29.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, பாபா முரளியைப் பேசி, ஞான இரத்தினங்களை, உங்களுக்குக் கொடுப்பதற்கு வந்துள்ளார். இதனாலேயே நீங்கள் ஒருபொழுதும் முரளியைத் தவறவிடக் கூடாது. உங்களுக்கு முரளியில் விருப்பம் இல்லையென்றால், உங்களுக்குத் தந்தை மீதும் விருப்பம் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும்.

பாடல்:
இந்த ஞானத்தின் மூலம், நீங்கள் கிரகித்துக் கொள்ளும் அனைத்திலும் மிகச் சிறந்த நடத்தை யாது?

பதில்:
விகாரமற்றவர்கள் ஆகுவதே அனைத்திலும் மிகச்சிறந்த நடத்தையாகும். இந்த முழு உலகமும் விகாரம் நிறைந்தது என்ற ஞானத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். விகாரமானவராக இருத்தல் என்றால் நன்னடத்தை அற்றிருத்தல் என்று அர்த்தமாகும். விகாரமற்ற உலகை ஸ்தாபிப்பதற்கே தந்தை வந்துள்ளார். தேவர்கள் விகாரமற்ற நடத்தையைக் கொண்டிருக்கிறார்கள். தந்தையை நினைவு செய்வதனால், உங்கள் நடத்தை சீர்திருத்தப்படுகிறது.

ஓம் சாந்தி.
குழந்தைகளே, நீங்கள் ஒருபொழுதும் இக் கல்வியைத் தவறவிடக்கூடாது. நீங்கள் இக் கல்வியைத் தவறவிட்டால், நீங்கள் உங்கள் அந்தஸ்தையும் தவறவிடுவீர்கள். இனிமையிலும் இனிமையான. ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் எங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? இறை ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு 5000 வருடங்களிலும்; இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தையே உங்கள் தந்தையும், உங்கள் ஆசிரியரும், உங்கள் குருவும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உண்மையில், ஒரு குருவின் படம் வேறானது, ஒரு தந்தையினது படமும் வேறானது, ஓர் ஆசிரியரின் படமும் வேறுபட்டதாகும்.. அந்த ஒரேயொருவருக்கு ஓர் உருவம் மாத்திரமே உள்ளது. ஆனால் உண்மையில், அது மூன்றையும் உள்ளடக்கியதாகும்; அதாவது, அவர் தந்தையாகவும், ஆசிரியராகவும், குருவாகவும் ஆகுகிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இவை மூன்றும் பிரதான உறவுமுறைகளாகும். அந்த தந்தையும். ஆசிரியரும், குருவும் ஒரேயொருவரே. அவரே மூன்று பாகங்களையும் நடிக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் புரிந்துகொள்ளும் பொழுது, பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பதுடன், நீங்கள் அனைவரும் ஏனைய பலரையும் இங்கு அழைத்து வந்து இத் திருமூர்த்தி பல்கலைக்கழகத்தில் அவர்களை அனுமதிக்கச் செய்யவும் வேண்டும். சிறந்த கல்வியைக்; கொடுக்கின்ற பல்கலைக்கழகத்தில் கற்பவர்கள் பிறருக்கும் அதைச் சிபாரிசு செய்வார்கள்: இப் பல்கலைகழகத்திற்கு வந்து கற்றிடுங்கள். இங்கு நீங்கள் நல்ல ஞானத்தைப் பெற்றுக் கொள்வதுடன் உங்கள் நடத்தையும் சீர்த்திருத்தப்படும். குழந்தைகளாகிய நீங்களும் பிறரை இங்கு அழைத்து வர வேண்டும். தாய்மார்களாகிய நீங்கள் ஏனைய தாய்மார்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும், ஆண்களால் ஏனைய ஆண்களுக்கு விளங்கப்படுத்த முடியும். பாருங்கள். அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும் குருவுமாவார். நீங்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு விளங்கப்படுத்துகிறீர்களா, இல்லையா என்று உங்கள் இதயத்தைக் கேட்டுப் பார்க்க வேண்டும். அந்த ஒரேயொருவரே பரமதந்தையும், பரம ஆசிரியரும், பரம குருவுமாவார் என்பதை நீங்கள் சிலநேரங்களில் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளங்கப்படுத்துவதுண்டா? தந்தையே உங்களைப் பரம