனவே, இது கடைசி முறையில் இருந்து ஆரம்பம் ஆகும். அதனால் பாப்தாதா இப்போது உங்களுக்கு மூன்று மாதங்கள் கொடுக்கிறார். சரிதானே? பாபா உங்களுக்கு வீட்டுவேலை கொடுப்பார். ஏனென்றால், அவ்வப்போது உங்களுக்குக் கொடுக்கும் வீட்டுவேலை கடைசிப் பரீட்சையில் சேர்க்கப்படும். அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு உங்களின் அட்டவணையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: மாஸ்ரர் சர்வசக்திவானாகிய நான், எனது ஏதாவது பௌதீக அங்கங்கள் அல்லது ஏதாவது சக்திகளுக்குக் கட்டளை இடும்போது, அந்தக் கட்டளை நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா இல்லையா? உங்களால் இதைச் செய்ய முடிகிறதா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. மூன்று மாதங்களுக்கு, உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் எதுவும் உங்களைத் தாக்கக்கூடாது. கவனக்குறைவாக இருக்காதீர்கள்! அது இறுதியில் நடக்கும்தானே என நினைப்பதன் மூலம் இராஜரீகமான கவனயீனம் வர அனுமதிக்காதீர்கள். நீங்கள் பாப்தாதாவுடன் மிக இனிமையாக உரையாடுகிறீர்கள். ‘பாபா, கவலைப்படாதீர்கள், நான் அப்படி ஆகுவேன்’ என நீங்கள் கூறுகிறீர்கள். பாப்தாதாவால் என்ன செய்ய முடியும்? அவர் இதைக் கேட்டு புன்னகை செய்கிறார். எவ்வாறாயினும், நீங்கள் அந்த முறையில் இந்த மூன்று மாதங்களும் பேசுவீர்களாக இருந்தால், பாப்தாதா உங்களை நம்ப மாட்டார். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஒன்றுகூடலுக்காக மட்டும் அன்றி, உங்களின் இதயபூர்வமாக உங்களின் கைகளை உயர்த்துங்கள். நான் இதைச் செய்யவே வேண்டும். நான் எதைச் சகிக்க வேண்டி வந்தாலும் அல்லது எதைத் துறக்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை. நான் நிச்சயமாக இதைச் செய்யவே வேண்டும். பக்கா? (உறுதியாகவா?) பக்கா? ஆசிரியர்களே, நீங்கள் இதைச் செய்யப் போகிறீர்களா?
அச்சா. கிரீடம் அணிந்துள்ள இந்தக் குழந்தைகள் என்ன செய்வார்கள்? (கிரீடங்களை அணிந்தவண்ணம் சிறுவர்கள் பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருந்தார்கள்) நீங்கள் மிக நல்ல கிரீடங்களை அணிந்திருக்கிறீர்கள். நீங்களும் இதைச் செய்ய வேண்டும். அச்சா. பாருங்கள், சிறுவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நாங்கள் என்ன செய்வோம்? அதையும் அவர்களுக்குக் கூறுங்கள். அப்படிப்பட்ட நிலையில், ஒரு பருவ காலத்திற்கு நீங்கள் இங்கே வருவதற்கு பாப்தாதா உங்களை அனுமதிக்க மாட்டார். ஏனென்றால், காலம் உங்களுக்காகக் காத்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் காலத்திற்காகக் காத்திருப்பவர்கள் அல்ல. நீங்கள் தானாகவே உங்களை ஆயத்தம் செய்பவர்கள், காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. சதோபிரதான் பஞ்சபூதங்களான இயற்கை, உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்த மூன்று மாதங்களில், இன்னமும் எஞ்சியுள்ள எந்தவொரு சம்ஸ்காரத்தையும் மாற்றுவதற்கு உங்களின் சக்திவாய்ந்த ஸ்திதியைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மூன்று மாதங்களுக்குக் கவனம் செலுத்துவீர்களாயின், அந்தப் பயிற்சி எதிர்காலத்திற்காகவும் விருத்தி செய்யப்பட்டு விடும். ஒரு தடவை நீங்கள் மாற்றத்திற்கான வழிமுறையைக் கற்றுவிட்டீர்கள் என்றால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் காலத்திற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. விநாசம் எப்போது நடக்கும்? எப்போது விநாசம் நடக்கும்? நீங்கள் எல்லோரும் உங்களின் இனிமையான உரையாடல்களின் போது இதைக் கேட்கிறீர்கள். நீங்கள் வெளியே எதுவும் சொல்வதில்லை. ஆனால், உள்ளே இதைப் பற்றிப் பேசுகிறீர்கள்: ‘எப்போது விநாசம் வரப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது இரண்டு வருடங்களில் வருமா அல்லது பத்து வருடங்களில் வருமா? இன்னமும் எத்தனை வருடங்கள் இருக்கின்றன?’ நீங்கள் ஏன் காலத்திற்காகக் காத்திருக்கிறீர்கள்? காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. திகதியை உங்களுக்குக் கூறும்படி, எந்த வருடம் எனக் கூறும்படி நீங்கள் தந்தையிடம் கேட்கிறீர்கள். ‘அதற்கு 10 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் எடுக்குமா? அதற்கு எத்தனை வருடங்கள் எடுக்கும்?’
பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: நீங்கள் எல்லோரும் தந்தைக்குச் சமமானவர் ஆகிவிட்டீர்களா? நாங்கள் திரைகளைத் திறப்போமா? அல்லது, திரைகள் திறந்தபின்னர், ஒருவர் தனது தலையை வாரிக் கொண்டிருப்பார், இன்னொருவர் தனது முகத்தில் கிறீம் பூசிக் கொண்டிருப்பார் என்று இருக்குமா? நீங்கள் என்றும் தயாராக இருந்து, உங்களின் சம்ஸ்காரங்களை முடித்துவிட்டால், பாப்தாதாவிற்குத் திரைகளைத் திறப்பதற்கு நேரமே எடுக்காது. குறைந்தபட்சம், முதலில் என்றும் தயார் ஆகுங்கள்! நீங்கள் நீண்ட காலமாக, ‘நான் அப்படி ஆகுவேன், நான் அப்படி ஆகுவேன்’ என்று சொல்லிய வண்ணம் தந்தையைக் களிப்படையச் செய்துள்ளீர்கள். இப்போது, அப்படி இனிமேலும் செய்யாதீர்கள். அது நடக்கவே வேண்டும். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்காக நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்தினீர்கள். அவற்றை உயர்த்துவதற்கான தேவை இல்லை. தந்தை பிரம்மாவைப் பாருங்கள். நீங்கள் பௌதீக ரூபத்தில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவீர்கள்தானே? தியாகம் செய்ததன் மூலம், தவம் செய்ததன் மூலம் பௌதீக ரூபத்தில் இறுதிக் கணம் வரை நடைமுறையில் சேவை செய்வதன் மூலமும் தந்தை பிரம்மா இதைச் செய்து காட்டினார். கடைசி நாள் வரை, சிவத்தந்தை மேன்மையான வாசகங்களைப் பேச அனுமதிக்கும் தனது கடமையை அவர் நிறைவேற்றினார். கடைசி முரளி உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஆசீர்வாதம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? (அசரீரி ஆகுங்கள், விகாரமற்றவர் ஆகுங்கள், அகங்காரம் அற்றவர் ஆகுங்கள்) இதை ஞாபகத்தில் வைத்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, எல்லோருக்கும் இது நினைவிருக்கிறது. பாராட்டுக்கள்! அவர் கடைசி நாள் வரை தியாகம் செய்தார். அவர் தனது பழைய அறையைத் துறக்கவில்லை. குழந்தைகள் பிரம்மாபாபாவிடம் மிகுந்த அன்புடன் புதிய கட்டடங்களில் வந்து வசிக்கும்படி கேட்டார்கள். ஆனால் அவர் எல்லாவற்றையும் குழந்தைகளுக்காகவே செய்தார். தனக்காக எதையும் பயன்படுத்தவில்லை. அவர் எப்போதும் அதிகாலை 2.30 அல்லது 3.00 மணிக்கு விழித்தெழுந்து தனக்காகத் தபஸ்யா செய்தார். அவர் தனது சம்ஸ்காரங்களை எரித்தார். அப்படித்தான் அவர் கர்மாதீத், அவ்யக்த் மற்றும் ஒரு தேவதை ஆகினார். தான் நினைத்ததை நடைமுறையில் அவர் செய்து காட்டினார். அவரின் பேச்சு, சிந்தனை, செய்கை எல்லாமே சமமாகவே இருந்தன. தந்தையைப் பின்பற்றுங்கள். கடைசிக் கணம்வரை, அவர் தனது பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவர் கடிதங்கள் எழுதினார். அவர் எத்தனை கடிதங்கள் எழுதினார்? அவர் சேவை செய்வதை நிறுத்தவில்லை. தந்தையைப் பின்பற்றுங்கள். அவர் தொடர்ந்து ஒரு மகாதானியாக இருந்தார். வெறுமனே ஒரு மகாதானி அல்ல, ஆனால் இறுதிக்கணம் வரை (அகண்ட) சதா மகாதானியாக இருக்கும் நடைமுறை ரூபத்தைக் காட்டினார். இறுதிக்கணம் வரை, அவர் எந்தவிதமான பௌதீக ஆதாரமும் இல்லாமல் தனது தபஸ்வி ரூபத்தில் அமர்ந்திருந்தார். இப்போது, குழந்தைகளான நீங்கள் கீழே அமரும்போது ஆதாரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் தந்தை பிரம்மாவோ ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு தபஸ்வி ரூபத்தை வைத்திருந்தார். அவர் கண்ணாடி போடவில்லை. இது சூட்சுமமான சக்தி ஆகும். ஆதாரத்தில் இருந்து விடுபட்டிருத்தல். சரீரம் வயதானது. நாளுக்கு நாள், காலநிலை, காற்று, நீர் என்பவை மாசடைகின்றன. இதனாலேயே, நீங்கள் ஏன் ஆதாரத்தை எடுக்கிறீர்கள் என்றோ அல்லது நீங்கள் ஏன் கண்ணாடிகளைப் போடுகிறீர்கள் என்றோ பாப்தாதா உங்களிடம் கேட்கவில்லை. நீங்கள் அவற்றைப் போடலாம். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக உங்களின் ஸ்திதியைச் சக்திவாய்ந்தது ஆக்கிக் கொள்ள வேண்டும். முழு உலகத்துக்குமான உங்களின் சேவையை நீங்கள் முடித்துவிட்டீர்களா? பாப்தாதா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: உலக நன்மைக்கான சேவை பூர்த்தியாகி விட்டது என நீங்கள் எல்லோரும் திருப்தி அடைகிறீர்களா? உங்களுக்குத் திருப்தியா? உலக நன்மைக்கான பணி பூர்த்தியாகி விட்டது என நம்புபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! ஒருவருமே இல்லையா? எனவே, விநாசம் இடம்பெற வேண்டும் என எப்படி நீங்கள் சொல்வீர்கள்? நீங்கள் இன்னமும் உங்களின் பணியைப் பூர்த்தி செய்யவில்லை.
சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகின்ற எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் தமது தைரியத்தால் பாப்தாதாவிடம் இருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெறத் தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கும், இந்த வேளையிலும் அத்துடன் ஒவ்வொரு கல்பத்திலும் சதா வெற்றி இரத்தினங்களாக இருக்கும் வெற்றியாளர் குழந்தைகளுக்கும் இப்போதும் அத்துடன் ஒவ்வொரு கல்பத்திலும் நிச்சயமாக வெற்றியாளராக இருப்பவர்களுக்கும் ஒரேயொரு தந்தைக்குச் சதா சொந்தமானவர்களாகி இருப்பதுடன் தமது உலகம் மற்றும் பழைய சம்ஸ்காரங்கள் இரண்டாலும் கவரப்படாத, இரண்டு கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டிருக்கும் குழந்தைகளுக்கும் சதா தந்தைக்குச் சமமாக இருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா கவனம் செலுத்துவதன் மூலம் நீண்ட காலத்திற்கு வெற்றியாளராகி, வெற்றி மாலையில் கோர்க்கப்படுவீர்களாக.நீண்ட காலத்திற்கு வெற்றியாளர்களாக இருப்பவர்கள், வெற்றி மாலையின் மணிகள் ஆகுவீர்கள். வெற்றி நிறைந்தவர் ஆகுவதற்கு, சதா தந்தையை உங்களின் முன்னால் வைத்திருங்கள்: ‘தந்தை எதைச் செய்தாரோ, அதை நான் செய்ய வேண்டும்.’ ஒவ்வோர் அடியிலும், தந்தையின் எண்ணங்கள் எவையோ அவையே குழந்தைகளின் எண்ணங்களாக இருக்க வேண்டும். தந்தையின் வார்த்தைகளே குழந்தைகளின் வார்த்தைகளாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள். இந்தக் கவனம் எல்லா வேளையும் செலுத்தப்பட வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் எல்லா வேளைக்கும் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். ஏனென்றால், உங்களின் முயற்சிக்கேற்பவே உங்களின் வெகுமதியும் இருக்கும். நீங்கள் எல்லா வேளையும் முயற்சி செய்தால், எல்லா வேளையும் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
சேவையில் சதா பிரசன்னமாக இருப்பதே, அன்பின் உண்மையான அத்தாட்சி ஆகும்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
யாராவது ஒருவர் கண்ணாடியின் முன்னால் நிற்கும்போது, அவரால் தன்னைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். அதேபோல், உங்களின் சக்தியான, ஆத்ம உணர்வு என்ற உங்களின் ஸ்திதியின் கண்ணாடியின் முன்னால் எந்தவோர் ஆத்மா வந்தாலும் ஒரு விநாடியில் அவரைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். உங்களின் ஒவ்வொரு செயலிலும் உங்களின் நடத்தையிலும் ஆன்மீகத்தின் கவர்ச்சி இருக்க வேண்டும். சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கும் ஆத்மாக்கள், எல்லோரையும் நிச்சயமாகக் கவருகின்ற ஆத்ம உணர்வு சக்தியைக் கொண்டிருப்பார்கள்.