தேவர்கள் ஆக்குபவர். தந்தை உங்களைத் தன்னைப் போன்று ஒரு தந்தை ஆக்குவதில்லை, ஆனால் அவர் உங்களைத் தன்னைப் போன்று புகழில் சமமானவர்கள் ஆக்குகிறார். ஒரு தந்தையின் தொழில் பராமரிப்பையும், அன்பையும் கொடுப்பதாகும். ஆகவே நீங்கள் நிச்சயமாக அத்தகைய ஒரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரை வேறு எவருடனும் ஒப்பிட முடியாது. ஒரு குருவிடமிருந்து நீங்கள் அமைதியைப் பெறுவதாகக் கூறப்பட்டாலும், அந்த ஒரேயொருவரே, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். தானே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை என்று வேறு எவராலும் கூற முடியாது. ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை யாராக இருக்க முடியுமென்று எவருக்கும் தெரியாது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற அனைவரும் தந்தையாகிய கடவுள் என்று குறிப்பிடும் எல்லையற்ற தந்தை ஒரேயொருவர் மாத்திரமே உள்ளார். புத்தி நிச்சயமாக அசரீரியானவரிடமே செல்கின்றது. இதனைக் கூறியவர் யார்? ஆத்மா கூறினார்: தந்தையாகிய கடவுள். ஆகவே ஆத்மாக்கள் நிச்சயமாக அவரைச் சந்திக்க வேண்டும். நீங்கள் அவரைச் சந்திக்காமல், அவரை உங்கள் தந்தை என அழைத்தால், எவ்வாறு அவர் உங்கள் தந்தையாக முடியும்? அவர் முழு உலகிலுமுள்ள குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறார். அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். ஆத்மாக்கள் தங்கள் வீட்டை நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்கள் இராவண இராச்சியத்தில் களைப்படைந்து விட்டார்கள். ஆங்கிலத்திலும் கூறப்பட்டுள்ளது: ஓ தந்தையாகிய கடவுளே, எங்களை விடுவியுங்கள்! தங்கள் பாகங்களை நடிக்கும் பொழுது, தமோபிரதான் ஆகியதும், அனைவரும் அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்வார்கள். முதலில் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குள் கீழிறங்கி வருவீர்கள். நீங்கள் முதலில் வரும்பொழுது விகாரமானவர்கள் ஆகுகிறீர்கள் என்றில்லை, இல்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது இராவணனின் இராச்சியமான, விலைமாதர் இல்லமாகும். இது மிகவும் ஆழ் நரகம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுலகில், குறிப்பாக பாரதத்தில், பல்வேறு சமயநூல்கள் உள்ளன. கற்பதற்கான நூல்கள் பல உள்ளன. அவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற வெகுமதி ஒருபொழுதும் எரிக்கப்பட முடியாதது. அவை கிரகிப்பதற்குரியதாகும். பயனற்ற விடயங்களே எரிக்கப்படுகின்றன. ஞானம் எரிக்கக்கூடிய ஒரு சமயநூல் அல்ல. 21 பிறவிகளுக்கு நீங்கள் ஓர் அந்தஸ்தைக் கோருவதற்கான ஞானத்தை நீங்கள் பெறுகிறீர்கள். அந்த ஒரேயொருவருக்கு உரிய சமயநூல்கள் எரிக்கப்படுகின்றன என்றில்லை; இல்லை. இந்த ஞானம் இயல்பாகவே மறைந்துவிடும். கற்பதற்கு அவசியமான எந்த நூல்களிலும் இந்த ஞானம் இல்லை. பின்வருமாறு பெயருள்ளது: கியான் விக்கியான் பவன், ஆனால் அந்தப் பெயர் ஏன் வழங்கப்பட்டுள்ளது என்றோ அல்லது அதன் அர்த்தமோ அவர்களுக்குத் தெரியாது. கியான் விக்கியானுக்குப் பெருமளவு புகழ் உள்ளது. கியான் என்றால் நீங்கள் இப்பொழுது கிரகித்துக்கொள்கின்ற, உலகச் சக்கரம் பற்றிய ஞானம் என அர்த்தமாகும். விக்கியான் என்றால் மௌன தாமமாகும்; நீங்கள் கியான் ஸ்திதிக்கும் அப்பால் செல்கிறீர்கள். ஞானத்தைக் கற்பதன் அடிப்படையில் நீங்கள் ஓர் இராச்சியத்தை மீண்டும் ஆட்சி செய்கிறீர்கள். ஆத்மாக்களின் தந்தை வந்து எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இல்லாவிட்டால், கடவுளின் வாசகங்கள் மறைந்துவிடுகின்றன. கடவுள் சமயநூல்களைக் கற்ற பின்னர் வருவதில்லை. கடவுளிடம் கியான், விக்கியான் இரண்டும் உள்ளன. ஒருவர் எவ்வாறு இருந்தாலும், அவர் பிறரைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குவார். இது மிகவும் சூட்சுமமான ஒரு விடயமாகும். விக்கியான், கியானிலும் பார்க்க அதிகம் சூட்சுமமானது. நீங்கள் கியானுக்கும் அப்பால் செல்ல வேண்டும். ஞானம் மேலோட்டமானது. அதனைக் கற்பிக்கும்பொழுது, சத்தம் எழுப்பப்படுகின்றது. நீங்கள் சத்தத்திற்கு அப்பால் மௌனத்திற்குள் செல்கின்ற விக்கியான் சூட்சுமமானதாகும். இந்த மௌனத்திற்காகவே நீங்கள் அலைந்து திரிகிறீர்கள். மக்கள் அமைதிக்காகச் சந்நியாசிகளிடம் செல்கிறார்கள். எவ்வாறாயினும் தந்தைக்கு உரியதை வேறு எவராலும் கொடுக்க முடியாது. மக்கள் ஹத்தயோகம் செய்தவாறு ஒரு குழியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்களால் அதன்மூலம் அமைதியைப் பெற முடியாது. இங்கு சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. இக் கல்வி மிகவும் இலகுவானது. உங்களுக்கு ஏழு நாள் பாடநெறி கொடுக்கப்படுகிறது. ஏழு நாள் பாடநெறியைப் பெற்ற பின்னர் நீங்கள் எங்கும் செல்லலாம். உலகியல் கல்லூரிகளில் இவ்வாறு செய்ய முடியாது. உங்கள் பாடநெறி ஏழு நாட்களாகும். இப் பாடநெறியின் பொழுது அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. ஆனால் அனைவராலும் ஏழு நாட்களைக் கொடுக்க முடியாது. அவர்கள் புத்தியின் யோகம், எங்கும் ஈர்க்கப்;படுகின்றது. நீங்கள் பத்தியில் இருந்தபொழுது, எவரது முகத்தையும் பார்க்கவில்லை. நீங்கள் எவருடனும் பேசவில்லை; நீங்கள் வெளியே செல்லவும் இல்லை. தபஸ்யா செய்வதற்கு நீங்கள் கடற்கரைக்குச் சென்று நினைவில் அமர்ந்திருப்பது வழக்கம். அந் நேரத்தில் நீங்கள் சக்கரத்தைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் இக் கல்வியையும் புரிந்து கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் பாபாவுடன் யோகம் செய்வது அவசியம் ஆகும். தந்தையின் அறிமுகம் உங்களுக்குத் தேவை, அதன்பின்னர் உங்களுக்கு ஆசிரியர் தேவை. தந்தை சரீரமற்றவர் என்பதால், எவ்வாறு அவருடன் யோகம் செய்வது என்பதை முதலில் நீங்கள் கற்கவேண்டும். பிறர் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையான கடவுள் சர்வவியாபி ஆவார். சர்வவியாபி என்ற கருத்து தொடர்ந்து வந்துள்ளது. இப்பொழுது இவ்விடயம் உங்கள்; புத்தியில் இல்லை. நீங்கள் மாணவர்கள். தந்தை கூறுகிறார்: எவ்வாறாயினும், உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யுங்கள். ஆனால் நீங்கள் நிச்சயமாக வகுப்பிற்கு வரவேண்டும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் இருக்கலாம். உங்களுக்குப் பாடசாலைக்குச் செல்ல விருப்பமில்லை என்று நீங்கள் கூறினால், அப்பொழுது தந்தையால் என்ன செய்ய முடியும்? ஆ! கடவுள் உங்களை இறைவர்களும் இறைவிகளும் ஆக்குவதற்குக் கற்பிக்கிறார். கடவுள் பேசுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். ஆகவே, கடவுளிடமிருந்து நீங்கள் இராஜயோகத்தைக் கற்க மாட்டீர்களா? இதனைச் செய்வதற்கு யார்தான் விரும்ப மாட்டார்கள்? இதனாலேயே விகாரங்களிலிருந்து காப்பாற்றப்படுவதற்காக, நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து ஓடிச் செல்ல வேண்டியிருந்தது. நீங்கள் வந்து உங்களை வேறு எவராலும் பார்க்கவோ அல்லது சந்திக்கவோ முடியாத, அந்தப் பத்தியில் அமர்ந்திருந்தீர்கள். உங்கள் இதயம் ஈர்க்கப்படுமாறு நீங்கள் எவரையும் பார்க்கவில்லை. கடவுள் தங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை சில குழந்தைகளிடம் இருந்தாலும், தங்களுக்குச் சுகவீனம் என்றோ அல்லது செய்வதற்கு வேறு வேலைகள் இருப்பதாகவோ அவர்கள் சாக்குப்போக்குகளைக் கூறுவார்கள். பல நேர மாற்றீடுகளைத் தந்தையால் வழங்க முடியும். இந் நாட்களில், பாடசாலைகளில் பல நேர மாற்றீடுகள் உள்ளன. இங்கு கற்பதற்கு அதிகம் இல்லை. அல்பாவையும், பீற்றாவையும் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த புத்தி தேவையாகும். அல்பாவையும், பீற்றாவையும் நினைவு செய்வதுடன், ஏனைய அனைவருக்கும் இதனைக் கூறுங்கள். மக்கள் திரிமூர்த்தியின் பல உருவங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் உச்சியில் சிவபாபாவைக் காட்டுவதில்லை. கீதையின் கடவுள் சிவன் என்பதையும், அவரிடமிருந்தே இவர் ஞானத்தைப் பெற்று, விஷ்ணு ஆகுகின்றார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது இராஜயோகம். இது இப்பொழுது இவரின் பல பிறவிகளின் இறுதிப்பிறவி ஆகும். இவ் விளக்கம் மிகவும் இலகுவானது. உங்கள் கரங்களில் நீங்கள் எந்த நூல்கள் போன்றவற்றையும் வைத்திருப்பதில்லை. திரிமூர்த்தியின் ரூபத்தை மாத்திரம் காட்டுகின்ற, பட்ஜை அணிந்து கொள்ளுங்கள். தந்தை உங்களுக்கு எவ்வாறு பிரம்மா மூலம் கற்பித்து, உங்களை விஷ்ணுவைப் போன்று ஆக்குகிறார் என்று, அதன்மூலம் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தாங்கள் இராதையைப் போன்று ஆகவேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள். அமிர்தகலசம் தாய்மார்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இராதை அமிர்தகலசத்தை அவரின் பல பிறவிகளின் இறுதியிலேயே பெறுகிறார். தந்தையே இந்த இரகசியத்தை விளங்கப்படுத்துகிறார். வேறு எந்த மனிதர்களுக்கும் இது தெரியாது. நிலையங்களில் பலர் உங்களிடம் வருவார்கள். சிலர் ஒருநாள் வந்த பின்னர், நான்கு நாட்களுக்கு வரமாட்டார்கள். ஆகவே நீங்கள் அவர்களைக் கேட்க வேண்டும்: அவ்வளவு காலமும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? நீங்கள் தந்தையை நினைவுசெய்து கொண்டிருந்தீர்களா? நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருந்தீர்களா? நீண்டகாலமாக வருகை தராதவர்களிடம் நீங்கள் எழுதிக் கேட்கவேண்டும்: சிலர் தங்கள் வேலையில் இடமாற்றம்பெற்று, வேறு இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும். எவ்வாறாயினும், அவர்கள் ஒரு நிலையத்திற்கு உரியவர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்குத் தந்தையை நினைவு செய்யவும், சக்கரத்தைச் சுழற்றவும் மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை ஒரு மிகவும் இலகுவான விடயத்தை விளங்கப்படுத்தியுள்ளார். இரு வார்த்தைகள் மாத்திரமே உள்ளன: மன்மனாபவ என்னை நினைவு செய்வதுடன், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். முழுச் சக்கரமும் இதில் அடங்கியுள்ளது. எவராவது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சுவர்க்கம் என்றால் என்ன? எவருக்கும் தெரியாது. உயர்ந்தவர்கள் முதல் தாழ்ந்தவர்கள் வரை, செல்வந்தர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் சந்தோஷமாக இருக்கின்ற ஓர் இராச்சியம் அங்கே உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்;கள். இங்கு, இது துன்ப உலகமாகும். அது சந்தோஷ உலகமாகும். தந்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். எவராவது ஒருவர் கடை வைத்திருப்பவராக இருந்தால், அவர்கள் எவராக இருந்தாலும் கற்காமல் இருப்பதற்குச் சாக்குப்போக்குகளை உருவாக்குவது நல்லதல்ல. அவர்கள் வரவில்லையென்றால் நீங்கள் கேட்கலாம்: நீங்கள் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கிறீர்கள்? நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுகிறீர்களா? உண்டு, அருந்தி, சுற்றி வாருங்கள். அதற்கு ஆட்சேபனை ஏதுமில்லை. ஆனால் இதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பிறருக்கும் நன்மை செய்யவேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் ஆடைகளைச் சுத்தம் செய்யும் தொழிலைச் செய்வதானால், பலர் அவரிடம் வருவார்கள். அவர்கள் முஸ்லிம்களாகவோ, பார்ஸிகளாகவோ அல்லது இந்துக்களாகவோ இருக்கலாம். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் பௌதீக ஆடைகளைக் கழுவுகிறீர்கள், ஆனால் உங்கள் இச் சரீரமானது பழைய, அழுக்கான ஆடையாகும். ஆத்மாவும் தமோபிரதானாகும். நீங்கள் அதனைச் சுத்தமானதாக, சதோபிரதானாக்க வேண்டும். இந்த முழு உலகமும் தூய்மையற்றதும், பழையதும், கலியுகமானதும், தமோபிரதானும் ஆகும். தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக மாறுவதே நீங்கள் கொண்டுள்ள இலக்காகும். இப்பொழுது நீங்கள் இதனைச் செய்ய விரும்புகிறீர்களோ அல்லது இல்லையோ, நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ அல்லது இல்லையோ அது உங்களைப் பொறுத்ததாகும். நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆத்மா, சரீரம் இரண்டும் அசுத்தமாகிவிட்டன. அவற்றைச் சுத்தமாக்குவதற்கு, தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 100வீதம் தூய தங்கமாக ஆகுவீர்கள் என்பதற்கும், ஆபரணங்களும் (சரீரங்கள்) அழகானவையாகும் என்பதற்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. நீங்கள் இதனை நம்புகின்றீர்களோ அல்லது இல்லையோ, அது உங்களைப் பொறுத்தது. இதுவும் சேவையாகும். வைத்தியர்களிடம் செல்லுங்கள், கல்லூரிகளுக்குச் செல்லுங்கள், பிரபல்யமானவர்களிடம் செல்லுங்கள், சென்று அவர்களின் நடத்தை மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இங்கு அனைவரும் நன்னடத்தை அற்றவர்களாக உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் விகாரங்களற்றவர்கள் ஆகவேண்டும். விகாரமற்ற உலகம் இருந்தது. அது இப்பொழுது விகாரமுடையதாகி விட்டது அது நன்னடத்தை அற்றதாகியுள்ளது. அனைவரது நடத்தையும் மிகவும் தீயதாகிவிட்டது. விகாரமற்றவர்கள் ஆகாமல் உங்களால் உங்களைச் சீர்திருத்த முடியாது. இங்கு மனிதர்கள் காமம் நிறைந்தவர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே விகார உலகிலிருந்து, விகாரமற்ற உலகை ஸ்தாபிக்கிறார். பழைய உலகம் அழிக்கப்பட்டுவிடும். இது ஒரு சக்கரமாகும். பூகோளத்தைப் பற்றிய விளக்கம் மிகவும் சிறந்ததாகும். தேவர்கள் ஆட்சிசெய்தபொழுது, இவ்வுலகம் விகாரமற்றதாக இருந்தது. அவர்கள் இப்பொழுது எங்கு சென்றுவிட்டார்கள்? ஆத்மாக்கள் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை; அவர்கள் ஒரு சரீரத்தைத் துறந்து, இன்னொன்றைப் பெறுகிறார்கள். தேவர்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் விவேகிகள் ஆகிவிட்டீர்கள். முன்னர் உங்களுக்கு எதுவும் தெரியாது. இப்பொழுது இப்பழைய உலகம் மிகவும் அழுக்காகியுள்ளது. பாபா கூறுவன அனைத்தும் முற்றிலும் மிகச்சரியானவை என நீங்கள் உணர்கிறீர்கள். அங்கு, அது தூய உலகமாகும். இவ்வுலகம் தூய்மையற்றது என்பதால் அவர்கள் தங்களைத் தேவர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக இந்துக்கள் என்று அழைத்துள்ளார்கள். இந்துஸ்தானில் வசிப்;பவர்கள் இந்;துக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தேவர்கள் சுவர்க்கத்தில் வசிக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் இச் சக்கரத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். உங்களில் விவேகிகளாக இருப்பவர்கள் நீங்கள் அமர்ந்திருந்து, தந்தை விளங்கப்படுத்துகின்ற விதத்தில் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கூற வேண்டும் என்பதை மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். முக்கிய வார்த்தைகளைத் தொடர்ந்தும் குறித்து, பின்னர் இன்ன இன்ன கருத்துக்களைத் தந்தை குறிப்பிட்டதாகக் கூறி, அவற்றைப் பிறருக்கும் கூறுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: நான் உங்களுக்குக் கீதையின் ஞானத்தைக் கூறுகிறேன். இது கீதையின் யுகமாகும். நான்கு யுகங்கள் உள்ளன என்று அனைவருக்கும் தெரியும். இது லீப் யுகமாகும். இச் சங்கமயுகம் பற்றி எவருக்குமே தெரியாது. இதுவே அதி மங்களகரமான சங்கம யுகம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். மக்கள் சிவனின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் எப்பொழுது வந்தார் அல்லது அவர் என்ன செய்தார் என்பன எவருக்கும் தெரியாது. சிவனின் பிறப்பைக் கொண்டாடிய பின்னர், கிருஷ்ணரின் பிறப்பின் கொண்டாட்டம் உள்ளது. பின்னர் இராமரின் பிறப்பின் கொண்டாட்டம் வருகிறது. ஜெகதாம்பாளின் அல்லது ஜெகத்பிதாவின் பிறப்பை எவரும் கொண்டாடுவதில்லை. அனைவரும் வரிசைக்கிரமமாகவே வருகிறார்கள். நீங்கள் இப்பொழுது முழு ஞானத்தையும் பெற்றுள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய். தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எங்கள் தந்தையே பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவுமாவார். அனைவருக்கும் இவ்விடயத்தைக் கூறுங்கள். அல்பாவினதும், பீற்றாவினதும் பாடத்தை அனைவருக்கும் கற்பியுங்கள்.

2. கியான் என்றால் உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கிரகிப்பதுடன், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர் ஆகுவதுமாகும். விக்கியான் என்றால், சத்தத்திற்கு அப்பால், மௌனத்திற்குள் செல்வதாகும். ஏழுநாட் பாடநெறியைப் பெற்று, நீங்கள் எங்கு வசித்தாலும், தொடர்ந்தும் இதனைக் கற்றிடுங்கள்.

ஆசீர்வாதம்:
சேவை செய்யும் பொழுது மரியாதை அல்லது கௌரவம் என்ற பழுக்காத பழங்களை துறப்பதன் மூலம் அகங்காரத்திலிருந்து விடுபட்டிருப்பனால் சதா சந்தோஷமாக இருப்பீர்களாக.

பெயர், மரியாதை, கௌரவம் என்பவற்றை விரும்புவது இராஜரீக வடிவங்களான ஆசை ஆகும். தமது பெயர் அறியப்பட வேண்டும் என்பதற்காக சேவை செய்பவர்கள் தற்காலிகமாகபெயரை ஈட்டிக் கொள்ள முடியும், ஆனால் உயர்ந்த அந்தஸ்தை பெறுதல் என்பதில் அவர்களின் பெயர்கள் பட்டியலில் பின்னால் சென்று விடுகின்றது, ஏனெனில் அவர்கள் உண்ணுகின்ற பழங்கள் பழுக்காதவை ஆகும். சேவை என்ற பாடத்தில் தமக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என சில குழந்தைகள் நினைக்கின்றார்கள், ஆனால் அது மரியாதையை பெற்றுக் கொள்வது இல்லை, அது அகங்காரம் கொள்வதாகும். எங்கே அகங்காரம் உள்ளதோ அங்கே சந்தோஷம் இருக்க முடியாது, ஆகையால் நீங்கள் அகங்காரத்திலிருந்து விடுபட்டு சதா சந்தோஷமாக இருக்க வேண்டும்.

சுலோகம்:
இறை அன்பு என்ற ஊஞ்சலில் ஆடினால், துன்பத்தின் எந்தவொரு சுவடும் வர முடியாது.